• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

கறுப்பி

இராமர் பாலத்தை இடிப்பதற்கு அமெ. புலிகள் கூட்டுச் சதியாம்

Recommended Posts

இன்னொரு விடயம் விடுபட்டது.கலை கலாச்சாரம் என்பதிலும் தூயது என்று எதைக் குறிப்பிடலாம்.கலையும் கலாச்சாரமும் மாறிக்கொன்டு வருவது. இதில் எந்தக் காலத்தையது தூயது எது கலந்தது என்று பிரிப்பதுவும் கடினம்.ஆனால் ஆளும் வர்க்கத்தால் அதன் அடக்குமுறைக்காக சுரண்டலுக்காக்கத் திணிக்கப்படவற்றை நீக்கி விடுதல் அந்த இனக் குழுமத்தின் தனி அடையாளத்தை உறுதி செய்ய அதன் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தவும் அடக்கப்படும் கருதியலில் இருந்து விடுபடவும் அவசியமானதாக இருக்கலாம்.ஆனால் அதுவும் அந்தப் போராட்டம் வென்றெடுக்கப்படும் போது வேறு திசைகளில் செல்லலாம்.ஏனெனில் இன்று பிரதான முரணாக இருக்கும் இன முரண் அற்றுப்போகும் வேளையில் உருப்பெறும் இன்னொரு முரணின் பாற்பட்டு புதிய அடையாளங்கள் ஏற்படலாம்.

நாரதரே. எம்மில் பலர் தமிழ்த்தேசியம் மீது அளவற்ற பற்றுறுதி வைத்திருப்பதை பார்க்கும் போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. :lol:

ஆமாம். ஒரு இனமும் அதன் கலாச்சாரமும் கால ஓட்டத்தில் தெளிவடைகின்றன. எந்தவொரு இனமும் முற்றுமுழுதான பூரணத்துவமாக (absolute perfect ) என்றுமே இருக்க முடியாது. காலவோட்டத்தில் அந்த இனங்கள், தத்தம் கலை கலாச்சாரங்களை தம் பட்டறிவுகொண்டு மெருகேற்றுகின்றன. வேறு இனக் குழுமங்களின் ஆதிக்கமோ, அல்லது திணிப்போ அல்லாது தம் வாழ்நிலை பட்டறிவுகொண்டு ஒவ்வொரு படியாக தன் கலாச்சார கட்டுமானங்களை முன்னெடுக்கிறது. இது ஒரு இனத்தின் அறிவியல் தேடலின் பாதையை காண்பிக்கும். இதையே நான் "தூய" என்று கூறினேன். நாம் ஒன்றை தெளிவாக உணருதல் வேண்டும். இந்த "தூய கலாச்சாரம்" என்பது வேறு இனங்களை பொறுத்தவரை பிழையானதாக கூட இருக்கலாம்.

உண்மையில், கலாச்சார முன்னெடுப்புக்கள் பல்வேறு இனங்கள் ஒன்றுசேர்ந்து வாழும் சந்தர்ப்பத்தில் ஒன்றை ஒன்று தழுவி வளர இடமுண்டு. இதை கலாச்சார சிதைவுஎனவும் கூறலாம்.

இதைவிட, ஆளும் வர்க்கங்களால் "கலாச்சார கொலை" கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படும். இலக்கிய, தொல்பொருள், ஆட்சி, சமுதாய கட்டுமானம் என்ற பல்வேறு தளங்களில் யாரும் உணரமுடியாத படி இந்த கொலைகள் சத்தப்படாமல் அரங்கேறும். மிக அபாயமானதும் இதுவே. காலவெள்ளத்தில் கலாச்சார கொலைக்கு உட்பட்ட ஒரு இனம் ஒருவித பொய்மையில் வாழ்வதை காணலாம். அதற்கென்று தனித்துவமோ அல்லது "தனித்துவம்" என்பதை உய்த்துணரும் பக்குவமோ அதற்கு இருக்கப்போவதில்லை.

நான் சிந்திப்பது இவற்றைத்தான்.

1. தூய கலாச்சார விழுமியங்கள் மிகப் பெறுமதியானவை. தேடிப்பெற மிகக் கடினமானவை. அவற்றின் ஒவ்வொரு துகளிலும் வாசம் வீசுவது அந்த இனத்தின் உயிர்.

2. கலாச்சார சிதைவு பற்றி ஒவ்வொருவரும் அறிந்திருப்பது அவசியம். அந்த மாயைக்குள் மூழ்கி ஏமாறுவதை தவிர்க்க இது உதவும்.

3. கலாச்சார கொலைகளை எப்பாடுபட்டாயினும் தடுத்து நிறுத்த வேண்டும். ஒரு இனத்தின் எதிர்கால வழியை புரட்டிப்போடுவது இதுதான்.

Share this post

Link to post
Share on other sites

இராமர் பாலம் பற்றிய ஆய்வை நாசா நிச்சயமாகச் செய்ய முடியும். வெப்பக் கதிர்கள் மூலம் வெவ்வேறு கோணங்களிலிருந்து செய்மதிகள் மூலம் கடலில் மூழ்கியுள்ள பகுதிகளையும் கடலடியிலுள்ள தரைத் தோற்றத்தையும் பதிவு செய்து முப்பரிமாணமாகப் பாலத்தின் முழுத் தோற்றத்தையும் தர முடியும். இதை ஒரு புறொஜெக்ட் ஆக நாசா எடுக்குமானால், இதற்காக ஆகும் சில கோடி இந்திய ரூபாக்களை யாராவது தர முன்வர வேண்டும். இந்திய அரசு இப்படியான விஷப் பரீட்சையில் இறங்காது என்பதை உறுதியாகக் கூறலாம்.

ஒருவேளை நாசாவின் செய்மதிகள் மூலம் மேலோட்டமாக ஆராச்சிகள் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் அதன் முடிவை நாசா அறிவிக்காததற்கு பல காரணங்கள் இருக்கலாம். பல கோடி மக்கள் பல நூற்றாண்டுகளாக நம்பிவந்த மத நம்பிக்கையை ஊகங்களின் அடிப்படையில் தகர்ப்பதை யாருமே விரும்ப மாட்டார்கள். கட்டப்பட்ட பாலம் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தால் மேற்கொண்டு தாமாகவே ஆராச்சிகளிளிலும் இறங்கியிருப்பார்கள். வேறொரு நாட்டுச் செய்மதிகள் இதைப்பற்றிய தகவல்ககளை வெளியிட முன்னர் அமெரிக்கா முந்திக் கொள்ளும்.

தர்க்க ரீதியாக இது கட்டப்பட்ட பாலம்தான் என்பதை நிறுவுவதைவிட அகழ்வாராச்சியே உறுதியாக உண்மைகளை வெளிப்படுத்தும். வெளிநாடொன்றில் சரித்திரப் புகழ்வாய்ந்த இடமொன்றில் பாதைகளோ, பாலங்களோ, கட்டடங்களோ அமைக்கப்படுமானால், அத் திட்டம் அகழ்வாராசிசியாளர்கள் குழுவொன்றின் மேற்பார்வையிலேயே நடைபெறும். இந்த இடத்தில் இந்தியா தவறிழைக்கிறதா ?

Share this post

Link to post
Share on other sites

விக்கிபீடியாவில் இசுமத் என்றால் என்ன அது எங்கே எங்கே உல்ளது எங்கிற பட்டியல் இருக்கிறது.

இராமர் பாலம் அல்லது அடம்ஸ் பாலமும் ஒரு இசுமத்துத் தான் என்றும் சொல்லப்பட்டிருகிறது.இசுமத் என்பது இயற்கையாக உருவாகும் ,இரு பெருத்த நிலங்களை இணைக்கிற ஒரு குறுகிய நில இணைப்பு

Isthmus

From Wikipedia, the free encyclopedia

Jump to: navigation, search

For other uses, see Isthmus (disambiguation).

The Isthmus of Panama connects North and South America.An isthmus (IPA: [ˈɪsθməs, ˈɪstməs, ˈɪsməs], Greek: ἰσθμός, isthmos, Katharevousa and ancient Greek: ἰσθμός, plural isthmuses or isthmi) is a narrow strip of land that is bordered on two sides by water and connects two larger land masses. It is the inverse of a strait (which lies between two land masses and connects two larger bodies of water).

Isthmi are naturally good places to build canals. The Panama Canal, which connects the Atlantic and Pacific Oceans, drastically reduces the naval travel time between the east and west coasts of the Americas. The Suez Canal is another example – it allows ship transportation between Europe and Asia without the circumnavigation of Africa.

[edit] List of isthmi

Auckland Isthmus, in Auckland, New Zealand

Isthmus of Avalon in Canada - separates the main island of Newfoundland from the Avalon Peninsula (where the capital, St. John's, is located)

Isthmus of Chignecto - connects the mainland portion of Nova Scotia with New Brunswick and the rest of Canada

Isthmus of Corinth in Greece - the first isthmus to bear that name

Isthmus of Dubrovnik - today's Stradun, (main center street), which connected Laus and Dub into a single city unit

Eaglehawk Neck, Tasmania - which connects the Forestier Peninsula and Tasman Peninsula

Isthmus of East Falklands (Goose Green)

Isthmus of Gibraltar, which joins Gibraltar to mainland Spain. Its sovereignty is disputed by Spain.

Karelian Isthmus between Gulf of Finland and Lake Ladoga

Isthmus of Kra, which joins the Malay Peninsula with mainland Asia

Isthmus of Kushimoto in Japan - connects Honshū with Cape Shiono-Misaki

La Coupée isthmus in Sark

Madison Isthmus, between Lake Mendota and Lake Monona in Madison, Wisconsin

Mavis Grind isthmus in Shetland, UK

Isthmus of Médanos - connects Venezuela to Médanos

Neck in Bruny Island, Tasmania - connects North and South Bruny

Ofqui Isthmus, Aysen Region, Chile

Isthmus of Panama - arguably the most famous isthmus, connects North America and South America.

Isthmus of Perekop between Crimea and Ukraine proper

Quezon Province, in Luzon, Philippines - connecting Bicol peninsula with mainland Luzon

Adam's Bridge, between India and Sri Lanka (a former Isthmus)

Isthmus of Suez - the isthmus between North Africa and Southwest Asia, in Egypt where the Suez Canal is located

Isthmus of Tehuantepec - connects Yucatan and Central America with the rest of Mexico

Isthmus of Summerside, connecting the Western section of Prince Edward Island, Canada with the remainder of the island.

