• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

கறுப்பி

இராமர் பாலத்தை இடிப்பதற்கு அமெ. புலிகள் கூட்டுச் சதியாம்

Recommended Posts

அயின்ச்ரைன் அய்யா நீங்கள் சுத்திரமாதிரி எனக்குப்படுது, இதுவும் நீங்கள் நெடுக்கண்ணா போட்டதாக குறிப்பிட்ட பந்தி

பிறகு இதுவும் நீங்கள் நெடுக்கண்ணா போட்டதாக போட்ட பந்தி

இடையில இருந்தது மாயமா மறைஞ்சு திரிவுபட்டு வேறமாதிரியான தோற்றப்பாட்ட தரேல்ல?

சுத்தலாம் ஆனா இப்பிடி சுத்த கூடாது :angry:

சுத்திச் சுழட்டுவது நமது வேலையல்ல.

எதுக்கும் நீங்கள் பக்கம் 6, பதிவு #108 சென்று அங்கிருந்து தொடர்ந்து வரவும்.

Share this post


Link to post
Share on other sites

இறைவனை பூசை செய்கின்ற எல்லோரும் பார்ப்பான் என்று நான் எங்குமே சொல்லவில்லை.

நெடுக்காலபோவான்! வேண்டுமென்றே சொல்லாத விடயங்களை சொன்னதாகவும், சொன்ன கருத்துக்களின் அர்த்தத்தை திரித்தும் வாதிட வேண்டாம்.

நீங்கள் இராவணனை பார்ப்பனன் என்றீர்கள். நான் அதை இல்லையென்று தர்க்கித்தேன்.

இராவணன் வேதம் கற்றவனாக இருக்கலாம். ஆனால் ஆரியர்களின் பார்வையில் அவன் "மேலோன்" அல்ல. மேலே உள்ள தலையில் இருந்து பிறந்த பரசுராமன் தண்டிக்கப்படவில்லை.

கீழே உள்ள காலில் இருந்து பிறந்த திராவிடன் இராவணன் தண்டிக்கப்படுகின்றான்.

ஆரியரின் பார்வையில் "கீழோன்" ஆகிய இராவணன் வேதங்கள் கற்றதும் ஒரு குற்றமாக பார்க்கப்பட்டிருக்கலாம். (இங்கே சம்புகனை நினைவுபடுத்துகிறேன்)

மொத்தத்தில் இராவணன் பார்ப்பனன் என்பது தவறான வாதம். இராவணனின் திராவிட வீச்சை தாங்க முடியாதவர்கள் உருவாக்கிவிட்ட புரளி.

Share this post


Link to post
Share on other sites

தமிழ்ப்பண்பாடு என்பது தனிச்சொல். இது தமிழர் பண்பாடு என எடுக்கமுடியுமா என்பது போல் உள்ளது உங்கள் கேள்வி. :D:D

இராமாயணம் என்பது "ஒரு சமூகத்துக்காக" அவர்களால் எழுதப்பட்டது. இதைத்தான் கத்திக் கத்தி சொல்கிறேன். இது புனைகதையேயன்றி வேறல்ல.

எமது கருத்தாடலின் சுருக்கம்....

1. இராமாயாணம்.. வெறும் புனைகதையல்ல. புவியியல் சான்றுகளை உள்ளடக்கி இருக்கும் ஒரு சமூகத்துக்கான இலக்கியம். அதில் உள்ள வரலாற்றுச் சான்றுகளை ( அது புவியியல் சார்ந்தும் இருக்கலாம்.. பிறவாகவும் இருக்கலாம்) அறிவியல் கொண்டு அணுக வேண்டும் இனங்காண வேண்டும் என்பதுதான் எமது கருத்தின் இலக்கு.

2. இராமாயணம் என்பது வான்மீகியின் படைப்பு என்பதுக்கும் அப்பால் சங்க காலத்திலேயே தமிழர் இலக்கியங்களுக்குள் இடம்பிடித்துள்ளது. அதுவும் வான்மீகி கையாளாத விடயங்களைக் கையாண்டிருப்பதானது.. இராமாயணத்துக்கும் தமிழுக்கும் இடையில் நெருங்கிய வரலாற்றுப் பின்னணி இருந்திருக்க சந்தர்ப்பம் உள்ளது.

3. காலத்துக்குக் காலம் இராமாயணத்தின் கதாப்பாத்திரங்கள் மீள் படைப்பாளிகளின் சிந்தனையோட்டத்துக்கு ஏற்ப சித்தரிக்கப்பட்டிருப்பட்டு இருப்பினும் எல்லாவற்றிற்கும் ஒரு பொதுவான அடிப்படை உண்டு. அதன் பின்னணி ஆராயப்பட வேண்டியது.

4. ஆரிய திராவிட பாகுபாட்டுக்கு இராமாயணம் சான்றழிப்பதாக கருதிட எந்த அடிப்படையும் இல்லை.

5. இராமாயணப்படி.. இராமன்.. ஆரியன் என்பதற்கும்.. இராவணன் திராவிடன் என்பதற்கும் எந்த அடிப்படைகளும் கிடையாது.

6. இராமாயணக் கருத்துப்படி இலங்கை வேந்தனாக இராவணன் சிவ வழிபாட்டை செய்துள்ளான். சமீபத்திய ஆய்வுகளின் படி பண்டைத்தமிழ் நாகரிகத்தில் சிவ வழிபாடு முதன்மை பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்க தாகும்.

7. தமிழர்களின் வரலாறு சிவ வழிபாட்டோடு இணைந்தது என்பதால் மதம் என்ற அடிப்படையை விலக்கி வைத்து தமிழர் வரலாற்றை அணுகுவது சிறந்த அணுகுமுறையல்ல.

8. இராமாயணத்தில் சாதியக் காப்பு செய்யப்பட்டுள்ளதானது தவறான நிலை. இராமன் என்ற பாத்திரத்துக்கு தெய்வத்தன்மை அளித்திருப்பதால் அது பார்பர்னிய வடிவம் அல்ல. இராமன் விபீடணனின் உற்ற நண்பன். குகனின் உற்ற நண்பன். அனுமனின் உற்ற நண்பன். சடாயுவின் உற்ற நண்பன். இப்படி வர்க்க பேதமற்ற நிலையை சமூகதிற்கு காட்ட பல இலக்கிய உருவகிப்புக்கள் இராமாயணத்தில் உண்டு.

9. வேத நூல்களைக் கற்றது அல்லது கற்பது என்பது பார்பர்னிய சொத்துடமையல்ல. வேத நூல்களை கற்பவர்கள் பார்பர்னியர்களும் அல்ல. ஆனால் வேத நூல்களைக் கற்றவர்கள் தற்காலத்தில் கல்வி கற்றவர்கள் போல மதிப்பளிக்கப்பட்டுள்ளனர். இதை அடிப்படையாகக் கொண்டு.. ஆரிய பார்பர்னிய கருத்தியல் திரிபுகளை செய்வது அநாவசியமானது.

10. இராமர் பாலம் என்பதை தமிழில் தமிழருக்கு இனங்காட்டியது கம்பராமாயணம் தான். அந்த வகையில் அது நிஜமான புவியியல் கூறு ஒன்றின் அடையாளப்படுத்தலின் முன்னோடியாகும்.

11. விமானப்பறப்பை சிந்தித்த அளவில் மனிதப் பறப்புக்கான சிந்தனையின் பிறப்பிடமாக இராமாயணமும் விளங்கிறதாக இனங்காட்டலாம்.

12. இராமாயணம் எடுத்துக் கையாண்ட புவியியல் தோற்றங்கள் இன்றும் உலகில் எஞ்சி இருப்பதானது இராமாயணம் வெறும் புளுகுகளை மட்டும் கூறுகின்றது என்பதற்கு அப்பால் அறிவியல் கொண்டு ஆராயப்படக் கூடிய அம்சங்களைக் கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்வதும் அறிவியல் கொண்டு ஆராய்வதும்.. தமிழர் பாரம்பரிய தொடர்புகள் அவற்றிற்கிடையே இருக்கா என்று நோக்குவதும் முக்கியமாகும்.

13. நாசா தான் உத்தியோக பூர்வமாக இராமர் பாலம் பற்றிய அறிக்கையை வெளியிடல்ல என்று கூறி இருப்பதுடன்.. இந்திய அரசியல்வாதிகளின் தேவை கருதி செய்மதிப்படம் மூலமான ஒரு பகுப்பாய்வு அறிக்கை மட்டும் நாசாவை சேர்ந்த சிலரால் அளிக்கப்பட்டுள்ளது என்பதை மட்டும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம்.. இராமர் பாலம் தொடர்பான எந்த அகழ்வாராய்ச்சியும் செய்யப்படல்ல என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. அகழ்வாராய்ச்சிகள் செய்யாமல் எப்படி உயிர் சுவடுகள் எதுவும் அங்கு இல்லை என்பதை உறுதிப்படக் கூற முடியும்...??!

14. நாசாவின் அறிக்கை பெறப்பட்ட வழிமுறைகள் பற்றிய தெளிவான அறிவியல் தொழில்நுட்ப வழிமுறை விபரங்கள் எவையும் வெளியிடப்படாமை.. அவர்கள் கையாண்ட அறிவியல் வழிமுறைகள் குறித்து சந்தேகத்தை எழுப்புகிறது.

இவையே எமது கருத்துக்களில் நாம் பிரதிபலித்துள்ளோம்.

இவற்றோடு உடன்படுபவர்களும் உண்டு.. இல்லாதோரும் உண்டு.

எமது நிலைப்பாடுகளில் இருந்து மாறக் கூடிய அளவுக்கு பலமான ஆதாரங்கள் எதனையும் யாரும் இங்கு முன்வைக்காதது மட்டுமன்றி மீண்டும் மீண்டும்.. ஆரிய.. பார்பர்னிய.. திராவிட.. புளுகுமூட்டை என்ற தங்களின் வாதங்களுக்காக திரிபுகளை கையாண்டு கருத்துக்களை விதண்டாவாதமாக முன் வைத்ததைத் தவிர.. இராமர் பாலத்துக்கான புவியியல் அடிப்படை விளக்கத்தை கூட இங்கு பெற முடியல்ல.

இத்தோடு இங்கு எமது பக்க வாதத்தை நிறைவு செய்கின்றோம்.

நன்றிகள். :)

Share this post


Link to post
Share on other sites

8. இராமாயணத்தில் சாதியக் காப்பு செய்யப்பட்டுள்ளதானது தவறான நிலை. இராமன் என்ற பாத்திரத்துக்கு தெய்வத்தன்மை அளிந்ததால் அது பார்பர்னிய வடிவம் அல்ல. இராமன் விபீடணனின் உற்ற நண்பன். குகனின் உற்ற நண்பன். அனுமனின் உற்ற நண்பன. சடாயுவின் உற்ற நண்பன். இப்படி வர்க்க பேதமற்ற நிலையை சமூகதிற்கு காட்ட பல இலக்கிய உருவகிப்புக்கள் இராமாயணத்தில் உண்டு.

அதை விட இராமன் திருமணம் செய்த சீதை என்பவள் அரசகுமாரி என்று உறுதிப்படுத்த முடியாது. அவளை ஜனகமன்னர் வயல்கரையில் இருந்து எடுத்துத் தான் வளர்த்திருந்தார். அங்கே இராமன் திருமணம் செய்த போது சாதி வகுப்பாக அதை நோக்கவில்லை. சந்தேகம் எதையும் கிளப்பவில்லை.

இங்கே இராவணன், இராமன் கதை கதைப்பது என்பது தங்களுக்குள்ள ஆரிய வெறியை நியாயப்படுத்தவும், தங்களின் புளித்துப் போன கொள்ளைக்கு உயிர் கொடுக்கவே அன்றி உண்மையோடு அல்ல.

இராமயணம் புனைகதை என்று சொல்லிக் கொண்டே இங்கே அவன் திராவிடன் என்று சொல்வது எதிர்மறைக்கருத்து சொல்வது எல்லாம், திராவிடம் என்ற பெயரில் வெறியைக்கொட்டுவதன் வெளிப்பாடாகும்.

கருமையான தமிழன் என்ற நிலையை மாற்றி, ஆரியனோடு தம்பத்திய வாழ்க்கையில் ஒன்றிணைந்து, கறுப்பும், பழுப்புமாகக் குழந்தைகளைப் பெற்றெடுத்துக் கொண்டு, திராவிடம் என்ற பெயரில் கூத்தடிக்கின்றார்கள்.

இங்கே இவர்கள் சொல்லுகின்ற குற்றவாளி என்பது வெறுமனே பார்ப்பானி கிடையாது. அனைத்து மேல்தட்டு வர்க்கமு;ம தான். அது நாயக்கர் வம்சம் உற்பட்ட அனைவருக்கும் பொருந்தும்.

Share this post


Link to post
Share on other sites

சுத்திச் சுழட்டுவது நமது வேலையல்ல.

எதுக்கும் நீங்கள் பக்கம் 6, பதிவு #108 சென்று அங்கிருந்து தொடர்ந்து வரவும்.

மன்னிக்கோனும் அயின்ச்ரைன் அய்யா, இவ்வளவு அறிவுள்ள நீங்களய் பிழைவிடமாட்டியளே. நான் தான் கவனிக்கேல்ல. ;)

Share this post


Link to post
Share on other sites

அதை விட இராமன் திருமணம் செய்த சீதை என்பவள் அரசகுமாரி என்று உறுதிப்படுத்த முடியாது. அவளை ஜனகமன்னர் வயல்கரையில் இருந்து எடுத்துத் தான் வளர்த்திருந்தார். அங்கே இராமன் திருமணம் செய்த போது சாதி வகுப்பாக அதை நோக்கவில்லை. சந்தேகம் எதையும் கிளப்பவில்லை.

இங்கே இராவணன், இராமன் கதை கதைப்பது என்பது தங்களுக்குள்ள ஆரிய வெறியை நியாயப்படுத்தவும், தங்களின் புளித்துப் போன கொள்ளைக்கு உயிர் கொடுக்கவே அன்றி உண்மையோடு அல்ல.

இராமயணம் புனைகதை என்று சொல்லிக் கொண்டே இங்கே அவன் திராவிடன் என்று சொல்வது எதிர்மறைக்கருத்து சொல்வது எல்லாம், திராவிடம் என்ற பெயரில் வெறியைக்கொட்டுவதன் வெளிப்பாடாகும்.

கருமையான தமிழன் என்ற நிலையை மாற்றி, ஆரியனோடு தம்பத்திய வாழ்க்கையில் ஒன்றிணைந்து, கறுப்பும், பழுப்புமாகக் குழந்தைகளைப் பெற்றெடுத்துக் கொண்டு, திராவிடம் என்ற பெயரில் கூத்தடிக்கின்றார்கள்.

இங்கே இவர்கள் சொல்லுகின்ற குற்றவாளி என்பது வெறுமனே பார்ப்பானி கிடையாது. அனைத்து மேல்தட்டு வர்க்கமு;ம தான். அது நாயக்கர் வம்சம் உற்பட்ட அனைவருக்கும் பொருந்தும்.

தூயாண்னைக்கு துண்டா நிறவெறி வர்க்கவெறி வம்ச வெறி இல்லையே.

B)

Share this post


Link to post
Share on other sites

எனக்கு இருக்கா இல்லையா என்பதை மற்றவர்கள் தான் சொல்லவேண்டும். ஆனால் திராவிடம் என்ற பெயரில் நடக்கின்ற கூத்துக்கு நான் உடன்பாடில்லை. அது சுத்த ஏமாத்து.

