Jump to content

உலகளாவிய... உணவு நெருக்கடிக்கு, ரஷ்யாவே காரணம்: EU சபைத் தலைவரின் கருத்தால்... ரஷ்யாவின், ஐநா தூதர் வெளியேறினார்!

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

உலகளாவிய உணவு நெருக்கடிக்கு ரஷ்யாவே காரணம்: EU சபைத் தலைவரின் கருத்தால் ரஷ்யாவின் ஐநா தூதர் வெளியேறினார்!

உலகளாவிய... உணவு நெருக்கடிக்கு, ரஷ்யாவே காரணம்: EU சபைத் தலைவரின் கருத்தால்... ரஷ்யாவின், ஐநா தூதர் வெளியேறினார்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு உலகளாவிய உணவு நெருக்கடிக்கு காரணம் என்று ஐரோப்பிய சபையின் தலைவர் சார்லஸ் மைக்கேல் குற்றம் சாட்டியதை அடுத்து, ஐநா பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் இருந்து ரஷ்யாவின் ஐ.நா. தூதர் வசிலி நெபென்சியா வெளியேறினார்.

நியூயோர்க்கில் நடந்த பாதுகாப்பு சபைக் கூட்டத்தின் போது கருத்து தெரிவித்த ஐரோப்பிய சபையின் தலைவர் சார்லஸ் மைக்கேல்,

‘ரஷ்ய கூட்டமைப்பின் தூதர், நேர்மையாக இருக்கட்டும். வளரும் நாடுகளுக்கு எதிராக ரஷ்யா உணவுப் பொருட்களை ஒரு திருட்டு ஏவுகணையாகப் பயன்படுத்துகிறது.

ரஷ்யாவின் போரின் வியத்தகு விளைவுகள் உலகம் முழுவதும் பரவி வருகின்றன.இது உணவு விலைகளை உயர்த்துகிறது, மக்களை வறுமையில் தள்ளுகிறது மற்றும் முழு பிராந்தியங்களையும் சீர்குலைக்கிறது. இந்த உணவு நெருக்கடிக்கு ரஷ்யா மட்டுமே பொறுப்பு.

ரஷ்யாவால் அமுல்படுத்தப்பட்ட கடற்படை முற்றுகையின் காரணமாக உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் சிக்கிய மில்லியன் கணக்கான டன் தானியங்களை தானே பார்த்ததாக’ கூறினார்.

உக்ரைனின் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக ரஷ்யா தானியங்களைத் திருடி பயிர் நடவு மற்றும் அறுவடை செய்வதைத் தடுப்பதாகவும் மைக்கேல் குற்றம் சாட்டினார்.

இந்த கருத்துக்கள் நெபென்சியாவை வெளியேற்ற வழிவகுத்தது. அவர் வெளியேறும்போது, மைக்கேல் அவரிடம் நேரடியாக உரையாற்றினார்.

உக்ரைன் சமையல் எண்ணெய், சோளம் மற்றும் கோதுமை போன்ற தானியங்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது. ரஷ்யாவும் அதிக அளவு தானியங்கள் மற்றும் உரங்களை ஏற்றுமதி செய்கிறது. இந்த ஏற்றுமதி இல்லாததால் மாற்றுப் பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1285786

Link to comment
Share on other sites

 • Replies 55
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

1 hour ago, தமிழ் சிறி said:

இந்த உணவு நெருக்கடிக்கு ரஷ்யா மட்டுமே பொறுப்பு.

உருசியாவுக்கு எதிராக பாரிய பொருளாதாரத் தடை : ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி!!

திருநெல்வேலிக்கு அல்வா.🤫

திருப்பதிக்கே லட்டு. 🤔 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தனக்கு தனக்கு எண்டா சுளகு படக்கு படக்கு எண்டு அடிக்குமாம். 

ரசிய உர ஏற்றுமதிக்குத் தடை.  தானியங்களுக்குத் தடை. ஆனால் உக்ரேனியத் தானியங்களின் வருகை தடைப்பட்டதனால் ஐரோப்பிய சாதா மக்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்பையொட்டி அழுகை. 

இந்த வட அமெரிக்க, ஐரோப்பிய் அரசுகள் நீதியாக நடந்துகொண்டதாக வரலாறே இல்லை. 😏

Turkey to help unblock Ukraine grain – media

Moscow, Kiev, and Ankara have reportedly agreed on a maritime “grain corridor”

Ukrainian wheat may soon be headed to world markets once again, under a proposal that would involve Turkish ships demining the waters around Odessa and sharing escort duties with the Russian Navy, multiple outlets reported on Monday. The “grain corridor” could help with food shortages in a number of countries in Africa and the Middle East, including Turkey itself. 

According to Bloomberg, quoting Ukrainian President Volodymyr Zelensky, Kiev is negotiating with the UN on how to export the grain, and is skeptical of a “tentative” deal between Russia and Turkey.

UN Under-Secretary-General for Humanitarian Affairs Martin Griffiths arrived in Moscow on June 3, for talks about restoring the shipments of grain from the Black Sea ports, according to Reuters.

source; RT.com 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

ஆபிரிக்காவுக்கு  ரஸ்யா  கொடுக்க இருக்கும் தானியங்களை தடுக்கும் மேற்கு நாடுகளின் இரட்டை வேடத்தை உலகறியும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

“உலகளாவிய... உணவு நெருக்கடிக்கு, ரஷ்யாவே காரணம்: EU சபைத் தலைவரின் கருத்தால்... ரஷ்யாவின், ஐநா தூதர் வெளியேறினார்!“

EU சபைத் தலைவர் சரியாகக் கூறியுள்ளார். ரஸ்யா இந்த மானங்கெட்ட சபையில் இருந்து நிரந்தரமாக வெளியேறவேண்டும்.

 • Haha 1
Link to comment
Share on other sites

உக்ரேனிய துறைமுகங்களை மூடி வைத்திருப்பதே உலக தானிய நெருக்கடிக்கு காரணம்.

ரஸ்யா இந்த துறைமுகம்க்கள் மீது தாக்காமல் விட்டால், உக்ரேன் இந்த துறைமுகங்களை சுற்றி கடல்கண்ணிவெடிகளை புதைக்காமல் விட்டால் மட்டுமே இது சசாத்தியமாகும்.

அல்லது ஒரு யுத்த நிறுத்த உடன்படிக்கை.

இல்லாவிட்டால் மாறி மாறி சாட்டி கொண்டு இருக்க வேண்டியதுதான்.

உக்ரேனிய தானியங்கள் தரைமூலம் ஐரோப்பாவுக்கு கொண்டுவர வாய்பிருப்பதால் - ஆபிரிக்க, ஆசிய நாடுகளுக்குத்தான் இது பெரிய அடியாக இருக்க போகிறது.