NASA's Rebuttal: A Bridge Too Far

Rameswaram - 18-Jan-2004 - 1 TrekStars by sirensongs

Give TrekStar | Send Message

from the HINDUSTAN TIMES:

NASA debunks Rama bridge theory

S Rajagopalan

(Washington, October 17, 2002)

--------------------------------------------------------------------------------

NASA poured cold water on claims by Hindu news services that the US agency's spaceborne cameras had discovered the remains of the mythical bridge built by Rama across the Palk Strait.

"Remote sensing images or photographs from orbit cannot provide direct information about the origin or age of a chain of islands, and certainly cannot determine whether humans were involved in producing any of the patterns seen," said NASA official Mark Hess.

NRI websites like Indolink.com and the Vaishnava News Network had run a story earlier this week saying that "space images taken by NASA" had revealed "a mysterious ancient bridge in the Palk Strait." The story gained currency when it was picked up, unquestioningly, by the PTI.

NASA said the mysterious bridge was nothing more than a 30 km long, naturally-occuring chain of sandbanks called Adam's bridge. Hess said his agency had been taking pictures of these shoals for years. Its images had never resulted in any scientific discovery in the area.

The Internet story further claimed "archaeological studies reveal that the first signs of human inhabitants in Sri Lanka date back to…about 1.75 million years ago" as does the age of the bridge. This, in turn, matched the age when the events of the Ramayana took place.

Historian B.D. Chattopadhyay of Jawaharlal Nehru University says the archaeological record says nothing of the sort. There is no evidence of a human presence in the subcontinent, he says, before roughly 250,000 to 300,000 years ago. It is generally believed man's hominid ancestors did not leave their African home until about two million years ago.

At least three ship channels have been dug through Adam's Bridge without any evidence of manmade construction. The sandbanks are not at a greater depth, never being more than 3 or 4 feet at high tide. Geologists believe the sandbank did at one time rise above sealevel.

Temple records suggest it was submerged by a violent storm as recently as 1480.

Communication experts say that false, suspect news finds much greater circulation than normal because of the internet. NASA's Hess said, "The images reproduced on the websites may well be ours, but their interpretation is certainly not ours."

மேலுலுள்ள செய்தியில் நாசா அடம்ஸ் பாலத்தை அல்லது இராமர் பாலத்தை மனிதர்கள் கட்டினார்கள் என்று தாம் எதனையும் கூற வில்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது.இதற்க

Share this post

Link to post
Share on other sites

உண்மையான தமிழின அக்கற கொண்டு இந்துமத பற்றாளர்களே........... உங்கட இந்து மதத்துக்குள்ள அறிவியல் விசயங்கள் இருக்கெண்டா............. இராமயணத்தில சொன்ன ராமர் பாலம் உண்மையெண்டா............... தமிழன் எண்டு சொல்லப்படுற ராவணன் பாவிச்ச புஸ்பக விமானத்த பற்றி ஆராய்ஞ்சு சொல்லுங்கோ.

ராமயணம் புனைகதையில்லாட்டி ராமன் எந்த இனத்தவன் எண்டுறத நிறுவுங்கோ. ராவணன் தமிழனா இல்லையா எண்டுறத தேடுங்கோ. ராமயணத்துக்குள்ள அறிவியல் விசயங்கள் இருக்கெண்டு சொல்லுறவை நீங்க தான் அத ஆதாரபூர்வமா நிரூபிக்கணும். நீங்க உண்மையான தமிழின அக்கறை கொண்டவையெண்டா ஏன் ராவணன்ர பக்கத்தில இருந்து ராமயணக் கதைய அணுகுறீங்க இல்ல? இராவணனுக்கு பத்து தலை இருக்க வாய்ப்பு இருக்கா எண்டுறத ஆராய்ஞ்சு ஆதாரத்தோட முன்வையுங்கோ. புஸ்பக விமானம் பற்றி தேடுங்கோ. அந்த பாலத்த இராமன் கட்டினானா இல்லாட்டி ராவணன் கட்டினானா எண்டு ஆராயுங்கோ. ஏன் அந்த பாலத்த ராவணனே கட்டியிருக்க கூடாது?

இன்னும் ஒரு விசயம். முதலே யாரோ சுட்டிக் காட்டிட்டினம் எண்டு நினைக்கிறன். புவியியல் ரீதியா பார்க்கேக்க உலகம் இன்று வரைபடத்தில் இருப்பது போலவே ராமாயண காலத்திலயும் இருந்திருக்க வாய்ப்பில்ல. இலங்கை இந்தியாவோட புவியியல் ரீதியா சேர்ந்திருந்தது எண்ட ஆய்வுகளும் உண்டு.... அது ராமாயண காலத்துக்கு பிறகா? முதலா? அப்பிடி சேர்ந்திருந்திருந்தா பாலங் கட்டுறதுக்கான அவசியம் ஏற்பட்டிருக்காது? ராமாயணத்தில சொல்லப்பட்டிருக்கிற இலங்கையும் இண்டைக்கு இருக்கிற இலங்கையும் ஒண்டா?

நீங்க பாலம் எண்டு சொல்லுறது இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கிற ஒரு இயற்கையான மணற்திட்டாக கூட இருக்கலாந்தானே????அது தானாக இயற்கையின்ர கோலத்தில உருவாகியிருக்கலாந்தானே? அதாவது சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால் நிலமாக இருந்த பகுதி இவ்வாறு ஆகியிருக்கலாமல்லவா? இப்படியான மணற்திட்டைப் பார்த்தவையள் தங்களுக்கு தோன்றின கற்பனைய அதுக்கு செருகியிருக்கலாம் தானே? ராமாயணம் உண்மையாக இருந்தா கூட அந்த மணற்திட்டை ராமன் கட்டியிருக்காமலும் இருந்திருக்கலாம் தானே? ராமனை உயர்த்திப்பிடிக்கவேணும் எண்ட அரசியலுக்காக அதை ராமன் கட்டினதா கதைவிட்டிருக்கலாம்தானே?

ஆகமொத்தத்தில இப்பிடி பல கேள்வியள் குழப்பங்கள் சாத்தியங்கள் இருக்கேக்க இன்னும் அறிவியல் மண்ணாங்கட்டி எண்டுகொண்டிருந்தா என்ன செய்யிறது...... ராமன் கட்டின பாலந்தான் எண்டா உங்கட அறிவியல் ஆதாரங்கள தாங்கோ.... நிரூபியுங்கோ. அதவிட்டிட்டு சும்மா அறிவியல் மண்ணாங்கட்டி எண்டுகொண்டு இனியும் கருத்தெழுதிக்கொண்டு இருக்காதேங்கோ.. சகிக்கல. :angry:

Share this post

Link to post
Share on other sites

நீங்க பாலம் எண்டு சொல்லுறது இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கிற ஒரு இயற்கையான மணற்திட்டாக கூட இருக்கலாந்தானே????அது தானாக இயற்கையின்ர கோலத்தில உருவாகியிருக்கலாந்தானே? அதாவது சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால் நிலமாக இருந்த பகுதி இவ்வாறு ஆகியிருக்கலாமல்லவா? இப்படியான மணற்திட்டைப் பார்த்தவையள் தங்களுக்கு தோன்றின கற்பனைய அதுக்கு செருகியிருக்கலாம் தானே? ராமாயணம் உண்மையாக இருந்தா கூட அந்த மணற்திட்டை ராமன் கட்டியிருக்காமலும் இருந்திருக்கலாம் தானே? ராமனை உயர்த்திப்பிடிக்கவேணும் எண்ட அரசியலுக்காக அதை ராமன் கட்டினதா கதைவிட்டிருக்கலாம்தானே?

இப்படி உங்களுக்குள் பல வினாக்களைத் தொடுக்க.. இராமாயணம்.. காட்டிய இராமர் பாலம் என்ற புவியியல் உண்மைதான் காரணம்.

ஆக இராமாயணம் என்பது முற்று முழுக்க வெறும் புளுகல்ல.. அங்கு வரலாற்றுச் சான்றுகளுக்கான விடயங்களும் உண்டு என்பதை உலகுக்குக் காட்டினால் மட்டுமே அவை தொடர்பான ஆய்வுகளை அறிவியல் கொண்டு செய்ய ஆரம்பிப்பார்கள்.

ஏலவே சுட்டிக்காட்டியது போல.. எமது கருத்து இந்த இடத்தில் இராமர் பாலம்.. இராமரால் கட்டப்பட்டதா என்று ஆராய்வதல்ல. இராமாயணம்.. காட்டும் புவியியல் சான்றுகளூடு.. வரலாற்றைத் தேடல் செய்ய வேண்டும் என்பதுதான். அதை ஆரிய - திராவிட போர் என்ற கோணத்தில் அணுகவல்ல.. இக்குறிப்புகள்.

அகழ்வாராய்ச்சிகளை செய்வதன் மூலம் புவியியல் உண்மைகளை இலகுவில் கண்டறிய வழி இருந்தும்.. பூம்புகாரை.. கடலுக்கடியில் தேடும் அகழ்வாராய்ச்சிகள் செய்யும் நேரத்தில் இராமாயணம்.. சுட்டிக்காட்டியுள்ள புவியியல் அம்சங்கள் அடிப்படையில்.. அமையும் ஆய்வுகள்.. மக்கள் குழுமங்கள் புவியியல் பரம்பலுக்கான சாத்தியங்களை சான்றுகளை வெளிக்கொணரலாம். அந்த அடிப்படையில் தான் அமைகிறது எமது பார்வை இராமாயணத்தின் மீது.

இராமன்.. இராவணன் போன்ற கதாப்பாத்திரங்கள் சிருஷ்டிக்கப்பட்டிருக்கலாம

Share this post

Link to post
Share on other sites

இப்படி உங்களுக்குள் பல வினாக்களைத் தொடுக்க.. இராமாயணம்.. காட்டிய இராமர் பாலம் என்ற புவியியல் உண்மைதான் காரணம்.

