Jump to content

'முகமது நபியை அவமதிக்கும் யாரையும் கொலை செய்வோம்': அல்-கய்தா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • பிபிசி மானிட்டரிங்
  • .
7 மணி நேரங்களுக்கு முன்னர்
 

அல்கொய்தா

பட மூலாதாரம்,AQIS

முகமது நபியை "அவமதிக்கும்" யாரையும் கொலை செய்வோம் எனவும் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் எனவும், அல்-கய்தாவின் தெற்கு ஆசிய கிளை எச்சரித்துள்ளது.

இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜகவை சேர்ந்த நூபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜின்டால் ஆகியோரின் முகமது நபி குறித்த சர்ச்சை கருத்துக்கு அல்-கய்தாவின் நேரடி எதிர்வினையாக இது உள்ளது.

முகமது நபிகள் குறித்த கருத்துக்கு இஸ்லாமிய நாடுகளின் எதிர்வினையைத் தொடர்ந்து, பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் ஷர்மா அக்கட்சியிலிருந்து சமீபத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டார். டெல்லி ஊடகப்பிரிவின் தலைவராக இருந்த நவீன் ஜின்டால் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்திய துணைக்கண்டத்தின் அல்-கய்தா (al-Qaeda in the Indian Subcontinent) என தம்மைத்தாமே அழைத்துக்கொள்ளும் இந்த ஜிகாதி குழு இதுதொடர்பாக உருது மற்றும் ஆங்கிலத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 7)அறிக்கை ஒன்றை, அதன் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களான டெலிகிராம், ராக்கெட்சாட், சிர்ப்வயர் ஆகியவற்றில் வெளியிட்டது.

அந்த அறிக்கையில், "சில தினங்களுக்கு முன்னர் இந்துத்துவாவின் பிரசாரகர்கள் முகமது நபி குறித்தும் அவருடைய மனைவி ஆயிஷா குறித்தும் இந்திய தொலைக்காட்சி சேனல் ஒன்றில் அவமதிக்கும் வகையிலும் அவதூறு பரப்பும் வகையிலும் பேசியுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகமது நபி குறித்த கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ள அல்-கய்தா, "துடுக்குத்தனமான மற்றும் வெறுக்கத்தக்க கருத்துகளை கூறும் உலகின் வாய்கள், குறிப்பாக இந்துத்துவ தீவிரவாதிகள் ஆக்கிரமித்துள்ள இந்தியாவில்" கொலைகள் மற்றும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நிகழ்த்தப்படும் என, அல்-கய்தா எச்சரித்துள்ளது.

'மன்னிப்பு வழங்கப்படாது'

மேலும், முகமது நபியை இழிவுபடுத்துபவர்களுக்கு "மன்னிப்பு வழங்கப்படாது. இத்தகைய விவகாரத்திற்கு கண்டன வார்த்தைகள் மூலமாகவோ அல்லது வருத்தத்தின் மூலமாகவோ எதிர்வினையாற்றப்படாது" எனவும் அவை வன்முறை தாக்குதல்கள் மற்றும் பதிலடியால் மட்டுமே எதிர்கொள்ளப்படும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

"டெல்லி, பாம்பே, உத்தர பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளில் உள்ள காவி தீவிரவாதிகள் (இந்து தேசியவாதிகள்) தங்களின் முடிவுக்காக இப்போது காத்திருக்கட்டும். அவர்கள் தங்கள் வீடுகளிலோ ராணுவ முகாம்களிலோ தஞ்சமடைய முடியாது," என அல்-கய்தா எச்சரித்துள்ளது.

இஸ்லாம் மற்றும் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் பாதுகாவலராக தன்னை காட்டிக்கொள்ள இந்த அமைப்பு முயற்சிக்கிறது. மேலும், முகமது நபி கூறியதாக சொல்லப்படும் "காஸ்வா இ-ஹிந்த்' (Ghazwa e Hind) என்று குறிப்பிடப்படும் போர் ஒன்றில், இறுதியில் முஸ்லிம்கள் இந்தியாவை வெல்வார்கள் என்ற முழக்கத்தைத் தூண்டும்வகையிலும் அல்-கய்தா செயல்பட்டு வருகிறது.

முகமது நபியை "அவமதிக்கும்" யாரையும் கொல்வோம் என, முகமது நபி குறித்த சமீபத்திய கருத்துக்கு சம்பந்தமில்லாமல், இந்த அமைப்பு முன்னதாக மற்றொரு அறிக்கையையும் வெளியிட்டிருந்தது.