Link to comment
Share on other sites

போரினால்  யுக்ரேனில் உள்ள உணவு அவர்களுக்கே போதுமானது. ஐரோப்பா  இப்போது உணவுக்காக  யுக்ரேனில் தங்கி உள்ளது என்பது நகைப்புக்கு இடமானது.
இரண்டு நாடுகளும் சண்டை பிடிப்பதற்கு ஊக்குவிப்பது. பிறகு அவர்களின் உணவுக்கு, எண்ணைக்கு, வாயுவுக்கு என தங்கி இருப்பது. அத்தோடு பொருளாதார தடை 6 ஆவது கட்டமாக.

என்ன ஐரோப்பியர்?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இந்தச் செய்திகள் நிலைமையினை விரிவாக புரிந்துகொள்ள உதவும் என்கின்ற அடிப்படையில்  இங்கே  இணைக்கப்படுகிறது. Russia vs Ukraine  என்கின்ற வகையில் பார்க்க வேண்டியதில்லை 

Sputniknews.com

2022/06/08

Lavrov: Russia Ready for Talks With UN, Turkey, Ukraine on Grain Deliveries

3 hours ago
Earlier on Wednesday, Turkish Defence Minister Hulusi Akar said that there is certain progress in the discussion between Moscow, Ankara, Kiev and the UN on unblocking Ukrainian grain exports in the Black Sea, thanks to stakeholders having the will to resolve the crisis. 
Russian Foreign Minister Sergey Lavrov has stated that Moscow is ready to hold negotiations with counterparts from the UN, Turkey and Ukraine on grain deliveries.
 
RT.Com

June 08, 2022

Ukraine to halt coal and gas exports

The fuels will be needed in the country during the “most difficult winter,” President Zelensky says
 
Ukraine to halt coal and gas exports

© Getty Images / Bloomberg Creative Photos 

Ukraine will not be exporting gas and coal to other countries, President Volodymyr Zelensky said on Tuesday. He warned that the country is facing the “most difficult” winter since its independence 30 years ago, due to the ongoing military conflict with Russia.

........contd.

நிலைமை இன்னும் மோசமடையப்போகிறது.

Edited by Kapithan
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

உக்ரேனிய துறைமுகங்களை மூடி வைத்திருப்பதே உலக தானிய நெருக்கடிக்கு காரணம்.

ரஸ்யா இந்த துறைமுகம்க்கள் மீது தாக்காமல் விட்டால், உக்ரேன் இந்த துறைமுகங்களை சுற்றி கடல்கண்ணிவெடிகளை புதைக்காமல் விட்டால் மட்டுமே இது சசாத்தியமாகும்.

அல்லது ஒரு யுத்த நிறுத்த உடன்படிக்கை.

இல்லாவிட்டால் மாறி மாறி சாட்டி கொண்டு இருக்க வேண்டியதுதான்.

உக்ரேனிய தானியங்கள் தரைமூலம் ஐரோப்பாவுக்கு கொண்டுவர வாய்பிருப்பதால் - ஆபிரிக்க, ஆசிய நாடுகளுக்குத்தான் இது பெரிய அடியாக இருக்க போகிறது.

உக்ரேனுக்கு எவ்வழியே நவீன ஆயுதங்கள் செல்கின்றனவோ அவ்வழியே தானியங்களையும் கொண்டு வரலாம் என்பது குமாரசாமியின் மாடல் கருத்து. :cool:

 • Like 2
 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Huge grain stockpile burned by Ukrainian nationalists – Moscow

Russia says a large granary in the port of Mariupol has been deliberately destroyed

Ukrainian troops set fire to tons of grain in the storages of the port of Mariupol. ©

Sputnik / RIA News 

The Russian Defense Ministry has accused Ukrainian “militants of the nationalist battalions”of deliberately setting fire to a large granary in Mariupol’s sea port while fleeing from Russian forces.

According to a statement, issued on Wednesday, the alleged act of arson was down to the unwillingness of the “militants” to leave grain supplies to Mariupol’s residents. As a result, according to the military, more than 50 thousand tons of grain were destroyed.

Edited by Kapithan
Link to comment
Share on other sites

கருங்கடலில் ஒடேசா துறைமுகம் அருகே உள்ள கண்ணி வெடிகளை  யூக்ரேன் அகற்ற வேண்டும். அப்போது தான் உணவு தானிய ஏற்றுமதி தொடரும்.----ரஸ்யா.

Link to comment
Share on other sites

9 hours ago, குமாரசாமி said:

உக்ரேனுக்கு எவ்வழியே நவீன ஆயுதங்கள் செல்கின்றனவோ அவ்வழியே தானியங்களையும் கொண்டு வரலாம் என்பது குமாரசாமியின் மாடல் கருத்து. :cool:

நிச்சயமாக.

உங்கள் இந்த கொமெண்டுக்கு நகைப்புகுறி போட்டவர்களுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன் 🤣 - demand இருக்கும், விலை தரகூடிய இடத்துக்கு, பொருள் வெள்ளம் மேட்டில் இருந்து பள்ளத்துக்கு ஓடுவது போல் ஓடியே தீரும். இதுதான் சந்தை பொருளாதாரத்தின் அடிப்படை.

ஆயுதம் போகும் வழியில் உக்ரேனுக்கு மிஞ்சிய தானியம் ஐரொப்பாவிற்கு வரும் என்பது வெள்ளிடைமலை.

ஆனால் கருங்கடலில் இருந்து தானியம் போகாவிட்டால் - அதை ஜேர்மனிக்கு எடுப்பித்து, பின்னர் ஹம்பேர்க் ஊடாக தமக்கு எடுக்கும் கூலிச்சுமையை வறிய நாடுகள் தாங்குவது கடினம்.

இப்படி வறிய நாடுகள் வாங்காது போனால் - ஆபிரிக்காவில் தானிய பஞ்சம் வர, உக்ரேன், ஐரோப்பாவில் தானியம் தேங்குவதால் தானிய விலை குறையும் ஒரு முரண் நிலை கூட ஏற்படலாம்.

1 hour ago, nunavilan said:

கருங்கடலில் ஒடேசா துறைமுகம் அருகே உள்ள கண்ணி வெடிகளை  யூக்ரேன் அகற்ற வேண்டும். அப்போது தான் உணவு தானிய ஏற்றுமதி தொடரும்.----ரஸ்யா.

ஒடிசாவை கைப்பறும் இராணுவ முஸ்தீபுகளை ரஸ்யா கைவிட்டு, அந்த கடல் பிரதேசத்தில் இருந்து தன் கப்பல்களை விலக்கி கொள்ளல் வேண்டும். ஒடிசாவை தாக்கமாட்டோம் என ஒரு யுத்த சூனிய பகுதியை அறிவிக்க வேண்டும்.

அப்போ சர்வதேச மத்தியஸ்தில், பாதுகாப்போடு (துருக்கி நேவி) கண்ணிகள் அகற்றப்பட்டு கப்பல்கள் போய்வரலாம்.

ஆபிரிக்காவுக்கு வன்னியில் இருந்து முகமாலை ஊடாக உணவு போக வேண்டும் என வைப்போம். உணவு போக வேண்டும் என்பதற்காக முகமாலை முன்னரங்கில் கண்ணி வெடிகளை அகற்றி, தமது பாதுகாப்பை புலிகள் காள்விகுறியாக்க வேண்டும் என யாராவது கேட்டால் நாம் என்ன சொல்லி இருப்போம் ?