ஆக இராமாயணம் என்பது முற்று முழுக்க வெறும் புளுகல்ல.. அங்கு வரலாற்றுச் சான்றுகளுக்கான விடயங்களும் உண்டு என்பதை உலகுக்குக் காட்டினால் மட்டுமே அவை தொடர்பான ஆய்வுகளை அறிவியல் கொண்டு செய்ய ஆரம்பிப்பார்கள்.

மனிதன் விமானம் அமைத்துப் பறக்க முடியும் என்ற சிந்தனையை கிட்டத்தட்ட 2300 ஆண்டுகளுக்கு முன்னரே இராமாயண இலக்கியதாரர்கள் பதிவு செய்துள்ளமை முக்கிய அறிவியல் வரலாற்றுக் குறிப்பாகும்.

நண்பர்களே!!

பலர் இந்த திரியை ஆர்வமுடன் வாசிக்கிறீர்கள் என்பது குறித்து அறிந்துகொண்டேன். மிக்க மகிழ்ச்சி.

நெடுக்ஸ். !!

சொற்களை நாம் "random" ஆக, மிக மேலெழுந்தவாரியாக பாவிக்கிறோம் என்பதற்கு "விமானம்" என்ற இந்தச் சொல் ஒரு உதாரணம். சிற்பக் கலை ஏடுகளிலும், பரம்பரை பரம்பரையாக வந்த சொல்லாடல்களிலும் "விமானம்" என்ற சொல் ஒரு கட்டடத்தின் (விசேடமாக கோவிலின்) மேல் விகாரத்தை (கூரை போன்ற அமைப்பு) குறிப்பதற்கே பாவிக்கப்பட்டு இருக்கிறது (This is not a theory. This is an absolute fact). ஆதியில் "தேர்" போன்ற மிருகங்களால் இழுக்கப்படும் வாகனங்களின் கூரைப்பகுதி கூட "கோவில் விமானங்கள்" போன்றே அமைக்கப்பட்டன. "மன்னன்" அமருவதும் "கடவுள் அமருவதும்" அழகிய விமானத்தின் கீழ் என கருத்து படும்படி இதை அமைத்திருக்கலாம்.

என்னை பொறுத்தவரை, இராமாயணத்தில் கூறப்படும் "புஷ்ப்பக விமானம்" கூட "கோவேறுகழுதைகள் பூட்டிய" என்றே வருகிறது. அதாவது பூக்களால் அலங்கரிக்கப்பட்ட (புஷ்ப்பக), கோவேறு கழுதைகளால் இழுக்கப்படும் ஒரு ரதம். அவ்வளவே. இது பறந்தது என்று கூறுவது, மிக விரைவானது என பொருள்படும்.

உண்மையில், இராமாயணம் தவிர்ந்த ஏனைய எந்தவொரு இலக்கிய குறிப்புக்களிலும் "இவ்வகை விமானங்கள்" பற்றி எந்தத் தகவலும் இல்லை. மனித வரலாற்றின் தொடுப்புக்கள் இவ்வகை அருஞ்செய்திகளை அப்படியே மூழ்கடித்திருக்கும் என நான் நம்பவில்லை.

"பறப்பு" என்பது லியனாடோ டாவின்சியில் இருந்துதான் ஆரம்பமானது என்பது சரியல்ல. அதற்கு முன்பே "பைபிளில்" தேவதூதர்கள் பாலன் பிறந்த நேரம், வெண்ணிற இறக்கைகளுடன் தோன்றினர் என்று வருகிறது. இதைப்போல தான் இராமாயண பறப்பும் ஒரு கற்பனையே. மனிதன் "கடவுள்" என்ற கோட்பாட்டை உருவாக்குவதற்கும், அவனிலும் மேலான ஒரு சக்தியிடம் தன்னை ஒப்படைப்பதற்குமான தத்துவ தேடல்கள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக நடந்தே வந்திருக்கின்றன. இவற்றை இன்னொரு திரியில் ஆழமாக, அழகாக விவாதிக்கலாம்.

இவ்வாறு கற்பனையின் நிமித்தம் உருவான சொற்களை, மனிதன் பறக்கும் முயற்சியில் வென்றபோது, அதற்கு சூட்டி மகிழ்கிறோம். பின்பு நாம் சூட்டிய கற்பனை பெயர், அதன் ஆதிமூலம் உண்மை என்பதை நம்பத் தலைப்படுகிறோம். எவ்வளவு முட்டாள்தனம்? <_<<_<

நவீன விஞ்ஞான கோட்பாடுகளின் அடிப்படையில், தர்க்க முறையில், பொளதீக வரைவுகளுடன் (with possible logic and details) டாவின்சி ஓவியங்களை வரைந்திருந்த படியால் "விஞ்ஞான ரீதியில்" அது ஏற்கப் படுகிறது. இதற்காக "பைபிளில்" இருந்துதான் பறப்பு ஆரம்பமானது என எந்த விஞ்ஞானியும் ஆராய கிளம்பவில்லை.

Share this post

Link to post
Share on other sites

பைபிள் கூட 2000 ஆண்டுகளுக்குள் தானே எழுதப்பட்டுள்ளது. வான்மீகி கிமு வாழ்ந்தவராச்சே..???!

அதுபோக.. இலங்கை தீவாக இருக்க.. சீதையை புட்பக விமானத்தில் கடத்த எப்படி.. கோவேறு கழுதைகளால் கட்டு இழுக்கப்பட்டிருக்கும் என்று நம்புறீங்க..??!

அதுமட்டுமன்றி.. சடாயு போன்ற பாரிய கழுகுகளின்.. பறப்பு இராமாயணத்தில் இருப்பதானது.. குறித்த புட்பகவிமானம் என்பது பறப்புடன் சம்பந்தப்பட்ட ஒன்று என்பதை நிறுவி நிற்கிறது.

இது கோயில்களில் உள்ள விமானமோ.. அல்லது தேரோ அல்ல.. அது கற்பனையில் மனிதப் பறப்பை அதுவும் விமானம் என்ற ஒரு கூறின் மூலம் பறக்க வைத்துள்ளதைத்தான் காட்டுகிறது.

தேவதைகளின் பறப்பில் விமானம் என்ற நிலை இல்லை..!

நாம் இராமாயணத்தில் இலக்கியம் படித்தமே தவிர அறிவியலை எங்கு நோக்கினம். அதாலதான் வேறொருவர் கண்டறிய இன்று... அதனை வைத்துத் தேடல் செய்யுறம். தமிழர்கள் எதனைத்தான் கண்டறிந்தனர்.. நீராவியில் புட்டு அவிப்பதைத் தவிர...???!

ஒரு தமிழன் சிந்திச்சாக் கூட மற்றவன் ஏதாச்சும் சொல்லி.. அதை மழுங்கடிச்சிடுவான். இதில.. எங்க எழுகிறது கண்டுபிடிப்பு. இப்படி கற்பனை கற்பனை என்று புறக்கணிச்சதாலதான்.. தமிழர்களின் வரலாறும் கூட சான்றுகள் தொலைத்த கற்பனையா இருக்கு. இன்றும் கூட அறிவியலைக் கற்றும் கூட ஏதாவது.. தேடல் செய்ய முயற்சி நடக்கா.. இல்ல. மீண்டும் மீண்டும் கற்பனை என்று.. புறக்கணிப்புத்தான் தொடருது.

டாவின்சியின் ஓவியங்கள்.. விஞ்ஞானம் விளங்க முதலே வெளிவந்து விட்டது. இருந்தும் அதை கற்பனை என்று மட்டும் நோக்கி இருந்தால்.. புறக்கணித்திருந்தால்.. அது இன்றும் வெறும் ஓவியமாகத்தான் இருக்கும். அதற்குள் அறிவியலை நுழைந்து நிறுவல்களைச் செய்ய முயன்ற போதுதான்.. அதன் பெறுமதி தெரியவந்தது. இந்த வகையில்.. நாம் என்ன செய்தம்..?! புவியியல் சான்றுகள் தந்த இராமாயணத்தைக் கூட புளுகுமூட்டை என்று புறக்கணிக்கத் தூண்டியதை விட..??!

இப்ப கூட பாருங்கள்... அது அந்த விமானம் அல்ல.. இது தேர் என்ற அளவுக்கு இராமாயணம் வெறும் வெற்றுவேட்டு என்று காட்டி ஆரிய திராவிடத்தை மட்டும் புகுத்தி.. பார்பர்னிய பிராமண வர்க்க பேதத்தூடு.. சமூகப் பிளவுகளைக் கட்டிக்காக்க நிற்கிறமே தவிர.. இல்ல பலிவாங்க நிற்கிறமே தவிர.. சான்றுகள் தேடலைச் செய்யுறமில்ல. அதற்கு எங்களிடம் இடமும் இல்லை..!

இப்படியே காலம் காலமா பார்பர்னியன்.. பிராமணன்.. ஆரியன்.. திராவிடன் என்று கத்திக் கண்டதென்ன. இருந்த தேசங்களையும் அடையாளங்களையும் தொலைத்து.. அகதியாகி ஐரோப்பிய வீதிகளில் அலைந்ததுதான் மிச்சம்..! <_<

Share this post

Link to post
Share on other sites

பறவைய எப்ப மனுசன் பார்த்தானோ அப்பவே அவனுக்கு தானும் பறக்கணும் எண்டு தோன்றியிருக்கும். எனக்கு என்ன விளங்கல எண்டா ஆரியம் திராவிடம் என்று பார்க்காம இத அணுகச் சொல்லுறீங்க..... நீங்க ஏன் இந்துமதம் இராமயணம் எண்டதுக்கு வெளில போய் இந்த நிலம் பற்றி ஆராயக்கூடாது?

இப்படியே காலம் காலமா பார்பர்னியன்.. பிராமணன்.. ஆரியன்.. திராவிடன் என்று கத்திக் கண்டதென்ன. இருந்த தேசங்களையும் அடையாளங்களையும் தொலைத்து.. அகதியாகி ஐரோப்பிய வீதிகளில் அலைந்ததுதான் மிச்சம்..!

