• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

கறுப்பி

இராமர் பாலத்தை இடிப்பதற்கு அமெ. புலிகள் கூட்டுச் சதியாம்

Recommended Posts

இதையும் நோட் பண்ணுங்கோ... ராமனுக்கும் அக்கன்ணாதனுக்கு பல ஒற்றுமைகள் உண்டு.... அவற்றில் 2..

1,சூரிய வழிபாடு

2, பிறந்த இடம்.... ராமன் - சராயு நதிகரை. அக்கன்ணாதன் - சார்யா நதிக்கரை ( ஒரு நைல் நதியின் கிளை ).

''Aadhi'' எங்கட பழைய ஆதிதானோ எண்டு பார்த்தன்....

என்னய்யா இது....

காஞ்சி சங்கரர் "கலிபோர்ணியா" வை "கபிலவஸ்த்து" எண்டு கூறிய பம்மாத்து கதை மாதிரி இருக்கு. :(:huh:

Share this post


Link to post
Share on other sites

என்னய்யா இது....

காஞ்சி சங்கரர் "கலிபோர்ணியா" வை "கபிலவஸ்த்து" எண்டு கூறிய பம்மாத்து கதை மாதிரி இருக்கு. :(:huh:

அயின்ச்ரைன் ஐயா பலவித ராமாயண கதைகள் இருக்குபோது பனங்காயண்னனின் மாதிரிக்கதையை பம்மாத்து என்ரு ஒதுக்கித்தளுகிரீர்கள் இப்படியே போனால் நாங்கள் பாப்பன கதைகளை நம்பிக்கொண்டிருப்போம்.

உங்கள் ராமாயணத்தயும் எடுத்து விடுங்கள் அதில் ராமர் பாலத்துக்கான விளக்கம் இருக்கலாம்.

:o

Share this post


Link to post
Share on other sites

இன்று எவ்வளவோ விடயங்கள் மண்மேடாக மாறிவிட்டன. இவைகளுக்கு ஆதாரங்களுமுண்டு. அதற்காக இராமாயணகாலத்தில் கட்டப்பட்ட பாலம் சிதைவடைந்திருந்தாலும் அதன் எச்சங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியது. சட்டலைற்டின் பார்வையில் அது மணற்றிட்டு. காவியத்தின் பார்வையில் அது பாலம். இன்றுவரைக்கும் அது அவ்வாறே சொல்லப்பட்டு வருகிறது. வால்மீகியினதும் கம்பனினதும் இராமாயணங்களில் அவை கற்களால் அமைக்கப்பட்ட பாலமென்றே சொல்லப்படுகிறது. இவையெல்லாம் வாய்வழி வந்த கதைகள் பிற்காலத்தில் அவை எழுத்துருப் பெற்றன. ஆனாலும் இராவணனின் புட்பக விமானம் போன்ற விமானமொன்று ஏன் அந்தப் பெரிய நாட்டிடம் இருக்கவில்லை. இராமாயணத்தில் குழப்பமா? இல்லை நான் குழம்பியிருக்கிறேனா?

Share this post


Link to post
Share on other sites

அக்கன்னாதன் எகிப்திலேயே இருந்திருந்தால் அவனும் ஒரு ''ராமஸஸ்'' ஆகி இருப்பான்....

''ராமஸஸ்'' = கடவுள்களின் கடவுள்.(in hieroglyphics)

Share this post


Link to post
Share on other sites

இறைவனுக்கே குழப்பமா? :P

Share this post


Link to post
Share on other sites

புஷ்பகவிமானம் = பூ பல்லாக்கு.

B)

Share this post


Link to post
Share on other sites

இராமரும் அணிலும் சேர்ந்து கட்டிய பாலம் நிசம் என்றால் ராவணனுக்கு பத்து தலை இருந்ததும் நிசம். மானாக மாறியதும் நிசம். புட்பக விமானமும் நிசம் ஆகிவிடும். பாலத்த்தை வைத்த அரசியல் நடக்குது என்பது தான் நிசம்

இந்த தலைப்பில் எனக்கு தலைய சுத்துவது நிசம் :(:huh:

Share this post


Link to post
Share on other sites

சுப்பிரமண்ய சுவாமி, ஜெயராஜ் பெர்ணாண்டோ பிள்ளை, கெகலயா ரம்புக்கெல, சோ போன்றவர்களையும் இந்த வேதாளம் , மன்னிக்கவேண்டும் வேதாந்தம் மிஞ்சி விடுவார் போல இருக்கிறது. சிரிப்புத் தாங்க முடியவில்லை.

<<<

கந்தப்பு அண்ணை, சத்தியமாச்சொல்லுறன் இந்தத் தலைப்பைப் படிச்சவுடன் எனக்கு கண்ணுக்குள்ள வந்தது சு.சு தான் என்னுடைய கருத்தை அப்படியே அட்சரம் பிசகாமல் தாங்கள் பிரதிபலித்திருக்கின்றீர்கள

Share this post


Link to post
Share on other sites

அயின்ச்ரைன் ஐயா பலவித ராமாயண கதைகள் இருக்குபோது பனங்காயண்னனின் மாதிரிக்கதையை பம்மாத்து என்ரு ஒதுக்கித்தளுகிரீர்கள் இப்படியே போனால் நாங்கள் பாப்பன கதைகளை நம்பிக்கொண்டிருப்போம்.

உங்கள் ராமாயணத்தயும் எடுத்து விடுங்கள் அதில் ராமர் பாலத்துக்கான விளக்கம் இருக்கலாம். :)

ஹி ஹி.. :(:huh:

புனை கதைகள் பற்றி பொழுது போக்காக வேண்டுமானால் கதைக்கலாம். அதில் விவாதிப்பதற்கு என்ன இருக்கிறது? தமிழறிஞ்ஞர்கள் வேண்டுமானால் பட்டிமன்றம் வைக்கலாம். கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இந்த பட்டிமன்றங்களில் கூட அதிகம் பெண்களின் கற்பை பற்றியே விவாதித்து நேரத்தை வீணடித்திருக்கிறார்கள். இந்தக் கதைகள் "உண்மையா" அல்லது "பொய்யா" என எங்காவது பட்டிமன்றம் பேசி இருக்கிறார்களா?

வழமைபோல் இராமாயணமும் வடமொழியில் தயாரிக்கப்பட்டு மனித ஜாதிக்கே கிட்டாதபடி எட்டத்தில் வைக்கப்பட்டது. பலரும் அறிந்தால் "கதை கந்தல்" என நினைத்திருப்பார்கள் போலும். காலா காலத்துக்கும் கதாகாலேட்ஷேபம் செய்ய வசதியாக "மறைமொழியில்" புனைந்திருக்கிறார்கள். வால்மீகி இராமாயணம் மொழிபெயர்க்கப்பட்ட பொழுது பல விடயங்கள் அம்பலத்துக்கு வந்தன. அதில் இராமன் கடவுள் அவதாரமாக புனையப்படவில்லை. அவனும் மிகச்சாதாரண மனிதனாகவே அந்தக் கதையில் வலம் வருகிறான்.

வழமைபோல் "கடவுளிடம் பேசும்" பேர்வழிகள் முனிவர்களாகவும் ரிஷிகளாகவும் சித்தரிக்கப்பட்டு மன்னரும் மனிதரும் "அவர் சொற்கேட்டு வாழ்க" என இடித்துரைக்கப்படுகிறது. மிகச் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று அங்கும் இருக்கிறது. பால காண்டத்தின் நடுநாயகமாக விளங்கும் நபர் "விஸ்வாமித்திரர்". இவர் பிறப்பில் ஒரு பிராமணரன்று. சத்திரிய வம்சத்தில் பிறந்து "தன் கடும் முயற்சியால்" பல வரங்களை பெற்றதாக கூறப்படுகிறது. துரதிஸ்டவசமாக பாலகாண்டத்தோடு அவர் எங்கோ மறைந்ந்து (மறைக்கப்பட்டு) விடுகிறார். அதுவும் "வஷிஷ்ட்டர் வாயால்" என்று தனி அத்தியாயம் வேறு.

இராமாயணம் ஒரு குழுமத்தை மேம்படுத்தி, மற்றயோரை தாழ்த்த ஏற்படுத்தப்பட்ட கற்பனைக் கதை. அதில் புவியியல் சார் உண்மைகள் சில இருக்கின்றன என்பதற்காக அது உண்மையல்ல. புவியல் சார் உண்மைகள் (Geological facts) எப்பொழுதும் இருந்தே வந்திருக்கின்றன. அவற்றை உட்புகுத்தி ஒருவித மயக்கத்தை உருவாக்க முயன்றிருக்கலாம். உதாரணமாக, தற்காலத்தில் யராவது "கணனி சார் உண்மைகளை" தொகுத்து தன் கற்பனையையும் சேர்த்து புனைகதை எழுதினால், இன்னும் 4000 வருடம் கழிந்து அதை எப்படியோ மொழிபெயர்த்து படிக்கும் சந்ததி "அதை முற்றும் உண்மை" என கூறினால் எப்படி இருக்குமோ அப்படியான ஒன்றுதான் இராமாயணத்தை நம்புவதென்பது.

இராமன் "மனித ரூபத்தில் அவதரித்த கடவுள்", "அவன் மனிதர்களின் வலிகளையும் கவலை, துன்பம், மரணம்" என்பவற்றை தன் வாழ்நாளில் அனுபவித்தே வெற்றி பெறுகிறான் என கூறுபவர்கள் "பக்கச் சார்பற்று" இராமாயணத்தை படிக்க வேண்டும். யுத்தகாண்டத்தில் இந்திரஜித்தனின் "நாகாஸ்த்திரங்களால்" ராமலஷ்மணர்கள் கட்டுண்டு எதுவுமே செய்ய இயலாதபடி மூர்ச்சையற்று, அசைவின்றி கிடக்கிறார்கள். அப்போது அங்கு "கருட பகவானை இழுத்து வந்து விடவேண்டிய நோக்கமென்ன?". மனிதனாகவே அவதரித்து மனிதனுக்குரிய சக்தியுடனே (அவர்கள் கருத்துப்படி மட்டுப்படுத்தப்பட்ட சக்தியுடன்) சண்டையிடும் ராமன் பாழாய்ப்போன "கருடபகவான் துணை வேண்டுவதேன்?". இன்னொரு விடயம். இராவணனை படுகொலை செய்யும் நேரம் நெருங்குகிறது. இராவணாஸ்திரங்களின் பிரமிக்கத்தக்க வேலைகளை இருதரப்பும் போரை நிறுத்திவிட்டு விழிமூடாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றன. இராமனுக்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்போதும் பாருங்கள் "இந்திரனின் தேர்ச்சாரதி மாதலி ரதத்தை ஓட்டிக்கொண்டு போர்க்களத்துக்கு வருகிறான்". எதற்காக? :o:o

பின்னாளில் கம்பன் தன் தேந்தமிழ் பாக்களின் மூலம் புதிய இராமாயணத்தை பாடினான். இது தமிழின் அழகுக்காக பாடிய ஒன்றே அன்றி வேறென்ன? நாமே ஒரு கதையை உருவாக்கிவிட்டு அதை அப்படியே நம்பலாமா?

