Jump to content

ரஷ்யாவின்  "ஏரோஃப்ளோட்"  நிறுவனம்... கொழும்புக்கான, வர்த்தக விமான சேவையை... இடை நிறுத்தியது!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் நிறுவனம் கொழும்புக்கான வர்த்தக விமான சேவையை இடைநிறுத்தியது!

ரஷ்யாவின்  "ஏரோஃப்ளோட்"  நிறுவனம்... கொழும்புக்கான, வர்த்தக விமான சேவையை... இடை நிறுத்தியது!

எயார்பஸ் A330 விமானம் கட்டுநாயக்கவில் தடுத்து வைக்கப்பட்டதை அடுத்து, ரஷ்ய விமான நிறுவனமான ஏரோஃப்ளோட் இலங்கைக்கான விமானங்களை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளது.

தடையில்லாமல் விமான சேவை இடம்பெறும் என்பதில் நம்பிக்கை இல்லை என்பதனால் இலங்கைக்கான சேவைகளையும் டிக்கெட் விற்பனையையும் இடை நிறுத்துவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி ஜூன் 2, 4 மற்றும் 5 திகதிகளில் கொழும்பில் இருந்து மொஸ்கோவிற்குத் திரும்பும் பயணிகள் ஜூன் 4 மற்றும் ஜூன் 5 ஆம் திகதிகளில் புறப்படும் விமானங்கள் மூலம் நாடு திரும்பலாம் என்றும் அறிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் திகதி இலங்கையில் விமான சேவையை ஆரம்பித்த ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான நிறுவனம் எட்டு மாதங்களுக்குப் பின்னர் இலங்கைக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளது.

குத்தகை நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 2ஆம் திகதி, ரஷ்ய விமானம் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு 16 ஆம் திகதி வரை அமுலில் உள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சு மொஸ்கோவிற்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகேவை வரவழைத்து விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டமைக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டமை குறிப்பிடத் தக்கது.

https://athavannews.com/2022/1285423

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சு மொஸ்கோவிற்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகேவை வரவழைத்து விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டமைக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டமை குறிப்பிடத் தக்கது.

ரஷ்யா ஏதோ சிறிலாங்காவுக்கு நட்பு நாடு எண்டாங்கள்???????

என்ன சிம்ரன் இதெல்லாம்? 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

ரஷ்யா ஏதோ சிறிலாங்காவுக்கு நட்பு நாடு எண்டாங்கள்???????

என்ன சிம்ரன் இதெல்லாம்? 😂

புட்டின்... ஸ்ரீலங்காவின், குரங்கு சேட்டைக்கு இடம் கொடுக்க மாட்டார். 😂
ஏற்கெனவே... உக்ரைனிலை, ஒருத்தர்.... தேவையில்லாமல் சொறிஞ்சு போட்டு, 😁
வாங்கிக் கட்டிக் கொண்டு இருக்கிறார். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

புட்டின்... ஸ்ரீலங்காவின், குரங்கு சேட்டைக்கு இடம் கொடுக்க மாட்டார். 😂

பைடன்ரை குரங்குச் சேட்டைக்கே( USA) இடங்குடுக்கேல்லையாம்....இதுக்குள்ள ஆட்டுப்புளுக்கை சிறிலங்கா எம்மாத்திரம்? 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவிற்கு இலங்கை அரசாங்கம் பாராட்டு

இருதரப்பு உறவுகள்... பாதிக்கப்பட முன்னர், ரஷ்யப் பிரச்சினையை... தீருங்கள் – தினேஷ்.

ரஷ்ய ‘ஏரோஃப்ளோட்’ விமானம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண விரைவாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ‘ஏரோஃப்ளோட்’ விமானம் ஒன்று இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்புக்கான விமான சேவைகளை அந்நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது.