யுத்தம் எண்டு வந்தால் அவனவனுக்கு தன் பாதுகாப்புத்தான் பிரதானமாக இருக்கும்.

 • Like 3
Link to comment
Share on other sites

9 hours ago, Kapithan said:

இந்தச் செய்திகள் நிலைமையினை விரிவாக புரிந்துகொள்ள உதவும் என்கின்ற அடிப்படையில்  இங்கே  இணைக்கப்படுகிறது. Russia vs Ukraine  என்கின்ற வகையில் பார்க்க வேண்டியதில்லை 

Sputniknews.com

2022/06/08

Lavrov: Russia Ready for Talks With UN, Turkey, Ukraine on Grain Deliveries

3 hours ago
Earlier on Wednesday, Turkish Defence Minister Hulusi Akar said that there is certain progress in the discussion between Moscow, Ankara, Kiev and the UN on unblocking Ukrainian grain exports in the Black Sea, thanks to stakeholders having the will to resolve the crisis. 
Russian Foreign Minister Sergey Lavrov has stated that Moscow is ready to hold negotiations with counterparts from the UN, Turkey and Ukraine on grain deliveries.
 
RT.Com

June 08, 2022

Ukraine to halt coal and gas exports

The fuels will be needed in the country during the “most difficult winter,” President Zelensky says
 
Ukraine to halt coal and gas exports

© Getty Images / Bloomberg Creative Photos 

Ukraine will not be exporting gas and coal to other countries, President Volodymyr Zelensky said on Tuesday. He warned that the country is facing the “most difficult” winter since its independence 30 years ago, due to the ongoing military conflict with Russia.

........contd.

நிலைமை இன்னும் மோசமடையப்போகிறது.

8 hours ago, Kapithan said:

Huge grain stockpile burned by Ukrainian nationalists – Moscow

Russia says a large granary in the port of Mariupol has been deliberately destroyed

Ukrainian troops set fire to tons of grain in the storages of the port of Mariupol. ©

Sputnik / RIA News 

The Russian Defense Ministry has accused Ukrainian “militants of the nationalist battalions”of deliberately setting fire to a large granary in Mariupol’s sea port while fleeing from Russian forces.

According to a statement, issued on Wednesday, the alleged act of arson was down to the unwillingness of the “militants” to leave grain supplies to Mariupol’s residents. As a result, according to the military, more than 50 thousand tons of grain were destroyed.

இணைப்பதும், இணைக்காததும் உங்கள் இஸ்டம் கற்பிதன் ஆனால், என்னை பொறுத்தவரை Republican Party சம்பந்தமாக Fox செய்திகளை நம்புவதும், மேற்கின் நலன் சம்பந்தபட்டதில் பிபிசி, சி என் என்  எனபனவற்றை நம்புவதும், புலிகள் சம்பந்தமான விமர்சனம் யாழில் இருக்கும் என நம்புவதும், இலங்கை படைகளை லங்காபுவத் விமர்சிக்கும் என நம்புவதும், ஸ்புட்னிக், ஆர் டி யை ரஸ்யா விடயத்தில் நம்புவதும் ஒன்றுதான்.

Truth is the first casualty of war. 

இது இந்த யுத்தத்தில் இரு பகுதி சார்பு ஊடகங்களுக்கும் பொருந்தும். 

 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 hours ago, குமாரசாமி said:

உக்ரேனுக்கு எவ்வழியே நவீன ஆயுதங்கள் செல்கின்றனவோ அவ்வழியே தானியங்களையும் கொண்டு வரலாம் என்பது குமாரசாமியின் மாடல் கருத்து. :cool:

தரமான கருத்து.

உக்கிரேன், இரஸ்சிய போர் ஆரம்பித்த போது உக்கிரேன் நேட்டோவில் சேர்ந்துவிடும் என்று இரஸ்சியா குற்றஞ்சாட்ட, உக்கிரேன் தன்னை நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைக்கவேண்டும் என கேட்டது.

மேற்கு நாடுகள் உக்கிரேனை நேட்டோவில் இணைத்திருந்தால் அப்போதே போர் முடிவுக்கு வந்திருக்கும், ஆனால்  மேற்கு திட்டவட்டமாகக்கூறிவிட்டது உக்கிரேனை நேட்டோவில் இணைப்பதில்லை என்று (ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைக்க மாட்டார்கள்).

இப்போது இரஸ்சியாவிற்கும் உக்கிரேனுக்கும் தெரியும் உக்கிரேனை மேற்கு நேட்டோவில் இணைக்காது என்று.

பின் எதனால் தொடர்ந்து இரஸ்சியா உக்கிரேனை தாக்குகிறது?

நேட்டோவில்தான் சேர முடியாது என தெரிந்த பின் சமாதானமாக உக்கிரேன் செல்லாமல், முன்பு போல் நேட்டோவில் தன்னை சேர்க்குமாறு கேளாமல், ஆயுதங்கள் தாருங்கள் சண்டை போட என ஏன் உக்கிரேன் வினவுகிறது?

இரஸ்சியா, உக்கிரேன் நோக்கம்தான் என்ன?

மேற்கு, உக்கிரேனை நேட்டோவில் இணைத்து ஒரு சிறிய முடிவின் மூலம் போரை முடிவுக்கு கொண்டுவரலாம்தானே? ஏன் அதனை செய்யாமல் போரை ஊக்கிவித்து, அழிவுக்கு வழிகோள்கிறது?

Edited by vasee
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இணைப்பதும், இணைக்காததும் உங்கள் இஸ்டம் கற்பிதன் ஆனால், என்னை பொறுத்தவரை Republican Party சம்பந்தமாக Fox செய்திகளை நம்புவதும், மேற்கின் நலன் சம்பந்தபட்டதில் பிபிசி, சி என் என்  எனபனவற்றை நம்புவதும், புலிகள் சம்பந்தமான விமர்சனம் யாழில் இருக்கும் என நம்புவதும், இலங்கை படைகளை லங்காபுவத் விமர்சிக்கும் என நம்புவதும், ஸ்புட்னிக், ஆர் டி யை ரஸ்யா விடயத்தில் நம்புவதும் ஒன்றுதான்.

Truth is the first casualty of war. 

இது இந்த யுத்தத்தில் இரு பகுதி சார்பு ஊடகங்களுக்கும் பொருந்தும். 

இந்தக் காரணங்களுக்காகத்தான் 

இந்தச் செய்திகள் நிலைமையினை விரிவாக புரிந்துகொள்ள உதவும் என்கின்ற அடிப்படையில்  இங்கே  இணைக்கப்படுகிறது. Russia vs Ukraine  என்கின்ற வகையில் பார்க்க வேண்டியதில்லை 

என ஆரம்பத்திலே பதிவிட்டிருந்தேன்.