இங்க பாருங்கோ..... புதுக்கண்டுபிடிப்ப செய்திருக்கிறார் அண்ணா. தமிழன் அகதியா புலம்பெயர்ந்ததுக்கு காரணம் பிராமணன் ஆரியன் திராவிடன் எண்டு கதைச்சதாலதானாம் <_< திராவிடம் ஆரியம் பார்ப்பனியம் எண்டு கதைக்காமல் இருந்திருந்தால்............... இண்டைக்கு இருக்கிற அடையாளங்களக்கூட தமிழர் இழந்திருப்பினம் எண்டது தான் உண்மையுங்கோ. <_<

ஏனுங்கோ அண்ணா.... நீங்க தானே ராமயணத்த தூக்கிபிடிக்கிறீங்க..... நீங்க செய்யவேண்டியது தானே சான்றுகள தேடுற வேலைய...... அதவிட்டுப்போட்டு அய்யோ இவை புஸ்பக விமானத்த வெறும் தேரெண்டு சொல்லுகினம்........... அய்யோ இவை ராமர் கட்டின பாலத்தை வெறும் மணற்திட்டு எண்டு சொல்லுகினம் எண்டு ஒப்பாரி வைக்குிறீங்க :lol:

Share this post

Link to post
Share on other sites

முடியல்ல.. பூனையிட.. சொந்தரவு தாங்க முடியல்ல..!

பூனைகளுக்கும் விளங்கப்படுத்திறதெண்டா.. எனி ஒரு கருவாட்டோட தான் இங்கின வரணும்..!

பூனைக்குட்டி.. மணல் திட்டை இராமர் தான் கட்டினார் என்று.. உங்கினை நாங்கள் எழுதி இருந்தா காட்டுங்கோ..

அதுபோக.. ஆரியம் திராவிடம் என்பதுதான் இப்ப ஈழப்பிரச்சனைக்குக் காரணம் என்று எங்காவது எழுதி இருக்கமா..??!

ஆரியம் திராவிடம் என்று கத்திக் கண்டது என்ன என்பதுதான் கேள்வி..??! நீங்கள் சொல்லுறீங்க.. தமிழர்களின் அடையாளங்களைக் காத்திருக்கிறமென்று.

நாங்க ஆய்வு செய்யல்ல என்று சொன்னமா..??! செய்திட்டுத்தான் இருக்கம்..! <_<:lol:

அதை ஒருக்கா பட்டியலிடுங்க மிச்சம் விளங்குவம். இல்ல போய் அடுப்பங்கரை தூங்கிட்டு.. புதிசா ஒரு பிரச்சனை வளர்க்க எழும்பி வாங்க..! <_<:lol:

Share this post

Link to post
Share on other sites

நாங்க ஆய்வு செய்யல்ல என்று சொன்னமா..??! செய்திட்டுத்தான் இருக்கம்..!

பிறகெப்பிடி நாங்க மட்டும் செய்யல எண்டு சொல்லுவீங்க...????? நாங்களும் செய்துகிட்டுத்தான் இருக்கிறமாக்கும் :P

மணற்திட்ட ராமர் கட்டல எண்டா அப்ப ஆரு கட்டினாக???? அதக்கொஞ்சம் சொல்லுறது???? ராமயணத்தில புவியியல் சான்றுகள் இருக்கெண்டு சொன்னது நீங்க தானே????

நீங்க சொல்லாட்டி பிறகு எதுக்கு ராமயணத்த தூக்கி பிடிக்கிறியள்.... ராமாயணத்த விட்டிட்டு வெளில பெரிய வட்டத்துக்குள்ள வந்து அந்த மணற்திட்ட அணுகிறது..... :P

நாங்க அடுப்பங்கரையிலயுமு் தூங்குவம்.... தேவைப்பட்ட நெருப்புக்கொள்ளியையும் தூக்குவம் :P

Share this post

Link to post
Share on other sites

என்னை பொறுத்தவரை, இராமாயணத்தில் கூறப்படும் "புஷ்ப்பக விமானம்" கூட "கோவேறுகழுதைகள் பூட்டிய" என்றே வருகிறது. அதாவது பூக்களால் அலங்கரிக்கப்பட்ட (புஷ்ப்பக), கோவேறு கழுதைகளால் இழுக்கப்படும் ஒரு ரதம். அவ்வளவே. இது பறந்தது என்று கூறுவது, மிக விரைவானது என பொருள்படும்.

அப்ப அனுமார் பறக்கவில்லையோ? <_<மிக விரைவாக தாவியே இலங்கை வந்தவர் :P :P

Share this post

Link to post
Share on other sites

பிறகெப்பிடி நாங்க மட்டும் செய்யல எண்டு சொல்லுவீங்க...????? நாங்களும் செய்துகிட்டுத்தான் இருக்கிறமாக்கும் :P

மணற்திட்ட ராமர் கட்டல எண்டா அப்ப ஆரு கட்டினாக???? அதக்கொஞ்சம் சொல்லுறது???? ராமயணத்தில புவியியல் சான்றுகள் இருக்கெண்டு சொன்னது நீங்க தானே????

நீங்க சொல்லாட்டி பிறகு எதுக்கு ராமயணத்த தூக்கி பிடிக்கிறியள்.... ராமாயணத்த விட்டிட்டு வெளில பெரிய வட்டத்துக்குள்ள வந்து அந்த மணற்திட்ட அணுகிறது..... :P

நாங்க அடுப்பங்கரையிலயுமு் தூங்குவம்.... தேவைப்பட்ட நெருப்புக்கொள்ளியையும் தூக்குவம் :P

இராமாயணம்.. சுட்டிக்காட்டிய மணற்திட்டை ஏன் அதுக்கு வெளில வைச்சு ஆராயனும். அப்படி மணற்திட்டுகளை ஆராயனும் என்றா பல திட்டுகள் இருக்கு. நெடுந்தீவும் ஒரு திட்டுத்தான்.. அதை ஆராயுறது..! கச்சதீவும் ஒரு திட்டுத்தான் அதை ஆராயுறது. :D:D

விளங்கமாட்டம் வில்லங்கமாத்தான் எழுதுவம் என்றால்.. அதுக்கு நாம் சரியான தேர்வில்ல.. நடையைக் கட்டுங்க..! :lol::D

Share this post

Link to post
Share on other sites

இராமாயணம்.. சுட்டிக்காட்டிய மணற்திட்டை ஏன் அதுக்கு வெளில வைச்சு ஆராயனும். அப்படி மணற்திட்டுகளை ஆராயனும் என்றா பல திட்டுகள் இருக்கு. நெடுந்தீவும் ஒரு திட்டுத்தான்.. அதை ஆராயுறது..! கச்சதீவும் ஒரு திட்டுத்தான் அதை ஆராயுறது. :D:D விளங்கமாட்டம் வில்லங்கமாத்தான் எழுதுவம் என்றால்.. அதுக்கு நாம் சரியான தேர்வில்ல.. நடையைக் கட்டுங்க..! :lol::D
அதத்தான் நாங்களும் சொல்லுறமாக்கும்.... எவ்வளவோ விசயங்கள் தமிழங்கள் சம்மந்தப்பட்டது இருக்கு.... அதையெல்லாம் ஆராயமாட்டீங்க ..... ராமாயணம் சொன்னோடன அத புனிதம் மண்ணாங்கட்டி அறிவியல் எண்டு ஆராய வெளிக்கிட்டிடுவீங்க.... தெரியுந்தானே காலங்காலமா நடக்கிற பார்ப்பனிய அரசியல் :P

விளங்கமாட்டம் சின்னப்பிள்ளத்தனமாத்தான் எழுதுவம் என்றால்.. அதுக்கு தமிழர் ஒண்டும் இளிச்சவாயள் இல்ல ... நடையக் கட்டுங்க :P

Share this post

Link to post
Share on other sites

அதத்தான் நாங்களும் சொல்லுறமாக்கும்.... எவ்வளவோ விசயங்கள் தமிழங்கள் சம்மந்தப்பட்டது இருக்கு.... அதையெல்லாம் ஆராயமாட்டீங்க ..... ராமாயணம் சொன்னோடன அத புனிதம் மண்ணாங்கட்டி அறிவியல் எண்டு ஆராய வெளிக்கிட்டிடுவீங்க.... தெரியுந்தானே காலங்காலமா நடக்கிற பார்ப்பனிய அரசியல் :P

விளங்கமாட்டம் சின்னப்பிள்ளத்தனமாத்தான் எழுதுவம் என்றால்.. அதுக்கு தமிழர் ஒண்டும் இளிச்சவாயள் இல்ல ... நடையக் கட்டுங்க :P

இராமாயணம் மூலமாக பார்பர்னிய அரசியல் எதிர்ப்பு என்பதை நாங்க ஏற்கல்ல. காரணம்.. எங்களுக்கு உதவேக்க அதையே தூக்கித் தலைல வைப்பம். அப்புறம் கைவிடேக்க.. பார்பர்னியம் என்று பேசிட்டு திரிவம்..!

ஈழவிடுதலைப் போராட்டத்தில எல்லாச் சாமிகளும் ஆதரவளிக்கேக்க.. பேசாம இருந்த நாங்க.. இப்ப சாமிகள் எல்லாம் எதிர்கினம் என்ற உடன.. பார்பர்னியத்தைத் தூற்றிக் கொண்டு.. கறுப்புச் சட்டைக்குப் பின்னால நிற்கிறம்.

சந்தர்ப்பவாதத்துக்காக அறிவியலை.. வரலாற்றை அணுக முடியாது. அவற்றை நிறுவுதல் என்ற அடிப்படையில தான் அணுக முடியும். அங்க அரசியல்..தனிநபர் செல்வாக்குகளுக்கு இடமில்ல..! அங்க படைப்புகளும் அவற்றில் உள்ள சான்றுகளும் தான் கண்ணுக்குத் தெரியுமே தவிர.. ஆரிய திராவிட பார்பர்னியம் தெரியாது..! அது எல்லாம் செருகல்கள்.. அரசியல் தேவைகளுக்காக செருகினவை..! :lol:

Share this post

Link to post
Share on other sites

பைபிள் கூட 2000 ஆண்டுகளுக்குள் தானே எழுதப்பட்டுள்ளது. வான்மீகி கிமு வாழ்ந்தவராச்சே..???!

எந்த ஆண்டாக இருந்தால் என்ன? அது வெறும் கற்பனை வார்த்தைகளே. அது செயல்ரூபம் பெறாத வரைக்கும் அவை "வெறும் வார்த்தைகள்" தான். அதைத்தான் நான் சொல்ல வந்தேன். கற்பனை வார்த்தைகளை உண்மை என மயங்குவத தவிர்ப்போம்.