உண்மையில் இந்த புனை கதையின் கருப்பொருள் ஒரு யுத்தத்தை பற்றியதாக இருக்கலாம். இதில் "யுத்தம்" என்பது உண்மையாக இருக்கக்கூடும். அதை வைத்து புனையப்பட்ட கதையே இராமாயணம். இந்த யுத்தம் உபகண்டத்தில் இருந்த ஆதிக்குடிகளுடன் ஏற்பட்டதாக இருக்கலாம்.

இரத்தினச்சுருக்கமாக இந்த புனைகதை சொல்ல வருவது இதுதான்.

1. நாங்கள் மிக நல்லவர்போல் நடிப்போம். தேவை ஏற்பட்டால் எந்த குறுக்கு வழியையும் நாடுவோம்.

2. நாங்களே சக்தியுள்ளவர்கள். "நாம் அல்லாத சிலர்" ஆங்காங்கே கடின முயற்சி செய்து முன்னேறலாம். ஆனால் காலகாலத்தில் அவர்களை மறைக்கடிப்போம்.

இராமாயனத்தை அக்குவேறு ஆணிவேறாக பகுக்க வெளிக்கிட்டால் அது பலருக்கு "உச்சந்தலையில் ஆணி அடித்ததுபோல" இருக்கும் என்பதில் அய்ய்யமில்லை. :o:lol:

Share this post


Link to post
Share on other sites

ஈழத்திருமகன்..

இராமாயணம் புனை கதையோ இல்லையோ என்பதல்ல இங்கு விவாதம்..

இராமாயணம் சுட்டியுள்ள புவியியல் உண்மைகள் தொடர்பில் ஏன் எமது கவனம் திரும்பவில்லை..??!

வெறும் புனைகதைக்குரிய அம்சங்கள் என்று கூறும் விடயங்களில் அதிக அக்கறை செய்யும் எம்மவர் இராமாயணத்துள் வரும் புவியியல் உண்மைகளையாவது இனங்காட்டி அறிவியல் ஆய்வுக்குரியதாக்கி இருக்கலாம் தானே...??! ஏன் அப்படி செய்யல்ல...??!

இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியுடன் விடயங்களை அறிந்து கொள்ளும் நீங்கள் புவியியல் உண்மைகளை வெளியிடுவது கடினமல்ல.. என்று கூறுவது வியப்புக்குரிய விடயமல்ல.

ஆனால் கம்பர் பாடிய இராமாயண காலத்தில் இருந்து கொண்டு.. இதை நோக்க வேண்டும்..!

உங்களிடம் இப்ப கூட இலங்கை சார்ந்து ஒரு கவிதை இயற்றுங்கள் என்றால் இன்றும் கூட அதன் புவியியலை கண்டறிந்து அவற்றின் பிரதானம் உணர்ந்து அவற்றைக் கவிகளில் அடக்க முடியுமோ என்பது சந்தேகமே..??!

இன்று இராமர் பாலம் என்ற மணற்திட்டை அடையாளம் காண சற்றலைட் இமேஜ் தேவைப்பட்டிருக்கிறது. ஆனால் கம்பர் அதை எப்படி அடையாளம் கண்டு அதை தனது படைப்பில் உருவகித்தார்..?!

அதுமட்டுமல்ல.. கம்பர் இலங்கையில் தரைத்தோற்றம் பற்றி இன்னும் பல அம்சங்களைக் குறிப்பிட்டுள்ளார். நாம் சில விடயங்களை இதற்கு முன்னைய இடுகையில் சுட்டிக்காட்டியுள்ளோம்.

மலையகத்தில் புவிப் பெளதீகம் தொடர்பான சிறிய ஆய்வொன்றை மேற்கொண்டவன் என்ற வகையில் இராமாயண.. புவியியல் அறிமுகங்களை நிஜங்களோடு ஒப்பிடும் போது... சில விடயங்கள் வியப்பை உண்டு பண்ணின..??!

இராமாயணம் கம்பனின் கவி நயத்தை மட்டும் காட்டி நிற்கல்ல... ஆராயப்பட வேண்டிய உண்மைகளையும் கொண்டிருக்கிறது.. என்பதை நாம் உணராது.. இராமாயணத்தில் கம்பனின்.. வான்மீகியின் கவித்துவப் புனைப்புகளில் மட்டும் கவனம் செலுத்தி.. அதற்குள்ளூம் நம்ம கற்பனையில் இராமனை பார்பர்னன் ஆக்கி.. இராவணனை திராவிடனாக்கி.. கம்பனின் கவித்துவ உவமை உருவகிப்புக்களை.. இனவெறிக்கு ஆயுதமாக்கிக் கொண்டிருக்கிறம். அரசியலுக்கு பிராந்திய ஆதிக்கத்துக்கு தீனியிட பாவிக்க முற்படுறம்.

மேற்குலகம்.. பழைய இலக்கியங்கள்.. ஓவியங்கள் தொடர்பான அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில்... பல கண்டு பிடிப்புக்களை செய்யும் வேளையில் நாம் எது அவசியமில்லையோ.. அதற்குள் எமது கற்பனையை அவிழ்த்து.. முரண்பாடுகளை வளர்க்க முனைகின்றமே தவிர அறிவியலை பாவிக்க வேண்டிய இடங்களை இனங்காணக் கூட முன்வர.. மனசுக்கு இடமளிக்கிறமில்ல.

சிறீலங்கா என்றால் சிங்களப் பேரினவாத அடையாளம் என்று சிந்திக்கும் தமிழர்களும் உண்டு. சிறீலங்காவின் தான் தன் தாய் நாட்டின் பூர்வீகம் உள்ளது என்பதை தேடும் தமிழரும் உண்டு. இங்கும் சிலர் இராமாயணத்தை.. பார்பர்னிய.. ஆரிய.. திராவிட.. குதர்க்க வாத அடிப்படையில் நோக்க முனைகிறீர்கள். அதில் ஆதாயம் தேட விளைகிறீர்கள். இதே கூட்டம் இந்தியாவிலும்..இந்திய அரசியலிலும் உண்டு. இவர்கள் இருவருமே அறிவியலுக்கு வேலை கொடுத்து அறிவியல் உண்மைகளை கண்டறிய மாட்டார்கள். மாறாக எத்தனையோ அறிவியல் ஆய்வு வளங்கள் இந்தியாவில் இருக்க.. நாசாவுக்கு ஓடிச்சென்று டொலர் கணக்கில் வழங்கி.. அவர்கள் வழங்கும் சற்றலைற் ஒப்பீட்டுகளை வைத்து வழங்கும் அறிக்கைகளை தூக்கிப் பிடிச்சுக் கொண்டு.. திரியுறம். நாசாவும் வியாபாரத்துக்காக விளம்பரத்துக்காக.. அமெரிக்க பிராந்திய நலனுக்காக... அறிவியலின் பெயரால் பொய்களை அவிழ்க்கக் கூடியது என்பதும் கண்டறியப்பட்ட உண்மைகளே..! நாசா கம்பரை விட சுவாரசியமா கதைகளை புனையக் கூடியது. அதற்கு அறிவியல் சாயமும் பூசக் கூடியது..!. எமது பூர்வீகத்தை நாம் தாம் ஆராய அறிவியலை பாவிக்கனுமே தவிர அறிவியலை விலைக்கு வாங்க முற்பட்டால் அதில் வியாபாரம் தான் மிகும். :P :(

Share this post


Link to post
Share on other sites

இந்துத்துவவாதிகள் சில வாரங்களுக்கு முன்பு வரை "ராமர் பாலம்" இருப்பதற்கு ஆதாரமாக நாசாவின் அறிக்கையைத்தான் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தார்கள். "நாசவே சொல்லிவிட்டது, பின் எதற்கு சந்தேகம்" என்றெல்லாம் கேள்வி கேட்டார்கள்.

இன்றைக்கு அமெரிக்கா சொன்னால் அது சரியாகி விடுமா என்று பிளேட்டை திருப்புகிறார்கள்.

இவர்கள் எப்பொழுதுமே இப்படித்தான்.

நெடுக்காலபோவான்!

நீங்கள் சொல்கின்ற சில விடயங்கள் ஆச்சரியமாக இருக்கிறது. ரமாயணம் கூறும் புவியியல் உண்மைகள் எவைகள் என்று தயவுசெய்து சற்று விரிவாக விளக்குவீர்களா?

ராமாயணம் கூறுவதையும் புவியியலையும் ஒப்பிட்டு விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

ரமாயணம் கூறும் புவியியல் உண்மைகள் எவைகள் என்று தயவுசெய்து சற்று விரிவாக விளக்குவீர்களா?

ராமாயணம் கூறுவதையும் புவியியலையும் ஒப்பிட்டு விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

அனுமான் இலங்கைக்கு போய் திரும்பி வந்தனால் தான் பூமி உருண்டை என்ற உண்மையை இராமர் கண்டுபிடித்து கம்பர் மூலம் மக்களிற்கு அறியதந்தவர். :P

Share this post


Link to post
Share on other sites

நாசா தான் இராமர் பாலம் (Adams Bridge) குறித்து உத்தியோக பூர்வமாக அறிக்கை எதையும் விடவில்லை என்று அறிவித்துள்ளது.

"Now the Nasa is clarifying that the astronaut photographs used to bolster the government’s opinion- the bridge project was sanctioned by the ruling Congress party, while Opposition has been led by the Vishwa Hindu Parishad could not be taken as scientific opinion.