யாழ் களத்தில் மிகப் பெரும்பாலும் ஒரு பக்கச் சார்பான செய்திகள் மட்டுமே  இணைக்கப்பட்டு வருகின்றன. எனது ஒரே நோக்கம் யாழ் களத்தினருக்கு பல பக்க செய்திகளும் சேர வேண்டும்  என்பதே. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, vasee said:

தரமான கருத்து.

உக்கிரேன், இரஸ்சிய போர் ஆரம்பித்த போது உக்கிரேன் நேட்டோவில் சேர்ந்துவிடும் என்று இரஸ்சியா குற்றஞ்சாட்ட, உக்கிரேன் தன்னை நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைக்கவேண்டும் என கேட்டது.

மேற்கு நாடுகள் உக்கிரேனை நேட்டோவில் இணைத்திருந்தால் அப்போதே போர் முடிவுக்கு வந்திருக்கும், ஆனால்  மேற்கு திட்டவட்டமாகக்கூறிவிட்டது உக்கிரேனை நேட்டோவில் இணைப்பதில்லை என்று (ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைக்க மாட்டார்கள்).

இப்போது இரஸ்சியாவிற்கும் உக்கிரேனுக்கும் தெரியும் உக்கிரேனை மேற்கு நேட்டோவில் இணைக்காது என்று.

பின் எதனால் தொடர்ந்து இரஸ்சியா உக்கிரேனை தாக்குகிறது?

நேட்டோவில்தான் சேர முடியாது என தெரிந்த பின் சமாதானமாக உக்கிரேன் செல்லாமல், முன்பு போல் நேட்டோவில் தன்னை சேர்க்குமாறு கேளாமல், ஆயுதங்கள் தாருங்கள் சண்டை போட என ஏன் உக்கிரேன் வினவுகிறது?

இரஸ்சியா, உக்கிரேன் நோக்கம்தான் என்ன?

மேற்கு, உக்கிரேனை நேட்டோவில் இணைத்து ஒரு சிறிய முடிவின் மூலம் போரை முடிவுக்கு கொண்டுவரலாம்தானே? ஏன் அதனை செய்யாமல் போரை ஊக்கிவித்து, அழிவுக்கு வழிகோள்கிறது?

அயலவர்கள் அடிபடும்போது சமரச் செய்யாமல், ( ஒருவனுக்குச் சார்பாக)தானும் சண்டை பிடிக்காமல், ஒரு அயலவனுக்கு மட்டும் தடி எடுத்துக் கொடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும் ? 

ஒரு அயலவன் நன்றாக அடி வேண்டிச் சாக வேண்டும் (பழைய கோபம்). மற்றவன் சிறைக்குப் போனாலும்( தடி எடுத்துக் கொடுப்பவனுக்கு) எந்த அக்கறையும் இல்லை என்பதாகத்தானே   இருக்க முடியும். 

Link to comment
Share on other sites

45 minutes ago, vasee said:

உக்கிரேன், இரஸ்சிய போர் ஆரம்பித்த போது உக்கிரேன் நேட்டோவில் சேர்ந்துவிடும் என்று இரஸ்சியா குற்றஞ்சாட்ட, உக்கிரேன் தன்னை நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைக்கவேண்டும் என கேட்டது.

ரஸ்யாவை பலவீனமாக்க வேண்டும். அதற்கு நேரடியாக மோதாமல் யூக்ரேனை வைத்து அடிப்பிக்கிறது நேட்டோ. சீனாவுக்கு பாடம் படிப்பிக்க அவரது நண்பரான ரஸ்யாவை பலவீனமாக்க வேண்டும். பின்னர் சீனாவை தாக்குவது சுலபம் என்பதே அமெரிக்காவின் திட்டம். திட்டம் அரைக்கிணறு தாண்டி உள்ளது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

https://www.aninews.in/news/world/europe/ukrainian-troops-set-tonnes-of-wheat-corn-on-fire-when-leaving-mariupol-dpr20220606114640/

மரியபோலை விட்டு வெளியேறும் போது  யூக்ரேனிய படை தொன் கணக்கிலான கோதுமை, சோழத்தினை தீயிட்டு கொழுத்தினர். டொன்பாசில் உள்ள ரஸ்யர்களுக்கு சேரக்கூடாது என்ற கெட்ட எண்ணம்.

Link to comment
Share on other sites

53 minutes ago, vasee said:

மேற்கு நாடுகள் உக்கிரேனை நேட்டோவில் இணைத்திருந்தால் அப்போதே போர் முடிவுக்கு வந்திருக்கும்,

இது ஒரு போதும் நடவாது. இதை கணிக்க தவறியதுதான் புட்டின் விட்ட மிக பெரும் பிழை.

அல்லது நேட்டோவில் ஒரு போதும் உக்ரேன் சேர்க்கப்படாது என தெரிந்து கொண்டே, அதை ஒரு சாட்டாக கொண்டு புட்டின் போரை தொடங்கி உள்ளார்.

போர் தொடங்க முன்பே நேட்டோவில் சேர சில வருடங்களுக்கு முன் உக்ரேன் போட்ட விண்ணப்பம் நிராகரிக்கபட்டுள்ளது.

ஒரு நாடு நேட்டோ அங்கத்தவராக ஒவ்வொரு நாட்டின் பாராளுமன்றமும் அங்கீகாரம் கொடுக்க வேண்டும். 

உக்ரேனுக்காக தமது வீரர்களை சாக கொடுக்க யூகே, ஜேர்மனி, குறிப்பாக துருக்கி, ஹங்கேரி விடாது.

அதுவும் கூட, உக்ரேன் அங்கத்துவ விண்ணப்பத்தை போடும் வரை ஏன் புட்டின் பொறுக்கவில்லை?

இப்போ பின்லாந்து, சுபீடன் போட்ட பின் கூட சும்மா இருக்க நிர்பந்திக்க பட்டுள்ள புட்டின், ஏன் உக்ரேன் விண்ணப்பம் போடும் வரைக்குமாவது பொறுக்கவில்லை?

1 hour ago, vasee said:

இப்போது இரஸ்சியாவிற்கும் உக்கிரேனுக்கும் தெரியும் உக்கிரேனை மேற்கு நேட்டோவில் இணைக்காது என்று.

பின் எதனால் தொடர்ந்து இரஸ்சியா உக்கிரேனை தாக்குகிறது?

மிக சரியான கேள்வி. போரை தொடங்க புட்டின் சொன்னது இரெண்டு காரணம்தான்.

1. உக்ரேன் நேட்டோவில் சேரல்

2. மரியோபோலில் இருக்கும் அச்சோவ் பிரிகேட் போல நாசிகள் உக்ரேனில் உள்ளார்கள்.

நேட்டோவில் சேராது என உக்ரேன் சொல்லி விட்டது. ஆடிப் பிரிகேட் அழிக்கப்பட்டு, சரணடைந்து விட்டது. 

ஆகவே இனியும் உக்ரேனில் ரஸ்யபடைகளை வைத்திருக்காது, ரஸ்ய 2022 பெப்ரவரி எல்லைக்கு நகர்த்தினால் - நாளைக்கே போர் நிண்டு விடுமே?