அதுபோக.. இலங்கை தீவாக இருக்க.. சீதையை புட்பக விமானத்தில் கடத்த எப்படி.. கோவேறு கழுதைகளால் கட்டு இழுக்கப்பட்டிருக்கும் என்று நம்புறீங்க..??!

நான் கூறவில்லை. இதை உங்கள் இராமாயணம் கூறுகிறது. :lol::D

அதுமட்டுமன்றி.. சடாயு போன்ற பாரிய கழுகுகளின்.. பறப்பு இராமாயணத்தில் இருப்பதானது.. குறித்த புட்பகவிமானம் என்பது பறப்புடன் சம்பந்தப்பட்ட ஒன்று என்பதை நிறுவி நிற்கிறது.

பறவை பறப்பதை எப்போது மனிதன் முதன்முதல் கண்டானோ அன்றே "பறப்பு" எனும் சொல் அந்த தொழிலை சுட்டுவதற்கு தோன்றியது (That is a fact). இதை கற்பனையான "பறப்புக்களிலும்" மனிதன் இலக்கியங்களில் புகுத்தி இருக்கிறான். பறப்பது ஜடாயு மட்டுமல்ல. பிரச்சனை ஜடாயு பேசியதா என்பதும் தான். சரி ஜடாயு பேசியிருந்தால் என்ன மொழியில் பேசி இருக்கும்? இங்குள்ள திரிபை பாருங்கள். பறவை பறக்கும் என்ற உண்மையையும், மனிதன் பேசுவான் என்ற உண்மையையும் ஒன்றுசேர்த்து ஒரு திரிபாக "பறவை பேசியது" என்று கவிபுனைந்திருக்கின்றனர். இவ்வாறான கற்பனை திரிபுகளை வைத்து ஆராய வேண்டிய தேவை யாருக்கும் இல்லை :D:D

இது கோயில்களில் உள்ள விமானமோ.. அல்லது தேரோ அல்ல.. அது கற்பனையில் மனிதப் பறப்பை அதுவும் விமானம் என்ற ஒரு கூறின் மூலம் பறக்க வைத்துள்ளதைத்தான் காட்டுகிறது.

எவ்வாறு? அதைத்தான் பலமுறை கேட்கிறேன். அவ்வகை விமானங்கள் பற்றிய இலக்கிய குறிப்புக்களோ, அன்றி கற்குகைகளிலாவது வரைந்த ஓவியங்களோ இன்றுவரை கிடைக்கவில்லை.

நாம் இராமாயணத்தில் இலக்கியம் படித்தமே தவிர அறிவியலை எங்கு நோக்கினம். அதாலதான் வேறொருவர் கண்டறிய இன்று... அதனை வைத்துத் தேடல் செய்யுறம். தமிழர்கள் எதனைத்தான் கண்டறிந்தனர்.. நீராவியில் புட்டு அவிப்பதைத் தவிர...???!

மிகவும் தப்பு. மிக மேலெழுந்தவாரியான கருத்து இது. இந்த திரிக்கு தொடர்பு இல்லாவிட்டாலும் இதை நான் கூறவேண்டிய நிலையில் உள்ளேன். சரி. இன்றைய உலகில், classical mechanics இல் இருந்து குவாண்டம் மெக்கானிஸ் வரை, அதையும் தாண்டி string theory, super-string theory, K-theory and M-theory என்று அடுக்கிக்கொண்டு போகிறோமே? இவற்றின் சாராம்சம் என்ன? இவை எல்லாம் எதற்கு?

உண்மையில் நாம் கற்கும் எதுவுமே, (அது பொள்தீகமாகட்டும், மருத்துவமாகட்டும்........எதையும் நீங்கள் தெரிவு செய்யலாம்) ஒன்றே ஒன்றை நோக்கமாக கொண்டதாகவே நான் உணர்கிறேன். அது "இயற்கையின் இயங்கு விதிகளை அறிவது எப்படி?" என்ற தேடலின் விளைவுதான் இந்த தியறிகள் எல்லாம். இயற்கை எனும் சக்த்தியை நான் நம்புகிறேன். அந்த இயற்கை "நம் யாரையும் பேதப்படுத்தி பார்ப்பதிலை. உங்களையோ என்னையோ அது சிறிதுகூட கணக்கில் எடுப்பதில்லை. இயற்கையின் இயங்கு விதிகளை அறிந்து அதன்படி வாழும் எதுவும் தப்பும். மற்றையன அழியும்".

சரி. இதை எல்லாம் சொல்ல வேண்டி வந்ததன் காரணம் இதுதான். இந்த இயற்கை விதிகளை மேற்கத்தேய விஞ்ஞான அணுகுமுறை quantitative measures மூலம் அணுகுகிறது. அதற்கு ஆய்வுகூடம், ஆராய்ச்சி, முடிவுகள் என்பன தேவைப்படுகின்றன. இதையே (இந்த இயங்கு விதிகளையே) பண்டைய தமிழர் ஆய்வுகூடம் இன்றி, தர்க்க ரீதியில் கண்டறிந்தனர். பழந்தமிழர் வரலாற்று குறிப்புக்களில் இயற்கைக்கு முரணான எந்த அணுகுமுறையும் இருக்கவில்லை. உடலை வளைத்து, உடலுக்குள்ளே இருக்கும் மருந்து பெட்டகங்களை திறக்கச் செய்யும் "யோகக் கலை" யாக இருந்தாலும் சரி, நாம் தற்போது கட்டட கலையில் பகுக்கும் stress concentration ஆக இருந்தாலும் சரி, தம் பட்டறிவின் மூலம், இயற்கைக்கு முரணாகா வகையில் அவற்றை எமக்கு தந்தனர். பின்னாளில் "நன்றாக இருந்தவை எல்லாவற்றையும் அபகரிக்கும் கூட்டம்" யோகக் கலையைகூட மாற்றி அமைத்த சம்பவங்கள் இருக்கின்றன. குண்டலினி என்றும், பாம்பு என்றும், மாயாஜாலம் என்றும் பிதற்றி, "அற்புத யோகக் கலையை" வியாபார பொருளாக்கின. கோபி கிருஷ்ணா போன்றோர் வியாபாரத்துக்காக எழுதிய "Awakening of Kundalini" என்ற நூலை நானும் முழுதாக வாசித்திருக்கிறேன். அதில் என் சிற்றறிவுக்கு எட்டிய எந்த விடயமும் கிடைக்கவில்லை. பல கேள்விகளை எழுப்பி விட்டதுதான் மிச்சம். :D:D

http://www.amazon.com/Awakening-Kundalini-...a/dp/0917776062

இடையே வந்த "ஒரு கூட்டம்" இயற்கைக்கு முரணான கருத்துக்களை பரப்பி, மக்களை பயப்பிராந்தியில் உறைய வைத்து தம் ஆளுகையை மேற்கொண்டது. எதிர்த்தவர்கள் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியை இன்னொரு பதிவில் எழுதலாம் என நினைக்கிறேன்.

ஒரு தமிழன் சிந்திச்சாக் கூட மற்றவன் ஏதாச்சும் சொல்லி.. அதை மழுங்கடிச்சிடுவான். இதில.. எங்க எழுகிறது கண்டுபிடிப்பு. இப்படி கற்பனை கற்பனை என்று புறக்கணிச்சதாலதான்.. தமிழர்களின் வரலாறும் கூட சான்றுகள் தொலைத்த கற்பனையா இருக்கு. இன்றும் கூட அறிவியலைக் கற்றும் கூட ஏதாவது.. தேடல் செய்ய முயற்சி நடக்கா.. இல்ல. மீண்டும் மீண்டும் கற்பனை என்று.. புறக்கணிப்புத்தான் தொடருது.

தமிழன் சிந்திப்பதை யாரும் தடுக்கவில்லை. உண்மையில் "சிந்திக்கிறீர்களா?" என்பதுதான் கேள்வி. நான் சொல்ல வருவது, விஞ்ஞானம் என்ற கத்தியை தூக்கிக்கொண்டு பொய்களை ஆராய வெளிக்கிடுவதற்கும், ஆதியில் பொய்களை நம்பி ஏமறியதற்கும் எந்தவித வேறுபாடும் இல்லை.

சிந்தியுங்கள். நன்றாக சிந்தியுங்கள். Please be aware that often people are caught into illusion. :o:o

Share this post

Link to post
Share on other sites

இராமர் பாலத்தை இடிப்பதற்கு அமெ. புலிகள் கூட்டுச் சதியாம்

இந்தத் தலைப்பே இப்பிடித் தானேங்கண்ணா இருக்கு...... பார்ப்பனியம் ஈழப்போராட்டத்த நசுக்கிறதுக்கு எப்பிடி மதத்த பாவிக்குதெண்டு..... பார்ப்பனியத்தின்ர அரசியல் காலங் காலமா தமிழருக்கெதிராத்தான் நடக்குதுங்கோண்ணா..... ஈழப்போராட்டத்தில பார்ப்பனியம் என்ன ஆதரவளிச்சுது எண்டு கொஞ்சம் சொன்ன நல்லம்..... :P :P அந்த ஆதரவுக்கு பின்னால என்ன சதியள செய்திச்சுது எண்டதையும் சொன்ன நன்னா இருக்கும்.....

ஈழவிடுதலைப் போராட்டத்தில எல்லாச் சாமிகளும் ஆதரவளிக்கேக்க.. பேசாம இருந்த நாங்க.. இப்ப சாமிகள் எல்லாம் எதிர்கினம் என்ற உடன.. பார்பர்னியத்தைத் தூற்றிக் கொண்டு.. கறுப்புச் சட்டைக்குப் பின்னால நிற்கிறம்.

சந்தர்ப்பவாதத்துக்காக அறிவியலை.. வரலாற்றை அணுக முடியாது.

இப்ப யார சந்தர்ப்பவாதியள் எண்டுறியள்?????