In an email to Mint, Nasa public affairs officer Michael Braukus wrote: "Apparently, a response provided by Nasa employees at the Johnson Space Center (JSC) regarding a photograph of Adams Bridge, which was taken by astronauts in space, was mistakenly interpreted as an official Nasa statement about Adams Bridge. No Nasa official statement has been made. Nasa has no official statement or position regarding Adams Bridge".

http://www.livemint.com/2007/08/06001819/A...e-now-Nasa.html

நாசா தனது நம்பகத்தன்மையை தக்க வைக்க முயல்கிறது. இந்திய அரசுகளின் அரசியல் நோக்கில் அமைந்த பித்தலாட்ட அறிவிப்புக்கள் நாசாவையும் சிக்கலில் மாட்டிடப் போகுது..??! :o:lol:

Share this post


Link to post
Share on other sites

இந்துத்துவவாதிகள் சில வாரங்களுக்கு முன்பு வரை "ராமர் பாலம்" இருப்பதற்கு ஆதாரமாக நாசாவின் அறிக்கையைத்தான் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தார்கள். "நாசவே சொல்லிவிட்டது, பின் எதற்கு சந்தேகம்" என்றெல்லாம் கேள்வி கேட்டார்கள்.

இன்றைக்கு அமெரிக்கா சொன்னால் அது சரியாகி விடுமா என்று பிளேட்டை திருப்புகிறார்கள்.

இவர்கள் எப்பொழுதுமே இப்படித்தான்.

நெடுக்காலபோவான்!

நீங்கள் சொல்கின்ற சில விடயங்கள் ஆச்சரியமாக இருக்கிறது. ரமாயணம் கூறும் புவியியல் உண்மைகள் எவைகள் என்று தயவுசெய்து சற்று விரிவாக விளக்குவீர்களா?

ராமாயணம் கூறுவதையும் புவியியலையும் ஒப்பிட்டு விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

முதலில் நாம் இந்துத்துவவாதிகள் என்ற தோறணையில் இங்கு கருத்துக்களை வைக்கவில்லை. அதுபோக சேது சமுத்திரத்திட்டத்தை பாலத்தை மையமாக வைச்சு முடக்கனும் என்றதையும் ஆதரிக்கல்ல.

ஆனால் வரலாற்றுச் சான்றுகளுக்கு அறிவியல் விளக்கம் அளிக்கிறமென்று போலி அறிக்கைகளை விடுவதை நிறுத்தி... வரலாறுகள் காவி நிற்கும் உண்மைகளின் பின்னணிகளை அறிவியல் கொண்டு ஆய்ந்து அறியவும் விளக்கவும் வேண்டும் என்றே வினவுகின்றோம். மத.. மற்றும் ஆரிய திராவிட பார்பர்னிய.. உப்புச்சப்பற்ற சித்தாத்தத் திணிப்புகளை கண்டவர் போனவர் எல்லாம்.. வரலாற்றுக்குள் திணிப்பதையும் திரிப்பதையும்... அரைகுறை விளக்கங்களோடு மத அடிப்படைகளை அணுகுவதையும் கண்டிக்கின்றோம். அதை பெரியார் செய்தால் என்ன.. திராவிடர் கழகம் செய்தால் என்ன .. விஷ்வகிந்து பரிசத் செய்தால் என்ன அவற்றைக் கண்டிக்கின்றோம்.

அதேபோல் நாசா அல்லது நாசாவின் பெயரால் சொல்லிட்டினம் என்றதுக்காக கண்மூடிக்கொண்டு அறிக்கைகளை நம்புற அளவுக்கும் இல்லை. நாசாவின் அறிக்கை சரியான வழியில் சரியான சான்றுகளோடு.. சரியான ஆய்வைச் செய்து திருத்தத்துக்கு இடமில்லாத தீர்மானத்தை அளிக்கும் போது அதை ஏற்றுக் கொள்ளலாம். வெறும் செய்மதிப் படங்களைக் கொண்டு.. அறிக்கைகளை அரசியல்.. பிராந்திய நலன்கள் கருதி வெளியிடுவதை அறிவியல் என்று கூறிட முடியாது. அறிவியல் அறிவு பூர்வமாக.. ஆராய்ச்சி ரீதியான முடிவை எட்டுதலுக்கு உரியது. ஒரு அறிக்கை அல்லது ஆய்வைக் கூட மீளாய்வதும் அறிவியல் தான்.

முன்னர் சரியென்று சாதிப்பயன்படுத்தப்பட்ட பல அறிவியல் கண்டுபிடிப்புக்கள் பின்னர் மீளாய்வின் பின் தவறென்று நிரூபிக்கப்பட்டும் உள்ளன. அதையும் அறிவியல் தான் செய்கிறது. எனவே பிளேட்டை மாத்திறாங்க என்ற கதையை விடுத்து.. எதையும் இறுதி வடிவம் நோக்கி பல திக்குகளிலும் ஆராய வேண்டி அறிவியலை பல மட்டங்களிலும் பாவிக்க வேண்டியது அவசியமாகிறது.

நாம் முன்னர் குறிப்பிட்டது போல.. இந்தப் பாலம் உட்பட நுவரெலியாவுக்கு அண்மையில் உள்ள சீதா எலிய என்று சிங்களத்தில் அழைக்கப்படும் இடம் கூட இராமாயணத்தில் இருக்கிறது. அதை இங்கும் ஒரு ஆங்கிலக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர். நாம் குறித்த பகுதியில் சிறிய ஆய்வொன்றை புவிப் பெளதீகம் தொடர்பில் செய்த போது சிங்களப் பேராசிரியர்கள் கூட வியந்து குறித்த விடயத்தை எமக்குச் சுட்டிக்காட்டினர்.

பிரித்தானிய நூலக இணையத்தளத்தில் இருந்து..

The highlands near Nurwara Eliya are where Ravana is supposed to have hidden Sita. For Sri Lankan's Ravana is not a demon, but a brilliant King and the inventor of the aeroplane. This version of the story perhaps reflects Sri Lanka's history of ancient engineering and architecture, and its deep relationship to demons as agents of health and well being.

One misty afternoon I went with a driver to a Hindu temple - Sita Amman Kovil. In the shade of a mountain is Sita's blue temple with shrines to Rama, Sita and Hanuman the monkey God. Beside the temple is a stream and a large rock with giant footprints on it - the footprints of Hanuman as he jumped to find Sita and give her Rama's ring. The looming mountain is the Medicine Mountain that Hanuman carried from the Himalayas to heal Lakshman. Black earth covers the region of Nurwara Eliya; it is good for growing tea and very different from the usual Sri Lankan red dust. The earth is black because it was burnt when Ravana set fire to Hanuman's tail.

I wanted to do a Puja, a blessing, for my performance of the story. My driver was Christian, but he knew what I needed to do. He took me to a shop and they made me an offering, arranging mango, coconut, apples, little sweet bananas, camphor and incense on fresh green beetle leaves, and decorating it with hand-picked blossoms.

As we entered the temple a few monkeys leapt over the walls and bared their teeth at us. A radiant priest took my offering and touched the food to the lips of all the statues, feeding the Gods of the story. He sung a prayer with my name entwined into it, and rested a shining gold helmet on my head momentarily I was imbued with the spirit of Rama. A large saffron and red tikka was painted on my forehead.

The ritual was repeated at the Hanuman shrine, the offering rearranged for Hanuman and the coconut split open. Another tikka was marked on my brow and the sacred tikka paste wrapped-up in the beetle leaves and pressed into my hand. The camphor was set alight and I walked round the temple three times, thinking of all the fires in the story, culminating when Sita walks through flames and they turn to flowers. All the time my driver stood beside me, partaking in every aspect of the ritual, like me, this was not his religion, but unlike me, he knew all the gestures and the prayers as if they were his own. Finally a long orange thread was wrapped around my wrist and a blessing chanted.

This is a place where Ramayana is all around you, living in the landscape and in people's beliefs, where the characters in the story are real and you can be imbued with their power. I felt that not only had I met the story, I was inside it. We fed the remains of the offering to the greedy monkeys. And as we left my driver nodded, "it makes your heart calm," he said.

http://www.bl.uk/learning/cult/inside/corn...an/meeting.html

Share this post


Link to post
Share on other sites

இராமாயணம் சொல்வது போன்று இராமனும் குரங்குகளும் இணைந்த ஒரு பாலத்தை கட்டின என்று சொல்வதை மறுப்பதற்கு ஒன்று நாசாவின் துணை தேவையில்லை.

அங்கே இருப்பது பாலமா அல்லது மணற்திட்டா என்று ஆராய்வது சரியான விடயம். ஆனால் அதை ராமாயணத்தில் சொல்லப்படுவது போன்று கட்டப்பட்டது என்று நம்புவது முட்டாள்தனமான விடயம்.

Share this post


Link to post
Share on other sites

இராமாயணம் சொல்வது போன்று இராமனும் குரங்குகளும் இணைந்த ஒரு பாலத்தை கட்டின என்று சொல்வதை மறுப்பதற்கு ஒன்று நாசாவின் துணை தேவையில்லை.

அங்கே இருப்பது பாலமா அல்லது மணற்திட்டா என்று ஆராய்வது சரியான விடயம். ஆனால் அதை ராமாயணத்தில் சொல்லப்படுவது போன்று கட்டப்பட்டது என்று நம்புவது முட்டாள்தனமான விடயம்.

கம்ப இராமாயணம் புவியியல்ரீதியாக சரியாக சொல்வதாக நான் அறியவில்லை. அப்படிச் சொல்கின்ற இடங்களை சுட்டிக் காட்டுங்கள்.

ராமாயணக் கதை உருவான பின்பு, அந்தக் கதையின் அடிப்படையில் சில இடங்களுக்கு பெயர் வைத்து மக்கள் அழைத்ததை வைத்து புவியியல்ரீதியாக கம்ப இராமாயணம் சரியானது என்று சொல்ல முடியாது.

கம்பர் இலங்கையில் இந்த இடத்தில் இப்படி இருக்கிறது என்று பாடியதாக தெரியவில்லை.

அவருடைய பரந்து விரிந்த கற்பனையில் ஏதோ பாடி விட்டுப் போய்விட்டார். அவர் பாடியதற்கு ஓரளவு ஒத்ததாக சில இடங்கள் இருப்பதை வைத்துக் கொண்டு எதையும் முடிவு செய்ய முடியாது.

இராமாயணத்தில் வருவது போன்ற தரைத்தோற்ற அமைப்புக்கள் இலங்கையில் உண்டு என்பதற்கு பிரித்தானிய பிரஜை ஒருவர் எழுதி பிரித்தானிய நூலக இணையத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள பல கட்டுரைகள் சாட்சி சொல்கின்றன.