இதை தடுப்பது என்ன? 

ரஸ்யா ஆரம்பத்தில் சொன்ன காரணங்கள் இப்போ இல்லை எனும் போது, அமெரிக்கா, செவ்வாஉ கிரகம் என யாரையும் குற்றம் சொல்லாமல் - போரை முடிவுக்கு கொண்டு வர ரஸ்யாவால் முடியும்.

ஆனால் செய்ய வில்லை.

ஏன்?

காரணம் மேலே சொன்னவை அல்ல ரஸ்யா போரை தொடங்க காரணங்கள்.

புட்டின் என்ற தனி மனிதனின் ஈகோ, ரஸ்யா 1990 இல் இழந்த ஆளுமையை மீட்டல், மீளவும் ஐரோப்பாவில் ஒரு ரஸ்ய-நோக்கு சுற்றை உருவாக்கல், நேட்டோவின்/அமெரிகாவின் ஆளுமையை ஐரோப்பாவில் தடுத்தல் - ஐரோப்பாவில் மிகுதி நாடுகள் எல்லாம் மதிக்கும்/பயப்படும் சக்தியாக ரஸ்யாவை ஆக்கல்.

இந்த நீண்ட கால நோக்கோடு முழு உக்ரேனையிம் பிடிப்பதுதான் ரஸ்யாவின் திட்டம்.

ஆகவேதான் படைகள் வடக்கே இருந்து கீவ் நோக்கி நகர்ந்தன. இதை உணர்ந்து கொண்டு (ஆட்சியும் வேறு என்பதால்) - சிரியா, லிபியா, ஒசேசியா, கிரிமியாவில் இருந்ததை போல, இருக்காமல் அமெரிக்கா முழு மூச்சாக இந்த முறை இறங்கியது.

இங்கே நடப்பது அடுத்த சில பத்து வருடங்களுக்கான உலக ஒழுங்கு பற்றிய சண்டை.

ஆகவேதான் சில நிலைகளை எட்டும் வரை ரஸ்யாவும் நிப்பாட்டாது, மேற்கும் சப்ளையை நிப்பாட்டாது.

48 minutes ago, Kapithan said:

யாழ் களத்தில் மிகப் பெரும்பாலும் ஒரு பக்கச் சார்பான செய்திகள் மட்டுமே  இணைக்கப்பட்டு வருகின்றன. எனது ஒரே நோக்கம் யாழ் களத்தினருக்கு பல பக்க செய்திகளும் சேர வேண்டும்  என்பதே. 

தனிப்பட்டு நான் யாழ் களத்தில் இந்த போர் பற்றிய செய்திகளை இணைப்பதில்லை. 

ஆனால் - ஒரு பக்க பிரச்சாரத்தை இணைப்பதால், மற்ற பக்க பிரச்சாரத்தையும் இணைக்கிறேன் - இரெண்டு பொய்யையும் வாசித்து மக்கள் உண்மையை அறியட்டும் என்பதில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை.

Link to comment
Share on other sites

இன்னொன்றையும் நீங்கள் பார்க்க வேண்டும். 

என்னதான் ஒரு அஜண்டாவோடு இயங்கும் தளம் எண்டாலும் யாழுக்கும், இலங்கை ஆமியின் வெப்சைட்டிற்கும் ஒரு வித்தியாசம் நம்பகதன்மையில் இருக்கிறது.

அதே போல் ஒரு வித்தியாசம் பி பி சி/ சி என் என் ற்கும் ஸ்புட்னிக், ஆர் டி க்கும் இருப்பதாக நான் கருதுகிறேன்.

வேணும் எண்டால் ஆர் டி, ஸ்புட்னிக்கை ரூபர்ட் மேர்டொக்கின் டீவி, பத்திரிகைகளுடன் ஒப்பிடலாம்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

இது ஒரு போதும் நடவாது. இதை கணிக்க தவறியதுதான் புட்டின் விட்ட மிக பெரும் பிழை.

அல்லது நேட்டோவில் ஒரு போதும் உக்ரேன் சேர்க்கப்படாது என தெரிந்து கொண்டே, அதை ஒரு சாட்டாக கொண்டு புட்டின் போரை தொடங்கி உள்ளார்.

போர் தொடங்க முன்பே நேட்டோவில் சேர சில வருடங்களுக்கு முன் உக்ரேன் போட்ட விண்ணப்பம் நிராகரிக்கபட்டுள்ளது.

ஒரு நாடு நேட்டோ அங்கத்தவராக ஒவ்வொரு நாட்டின் பாராளுமன்றமும் அங்கீகாரம் கொடுக்க வேண்டும். 

உக்ரேனுக்காக தமது வீரர்களை சாக கொடுக்க யூகே, ஜேர்மனி, குறிப்பாக துருக்கி, ஹங்கேரி விடாது.

அதுவும் கூட, உக்ரேன் அங்கத்துவ விண்ணப்பத்தை போடும் வரை ஏன் புட்டின் பொறுக்கவில்லை?

இப்போ பின்லாந்து, சுபீடன் போட்ட பின் கூட சும்மா இருக்க நிர்பந்திக்க பட்டுள்ள புட்டின், ஏன் உக்ரேன் விண்ணப்பம் போடும் வரைக்குமாவது பொறுக்கவில்லை?

மிக சரியான கேள்வி. போரை தொடங்க புட்டின் சொன்னது இரெண்டு காரணம்தான்.

1. உக்ரேன் நேட்டோவில் சேரல்

2. மரியோபோலில் இருக்கும் அச்சோவ் பிரிகேட் போல நாசிகள் உக்ரேனில் உள்ளார்கள்.

நேட்டோவில் சேராது என உக்ரேன் சொல்லி விட்டது. ஆடிப் பிரிகேட் அழிக்கப்பட்டு, சரணடைந்து விட்டது. 

ஆகவே இனியும் உக்ரேனில் ரஸ்யபடைகளை வைத்திருக்காது, ரஸ்ய 2022 பெப்ரவரி எல்லைக்கு நகர்த்தினால் - நாளைக்கே போர் நிண்டு விடுமே?

இதை தடுப்பது என்ன? 

ரஸ்யா ஆரம்பத்தில் சொன்ன காரணங்கள் இப்போ இல்லை எனும் போது, அமெரிக்கா, செவ்வாஉ கிரகம் என யாரையும் குற்றம் சொல்லாமல் - போரை முடிவுக்கு கொண்டு வர ரஸ்யாவால் முடியும்.

ஆனால் செய்ய வில்லை.

ஏன்?

காரணம் மேலே சொன்னவை அல்ல ரஸ்யா போரை தொடங்க காரணங்கள்.

புட்டின் என்ற தனி மனிதனின் ஈகோ, ரஸ்யா 1990 இல் இழந்த ஆளுமையை மீட்டல், மீளவும் ஐரோப்பாவில் ஒரு ரஸ்ய-நோக்கு சுற்றை உருவாக்கல், நேட்டோவின்/அமெரிகாவின் ஆளுமையை ஐரோப்பாவில் தடுத்தல் - ஐரோப்பாவில் மிகுதி நாடுகள் எல்லாம் மதிக்கும்/பயப்படும் சக்தியாக ரஸ்யாவை ஆக்கல்.