இந்திய பார்ப்பனியத்தின்ர அரசியலும் எங்களுக்கு விளங்கும்..... உங்கட அரசியலும் எங்களுக்கு நல்லா விளங்கும்.... இப்ப கருத்தாடுற தலைப்புகள் எல்லாத்திலயும் நீங்க நடத்துற அரசியல நன்னா நாங்களும் புரிஞ்சுகொள்ளுவமாக்கும் :P ஓம் நமசிவாய

Share this post

Link to post
Share on other sites

ஈழத்திருமுருகன் அய்யா, உங்கள் ஆழமான கருதாடல்களிற்கு மிக்க நன்றி.

தொடர்ந்து உங்கள் நிதானமான விளக்கங்களை வாசிக்க ஆவலாக இருக்கிறன் ஏனைய பகுதிகளிலும்.

Share this post

Link to post
Share on other sites

ஈழத்திருமுருகன் அய்யா, உங்கள் ஆழமான கருதாடல்களிற்கு மிக்க நன்றி.

தொடர்ந்து உங்கள் நிதானமான விளக்கங்களை வாசிக்க ஆவலாக இருக்கிறன் ஏனைய பகுதிகளிலும்.

நானும்தான்!

Share this post

Link to post
Share on other sites

எந்த ஆண்டாக இருந்தால் என்ன? அது வெறும் கற்பனை வார்த்தைகளே. அது செயல்ரூபம் பெறாத வரைக்கும் அவை "வெறும் வார்த்தைகள்" தான். அதைத்தான் நான் சொல்ல வந்தேன். கற்பனை வார்த்தைகளை உண்மை என மயங்குவத தவிர்ப்போம்.

நீங்கள் மீண்டும் மீண்டும்.. கற்பனை என்பதில்.. உலகம் உண்மையைக் கண்டிருக்குதே. புவியியல் உண்மை ஒன்றுதான்.. இராமர் பாலம். அது இராமரால் அமைக்கப்பட்டதா இல்லையா என்பது இரண்டாம் பட்சம்..! நீங்கள் இராமர் பாலம் என்பதை.. புவியியல் ரீதியாகவும் கற்பனை என்றால்.. இங்கு விவாதத்தில் நீங்கள் ஈடுபடுவதில் அர்த்தமில்லை..!

நான் கூறவில்லை. இதை உங்கள் இராமாயணம் கூறுகிறது. :lol::D

கோவேறு கழுதையில் புட்பக விமானத்தைக் கட்டியது.. நீங்கள். இராமாயணம்..அல்ல. அது பறக்கவிட்டது..!

பறவை பறப்பதை எப்போது மனிதன் முதன்முதல் கண்டானோ அன்றே "பறப்பு" எனும் சொல் அந்த தொழிலை சுட்டுவதற்கு தோன்றியது (That is a fact). இதை கற்பனையான "பறப்புக்களிலும்" மனிதன் இலக்கியங்களில் புகுத்தி இருக்கிறான். பறப்பது ஜடாயு மட்டுமல்ல. பிரச்சனை ஜடாயு பேசியதா என்பதும் தான். சரி ஜடாயு பேசியிருந்தால் என்ன மொழியில் பேசி இருக்கும்? இங்குள்ள திரிபை பாருங்கள். பறவை பறக்கும் என்ற உண்மையையும், மனிதன் பேசுவான் என்ற உண்மையையும் ஒன்றுசேர்த்து ஒரு திரிபாக "பறவை பேசியது" என்று கவிபுனைந்திருக்கின்றனர். இவ்வாறான கற்பனை திரிபுகளை வைத்து ஆராய வேண்டிய தேவை யாருக்கும் இல்லை :D

பறவை பறப்பது வெளிப்படை உண்மை.2300 ஆண்டுகளுக்கு முன் மனிதன் விமானத்தில் பறப்பது.. வெளிப்படை உண்மையல்ல. மனித கிரியேற்றிவிற்றி...! நீங்கள் கற்பனையில் சொல்லுங்கள் பார்க்கலாம் இன்றிருந்து 2300 ஆண்டுகளுக்குப் பிறகு.. மனிதன் எப்படிப் பறப்பான் என்று..???!

எவ்வாறு? அதைத்தான் பலமுறை கேட்கிறேன். அவ்வகை விமானங்கள் பற்றிய இலக்கிய குறிப்புக்களோ, அன்றி கற்குகைகளிலாவது வரைந்த ஓவியங்களோ இன்றுவரை கிடைக்கவில்லை.

கற்குகைகள் கண்டறிய முதல் புவியியல் ரீதியில் இராமாயணம் குறிப்பிட்ட இடங்களை இனங்கண்டு.. அகழ்வாராய்ச்சிகள் செய்திருக்கினமா..??! இல்லையே.. அப்புறம் எப்படி.. சான்றுகள் கிடைக்கும். கற்பனை என்று தட்டிக்கழிச்சதுதான் மிச்சம்..! இது குறித்த ஆய்வில் ஈடுபடுவதால் என்ன சேதம் அறிவியலுக்கு..???!

மிகவும் தப்பு. மிக மேலெழுந்தவாரியான கருத்து இது. இந்த திரிக்கு தொடர்பு இல்லாவிட்டாலும் இதை நான் கூறவேண்டிய நிலையில் உள்ளேன். சரி. இன்றைய உலகில், classical mechanics இல் இருந்து குவாண்டம் மெக்கானிஸ் வரை, அதையும் தாண்டி string theory, super-string theory, K-theory and M-theory என்று அடுக்கிக்கொண்டு போகிறோமே? இவற்றின் சாராம்சம் என்ன? இவை எல்லாம் எதற்கு?

அடிப்படைக் கோட்பாடுகளில் இருந்துதான் இந்தக் கொள்கைகள் பிறந்துள்ளன. அவை தானாக முளைக்கவில்லல. அடிப்படையில்.. பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய மனிதக் கற்பனைகளே.. இன்று கோட்பாடுகள் பிறக்கவும்.. கொள்கைகள் பிறக்கவும் விதிகள் பிறக்கவும் காரணம். அப்பிள் மரத்தில் இருந்து விழுகிறதை.. விளங்க முற்பட்டதால் தான்.. நியூட்டனிடம் விதி பிறந்தது. அயன்ரீனின் கற்பனைத் திறன் தான்.. பிரபஞ்சம் பற்றிய அறிவியல் கோட்பாடுகளை தர முனைந்தது. கற்பனை.. மனித கண்டுபிடிப்புக்களின் முன்னோடி.. என்பதை மறுக்க முடியாது..!

இன்று செய்மதிகளை அனுப்பி பரிசோதனைகள் செய்து உண்மைகளை தீர்மானிக்கும் விடயங்களை அயன்ஸ்ரின் தன் கற்பனையில் அறிவியலைக் கலந்து கோட்பாடுகளாக கொள்கைகளாகத் தந்தார். சேக்ஸ் பியரின் கற்பனைகள் தான் இன்று ஆங்கிலேய நாகரிகமாக வளர்ந்திருக்கிறது..! ஆக.. அவர்கள் கற்பனை என்று உதாசீனம் செய்யல்ல.. கற்பனைக்குள் அறிவியலைப் பாவித்து.. கண்டுபிடிப்புக்களைச் செய்தனர். நம் முன்னோரும் தான் மரத்தில் இருந்து கனி விழுவதைப் பார்த்தனர். ஆனால் கொள்கை படைக்கும் அளவுக்கு சிந்தித்தனரா இல்லை. அதுபோலத்தான் இராமாயணத்தைப் படைத்தவர்கள்.. பறவை பறப்பதைப் பார்த்து மனிதனை விமானத்தில் இருந்தி பறக்க வைத்துப் பார்த்துள்ளனர். அது அடிப்படை. அதற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டியது.. அதன் பின் வருவோரின் செயல்.. ஆனால் நாம் என்ன செய்தம்.. ஆரிய திராவிட.. வம்புகளைப் புகுத்தி ஆளாளுக்கு சண்டை பிடிச்சதுதான்..!

உண்மையில் நாம் கற்கும் எதுவுமே, (அது பொள்தீகமாகட்டும், மருத்துவமாகட்டும்........எதையும் நீங்கள் தெரிவு செய்யலாம்) ஒன்றே ஒன்றை நோக்கமாக கொண்டதாகவே நான் உணர்கிறேன். அது "இயற்கையின் இயங்கு விதிகளை அறிவது எப்படி?" என்ற தேடலின் விளைவுதான் இந்த தியறிகள் எல்லாம். இயற்கை எனும் சக்த்தியை நான் நம்புகிறேன். அந்த இயற்கை "நம் யாரையும் பேதப்படுத்தி பார்ப்பதிலை. உங்களையோ என்னையோ அது சிறிதுகூட கணக்கில் எடுப்பதில்லை. இயற்கையின் இயங்கு விதிகளை அறிந்து அதன்படி வாழும் எதுவும் தப்பும். மற்றையன அழியும்".

இயற்கை என்பதுதான் எல்லாமே. மனிதன் இயற்கையில் ஒன்றை இன்னொன்றாக மாற்றும் திறனை மட்டும் தான் கொண்டுள்ளான். இராமாயணம்.. காலக் கண்ணாடி என்ற வகையில்.. அது தரும் புவியியல் மற்றும் சாத்தியமான மானுடவியல் சான்றுகளை இனங்காணச் சொல்கிறமே தவிர.. இராமாயணம்.. இயற்கையை மறுதலித்து.. இயற்கையை மனிதன் படைத்தான் இயக்கிறான் என்று சொல்ல முனையல்ல..!

