Jump to content

‘ஜன கண மன’ பேசும் அரசியல் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திரையரங்குகளில் வெற்றி நடைபோட்ட பின் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி பலராலும் கவனம் ஈர்க்கப்பட்டிருக்கும் 'ஜன கண மன' படம் பேசும் அரசியல் குறித்து சற்றே விரிவாக பார்க்கலாம். (அலர்ட்: இந்தக் கட்டுரையில் ஸ்பாய்லர்கள் நிறைந்துள்ளன.)

கர்நாடகாவில் மத்தியப் பல்கலைகழகம் ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வரும் சபா மர்யம் (மம்தா மோகன்தாஸ்) மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அவரது கொலைக்கு நியாயம் கோரி, மாணவர்கள் களத்தில் இறங்கிப் போராட்டம் நடத்துகின்றனர். போராடிய மாணவர்கள் மீது காவல்துறை வன்முறையைக் கட்டவிழ்த்துவிட, இது தொடர்பான விசாரணையை முன்னெடுக்கிறது ஏசிபி சஞ்சன் குமார் (சூரஜ் வெஞ்சரமூடு) தலைமையிலான காவல்துறை டீம். இந்த விசாரணை முறையாக நடைபெற்றதா? சபா மர்யம் ஏன் கொல்லப்பட்டார்? இதற்கு பின்னால் இருக்கும் அரசியல் என்ன? - இதுதான் 'ஜன கண மன' படத்தின் திரைக்கதை.

பல்கலைக்கழகப் பேராசிரியை சபா மர்யமாக மம்தா மோகன்தாஸ். சில காட்சிகளே வந்தாலும் நிறைவைத் தருகிறார். உண்மையை உடைத்துப் பேசுவதிலும், மாணவர்களை வழிநடத்துவதிலும், நீதிக்கான போராட்டத்தில் துணை நிற்பதிலுமாக ஈர்க்கிறார்.

ஏசிபி சஞ்சன் குமாராக சூரஜ் வெஞ்சரமூடு. மனுஷன் எந்த கெட்டப் போட்டாலும் அதற்கு பொருந்திப் போகிறார். முதல் பாதி முழுவதையும் தன் தோளில் சுமந்து செல்கிறார். உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத முகம், வார்த்தைகளை எண்ணிப் பேசுவது, பாவனை, மகனிடம் பாசமான தந்தையாகவும், காவலராக கறார் காட்டுவதிலும், குற்ற உணர்ச்சியில் கூனிக் குறுகும்போதும் நடிப்பில் உச்சம் தொடுகிறார் சூரஜ்.

16545976353078.png

படத்தின் தொடக்கக் காட்சியில் வரும் பிரித்விராஜ், முதல் பாதி முழுக்க ஆளைக் காணவில்லை. அவரைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இரண்டாம் பாதியில் விஷுவல் ட்ரீட் தருகிறார். இரண்டு கதாபாத்திரங்களுக்குமான ஸ்கிரீன் ஸ்பேஸை முதல் பாதி சூரஜ் வெஞ்சரமூடுவுக்கும், இரண்டாம் பாதியைப் பிரித்விராஜுக்குமாக பிரித்திருக்கிறார் இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி.

வழக்கறிஞராக வரும் பிரித்விராஜுக்கான களம் நீதிமன்றத்தின் அந்தக் குறுகிய அறை மட்டுமே. அந்த அறை முழுக்க அவரது சத்தமும், கோபமும், நடிப்பும், உணர்ச்சிகளுமே பொங்கி வழிகின்றன. இடைவேளைக்குப் பின் தனி ஆளாக ஸ்கோர் செய்து ரசிகர்களிடம் கவனம் பெறுகிறார் பிரித்விராஜ்.