இந்த நீண்ட கால நோக்கோடு முழு உக்ரேனையிம் பிடிப்பதுதான் ரஸ்யாவின் திட்டம்.

ஆகவேதான் படைகள் வடக்கே இருந்து கீவ் நோக்கி நகர்ந்தன. இதை உணர்ந்து கொண்டு (ஆட்சியும் வேறு என்பதால்) - சிரியா, லிபியா, ஒசேசியா, கிரிமியாவில் இருந்ததை போல, இருக்காமல் அமெரிக்கா முழு மூச்சாக இந்த முறை இறங்கியது.

இங்கே நடப்பது அடுத்த சில பத்து வருடங்களுக்கான உலக ஒழுங்கு பற்றிய சண்டை.

ஆகவேதான் சில நிலைகளை எட்டும் வரை ரஸ்யாவும் நிப்பாட்டாது, மேற்கும் சப்ளையை நிப்பாட்டாது.

தனிப்பட்டு நான் யாழ் களத்தில் இந்த போர் பற்றிய செய்திகளை இணைப்பதில்லை. 

ஆனால் - ஒரு பக்க பிரச்சாரத்தை இணைப்பதால், மற்ற பக்க பிரச்சாரத்தையும் இணைக்கிறேன் - இரெண்டு பொய்யையும் வாசித்து மக்கள் உண்மையை அறியட்டும் என்பதில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை.

2014 ல் இருந்து அமெரிக்கா யூக்ரேனிய படையினருக்கு ஏன் பயிற்சி அளித்தார்கள்?? 

Quote

நாலு செய்தியை வாசித்தால் தான் உண்மை தெரிய வரும். 

Link to comment
Share on other sites

Posted (edited)
45 minutes ago, nunavilan said:

ரஸ்யாவை பலவீனமாக்க வேண்டும். அதற்கு நேரடியாக மோதாமல் யூக்ரேனை வைத்து அடிப்பிக்கிறது நேட்டோ. சீனாவுக்கு பாடம் படிப்பிக்க அவரது நண்பரான ரஸ்யாவை பலவீனமாக்க வேண்டும். பின்னர் சீனாவை தாக்குவது சுலபம் என்பதே அமெரிக்காவின் திட்டம். திட்டம் அரைக்கிணறு தாண்டி உள்ளது.

நிச்சயமாக. 

அமெரிக்கா இன்று ஒற்றை உலக சக்தியாக இருக்கிறது என்றால் அது சும்மா இருக்க கடவுள் கொடுத்ததல்ல. இதன் பின்னால் பல போர்கள், இராதப்திரங்கள், கழுத்தறுப்புகள் எல்லாம் இருக்கிறது.

அமெரிக்கா மட்டும் அல்ல, உலகை கட்டி ஆண்ட, அல்லது ஆள முயன்ற எல்லா சாம்ராஜ்யங்ஜளும், அவர்ற்றிக்கு போட்டியாக வந்த நாடுகளும் காலாகாலமாக செய்வதுதான் இது.

8 minutes ago, kalyani said:

2014 ல் இருந்து அமெரிக்கா யூக்ரேனிய படையினருக்கு ஏன் பயிற்சி அளித்தார்கள்?? 

க்ரிமியாவை ரஸ்யா பிட்த்தபோதே அடுத்த நகர்வுகளை அமெரிகா யோசிக்க தொடங்கி இருக்கும்.

ஆனால் பயிற்சி இந்தியா, ஜப்பான், இலங்கைக்கும் கூடத்தான் கொடுக்கிறார்கள். அதை வைத்து நேட்டோவில் சேர்ந்திருக்கும் என கூற முடியாது. ஆனால் கிரைமியாவின் பின், உக்ரேனின் மீதான அமெரிக்க பார்வை திரும்பியது எதிர்பார்க்க கூடியதுதான்.

19 minutes ago, kalyani said:

மரியபோலை விட்டு வெளியேறும் போது  யூக்ரேனிய படை தொன் கணக்கிலான கோதுமை, சோழத்தினை தீயிட்டு கொழுத்தினர். டொன்பாசில் உள்ள ரஸ்யர்களுக்கு சேரக்கூடாது என்ற கெட்ட எண்ணம்.

யாழ் இடப்பெயர்வின் போது தம் வசம் இருந்த கொண்டு செல்ல முடியாத பொருளாதார வளங்களை, உணவை எல்லாம் புலிகளும் மக்களும் “பாவம் ஆமிக்காரர் பசிச்சால் சாப்பிடட்டுடும்” என்ற நல்லெண்ணத்தில் அப்படியே விட்டு போயிருப்பார்கள் என்றா எண்ணுகிறீர்கள்?

Edited by goshan_che
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேன் போரால் உலக அளவில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம்: உலக வர்த்தக அமைப்பு எச்சரிக்கை

 • டாம் எஸ்பினெர்
 • வணிக செய்தியாளர், பிபிசி செய்திகள்
3 மணி நேரங்களுக்கு முன்னர்
 
உணவு நெருக்கடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

யுக்ரேன் போரால் தொடங்கிய உணவு நெருக்கடி பல ஆண்டுகளுக்கு நீடிக்கலாம் என, உலக வர்த்தக மையத்தின் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, கோதுமை மற்றும் உரங்கள் பற்றாக்குறையால் ஆப்பிரிக்க நாடுகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என, உலக வர்த்தக அமைப்பு தலைமை இயக்குனர் எங்கோசி ஒகொன்ஜோ-இவேலா பிபிசியிடம் தெரிவித்தார்.

லட்சக்கணக்கிலான டன்கள் அளவுக்கு தானியங்கள் சேமிப்புக் கிடங்களில் கிடத்தப்பட்டுள்ளன. அவை போர் காரணமாக யுக்ரேன் துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தானியங்களின் விலை உயர்வது "உண்மையில் வேதனைக்குரியது" என அவர் தெரிவித்தார்.

கோதுமை விலை உயர்வு

உலகளவில் கோதுமையை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக யுக்ரேன் உள்ளது. உலக சந்தையில் யுக்ரேனின் கோதுமை ஏற்றுமதி 9 சதவீதமாக உள்ளது. மேலும் அந்நாட்டின் சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதி 42 சதவீதம் என்ற அளவிலும் சோளம் ஏற்றுமதி 16% என்ற அளவிலும் இருக்கிறது.

தானிய விலைகள் உலக அளவில் உயர்ந்துவரும் நிலையில், கருங்கடல் துறைமுகங்களில் ரஷ்ய தடையாலும், கடற்கரையில் ரஷ்ய, யுக்ரேனிய கண்ணிவெடிகளாலும் யுக்ரேனில் 20 முதல் 25 மில்லியன் டன் கோதுமையை வெளியே அனுப்பமுடியாத நிலை உருவாகியுள்ளது.