எனவே இரு நாடுகளுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையில் பாரிய பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரகபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன மேற்கொண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

https://athavannews.com/2022/1285439

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

இரு நாடுகளுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையில் பாரிய பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனால ரஷ்யாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, ஏற்கெனவே விழுந்து கிடக்கிற இலங்கை நிரந்தரமாகவே மூடப்படும். ஏதோ தான் சொன்னதையெல்லாம் ஏற்றுக்கொண்டு தமிழரை அழிக்க சர்வதேசம் உதவியதுபோல் இன்னும் தன் பேச்சை நம்பும், உதவும் என்கிற கனவில மிதக்குது இலங்கை. இவையளின் பேச்சை நம்பியல்ல, தமிழர் அழிய வேண்டும் என்று சர்வதேசமும் விரும்பியதே இவர்களுக்கு உதவியதன் காரணம். அதை காலங்கடந்தென்றாலும் இலங்கை உணரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon of standing and text that says 'IMF GOVERNMENT SL RUSSIA'

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tenor.gif

ஸ்ரீலங்கா... வல்லரசு ஆகிட்டுதாம்.
அதனால் தான்... ரஷ்ய விமானத்தை பிடித்து வைத்திருக்கிறார்களாம்.  🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

70 களில் ஏரொபிளட் மிகவும் பிரபலமாக இருந்தது.குறைந்த செலவுடன் பிரயாணம் செய்யலாம்.

77இல் ஏரோபிளட் மூலம் 100 டாலர் தோமஸ்குக்குடன் நாட்டைவிட்டு புறப்பட்டேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

ரஷ்யா ஏதோ சிறிலாங்காவுக்கு நட்பு நாடு எண்டாங்கள்???????

என்ன சிம்ரன் இதெல்லாம்? 😂

இது ஸ்ரீ லங்கா அரசு எடுத்த முடிவில்லை 
இதற்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை 

சர்வதேச பறப்பு முறைமை மூலம் குறித்த விமானம் மேலெழும்பும் ( ) உரிமையை ரத்து செய்திருக்கிறார்கள் 
இலங்கையில் இருந்து பறந்தாலும் ஏனைய நாடுகளின் ( குறிப்பாக இந்திய) வான் பரப்பில் பறக்க முடியாது. 

இது லீசிங் முறைமையில் இருந்த விமானம் 
பொருளாதார தடையின் பின்பு ரசியா ஒரு தனி நிறுவனம் நிறுவி 
இந்த விமானத்தை பதிவு செய்திருக்கிறார்கள் 
ஆதலால் இது ஒரு திருட்டு விமானம் என்பதுதான் அடிப்படை பிரச்சனை 

உதாரணத்துக்கு நீங்கள் ஒரு காரை வாடகைக்கு எடுத்து 
தமிழ் சிறி அண்ணருக்கு விற்று இருக்கிறீர்கள் 
அவர் அந்த காரில் பிரான்சுக்கு விசுகு அண்ணாவிடம் சென்று இருக்கிறார் 
இப்போ பிரான்ஸ் போலீஸ் (சர்வதேச சட்டங்களுக்கு அமைய) 
அதை விசுகு அண்ணா வீட்டிலேயே தரைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் . 

South Asia – World Regional Geography

  • Like 5
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடு இருக்கும் நிலையில் இத்தகைய நடவடிக்கைகளால் இருக்கின்ற கிழிஞ்ச கோவணமும் (உல்லாசப் பயணத்துறை) காணாமல் போகப்போகின்றது. 😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Maruthankerny said:

ஏம்பா

வா  தம்பி வந்து  எழுது என்று  கூப்பிட்டதற்கு  

இப்படி  பயப்படுத்தியா  வரணும்???🤣

3 minutes ago, Kapithan said:

நாடு இருக்கும் நிலையில் இத்தகைய நடவடிக்கைகளால் இருக்கின்ற கிழிஞ்ச கோவணமும் (உல்லாசப் பயணத்துறை) காணாமல் போகப்போகின்றது. 😀

அப்போ

கோவணம்  இன்னும் இருக்கு  என்கிறீர்கள்???

எனக்கு  சந்தேகம் இருக்கு??😜

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

ஏம்பா

வா  தம்பி வந்து  எழுது என்று  கூப்பிட்டதற்கு  

இப்படி  பயப்படுத்தியா  வரணும்???🤣

அப்போ

கோவணம்  இன்னும் இருக்கு  என்கிறீர்கள்???

எனக்கு  சந்தேகம் இருக்கு??😜

கிழிஞ்ச எண்டதக் கவனிக்கவில்லையோ ? 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

கிழிஞ்ச எண்டதக் கவனிக்கவில்லையோ ? 