நீங்கள் தயவு செய்து ஒன்றில் இராமாயணத்தைப் படிச்சிட்டு.. இலங்கையை ஒருக்கா சுற்றிப் பார்த்துவிட்டாவது வந்து விதண்டாவாதம் செய்ய இறங்குங்கள்..!

புவியியல் ரீதியில் உள்ள கூறுகள் எல்லாம் கம்பன்.. ஜஸ்ட் குறுட்டு வாக்கில் பாடினான் என்று சொல்ல முடியாத படிக்கு இராமர் பாலம் அமைந்துள்ளது. காவியத்தில் பிரதான.. அம்சமாக அந்தப் பாலம் விளங்கிறது. கம்பன்.. குருட்டு வாக்கில்.. எப்படி அதை கற்பனை செய்தான்..??! பாலம் இயற்கையான மணற்திட்டாக இருக்கட்டும்.. மனிதன் கட்டியதாக இருக்கட்டும்.. ஆனால் இராமாயணம் தான் அதை முதலில் அடையாளப்படுத்தியுள்ளது. ஆக அந்த நிகழ்காலத்திலும் துலங்கும் புவியியல் தரைத்தோற்றக் கூறு நிஜம் என்பது... தான் நாம் சுட்டிக்காட்ட விளைவது. அந்த இடத்திலாவது கம்பன் பொய் சொல்லேல்ல.. குருட்டு வாக்கில் பாடல்ல என்பதை.. நாம் நிறுவலாம்..!

இராவணன் பற்றி ஒரு ஆங்கிலேயன் அளிக்கும் விளக்கத்தைக் கூட உங்களால கொடுக்க முடியல்ல. இந்த இலட்சனத்தில்...???!

For Sri Lankan's Ravana is not a demon, but a brilliant King and the inventor of the aeroplane. This version of the story perhaps reflects Sri Lanka's history of ancient engineering and architecture, and its deep relationship to demons as agents of health and well being.

--------------

450px-Adams_Bridge_aerial.jpg

இந்தப் படத்தில் தெளிவான எல்லைகள் பாதையின் வழி தொடர்வதைக் காணலாம். இயற்கையான மணல் மேடு.. எப்படி இப்படி ஒரு பற்றனில் அமைந்தது...??!

http://en.wikipedia.org/wiki/Adam's_Bridge

அதனால் தான் நாசா கூட.. தான் அறிக்கை விடல்லை என்று கூறி இருக்கிறது. நாசா அப்படி ஒரு அறிக்கையை அரைகுறை விளக்கத்தோடு விடுமானால்.. அதன் நம்பகத்தன்மையே அதிகம் பாதிக்கப்படும்.

Share this post


Link to post
Share on other sites

இராவணன் வெட்டு, சீதாஎலிய போன்ற இடங்கள் பற்றி கம்ப இராமாயணத்தில் என்ன விதமான குறிப்புக்கள் உள்ளன என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்.

கம்பர் வர்ணனை செய்ததற்கு ஒத்த இடங்கள் இலங்கையில் இருக்கலாம்.

இலங்கையில் சில இடங்களின் தோற்றத்தையும், அதன் பெயர்களையும் வைத்து இராமாயணத்தில் பதில் தேடுவது என்றால், இலங்கையில் வாழ்ந்த அசுரர்கள் யார் என்பது பற்றியும் ஆராய வேண்டும். அதுதான் நேர்மையான செயல்.

Share this post


Link to post
Share on other sites

இராவணன் வெட்டு, சீதாஎலிய போன்ற இடங்கள் பற்றி கம்ப இராமாயணத்தில் என்ன விதமான குறிப்புக்கள் உள்ளன என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்.

கம்பர் வர்ணனை செய்ததற்கு ஒத்த இடங்கள் இலங்கையில் இருக்கலாம்.

இலங்கையில் சில இடங்களின் தோற்றத்தையும், அதன் பெயர்களையும் வைத்து இராமாயணத்தில் பதில் தேடுவது என்றால், இலங்கையில் வாழ்ந்த அசுரர்கள் யார் என்பது பற்றியும் ஆராய வேண்டும். அதுதான் நேர்மையான செயல்.

இதென்ன அநியாயமா இருக்கு.. தரைத்தோற்றத்தை வைத்துத்தான் இடங்களை அடையாளம் காண முடியும். பெயர்கள் காலத்துக்கு காலம் மாறுபடலாம். ஏன் இன்று ஊர்களுக்குள்ள பெயர்கள் தான் அன்று தொட்டு வருகிறதா.. இல்லையே..!

இராமாயணத்தில் சீதை சிறை வைக்கப்பட்டுள்ள.. சந்தர்ப்பம்.. இராமன்.. இலங்கையில் தங்க நேர்ந்த விடயங்களில்.. அனுமன் இலங்கையை அடையும் விடயங்கள் என்று பல இடங்களில் கம்பன் தரும் பாடல்கள் இலங்கையின் இயற்கையைப் பற்றிப் பேசத் தவறவில்லை.

கம்பனின் பாடல்களும் விளக்கமும் தனித் தலைப்பில் போட்டு அதில் விளக்கம் தேடுவது பிரயோசனமாக அமையும்.. என்று நினைக்கிறம்..!

நேரம் கிடைக்கும் போது செய்வோம்..! ஆர்வமுள்ளவர்களும் தொடங்கலாம்.. தொடரலாம். :lol:

Share this post


Link to post
Share on other sites

திராவிடர்களுக்கும் ஆரியர்களுக்கும் நடந்த போரையும், இயற்கையான அல்லது செயற்கையான தரைத் தோற்றங்களையும் வைத்து இராமாயணம் உருவாக்கப்பட்டிருப்பதாக நான் நம்புகின்றேன்.

ஏற்கனவே இருந்த விடயங்களுக்கு இராமாயணம் ஒரு கற்பனையான மோசமான வடிவங்களைக் கொடுத்துவிட்டது.

அதுதான் பிரச்சனை.

இந்து அமைப்புக்கள் இந்த தரைவடிவத்தை இராமன் கட்டியது என்று அடம்பிடிப்பதும், அதற்கு ஒரு நேரத்தில் நாசாவை துணைக்கு அழைப்பதும், பின்பு நாசாவை கண்டிப்பதும் இங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்து அமைப்புக்கள் பாலத்தை இடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. "ராமர் பாலத்தை" இடிக்க வேண்டாம் என்றுதான் சொல்கின்றன.

இப்படி இந்து அமைப்புக்கள் இந்தத் தரைத்தோற்றத்தை இராமயணத்தில் வருகின்ற இராமன் கட்டினான் என்று சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

Share this post


Link to post
Share on other sites

தரைத் தோற்றம் ஒரு பற்றனில் அமைந்திருப்பதால் அது பாலமாகத்தான் இருக்கும்.

இத்தாலி உதைபந்தாட்டத்தில் உலகக் கிண்ணம் வெல்லும் என்று முன்னமே ஊகித்து இத்தாலியை ஒரு காலின் வடிவத்தில் ஒரு பற்றனில் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியர்கள் உருவாக்கவில்லையா? அது போல்தான் இந்தப் பாலமும் இருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

திராவிட ஆரிய கொள்கையையே நாம் ஏற்கல்ல. அதற்கு எந்த அறிவியல் சான்றுகளும் இல்ல. நவீன அறிவியல் இதை நிராகரிச்சுப் போட்டுது.

சோ.. உங்கட திராவிட ஆரிய யுத்தமும் கற்பனைதான்..! பிராமண சமூக எதிர்ப்பு என்றதை நியாயப்படுத்த எங்கெங்க இந்தக் கற்பனைகளைப் புகுத்த முடியுமோ அங்கங்க.. பெரியார்.. திராவிடக் கழகம் என்று கொண்டு.. நீங்கள் செய்வது இதைத்தான். உங்களை திருத்த முயலுறது வீண் வேலை. ஏதோ செய்து ஓயுங்கள்.

சரி அதை விடுத்து..

இராமாயணம்.. வெறும் கற்பனை.. புளுகு என்றதை நாங்கள் ஏற்கல்ல. இராமாயணத்தில் எமது வரலாற்றுத் தொன்மையை அடையாளம் காட்டக் கூடிய புவியியல் மற்றும் நாகரிக முறைமைகளுக்கான ஆதாரங்களைப் பெற முடியும் என்று நம்புறம். அதற்கு அறிவியல் சார்ந்த ஆய்வுகள் அவசியம் என்றும் கூறுகின்றோம்.

இராமன் - இராவணன்.. தெய்வங்கள்.. அரக்கர்கள்.. என்ற நிலைகள் பற்றி நாம் கவலைப்படவோ.. கருத்தில் எடுக்கவோ போறதில்லை. காரணம் அவற்றுக்கு சான்று தேடி எந்தப் பிரயோசனமும் இல்லை.

நாம் மதம் என்பதன் மனிதன் சார்ந்த கொள்கைகளைத்தான் மக்களுக்கு வழங்கி மனித ஒழுக்கம் பண்பாடு போன்றவற்றை மனித இன விருத்திக்குப் பயன்பட வழங்கனும் என்று விரும்புறமே தவிர.. தெய்வம் என்று மூடநம்பிக்கைகள்.. மூடப்பழக்க வழக்கங்களை விதைத்து மக்களை அறிவியல் ரீதியாக சிந்திக்க விடாமல் செய்வதை ஆதரிக்கல்ல. மக்களும் மனிதர்கள் வடிவமைத்த தெய்வம் என்பதை வணங்குவதற்காக..தங்களின் அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ளாமல் முட்டாள்களாக வாழ்வதையும் ஏற்கல்ல.

பாலம் பற்றிய விடயத்தில் அதன் தரைத்தோற்றப் பின்னணிக்கான சரியான அறிவியல் விளக்கத்தைத்தான் தேடுறம். இராமாயணம்.. குறித்த தரைத்தோற்றத்தை முதலில் இனங்காட்டியதற்காக அந்த விடயங்கள் தொடர்பில் இராமாயணம்.. வரலாற்றுக் குறிப்பேடாக இருக்க வேண்டும் என்றே கூறுகின்றோம்.

பாலத்தை முழுமையாகத் தகர்த்து கடற்போக்குவரத்துச் செய்யப் போகல்ல. ஒரு பகுதியை ஆழப்படுத்தப் போகின்றனர் அவ்வளவும் தான். இந்தியாவில் மசூதி கோயில் சாமியாரை வைச்சு அரசியல் நடத்திறது வழமை. அதைத்தான் இதிலும் செய்யினம். இதில வியக்கிறத்துக்கு ஒன்றுமே இல்லை அது இந்திய அரசியல் சாக்கடையின் நிலை.