சரி, இனி படம் பேசும் அரசியலுக்கு வருவோம். இந்தியாவின் புகழ்ப்பெற்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் சாதியின் வேர்கள் எந்த அளவுக்கு பரந்து விரிந்து கிடக்கின்றன என்பதும் படத்தின் மையக்கரு. ஹைதராபாத் பல்கலைகழக மாணவர் ரோஹித் வெமூலாவின் தற்கொலை, சென்னை ஐஐடி மாணவி பாத்திமாக லத்தீஃப் தற்கொலை, சமீபத்திய ஜேஎன்யூ பல்கலைகழகத்தின் தாக்குதல்கள் என நடப்பு நிகழ்வுகளை திரைக்கதையாக்கியிருக்கிறார் லிஜோ ஜோஸ் ஆண்டனி.

உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் சாதியையும், மதத்தையும் அளவுகோலாக கொண்டு அவர்களை அங்கிருக்கும் சில பேராசியர்கள் அணுகும் முறை, அவர்களை நோக்கி வீசப்படும் அம்புகள், பழிவாங்கும் நடவடிக்கைகள் என அழுத்தமான காட்சிகளால் சரமாரி கேள்வி கேட்கிறது படம்.

16545976483078.jpg

பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவியைப் பார்த்து பேசும் பேராசிரியர், ''இலவசத்த என்னைக்குமே அதிகாரமா கேட்க முடியாது'' என்று கூறுகிறார். இன்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் இலவசமாகவே அடையாளப்படுத்தப்படுகின்றன.

அதேபோல, உண்மைக் குற்றங்கள் எளிதில் மறைக்கப்பட்டு, அதன் மீது பூசப்படும் போலி சாயங்களை சுரண்டிய விதத்தில் படத்தை பாராட்டலாம். பாலியல் வன்கொடுமை நடந்ததாக கதை கட்டி, அந்தல் குற்றத்தில் சம்பந்தப்படாத 4 பேரை என்கவுன்டர் செய்ததும் இங்கிருக்கும் கூட்டு மனசாட்சி நிம்மதி கொள்கிறது. தீர்வு கிடைத்துவிட்டதென ஆறுதலடைகிறது. இந்த மடமை கேள்விகளால் படம் கிழித்தெறிகிறது. (2019-ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த என்கவுன்ட்டர் சம்பவம் குறித்து நீங்கள் அறிந்திருந்தால், இந்தப் படம் போலி என்கவுன்ட்டர் குறித்து பேசும் அரசியல் வெகுவாக புரியும்)

இறந்த சபா மர்யத்தின் தாயிடம், 'அவங்க பாலியல் வன்கொடுமை செஞ்சதா உங்க கண்ணால பாத்தீங்களா? எத வைச்சு சொல்றீங்க' என கேட்கும்போது அவரிடம் இருக்கும் பதில், 'எல்லாரும் சொல்றாங்க. மீடியா சொல்லுது' என்பதே. அதை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியரிடம், 'உடற்கூறாய்வு அறிக்கை வருவதற்கு முன்பே அதை பாலியல் வன்கொடுமை என எப்படி பதிவு செய்தீர்கள்?' என கேட்கும்போது அவரிடம் பதிலில்லை. ஆக வாட்ஸ்அப் ஃபார்வேடு போல யாரோ ஒருவரால் பரப்பபடுவதையோ, ஊடகங்கள் சொல்வதையோ அப்படியே ஏற்று சம்பந்தமேயில்லாதவர்களை சமூகம் குற்றவாளிக்கியாக்கிவிடுகிறது.

16545976593078.jpg

மிகப்பெரிய பிரச்னைகள் யாவும், உணர்ச்சிவசத்தாலும், உரிய விசாரணைகளின்றியும், என்கவுன்டர்கள் போன்ற போலி தீர்வுகளாலும் எளிதில் மறைக்கப்பட்டு விடுகின்றன என்பதை படம் அழுத்தமாக காட்சிப்படுத்துகிறது. குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ய போலீஸும், அதை ஆமோதிக்கும் ஊடகங்கள் இருக்கும் பட்சத்தில் நீதிமன்றங்கள் எதற்கு என்ற கேள்வி சிந்திக்க வைக்கிறது.