🤣

அதுவும் இல்லை  என்றது தான் களநிலை?😂

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

இது ஸ்ரீ லங்கா அரசு எடுத்த முடிவில்லை 
இதற்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை 

சர்வதேச பறப்பு முறைமை மூலம் குறித்த விமானம் மேலெழும்பும் ( ) உரிமையை ரத்து செய்திருக்கிறார்கள் 
இலங்கையில் இருந்து பறந்தாலும் ஏனைய நாடுகளின் ( குறிப்பாக இந்திய) வான் பரப்பில் பறக்க முடியாது. 

இது லீசிங் முறைமையில் இருந்த விமானம் 
பொருளாதார தடையின் பின்பு ரசியா ஒரு தனி நிறுவனம் நிறுவி 
இந்த விமானத்தை பதிவு செய்திருக்கிறார்கள் 
ஆதலால் இது ஒரு திருட்டு விமானம் என்பதுதான் அடிப்படை பிரச்சனை 

உதாரணத்துக்கு நீங்கள் ஒரு காரை வாடகைக்கு எடுத்து 
தமிழ் சிறி அண்ணருக்கு விற்று இருக்கிறீர்கள் 
அவர் அந்த காரில் பிரான்சுக்கு விசுகு அண்ணாவிடம் சென்று இருக்கிறார் 
இப்போ பிரான்ஸ் போலீஸ் (சர்வதேச சட்டங்களுக்கு அமைய) 
அதை விசுகு அண்ணா வீட்டிலேயே தரைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் . 

South Asia – World Regional Geography

அருமையான கருத்து மருதர்.

இதை இன்னும் ஒரு திரியில் எழுதினேன். அடிப்படை பொருளாதார தடை என்றாலும் இதில் சம்பந்த பட்டிருப்பது அயர்லாந்து கம்பெனி, இது இலங்கை அரசு எடுத்த முடிவல்ல, சர்வதேச சட்டத்துக்கு அமைய இலங்கை கோர்ட் எடுத்த முடிவு என.

யாரும் அதை வாசித்ததாயும் தெரியவில்லை (நாம் எழுதியதை யாரும் வாசிப்பதில்லை என்பது வேறு மேட்டர்).

ஆளாளுக்கு வந்து, “விளாடிமீர் புட்டின், ரேவதி நட்சத்திரம், சக குடும்பாயா நாம்,   ஜோ பைடன், ரோகிணி நட்சத்திரம், சக குடும்பாயா நாம்” என்று அர்ச்சனை செய்து விட்டு போய்விட்டார்கள்🤣

9 hours ago, Kapithan said:

கிழிஞ்ச எண்டதக் கவனிக்கவில்லையோ ? 

🤣

விரும்பியோ, விரும்பாமலோ இலங்கை-ரஸ்ய உறவை முறிக்க வைத்துள்ளார்கள்.

இலங்கைக்கு வேறு தெரிவில்லை.

உல்லாசபயணம் வரும் ஐரோப்பியரில் 40% ரஸ்யன்/உக்ரேனியன் எண்டு கேள்வி. 

இனி அதுக்கும் 🐚🐚🐚

போற போக்கை பார்த்தால் தனி நாட்டையும் தந்து, 52 பில்லியனையும் தருவாங்கள் போல கிடக்கு 🤣.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் நிறுவனம் கொழும்புக்கான வர்த்தக விமான சேவையை இடைநிறுத்தியது!

ரஷ்ய விமான விவகாரம்: உயர்மட்ட நடவடிக்கையில் அரசாங்கம்.

ரஷ்ய விமானம் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் உயர்மட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

விமானம் தடுத்து நிறுத்தப்பட்டமை தொடர்பான நீதிமன்ற வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை என சுட்டிக்காட்டி இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதேவேளை குறித்த விமானம் தடுத்து வைக்கப்பட்டமையினால் இருநாடுகளுக்கு இடையில் பிரச்சினை ஏற்படவில்லை என விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என இலங்கைக்கான ரஷ்ய தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ரஷ்ய ஏரோஃப்ளோட் ஏ330 ரக விமானம் இலங்கையை விட்டு வெளியேறுவதைத் தடுத்து கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை தடை உத்தரவு பிறப்பித்தது.