தமிழ் தேசியம் என்ற ஒரு கொள்கைக்கு ஊடாகவே எதையும் நான் அணுகவிரும்புகின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

கபராமாயாணம் அது கூறுகிறபடியான கால எல்லையில் அது நிகழ்ந்துருக்கிறது உண்மையானால் அந்தகாலத்து நாகரிகத்துக்கு ஆடை துணிகூட கிடைத்திருக்க வாய்பில்லை, அப்படி இருக்க சமூகவியல் பண்புகள் எல்லாம் கதையில் அளக்கப் படுகிற மாதிரி யான வளர்ச்சி எங்கே இருந்து கிடைத்திருக்கும்?

மனித வரலாற்றின் துவக்கதுக்கு முன்பே தோன்றி அழிந்து போன இக்காலம் அறிந்திராத உயிரினங்களின் வரலாற்று சான்றுகள் கூட இந்த அறிவியல் ஆய்வு எடுத்தெடுத்து தருகிறது, ஆனால் இப்படி புவியையே கடவுள் பதவியோடு ஆண்ட இராமனினதோ? அல்ல அவர்காலத்து எதுவுமோ இன்னும் கிடைக்கவில்லை.

அறிவியலின் பார்வைக்கு.

பலவருடங்களுக்கு முன்னுள்ள உலகப்படம் அப்படியே எக்காலமும் அச்சொட்டாக இருக்க முடியாது அதன் தரை எல்லைகளின் நிலை.

எமது அறிவுக்கு தெரிந்ததாகவே இந்தியாவின் பல கரையோரக் கிராமங்கள் கடலால் கொள்ளப் பட்டமை யாவரும் அறிந்தவிடயமே!

இப்படி கம்பரின் கற்பனைக்காலத்தில் இப்போது இருந்த உருவ அமைப்பைவிட சற்று முன்னேற்ற கரமாய் இருந்திருக்கலாம் இராமர் பாலம் என்று சொல்லப்படுகின்ற அந்த மண்திட்டி, அந்த மண்திட்டியின் புராதன வரலாற்றுக்கும் சேர்த்து கதை விட்டிருக்கிறார் அந்தக்காலத்துக்கு,

அங்கே இதுமட்டுமா இன்னும் பல எத்தனையோ மண்திட்டுக்கள் ஆங்காங்கே இருக்கின்ததே!

பல ஆண்டுகளுக்கு முன்னே வல்லை வெளியின் தரை அமைப்பை ஒத்ததாகவே அந்த நில அமைப்பும் இருந்திருக்கலாம், காலஒட்டத்தால் தண்ணீரின் உயரமும் அதிகரித்திருக்கவே முடியும் இந்த நிலைமையாலே அந்த வரம்பும் காணாமல் போய் இருந்திருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

:lol: சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.

நான் உந்த கன்றாவியள் ஒண்டையும் முதல் பக்கத்தில இருந்து வாசிக்கேல. எல்லாம் புழுத்துப்போன பழய வாதங்களத்தான் திரும்பத் திரும்ப எல்லாரும் வந்து கொட்டுகினம். ஏதோ நடக்கட்டும். ஆனா சிலதுகள பொதுவா சொல்லிட்டு போறன்.....................................

எப்பிடி எதுக்கா ஈழத்தில தமிழ்த் தேசியத்த தூக்கவேண்டிய கட்டாயம் வந்திச்சோ அதமாதிரியான கட்டாயமும் அவசியமும் தான் நீங்க சொல்லுற >>திராவிடக் கூத்தையும்<< தூக்கிறதுக்கு காரணமா இருந்திச்சு. நீங்க சிங்களத் தேசியத்தின்ர ஆதிக்கத்துக்கு எதிரா தமிழ்த் தேசியத்த முன்வச்சு அதுக்காக வாதாடுறதயும் .... இன்னொராள் தன்ர பார்வையில் >>தமிழ் தேசியக் கூத்து<< எண்டுதான் சொல்லுவார். தமிழ் தேசியத்த நிறுவுறதுக்காக நீங்களும் தமிழற்ற வரலாறு, அது இதெண்டு ஆயிரக்கணக்கில புழுகுகளயும் திரிபுகளயும் செய்யிறீங்க எண்டு இன்னொராள் சொல்லுவார். இந்தியாவில திராவிடத் தேசியம் ஒண்டும் சும்மா பொழுதுபோக்குக்காக வரல. அது தேவையான நேரத்தில சரியான ஒரு கருத்தியல் அடித்தளத்தில தான் கட்டப்பட்டிருக்கு. பார்ப்பனியர்களில இனவெறி காட்டுறது எண்டு நீங்க சொல்லுறத அப்பிடியே திரிப்பி போட்டா ........................ நீங்க >>சிங்களவன், மோட்டு சிங்களவன், சிங்களப் பேரினவாதம், சிங்கள ஆதிக்கம்<< எண்டு சொல்லுறதுகளும் சிங்களவர்கள் மேல உங்களுக்கு இருக்கிற இனவெறி தான்.

புராணத்திலயும் புனைகதையளிலயும் அந்தக்காலத்திலயே அறிவியல் கண்டுபிடிப்புகள் நிறைய செஞ்சிட்டினம். அந்தக்காலத்திலயே எல்லாத்தையும் சொல்லி வச்சிட்டினம் எண்டு சொல்லுற முட்டாத்தனங்கள முதலில விடுங்கோ. ஒரு கதைய நாங்க எடுத்த அது அந்த மனுசன் வாழுற காலத்த பிரதிபலிக்கத்தான் செய்யும். அதான் ஒரு படைப்பு. அதுக்காக அதில சொல்லியிருக்கிறத வரலாறு எண்டு சொல்லுற முட்டாத்தனங்கள நிப்பாட்டுங்கோ. யாழ்களத்தில இருந்தே நிறைய உதாரணங்கள காட்டலாம். உதாரணமா டன் அண்ணா யாழ் உறுப்பினர்களின்ர பொங்கல் விழா எண்டும் ரசிகை அக்கான்ர திருமண நிகழ்வெண்டும் ஒரு கற்பனை நகைச்சுவைக் கதை எழுதினவர். அதில ரசிகை அக்கான்ர திருமணம் உண்மையா நடந்த சம்பவம். அதுக்கு யாழ் உறுப்பினர்கள் போனதெண்டது கற்பனை. இந்தக் கதைய பத்து வருசத்துக்கு பிறகு ஒராள் வேற எங்கயோ ஒரு பேப்பர் துண்டில >>ரசிகையின்ர திருமண நிகழ்வு<< எண்ட தலைப்போட மட்டும் வாசிக்கிறார் எண்டு வையுங்கோ. அவர் அதில எழுதப்பட்டிருக்கிற எல்லாத்தையும் உண்மையா நடந்ததா வரலாற்று தகவலா எடுத்துக்கொண்டாரெண்டால் எப்பிடி இருக்குமோ அப்பிடித்தான் இருக்கு உங்கட வாதங்களும்.

அதமாதிரி மனுசன் தான் பாக்கிற விசயங்கள எழுதி வைக்கிறான். தான் அனுபவிக்கிற விசயங்கள எழுதிழ வைக்கிறான். அதில தன்ர பார்வையோட மட்டுந்தான் அவன் எழுதுறான். தன்ர கற்பனையள கலக்கிறான். தனக்கு சார்பான விசயங்கள பிரமாண்டமாக்கிறான். தனக்கு சார்பில்லாத தனக்கு பிடிக்காத விசயங்கள தவிர்த்துக் கொள்ளுறான். இது எல்லாருக்குமே பொருந்தும்.... ராமாயணத்த வரலாறு மண்ணாங்கட்டி எண்டு சொல்லுறவைக்கும் பொருந்தும்....... திராவிடத் தேசியம் பேசுறவைக்கும் பொருந்தும்........... தமிழ்த்தேசியம் பேசுறவைக்கும் பொருந்தும்.......

உந்த புராணக்காரரின்ர விஞ்ஞான அறிவென்னெண்டு எங்களுக்கு தெரியுந்தானே...... சூரியன பாம்பு விழுங்குதெண்டுற பென்னாம்பெரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்ப கண்டுபிடிச்சவை தானே அவை. தான் பாக்கிறத தன்ர கற்பனை வடிவங் கொடுத்து சொல்லுறதுக்கு பேர் விஞ்ஞானக் கண்டுபிடிப்பில்ல. ஒண்ட சொன்னா அதுக்கான ஆதாரங்கள், காரணங்களோட சொன்னாத்தான் அது விஞ்ஞானம்....... அறிவியல். சும்மா சூரியன பாம்பு விழுங்குது, தாலி கட்டிறதில விஞ்ஞான நோக்கம் இருக்கு, பொட்டு வைக்கிறதில அறிவியல் பார்வை இருக்கு எண்டு சொல்லிக்கொண்டு திரியாதேங்கோ.... இதுக்குள்ள வெளிநாட்டுக்காரன் அதுக்கு ஏதாவது காரணம் கண்டுபிடிச்சு சொன்னா பிறகு.... உடன துள்ளிக் குதிச்சுக்கொண்டு வந்திடுவினம்..... அப்பவே எங்கட மதத்தில எல்லாம் சொல்லியிருந்தது..... எண்டுகொண்டு....

ஏன் வெளிநாட்டுக்காரன் கண்டுபிடிச்சு சொல்லுறதுக்கு முதல் உங்களால காரணங்கள கண்டுபிடிச்சு சொல்ல முடியல?

சூரியன சந்திரன் மறைக்கிறத நானும் பார்த்தால் ஒவ்வொராக்களும் தங்கட கற்பனைக்கு ஒண்ட சொல்லுவினம். நான் சொல்லுவன் சூரியன் செத்துப்போட்டெண்டு. இன்னொராள் சொல்லும் சூரியன் இழுத்துப் போர்த்துக்கொண்டு படுத்திட்டெண்டு. இன்னொராள் சொல்லும். சூரியன் குப்புறப் பிரண்டு கிடக்கெண்டு. இப்பிடி ஆளாளுக்கு ஒரு கற்பனைய சொல்லுவினம். ஆனா யார் அதுக்கு காரணம் என்ன, ஏன் அப்பிடி நடக்கெண்டு கண்டுபிடிச்சு சொல்லுகினமோ அதுக்கு பேர் தான் விஞ்ஞானம் அல்லாட்டி அறிவியல். மற்றதெல்லாம் கற்பனை. தான் பார்த்த விசயத்த பூசி மெழுகி சொன்ன புனைவு. இந்த வித்தியாசங்கள முதலில விளங்கிக் கொள்ளுங்கோ.

ராமர் பாலம் எண்டு வான்மீகி சொன்னாரோ கம்பர் சொன்னாரோ எனக்கு அத பற்றி கவலயில்ல. ஆனா ஆளாளுக்கு அந்த இந்திய இலங்கை இடையில இருக்கிற தொடுப்ப தங்கட கற்பனைக்கு சொல்லலாம். நானும் யாழ் களத்தில ஒரு கதை எழுதி வைக்கிறன். அந்தக் கதையில் இந்த இந்திய இலங்கை தொடுப்பு ஒரு சுரங்கப் பாதையெண்டும்..... தமிழீழ போராட்டம் நடக்கிற காலத்தில இந்தியாவுக்கு போய் வாறதுக்காக தமிழாக்களால கட்டப்பட்டது எண்டும்..... அதில பூனைக்குட்டியும் ஒரு பிடி மண்ணை எடுத்து தன்னாலான உதவிய செஞ்சது எண்டும் எழுதி வைக்கிறன். ஒரு 1000 வருசம் கழிச்சு நான் எழுதின கதையின்ர ஏதாவது ஒரு பிரதி யாரிட்டயாவது போய்ச் சேரும் தானே. அப்ப நீங்க சொல்லுற இந்தப் பாலம் தமிழன் கட்டின சுரங்கம் எண்டு எல்லாரும் நம்பட்டும். :P

விஞ்ஞானம் இருக்கு அறிவியல் இருக்கு தொழில்நுட்பம் இருக்கு கண்டுபிடிப்பு இருக்கு வரலாறு இருக்கு எண்டு சொல்லுற கனவான்கள் எல்லாம் இப்பிடி புழுகித் தள்ளுறத விட்டிட்டு வலுவான காரணத்தோட ஆதாரத்தோட எல்லாத்தையும் நிறுவுங்கோ. அபஇபிடி நிறுவாத வரைக்கும் நீங்க சொல்லுறதெல்லாத்தையும் கற்பனை புனைகதையெண்டுதான் நான் சொல்லுவன்.......................... அதுக்கு நான் ஆதாரமோ காரணமோ சொல்லத்தேவையில்ல. B)

கீழ இருக்கிற படங்கள பாருங்கோ:

Martian_face_viking.jpg

MARS%203D%20SOURCE%20IMAGE.jpg

Face-on-Mars_perspective410.jpg

இந்த படங்கள் செவ்வாய்க் கிரகத்தில எடுத்த படங்கள். மனித முகம் மாதிரி தோற்றமளிக்கிற படங்கள். யாரின் தலையிது? யாரின்ர முகத்தோற்றம் இது? நாசா எடுத்த படங்கள் இவை. அங்க வாழ்ந்த அலியன்களின்ரயா இருக்கலாம் எண்டு கொஞ்சக் காலம் கதை அடிபட்டது. ஆனா இப்ப கிட்டடில அது சும்மா அப்பிடி தோற்றமளிக்குது எண்டு சொல்லுப்பட்டுச்சு......... முகில பாத்தா எங்களுக்கு அதில அவ்வையார் இருக்கிற மாதிரி இருக்கிறதுதானே... அதமாதிரி முகலப் பாத்து நாங்கள் நிறய கற்பனையள் பண்றனாங்கள் தானே.... எங்களுக்கு தெரிஞ்ச உருவங்கள் தெரியுற மாதிரி.... அதுதான் இதுவும் எண்டு சொல்லிச்சினம்..... optical illussion எண்டு.... வாசிக்கிறாக்கள் உங்க எங்கயும் செய்திப்பக்கங்களில விஞ்ஞானத்தளங்களில ஓடிப்போய் புரட்டி பாருங்கோ face on mars எண்டு கூகிளில தேடினியள் எண்டால் நிறைய கிடைக்கும்.

---------------------

எனக்கென்னவோ எல்லாம் எங்கட ராமாயணத்தில சொல்லியிருக்கு எண்டுதான் படுது. இப்பதான் வெளிநாட்டுக்காரங்கள் உதுகள கண்டுபிடிக்கிறாங்கள்.