கோதுமை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கோதுமை விலை 59 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், சூரியகாந்தி எண்ணெய் விலை 30 சதவீதம், சோளத்தின் விலை 23 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் ஒகொன்ஜோ-இவேலா தெரிவித்தார்.

ஒடேசா மற்றும் மற்ற யுக்ரேனிய துறைமுகங்களிலிருந்து வெளியேறும் டேங்கர்களுக்காக, துருக்கிய கடற்படை துணையுடன் "தானிய வழித்தடத்தை' அமைப்பதற்கான முயற்சிகளை ஐ.நா மேற்கொண்டு வருகிறது.

ஆனால், கருங்கடலில் உள்ள யுக்ரேனிய துறைமுகங்களில் உள்ள கண்ணிவெடிகளை அந்நாடு அகற்ற வேண்டும் என, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜெய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

"யுக்ரேனிய துறைமுகங்களிலிருந்து வெளியேறி துருக்கிக்கு செல்லும் கப்பல்களின் பாதுகாப்புக்கு உறுதியளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என, தினமும் கூறுகிறோம். துருக்கியின் ஒத்துழைப்புடன் இதனை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்," என, அவர் புதன்கிழமை தெரிவித்தார்.

இதனிடையே, கப்பல்களை அனுப்புவதற்கு முன்னர் "பயனுள்ள பாதுகாப்பு உத்தரவாதங்கள்" தங்களுக்கு தேவை என யுக்ரேன் தெரிவித்துள்ளது. கடலிலிருந்து ஒடேசாவைத் தாக்குவதற்கு அவ்வழித்தடத்தை ரஷ்யா பயன்படுத்தலாம் என யுக்ரேன் குரல் எழுப்பியுள்ளது.

பகுப்பாய்வு - தர்ஷினி டேவிட், உலக வர்த்தக செய்தியாளர்

400 மில்லியன் பேருக்கு உணவளிக்கும் வகையில் யுக்ரேன் தானியங்களை உற்பத்தி செய்கிறது. ஆனால், துறைமுகங்களுக்கான தடை காரணமாக அவற்றின் ஏற்றுமதியை வெகுவாக குறைத்திருப்பதாக ரஷ்யா மீது குற்றம்சாட்டப்படுகிறது.

மத்திய கிழக்கில் உள்ள சில நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா இந்த பற்றாக்குறையை உணர்வதாக உள்ளன.

லிபியா, எரித்ரியா ஆகிய நாடுகள் 40% கோதுமையையும் லெபனான் 60% கோதுமையையும் யுக்ரேனிடமிருந்து பெறுகின்றன.

ஆனால், இந்த பற்றாக்குறையின் வலி உலகம் முழுவதும் உணரக்கூடியதாக உள்ளது. ரஷ்ய படையெடுப்புக்குப் பின் கோதுமை விலை மூன்றில் ஒரு பங்கு உயர்ந்துள்ளது.

இதனை உடனடியாக சரிசெய்ய முடியாது. வழித்தடம் அமைப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் போதுமான கப்பல்கள் இருந்தாலும், அவை பாதுகாப்பாக வெளியேற கருங்கடலில் உள்ள கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டும். இதுவொரு கடினமான வழிமுறையாகும்.

லட்சக்கணக்கிலான மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளதாக ஏற்கெனவே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. உலகத்தின் சில பகுதிகளில் சமூக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

வழித்தடத்தை அமைக்க முடியாவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கான முன்னோட்டமாக இது இருக்கிறது. பசி வேதனைகள் மற்றும் நீட்டிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டங்கள் நீண்டகால பொருளாதார, சமூக நெருக்கடியாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எங்கோசி ஒகொன்ஜோ-இவேலா

படக்குறிப்பு,

எங்கோசி ஒகொன்ஜோ-இவேலா

யுக்ரேனிலிருந்து ரயில்கள் மற்றும் டிரக்குகள் மூலமாக வெறும் 20 லட்சம் டன் தானியங்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக, ஒகொன்ஜோ-இவேலா தெரிவித்துள்ளார். இந்த பிரச்னைக்கு "விடை தேடுவது மிகவும் முக்கியமானது" என அவர் தெரிவித்தார்.

ஐநா பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டரஸ் இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக நடவடிக்கைக் குழு ஒன்றை அமைத்துள்ளதாக கூறினார்.

"இதுதொடர்பாக ஏற்பாடுகள் ஏதும் செய்யப்பட முடியுமா என்பது குறித்து ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்ற நீண்ட நேரத்தை அவர் செலவிட்டார்," என அவர் கூறினார்.

இது தொடர்பாக ஒப்பந்தம் ஏதும் உருவாகாவிட்டால், "உலக அளவில் பயங்கரமான சூழலாக இது மாறும்," என அவர் தெரிவித்தார்.

கருங்கடல் பிராந்தியத்திலிருந்து ஆப்பிரிக்காவில் உள்ள 35 நாடுகள் உணவுப்பொருட்கள் இறக்குமதி செய்வதாகவும் 22 நாடுகள் உரங்களை இறக்குமதி செய்வதாகவும் அவர் கூறினார்.

"இது என்ன மாதிரியான பெரிய தாக்கங்களை, குறிப்பாக ஆப்பிரிக்க கண்டத்தில் ஏற்படுத்தும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம்" என அவர் தெரிவித்தார். "அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நாம் மோசமான உணவு நெருக்கடிக்குள் செல்ல மாட்டோம் என நான் நம்புகிறேன்" என அவர் கூறினார்.

தற்போது அந்த பிராந்தியத்திலிருந்து தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட முடியாது என தெரிவித்த அவர், ஜூலை மாதத்தில் அறுவடை காலம் வருவதாக தெரிவித்தார். "இதனால் ஏற்கெனவே வீணான உணவுப்பொருட்களை ஒத்த அளவுக்கு தானியங்கள் வீணாகிவிடும், எனவே அடுத்த ஆண்டு அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு இந்நிலைமை நீடிக்கலாம். இது உலகின் சில பகுதிகளுக்கு உண்மையில் பேரழிவை ஏற்படுத்தும்" என்றார் அவர்.

கொரோனா தொற்று, தொழிலாளர் பற்றாக்குறை ஆகியவையும் விநியோக சங்கிலி இடையூறுகளை மோசமாக்குகின்றன என்றார்.

மேலும் உணவுப்பொருட்களுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என அவர் உலக நாடுகளின் தலைவர்களை கேட்டுக்கொண்டார்.

https://www.bbc.com/tamil/global-61741532

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

இது ஒரு போதும் நடவாது. இதை கணிக்க தவறியதுதான் புட்டின் விட்ட மிக பெரும் பிழை.

அல்லது நேட்டோவில் ஒரு போதும் உக்ரேன் சேர்க்கப்படாது என தெரிந்து கொண்டே, அதை ஒரு சாட்டாக கொண்டு புட்டின் போரை தொடங்கி உள்ளார்.