எமக்கு அவை அவசியமில்ல. எமது கருத்து இராமாயணத்தில் இராமனை.. இராவணனைக் கட்டிக்காக்கிறதல்ல. இராமாயணத்தில் வரும் எமது வரலாற்றுத் தொன்மைகளை இனங்காட்டக் கூடிய சான்றுகளை கண்டறிவதாகும். அதற்கு அறிவியல் விளக்கம் பெறுவதாகும். இதனடிப்படையில்.. தமிழீழம் என்ற தேசத்தின் எல்லை... கரையோரத்தில் இருந்து மத்திய மலைநாடு நுவரெலியா நோக்கி விரிவிக்கப்பட வேண்டும். மத்திய மலைநாடு தங்கள் பூர்வீகம் என்று சிங்களவர்கள் உரிமை கொண்டாட நாங்களும் விட்டுக் கொடுத்திட்டு.. கரையோரங்களைத் தக்க வைச்சிட்டு அதுதான் தமிழீழம் என்று கொண்டிருக்கிறம். ஆனால் வரலாற்றுச் சான்றுகளை தொலைத்துவிட்ட நாம்.. இப்படியான காவியங்களூடாவது.. வரலாற்றுத் தொன்மைகளை இனங்காட்டவும்.. அறிவியலூடாக நிறுவவும் முயல வேண்டும்.

ஒருவேளை இந்தப் பாலத்தை முற்றாக இடிக்க இந்திய மத்திய அரசு திட்டம் போட்டால் அதை எதிர்ப்போம். அது செலவீன ரீதியில் சாத்தியமானதும் அல்ல. இந்தப் பாலம்.. ஒரு புவியியல் வரலாற்றுக் கூறாகி நிற்கிறது. அது மட்டும் தான் எமக்குத் தெரிகிறது. இராமன் வந்தான் போனான்.. இராவணன் திராவிடன் வீழ்ந்தான் என்பதெல்லாம் நமக்கு அவசியமில்ல. இராவணன்.. தமிழ் மன்னன் என்ற சான்று தேடுதல் அவசியம்.

தமிழர்கள் சிவ வழிபாட்டை செய்த தொன் குடிகள் என்பதை நிறுவும் போது சிவ பக்தனான இராவணன்.. தமிழனாக இருக்கக் கூடிய சந்தர்ப்பத்தை மேலும் அதிகரிக்க முடியும். எமது மத பற்றுறுதி என்பது மூடநம்பிக்கைகளைக் கட்டிக்காக்க அல்ல. மாறாக எமது வரலாற்றுத் தொன்மைகளை வெளிப்படுத்த என்ற நிலைக்கு மாறனும். அறிவியல் கலந்து இவற்றை வெளிப்படுத்தனும். அதுதான் எமது இனம் தொலைத்துவிட்டு நிற்கும் வரலாற்றுத் தொன்மைகளை மீள் அடையாளப்படுத்த உதவும்..!

இந்த இடத்தில் எமது நோக்கம்.. பிராமண எதிர்ப்புக்கான. பிரச்சாரமல்ல. எமது இலக்கு காவிய அடிப்படைகளை வைத்து எமது இனத்தின் தொன்மைக்கான அடையாளங்களை இனங்கண்டு அறிவியலால் நிறுவ முற்படுதல் என்பதாகும்.

அதற்கு காவிய இராமனும் தேவை.. இராவணனும் தேவை. கடவுளாக அல்ல. காவியப் படைப்புக்களாக. அந்த வகையில்.. இந்தப் பாலமும் நமக்குத் தேவை. இராமாயணம்.. புவியியல் சான்றுகளின் உண்மையைப் பிரதிபலிக்கிறது என்பதை நிறுவ. அதற்காக மொத்தப் பாலத்தையும் பழுதாக்காதேங்கோ என்று கொடிபிடிக்கல்ல. ஆனால் இந்தப் பாலம் பற்றிய பின்னணிகளை அறிவியலூடாக அணுகுகின்ற போது எமது இனத் தொன்மையின் வரலாற்றையும் அதில் இணைக்க வாய்ப்பு ஏற்படலாம்..! அந்த வகையில் இந்தப் பாலத்தின் இருப்பு அவசியம். இந்தப் பாலமும் இராமாயணமும் சிங்களவர்களுக்கு இன்னும் கசப்பான விடயமே..! சீதா எலிய சீதை அம்மன் கூட சிங்களக் காடையரால் தாக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.

Share this post


Link to post
Share on other sites

சரி. ஒவ்வொரு விடயமாக பார்ப்போம்.

ஈழத்திருமகன்..

இராமாயணம் புனை கதையோ இல்லையோ என்பதல்ல இங்கு விவாதம்..

இராமாயணம் சுட்டியுள்ள புவியியல் உண்மைகள் தொடர்பில் ஏன் எமது கவனம் திரும்பவில்லை..??!

வெறும் புனைகதைக்குரிய அம்சங்கள் என்று கூறும் விடயங்களில் அதிக அக்கறை செய்யும் எம்மவர் இராமாயணத்துள் வரும் புவியியல் உண்மைகளையாவது இனங்காட்டி அறிவியல் ஆய்வுக்குரியதாக்கி இருக்கலாம் தானே...??! ஏன் அப்படி செய்யல்ல...??!

முதலில் ஆராயப்பட வேண்டும் என நீங்கள் கூறும் விடயம் "விஞ்ஞான ரீதியில் உண்மையானதா?" அல்லது "போலியானதா" என தீர்மானிப்பதே எந்தவொரு விஞ்ஞான ஆராய்ச்சி (scientific investigation) தொடங்குவதற்குமான அடிப்படை தேவை. நீங்கள் கூறும் தரைத்தோற்றத்தை ஆராய இராமாயணம் அவசியம் அல்ல. இராமாயணம் போலியான கட்டுக்கதை என தெள்ளத்தெளிவாக தெரியும் போது அதில் புகுத்தப்பட்ட புவியியல்சார் அம்சங்களுக்காக அதை ஆராய்வது தேவையற்ற ஒன்று.

இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியுடன் விடயங்களை அறிந்து கொள்ளும் நீங்கள் புவியியல் உண்மைகளை வெளியிடுவது கடினமல்ல.. என்று கூறுவது வியப்புக்குரிய விடயமல்ல.

ஆனால் கம்பர் பாடிய இராமாயண காலத்தில் இருந்து கொண்டு.. இதை நோக்க வேண்டும்..!

உங்களிடம் இப்ப கூட இலங்கை சார்ந்து ஒரு கவிதை இயற்றுங்கள் என்றால் இன்றும் கூட அதன் புவியியலை கண்டறிந்து அவற்றின் பிரதானம் உணர்ந்து அவற்றைக் கவிகளில் அடக்க முடியுமோ என்பது சந்தேகமே..??!

ஆம். நவீன தொழில்நுட்ப வளர்ச்சி பேரகிலத்தின் பிறப்பின் பின்னான 49 நனோ செக்கனில் இருந்து இன்று வரையான படிமுறை விரிவாக்கங்களை கூறுமளவிற்கு வளர்ந்துள்ளது. அதன்முன் இராமாயணம் போன்ற கட்டுக்கதைகள் எடுபடமாட்டா. மேலும் கவிதை பாடுவதென்பது எல்லோருக்கும் வாய்ப்பதல்ல. அது ஒரு நுண்கலை. இயற்கையை ஆத்மார்த்தமாக அனுபவிக்க கூடிய ஒருத்தராலேயே அழியாக்கவிதைகள் புனைய முடியும். அந்த வகையில் கம்பர் ஒரு இமயம். புவியியல் தோற்றங்கள் என்ன, மனித எண்ணங்கள், வனம், வனாந்தரம், மலை, மடு, பொய்கை என்று கம்பர் துறைபோக கற்காத விடயமே இல்லை எனலாம். இதை பாடுவது கம்பருக்கு ஒரு பொருட்டல்ல. கம்பர் யாரொ ஒரு அறிவிலி அல்ல. மிகச்சிறந்த அறிவாளி. தன் அறிவுச்செல்வத்தை அழகிய கவிதைகள் புனைவதில் செலவிட்டார்.

இன்று இராமர் பாலம் என்ற மணற்திட்டை அடையாளம் காண சற்றலைட் இமேஜ் தேவைப்பட்டிருக்கிறது. ஆனால் கம்பர் அதை எப்படி அடையாளம் கண்டு அதை தனது படைப்பில் உருவகித்தார்..?! அதுமட்டுமல்ல.. கம்பர் இலங்கையில் தரைத்தோற்றம் பற்றி இன்னும் பல அம்சங்களைக் குறிப்பிட்டுள்ளார். நாம் சில விடயங்களை இதற்கு முன்னைய இடுகையில் சுட்டிக்காட்டியுள்ளோம். மலையகத்தில் புவிப் பெளதீகம் தொடர்பான சிறிய ஆய்வொன்றை மேற்கொண்டவன் என்ற வகையில் இராமாயண.. புவியியல் அறிமுகங்களை நிஜங்களோடு ஒப்பிடும் போது... சில விடயங்கள் வியப்பை உண்டு பண்ணின..??!

பாலம் போன்ற தரைத்தோற்றம் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. இதை எல்லா காலத்திலும் மக்கள் அறிந்தே வைத்திருக்கின்றனர். இதற்கு நாசா தேவை இல்லை. உண்மையில் இந்த பாலம் போன்ற தரைத்தோற்றம் மனிதர்களின் பாவனைக்கு உட்பட்டிருந்தால் அதை அவர்கள் புனரமைக்காமல் கைவிட்டதேன்? சரி மனிதர்கள்தான் கைவிட்டார்கள். விலங்குகள் பொய் சொல்லா. இவ்வாறான தரைத்தோற்றம் போக்குவரவுக்கு உகந்ததாக இருப்பின் மனிதர்கள் தவிர விலங்குகளும் அவற்றை பயன்படுத்தி இருக்கும். அவ்வாறான உயிரியல் தொடர்புகள் எதுவுமே இல்லை. உதாரணத்துக்கு இலங்கை காடுகளில் வசிக்கும் யானைகள் தனித்துவமானவை.