சரி. இதை எல்லாம் சொல்ல வேண்டி வந்ததன் காரணம் இதுதான். இந்த இயற்கை விதிகளை மேற்கத்தேய விஞ்ஞான அணுகுமுறை quantitative measures மூலம் அணுகுகிறது. அதற்கு ஆய்வுகூடம், ஆராய்ச்சி, முடிவுகள் என்பன தேவைப்படுகின்றன. இதையே (இந்த இயங்கு விதிகளையே) பண்டைய தமிழர் ஆய்வுகூடம் இன்றி, தர்க்க ரீதியில் கண்டறிந்தனர். பழந்தமிழர் வரலாற்று குறிப்புக்களில் இயற்கைக்கு முரணான எந்த அணுகுமுறையும் இருக்கவில்லை. உடலை வளைத்து, உடலுக்குள்ளே இருக்கும் மருந்து பெட்டகங்களை திறக்கச் செய்யும் "யோகக் கலை" யாக இருந்தாலும் சரி, நாம் தற்போது கட்டட கலையில் பகுக்கும் stress concentration ஆக இருந்தாலும் சரி, தம் பட்டறிவின் மூலம், இயற்கைக்கு முரணாகா வகையில் அவற்றை எமக்கு தந்தனர். பின்னாளில் "நன்றாக இருந்தவை எல்லாவற்றையும் அபகரிக்கும் கூட்டம்" யோகக் கலையைகூட மாற்றி அமைத்த சம்பவங்கள் இருக்கின்றன. குண்டலினி என்றும், பாம்பு என்றும், மாயாஜாலம் என்றும் பிதற்றி, "அற்புத யோகக் கலையை" வியாபார பொருளாக்கின. கோபி கிருஷ்ணா போன்றோர் வியாபாரத்துக்காக எழுதிய "Awakening of Kundalini" என்ற நூலை நானும் முழுதாக வாசித்திருக்கிறேன். அதில் என் சிற்றறிவுக்கு எட்டிய எந்த விடயமும் கிடைக்கவில்லை. பல கேள்விகளை எழுப்பி விட்டதுதான் மிச்சம். :D:D

விஞ்ஞானம் பண்பறி முறையில் மட்டுமல்ல... அளவறி முறையிலும் விடயங்களை அணுகுகிறது. ஆய்வுகள் எல்லாவற்றிற்கும்.. ஆய்வு கூட ஆய்வுதான் அவசியம் என்றில்லை.

மூலிகை மருத்துவம் என்பது கூட இராமாயணத்தில் இனங்காட்டப்படுகிறது. இன்றும் கூட மூலிகை மருத்துவம்.. பிரபல்யமாக உள்ளது. நம் முன்னோர் ஆய்வு கூடம் வைத்து மருத்துவம் செய்யேல்ல. அவர்கள்.. அவதானிப்புக்கள் மூலமான தகவல் திரட்டு மூலம்.. மருத்துவத்தைத் தொடர்ந்துள்ளனர். இன்று இவற்றையே அந்நியப் பல்கலைக்கழகங்கள்.. அளவறி மற்றும் பண்பறி ஆய்வுகள் மூலம்.. ஆய்வுகளைச் செய்து.. பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளனர். மஞ்சளுக்கான காப்புரிமையைக் கூட அமெரிக்கா தனக்கு சொந்தமாக்கிக் கொண்டுள்ளது. ஆனால்.. மூலிகை மருத்துவம் பற்றிய குறிப்பு.. இராமாயணத்தில் தரப்பட்டும்.. பிற்காலத்தில்.. நம்மவர் செய்த ஆய்வுகள் என்ன..??! கண்டுபிடிப்புக்கள் என்ன.. பெற்ற காப்புரிமைகள் என்ன..??!

இலக்கியம் படிச்சு ஆரியம் திராவிடம் புகுத்தினதோட.. இராமாயணம்.. கற்பனை என்று காட்டிவிட்டு.. கொலர இழுத்து விட்டதுதான்..!

இடையே வந்த "ஒரு கூட்டம்" இயற்கைக்கு முரணான கருத்துக்களை பரப்பி, மக்களை பயப்பிராந்தியில் உறைய வைத்து தம் ஆளுகையை மேற்கொண்டது. எதிர்த்தவர்கள் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியை இன்னொரு பதிவில் எழுதலாம் என நினைக்கிறேன்.

தமிழன் சிந்திப்பதை யாரும் தடுக்கவில்லை. உண்மையில் "சிந்திக்கிறீர்களா?" என்பதுதான் கேள்வி. நான் சொல்ல வருவது, விஞ்ஞானம் என்ற கத்தியை தூக்கிக்கொண்டு பொய்களை ஆராய வெளிக்கிடுவதற்கும், ஆதியில் பொய்களை நம்பி ஏமறியதற்கும் எந்தவித வேறுபாடும் இல்லை

.

சிந்தியுங்கள். நன்றாக சிந்தியுங்கள். Please be aware that often people are caught into illusion. :o

மக்கள் அறிவியலில் தெளிவாக இருந்தால்.. மயக்கங்களுக்குள் சிக்க வேண்டிய அவசியமில்லை..! பார்பர்னியன் திணிச்சான் செருகினான்.. என்று படைப்புக்களை ஒதுக்க வேண்டிய தேவையும் இல்லை..! :o

Share this post

Link to post
Share on other sites

இங்கு இந்துமத அடிப்படையில் சொல்ல பட்டவை கற்பனை ஆதரம் அற்றவை எண்று சொல்பவர்கள் ஆரியம் என்பது என்ன.? அவர்களின் வருகை எங்கு இருந்து, எந்த காலப்பகுதியில் ஆரியம் தோற்றம் பெற்றது போண்றவற்றை ஆதாரத்தோடு தருவீர்களா...??

இல்லை ஒரு கற்பனை ஆரியத்தை புகுத்தி மக்களில் புரிவினைதான் வளர்க்க விரும்புகிற்றீர்களா...??

Share this post

Link to post
Share on other sites

ஈழத்திருமுருகன் அய்யா, உங்கள் ஆழமான கருதாடல்களிற்கு மிக்க நன்றி.

தொடர்ந்து உங்கள் நிதானமான விளக்கங்களை வாசிக்க ஆவலாக இருக்கிறன் ஏனைய பகுதிகளிலும்.

மிகவும் நல்லது குறுக்ஸ். முயற்சிப்போம். :lol::)

Share this post

Link to post
Share on other sites

இங்கு இந்துமத அடிப்படையில் சொல்ல பட்டவை கற்பனை ஆதரம் அற்றவை எண்று சொல்பவர்கள் ஆரியம் என்பது என்ன.? அவர்களின் வருகை எங்கு இருந்து, எந்த காலப்பகுதியில் ஆரியம் தோற்றம் பெற்றது போண்றவற்றை ஆதாரத்தோடு தருவீர்களா...??

இல்லை ஒரு கற்பனை ஆரியத்தை புகுத்தி மக்களில் புரிவினைதான் வளர்க்க விரும்புகிற்றீர்களா...??

தயா, மற்றும் நெடுக்ஸ்.

நீங்கள் கேட்கும் பலவற்றில் இருந்து ஒரு விடயம் தெளிவாக தெரிகிறது. நாம் பல விடயங்களை மிக மேலோட்டமாக தொட்டு செல்கிறோம். எங்குமே ஆழமாக அறியத் தலைப்படுவதில்லை. பல விடயங்களை எடுத்து ஒன்றையும் காணாமல் விட்டுவதை விட, ஒவ்வொன்றாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவது சாலச்சிறந்தது. நாம் நுணுகி ஆராய வேண்டிய பல விடயங்களில் மதமும் ஒன்று. நான் எந்த மதத்தையும் நப்பவில்லை. அதற்கான ஆழ்ந்த விளக்கங்களை பிறகு பார்ப்போம்.

இந்த தலைப்பில் நான் கூறவந்தவை இவைதான்.

1. இராமாயணம் என்பது ஒரு புனைகதை. அதில் இயற்கைக்கு முரணான, தர்க்கரீதியற்ற பல விடயங்கள் இருக்கின்றன.

2. அதை ஆராய்கிறேன் என்று வெளிக்கிட்டு (உண்மையில் சிந்தித்து பாருங்கள், இராமாயணம் உண்மை என்பதை எடுத்துக்கொண்டுதான் நீங்கள் ஆராய வெளிக்க்கிட போகிறீர்கள். It appears as a condition. இராமர் பாலம் என கூறுவதுகூட assumes implicitely) புனை கதைகளை உண்மையாக்காதீர்கள்.

3. எங்கோ இரு மன்னர்களுக்கிடையில் நடந்த யுத்தத்தையும் (யுத்தம் நடந்திருக்கலாம் என்பதை நான் முன்னைய பதிவில் ஏற்றுக்கொண்டிருக்கிறேன்), வெறுமனே கிடந்த மணற்திட்டையும் இணைத்து புனையப்பட்ட கதைதான் இந்த இராமாயணம். இலங்கையை சுற்றி அமைந்திருக்கும் கண்ட மேடைகளை பாருங்கள். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மிக வெகுகாலத்துக்கு முன் தரைவழி தொடர்பு இருந்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் மனிதர்கள் வாழ்ந்தார்களா என்பதே சந்தேகம்தான்.

4. "இராமாயணம் என்ற கதையை" விட்டு, அதற்கு வெளியேவந்து தென்னாட்டில் இருந்த தமிழ் மன்னர்கள் பற்றி ஆய்வு செய்யுங்கள். அது மிக்க பலன் தரும். அதில் ஒருவன் இராமாயணத்தில் "இராவணன்" என உருவகிக்கப்பட்ட மன்னனாககூட இருக்கலாம். அதன் பரிமாணம் மிக வேறுபாடானது. இதில் மிகநுட்பமான விடயம் அடங்கியுள்ளது. வாசிப்பவர்கள் தயவுசெய்து மேலோட்டமாக படிக்காதீர்கள்.

நெடுக்ஸ். அய்ன்ஸ்டைன் கற்பனையில் கனவு காணவில்லை. :lol::). அவர் சிந்தனையை தூண்டியது "free fall" எனப்படும் பொளதீகரீதியான ஒரு பரிசோதனையே (He has told clearly in his book "The Meaning of Relativity", that it was a "thought experiment", not an immagination). அவருக்கு உதவியது, "உயர் கணிதம்". விசேடமாக "Riemann Curvature Tensor". இவை கற்பனை அல்ல. They are absolute facts. அத்தோடு "அப்பிள் விழுவது" என்பது ஒரு பொளதீக நீகழ்வு. மிக உண்மையானது. அதைத் தொடர்ந்து நியூட்டன் செய்தது "கற்பனை" அல்ல. அது "சிந்தனை". (That is not an immagination but a thought) ஆஹா. நான் நினைக்கிறேன் பலர் சொற்களை, அவை சுமந்துவரும் flavor ஐ கவனிக்காது random ஆக பயன்படுத்துகிறீர்கள் என்று. Thought is the reflection of knowledge. Knowledge is the past. நான் இதில் இன்னும் ஆழமாக இத்தருணத்தில் செல்ல முற்படவில்லை.