இது ராமன் கொய்த ராவணின்ர பத்து தலையளில ஒரு தலையா இருக்குமா??? இல்லாட்டி ராமன் கடைசியா செவ்வாய்க்கிரகத்தில ஆருக்கும் சாபம் போட்டு அது இப்பிடி ஆகிட்டுதோ? ராமாயணத்த பிச்சு பிரிச்சு மேஞ்சு பாருங்கோ.... அதுக்குள்ள நிறைய அறிவியல் தகவல்கள் கிடக்கும்........ :P

Share this post


Link to post
Share on other sites

இந்த படங்கள் செவ்வாய்க் கிரகத்தில எடுத்த படங்கள். மனித முகம் மாதிரி தோற்றமளிக்கிற படங்கள். யாரின் தலையிது? யாரின்ர முகத்தோற்றம் இது? நாசா எடுத்த படங்கள் இவை

ராமர் செவ்வாயிலையும் வாழ்ந்தவராம் அடுத்த பிறப்பை செவ்வாயில சீதையோட பிறந்தவராம் அங்கு ஏவுகனை சோதனை நடத்தி[அதுதாப்பா அக்கினி அஸ்திரம் நாக அஸ்திரம்] பரிசோதித்தவராம் தன் முகத்தை எதிர்காலத்தில் நாசா படம் எடுத்து தன்னையும் தன்னை பற்றிய புழுடாக்களையும் நம்பும் அதிபுத்திசாலிகளுக்கு தெரியப்படுத்தும் விதமாக உருவாக்கியவராம்.தற்போது அடுத்த தலைமுறை ஏவுகனை ரக்கட் தொழில்நுட்பத்துடன் வியாழனில் பாலம் கட்டி கொன்டு இருகின்றாராம் முடிஞ்சால் அதையும் காப்பாத்துங்கோ

Share this post


Link to post
Share on other sites

தமிழத் தேசிய விடுதலைப் போரை நடாதுவதாகச் சொல்லிக் கொள்ளும் புலிகலின் மூத்த உறுபினர்களான இளங்குமரனும்,யோகியும் அண்மைய நிலவரம் நிகழ்வில் ஏன் ஆரியர் ,வர்ணாச்சிரமம்,பார்ப்பனர் என்று பேசியிருக்கினம்.இவை பேசிற தமிழத் தேசியம் வேறையோ இல்லை இங்க களத்தில தமிழத் தேசியத்திற்க்குத் தான் எனது ஆதரவு என்று சொல்லுறவை எந்தத் தமிழத் தேசியத்தைப்பற்றிக் கதைக்கினம்?இவை தங்களூக்கெண்டு எதாவது புது வரைவிலக்கணம் வச்சிருக்கினமோ?

Share this post


Link to post
Share on other sites

நாரதர் அண்ணா நீங்க எல்லாத்துக்கயும் புலியளயும் தமிழீழ போராட்டத்தையும் கொண்டு வந்து தலைப்பை திசை திருப்புறீங்கள். நீங்கள் இப்பிடித்தான் எப்பவும். உங்களால பதில் கருத்து எழுதேலாட்டி போராட்டத்தை இழுத்து எல்லாரையும் மடக்கலாம் எண்டு பாக்கிறியள். :P

இளங்குமரன் அண்ணாவும் யோகி அண்ணாவும் சொன்னா அது புலியளின்ர கருத்தா? அது தலைவற்ற கருத்தா?

சும்மா டமில் தேசியம் எண்டுகொண்டு. அப்பிடியெண்டா என்ன?

விட்டா இங்க சிலபேர் தமிழர் எண்ட இனமே இல்லையெண்டு சொல்லுவினம். இதுக்குள்ள நீங்க டமிழ் தேசியம் எண்டுகொண்டு நிக்கிறீங்க. தமிழ்த் தேசியம் எண்டுறது சிலபேர் சிங்கள ஆக்களில இருக்கிற இனவெறியால தூக்கிபிடிக்கினம். :P

Share this post


Link to post
Share on other sites

பூனைக்குட்டியாரே நாசா அனிமேட் பண்ணினதுகள் எல்லாம் உண்மையாகுமோ..??!

நாசா கூட திருத்தங்களைச் செய்துள்ளது. அதுபோக நாசா பகிரங்கமாகவே தான் இராமர் பாலம் தொடர்பில் உத்தியோக பூர்வ அறிக்கை சமர்ப்பிக்கவில்லை என்று வேற கூறியிருக்கிறது..! :D

உங்கள் பதிவையும் சான்றுகளையும் பார்க்க நகைச்சுவை அரங்கில் இருப்பது போன்ற உணர்வு..! :lol::D

Share this post


Link to post
Share on other sites

ஏன் யோகியண்ணாவும் இளங்குமரன் அண்ணாவும் அவற்றை உச்சரிக்கக் கூடாது அப்படி எங்கும் சட்டம் இருக்கு என்றில்லையே. அவர்கள் உச்சரிச்சு விட்டதற்காக அதுதான் தமிழ் தேசியம் என்றும் கொள்ள வேண்டும் என்றும் இல்ல. அவர்களும் எழுதி வைத்துள்ள வரலாறுகளைத் தான் படிச்சிட்டுக் கதைக்கினம். காலமாற்றத்தோடு நவீன அறிவியல் மாற்றத்தோடு வருபனவற்றை உள்வாங்கும் வரலாற்றுப் பதிவுகளை அவர்கள் படிக்க நேரும் போது அவர்கள் பேசும் தொனியும் மாறும்.

நேற்றுவரை மாவிலாறு அணையை மூடிட்டு கிழக்கில் அரை அடியையும் கைவிடோம் என்ற எழிலன் இன்று அதையே உச்சரிக்க முடியுமா..??! அதுபோலத்தான்...இதுவும்.. மாற்றங்களூடு பதிவுகள் வரும் போது வரலாறுகள் திருத்தப்படும்..! :lol:

Share this post


Link to post
Share on other sites

பூனைக்குட்டியாரே நாசா அனிமேட் பண்ணினதுகள் எல்லாம் உண்மையாகுமோ..??!நாசா கூட திருத்தங்களைச் செய்துள்ளது. அதுபோக நாசா பகிரங்கமாகவே தான் இராமர் பாலம் தொடர்பில் உத்தியோக பூர்வ அறிக்கை சமர்ப்பிக்கவில்லை என்று வேற கூறியிருக்கிறது..! :D உங்கள் பதிவையும் சான்றுகளையும் பார்க்க நகைச்சுவை அரங்கில் இருப்பது போன்ற உணர்வு..! :lol::D
:D:D நாசா மட்டுமா அனிமேட் பண்ணுது :P :P நாசாக்கு முதல் இராமயணத்த வச்சே எங்கட மதத்தில நாங்கள் எல்லாம் அனிமேட் பண்ண வெளிக்கிட்டம்..................... :P

ஏன் யோகியண்ணாவும் இளங்குமரன் அண்ணாவும் அவற்றை உச்சரிக்கக் கூடாது அப்படி எங்கும் சட்டம் இருக்கு என்றில்லையே. அவர்கள் உச்சரிச்சு விட்டதற்காக அதுதான் தமிழ் தேசியம் என்றும் கொள்ள வேண்டும் என்றும் இல்ல. அவர்களும் எழுதி வைத்துள்ள வரலாறுகளைத் தான் படிச்சிட்டுக் கதைக்கினம். காலமாற்றத்தோடு நவீன அறிவியல் மாற்றத்தோடு வருபனவற்றை உள்வாங்கும் வரலாற்றுப் பதிவுகளை அவர்கள் படிக்க நேரும் போது அவர்கள் பேசும் தொனியும் மாறும்.நேற்றுவரை மாவிலாறு அணையை மூடிட்டு கிழக்கில் அரை அடியையும் கைவிடோம் என்ற எழிலன் இன்று அதையே உச்சரிக்க முடியுமா..??! அதுபோலத்தான்...இதுவும்.. மாற்றங்களூடு பதிவுகள் வரும் போது வரலாறுகள் திருத்தப்படும்..! :D
ஏன் சொல்லேலாது? இண்டைக்கு " கிழக்கை (அரை அடியையும்) கைவிடுவோம்" எண்டு எழிலன் அண்ணா எங்கயும் சொன்னவரோ?????? :P

Share this post


Link to post
Share on other sites

:lol::D நாசா மட்டுமா அனிமேட் பண்ணுது :P :P நாசாக்கு முதல் இராமயணத்த வச்சே எங்கட மதத்தில நாங்கள் எல்லாம் அனிமேட் பண்ண வெளிக்கிட்டம்..................... :P

அனிமேசனின் முன்னோடிகளும் நாங்கள் தான் என்றீங்க. ம்ம்.. நல்லது.. நாங்க யாரு...! :D:D

Share this post


Link to post
Share on other sites

இல்லை சில பேர் சிங்கள ஆமியக் கொல்லுறது தான் தமிழத் தேசியம் எண்ட விளக்கத்தில இருக்கினம் எண்டுதான் நானும் விளங்கிக் கொள்ளுறன்.அதால தான் எனக்கு இருக்கிற பிரச்சினை ஏன் அப்ப யோகியும்,இளங்குமரனும் மினக்கெட்டு இதுகளைக் கதைக்கினம் எண்டு விளங்கேல்ல?

அதுக்குத் தான் கேக்கிறன் தமிழத் தேசியம் எண்டா என்ன எண்டு? இந்தப் பிரச்ச்னை எல்லத் தலைப்பிலையும் சிலருக்கு இருக்குது.யாழ்க்களத்தில் எங்க பாத்தாலும் இருக்குது.பிறகு எப்படிச் சொல்லுவியள் நான் தலைப்பைத் திசை திருப்பிறன் எண்டு.முதலில தமிழத் தேசியம் எண்டா என்ன எண்டு விளங்கினாத் தான் அதைப் பற்றிக் கதைக்கலாம்.

வரலாறு எண்டா என்ன அது யாரால் எப்படி எழுதப்படுகுது எண்டு தெரியாமா அந்த நாள் முதலா சிலர் எதோ எல்லம் புலம்பிக் கொண்டிருகினம்.

னேற்று நடந்த சம்பவந்தைப் பார்த்த மூன்று பேர் அதை மூண்டு விதமாச் சொல்லலாம்.இதில வர்லாறு அறிவியல் ஆதாரம் அகழ்வாரச்சி எண்டு சும்ம புலாட விட்டுக் கொன்டிருக்கினம்.

பரண விதாரண எழுதாத வரலாறா இல்லை மகாவம்சம் சொல்லாத புரட்டா?

வரலாறை வெண்டவன் தான் எழுதுவான்.தமிழத் தேசியம் வெல்லுது எண்டா ,தமிழத் தேசியம் சொல்லுறது தான் வரலாறு.

திராவிடர் வெல்லுகினம் எண்டா திராவிடர் சொல்லுறது தான் வரலாறு.ஆரியர் வெண்டு ஒரு வரலாற்றை எழுதி வச்சாங்கள் எண்டா, சிங்களவ்ர் ஒரு வரலாற்றை தங்கலுக்குச் சார்பா எழுதி வச்சாங்கள் எண்டா இப்ப நாங்கள் அதை மாத்தி எழுதுவம்.அதற்க்கு ஆதாரமா மீண்டும் அகழ்வராச்சிகளையும் எமக்குச் சாதகமான சான்றுகளையும் காட்டுவம்.

இடையில இங்க சும்மா புலம்பிக் கொண்டிருக்காமா , யாழ்க் களத்தில உருப்படியாச் செய்ய கன விசயங்கள் இருக்கு.

Share this post


Link to post
Share on other sites

அனிமேசனின் முன்னோடிகளும் நாங்கள் தான் என்றீங்க. ம்ம்.. நல்லது.. நாங்க யாரு...!

பின்ன........ ராமர் பாலத்தையே நாங்க அனிமேட் பண்ணின ஆக்களாச்செ.... அதுவும் கவிதையாலயே அனிமேற் பண்ணின ஆக்கள் நாங்க.... :P

இல்லை சில பேர் சிங்கள ஆமியக் கொல்லுறது தான் தமிழத் தேசியம் எண்ட விளக்கத்தில இருக்கினம் எண்டுதான் நானும் விளங்கிக் கொள்ளுறன்.அதால தான் எனக்கு இருக்கிற பிரச்சினை ஏன் அப்ப யோகியும்,இளங்குமரனும் மினக்கெட்டு இதுகளைக் கதைக்கினம் எண்டு விளங்கேல்ல?

அதான் எனக்கும் விளங்கேல.... official ஆ யாராவது டமில் தேசியம் எண்டா என்னெண்டு definition குடுத்தால் நல்லது. அப்பிடியே விக்கிபீடியாவிலயும் போட்டுவிட்டால் நிம்மதி. இல்லாட்டி ராமர் பாலம் மாதிரி தமிழ்த்தேசியத்துக்கும் ஆளாளுக்கு ஓரு கற்பனைக் கதைய அவிட்டு விடுவினம்.

உதாரணமா:

தமிழ்த் தேசியம் எண்டால் சிங்கள ஆமிய கொல்லுறது (நன்றி நாரதர் அண்ணா)

தமிழ்த் தேசியம் எண்டால் இந்துமதக் கோட்பாட்டை பின்பற்றுறது.

தமிழ்த் தேசியம் எண்டால் யாழ் களத்தில வீரவணக்கம் சொல்லுறது.

தமிழ்த் தேசியம் எண்டால் வெளிநாட்டுக்கு ஓடிப்போறது.

தமிழ்த் தேசியம் எண்டால் வெளிநாட்டில இருந்து "நாங்கள் வீரப்பரம்பரை" எண்டு கவிதை எழுதுறது.

தமிழ்த் தேசியம் எண்டால் தமிழில கண்டன அறிக்கை விடுறது.

தமிழ்த் தேசியம் எண்டால் ........... மிச்சம் நாளைக்கு வந்து எழுதுறன் :P

Share this post


Link to post
Share on other sites

யாழில உருப்படியாச் செய்ய கருசணை கொண்டிருக்கிறனீங்க எல்லாம் எதுக்கு.. இதுக்குள்ள புகுந்து வாழைத்தோட்டத்துக்குள்ள புகுந்த மதம் பிடிச்ச யானையாட்டம்...??! பொறுக்காதே..! :lol::D

கவிதையில அனிமேட் பண்ணின படியாத்தான் இப்ப நாசா பண்ணுது.. இல்ல நாசா.. சற்றலைட்ட ரஸ்சியாவுக்கு மேலால திருப்பிட்டு.. உளவு பார்த்திட்டு இருக்கும்..! :D:D

Share this post


Link to post
Share on other sites

சேது சமுத்திரத் திட்டம் நிறவேற்றப்படுவது, தமிழ் நாட்டில் இருக்கும் திராவிட அரசின் அரசியற் பலம் சார்ந்த விடயம்.கலைஞர் சொல்லியுள்ளது போல் ஆரிய வர்ணாச்சிரமக் கருத்தியலை முன் நிறுத்தும் சக்திகள் அயோத்தி இராமர் கோவிலை முன் வைத்து நாடத்தியது போல்,தமிழ் நாட்டிலும் சேது சமுதிரத் திட்டத்திற்க்கு எதிராக களம் இறங்க விழைகின்றன.ஈற்றில் வெல்வது யார் என்பது எவரின் அரசியற் பலம் வெல்கிறது என்பதைப் பொறுத்தது.

இதில இங்க அந்த ஆதராம் இந்த ஆதாரம் எனக்குத் தான் அறிவியல் தெரியும் எண்டு சும்ம வெத்துவெட்டு விவாதம் செயிறதி விட்டுப்போட்டு ,வரலாறு எண்டா என்ன அது எவ்வாறு உருவாக்கப் படுகிறது? அரசியலுக்கும் வரலாற்றுக்கும் ஆன தொடர்பு என்ன? பண்டைய தமிழர் ,திராவிடர் வரலாறு என்ன என்று கொஞ்சமாவது படித்து விட்டு விவாதிக்கலாம்.

பிடிச்ச முயலுக்கு மூன்று கால் எண்டு அந்தக் காலம் முதல் சாகும் வரை சொல்லிக் கொண்டு இருக்கப் போறியளோ?இந்த விவாத்தில் எழுதிப் பயன் இல்லை என்று தான் எழுதாம இருந்தான்.சிலரின் கருதுக்கள் எல்லை மீறிப்போவதையும், சிலர் தமிழத் தேசியம் எண்டா என்ன எண்டு விளக்கம் சொல்ல முற்படுவதையும், இன்னும் சிலர் பரந்த வாசிப்பை உடைய இளங்குமரன் அண்ணாவுக்கு என்ன தெரியும் என்கிற வகையிலும் எழுத முற்படும் போது பேசாமல் இருக்க முடியவில்லை

இளங்குமரன் பேசியவை இன்றைய வரலாற்றின் வாசிப்புக்கள்.கலா நிதி இந்திரபால எழுதிய .