இதே நேரம் நாம் ஒன்றை நினைவில் வைக்க வேண்டும். தரைவழியன்றி கடல் மார்க்கமாக மக்கள் தொடர்பு இருந்திருக்கக்கூடிய சாத்தியங்கள் மிக அதிகம். இலங்கையின் தரைத்தோற்றம் அதன் கற்பாறை அமைப்புக்கள் தென்னிந்திய "தட்ஷிண" பீடத்துடன் ஒத்துப்போவதை கவனியுங்கள். உண்மையில் இலங்கை ஆதிகாலத்தில் தற்போது இந்திய துணைக்கண்டம் என கூறப்படுவதன் ஒரு தொடர்ச்சியே. பாக்கு நீரிணை இருந்ததா என்பதே சந்தேகம்தான்.

இராமாயணம் கம்பனின் கவி நயத்தை மட்டும் காட்டி நிற்கல்ல... ஆராயப்பட வேண்டிய உண்மைகளையும் கொண்டிருக்கிறது.. என்பதை நாம் உணராது.. இராமாயணத்தில் கம்பனின்.. வான்மீகியின் கவித்துவப் புனைப்புகளில் மட்டும் கவனம் செலுத்தி.. அதற்குள்ளூம் நம்ம கற்பனையில் இராமனை பார்பர்னன் ஆக்கி.. இராவணனை திராவிடனாக்கி.. கம்பனின் கவித்துவ உவமை உருவகிப்புக்களை.. இனவெறிக்கு ஆயுதமாக்கிக் கொண்டிருக்கிறம். அரசியலுக்கு பிராந்திய ஆதிக்கத்துக்கு தீனியிட பாவிக்க முற்படுறம்.

இதில் ஆராய ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அப்படி ஆராயவேண்டுமானால் ஒன்றே ஒன்று செய்யலாம். எமது பண்பாட்டு கலாச்சாரங்களின்மீது எப்படி சிதைவு ஏற்பட்டதென விரிவாக ஆராயலாம். அதற்கு "நடுநிலையாளர்" என கூறிக்கொள்வோர் எப்போதுமே ஒத்துக்கொள்ளார். எங்காவது விஞ்ஞானம் கற்பனைக்கதைகளை ஆராய்ந்திருக்கிறதா?

மேற்குலகம்.. பழைய இலக்கியங்கள்.. ஓவியங்கள் தொடர்பான அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில்... பல கண்டு பிடிப்புக்களை செய்யும் வேளையில் நாம் எது அவசியமில்லையோ.. அதற்குள் எமது கற்பனையை அவிழ்த்து.. முரண்பாடுகளை வளர்க்க முனைகின்றமே தவிர அறிவியலை பாவிக்க வேண்டிய இடங்களை இனங்காணக் கூட முன்வர.. மனசுக்கு இடமளிக்கிறமில்ல.

ஹி ஹி :lol::lol:

பழைய இலக்கியத்தில் இருந்தோ ஓவியத்தில் இருந்தோ வந்ததாக கூறப்பட்ட விஞ்ஞான கருத்து எதனையும் இதுவரை நான் படித்தோ அல்லது கேட்டோ இருக்கவில்லை. அப்படி ஏதும் இருந்தால் தெரியப்படுத்துங்கள். மைக்கேல் ஆஞ்சலோவின் ஓவியங்கள் கூட அவரின் "பறப்பு" மீதான அவாவினால் வரையப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப ரீதியில் உதவவில்லை. இப்படி பார்க்கப்போனால் "புஷ்பக விமானம்" வைத்து ஓடித்திரிந்ததாக கூறும் கம்பர், (புவியியல் நுட்பங்களை மிக நுட்பமாக பாடியவர்) அந்த விமானத்தின் தொழில்நுட்பத்தை பாடாமல் விட்டதேன். அட அவர் காலத்தில் தயரித்து இருக்கலாமே. சரி அதை விடுவோம். வேதம் வேதாந்தம் என்று புரளி பேசுபவர்கள் "தனுர் வேதத்தை" எங்கே விட்டார்கள்? அஸ்த்திர வித்தைகள் எல்லாம் எங்கே போயின? இந்த புரட்டுக்களைஆராய வெளிக்கிட்டால் நிலமை என்ன ஆவது?

விஞ்ஞான அறிவைக் கொண்டு அவ்வாறான ஓவியங்களின் தொழில்நுட்பத்தினை அல்லது அதன் உற்பத்தி காலத்தினை கணித்துள்ளார்கள். உதாரணமாக "யேசுவின் முகத்திரை" என கூறப்பட்ட திரைச்சீலை போலியானது என அறிவியல் நிரூபித்துள்ளது. அது கி.பி. 1ம் நூற்றாண்டில் தயாரிக்க பட்டிருக்கலாம் என கணிக்க படுகிறது. "இலக்கியத்தில் இருந்து அறிவியல்" என்பதற்கும் "அறிவியல் மூலம் அதனை பகுப்பதென்பதற்கும்" நிறைய வேறுபாடு உண்டு. எந்தவொரு காலத்திலும் தொழில்நுட்பம் இருந்தே வந்திருக்கிறது.

சிறீலங்கா என்றால் சிங்களப் பேரினவாத அடையாளம் என்று சிந்திக்கும் தமிழர்களும் உண்டு. சிறீலங்காவின் தான் தன் தாய் நாட்டின் பூர்வீகம் உள்ளது என்பதை தேடும் தமிழரும் உண்டு. இங்கும் சிலர் இராமாயணத்தை.. பார்பர்னிய.. ஆரிய.. திராவிட.. குதர்க்க வாத அடிப்படையில் நோக்க முனைகிறீர்கள். அதில் ஆதாயம் தேட விளைகிறீர்கள். இதே கூட்டம் இந்தியாவிலும்..இந்திய அரசியலிலும் உண்டு. இவர்கள் இருவருமே அறிவியலுக்கு வேலை கொடுத்து அறிவியல் உண்மைகளை கண்டறிய மாட்டார்கள். மாறாக எத்தனையோ அறிவியல் ஆய்வு வளங்கள் இந்தியாவில் இருக்க.. நாசாவுக்கு ஓடிச்சென்று டொலர் கணக்கில் வழங்கி.. அவர்கள் வழங்கும் சற்றலைற் ஒப்பீட்டுகளை வைத்து வழங்கும் அறிக்கைகளை தூக்கிப் பிடிச்சுக் கொண்டு.. திரியுறம். நாசாவும் வியாபாரத்துக்காக விளம்பரத்துக்காக.. அமெரிக்க பிராந்திய நலனுக்காக... அறிவியலின் பெயரால் பொய்களை அவிழ்க்கக் கூடியது என்பதும் கண்டறியப்பட்ட உண்மைகளே..! நாசா கம்பரை விட சுவாரசியமா கதைகளை புனையக் கூடியது. அதற்கு அறிவியல் சாயமும் பூசக் கூடியது..!. எமது பூர்வீகத்தை நாம் தாம் ஆராய அறிவியலை பாவிக்கனுமே தவிர அறிவியலை விலைக்கு வாங்க முற்பட்டால் அதில் வியாபாரம் தான் மிகும். :P :lol:

எமது கலை கலாச்சார விழுமியங்களில் ஆரிய தாக்கம் மிக அதிகம். அது இன்றுவரை எமது எண்ணங்களையும் வாழ்க்கையையும் கட்டுப்படுத்துகிறது. அதை உணர்வதென்பது அதனின்றும் வெளிவருவதற்கான முதற்படி. பலர் அதை செய்கிறார்கள். எமது இலக்கிய, சமய (சமயத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என்பது வேறுவிடயம்), சமூக காரணிகளை இந்த தொற்றில் இருந்து பக்குவமாக மீட்க வேண்டியது அரும் பெரும் கடன். இதற்கு துணைவரக்கூடியன "நுண்ணறிவும்" அறிவியலும் ஆகும்.

நாசா, நாசா என்று எம்மவர்கள் வாயை பிளப்பது என்பது உண்மைதான். சொல்லப்போனால் எம்மவர்கள் அறிவியல் அறிவை இன்னும் பலமடங்கு மேம்படுத்த வேண்டிய அவசிய, அவசர தேவை இருக்கிறது. நாசா கூறும் விடயங்கள் சில உண்மைக்கு புறம்பானவை. நாசா கூறுவதெல்லாம் உண்மை அல்ல. நசாவில் இருக்கும் பல விஞ்ஞானிகள் "கஞ்சா" போன்ற சில போதை மருந்துகளை பாவிப்பார்களென அறிந்துள்ளேன். வேடிக்கை என்னவென்றால் "ராக்கெட்" தொழில்நுட்பம் கூட அமெரிக்காவினதோ அல்லது ரஷ்யாவினதோ அல்ல. யேர்மனியின் தொழில்நுட்பத்தை அவர்கள் இருவரும் களவாடினார்கள். :lol::lol:

Share this post


Link to post
Share on other sites

சரி. ஒவ்வொரு விடயமாக பார்ப்போம்.

ஈழத்திருமகன் அவர்களே.. நீங்கள் ஆரிய திராவிட கண்ணோட்டத்தோடு இலக்கியங்களை அணுகுறீங்க.

எம்மைப் பொறுத்தவரை ஆரிய திராவிட பாகுபாட்டை நாம் அறிவியல் ரீதியா ஏற்றுக் கொள்ளவில்லை. அதை நவீன ஆர்கியோலொஜி மற்றும் இழைமணி ( கலப்புன்னங்கம்) டி என் ஏ ஆய்வுகள் கூட நிராகரிக்க விளைகின்றன. தமிழர்கள் என்போரை இந்திய உபகண்டத்தின் பூர்வீகக் குடிகளில் ஒன்றாகக் கருதிய ஆய்வுகளை மட்டுமே நாம் இன்று கோரி நிற்கின்றோம். அதன் அடிப்படையில் சில ஆய்வுகள் செய்யப்பட்டும் உள்ளன. இவை பற்றி முன்னர் நடந்த விவாதங்களின் போது ஆதாரங்கள் சகிதம் முன் வைத்துள்ளோம்.

நாம் தமிழ் மொழி மூல இலக்கியமாக கம்பராமாயணம் மற்றும் மணிமேகலை சிலப்பதிகாரம் போன்றவற்றை நோக்குகின்றோம். மணிமேகலை குறிப்பிட்ட பூம்புகார் இன்று பூகம்பம் கடற்கோள் காரணமாக பூமிக்கடியில் சென்றுள்ளது. அதற்கான ஆதாரங்கள் ஆய்வுகளில் கிடைத்துள்ளன.