தயா. முதலில் நீங்கள் கேட்ட இந்துமதம். மதம் (அது எந்த மதமாக இருந்தாலும் சரி) அவை எழுவது உங்கள் எண்ணங்களில் இருந்தே. மதங்களை உங்கள் எண்ணங்களில் இருந்தே உருவாக்குகிறீர்கள். மதங்கள் மனிதனுக்கு பரிசளிப்பவை "போர்", "இனங்களுக்கிடையேயான வேற்றுமை", "சிந்தனைமறுப்பு", "அடக்குமுறை", "இயந்திரரீதியான பழக்கங்கள்" (I would call it as a mechanical repetition of some sort of process). ஆனால் மதங்கள் "தனி மனித விடுதலை" என்பது தாம் கூறும் வழிமுறைகளை பின்பற்றுவதால் உங்களுக்கு கிடைக்கும் என கூறுகின்றன. உங்கள் எண்ணங்கள், உங்களை இறுக கட்டியிருக்கும் வரை விடுதலை என்பது சாத்தியமல்ல. எனவே மதங்கள் எமக்கு தந்தவை மழுங்கடிக்கப்பட்ட மூளையையே. எனவே "மதம்" என்பதிலிருந்து வெளிவராதவரை "புதியன" நடக்க சாத்தியம் இல்லை. இதில் பல விடயங்களை ஒன்றாக சேர்த்துவிட்டேன். மிக விரிவாக எழுதவேண்டிய ஒரு பகுதி இது. மதம் சார்ந்து சிந்திப்பதை தவிருங்கள்.

மற்றையது நீங்கள் கேட்ட "ஆரியர் காலம்". என்னிடம் தற்போது "ஆரியர் வந்த காலம் இதுதான்" என அறுதியிட்டு கூறுமளவுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை. அதை என் வாழ்நாளில் கண்டுபிடிக்க முடியுமோ என்றும் தெரியவில்லை. ஆனால் எமது "தத்துவங்களில்" அடிப்படையில் ஒன்றுக்கொன்று முரணான, (fundamentaly two different philosophies) இருவேறு தத்துவக்களை அடையாளம் காண்கிறேன். இவை அடிப்படையில் மனித நாகரீக வளர்ச்சியில் புகுத்தப்பட்ட ஒன்று என்பது தெட்ட தெளிவாக விளங்குகிறது. முன்னமே நான் கூறியபடி, "ஆரியர்" என்ற மனிதக் கூட்டத்தினை தேடுவதை விடுத்து அவர்கள் விதைத்து ச்சென்ற நச்சுக்கொள்கைகளை ஆராய்ந்து நீக்குவதே சாலச் சிறந்தது. சீராக சிந்தித்து வளர்ந்த ஒரு சமூகம், இயாற்கைக்கு முரணான கொள்கைகளால் மழுங்கடிக்க பட்டது என்பது வருத்தத்திற்குரிய செய்தி. இவ்வகையான கொள்கைகள் மூலம் "எந்தவித முன்னேற்றமோ" அன்றி "புதிய சிந்தனைகளோ" ஏற்பட இடமில்லை.

நியூட்டனோ அல்லது அய்ன்ஸ்டைனோ "மந்திர தந்திர மாயாஜால" வித்தைகளால் பிரபஞ்சம் இயங்குகிறது என எண்ணவில்லை. (They had free mind which was not burdened from others thought) இந்த இந்துமதம் எனப்படுவது கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, ஏன் இன்றுமே, எத்தனை "பெறுமதிமிக்க" மூளைகளை கட்டிப் போட்டிருக்கிறது. நாம் ஒருவித மாயையில், எம்மால் உருவாக்கப்பட்ட எண்ணங்களால் ஆன ஒரு constraint இற்குள் சிக்குண்டு இருக்கிறோம் என எண்ணத் தலைப்படுவதற்கு, அதனின்று வெளிவருவதற்கு மிக அதிக அளவிலான உளவுரண் தேவை. Religon humiliate its people.

நண்பர்களே, நீங்கள் உண்மையில் தத்துவரீதியாக மிக serious ஆக இருந்தால் இதைப்பற்றி மேலும் ஆழமாக பேசலாம். அல்லதுபோனால் இதில் எந்த பிரயோசனமும் கிடைக்கப் போவாதில்லை.

அன்புடன்

- ஈழத்திருமகன் -

Share this post

Link to post
Share on other sites

நான் மிக்க ஆர்வமாக இருக்கிறன்.

இதை வேறு ஒரு பகுதியில் தனியாகவும் தொடரலாம்.

மதங்கள் தனிமனிதர்களை எப்படி handicap ஆகிறது என்பதை முற்று முழுதாக ஏற்றுக் கொள்கிறன். அதுவும் நாம் பாடசாலையில் படிக்கும் இந்து-சைவ சமயம் எப்படி எம்மை சிறுவயதிலேயே மூளைச் சலவை செய்கிறது எமக்குள் இருக்கக் கூடிய தனிமனித திறமையை ஆற்றல்களை முளையிலேயே கிள்ளி எறிகிறது என்பதற்கு இன்று எம்மவரகளின் ஒட்டுமொத்த கைய்யாலத தனம் நல்ல எடுத்துக் காட்டு. இந்து மதத்திற்காக இங்கு (யாழ் களத்தில்) வாதாடுபவர்கள் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள

Share this post

Link to post
Share on other sites

மதம் என்பது மனிதனை புடம் போடுகின்றது... "சங்கு சுட்டாலும் வெண்மைதரும்" என்பது வாக்கு... அதுபோலதால் மதமும் மனிதனை வெண்மை படுத்துகிறது... எங்கெல்லாம் நாத்தீகம் தலை எடுத்து மனிதனை கட்டுப்பாடுகள் இல்லாமல் போகிறானோ அங்கெல்லாம் ஒழுக்கவீனங்களுக்கு பஞ்சம் இல்லை...

மேலை தேயர்களின் கடவுள் பக்தியின் அளவு என்ன என்பது எல்லாரும் அறிந்தது.. குடும்ப வாழ்வில் நிம்மதி இல்லாதவர்களும் மேலை தேயர்கள்தான்... " எவன் பொண்டாட்டி எவனோடை போனால் எனக்கு என்ன என்பொண்டாட்டி நாலு பேரோடை போனால் எனக்கு பெருமை" எனும் நிலைப்பாட்டில் நாத்திகனால் இருக்க முடிவதில்லை என்பது அவனது துன்பத்துக்கு முக்கிய காரணம்...

இராமாயணம் என்பது கதை அல்ல... அது ஒரு இலக்கியம், காவியம் நல்ல "தமிழால்" கடைந்து எட்டுக்க பட்ட அற்புதமான காவியம்... அதில் சொல்லப்பட்டவை எல்லாமே வாழ்வியல் பற்றியது...

ககம்பரின் தமிழ் விளையாடல் என்பதுக்கு அற்புதமான விளக்கம் அதுவும் இலங்கையின் பாதுகாப்பு சம்பந்தமாக சொல்கிறார் இப்படி...

"கறங்கு கால் புகா; கதிரவன் ஒளி புகா; மறலி

மறம் புகாது; இனி, வானவர் புகார் என்கை வம்பே!

திறம்பு காலத்துள் யாவையும் சிதையினும், சிதையா

அறம் புகாது, இந்த அணி மதில் கிடக்கைநின்று அகத்தின்!"

இப்படி தமிழின் எழுச்சியும் உயர்ச்சியும் தான் என்கண்களுக்கு தெரிகிறது... அதை விடுத்து ஆரிச்சந்திரன் காண்டம் படித்து வீட்டு அதில் உள்ள நீதி எண்ற போது "" தேவைக்கு மனைவியையும் விக்கலாம் " என்பது போல இருக்கிறது ஈழத்திரும்மகன் ஐயாவின் வாதம்...

விரிவான விவாதம் எண்றால் பங்கு பற்ற நான் தயார்... அதில் முக்கியமான கேள்வியை இங்கையே கேட்டு விடுகிரேன்..... " மனிதனின் மூப்பையும், மரணத்தையும் விஞ்ஞான த்தால் இன்னும் ஆயிரம் ஆண்டுகளின் பின்னாவது நிறுத்த முடியுமா...?? "

Share this post

Link to post
Share on other sites

நியூட்டனோ அல்லது அய்ன்ஸ்டைனோ "மந்திர தந்திர மாயாஜால" வித்தைகளால் பிரபஞ்சம் இயங்குகிறது என எண்ணவில்லை. (They had free mind which was not burdened from others thought) இந்த இந்துமதம் எனப்படுவது கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, ஏன் இன்றுமே, எத்தனை "பெறுமதிமிக்க" மூளைகளை கட்டிப் போட்டிருக்கிறது. நாம் ஒருவித மாயையில், எம்மால் உருவாக்கப்பட்ட எண்ணங்களால் ஆன ஒரு constraint இற்குள் சிக்குண்டு இருக்கிறோம் என எண்ணத் தலைப்படுவதற்கு, அதனின்று வெளிவருவதற்கு மிக அதிக அளவிலான உளவுரண் தேவை. Religon humiliate its people.

மதம் மனிதனை கட்டி போட்டு இருக்கிறதா...?? எனக்கு இது புதிதாக கேள்வி பட்ட விடயம்... எங்கே யார்சொன்னார்கள் என்பதை கொஞ்சம் விரிவாகவே சொல்லுங்கோ... இல்லை இந்து வேதங்களில் (இரூக், சாம. அதர்வ,யசூர் ) எதிலாவது...?? இல்லை பைபிள் , குர் ஆன்,

மனிதனுக்கு தலைமை வகித்தவரில் ஒருவன் தன்னைமீறி ஒருவன் சிந்தித்து விடக்கூடாது, வாழர்ந்து விடக்கூடாது என்பதுக்காக சொல்லியவைகளாக அவை இருக்கலாம்... அதை மதம் சொன்னது என்பது சாரியானது கிடையாது.... தலைமை செய்பவன் சொல்பவை மதத்தின் பெயரால் சொல்லப்பட்டு இருந்தாலும் , அதுக்கு பெயர் அரசியல், மதம் அல்ல... இதை மனிதன் பகுத்து விளங்கிக்கொள்ள வேண்டும்...

Share this post

Link to post
Share on other sites