இதனை அடுத்து மொஸ்கோவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகளை அந்நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1285455

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்

ரஷ்யாவுடனான விவகாரம்: இராஜதந்திர மட்டதிற்கு செல்லும் முன்னர், பிரச்சினையை... ஏன் தீர்க்கவில்லை? – சஜித்

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பான பிரச்சினையை கையாளும் முறை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை கண்டித்துள்ளார்.

நாட்டின் சுற்றுலா துறையின் பிரதான ஆதாரமாகவும், இலங்கையின் தேயிலை ஏற்றுமதியின் பிரதான ஏற்றுமதித் தளமாகவும் ரஷ்யா விளங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இராஜதந்திர மட்டதிற்கு செல்லும் முன்னர் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் ஏன் தலையிடவில்லை என்றும் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

நிலைமையை மோசமாக்க அனுமதித்ததன் மூலம் அரசாங்கம் தனது திறமையின்மையை வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இதனால் ஏற்படும் பொருளாதார விளைவுகளை ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் புரிந்து கொள்ளவில்லை என்றும் அவர் கடுமையாக சாடினார்.

https://athavannews.com/2022/1285473

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய விமானம் குறித்த பிரச்சினை இரு நாடுகளுக்கிடையிலானதல்ல : இது தனிப்பட்ட சட்ட பிரச்சினை : ரஷ்யாவிற்கு அறிவித்தார் பிரதமர் ரணில்

(எம்.மனோசித்ரா)

ரஷ்ய விமானம் தொடர்பான பிரச்சினை இரு நாடுகளுக்கிடையிலானது அல்ல என்றும் , அது தனிப்பட்ட சட்ட பிரச்சினையாகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நீதித்துறை அமைச்சின் ஊடாக இது தொடர்பில் ரஷ்ய வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கு அறிவித்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதைத் தடுக்கும் வகையில் ஏரோஃப்ளோட் விமானத்திற்கு மேல் மாகாண வர்த்தக உயர் நீதிமன்றம் கடந்த 2 ஆம் திகதி தடை உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கு ஐரிஷ் நிறுவனமான செலஸ்டியல் ஏவியேஷன் டிரேடிங் 10 லிமிடெட் வாதியால் முதல் பிரதிவாதியான பொதுக் கூட்டுப் பங்கு நிறுவனமான 'ஏரோஃப்ளோட்' மற்றும் இரண்டாவது பிரதிவாதியான எயார் நேவிகேஷன் மற்றும் இலங்கையின் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள், கட்டுநாயக்கவின் பதில் தலைவர் என்.சி. அபேவர்தன ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வணிகப் பிணக்கு தொடர்பான வழக்கு ஆகும்.

இந்த விடயம் இன்னும் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காக நிலுவையில் உள்ளது. இந்த விடயம் வழக்கமான  தூதரக வழிகளிலும் ஆலோசனையில் உள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. 
 
https://www.virakesari.lk/article/128854

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Maruthankerny said:

இது ஸ்ரீ லங்கா அரசு எடுத்த முடிவில்லை 
இதற்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை 

சர்வதேச பறப்பு முறைமை மூலம் குறித்த விமானம் மேலெழும்பும் ( ) உரிமையை ரத்து செய்திருக்கிறார்கள் 
இலங்கையில் இருந்து பறந்தாலும் ஏனைய நாடுகளின் ( குறிப்பாக இந்திய) வான் பரப்பில் பறக்க முடியாது. 

இது லீசிங் முறைமையில் இருந்த விமானம் 
பொருளாதார தடையின் பின்பு ரசியா ஒரு தனி நிறுவனம் நிறுவி 
இந்த விமானத்தை பதிவு செய்திருக்கிறார்கள் 
ஆதலால் இது ஒரு திருட்டு விமானம் என்பதுதான் அடிப்படை பிரச்சனை 

உதாரணத்துக்கு நீங்கள் ஒரு காரை வாடகைக்கு எடுத்து 
தமிழ் சிறி அண்ணருக்கு விற்று இருக்கிறீர்கள் 
அவர் அந்த காரில் பிரான்சுக்கு விசுகு அண்ணாவிடம் சென்று இருக்கிறார் 
இப்போ பிரான்ஸ் போலீஸ் (சர்வதேச சட்டங்களுக்கு அமைய) 
அதை விசுகு அண்ணா வீட்டிலேயே தரைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் . 