'இலங்கையில் தமிழர்-ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு, பொது ஆண்டிற்கு முன்(கி.மு) 300 முதல் பொது ஆண்டு (கி.பி) 1200 வரை' என்னும் நூலில் இருந்து சொல்லப்பட்ட பல விடய்ங்கள் அந்தப்பேச்சில் உண்டு.

//அவர்களும் எழுதி வைத்துள்ள வரலாறுகளைத் தான் படிச்சிட்டுக் கதைக்கினம். காலமாற்றத்தோடு நவீன அறிவியல் மாற்றத்தோடு வருபனவற்றை உள்வாங்கும் வரலாற்றுப் பதிவுகளை அவர்கள் படிக்க நேரும் போது அவர்கள் பேசும் தொனியும் மாறும்.//

அவர் வருங்காலத்தில் நான் சொல்லுறைத் தான் சொல்லுவார் எண்டு என்ன சாத்திரம் பாத்துபோட்டே சொல்லுறியள்?

நெடுக்கல போவான் இணைக்கும் இணைய இணைப்புக்கள் தான் நவீன அறிவியல் மாற்றத் தோடு வரும் வரலாற்றுப் பதிவுகளா? அதை யாரு சொல்ல வேணும்? இப்படி முன்னர் குருவி எண்டு ஒருத்தரும் சொல்லி கனக்க இணைப்புகளை இணச்சவர்,பழைய ஆக்களுக்கு நாபகம் இருக்கும்.அதை ஒவ்வொண்டாப்படிச்சு அது ஏன் தவறனது எண்டு எழுதி இருக்கிறன்.இணயத்தில பல பேர் பல உள் நோக்கஙக்ளோடு பலவற்றை எழுதி இருப்பார்கள்.எதை யார் என்ன தளத்தில் என்ன சொல்லி உள்ளர்கள் என்பதை வைதுத் தான் அவற்றின் உண்மை பொய்களை நாங்கள் ஏற்ருக் கொள்ள முடியும்.சும்மஒ முயலுக்கு மூண்டு கால் எண்டு நிறுவ வேணும் எண்டு போட்டு கூகிள் ஆண்டவரிட்ட கேட்டுப்பெறுகிற இணைப்புக்கள் எல்லாம் அறிவியல் இல்லை.உந்தப் பேக்கட்டலை எப்ப நிப்பட்டப் போறியள்? உப்படி உங்கட நேரத்தியும் வீணக்கி மற்றவையின்ர நேரத்தியும் ஏன் வீணக்கிறியள்? இந்த நேரத்திற்க்கு போய் நான் மேல சொன்னதுகளை வாசியுங்கோ, பிரியோசனமா இருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

யாழில உருப்படியாச் செய்ய கருசணை கொண்டிருக்கிறனீங்க எல்லாம் எதுக்கு.. இதுக்குள்ள புகுந்து வாழைத்தோட்டத்துக்குள்ள புகுந்த மதம் பிடிச்ச யானையாட்டம்...??! பொறுக்காதே..! :lol::D

கவிதையில அனிமேட் பண்ணின படியாத்தான் இப்ப நாசா பண்ணுது.. இல்ல நாசா.. சற்றலைட்ட ரஸ்சியாவுக்கு மேலால திருப்பிட்டு.. உளவு பார்த்திட்டு இருக்கும்..! :D:D

மொத்தத்தில அனிமேட் பண்ணினதெண்டு புரிஞ்சா சரி :P :P

Share this post


Link to post
Share on other sites

இல்லை சில பேர் சிங்கள ஆமியக் கொல்லுறது தான் தமிழத் தேசியம் எண்ட விளக்கத்தில இருக்கினம் எண்டுதான் நானும் விளங்கிக் கொள்ளுறன்.அதால தான் எனக்கு இருக்கிற பிரச்சினை ஏன் அப்ப யோகியும்,இளங்குமரனும் மினக்கெட்டு இதுகளைக் கதைக்கினம் எண்டு விளங்கேல்ல?

அதுக்குத் தான் கேக்கிறன் தமிழத் தேசியம் எண்டா என்ன எண்டு? இந்தப் பிரச்ச்னை எல்லத் தலைப்பிலையும் சிலருக்கு இருக்குது.யாழ்க்களத்தில் எங்க பாத்தாலும் இருக்குது.பிறகு எப்படிச் சொல்லுவியள் நான் தலைப்பைத் திசை திருப்பிறன் எண்டு.முதலில தமிழத் தேசியம் எண்டா என்ன எண்டு விளங்கினாத் தான் அதைப் பற்றிக் கதைக்கலாம்.

நாரதரே!!

என்னை பொறுத்தவரை "இனங்களின் தேசியம்" என்பதை வார்த்தைகளினாலோ அல்லது வகுப்புக்களினாலோ இன்னொருவருக்கு விளக்கிவிட முடியாது. இனங்களின் தேசியம் என்பது (எங்களை பொறுத்தவரை தமிழ்த்தேசியம்) அந்த இனக் குழுமத்தில் இருக்கும் ஒவ்வொருவர் மனதிலிருந்தும் பீறிட்டு எழவேண்டிய எண்ணங்களின் தொகுப்பு. இது சதாரணமான எண்ணங்களா என்றால், இல்லை. அந்த இனத்தின் உயிர்வாழ்க்கை, வாழிடம், மொழி, கலை, கலாச்சாரம், தொடர்பாடல், பாதுகாப்பு இன்னோரன்ன அடிப்படை குணாம்சங்களை எந்தப் பேரழிவிலிருந்தும் பாதுகாக்கும் ஆன்ம வல்லமை, எண்ணங்களினூடு ஒவ்வொருவரையும் சென்றடைகிறது, இறுகப் பிணைக்கிறது. இந்த மிக உன்னதமான, ஆழமான எண்ணங்களின் தொகுப்பு, ஓரளவிற்கு "இனத்தின் தேசியம்" என்பதை புரிந்துகொள்ள நாம் எடுக்கக்கூடிய முதற்படி என நினைக்கிறேன்.

ஒரு இனம் அடக்கி, ஒடுக்கி ஆளப்படும்வரை, இந்த "தேசியக் கருத்துக்கள்" அவர்கள் ஆழ்மனதில் தூங்கிக்கொண்டிருக்கும் என நினைக்கிறேன். அடிமை வாழ்க்கை மட்டுமல்ல, "நாம் அடிமையாக்க பட்டிருக்கிறோம்" என என்று ஒருவன் மனதில் பட்டவர்த்தனமாக தெரிகிறதோ, அன்றே இந்த "தேசிய உணர்வு" கொழுந்து விட்டெரிய ஆரம்பிக்கும். இதில் அவனுடைய கலை, பண்டைய நாகரீகம் என்பன மிகப் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றன. இதனால்தான் தேசிய எழுச்சி பெறும் ஒவ்வொரு இனமும், அதன் தூய, புடம்போடப்பட்ட, அப்பழுக்கற்ற "தன் சுய நாகரீக பண்பாட்டு விழுமியங்களை" முற்றுமுழுதாக அறிந்துகொள்வது மிக அவசியாமாகிறது. இலக்கியங்களில் தேடல்களும், தொல்பொருள் ஆய்வுகளும் இதனால்தான் வேகம்பெறுகிறது.

தேசிய உனர்வுகொண்ட ஒர்ருவன் தன் ஆளுமைக்கேற்ப, அந்த தேசியத்தின் உயிர்மூச்சை அடுத்தவருக்கு எடுத்து செல்கிறான். போராளியாக, கவிஞ்ஞனாக, கலைஞ்ஞனாக, அறிஞ்ஞனாக, விஞ்ஞானியாக இவர்களின் இயலுமைக்கு ஏற்றதாக, அந்த "தேசிய உணர்ச்சி பிரவாகம்" இவர்களை மாற்றிவிடுகிறது. தேசியம் என்ற பெரு விருட்ஷத்தினை தாங்கிப்பிடிக்கும் பல விழுதுகளாக இவர்கள் மாறிவிடுகின்றனர்.

தேசிய உணர்வை மூச்சாக சுவாசிக்கும், போராளிக்கும் கவிஞ்ஞனுக்கும் இடையில் பேதம் இருப்பதில்லை. நெருப்பில் சூடென்றும், குளிரானதென்றும் இருப்பதில்லை. அதைப் போலவே இவர்களும்.

சரி. இந்த உயிரோடு கலந்துவிட்ட, தொடர் சங்கிலியாக ஒவ்வொருவரையும் பிணைக்கும் இந்த "தேசிய உணர்வு" தான் ஆதிக்க சக்த்திகள் எதிகொள்ளும் மிகப்பெரும் சவால்; ஆயுதம். உணர்வுகள் கொல்லப்பட்ட, அல்லது சிதைக்கப்பட்ட இனம் இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. ஈழத்தில் ஆக்கிரமிப்பாளர் செய்துவருவதும் "இந்த தேசிய உணர்வை கொல்லுதல்" ஆகும். ஈழம் தவிர்ந்த வெளியிடங்களில் இந்தக் கூட்டம் செய்ய துடிப்பதும் இதையே. வெளியிடங்களில் ஆட்கொலை மூலம் பயத்தை ஏற்படுத்தி இதனை செய்ய முடியாதிருப்பதால் கலாச்சார சீர்கேடுகள் மூலம் இதை சாதிக்கிறார்கள். இதற்குத்தான் முன்னமே குறிப்பிட்டேன்; "தன் கலை, கலாச்சார பண்பாடுகளை" முற்றாக, பிழையற அறிந்து கொள்ளுதல் ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் கட்டாய கடமை. திரிபுகளை நுணுகி ஆராய்ந்து தூயனவற்றை சேகரித்தல் தற்போதைய காலத்தின் கட்டாயம்.

ஏதோ என் அறிவுக்கு பட்டதை எழுதினேன்.

Share this post


Link to post
Share on other sites

நெடுக்கல போவான் இணைக்கும் இணைய இணைப்புக்கள் தான் நவீன அறிவியல் மாற்றத் தோடு வரும் வரலாற்றுப் பதிவுகளா? அதை யாரு சொல்ல வேணும்? இப்படி முன்னர் குருவி எண்டு ஒருத்தரும் சொல்லி கனக்க இணைப்புகளை இணச்சவர்,பழைய ஆக்களுக்கு நாபகம் இருக்கும்.அதை ஒவ்வொண்டாப்படிச்சு அது ஏன் தவறனது எண்டு எழுதி இருக்கிறன்.இணயத்தில பல பேர் பல உள் நோக்கஙக்ளோடு பலவற்றை எழுதி இருப்பார்கள்.எதை யார் என்ன தளத்தில் என்ன சொல்லி உள்ளர்கள் என்பதை வைதுத் தான் அவற்றின் உண்மை பொய்களை நாங்கள் ஏற்ருக் கொள்ள முடியும்.சும்மஒ முயலுக்கு மூண்டு கால் எண்டு நிறுவ வேணும் எண்டு போட்டு கூகிள் ஆண்டவரிட்ட கேட்டுப்பெறுகிற இணைப்புக்கள் எல்லாம் அறிவியல் இல்லை.உந்தப் பேக்கட்டலை எப்ப நிப்பட்டப் போறியள்? உப்படி உங்கட நேரத்தியும் வீணக்கி மற்றவையின்ர நேரத்தியும் ஏன் வீணக்கிறியள்? இந்த நேரத்திற்க்கு போய் நான் மேல சொன்னதுகளை வாசியுங்கோ, பிரியோசனமா இருக்கும்.

நினைக்கல்ல.. உங்களால் குறித்த இணைப்புக்கள் தொடர்பில் அறிவியல் விளக்கம் தர முடிஞ்சிருக்கும் என்று. நீங்கள் பதிலுக்கு ஏதாவது கேள்வியைக் கேட்டிட்டு தப்பி ஓடி இருப்பீர்கள். இல்ல தனி நபர் தாக்குதலை ஆரம்பிச்சிருப்பீர்கள். இல்ல எனக்கு வேற உருப்படியான வேலை இருக்கு யாழ் குப்பைத் தொட்டி என்றிட்டுப் போயிருப்பீங்க.

உங்களுடைய பல கருத்துக்கள் கருத்துக்களுக்குப் பதிலான உங்கள் கருத்துக்களாக வருவதிலும் கருத்தாளர்களை நோக்கி அவர் அப்படி போட்டார்.. இவரும் அப்படிப் போடுறார் என்று தான்.. வருகிறது. விடயம் தொடர்பில் உங்கள் கருத்தைச் சொன்னால் விளக்கமளிக்க உதவியா இருக்கும்.

உங்களுடைய மரபணுவியல் விளக்கத்தை சில இடங்களில் கண்டு வியந்திருக்கிறேன். காரணம்.. மரமணுவியல் கூட அப்படி ஒரு விளக்கத்தை கொண்டிருக்கல்ல என்றால் பாருங்களன்..!

யோகி அண்ணன் இளங்குமரன் அண்ணன் கருத்துப் பகிர்வுகளைச் செய்யினம் என்றது.. அவர்கள் ஆரியரை.. திராவிடரை.. பார்பர்னியர்.. பிராமணரை உச்சரிக்கினம் என்றது... அதுதான் தமிழ் தேசியம் என்பது உங்கள் கருத்தா... இல்ல.. :lol:

Share this post


Link to post
Share on other sites

:lol: ஈழத்திருமகன் நல்ல தளத்தில் கருத்தாடலைக் கொண்டு சென்றிருக்கிறிர்கள்,

நீங்கள் சொன்ன அனேகமானவற்றுடன் எனக்கு உடன் பாடு உண்டு.தேசிய உணர்வு என்பது ஒருவன் அடக்கப்படும் போது தான் எழுதுகிறது.பலர் அவ்வாறு உணரும் போது அவர்களுக்கிடையே ஒரு பிணைப்பு வருகிறது.அந்தப் பிணைப்பே விடுதலைப்போராட்டங்களாக மாறுகிறது.இந்த அடிப்படை தேசிய உணர்வாகட்டும், மார்க்க்ஸின் வர்க்கப் போரட்டம் ஆகட்டும், ஏன் பின்லாடனின் இசுலாமிய அடிப்படை வாதமாக்கட்டும் எல்லவற்றிற்க்கும் பொருந்தும்.எங்கே எவனொருவன் தனக்கு அனீதி இழைக்கப்படுகிறது என்று உனருகிறானோ ,எந்தத் தளத்தில் அது இழைக்கப்டுகிறதோ அந்தத் தளத்திர்க்கு எதிர்மறையான தளத்தில் கருத்தாக்கங்கள்,கோட்பாடுகள் உருப்பெறுகிறது.