முகமது நபிகள் குறித்த சர்ச்சை கருத்தைத் தொடர்ந்து முஸ்லிம்கள் சிலர் கோபமடைந்து, போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், அல்-கய்தாவின் இந்த செய்தி வந்துள்ளது.

'முகமது நபியை அவமதிக்கும் யாரையும் கொலை செய்வோம்': அல்-கய்தா - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன்பு…. ஹூசைன் என்ற முஸ்லீம் ஓவியர்,
சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்த போது… வந்த எதிர்ப்பை அடுத்து,
அவருக்கு அடைகலம் கொடுத்தது… மத்திய கிழக்கில் உள்ள ஒரு முஸ்லீம் நாடு.
மற்ற மதங்களை… அவமதிக்கும் போது, முஸ்லீம்களுக்கு இனிப்பாக இருப்பது ஏன்?

அண்மைய பிரச்சினைக்கும்…. சிவலிங்கத்தை, ஆண் குறி போல் உள்ளது என்று,
ஒரு முஸ்லீம் சொன்னதற்கு பதிலடியாகத்தான்… முகமதுநபியை விமர்சித்தார்கள்.
உடனே… 57 முஸ்லீம் நாடுகள் தமது எதிர்ப்பை காட்டுகின்றார்கள்.

சிவலிங்கத்தையும், சரஸ்வதியையும் அவர்கள் விமர்சிக்கலாம் என்றால்…
இது.. ஏன் முடியாது? 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தமிழ் சிறி said:

சில வருடங்களுக்கு முன்பு…. ஹூசைன் என்ற முஸ்லீம் ஓவியர்,
சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்த போது… வந்த எதிர்ப்பை அடுத்து,
அவருக்கு அடைகலம் கொடுத்தது… மத்திய கிழக்கில் உள்ள ஒரு முஸ்லீம் நாடு.
மற்ற மதங்களை… அவமதிக்கும் போது, முஸ்லீம்களுக்கு இனிப்பாக இருப்பது ஏன்?

அண்மைய பிரச்சினைக்கும்…. சிவலிங்கத்தை, ஆண் குறி போல் உள்ளது என்று,
ஒரு முஸ்லீம் சொன்னதற்கு பதிலடியாகத்தான்… முகமதுநபியை விமர்சித்தார்கள்.
உடனே… 57 முஸ்லீம் நாடுகள் தமது எதிர்ப்பை காட்டுகின்றார்கள்.

சிவலிங்கத்தையும், சரஸ்வதியையும் அவர்கள் விமர்சிக்கலாம் என்றால்…
இது.. ஏன் முடியாது? 

உங்கள் உதாரணம் தொடர்பாக எனக்கு டவுட்டு இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

உங்கள் உதாரணம் தொடர்பாக எனக்கு டவுட்டு இருக்கிறது. 

என்ன டவுட்டு… என்று சொன்னால்தானே, அதை கிளியர் பண்ணலாம். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

என்ன டவுட்டு… என்று சொன்னால்தானே, அதை கிளியர் பண்ணலாம். 😁

M. F. Husain

 
Maqbool Fida Husain[2] (17 September 1915 – 9 June 2011)[3][4] was an Indian artist known for executing bold, vibrantly coloured narrative paintings in a modified Cubist style.[5] He was one of the most celebrated and internationally recognised Indian artists of the 20th century.[5] He was one of the founding members of Bombay Progressive Artists' Group. M.F. Husain is associated with Indian modernism in the 1940s. His early association with the Bombay Progressive Artists' Group used modern technique, and was inspired by the "new" India after the partition of 1947. His narrative paintings, executed in a modified Cubist style, can be caustic and funny as well as serious and sombre. His themes—sometimes treated in series—include topics as diverse as Gandhi, Mother Teresa, the Ramayana, the Mahabharata, the British Raj, and motifs of Indian urban and rural life. In September 2020, his painting titled “Voices”, auctioned for a record $2.5 million.[6]

Husain's later works have stirred controversy, which included nude portrayals of Hindu deities, and a nude portrayal of Bharat Mata. Right-wing organisations called for his arrest, and several lawsuits were filed against him for hurting religious sentiments. He remained in a self imposed exile from 2006 until his death in 2011, accepting Qataricitizenship in 2010.

இப்போ சரி என நினைக்கிறேன். 