South Asia – World Regional Geography

On 4/6/2022 at 16:23, தமிழ் சிறி said:

இந்த விடயம் தொடர்பாக ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சு மொஸ்கோவிற்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகேவை வரவழைத்து விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டமைக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டமை குறிப்பிடத் தக்கது.

அப்படியானால் ரஷ்யாவின் இந்த அதிருப்தி, தூதுவரை அழைத்து வெளியிடும் கண்டனமெல்லாம் அர்த்தமற்றதல்லவோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் நிறுவனம் கொழும்புக்கான வர்த்தக விமான சேவையை இடைநிறுத்தியது!

ஏரோஃப்ளோட் குறித்து... நாளை நீதிமன்றில், சமர்ப்பிப்புகளை முன் வைக்கின்றார் சட்டமா அதிபர்.

ரஷ்யாவின் ‘Aeroflot’ பிரச்சினையால் அசௌகரியங்களுக்கு உள்ளான அனைத்து பயணிகளிடமும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மன்னிப்பு கோரியுள்ளார்.

அந்நிய செலாவணி நெருக்கடிக்கு மேலதிகமாக இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு இந்த பிரச்சினை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அமைச்சர் டி சில்வா ஒப்புக்கொண்டார்.

அனைத்து தரப்பினருக்கும் நியாயமான தீர்ப்பு வழங்குவதற்கான சட்ட கட்டமைப்பை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

எனவே, Aeroflot பிரச்சினை தொடர்பில் சட்டமா அதிபர் நாளை திங்கட்கிழமை (7) நீதிமன்றத்தில் சமர்ப்பிப்புகளை முன்வைப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த பிரச்சினை இரண்டு நிறுவனங்களுக்கு இடையிலான தகராறு என்றும், அரசாங்கத்திற்கு இதில் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

https://athavannews.com/2022/1285486

Link to comment
Share on other sites

275 ரஷ்ய பயணிகளுடன் பயணித்த ரஷ்ய விமானம்

275 ரஷ்ய பயணிகளுடன் பயணித்த ரஷ்ய விமானம்

மெஸ்கோவில் இருந்து காலியாக வந்த Aeroflot Airlines ஏர்பஸ் A330-300 விமானம், கொழும்பில் இருந்த 275 ரஷ்ய பயணிகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சற்று முன்னர் புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரத்தில் நீதிமன்ற ஆணையின்படி, ரஷ்யாவின் பயணிகள் விமானம் ஒன்று கட்டுநாயக்கவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் உள்ள பயணிகளை அழைத்து செல்வதற்காக இன்று காலை கட்டுநாயக்கவுக்கு வந்த விமானத்தின் மூலம் 275 ரஷ்யர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

ருசியா இலங்கைக்காக விழுந்து விழுந்து ஐக்கியநாடுகள் சபையில் காப்பாற்றியதற்கு நன்றியே இல்லாமல் செய்துவிட்டார்கள்.

காலச் சக்கரத்தில் பழிவாங்கப்படலாம்.எமக்கு நல்லது தான்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lankan Authorities Say Not Involved in Seizure of Aeroflot Plane in Colombo Airport

22 hours ago

© AP Photo / Marina Lystseva

Subscribe

MOSCOW (Sputnik) -

Sri Lankan authorities said they have nothing to do with the seizure of a Russian Aeroflot plane at the Bandaranaike airport in Colombo, adding that they consider it a commercial dispute between the Russian airline and the Irish Celestial Aviation Trading.

According to Sri Lanka’s Airport and Aviation Services, the Commercial High Court of Colombo had a hearing on 3 June on the motion filed by Aeroflot and established there was no effective Enjoining Order issued.

"It was also noted during the hearing that the dispute between the Aeroflot - Russian Airlines and Celestial Aviation Trading 10 Limited (Plaintiff) was purely of a commercial nature which should be dealt between the said two parties and no involvement of the State was emphasized," the aviation services company said in a statement.

The Aeroflot Airbus A330-300 flight from Colombo to Moscow departing on 2 June was cancelled due to the lack of authorisation from the Sri Lankan aviation authorities.

Sri Lanka Detains Russian Aeroflot Plane

Yesterday, 10:40 GMT

Sri Lanka’s Airport and Aviation Services company said that a court hearing on the aircraft seizure was scheduled for 8 June. The Russian Foreign Ministry handed a note of protest to the Sri Lankan Ambassador in Moscow, while Aeroflot has suspended further flights to Colombo.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

அப்படியானால் ரஷ்யாவின் இந்த அதிருப்தி, தூதுவரை அழைத்து வெளியிடும் கண்டனமெல்லாம் அர்த்தமற்றதல்லவோ?

2 hours ago, nunavilan said:

275 ரஷ்ய பயணிகளுடன் பயணித்த ரஷ்ய விமானம்

275 ரஷ்ய பயணிகளுடன் பயணித்த ரஷ்ய விமானம்

மெஸ்கோவில் இருந்து காலியாக வந்த Aeroflot Airlines ஏர்பஸ் A330-300 விமானம், கொழும்பில் இருந்த 275 ரஷ்ய பயணிகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சற்று முன்னர் புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரத்தில் நீதிமன்ற ஆணையின்படி, ரஷ்யாவின் பயணிகள் விமானம் ஒன்று கட்டுநாயக்கவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் உள்ள பயணிகளை அழைத்து செல்வதற்காக இன்று காலை கட்டுநாயக்கவுக்கு வந்த விமானத்தின் மூலம் 275 ரஷ்யர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சித்து  விளையாட்டுக்குத்தான் இதெல்லாம் 

எல்லா சர்வதேச விமான நிலைய டவர்களும் சர்வதேச சட்ட்ங்களுக்கு (IATA ) அமையவே செயல்பட முடியும் 
இந்த விமானம். இந்த விமானம் அவர்களால்தான் தடுக்க்க பட்டு இருந்தது 

இதை இலங்கை உள்ளூர் நீதிமன்றுக்கு இழுக்கவே இதெல்லாம் செய்து இருக்கிறார்கள் 
இப்பெ இலங்கை நீதிமன்று இது தனியார் விமானம் ( அவ்வாறுதான் இப்போ பதிவாகி இருக்கிறது) 
இதை தடுத்து வைக்கும் உரிமை இல்லை என்று தீர்ப்பாகி இருக்கிறது 
அந்த தீர்ப்பின் அடிப்படையில் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அனுமதித்து இருக்கிறது 

அனால் அதே  (IATA) SU 289    தில்தான் இப்போ பயந்துகொண்டு  இருக்கிறது 
நான் இதை எழுதிக்கொண்டு இருக்கும் நேரம் உபேகேசித்தானை கடந்துகொண்டு இருக்கிறது 
இது எவ்வாறு எல்லா நாட்டு வான் பரப்பிலும் அனுமதி பெற்று போகிறது என்பதை 
இனிதான் நானும் தேடி வாசிக்க வேண்டும் 

https://flightaware.com/live/flight/AFL289

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஈழப்பிரியன் said:

ருசியா இலங்கைக்காக விழுந்து விழுந்து ஐக்கியநாடுகள் சபையில் காப்பாற்றியதற்கு நன்றியே இல்லாமல் செய்துவிட்டார்கள்.

காலச் சக்கரத்தில் பழிவாங்கப்படலாம்.எமக்கு நல்லது தான்.

இலங்கையின் தேயிலை ஏற்றுமதியிலும், சுற்றுலா துறையிலும்…. ரஷ்யா முக்கியமான நாடு.
இனி அதே நிலை நீடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

குழம்பிய குட்டையில்… தமிழ் அரசியல் வாதிகள்,
ரஷ்யாவுடன் ஏதாவது, “டீல்” போடுவார்கள் என்று பார்த்தால்… 🧐
அவர்களுக்கு, அந்தளவு கெட்டித்தனம் கிடையாது. 😂
அவர்கள்… அதுக்கு, சரிப்பட்டு வர மாட்டார்கள். 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.