சிங்களப் பேரினவாத்திற்கு எதிர்னிலையாகவே தமிழத் தேசியம் ஈழத்தில் உருப்பெற்றது.ஆனால் அதற்கு முன்னமே பார்ப்பனீயம் என்னும் வருணாச்சிரமத்திற்க்கு எதிராகத் திராவிடம் என்னும் அடையாளம் உருப்பெற்றது.ஆனால் இந்த இடத்தில் தூய இனம் என்பது அர்த்தமற்றது.அறிவியலுக்கும் முரணானது.அதனால் தான் தூய இனத்தை நிறுவ முற்பட்ட கிட்லர் தோற்றுப்போனான்.மனிதர்கள் எல்லோரும் அடிப்படையில் ஒரே இனம்.ஆனால் மனிதக்குழுமங்களினது வரலாறு அவற்றிற்கிடையேயான வளப் பங்கீட்டிற்கான போட்டியுடன் சம்பந்தப்பட்டது.வடக்கே இருந்து இடம் பெயர்ந்த ஆரியர் என்னும் இனக்குழுமம் , உள்ளூரின் இருந்த திராவிட இனக்குழுமத்தை அடக்கியாள ஏற்படுத்தப்பட்டதே வர்னாச்சிரமமும் அவர்கள் கொண்டு வந்த ஆகம மதமும் மற்ற எல்லம்மும்.அதன் வரலாற்றுத் தொடர்ச்சி தான் இன்றைய சாதிய அடுக்கு.இந்தக் கருதியலுக்கு எதிராக கிழர்ந்து எழுந்ததே திராவிடக் கருத்தியல்.இந்திய உபக கண்டத்தில் வர்னாச்சிரமும்,சாதிய அடுக்கும் ஒடுக்கு முறையும் இருக்கும் வரை திரவிடக் கருத்தியல் இருக்கும்.

அதே போல் சிங்களப்பேரினவாதம் உருவாக்கிய சிறிலங்கா சிங்களவரினுடையது எங்கிற கருதியலுக்கு எதிர்னிலையாகத் தோன்றியதே தமிழ்த் தேசியம்.சிங்கள் இனவாதம் இருக்கும் வரை தமிழத் தேசியமும் இருக்கும்,சிங்கள இனவாதம் அற்று விடும் போது தமிழத் தேசியமும் அற்று விடும்.அதன் பின்னர் எந்த நிலையில் அடக்குறை நிகழ்கிறதோ அதற்க்கு எதிரான தளத்தில் இன்னொரு கருத்தியல் மக்களைஇணைக்கும்.இது தான் வரலாற்ரு இயங்கியல்.இதிலே காலம் காலமாக எழுப்பபடும் கருதியலுக்கு ஏற்றதாக வரலாறு என்பது வியாக்கியானம் செய்யப்படும்.ஆங்கிலேயர் ஆண்ட போது இருந்த வரலார்றுப் புத்தகங்கள் இப்போது உபகண்டத்தில் இல்லை.இலங்கையில் ஒவ்வொரு ஆட்சி மாறும் போதும் எங்கள் சமூகக் கல்விப்புத்தகத்தில் மாற்றங்கள் நிகழவில்லையா அதே போல் தான்.

கடைசியில் வெல்லவது இராமர் அல்ல மனிதர்களே

Share this post


Link to post
Share on other sites

இன்னொரு விடயம் விடுபட்டது.கலை கலாச்சாரம் என்பதிலும் தூயது என்று எதைக் குறிப்பிடலாம்.கலையும் கலாச்சாரமும் மாறிக்கொன்டு வருவது. இதில் எந்தக் காலத்தையது தூயது எது கலந்தது என்று பிரிப்பதுவும் கடினம்.ஆனால் ஆளும் வர்க்கத்தால் அதன் அடக்குமுறைக்காக சுரண்டலுக்காக்கத் திணிக்கப்படவற்றை நீக்கி விடுதல் அந்த இனக் குழுமத்தின் தனி அடையாளத்தை உறுதி செய்ய அதன் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தவும் அடக்கப்படும் கருதியலில் இருந்து விடுபடவும் அவசியமானதாக இருக்கலாம்.ஆனால் அதுவும் அந்தப் போராட்டம் வென்றெடுக்கப்படும் போது வேறு திசைகளில் செல்லலாம்.ஏனெனில் இன்று பிரதான முரணாக இருக்கும் இன முரண் அற்றுப்போகும் வேளையில் உருப்பெறும் இன்னொரு முரணின் பாற்பட்டு புதிய அடையாளங்கள் ஏற்படலாம்.