ஒரு ஆய்வுக்கான முக்கியத்துவத்தை அல்லது அவசியத்தை இராமாயணம் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் அது முக்கியமாகிறது. அது குறிப்பிட்ட படியால் தான் அது குறிப்பிடும் புவியியல் அம்சங்கள் முக்கியம் பெறுகின்றன. இன்றேல் அது முக்கியமற்று ஆய்வுக்குரிய அவசியத்தை இழந்து நின்றிருக்கும்.

அண்மையில் அமெரிக்க ஆய்வாளர்கள்... பப்புநியுகினியாவுக்கு அண்மையில் மனித சஞ்சார மற்ற மலைச்சாரலில்.. ஏவாளின் தோட்டத்திற்குரிய அம்சங்களைக் கொண்ட உயிரியல் பல்லினத்துவ உயிரிகளை இனங்கண்டிருந்தனர். அதை பிபிசி உட்பட அனைத்து ஊடகங்களும் அறிவியல் ரீதியில் அணுகி வெளியிட்டன. நாம் இலக்கியப்படைப்புகளில் வரலாற்றுச் சான்றுகளைத் தேடுவதை விடுத்து இலக்கியங்களுக்கு அநாவசியமாக ஆரிய திராவிட பாகுபாடுகளை திணித்து அல்லது திரித்து... அவற்றைப் புறக்கணிக்கக் கோருகின்றோம். இதன் மூலம் மேலும் மேலும் எமது வரலாற்று சான்றுகளை தேடுவதில்.. அடையாளம் காண்பதில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கின்றோம். இதை உணரவும் மறுக்கிறம். அதற்குப் பகுத்தறிவு என்றும் பெயரிட்டுக் கொள்கிறோம். மூடநம்பிக்கைகளை இனங்காட்டுவது வேறு.. ஆரிய திராவிட பாகுபாட்டடிப்படையில் இலக்கியப் புறக்கணிப்பது என்பது வேறு.அதுவும் ஒரு வகை மூடநம்பிக்கையின் விளைவுதான்.

(பப்புனியுகினியா பற்றிய ஆய்வுக்கு --- http://news.bbc.co.uk/1/hi/sci/tech/4688000.stm )

பகுத்தறிவுவாதிகள் என்போர் அறிவியல் ரீதியாக அன்றி.. சமூகப்பாட்டியலை அடிப்படையாகக் கொண்டு விடயங்களை உணர்ச்சி பூர்வமாக அணுகலாம் என்று நினைக்கின்றனர். உண்மையில் அது பகுத்தறிவுவாதமே அல்ல. எமது இனத்தின் இருப்பை அடையாளம் காட்டக் கூடிய சான்று எங்கிருப்பினும் அதை அறிவியல் ரீதியாக அணுகி நிறுவல்களுக்கு சாத்தியப்பாட்டை வளர்க்கனுமே அன்றி.. கற்பனைகள் என்றும் பார்பர்னிய ஆதிக்கம் என்றும் தட்டிக்கழிப்பதால் இழப்பு என்பது எமக்குத்தான். இது கூட.. நாம் பிற சமூக ஆதிக்கங்களுக்கு அடிபணிவதற்கு சமனாகும். இது கூட ஒருவகை மூடத்தனமே. எவர் எதைக் குறிப்பிடினும்.. வரலாற்றுச் சான்றுகளுக்காக இலக்கியங்களுக்குள் தேடல் செய்வதையும் அறிவியல் கொண்டு அவற்றை அணுகுவதையும் நாம் வரவேற்கின்றோம். இதுதான் எமது நிலைப்பாடு.

ஈழத்திருமகன் நீங்கள் இதில் இருந்து வேறுபட்டு.. ஆண்டாண்டு காலமாக தொடரும் ஆரிய திராவிட முரண்பாட்டுக்குள் நின்று தமிழ் இலக்கியங்களை அணுக விரும்புறீங்க. அது உங்களுக்கு நியாயமாகக் கூட இருக்கலாம். ஆனால் எம்மால் அதை ஏற்றுக் கொள்ள முடியல்ல. ஏற்கவும் முடியாது. காரணம்.. கம்பனின் இலக்கியம் கொண்டிருக்கும் கற்பனையை விட கற்பனையானது திராவிடம்.. ஆரியம் என்ற பதங்களுக்கான கற்பனை..! :lol:

Share this post


Link to post
Share on other sites

இராவணனைக் கட்டிக்காக்கிறதல்ல. இராமாயணத்தில் வரும் எமது வரலாற்றுத் தொன்மைகளை இனங்காட்டக் கூடிய சான்றுகளை கண்டறிவதாகும். அதற்கு அறிவியல் விளக்கம் பெறுவதாகும். இதனடிப்படையில்.. தமிழீழம் என்ற தேசத்தின் எல்லை... கரையோரத்தில் இருந்து மத்திய மலைநாடு நுவரெலியா நோக்கி விரிவிக்கப்பட வேண்டும். மத்திய மலைநாடு தங்கள் பூர்வீகம் என்று சிங்களவர்கள் உரிமை கொண்டாட நாங்களும் விட்டுக் கொடுத்திட்டு.. கரையோரங்களைத் தக்க வைச்சிட்டு அதுதான் தமிழீழம் என்று கொண்டிருக்கிறம். ஆனால் வரலாற்றுச் சான்றுகளை தொலைத்துவிட்ட நாம்.. இப்படியான காவியங்களூடாவது.. வரலாற்றுத் தொன்மைகளை இனங்காட்டவும்.. அறிவியலூடாக நிறுவவும் முயல வேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------

இந்தப் பாலமும் இராமாயணமும் சிங்களவர்களுக்கு இன்னும் கசப்பான விடயமே..! சீதா எலிய சீதை அம்மன் கூட சிங்களக் காடையரால் தாக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. - நெடுக்கால போவான்

----------------------------------------------------------------------------------

மேற்கண்ட நெடுக்கால போவானின் கருத்துக்கள் எதிர்மறையான விழைவை ஏற்படுத்தவே அதிகம் சந்தர்ப்பம் உள்ளது. இன்று நாம்காணும் சிங்கள பேரினவாதம் எவ்வாறு விதைக்கப்பட்டது அதன் கரு என்ன என்று நாம் சிந்திக்க வேண்டும். அதை விளக்க "சிங்களப் பெருந்தேசிய இனத்தின் அடிப்படைகளும் மேலாதிக்கமும்" என்ற நூலில் ஒரு பந்தியை ஆதாரமாக தருகின்றேன்பக்கம் 28, 29" -சமுத்திரன்

------------------------------------------------------------------------------------

"சிங்கள பொளத்த மறுமலர்ச்சியின் பெரும் தலைவராக விளங்கியவரான அநாகரிக தர்மபாலா (1864-1933) பொளத்த புனித நகரான அனுராதபுரவிலிருந்து கிறிஸ்தவ கோவில்கள் மட்டுமல்லாது முஸ்லீம்களின் கசாப்பு கடைகளையும் மதுக்கடைகளையும் அகற்ற வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். அவரது பேச்சிலும் எழுத்திலும் சிங்கள பொளத்தர்கள் அல்லாதோர் குறிப்பாகத் தமிழர் முஸ்லீம்கள் , மலையாளத்தார் எல்லோரும் வந்தேறு குடிகள், வெளியார், அகற்றப்பட வேண்டியவர்கள் என்ற கருத்தே வலுப்பெற்றிருந்தது. தமிழர்களை தென்னிந்திய ஆக்கிரமிப்பாளர்களின் வழித்தோன்றல்களாக சிங்கள பௌத்த நாகரீகத்தை அழிக்க முயன்ற எதிரிகளின் பரம்பரையினரினராக கண்ட தர்மபாலா முஸ்லீம்களை வியாபாரம் செய்ய வந்து அழையா விருந்தாளிகளாய்ச் சிங்களத்தீவில் தங்கிவிட்டவர்களாக் குறிப்பிட்டார்.

இலங்கையின் உண்மையான உரிமையாளர்கள் சிங்கள பொளத்தர்களாயிருக்கும் போது அவர்களுக்குரிய இடங்களைத் தமிழர்கள், முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் பெற்றிருப்பது அநியாயம் என்று செய்தியை ஜனரஞ்சகப்படுத்துவதற்கு உதவியாக தர்மபாலா போன்றோர் சில புராணக்கதைகளின் உதவியை நாடினார்கள். முதலில் இந்த நாடு சிங்கள பௌத்தர்களின் நாடு மட்டுமே என்ற உணர்வினை மக்கள் மத்தியில் பரப்புவது அவசியமாயிற்று. சிங்கள பௌத்தர்களின் உரிமைப்பாட்டினையும் உயர்வான இரத்தத்தையும் நிருபிக்க மூன்று புராணக்கதைகளைப்பயன் படுத்தினார். ஓன்று. விஜயன் ஒரு வட இந்திய இளவரசன். ஓர் ஆரியன். அவனும் அவனுடைய உயர்வம்ச சகாக்கள் எழுநூறு (700) ஆண்களும் , தர்மபாலாவினால் 1902 ம் ஆண்டு அமரிக்காவில் வெளியிடப்பட்ட பிரசுரமென்றின் படி , இரண்டாயிரத்து நானூற்றி நாற்பத்தாறு வருடங்களுக்கு முன் இலங்கை மண்ணில் வந்திறங்கினர். இலங்கை மண்ணில் பூர்வீக குடிகளை அடிமைகளாக்கிய விஜயன் இன்னொரு "ஆரிய மன்னனாம் மதுரை பாண்டியனின் மகளை மணம் செய்தான். இதே மன்னன் விஜயனின் சகாக்களும் 699 உயர்வர்க்க கன்னிகளை மணம் செய்ய அனுப்பி வைத்தானாம். ஆகவே இரண்டு ஆரிய குடும்பங்களின் சேர்க்கையினால் எழுந்தது சிங்கள இனம்.

இந்த கட்டுக்கதை இரண்டாவது கட்டுக்கதைக்கு வழிவகுத்தது. அதுவே சிங்களவர் பரிசுத்தமான ஆரிய இரத்தத்தை கொண்ட உயர்பிறப்புக்கள் என்பதாகும். தர்மபாலாவின் காலத்தில் ஆரியர் மற்றய இனங்களை வெற்றி கொண்ட உயர் இனத்தவர் என்ற கருத்துக்கள் வெளிவர தொடங்கிவிட்டன. இதற்கேற்பக் கர்ண பரம்பரைப் புராணக் கதைகளுக்குப் புத்துயிரும் புது உருவும் கொடுப்பதில் வெற்றி கண்டார்கள் தர்மபாலா பேன்றோர்.