அதேபோல, குற்றவாளிகள் என கண்டறிய பொது சமூகம், காவல்துறை முன்வைக்கும் கிரைடீரியாக்களை உடைத்து நொறுக்குகிறது படம். ஓரிடத்தில் நீதிபதியே, 'அவங்கள பாத்தாலே குற்றவாளின்னு தெரியுது' என்கிறார். இது ஒரு முக்கியமான பிரச்னை. ஒருவரின் நிறம், மதம், சாதி அடையாளங்களை வைத்து அவரை குற்றம் செய்தவர் என்ற முன்முடிவு ஆபத்தானது. அதனால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் ஏராளம்.

குறிப்பாக சென்னையை எடுத்துகொண்டால், இங்கிருக்கும் படங்கள் தொடங்கி, காவல் துறையினர், பொதுமக்கள் முதற்கொண்டு, வட சென்னை மக்களிடம் பாகுபாடு காட்டும் அவலம் நிகழ்கிறது. 'புள்ளிங்கோ' என்ற அடைமொழியுடன் அவர்களை தனித்து அடையாளப்படுத்துவது என ஒருவரின் நிறங்களும், அவர் வாழும் இடமும், அவரின் மத அடையாளமும் குற்றவாளிக்கான வரையறைகளை நிரப்பிவிடுகின்றன. படம் இது குறித்து அழுத்தமான கேள்வியை முன்வைக்கிறது. எந்த விசாரணையுமில்லாமல், 4 பேரை குற்றவாளிகள் என என்கவுன்டர் செய்யும் காவல்துறையை பொது சமூகத்தின் கூட்டு மனசாட்சியுடன் நம்மால் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது.

அரசியல் வசனங்கள் தைரியமாக அணுகப்பட்டிருக்கிறது. ''பசங்களையும், பேரப்பசங்களையும், கேம்பிரிட்ஜ் பல்கலைகழகங்களில் படிக்க வைத்துவிட்டு, 'மேக் இன் இந்தியா' என ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு நான் பேசுவது புரியாது'' என்பதும், வட இந்தியாவில் மாட்டிறைச்சி பெயரால் நடக்கும் கொலைகள், ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு, கேரளாவின் உணவுக்காக அடித்தே கொல்லப்பட்ட மனு, இந்தியாவில் வேரூன்றியிருக்கும் சாதிய, நிற, பாகுபாடுகள் குறித்த வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

இரண்டாம் பாதியில் நீதிமன்றத்தில் நடக்கும் வாதங்கள் முழுவதும் நம்மை ஆட்கொண்டு, சிந்திக்க வைக்கின்றன. உண்மையில் மலையாள சினிமாக்கள் கலையின் வீரியத்தையும், அதை கையாளும் முறையையும் அறிந்து செயல்படுவதன் மூலம் இந்திய அளவில் கவனம் பெறுகின்றன. அந்த வகையில், 'ஜன கன மண' தவறவிடக்கூடாத சமகால அரசியல் சினிமா.

மேற்கண்ட கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு, இது ஏதோ சீரியஸான டிராமா ஸ்டோரி என்று நினைத்துவிட வேண்டாம். பரபரப்பான பொலிட்டிகல் த்ரில்லராகவும், என்டர்டெய்னராகவுமே இருக்கும் இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. இந்தப் படத்தின் தமிழ் டப்பிங்கும் அசல் மொழிப் படத்தை பார்க்கும் உணர்வையே கொடுக்கிறது.

ஓடிடி திரை அலசல் | தரமான சம்பவங்கள் - ‘ஜன கண மன’ பேசும் அரசியல் என்ன? | Jana Gana Mana movie review and decoding - hindutamil.in

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சினிமாக்கள் பேசத் தயங்கும் அரசியல் களம்!

-பீட்டர் துரைராஜ்

 

196618-jana-3.jpg

சமகால அரசியல்,சமூகம் குறித்து ஒரு தெளிந்த பார்வையுடன் எடுக்கப்பட்டுள்ள படம் தான் ஜன கண மன! காவல் துறையின் என்கெண்டர், கல்வி நிறுவனங்களில் நடக்கும் பாகுபாடுகள், ஊடக மற்றும் சோஷியல் மீடியாக்களின் போக்குகள், அனல் பறக்கும் நீதிமன்ற வாதங்கள் என்பதாக வந்திருக்கும் தரமான படம்!

“என் மாணவர்கள் தான் என் அடையாளம்” என்று அர்ப்பணிப்போடு கற்பிக்கும் பல்கலைக்கழக பேராசிரியையான சபா மரியம் தீ வைத்துக் கொளுத்திக் கொல்லப்படுகிறார்! பேராசிரியையின் எரிக்கப்பட்ட உடலை காவல்துறை கண்டுபிடிக்கிறது. அன்று இரவே, பேராசிரியை வன்புணர்வு செய்து கொளுத்தப்பட்டதாக எல்லா ஊடகங்களும் பேசுகின்றன. இந்த வன்செயலை செய்தவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என மாணவர்கள் போராடுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட காவல் அதிகாரியை உள்துறை அமைச்சர் ‘தேர்ந்தெடுத்து விசாரிக்கச் சொல்கிறார்.

மகளை இழந்த தாயிடம் “முப்பது நாட்களில் கொலையாளியைப் பிடிப்பேன்” என்று உறுதியளிக்கிறார் காவல்துறை அதிகாரான சஜன் குமார். காவல் அதிகாரியாக சூரஞ் வெஜ்சர மூடு அற்புதமாக நடித்துள்ளார். இவர் ஏன் எப்போதும், இறுக்கமாக முகத்தோடு இருக்க வேண்டும்,  என்ற ஐயத்திற்கு விடை இறுதியில் கிடைக்கிறது. கதையின் முதல் பகுதி காவல்துறை விசாரணை, கைது, என நகர்கிறது.

196618-jana-3-Copy.jpg

ஹைதராபாத் நகரில் ஒரு இளம்பெண் மீது நடந்த வன்புணர்வு சம்பவத்தில் நான்கு பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். அதே போல இதிலும் என்கவுண்டர் நடக்கிறது ! “இன்ஸ்டண்ட் காபி போல,   இன்ஸ்டெண்ட் நீதி” வழங்குவதை எதிர்க்கும் வழக்கறிஞராக அர்விந்த் சுவாமிநாதன் இருக்கிறார்.  வழக்கறிஞர் பாத்திரத்தில் பிருத்விராஜ்  நடித்துள்ளார். ஒரு கால் ஊனமுற்றவர்  இவர்  நமது நீதிபரிபாலன முறை குறித்து பல கேள்விகளைக் கேட்கிறார்.குற்றவாளி யாராக இருந்தாலும் காவல்துறை என்கவுண்டர் செய்யுமா? அல்லது என்கவுண்டர் என்பது அடித்தட்டு குற்றவாளிகளுக்கு மட்டுமா ? என்கிறார்!

இதனை ஒரு அரசியல் படம் என்று தான் சொல்ல வேண்டும். அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இறுதிவரை இருக்கிறது. இந்தப் படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி  இயக்கியுள்ளார். இது  இவருக்கு இரண்டாவது படம்.

15 நிமிடத்திற்கு ஒரு வன்புணர்வு நடக்கையில் சபா மரியத்தின் கொலை மட்டும் தேசியச் செய்தியாக மாறியது எப்படி ?  தேசியச் செய்தி ஆகவில்லை என்றால், இது குறித்து நடவடிக்கை எடுத்திருப்பீர்களா என மகளிர் ஆணையத் தலைவியை வழக்கறிஞர் கேள்வி கேட்கிறார். இப்படி ஒரு சம்பவம் செய்தியாகிறது என்பதும், அல்லது அதே போன்ற வேறொரு சம்பவம் ஏன் செய்தியாவதில்லை என்பதும் யோசிக்க வேண்டிய ஒன்று.