அது சரி, சிவலிங்கம்  என்பது ஆண் என்பதும் அதன் அடியில் இருப்பது பெண்குறி என்பதும் (இன விருத்தியும் அதன் செழிப்பும் -இயற்கையுடன் இணைந்த வழிபாட்டு முறை) மேலெழுந்தவாரியாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுதானே. இதில் கோபப்பட என்ன இருக்கிறது ? 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் வாழும் முஸ்லிம் மக்களின் மீது பா.ஜ.க, ஆர். எஸ். எஸ் மதவெறி தாக்குதல் களை தொடுக்கும் போதெல்லாம் முஸ்லீம் நாடுகள்  அதற்கு எதிராக எதுவும் செய்யவில்லை.

ஆனால் முகம்மது நபி பற்றிய விமர்சனத்துக்கு மட்டும் ஆவேசப்படுகிறார்கள். 

அதே போல் இலங்கையில் இந்து மதத்தை சேர்ந்த தமிழ் மக்கள் மீது இலங்கை இனவெறி அரசு தாக்குதலை தொடுத்த போதெல்லாம் அதற்கு ஒத்தாசையாக இருந்து வருகின்ற  இந்து பயங்கரவாதம் மதவெறி அரசு தேவையற்ற  உதவக்கரை  மத விடயங்களுக்கு மட்டுமே  முக்கியத்துவம் கொடுக்கிறது. 

மத வெறியின் டிசைன் அப்படி.

மத வேறி என்பது  முஸ்லீம் என்றாலும்  இந்து என்றாலும் ஒரே விதமான கோர முகம் கொண்டதே. 

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, island said:

இந்தியாவில் வாழும் முஸ்லிம் மக்களின் மீது பா.ஜ.க, ஆர். எஸ். எஸ் மதவெறி தாக்குதல் களை தொடுக்கும் போதெல்லாம் முஸ்லீம் நாடுகள்  அதற்கு எதிராக எதுவும் செய்யவில்லை.

ஆனால் முகம்மது நபி பற்றிய விமர்சனத்துக்கு மட்டும் ஆவேசப்படுகிறார்கள். 

அதே போல் இலங்கையில் இந்து மதத்தை சேர்ந்த தமிழ் மக்கள் மீது இலங்கை இனவெறி அரசு தாக்குதலை தொடுத்த போதெல்லாம் அதற்கு ஒத்தாசையாக இருந்து வருகின்ற  இந்து பயங்கரவாதம் மதவெறி அரசு தேவையற்ற  உதவக்கரை  மத விடயங்களுக்கு மட்டுமே  முக்கியத்துவம் கொடுக்கிறது. 

மத வெறியின் டிசைன் அப்படி.

மத வேறி என்பது  முஸ்லீம் என்றாலும்  இந்து என்றாலும் ஒரே விதமான கோர முகம் கொண்டதே. 

மதவெறி பற்றி சரியாக சொல்லியுள்ளீர்கள். அரபு நாடுகளின் இப்போதைய ஒன்றுபட்ட எதிர்ப்பிற்கு, வெறும் இந்தக் கருத்து மாத்திரம் காரணமல்ல, பிஜேபி முஸ்லிம்களுக்கு 8 வருடங்களாக செய்வதை பார்த்துக்கொண்டு இருந்து விட்டு தகுந்த சந்தர்ப்பம் கிடைக்கும்போது சேர்ந்து அடிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். மற்ற விடயங்களில் அரபு நாடுகளினால் சும்மா மூக்கை முடியாது, இது நல்ல சந்தர்ப்பம். காவிகளுக்கு இன பாசம் அதிகம், நாங்கள் என்னதான் இந்துக்கள் என்று கத்தினாலும் ஒன்றும் நடவாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2022 at 06:03, நீர்வேலியான் said:

பிஜேபி முஸ்லிம்களுக்கு 8 வருடங்களாக செய்வதை பார்த்துக்கொண்டு இருந்து விட்டு தகுந்த சந்தர்ப்பம் கிடைக்கும்போது சேர்ந்து அடிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.மற்ற விடயங்களில் அரபு நாடுகளினால் சும்மா மூக்கை முடியாது

தற்போது ரஷ்யாவால் குறைக்கப்பட்ட விசேட விலையில் பெற்றோலை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா பெருமளவு வாங்குகின்றது.முன்பு முஸ்லிம் நாடுகளில் இருந்து பெருமளவு வாங்கியது.முகமதுவை பற்றி உண்மையை சொன்னதை சாட்டாக வைத்து பெற்றோலால் ஏற்பட்ட கசப்பை தான் வெளிபடுத்தியுள்ளன  முஸ்லிம் நாடுகள். 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.