போர் தொடங்க முன்பே நேட்டோவில் சேர சில வருடங்களுக்கு முன் உக்ரேன் போட்ட விண்ணப்பம் நிராகரிக்கபட்டுள்ளது.

ஒரு நாடு நேட்டோ அங்கத்தவராக ஒவ்வொரு நாட்டின் பாராளுமன்றமும் அங்கீகாரம் கொடுக்க வேண்டும். 

உக்ரேனுக்காக தமது வீரர்களை சாக கொடுக்க யூகே, ஜேர்மனி, குறிப்பாக துருக்கி, ஹங்கேரி விடாது.

அதுவும் கூட, உக்ரேன் அங்கத்துவ விண்ணப்பத்தை போடும் வரை ஏன் புட்டின் பொறுக்கவில்லை?

இப்போ பின்லாந்து, சுபீடன் போட்ட பின் கூட சும்மா இருக்க நிர்பந்திக்க பட்டுள்ள புட்டின், ஏன் உக்ரேன் விண்ணப்பம் போடும் வரைக்குமாவது பொறுக்கவில்லை?

மிக சரியான கேள்வி. போரை தொடங்க புட்டின் சொன்னது இரெண்டு காரணம்தான்.

1. உக்ரேன் நேட்டோவில் சேரல்

2. மரியோபோலில் இருக்கும் அச்சோவ் பிரிகேட் போல நாசிகள் உக்ரேனில் உள்ளார்கள்.

நேட்டோவில் சேராது என உக்ரேன் சொல்லி விட்டது. ஆடிப் பிரிகேட் அழிக்கப்பட்டு, சரணடைந்து விட்டது. 

ஆகவே இனியும் உக்ரேனில் ரஸ்யபடைகளை வைத்திருக்காது, ரஸ்ய 2022 பெப்ரவரி எல்லைக்கு நகர்த்தினால் - நாளைக்கே போர் நிண்டு விடுமே?

இதை தடுப்பது என்ன? 

ரஸ்யா ஆரம்பத்தில் சொன்ன காரணங்கள் இப்போ இல்லை எனும் போது, அமெரிக்கா, செவ்வாஉ கிரகம் என யாரையும் குற்றம் சொல்லாமல் - போரை முடிவுக்கு கொண்டு வர ரஸ்யாவால் முடியும்.

ஆனால் செய்ய வில்லை.

ஏன்?

காரணம் மேலே சொன்னவை அல்ல ரஸ்யா போரை தொடங்க காரணங்கள்.

புட்டின் என்ற தனி மனிதனின் ஈகோ, ரஸ்யா 1990 இல் இழந்த ஆளுமையை மீட்டல், மீளவும் ஐரோப்பாவில் ஒரு ரஸ்ய-நோக்கு சுற்றை உருவாக்கல், நேட்டோவின்/அமெரிகாவின் ஆளுமையை ஐரோப்பாவில் தடுத்தல் - ஐரோப்பாவில் மிகுதி நாடுகள் எல்லாம் மதிக்கும்/பயப்படும் சக்தியாக ரஸ்யாவை ஆக்கல்.

இந்த நீண்ட கால நோக்கோடு முழு உக்ரேனையிம் பிடிப்பதுதான் ரஸ்யாவின் திட்டம்.

ஆகவேதான் படைகள் வடக்கே இருந்து கீவ் நோக்கி நகர்ந்தன. இதை உணர்ந்து கொண்டு (ஆட்சியும் வேறு என்பதால்) - சிரியா, லிபியா, ஒசேசியா, கிரிமியாவில் இருந்ததை போல, இருக்காமல் அமெரிக்கா முழு மூச்சாக இந்த முறை இறங்கியது.

இங்கே நடப்பது அடுத்த சில பத்து வருடங்களுக்கான உலக ஒழுங்கு பற்றிய சண்டை.

ஆகவேதான் சில நிலைகளை எட்டும் வரை ரஸ்யாவும் நிப்பாட்டாது, மேற்கும் சப்ளையை நிப்பாட்டாது.

தனிப்பட்டு நான் யாழ் களத்தில் இந்த போர் பற்றிய செய்திகளை இணைப்பதில்லை. 

ஆனால் - ஒரு பக்க பிரச்சாரத்தை இணைப்பதால், மற்ற பக்க பிரச்சாரத்தையும் இணைக்கிறேன் - இரெண்டு பொய்யையும் வாசித்து மக்கள் உண்மையை அறியட்டும் என்பதில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை.

நீங்கள் சொன்ன காரணங்கள் எல்லாம் சரிதான், இந்த போரில் அமெரிக்காவுக்கு நட்டமும் உண்டு அதனை விட இலாபமும் உண்டு, அதே போல் இரஸ்சியாவின் நிலையும் அதேதான், ஆனால் உக்கிரேனுக்கு இந்த போரால் நட்டம் மட்டுமே உள்ளது, ஆனாலும் இராஜதந்திர ரீதியாக இலங்கையில் ஜெயவர்த்தனா இந்தியாவின் பல்லை பிடுங்கி கிளிப் போட்டு, இன்றுவரை டிசைன் டிசைனா அட்ஜஸ்ட் செய்வது போல உக்கிரானால் ஏன் இரஸ்சியாவிற்கு செய்ய முடியவில்லை?.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, vasee said:

நீங்கள் சொன்ன காரணங்கள் எல்லாம் சரிதான், இந்த போரில் அமெரிக்காவுக்கு நட்டமும் உண்டு அதனை விட இலாபமும் உண்டு, அதே போல் இரஸ்சியாவின் நிலையும் அதேதான், ஆனால் உக்கிரேனுக்கு இந்த போரால் நட்டம் மட்டுமே உள்ளது, ஆனாலும் இராஜதந்திர ரீதியாக இலங்கையில் ஜெயவர்த்தனா இந்தியாவின் பல்லை பிடுங்கி கிளிப் போட்டு, இன்றுவரை டிசைன் டிசைனா அட்ஜஸ்ட் செய்வது போல உக்கிரானால் ஏன் இரஸ்சியாவிற்கு செய்ய முடியவில்லை?.

இப்போதில்லாவிட்டாலும் எப்போதாவது இந்தப் போர் நிச்சயம் இடம்பெற்றே இருக்கும். ஆனால் இங்கே ரஸ்யா முந்திக்கொண்டுவிட்டத. அதுதான் பலருக்குக் கடுப்பு. 

😀

9 Jun, 2022 09:59 
 
UN warns of global food ‘catastrophe’

Millions of people could go hungry if grain exports from Russia and Ukraine decline further, according to the United Nations
 
UN warns of global food ‘catastrophe’

© Getty Images / Revolu7ion93

Up to 181 million people in 41 countries could be hit by severe food shortages this year due to the conflict in Ukraine and its impact on grain and fertilizer exports, according to a UN report.

“Food should never be a luxury; it is a fundamental human right. And yet, this crisis may rapidly turn into a food catastrophe of global proportions,” the Crisis Response Group on Food, Energy and Finance report released on Wednesday warned.

RT. Com 2022/06/09

 • Like 1
Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics