Jump to content

முதலை இறைச்சி, தீக்கோழி இறைச்சி - பண்ணை வளர்ப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் மிக கூடிய சனத்தொகை கொண்ட சீனாவில், முன்னர் வறுமை காரணமாக, நிலத்தில், நீரில், வானில் என்று கிடக்கும் எதையுமே உணவாக பழகிக் கொண்டு விட்டனர். 

அப்படி, நாய்கள், பூனைகள், தேள்கள், வௌவ்வால்கள் என்று கிடைத்ததை உண்டு வாழ்ந்த சீனர்களுக்கு, பணம் வந்த பின்னர், விட முடியாத ஒரு உணவு முதலை இறைச்சி.

அவர்களது தேவையினை பூர்த்தி செய்ய, ஆப்பிரிக்காவில், கென்யா நாட்டில் பண்ணை வளர்ப்பு முறை ஆரம்பித்து, வருடம் $240மில்லியன்க்கு ஏற்றுமதி செய்வதை பார்த்து, முதலைகள் நிறைந்த அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், பெரிய எடுப்பில் பண்ணையினை ஆரம்பித்து விட்டார்கள்.

அழியக்கூடிய ஆபத்தில் உள்ள விலங்குகளை, காட்டில் அல்லது சூழலில் வேட்டை ஆடிக் கொள்வதை அரசு தடுக்கும்.

ஆனால் அதே விலங்கினை பண்ணை முறையில் உணவுக்காக ஒரு நிறுவனம் வளர்க்க அரசு அனுமதிக்கும். 

இது தேக்கு, சந்தன மரத்தை காட்டில் வெட்டுவதுக்கும், வீட்டில் வளர்த்து வெட்டுவதுக்கும் உள்ள வித்தியாசம் போன்றது.

இன்னும் தெளிவாக சொல்வதானால், வடலி வளர்த்து கள்ளு குடிப்பது போன்றது.

இந்த வீடியோவில் முதலை, தீக்கோழி காண்பிக்கப்படுகிறது. கென்யாவில் வளர்ப்பவர்கள், கவனக்குறைவால், உயிரிழந்த கதைகளும் உண்டு.

கென்யாவின் வெற்றியால், பல ஆப்பிரிக்க நாடுகளும், இந்த பண்ணைகளை உருவாக்குகின்றன. கோழி, ஆடு, மாடு.... இப்ப முதலை...

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Baby No No GIF - Baby No No Oops GIFs

நாதம்ஸ்.... இந்த இரண்டு இறைச்சியும்,
நம்ம வம்சத்திலேயே... சமைக்க மாட்டோம்.  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

Baby No No GIF - Baby No No Oops GIFs

நாதம்ஸ்.... இந்த இரண்டு இறைச்சியும்,
நம்ம வம்சத்திலேயே... சமைக்க மாட்டோம்.  😂

வன்னிபக்கத்திலை.... உடும்பு இறைச்சி.... தொங்குமான் இறைச்சி எண்டு ஒரு காலத்திலை பெரிய சங்கதிகள் எல்லாம் இருந்தது கேள்விப்படேலியோ...

அட... உந்த ஆமை இறைச்சி ஆவது?

என்ன சார் நீங்க.... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

Baby No No GIF - Baby No No Oops GIFs

நாதம்ஸ்.... இந்த இரண்டு இறைச்சியும்,
நம்ம வம்சத்திலேயே... சமைக்க மாட்டோம்.  😂

மானினிது, முயலுனிது என்பார்

மிளகிட்டு முதலை கறி உண்ணாதார்

- உடான்ஸ் சாமியார்-

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

வன்னிபக்கத்திலை.... உடும்பு இறைச்சி.... தொங்குமான் இறைச்சி எண்டு ஒரு காலத்திலை பெரிய சங்கதிகள் எல்லாம் இருந்தது கேள்விப்படேலியோ...

அட... உந்த ஆமை இறைச்சி ஆவது?

என்ன சார் நீங்க.... 😁

When My Crush Called Me Smile GIF - When My Crush Called Me Smile Laugh -  Discover & Share GIFs

மரை  வத்தல்....ஒரே ஒரு முறை சாப்பிட்டுள்ளேன்.
மற்றப் படி.... கோழி, ஆடு, மீன், நண்டு, இறால், சுறா  மட்டும்தான்.

தொங்குமான் என்றது... குரங்கு இறைச்சி என்று சொல்கிறார்கள். உண்மையா.   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவு வளர ஆமை 

தொய்வுக்கு தொங்குமான்

உரோமம் உதிர்ந்தால் உடும்பு

முட்டி தேய்ந்தால் முதலை

முழுவதும் முடிகையில்

 யானை

என்று பண்டைய தமிழ் மருத்துவ ஓலைச் சுவடியான பம்மா(ப)த்து பாயிரத்தில் எழுதி உள்ளதாக உடான்ஸ் சாமியார் கூறி உள்ளார்.

13 minutes ago, Nathamuni said:

வன்னிபக்கத்திலை.... உடும்பு இறைச்சி.... தொங்குமான் இறைச்சி எண்டு ஒரு காலத்திலை பெரிய சங்கதிகள் எல்லாம் இருந்தது கேள்விப்படேலியோ...

அட... உந்த ஆமை இறைச்சி ஆவது?

என்ன சார் நீங்க.... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

மானினிது, முயலுனிது என்பார்

மிளகிட்டு முதலை கறி உண்ணாதார்

- உடான்ஸ் சாமியார்-

Crocodile Slow Moving GIF - Crocodile Slow Moving Dangerous - Discover &  Share GIFs

உடான்ஸ் சாமியார்... சைவம் இல்லையா?
முதலையை கூட... விட்டு வைக்காமல் சாப்பிட்டு இருக்கிறார். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

Crocodile Slow Moving GIF - Crocodile Slow Moving Dangerous - Discover &  Share GIFs

உடான்ஸ் சாமியார்... சைவம் இல்லையா?
முதலையை கூட... விட்டு வைக்காமல் சாப்பிட்டு இருக்கிறார். 🤣

எந்த மாமிசத்திலும் மிமிளகை சேர்த்து விட்டால் அது சைவம் ஆகி விடும்.

உடான்சியம் கண்ணப்ப நாயனாரை வழி காட்டியாக ஏற்கிறது என்பதை கருதுக🤣

Edited by goshan_che
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

கென்யாவில் வளர்ப்பவர்கள், கவனக்குறைவால், உயிரிழந்த கதைகளும் உண்டு.

எல்லாம் சுழற்சி முறைதான். என்னை நீ தின்ன உன்னை நான் தின்ன.....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

எல்லாம் சுழற்சி முறைதான். என்னை நீ தின்ன உன்னை நான் தின்ன.....😁

அதிலை விசயம் என்னெண்டால்..... சுறா, முதலை..... கடிச்சுப் பார்ப்பினம்....

மனிச இறைச்சி நாறல் ரேஸ்டில..... சா..... உனக்கெண்டு மினக்கட்டனேஎண்டு விட்டுட்டு போயிடுவினம்....

தண்ணீல மூழ்கி அல்லது பயத்தில இதயம் நிண்டுதான் போறது.

ஆனால் உந்த மலைப்பாம்பு..... முழுசா விழுங்கி...... முடியாம.... வியித்து வலில துப்பிப் போட்டு போயிடும், உயிரில்லாமத் தான்.

ஆக..... மசாலா போடாம, நம்மள அதுகள் துண்ண ஏலாது போல தான் தெரியுது....

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மேலே, சீனாவில் முதலை இறைச்சி எப்படி விரும்பி தின்னப்படுகிறது என்று பார்த்தோம்.

இப்போது, பிலிபைன்ஸ் நாட்டில், எப்படி BBQ  செய்து சாப்பிடுகிறார்கள் என்று பார்ப்போமா?

பார்த்துப்போட்டு, எங்கையாவது, முதலை இறைச்சி பங்கு கிடைக்குமா என்று கேட்க்கிறேல்ல.... 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இப்போது, பிலிபைன்ஸ் நாட்டில், எப்படி BBQ  செய்து சாப்பிடுகிறார்கள் என்று பார்ப்போமா?

உடும்பு இறைச்சி சாப்பிடுற எங்களுக்கு முதலை இறைச்சி வெரி சிம்பிள் எண்டு நினைக்கிறன் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

மேலே, சீனாவில் முதலை இறைச்சி எப்படி விரும்பி தின்னப்படுகிறது என்று பார்த்தோம்.

இப்போது, பிலிபைன்ஸ் நாட்டில், எப்படி BBQ  செய்து சாப்பிடுகிறார்கள் என்று பார்ப்போமா?

பார்த்துப்போட்டு, எங்கையாவது, முதலை இறைச்சி பங்கு கிடைக்குமா என்று கேட்க்கிறேல்ல.... 

சிலோன் முறைப்படி…. முதலை இறைச்சியை சமைக்கிற குறிப்பு
உங்களிடம் இருந்தால் இணைத்து விடவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

சிலோன் முறைப்படி…. முதலை இறைச்சியை சமைக்கிற குறிப்பு
உங்களிடம் இருந்தால் இணைத்து விடவும்.

திவாகரனிடம் கேட்டுப் பார்த்தால் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

சிலோன் முறைப்படி…. முதலை இறைச்சியை சமைக்கிற குறிப்பு
உங்களிடம் இருந்தால் இணைத்து விடவும்.

சிலோனிலை முதலை கறி சமைக்கிறேல்ல.... ஆனால் ஒவொண்டுக்கும் வேற பெயரை வைத்து, சமைத்து சாப்பிட தருவினம் எண்ட படியாலை... விசாரித்து... தல்லாம்.. 😁

தொங்கு மான் இறைச்சி கறி... 
உடுப்புக்கறி 
ஆமைக்கறி 
பண்டி இறைச்சி - கட்டைகால் இறைச்சி.
மாட்டிறைச்சிக்கறிக்குள்ள பூனைக்கறி தமிழ் நாட்டில் பேமஸ்... 🤗

எல்லோருக்கும் சொல்லுறது தான். இலங்கை, இந்தியா பக்கம் போனால், உந்த இறைச்சி சாப்பாடுகள், றோட்டு ஓரமா வேணாம். சைவ சாப்பாடு எப்பவும் பாதுகாப்பு மிக்கது.

கட்டாயம் மச்சம் வேணுமெண்டால், கடலுணவு நல்லம். இறைச்சி தான் எண்டால், நம்பக்கூடிய பெரிய கடைகள் அல்லது, கடைக்கு போய் வாங்கி, பக்கத்தில நிண்டு சமைக்க வைத்து சாப்பிடுங்கோ... காசு கூடினாலும் பரவாயில்லை. 

நான், இணைத்த காணொளியில், முதலை, பண்டி.... அப்படியே செய்து தருகினம்... நிண்டு வாங்கி சாப்பிடலாம்... சுத்த ஏலாது கண்டியளே... 😜

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

சிலோன் முறைப்படி…. முதலை இறைச்சியை சமைக்கிற குறிப்பு
உங்களிடம் இருந்தால் இணைத்து விடவும்.

இது ஒண்டும் பெரிய சூத்திரமில்லை........உப்பும் மஞ்சளும் தூளும் போட்டு அவித்தால் எல்லா இறைச்சியும் ஒண்டுதான் ........ கோழி பண்டியை விட கொஞ்சம் கூட இதை அவியவிடவேண்டும்......அவ்வளவுதான்......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

இது ஒண்டும் பெரிய சூத்திரமில்லை........உப்பும் மஞ்சளும் தூளும் போட்டு அவித்தால் எல்லா இறைச்சியும் ஒண்டுதான் ........ கோழி பண்டியை விட கொஞ்சம் கூட இதை அவியவிடவேண்டும்......அவ்வளவுதான்......!  😂

நீங்கள் மச்சம் சாப்பிடேறல்ல தானே.... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

நீங்கள் மச்சம் சாப்பிடேறல்ல தானே.... 😁

ஆம் ......அது ஒரு 15/20 வருடங்களாக .......அதற்குமுன் நான் காட்டுக்குள் போனால் விலங்குகள் தெறித்து ஓடும்.....கடலில் நீந்தினால் மீன்கள் ஆழ்கடலுள் மூழ்கிவிடும்......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, suvy said:

ஆம் ......அது ஒரு 15/20 வருடங்களாக .......அதற்குமுன் நான் காட்டுக்குள் போனால் விலங்குகள் தெறித்து ஓடும்.....கடலில் நீந்தினால் மீன்கள் ஆழ்கடலுள் மூழ்கிவிடும்......!  😂

ஆ..... ஆகாசத்தில பறந்ததால, கோழி, காடை, கவுதாரி எல்லாம் பறப்பையே மறந்துட்டு.... நிலத்தில திரியுதாக்கும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Nathamuni said:

ஆ..... ஆகாசத்தில பறந்ததால, கோழி, காடை, கவுதாரி எல்லாம் பறப்பையே மறந்துட்டு.... நிலத்தில திரியுதாக்கும்.....

அதே.......அதே........!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, suvy said:

.உப்பும் மஞ்சளும் தூளும் போட்டு அவித்தால் எல்லா இறைச்சியும் ஒண்டுதான்

எங்களுக்கு உப்பு,தூள்,மஞ்சளை விட்டால் வேற வழி......??? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில்  ஆட்டின் எல்லா பகுதிகளையும், அரியண்டம் காட்டாமல், சமைக்க,  புசிக்கப்  பழகவும்.

அதன் பின் வேறு இறைச்சியை பற்றி பார்க்கலாம். 
 
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.