சிங்கள இனத்தவரின் தூய்மை பற்றி பெருமைப்பட்ட தர்மபாலா தம் இனத்தவர்களிடம் அடிமை இரத்தம் இல்லை என்றும் அவர்களைப் புற மதத்தினரான தமிழராலோ அல்லது கலாச்சார சின்னங்களை அழித்தொழிக்கும் ஐரோப்பியர்களாலோ ஒரு போதும் வெற்றி கொள்ள முடியாவில்லை என்றும் கூறினார். ஆரிய மனப்பாங்கினை பரப்பி சிங்களவர் மற்ற இலங்கையர்களையும் விட விசேடமான உயர் இனத்தவர் என்ற சிந்தனையை ஆழமாக்கி சிங்களவர்களின் தனித்துவத்துக்கு ஒருவித தார்மீக ஆளுமையையும் கொடுக்கும் நோக்குடன் மூன்றாவது புராணக்கதையையும் பயன்படுத்தினார். அதுவே புத்த பகவானின் இலங்கை விஜயம் ஆகும். புத்த பகவானே நேரில் வந்து ஆசீர்வதித்து அருள்பலித்த விசேடமான சிங்கள பொளத்தர்களின் நாடு இலங்கை என்பது ஜனரஞ்சக வரலாறாயிற்று.

----------------------------------------------------------------------

நெடுக்கால போவன் சொல்வது இந்த பாலக்கதையை வைத்து எமது எல்லைகள் வரலாற்று தொன்மைகளை இனம் காண வேண்டும் என்பதாகும். சிங்கள இனத்துக்கு தனித்தன்மையை ஏற்படுத்தி ஒரு உயர்தேசிய இனம் என்ற உணர்வை ஏற்படுத்தியது தாம் ஆரிய உயர் குடி என்ற புனை வரலாறு. அவ்வாறு விதைக்கப்பட்ட கரு வளர்ந்து இன்று விருட்சமாக பேரினவாதமாக மாறி பேயாக என் முன்னே நிற்கின்றது.

அடுத்து நாம் சைவர்கள் பிற்பாடு இந்துக்கள் என்று போனாலும் இந்திய ஆழும் வர்க்கம் அதாவது இந்து பரிவாளங்கள் எம்மை சக மதத்தவன் என்று மதிக்கின்றதா? மாறாக சிங்களவனுடன் சேர்ந்து எறி மிதிக்கின்றது.

எமமவர்கள் பலரிடம் ஒரு எண்ணம் உள்ளது அதாவது நாம் இந்துக்கள் என்ற அடிப்படையில்இராமனுக்கும் இராமயணத்துக்கும் நெருக்க மானவர்கள் என்று, ஆனால் அந்த எண்ணத்துக்கு எதிரான எண்ணமே ஆரியத்திடம் உள்ளது.

நீங்கள் திராவிடம் ஆரியம் என்று பிரிப்பதை விரும்பவில்லை ஆனால் நடைமுறையில் எங்களை ஆரியம் மதித்ததாக சரித்திரமும் இல்லை. திராவிட இனம் வேறு ஆரிய இனம் வேறு என்பது ஆரியருக்கும் தெரிந்த விடயம்.

இராமர் பாலத்தை வைத்து எமது தொன்மைகளை ஆராய வேண்டிய அவசியம் இல்லை. எமது தொன்மைகளில் ஆரியம் எவ்வாறு புகுந்து எம்மை சீரளித்தது என்று தான் நாம் ஆராய வேண்டும். ஆரியம் என்று நான் சொல்வது ராமாயணத்தை மட்டுமல்ல சிங்கள ஆரிய பூராயத்தையும் தான்.

எமது தொன்மைகளை ஆராய எம்மை ஏறி மிதிப்பவனின் புளுகு புராணங்கள் தான் கிடைச்சுதா?

Share this post


Link to post
Share on other sites

ஈழத்திருமகன் அவர்களே.. நீங்கள் ஆரிய திராவிட கண்ணோட்டத்தோடு இலக்கியங்களை அணுகுறீங்க.

எம்மைப் பொறுத்தவரை ஆரிய திராவிட பாகுபாட்டை நாம் அறிவியல் ரீதியா ஏற்றுக் கொள்ளவில்லை. அதை நவீன ஆர்கியோலொஜி மற்றும் இழைமணி ( கலப்புன்னங்கம்) டி என் ஏ ஆய்வுகள் கூட நிராகரிக்க விளைகின்றன. தமிழர்கள் என்போரை இந்திய உபகண்டத்தின் பூர்வீகக் குடிகளில் ஒன்றாகக் கருதிய ஆய்வுகளை மட்டுமே நாம் இன்று கோரி நிற்கின்றோம். அதன் அடிப்படையில் சில ஆய்வுகள் செய்யப்பட்டும் உள்ளன. இவை பற்றி முன்னர் நடந்த விவாதங்களின் போது ஆதாரங்கள் சகிதம் முன் வைத்துள்ளோம்.

நாம் தமிழ் மொழி மூல இலக்கியமாக கம்பராமாயணம் மற்றும் மணிமேகலை சிலப்பதிகாரம் போன்றவற்றை நோக்குகின்றோம். மணிமேகலை குறிப்பிட்ட பூம்புகார் இன்று பூகம்பம் கடற்கோள் காரணமாக பூமிக்கடியில் சென்றுள்ளது. அதற்கான ஆதாரங்கள் ஆய்வுகளில் கிடைத்துள்ளன.

ஒரு ஆய்வுக்கான முக்கியத்துவத்தை அல்லது அவசியத்தை இராமாயணம் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் அது முக்கியமாகிறது. அது குறிப்பிட்ட படியால் தான் அது குறிப்பிடும் புவியியல் அம்சங்கள் முக்கியம் பெறுகின்றன. இன்றேல் அது முக்கியமற்று ஆய்வுக்குரிய அவசியத்தை இழந்து நின்றிருக்கும்.

ஈழத்திருமகன் நீங்கள் இதில் இருந்து வேறுபட்டு.. ஆண்டாண்டு காலமாக தொடரும் ஆரிய திராவிட முரண்பாட்டுக்குள் நின்று தமிழ் இலக்கியங்களை அணுக விரும்புறீங்க. அது உங்களுக்கு நியாயமாகக் கூட இருக்கலாம். ஆனால் எம்மால் அதை ஏற்றுக் கொள்ள முடியல்ல. ஏற்கவும் முடியாது. காரணம்.. கம்பனின் இலக்கியம் கொண்டிருக்கும் கற்பனையை விட கற்பனையானது திராவிடம்.. ஆரியம் என்ற பதங்களுக்கான கற்பனை..! :lol:

நெடுக்காலபோவான் !!

முதலில் ஒரு சிறு திருத்தம். என்னை "பகுத்தறிவுவாதிகள்" என்ற குழுமத்தினுள் இழுத்து விடாதீர்கள். என்னைப் பொறுத்த வரை "கடவுள் இல்லை" என்று வாதிடுபவரும், "கடவுள் உண்டு" என வாதிடுபவரும் ஒரே தடியின் இரு முனைகள் (Both the parties can never escape from that misery). உண்டு இல்லை என்பதை விட இன்னொரு விடயமும் இருக்கிறது. சரி அதை விட்டுவிடுவோம்.

ஆரியர் என எடுத்தவுடன் "பகுத்தறிவையும்" சேர்த்தே இழுப்பது சரியல்ல. ஆரியம் என்பது ஒரு கோட்பாடு. அதை மனிதரின் டீ.என்.ஏ இல் பகுப்பாய்வு செய்து காணமுடியுமா? நான் சொல்ல வருவது "ஆரிய கோட்பாடு". அதற்காக கண்மூடித்தனமாக பிராமணரையோ அன்றி மற்றய சமூகத்தையோ வசைபாடுவது சுத்த முட்டாள்தனம் என கருதுபவன் நான். நான் எதிர்ப்பது "ஆரிய கோட்பாடுகளையும் அவற்றை காவித்திரிபவர்களையும் தான்". அவர்கள் எந்தச் சமூகத்தை சேர்ந்தவராயிருந்தாலும் சரி. துரதிஷ்டவசமாக இந்த கோட்பாடுகளை சந்ததி சந்ததியாக காவிவருபவர்கள் பிராமணர்களாகவும் இருக்கிறார்கள்.

உண்மையில், மனிதன் உருவாக்கிய சமயம் என்ற கோட்பாடு ஒவ்வொரு மனிதனிலும் எவ்வாறான பிளவுகளையும் போராட்டங்களையும் உவாக்குகிறது என்பதை ஆழ்ந்து சிந்தித்தால் புரியும். இந்த மதம் சார்ந்த கோட்பாடுகள் இலக்கியங்களிலும், அன்றாட வாழ்க்கை நெறிகளிலும் ஏன் புகுத்தப்பட்டன? இலக்கியங்கள் பல்லாண்டு பல்லாண்டு அழிவற்று வாழும் என இதை செய்தவர்களுக்கு மிக நன்றாக தெரியும். அத்துடன் தமது சமய கோட்பாடுகளும் வாழவேண்டும் என்பதற்காக இந்த நச்சு விதைகளை இலக்கியங்களுக்குள் புகுத்தினர். மக்கள் தாங்களே பின்னிக்கொண்ட வலையில் சிக்குண்டு மடிந்து போவதை பார்க்கும்போது மிக வேதனையாக உள்ளது.

சரி. இந்த இராமாயணம் கூறும் அதன் காலம் என்ன? புவியியல் ரீதியில் அது முன்வைக்கும் கொள்கை என்ன? சும்மா இராமன் அணை கட்டினான். அனுமான் கடலைக் கடந்தான், "சஞ்சீவி பர்வதத்தை கையில் ஏந்தி வந்தான்" போன்ற மாயாஜால கதைகள் மக்களை மூடர்களாக்கி அவர்களை ஒரு அளவுக்கு மேல் சிந்திக்க விடாமல் வைத்திருப்பதற்காக உருவான புனை கதைகள். இதை தவிர்த்து அந்த கதையில் "விஞ்ஞான ஆராய்ச்சிக்கு என்று உள்ள பகுதி என்ன? ".

அன்புடன்

- ஈழத்திருமகன் -

Share this post


Link to post
Share on other sites