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • உடையார், செயப்பிரகாசம் - ஜெயமோகன் லடாய் போன மாதம் நடந்தது. பல பதிவுகள் ஜெயமோகன் தளத்திலும் முகநூலிலும் படித்திருந்தேன். செயப்பிரகாசம் சார்பில் சட்டநடவடிக்கை (வக்கீல் நோட்டீஸ்) அனுப்ப, பதிலுக்கு ஜெயமோகன் செயப்பிரகாசம் மீது வழக்குப்போட்டிருக்கின்றார். அதை மீளப்பெறுமாறு பலர் கேட்டிருக்கின்றார்கள் என்ற மட்டில் உள்ளது. இதையெல்லாம் யாழில் இணைத்து பக்கங்களை வீணாக்க விரும்பாததால், அதைவிட பலருக்கு இவர்கள் இருவரையும் தெரியாததால், ஒட்டவில்லை.   ஜெயமோகன் செயப்பிரகாசம் பற்றி எழுதிய சில வரிகள்..  இலக்கியச்சூழலுக்கு வெளியே உள்ள அரசியல்வாதிகள்,சாதிச்சங்க ஆட்கள் இலக்கியவாதிகளை மிரட்டுவதை எதிர்கொண்டே ஆகவேண்டும் என்று நினைக்கிறேன். பா.செயப்பிரகாசம் சென்ற முப்பதாண்டுகளில் தமிழ்ச்சூழலில் அரசியல் பேசுபவர்கள் பொதுவாக என்னென்ன பேசுவார்களோ அதையெல்லாம் பேசியவர், அவ்வளவுதான். பார்ப்பனிய எதிர்ப்பு ,முதலாளித்துவ எதிர்ப்பு ,அமெரிக்க எதிர்ப்பு  ,ஒட்டுமொத்தமாக அரசுஎதிர்ப்பு. ஆனால் அரசின் செய்தித்தொடர்பாளராக பணியாற்றினார்.   இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றை தெளிவுறுத்த விரும்புகிறேன். ஒன்று நான் மிகமிக கடுமையாக கண்டிப்பது இந்த கண்டனத்தில் பா.செயப்பிரகாசம் அவர்கள் ஒரு பொருட்படுத்தத் தக்க சிறுகதையாசிரியர் என்று சந்தடி சாக்கில் சொல்லி வைத்திருப்பதைத்தான். அதை இதில் கையெழுத்திட்டிருக்கும் எழுத்தாளர்கள் எவரேனும் ஏற்பார்கள் என்றால் அவர்கள் மேற்கொண்டு இலக்கியம் பேசாமலிருப்பதே ந
  • ஜேர்மனியால் மேற்கொள்ளப்பட்ட போலந்து தாக்குதலை அடுத்து ஹிட்லரின் எதிர்கால திட்டங்கள் வெளிப்படையாக தெரிய தொடங்கிய பின்னர், இதுவரை அரசியல் நகர்வுகள் மூலம் யுத்தத்தை தவிர்க்கலாம் என்று  நம்பியிருந்த ஐரோப்பிய நாடுகள் யுத்தம் தவிர்க்கமுடியாதது என்பதை உணர்ந்து தமது நாடுகளின் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கையுடன் ராணுவ ரீதியிலான சிந்திக்க தொடங்கின. அந்த வகையில் சோவியத்தின் முக்கிய நகரான லெனின்கிராட் என்று அன்று அழைக்கப்பட்ட சென்ற் பீற்றர்ஸ்பேர்க் பின்லாந்து எல்லைக்கு மிக நெருக்கமான அமைந்திருந்ததால் பின்லாந்து எல்லைகளை ஆக்கிரமிப்பதே தனது பாதுகாப்புக்கு வழி என்ற நினைத்த ஸ்ராலின் பின்லாந்து மீது தனது படை நடவடிக்கைகளை தொடங்கியது. நோர்வே மீது தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முனைந்த பிரிட்டன் முனைந்த போதும் ஜேர்மனி முந்திக்கொண்டது.   தெற்கு பால்டிக் பிரதேசத்தை பலப்படுத்தியாகிவிட்டது என்னும் நிலையில் அடுத்து ஃபின்லாந்து மீது தனது கவனத்தை திருப்பியது சோவியத்யூனியன். ரஷியப் பேரரசின் ஒரு பகுதியாக நீடித்த ஃபின்லாந்து அக்ரோபர் புரட்சிக்கு பிறகே சுதந்திரத்தை அனுபவித்தது என்றாலும் அச்சமயம் கலவரமும் கலகமும் ஃபின்லாந்தை மாறி மாறி அலைக்கழித்துக் கொண்டிருந்தன. ஜனநாயக நாடாக இருந்த அந்த தேசத்தை குட்டிச்சுவராக்கியவர் Baron Mannerheim. ஸார்  மன்னரிடம் (ரஷ்ய முடியாட்சியில் அதன் மன்னரை Tsar  என அழைப்பது வழக்கம்.) ஜெனரலாக இருந்தவர். இவர் வருகைக்கு பிறகு, ஃபின்லாந்து சோவியத் எதிர்ப்புக்கான அடித்தளமாக மாறியது. யார் சோவியத்தை எதிர்ப்பதாக இருந்தாலும் சரி, யார் ஸ்ராலினுக்கு எதிராக சதி செய்ய வேண்டுமானாலும் சரி, இங்கே இடம் உண்டு. வரவேற்பு உண்டு. பிரிட்டனின் மேற்பார்வையில் இங்கு வரிசையாக பல பாதுகாப்பு கோட்டைகள் அரண்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஜேர்மனி தன் பங்கிற்கு விமானத்தளங்களை அமைத்துக் கொடுத்தது. மொத்தம் 2000 விமானங்களை நிறுத்தி வைப்பதற்கு போதுமான அளவுக்குப் பெரிய தளம் அது. ஃபின்லாந்திடம் அப்போது இருந்ததோ வெறும் 150 விமானங்கள் மட்டுமே. இந்த 150 விமானங்களுக்கு இத்தனை பெரிய தளம் அங்கே அமைக்கப்பட்டதற்குக் காரணம் சோவியத்திற்கு எதிரான தளமாக  அதை பிற நாடுகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்னும் நோக்கம் மட்டுமே.   பின்லாந்தின் எல்லைகளை குறித்த சோவியத்தின் கவலை ஃபின்லாந்தை பலப்படுத்தவேண்டிய, தனது எல்லைகளை பாதுகாக்கவேண்டிய அவசியம் சோவியத்திற்கு இருந்தது. எதிரி தேசங்கள் வந்து கூடாரம் அமைத்து தாக்குதல் தொடுக்கும் வரை சும்மா இருப்பதற்கில்லை. போலந்து வரை வந்துவிட்ட நாசிகளால் ஃபின்லாந்தை ஆக்கிரமிக்க எத்தனை நாள் பிடிக்கும்? பிரிட்டனும் பிரான்ஸும் கூட ஜேர்மனி பக்கம் இருப்பது போல அக்கறையில்லாமல் இருப்பதால் தனக்கான போராட்டத்தை முன்னெடுத்து செல்லவேண்டிய அவசியம் சோவியத்திற்கு. பேசிப்பார்க்கலாம் என்று முடிவு செய்தது சோவியத். ஃபின்லாந்துக்கு சோவியத்திடம் பெறுவதற்கு சில விஷயங்கள் இருந்தன. குறிப்பாக, பொருளாதார உதவி. ஃபின்லாந்தின் பொருளாதாரம் கிட்டத்தட்ட சிதைந்து போயிருந்தது. எங்கிருந்தும் எந்த உதவியும் கிடைத்தபாடில்லை. இந்நிலையில் சோவியத் உதவிக்கரம் நீட்டினால் பற்றிக்கொள்ளும். இரண்டாவது, Leningrad Murmansk ரயில்வே பாதையைப் பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதி. வெளியுலகத்தோடு  தொடர்பு கொள்ள வேண்டுமானால் ஃபின்லாந்துக்கு இந்த ரயில் தடம் அவசியம். சோவியத்தின் உதவி இல்லாமல் இந்தப் பாதையைப் பயன்படுத்தமுடியாது. இந்த இரு உதவிகளையும் ஃபின்லாந்துக்கு அளித்து அவர்கள் ஒப்புதலுடன் அடுத்த கட்டத்திற்கு முன்னேறலாமா என்று யோசித்தது சோவியத். ஒக்ரோபர் 5, 1939 அன்று ஃபின்லாந்தை தொடர்பு கொண்டது சோவியத். உங்கள் பிரதிநிதி யாரையாவது அனுப்பி வையுங்கள். தொங்கலில் இருக்கும் சில விஷயங்களைப் பேசி ஒரு முடிவுக்கு வரலாம். ஃபின்லாந்தின் எதிர்வினை விசித்திரமாக இருந்தது. உடனடியாக தனது எல்லையில் ராணுவத்தைக் குவித்தது. தலைநகரம் ஹெல்ஸின்கியில் இருந்து பெண்களையும் குழந்தைகளையும் துரிதமாக அப்புறப்படுத்த ஆரம்பித்தது. பங்கு சந்தையை இழுத்து மூடியது, கையோடு அமெரிக்காவையும் தொடர்பு கொண்டது. ஆபத்தில் இருக்கிறோம், உதவி தேவை. சோவியத்திற்கு புரியவில்லை. அப்படி என்ன தவறாக சொல்லிவிட்டோம்? ஏன் இந்த அநாவசிய பீதியும் குழப்பமும்? உட்கார்ந்து பேசலாம் என்று மட்டுமே சொன்னோம். பிறகு , புரியவைத்தார்கள். உங்கள் நாட்டின் எல்லைப்பகுதியில் இருந்து லெனின்கிராட் (தற்போதைய பெயர் சென்ற் பீற்றர்ஸ்பேர்க்) தொட்டு விடும் தூரத்தில் இருக்கிறது. அரசியல் குழப்படியும் பொருளாதாரக் குழப்படியும் அதிகம் இருக்கும் உங்கள் தேசத்தால் உங்கள் எல்லைகளை பாதுகாகமுடியாது. நீங்கள் அவ்வாறு தவறும் பட்சத்தில் உங்கள் எல்லைகள் எதிரிகளால் கைப்பற்றப்படும். இது சோவியத்தில் நலன்களுக்கு அச்சுறுத்தலானது. நாங்கள் கேட்டுக்கொள்வதெல்லாம் இதுவொன்றுதான். லெனின்கிறராடில் இருந்து உங்கள் எல்லையை பின்னோக்கிக் கொண்டு செல்லுங்கள். கடல்புறத்தில் உள்ள சில சிறிய தீவுகளை எங்களிடம் கொடுத்துவிடுங்கள். பதிலுக்கு இதைவிட கூடுதல் நிலப்பரப்பை உங்களுக்கு வழங்குகிறோம். கூடுதல் என்றால் கிட்டத்தட்ட இரட்டிப்பு. தற்போதைய நிலபரப்பைப் போலவே வளமானதாக அந்தப் பிரதேசம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுகிறோம். இன்னொரு உதவியும் வேண்டும். லெனின்கிராடோடு இணைக்கும் Hangoe அல்லது வேறு ஏதேனும் ஒரு நுழைவாயிலை எங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு லீசுக்கு கொடுங்கள். பாதுகாப்புக்காக கடல்படை தளத்தை அங்கே அமைத்துக் கொள்ள விரும்புகிறோம். ஆரம்பத்தில் அதற்கு இணங்குவதை போல் காட்டிக்கொண்டாலும்,  ஃபின்லாந்தின் இறைமைக்கு குந்தகம் விளைவிக்கும் கோரிக்கைகளைத்தான் சோவியத் எழுப்பியுள்ளது என்று அரசாங்க அறிவிப்பை வெளியிட்டார் அதிபர் கஜன்டேர். பிறகுதான் பின்வாங்க ஆரம்பித்தது ஃபின்லாந்து. தருகிறோம் ஆனால் இப்போது இல்லை. முப்பது வருடம் ரொம்ப அதிகம். வேண்டுமானால் ஒரு சில ஆண்டுகள் போட்டுக்கொள்ளலாம். இரு மடங்கு பிரதேசம் போதாது. கூடுதல் பிரதேசம் தேவை. ஒரு மாதத்திற்கு இழுத்தடித்தார்கள். ஏதேதோ காரணங்கள் சொன்னார்கள். நியூயோர்க் ரைம்ஸ் ஒரு செய்தி வெளியிட்டது. ஃபின்லாந்து சோவியத்தோடு உடன்படிக்கை செய்து கொள்ள தயக்கம் காட்டுவதற்கு காரணம் அமெரிக்காவின் ராஜதந்திரம். சோவியத்தோடு சேராமல் ஃபின்லாந்திடம் ரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாக செய்திகள் வந்தன. சோவியத்திற்கு புரிந்துவிட்டது. இனி ஃபின்லாந்து பயன்படாது. எதிரணியில் சிக்கிவிட்டது. சோவியத்தின் யூகம் சரிதான் என்பது நவம்பர் இறுதியில் தெளிவானது.   சோவியத் – பின்லாந்து யுத்தம் – Winter war   நவம்பர் 30,1939 அன்று சோவியத் படைகள் ஃபின்லாந்துக்குள் நுழைந்தன. ஃபின்லாந்து போர்பிரகடனம் செய்தது. பனிக்கால போர் (Winter war) என்று இந்த யுத்தம் அழைக்கபட்டது. இந்த யுத்தம் நடைபெற்ற போது வெப்பநிலை கிட்டத்தட்ட -45 பாகையாக இருந்தது.    கையோடு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து உதவியையும் கோரியது. ஐரோப்பிய நாடுகள் ஃபின்லாந்திற்கு ஆதரவு கொடுத்தன. ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் சோவியத் செய்தது  தவறுதான். என்ன இருந்தாலும் சிறிய நாடான ஃபின்லாந்தின் மீது  சோவியத் போர் தொடுத்தது முறைகேடான செயல் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வேலை. சோவியத்தால் ஐரோப்பா போர்களமாக மாறிக்கொண்டிருக்கிறது. அந்நிய நாடுகள் மீது தலையிடுவதே அதன் வேலையாகப் போய்விட்டது. லீக் ஒஃவ் நேஷன்ஸ் உடனடியாக சோவியத்தை விலக்கிவைத்தது. ஆச்சரியம் என்று தான் சொல்லவண்டும். செக்கோஸ்லவாக்கியா, போலந்து என்று ஹிட்லர் வரிசையாக ஒவ்வொரு நாடாக கபளீகரம் செய்து வந்த போது சும்மா இருந்த லீக், சோவியத் என்றதும் உடனடி நடவடிக்கை எடுத்தது  விநோதம் தான். ஃபின்லாந்து மீதான சோவியத்தின் தாக்குதல் குறித்து பல வரலாற்றாசிரியர்கள் வேறுபட்ட கருத்துகளை தெரிவித்துள்ளர்கள். சில கருத்துக்கள் பின்லாந்து மீது சோவியத் ஆக்கிரமிப்பு என்றும், வேறு சில கருத்துக்கள் யுத்த மேகங்கள் சூழ்ந்து வருகையில் சோவியத்யூனியன் தனது எல்லைப்பாதுகாப்பிற்காக எடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று கூறுகின்றன. பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் மூன்றும் பெரும்குரல் எழுப்பின. ஐயோ நாம் தான் அப்போதே சொன்னோமே. நாம் பயப்படவேண்டியது ஹிட்லரை பார்த்து அல்ல. ஸ்டாலினை பாரத்துதான். எப்படி நம் கண்முன்பாகவே ஃபின்லாந்தை ஆக்கிரமிக்கிறார்கள் பாருங்கள். கம்யூனிசம் எத்தனை ஆபத்தான சித்தாந்தம் என்று படித்து படித்துச் சொன்னோமே, பார்த்தீர்களா? முதலாளிகள் முதலாளித்துவம் என்று நம்மை திட்டிக்கொண்டிருந்தார்களே, பாருங்கள். சோவியத்தின் ஆக்கிரமிப்பு யுத்தம் இப்படித்தான் இருக்கும். உலக முதலாளிகளே ஒன்று சேருங்கள் சோவியத்தை வீழ்த்துவோம். முதலாளித்துவத்தை செழுமைப்படுத்துவோம். சோவியத்தை பொறுத்தவரை அது லெனின்கிராட்டை பாதுகாப்பதற்கான போர். ஆகவே தயங்காமல் முன்னேறினார்கள். முதல் கட்டமாக ஃபின்லாந்தின் ஆர்டிக் துறைமுகம் கைப்பற்றபட்டது. லெனின்கிராட்டை நெருங்குவதற்கான மார்க்கமாக அது அமைந்தது என்பதே காரணம். இதற்கு இரு வாரங்கள் பிடித்தன. இரண்டாம் கட்ட போர், ஆமை வேகத்தில் நடந்தது. கடும் குளிர் தொடங்கியிருந்தது. மூன்றவாவது கட்டம், வான்வழித் தாக்குதல். ஃபின்லாந்தின் ராணுவத் தளங்கள் தேர்வு செய்யப்பட்டு தாக்கியழிக்கபட்டன. ஆயதத் தொழிற்சாலைகள் ரயில்ப் பாதைகள், துறைமுகங்கள், விமானத்தளங்கள் ஆகியவை மீது குண்டுகள் வீசப்பட்டன. நான்காம் கட்ட போர் ஒரு மாத காலும் நீடித்தது. நோக்கம் Mannerheim Line பகுதியை உடைத்து முன்னேறுவது. ஊடுவல் கடினமானது என்று கருதபட்ட இந்தப் பகுதியில் வரிசை வரிசையாக பாதுகாப்பு கோட்டைகள் எழுப்பப்பட்டிருந்தன. இதை அகற்ற முடிவு செய்த சோவியத், பலமான பீரங்கிகளை உருட்டிக்கொண்டு வந்தது. பாதுகாப்பு அரண்களைத்தான் முதலில் தாக்கினார்கள். அரண்கள் அமைக்கப்படிருந்த அடித்தளம் தகர்க்கப்பட்டது, பிறகு கோட்டை விழுந்தது. மார்ச் 12, 1940 அன்று மாஸ்கோவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஃபின்லாந்துக்கும் சோவியத்திற்கும் இடையில் தூதுவர் போல செயற்பட முடியும். என்று கேட்கப்பட்ட போது பிரிட்டன் மறுத்துவிட்டது. பிரான்ஸுக்கும் விருப்பமில்லை. சோவியத் ஃபின்லாந்தை முடியடித்ததையும், கடினமான பாதுகாப்பு அரண்களை தகர்த்ததையும், இறுதியில் சோவியத்திடம் ஃபின்லாந்து ஒப்பந்தம் போட்டுக் கொண்டதையும் இந்த இரு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீ ஏன் சோவியத்துடன் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்று சண்டைக்கு வந்தார் டலாடியர். என்னையும் சாம்பரலைனையும் விட ஸ்டாலின் பலம் வாய்ந்தவரா? ஃபின்லாந்தை காரணமாக வைத்து சோவியத் மீது போர் தொடுக்கவேண்டும் என்று இந்த இரு நாடுகளும் கணக்கு போட்டு வைத்திருந்தன. ஆனால், அதற்குள் சோவியத்  போரை முடித்து கொண்டுவிட்டது. சோவித்துக்கும் ஃபின்லாந்துக்கும் இடையில் இணைப்பாக செயல்பட ஸ்வீடன் ஒப்புக்கொண்டபோது பிரிட்டனும் பிரான்ஸும் முகத்தை சுளித்துக்கொண்டன. சோவியத் Mannerheim Line பகுதியை இணைத்துக்கொண்டது. ஹாங்கோ கைப்பற்றப்பட்டது. அதே சமயம், Petsamo என்னும் பகுதியையும் அதிலுள்ள நிக்கல் சுரங்கதையும் ஃபின்லாந்திடமே திருப்பித் தந்தது. நவம்பர் 30, 1939 தொடக்கிய போர் மார்ச்13, 1940 ல் முடிவடைந்தது. 20, மார்ச் 1940 மாதம் பிரான்ஸ் பிரதமர் டலாடியர் தன் பதவியை ராஜினாமா செய்தார். ஃபின்லாந்தை காப்பாற்ற முடியாததால் எழுந்த கடும் விமர்சனங்களால் எடுக்கப்பட்ட முடிவு. பின்னர் பவ்ல் ரெனாய்ட் (Paul Reynaud) பொறுப்பேற்றுக்கொண்டார். சோவியத் லெனின்கிராட்டுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய பகுதிகளை மாத்திரம் தேர்வு செய்து அவற்றை மட்டும் இணைத்துக்கொண்டது. இது ஆக்கிரமிப்பு போர் அல்ல, பாதுகாப்பு போர் தான் என்பதை அழுத்தமான பதிவு செய்தது. ஸ்வீடனின் ஆதரவு இதில் சோவியத்திற்கு கிடைக்காமல் விட்டிருந்தால் பிரிட்டனும் பிரான்ஸும் சோவியத்திற்கு எதிராக போரை தொடுக்க கூடி நிலைமை இருந்தது. போலந்து பிறகு ஃபின்லாந்து. சோவியத்தின் தொடர் வெற்றி பிரிட்டனையும் பிரா்னஸையும் ஆட்டம் காணச் செய்தது. சோவியத்யூனியனுக்கு இத்தனை பலமா? பொதுவுடமை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், தொழிற்சங்கம் என்று பேசிக்கொண்டிருந்தவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது இத்தனை சக்தி. ஃபின்லாந்து கோட்டையை தகர்த்து தவிடுபொடியாக்கும் படியான நவீன பீரங்கிகளை இவர்கள் எப்படிப்பெற்றார்கள். ஐயோ, நாம் நினைத்ததை விட அதிக பலமுள்ள தேசமாக அல்லவா இருக்கிறது சோவியத்யூனியன்? இத்தனை அபாகரமானவரா ஸ்ராலின்?  இது நமக்கு அச்சுறுத்தல் தான். சோவியத்தின் வெற்றி ரூமேனியாவிற்கு பயத்தை ஏற்படுத்தியது. அடுத்து ஒரு வேளை நம்மிடம் திரும்புவார்களோ? ரூமேனியாவின் அச்சத்திற்கு காரணம் பெஸ்ஸராபியா (Bessarabia) முதல் உலகப் போர் முடிவில், அதாவது 1918 ல், சோவியத்யூனியனிடம் இருந்து பெஸ்ஸராபியாவை கைப்பற்றியிருந்தது ரூமேனியா. லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி வெற்றி பெற்று, புதிய சோவியத் அரசை கட்டுமானம் செய்துகொண்டிருந்த காலகட்டம் அது. இனியொரு போர் வேண்டாம் என்று போல்ஷ்விக் கட்சி முடிவு செய்திருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரூமேனியா பெஸ்ஸராபியாவை ஆக்கிரமித்து இணைத்துக்கொண்டது. சோவியத்தின் பலம் இப்போது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டுவிட்டதால், தன் மீது சோவியத் போர் தொடுக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்தது ரூமேனியா. சோவியத் போர் தொடுக்கவில்லை. ஆனால் பேசியது. நீங்கள் செய்தது தவறு. திருப்பிக்கொடுத்துவிடுங்கள். ரஷ்ய கப்பல்கள் Danube பகுதிக்குள் நுழைந்தன.  போர் எதுவும் தேவைப்படவில்லை. ரூமேனியா அடிபணிந்தது. பார்டிக் முதல் கருங்கடல் வரை Hangoe   முதல் Danube வரை எல்லைகளைப் பலப்படுத்தி விட்டாயிற்று. ஸ்ராலின் சற்றே சாய்ந்து உட்கார்ந்து கொண்டார். ஹிட்லர் நிமிர்ந்து உட்கார்ந்தார். மேற்குலக நாடுகளிடம் இருந்து எந்தவித தொந்தரவும் இதுவரை இல்லை. இன்னும் சொல்லப்போனால் என்னை கண்டுகொள்ளாமல் விடுவதன் மூலம் அவர்கள் உதவிதான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரே அபாயம் சோவியத்யூனியன். போலந்து, ஃபின்லாந்து என்று அடுத்தடுத்து அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் புதிய எச்சரிக்கை செய்தியை அனுப்பிக்கொண்டிருக்கின்றன. இவர்களைத் தடுத்து நிறுத்தியாகவேண்டியுள்ளது. ஆரம்பிக்கலாம்.   நோர்வே மீது ஹிட்லரின் பார்வை நோர்வேயை தேர்வு செய்திருந்தார் ஹிட்லர். ஜேர்மனிக்கு பிரிட்டன் வைத்திருந்த செக்மேட் நோர்வே. முதல் உலகப்போர் சமயத்தில் வைத்த செக்மேட் அது. ஜேர்மனியின் தொழில் உற்பத்திக்கு(எனவே ஆயுத உற்பத்திக்கும்) இரும்பு இறக்குமதி அவசியம். ஜேர்மனி தனது இரும்பு தேவைகளுக்கு நோர்வே துறைமுகத்தைத்தான் சார்ந்திருந்தது. வடக்கு ஸ்வீடனில் உள்ள சுரங்கங்களில் இருந்து கொண்டுவரப்படும் இரும்பு நோர்வே துறைமுகம் வழியாக ஜேர்மனிக்குக் கொண்டு வரப்படுவது வழக்கம். முதல் உலகப்போருக்கு பிறகு ஜேர்மனியின் இரும்பு போக்குவரதைக் கண்காணிக்கவேண்டும் என்பதற்காக பிரிட்டன் தனது ராணுவத்தளத்தை நோர்வேயில் அமைந்திருந்தது. நோர்விக் என்னும் துறைமுகத்திற்கு அருகில். ஒக்ரோபர் 1939 ல் இது குறித்து ஹிட்லரிடம் தெரிவிக்கபட்டது நோர்வே நமக்கு முக்கியம். ஒரு வேளை பிரிட்டன் கைப்பற்றிவிட்டால் நாம் முடங்கிவிடுவோம். ஆயுதத் தொழிற்சாலை முடங்கிப்போகும். பிரிட்டனுக்கு முன்னால் நாம் முந்திக் கொள்ளவேண்டியது அவசியம். உங்கள் போர்த் திட்டத்தில்  நோர்வே இருக்கட்டும். அதெற்கென்ன ஆகட்டும் என்றார் ஹிட்லர். திட்டத்தை விரிவாக்குபவர்களை அவர் எப்போதும் கடிந்து கொண்டதில்லை. பிரிட்டனும் நோர்வே குறித்து தான் சிந்தித்துக்கொண்டிருந்தது. பிரிட்டிஷ் போர் கபினெட்டில் அப்போது புதிதாக இணைந்து கொண்டிருந்த சேர்ச்சில், நோர்வே மீது தீவிர ஆர்வம் செலுத்துபவராக இருந்தார். சாம்பர்லைனிடம் விரிவாக பேசினார். நோர்வே நமக்கு அவசியம். நோர்வே துறைமுகத்தை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். நிச்சயம் ஜேர்மனி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும். இதையே சாக்காக வைத்து நோர்வேயை நாம் கைப்பற்றிவிடலாம். என்ன சொல்கின்றீர்கள். பின்னால் இது தான் நடந்தது என்றாலும் அப்போதைக்கு சாம்பர்லைன் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. தயங்கினார். ஹிட்லர் இன்னொரு காரியம் செய்தார். பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் அமைதி ஒப்பந்தக் கோரிக்கை அனுப்பிப்பார்த்தார். ஒக்ரோபர் 10 ம் திகதி பிரிட்டன் ஜேர்மனியின் அமைதிக் கோரிக்கையை நிராகரித்தது. இரு தினங்களை கழித்து பிரான்ஸும் அதையே செய்தது. சரி போ என்று விட்டுவிட்டார் ஹிட்லர். திட்டத்ததை முன்னெடுத்து செல்வதில் அவருக்கு எந்தவித தயக்கமும் இல்லை. டிசம்பர் 19, 1939 ல் இருந்தே யோசிக்க ஆரம்பித்துவிட்டார். ஒரே ஒரு ராணுவ டிவிசன் போதும் முடித்துவிடலாம் என்று ஆரம்பத்தில் திட்டமிட்டனர். பின்னர் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இரண்டு அம்சங்கள் மிகவும் முக்கியம் என்று கணித்தனர். ஒன்று, அச்சமூட்டுவது. எதிர்பாராத வகையில் தாக்குதல் நடத்தப்படவேண்டும். நோர்வேயை ஆச்சரியத்திலும் ரத்தத்திலும் ஒரே நேரத்தில் மூழ்கடிக்கவேண்டும். அங்கே ஏதோ சலசலப்பு கேட்கிறதே என்று சாம்பரலைன் திரும்பி பார்ப்பதற்குள் இந்த பிரதேசம் ஜேர்மனிக்கு சொந்தமானது என்னும் பலகையை மாட்டி நம் ஆட்களை நிறுத்திவிடவேண்டும். இரண்டாவது அம்சம், ராணுவ பலம். நவீன அதிவேக ஜேர்மன் போர்க்கப்பல்களை இந்த தாக்குதலின் போது நாம் பயன்படுத்தவேண்டும். அதற்கேற்றாற்போல விரிவாகத் திட்டமிடவேண்டும். துரிதமாக தாக்குதலை ஆரம்பித்து ஒவ்வொரு பிரதேசமாக கைப்பற்றிக்கொண்டே செல்லவேண்டும். சுதாகரிப்பதற்கு அவகாசம் கொடுத்துவிடக்கூடாது. போர்கப்பல்கள் மட்டுல்லாமல், விமானப்படை, ரைஃபிள் பிரிகேட், காலாட்படை அனைத்தும் தயாராகவேண்டும்.  தலைநகரம் ஒஸ்லோவும் அருகிலுள்ள நகரங்களும் பேர்கன், நார்விக், ற்ரொம்ஸோ, ற்ரொன்ட்ஹைம், ஸ்ரவாங்கர். (Oslo, Bergen, Narvik, Tromsö, Trondheim, Stavanger) திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு ஜெனரல் von Falkenhorst என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர் முதல் உலகப்போரின்போது ஃபின்லாந்தில் பணியாற்றியவர். பிரதேச முன் அனுபவம் கொண்டவர். திட்டம் முழுமையடைந்ததும் அதற்கு ஒரு செல்லப்பெயர் சூட்டப்பட்டது. – Operation Weserübung. மார்ச் முதலாம் திகதி ஹிட்லர் திட்டத்தை கொஞ்சம் நீடித்தார். எப்படியும் பெரும்படையுடன் போகப்போகிறோம். நோர்வேயுடன் சேர்ந்து கூடவே டென்மார்க்கையும் கைப்பற்றிவிடலாமே!  இப்போது விட்டால் அதற்கென்று தனியே ஒரு நடை போகவேண்டியிருக்கும். இரண்டையும் முடித்து விட்டு வந்தால் ஒரு வேலை தீர்ந்தது. என்ன சொல்கின்றீர்கள்? டென்மார்க் முக்கியமான பிரதேசம் என்பதில் சந்தேகம் இல்லை. சிறிய நாடு. ஆனால் ஜேர்மனியின் எல்லையோடு சேர்த்து ஒட்டிக்கொண்டுள்ள நாடு. சோவியத் அதன் எல்லைகளை காத்துக்கொண்டதை போல் நாங்களும் எங்கள் எல்லைகளை காத்துக்கொள்ள வேண்டாமா? நாளையே டென்மார்க்கை நுழைவாயிலாகக் கொண்டு சோவியத்தோ பிரிட்டனோ தாக்காது என்று என்ன நிச்சயம்?  அத்துடன் நோர்வே மீதான தாக்குதலுக்கு டென்மார்க் பின்தளமாக பாவிக்க வேண்டிய அவசியம் உண்டு. மற்றொரு பக்கம், ஜேர்மனி கைப்பற்றுவதற்குள் நாம் நோர்வேயைச் சுற்றி வளைத்து விட வேண்டும் என்னும் நோக்கில் வேகவேகமாக பாய்ந்து முன்னேறியது பிரிட்டன். போரில் யாருடனும் கூட்டுச் சேராமல் தனித்து இருந்த நோர்வேயின் நடுநிலைத் தன்மையை முதலில் குலைத்தது பிரிட்டன் தான். பிரிட்டனின் அத்துமீறல் ஹிட்லரை திருப்திப்படுத்தியது. நாளை யாரும் ஜேர்மனியை குறைகூற முடியாது. அப்படி சொல்வதாக இருந்தாலும் பிரிட்டனைத் தான் முதல் ஆக்கிரமிப்பாளர் என்று அழைக்கவேண்டியிருக்கும். பிரிட்டன் கடற்படை தயாரானது, ஏப்ரல் 8ம் திகதி நோர்வேக்குள் பிரிட்டன் காலடி எடுத்து வைத்தது. ஜேர்மனி வரும் என்று தெரியும். நோர்வேயை கைப்பற்றும் என்றும் தெரியும். அப்படி நடக்கும் சூழலில் என்ன செய்ய வேண்டும் என்று பிரிட்டன் திட்டமிடவில்லை. வீரர்களும் குழம்பி நின்றனர், ·        பிரிட்டன் வருவதை நோர்வே விரும்பவில்லை, ஜேர்மனி விரும்பவில்லை. எதிர்க்கிறார்கள். நாம் என்ன செய்யவேண்டும்? ·        ஜேர்மனியை எதிர்த்து போராடவேண்டுமா அல்லது நோர்வேயை எதிர்த்தா? ·        சுரங்கங்களை நாம் என்ன செய்யவேண்டும்? அவற்றை கைப்பற்றுவது மட்டும் தான் நம்முடைய பசியா அல்லது நோர்வேயை பாதுகாக்க வேண்டுமா?   பிரிட்டன் குழம்பி தவித்த வேளையில் ஜேர்மனி ஏப்ரல் 9, 1940 அதிகாலை வேளை டென்மார்க்கை தாக்கியது. இது இருமுனை தாக்குதல். ஒரு பக்கம், ஜேர்மானிய தூதர் Renthe Fink  டென்மார்க்கில் அயல் துறை அமைச்சரிடம் பேசிக்கொண்டிந்தார். பிரிட்டனும் பிரான்ஸும் உங்களைத் தாக்குவதற்கு நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நிகழலாம். உங்களை அவர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்கு ஜேர்மனி முடிவு செய்துள்ளது. எங்கள் படைகள் வந்துகொண்டிருக்கின்றன.(அவர் பேசிக்கொண்டிருந்தபோது, படைகள் உள்ளே நுழைந்துவிட்டன.) எதிர்ப்பு காட்டவேண்டாம். அநாவசியமாக சங்கடப்படவேண்டாம். சரணடைந்துவிடுங்கள். மிச்சத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். ஒருவேளை நீங்கள் இதற்குச் சம்மதம் தெரிவிக்க மறுத்தால், உங்கள் தலைநகரம் கோப்பன்ஹேகன் மீது குண்டுகள் வீசப்படும். வேறு வழி தெரியவில்லை. ஏப்ரல் 9, 1940 அன்றே மிக குறுகிய நேரத்தில் டென்மார்க் சரணடைந்தது. சண்டை சில மணி நேரங்களே நடைபெற்றதால் இழப்புகளும் மிக குறைவாகவே இருந்தது.   நோர்வே யுத்தம். ஏப்ரல் 8,1940 ல் நோர்வே தாக்குதல் ஆரம்பித்திருந்தது. வான் வழி, தரை வழி, கடல் வழி மூன்றிலும் தாக்குதல் கொடுத்தது ஜேர்மனி. இரண்டு மாதங்கள் நீடித்த இந்த யுத்தம், ஜுன் 10, 1940 ல் முடிவடைந்தது. நேச நாடுகளின் ஆதரவையும் தாண்டி ஜேர்மனி நோர்வேயை முறியடித்து ஆக்கிரமித்தது. டென்மார்க்கைப் போல் அல்லாமல், நோர்வே எதிர்ப்பு யுத்தத்தை இறுதிவரை நடத்திய பிறகே சரணடைந்தது. வடக்கு பகுதியில் நார்விக் துறைமுகத்திற்காக மிக கடுமையான யுத்தம் நடைபெற்றது. நோர்வே, பிரிட்டன், பிரான்ஸ், போலந்து ராணுவத்தின் கூட்டு அணி நார்விக் துறைமுகத்திற்காக கடும் சண்டையிட்டது. Battle of Narvik என்று அடையாளப்படுத்தப்பட்ட இந்த யுத்தம் பல கட்டங்களாக நடைபெற்றது. மே 28 ம் திகதி, ஜேர்மனியை முறியடிக்கவும் செய்தது. ஆனால் ஜுன் 9 ம் திகதி ஜேர்மனி நார்விக்கை மீண்டும் கைப்பற்றியது. இத்துடன் முடிந்து விடவில்லை. ஸ்வீடனையும் தொட்டுப் பார்த்தது ஜேர்மனி. நார்வே, டென்மார்க் மற்றும் பால்டிக் கடல் பகுதிகளை கைப்பற்றிய பிறகு ஸ்வீடனையும் சுற்றி வளைத்தது. ஸ்வீடன் அவர்களுக்கு தேவையில்லை. தேவை ராணுவத் தளபாடங்களையும் துருப்புக்களையும் ஸ்வீடன் வழியாகக் கொண்டு செல்வதற்கு அனுமதி மட்டுமே. ஸ்வீடன் நடுநிலை வகித்த நாடு என்பதால் ராணுவ வழிமுறைகள் பிரயோகிக்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஜுன் 18, 1940 ல் ஓர் உடன்படிக்கையை செய்துகொண்டார்கள்.   பிரிட்டனில் அரசியல் குழப்பம் மே 7 மற்றும் மே 8,1940 ல் பிரிட்டன் கொமன்ஸ் சபையில் சூடான விவாதங்கள் நடைபெற்றன. ஆரம்பித்து வைத்தவர் சேர் ரோஜர் கீஸ். அட்மிரல். (Sir Roger Keyes) நாடாளுமன்ற உறுப்பினரும் கூட. ராணுவச் சீருடையை நான் இங்கே அணிந்து வந்ததன் காரணம் என் சக ராணுவத்தின் கவலையை  இங்கே தெரியப்படுத்த தான். என் நண்பர்கள் அனைவரும் அதிருப்தியுடன் இருக்கிறார்கள். கடல்படையை குறை சொல்லமுடியாது. நாங்கள் முழு பலத்துடன் தான் இருக்கிறோம். பிரச்சனை, தலைமையில் தான்.   பிரதமர் சாம்பர்லைன் பதவி விலகல் – புதிய பிரதமராக சேர்ச்சில் சாம்பர்லைன் மீது பரவலாக அதிருப்தி பரவியிருந்ததை அனைவரும் அறிவர் என்றாலும் முதல் முதலாக அதை அழுத்தமாக பதிவு செய்தவர் ரோஜர் கீஸ் தான். இவர் அமர்ந்ததும், சாம்பர்லைன் கட்சியை (கன்சர்வேடிவ் கட்சி) சேர்ந்த லியோ அமரி (Leo Amery) எழுந்தார். எனக்கு இந்த ஆட்சியில் சிறிதளவும் திருப்தியில்லை. போர் விவகாரங்களை நம் பிரதம மந்திரி நாம் எதிர்பார்த்தவாறு கையாளவில்லை. மிகவும் வருத்தமளிக்கக்கூடிய செயல் இது. புதிய தேசிய அணி ஒன்று உருவாக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம், முதல் உலகப் போரில் பிரதமர் லாயின் ஜோர்ஜ்க்கு கீழ் ராணுவ கபினெட் ஒன்று செயற்பட்டு வந்ததைப் போல் இப்போதும் ஒரு கபினெட் ஆரம்பிக்கவேண்டும். எதிரிகளோடு மோதி அழிக்கும் வலுவும் தீரமும் கொண்டவர்களை இணைத்துக்கொள்ளவேண்டும். வெற்றிமீது தீரா காதல் கொண்ட ஒருவர் நமக்கு தேவை. இத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் புகழ் பெற்ற ஒரு வாக்கியத்தையும் சொல்லி தன் உரையை முடித்துக்கொண்டார். உருப்படியாக ஒன்றையும் செய்யாமல் மிக நீண்ட காலமாக இங்கே அமர்ந்திருக்கிறாய். உடனே வெளியேறு. கடவுளின் பெயரால் சொல்கிறேன் வெளியேறு. மறுநாள், எதிர்க்கட்சி தலைவர் (லேபர் கட்சி) ஹெர்பேர்ட் மாரிஸன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் என்றார். ஓ செய்யலாம், வாக்கெடுப்பு நடத்தினால்தான் எனக்கு இங்கே எத்தனை நண்பர்கள் என்று தெரியவரும். நான் தயார் என்னை என் நண்பர்கள் காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறேன் என்றார் பிரதமர் சாம்பர்லைன். நிச்சயம் நான் இல்லை என்று தன் கையை உயர்த்தினார் கன்சர்வேடிவ் உறுப்பினர் ராபேர்ட் பூத்பை. முதல் உலகப்போரில் பிரிட்டன் வெற்றி பெற்றதற்கு காரணமாக இருந்தவர் என்று அறியப்பட்ட முன்னாள் பிரதமர் லாயிட் ஜோர்ஜ் எழுந்தார். நம் பிரதமருக்கு நண்பர்கள் யார் என்பது இங்கே முக்கியமல்ல. அது பிரச்சனையும் அல்ல. தேசம் நிறைய தியாகங்கள் செய்யவேண்டும் என்று சாம்பர்லைன் சமீபத்தில் சொல்லியிருக்கிறார். தியாகம் செய்ய இந்த தேசம் தயாராக இருக்கிறது அதற்கான ஒரு தலைமை உருவானால். என் விண்ணப்பம் இது தான். நம் பிரதமர் முதலில் தன் பதவியை தியாகம் செய்யட்டும். இறுதியாக சேர்ச்சில் பேசினார். சண்டை சச்சரவுகள் இதோடு சாகட்டும். தனிப்பட்ட சண்டைகளை மறப்போம். நம் வெறுப்பை நம் எதிரி மீது காட்டுவதற்காக சேமித்து வைப்போம். கட்சி நலனை புறக்கணிப்போம். அது இப்போது முக்கியமல்ல. நம் சக்தியை ஒன்று திரட்டுவோம். நம் தேசத்தின் ஒட்டு மொத்த வலிமையையும் ஒன்றாக்குவோம். பலமாக குதிரைகள் நம் தேசத்தை முன்னால் இழுத்துச்செல்லட்டும். விவாதத்தை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது சாம்பர்லைன் தோற்றுப்போனார். மே 10 ம் திகதி சாம்பர்லைன் தனது பதவியை துறந்தார். சேர்ச்சில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.(கன்சர்வேடிவ் கட்சி தலைவராக சாம்பர்லைன் நீடித்தார்) கன்சர்வேடிவ்க் கட்சி, லிபரல் கட்சி, லேபர் கட்சி உள்ளிட்ட கட்சிகளில் இருந்து நபர்களை தேர்ந்தெடுத்து புதிய கூட்டணியை உருவாக்கினார் சேர்ச்சில். நோர்வே டிபேட் அல்லது நார்விக் டிபேட் என்று இந்த சம்பவம் அழைக்கப்படுகிறது. ஃபின்லாந்து தாக்குதலின் போதும் சரி, நோர்வே தாக்குதலிலும் சரி பிரிட்டன் உருப்படியாக எதுவும் செய்யவில்லை. ஜேர்மனியை வளரவிட்டது தவறு போன்ற குற்றச்சாட்டுகள் சாம்பர்லைன் மீது சுமத்தப்பட்டன. அதன் விளைவு தான் இந்த சூடான விவாதம். சாம்பர்லைனை ஆதரித்த பலரே அவருக்கு எதிராக திரும்பினர். சாம்பர்லைனின் அரசியல் அணுகுமுறையை தொடக்கம் முதலே தீவிரமாக எதிர்த்து வந்த சேர்ச்சில், இந்த முறையும் தன் தீவிர அதிருப்தியை வெளிப்படுத்தினார். சோவியத்துக்கும் ஃபின்லாந்துக்கும் இடையிலான போரின் போது ஃபிரெஞ்சு பிரதமர் டிலாயர் பதவி விலகியதை போலவே ஜேர்மனி நோர்வே போரின் காரணமாக பிரிட்டிஷ் பிரதமர் சாம்பர்லைன் பதவி விலகவேண்டிவந்தது. (தொடரும்)   நூல்  இரண்டாம் உலகப்போர் எழுதியவர்  மருதன் வெளியீடு கிழக்கு பதிப்பகம்  2009 மே
  • புயலிலே ஒரு தோணி: எக்காலத்துக்குமான படைப்பு. சுயாந்தன்     எளிய வாசகனாக இருந்த எனது வாசிப்பின் தொடக்கம் கல்கியில் இருந்து ஆரம்பித்தது. சடுதியாக ஜெயமோகனை வந்தடைந்தேன்.  பாலையில் இருந்து மருதம் வந்தது போன்ற ஆதூரவுணர்வு என்னுள் ஏற்பட்டது என்றே கூறுவேன். அதன் பின்பு ஒரு காலமும் நான் வணிக எழுத்துக்களின் பக்கம் சென்றதில்லை. அதனை ஒரு பொருட்டாக மதிக்கவும் கூடாது என்ற எண்ணத்தையும் மனதில் கொண்டுள்ளேன். அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரத்தில் இந்த வணிக எழுத்துக்கான எதிர்ப்பு விதைகள் உள்ளன என்று அதனை வாசிக்கும் நாம் ஒவ்வொருவரும் உணரமுடியும்.    அண்மையில் ப.சிங்காரம் அவர்களின் புயலிலே ஒரு தோணி நாவல் வாசித்து முடித்தேன். இதனை வாசித்ததும் என்னுள் ஒரு விபரீதமான எண்ணம்  தோன்றியது. ஆங்கில யுத்தத் திரைப்படங்களைக் காணும் எந்த எளிய ரசிகனுக்கும் உண்டாகும் யுக்தியற்ற எண்ணப்பாடு இது. அதாவது இந்நாவலைத் தமிழில் திரைப்படமாக்கினால் எந்த இயக்குநருக்கும் நடிகருக்கும் பொருத்தமாக இருக்கும் என்று. உண்மையில் என்னிடம் தெரிவுகளே இல்லை. இந்நாவலைத் தமிழில் திரைப்படமாக்கும் தொழிநுட்ப மற்றும் ஏனைய உத்திகள் இல்லை. இம்முயற்சி இந்நாவலைச் சிறுமைப்படுத்தும். அந்த அளவுக்கு இந்நாவலின் தரம் அதீதமானது. இந்நாவலின் வாசிப்பு எனக்கு அபரிமிதமான அனுபவங்களை உண்டாக்கியது. குறிப்பாக வணிக எழுத்துக்கும் தீவிர எழுத்துக்கும் இடையிலான வித்தியாசத்தை அறியத்தந்தது என்றும் கூறமுடியும்.    பாண்டியன் என்ற கதாபாத்திரம் ஒரு இலட்சிய பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளது. பலர் இக்கதாபாத்திரத்தை அராஜநாயகன் என்று குறிப்பிடுகின்றனர். அது மேலோட்டமான வாசிப்பின் வெளிப்பாடு.     நாவலில் "தமிழ்ப் பேரவை" என்றொரு அத்தியாயம் வருகிறது. இது நாவலில் முக்கியமான உரையாடல்பகுதி. பாண்டியனின் (சிங்காரம்) உலகளாவிய குரல் முரண்பட்டு ஒலிக்கும் இடம் இது. தன் நாவல் முழுக்க அங்கதம் கொண்டு நிரப்ப பாண்டியனை அதிகம் பயன்படுத்தியுள்ளார் சிங்காரம். அத்துடன் அவனை இலட்சிய நாயகனாக்கப் பல இடங்களில் முனைகின்றார்.    கு.அழகிரிசாமிக்கு பழந்தமிழ் இலக்கியங்களில் அதிலும் குறிப்பாக முத்தொள்ளாயிரம் என்ற இலக்கியத்தில் அதீத ஆர்வம் இருந்துள்ளது. அதை ஒரு முக்கியமான பழந்தமிழ் இலக்கியம் என்றும் கு.அ குறிப்பிட்டுள்ளார். அதுபோல ப.சிங்காரம் தனது மேற்படி புனைவில்  முத்தொள்ளாயிரத்தின் தமிழ்க் குறியீட்டை மூன்று பாடல்களைக் கொண்டு விபரித்துள்ளார். அடுத்துவரும் அத்தியாய உரையாடல்களுக்கு அதுவே துணையாக நிற்கிறது.   தென்னன் நெடுமாடக் கூடல் அகம், பூம்புனல் வஞ்சி அகம், வேல்வளவன் பொற்பார் உறந்தை அகம் என்று முடிவுறும் மூன்று பாடல்களிலும் தமிழ்வாழ்வின் போகம் முழக்கமிடப்பட்டுள்ளது. இதுதான் ஆரம்பகாலத் தமிழ் வாழ்வுக்கான அழிவின் சான்று என்று ஒரு தத்துவமும் எள்ளலும் கலந்த அத்தியாயத்தைக் கொண்டுவருகிறார் சிங்காரம். இதனை பாபிலோனியனின் வீழ்ச்சியுடன் ஒப்பிட்டு கதை சொல்லும் விதம் மிக உன்னதமான ஒரு உத்தி. புதுமைப்பித்தன் தன் மரபின் மூடத்தன்மைகளை எள்ளிநகையாடும் அதே போதம் சிங்காரத்திடம் சன்னதமாக வெளிப்படுகிறது.    தமிழ்ப்பெருமை பேசுபவர்களைப் பார்த்து "தவறான நம்பிக்கைகளின் மீது எழும் தற்பெருமை உண்மையைச் சந்திக்க நேரிடின் தன்னிளப்பமாக மாறிவிடும்" என்கிறார்.    'கால இடத் தேவைகளுக்கு ஏற்ப சமுதாய அமைப்பு முறை தோன்றுகிறது, மாறுகிறது. ஜாதிமுறை வெவ்வேறு பெயர்களுடன் எல்லாச் சமுதாயங்களிலுமே இருந்திருக்கிறது. இருந்து மாறியிருக்கிறது. எனவே நமது ஜாதிமுறை பற்றி நாம் வெட்கப்படத் தேவையில்லை. இன்றைய சூழ்நிலையில் இப்போதிருப்பது போன்ற ஜாதிமுறை தேவையா என்பது கேள்வி. எனக்குத் தெரிந்த வரையில் ஜாதி ஒழிப்பு வேலையல்ல முதற்கடமை. நம் மக்களிடையே பரந்த மனப்பான்மையை வளர்ப்பதையே முதல் வேலையாகக் கொள்ள வேண்டும். அறிவு வளர்ச்சி காரணமாகத் தோன்றும் பரந்த மனப்பான்மைக்கு ஜாதி சமய இனமொழிப் பிரிவுகள் யஆவுமே வெறும் விளையாட்டு வேலிகள்' இது ஜாதிமுறை தோன்றியமைக்கான காரணத்தை நாடகத்தன்மையில் பாண்டியன் கூறிய பதில்.    நாவலின் தொடக்கம் எந்தத் தமிழ் நாவலும் தராத ஒரு உற்சாகத்தை அளித்தது. மெடானின் போர்க் காட்சியும் ஜப்பானியர்களின் ஊடுருவலும் இயற்கை இகந்த விதத்தில் வர்ணிக்கப்படுகிறது. பாண்டியனின் அறிமுகம் ஒரு திரைநாயகனுக்கான அறிமுகம் போன்றது. முதல் ஆறு அத்தியாயங்கள் ஒரு போர்நாவலுக்கான சுவாரசியத்துடன் விரிவுறுகின்றது. பின்னர் திடீரென செட்டியார்களின் வணிக எழுச்சி வீழ்ச்சி பற்றிய விவரணைகள் இடம்பெறுகின்றன. அவை அங்கங்கே சலிப்பை உண்டாக்கினாலும் நாவலின் நகர்வில் தளர்வை ஏற்படுத்தவில்லை. அதற்கு சிங்காரம் கையாண்ட மொழிநடையும் இயற்கை வர்ணனையும் இன்னொரு காரணம் என்பேன்.    இந்நாவலுக்கான தகவல்களும் தரவுகளும் மிகத் துல்லியமானவை. இரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனியன்- ஜெர்மனி- அமெரிக்கா- பிரிட்டன்- ஜப்பான் முதலிய நாடுகள் தமது ஆதிக்கத்தை உலக அரங்கில் நிலைநாட்ட மேற்கொண்ட அழிச்சாட்டியங்கள் சித்திரமாக்கப்பட்டுள்ளது. அப்போர்களுக்குத் தலைமை தாங்கிய ஜெனரல்களின்  பெயர் விபரம் தொட்டு அந்தச் சமர்களின் முக்கியத்தூவம் இழப்புக்கள் வரையும் பதிவு செய்யப்படுகிறது. மேலும் முக்கியமாக இந்திய தேசிய இராணுவம் மற்றும் இந்திய விடுதலை பற்றி மிக முக்கியமான சித்திரம் பதியப்படுகிறது. அது பாண்டியனின் உள்ளார்ந்த விருப்பம். அதற்காகத் தன்னையே இறுதியில் இழக்கிறான். சுபாஸ் சந்திர போஸ் வழங்கிய வேலையை முடித்து அவரிடம் பாராட்டை வாங்கி மேலும் தனது திறமைகளைக் காட்டுகிறான்.  இந்தோனேசியாவில் இருந்து டச்சுப் படைகளைத் துரத்த வேண்டும் என்று அங்கேயே போராளிக்குழு அமைத்து இணைகிறான். அந்த இலட்சியத்துக்காகவே பாண்டியன் இறந்து போகிறான்.    இந்நாவல் என்னைப் பொறுத்த வரை ப.சிங்காரத்தின் மிக உச்ச படைப்பு என்றே கூற வேண்டும். எக்காலத்துக்கும் உரிய நாவல் இது. இதிலுள்ள வாழ்க்கைப் படிப்பினைகள் இலட்சிய வேகங்கள் மிகப்பழுத்த அத்வைதிக்குரியவை. அதே நேரம் லௌகீகத்தின் பகட்டு மற்றும் நம்பிக்கைகள் வெளிப்படுத்தப்படுகிறது. அதனால்தான் செட்டியார்களின் வாழ்க்கை நீண்ட அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. அத்துடன் சிங்காரத்தின் பழந்தமிழ் அறிவு பிரமிக்க வைக்கிறது. மிகச் சிலரே தமது படைப்புக்களில் துல்லியமாக  செவ்விலக்கிய பேரிலக்கியக் காட்சிகளைக் காட்டுவார்கள். அவர்களில் தலையாயவர் சிங்காரம். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, சங்க இலக்கியம், கம்பராமாயணம், திருக்குறள் என்று இன்னோரன்ன இலக்கியச் சுவைகளைத் தனது படைப்புக்களின் பொருத்தமான இடங்களில் பொருத்திவிடுகிறார்.   இந்நாவல் பற்றிப் பலர் விரிவாக எழுதியுள்ளனர். அதில் ஜெயமோகனின் 'வரலாற்று அபத்தத்தின் தரிசனம்' மிக முக்கியமானது. மற்றும் சி.மோகனின் கட்டுரைகளும். இந்நாவலைப் படித்த பின்னர் இவற்றையும் வாசிப்பது நாவலின் உபரி அர்த்தங்களை நமக்களிக்கும்.    எனது அண்மைய பயணங்கள் நீண்டதூரங்களுக்கு மோட்டார் வண்டியில்தான் அமைகின்றது. முன்பும் அப்படித்தான். இனியும் அதுவே என் விருப்பு.  அப்போது நான் இந்நாவலை எண்ணிக் கொள்வேன். புயலிலே சிக்கிய பாண்டியன் என்ற கதாபாத்திரமாக என் பயணத் தூரங்களின் விருப்பு வெறுப்புக்களை மாற்றிக் கொள்வேன். அதுவே என் மீவிருப்பு.    உங்களில் யாருக்காவது பயணம் , யுத்தம், உளவு, போராட்டம், இலக்கியம் என்ற வகையில் ஒரு படைப்பை வாசிக்க ஆர்வம் இருந்தால் புயலிலே ஒரு தோணி வாசியுங்கள். அதன் ஆழங்கள் எந்தக் கடலிலும் கப்பலுக்கு இலகுவில் நங்கூரம் போடக்கூடியது.    http://www.suyaanthan.com/2020/07/blog-post.html
  • மஹாவம்சம் தமது உன்னதமான நூல் என்று புலுடா விட்டுக்கொண்டிருந்தார்கள் இந்த பிக்குமார்கள். மக்களும் இவர்களை கேள்வி கேட்டால் வில்லங்கம் என்று பேசாமல் இருந்து விட்டார்கள். சமூக ஊடகங்கள் வந்த பின்னர், சிங்கத்துக்கு எப்படி மனிதப் பிள்ளைகள் பிறக்க முடியும் என்று கேள்விகள் கேட்க, ஆடிப்போய்.... ராவணனை சிங்களவர் ஆக்க முனைகிறார்கள். அதனால் தான் கோணேஸ்வரர், கோகன்னர் ஆக மாத்தப் பார்க்கிறார்கள். இப்ப போய், நம்ம சங்கரி ஐயா, திருடனுக்கு தேள் கொட்டிற மாதிரி ஆனந்தமான கேள்வி கேட்டால்.... என்ன பதில்தான் கிடைக்கும்?