ஷாரிஸ் முகம்மது என்பவர் வசனம் எழுதியுள்ளார். ‘பெரும்பான்மையினர் விரும்புகிறார்கள் என்பதால் உணர்ச்சி வேகத்தில்  முடிவெடுக்கலாமா ?  ஆங்காங்கே வரும் பொருத்தமான காந்தி வசனங்கள், கதையின் ஒரு அங்கமாக மாற்றிள்ளது.

images-1-1.jpg

கதை நடக்கும் மத்திய  பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவியின் பெயர் கௌரி. ( ஒரு வேளை கௌரி லங்கேஷ் நினைவாக வைக்கப்பட்டிருக்கலாம்). அவர் தன் ஆசிரியை மரணத்திற்கு நீதி கோரி போராடுகிறார். எனவே,  பல்கலைக்கழகத்திற்கு உள்ளாகவே தாக்கப்படுகிறாள். காவி உடை அணிந்த குண்டர்கள், காவல்துறை யினரோடு சேர்ந்து மாணவர்களைத் தாக்குகிறார்கள். அவள் அணிந்துள்ள முக்காடு, அவளுடைய உடை, பாவனை, எதிர்வினை என அனைத்தும் ஜமாலிய பல்கலைக் கழக மாணவியை ஒத்து இருக்கின்றன.

திரைப்படத்தின் இறுதிப் பகுதியில் துணைவேந்தரின் அரசியல், ஆய்வு மாணவர் படும் அல்லல், தலித் மாணவர்களின் தற்கொலைகள், பாலியல் சீண்டல், தரம் என்ற பெயரில் நிலவும் சாதியம் என்பவை  பேசப்படுகின்றன.”90 களில் கர்நாடகா, ராம்நகரில் மதக்கலவரம் நடந்தது. எனவே ராம்நகர் என்ற பெயரை வைத்திருக்கலாம்” என்கிறார் பத்திரிகையாளர் விஜயசங்கர். படத்தின் கதைக்களம் தமிழக பார்டரை ஒட்டு இருப்பதால் படத்தில் நிறைய தமிழ் வசனங்கள் உள்ளன.இது படத்தை நன்கு புரிந்து கொள்ள உதவுகிறது!

படம் இரண்டே முக்கால் மணிநேரம்; நெட்பிளிக்சில் ஓடுகிறது. ஐஎம்டிபி 8.5 மதிப்பெண் கொடுத்துள்ளது.

பேராசிரியையாக மம்தா மோகன்தாஸ் நடித்துள்ளார். தலித் சிறுமிக்காக துணை வேந்தரிடம் வாதிடுவதாகட்டும், பாலியல் சீண்டல் செய்த பேராசிரியரை எதிர்ப்பதாகட்டும் நன்கு நடித்துள்ளார். சபா மரியம் என்ற  இஸ்லாமியப் பெண்ணாக அற்புதமாக நடித்துள்ளார். இஸ்லாமிய வெறுப்பு மேலோங்கி வரும் இக்காலக் கட்டத்தில், நீதி கோரியதனால் பாதிக்கப்படும் ஒரு பெண்ணாக ஒரு இஸ்லாமிய பாத்திரத்தை இயக்குநர் வைத்துள்ளார்.

பிருத்விராஜிற்கு  ‘சினிமாத்தனமான’ கடந்த காலம் இருக்கிறது. நீதிமன்ற காட்சிகள் சில இடங்களில் அதீதமாக உள்ளன என்றாலும், இந்த கதாபாத்திரத்தின் வழியே உலுக்கி எடுக்கும் கேள்விகளைக் கேட்டு வலுவாக நீதியை நிலை நாட்டி கதாநாயக அந்தஸ்த்தை தொடுகிறார். கதை வேகமாக நகர்கிறது!

495787.jpg

அருந்ததி ராய் எழுதிய Ministry of Utmost Happiness என்ற நாவலில் இந்தியாவில் நடந்த அனைத்து ஒடுக்குமுறைக்குள்ளான  சம்பவங்களும் சொல்லப்பட்டிருக்கும். தமிழகத்தில் நடந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு, உணவுக்காக அடித்தே கொல்லப்பட்ட கேரளாவின் மனு என்ற அப்பாவி ஏழை இளைஞன், வட இந்தியாவில் மாட்டிறைச்சியின்  பெயரால் நடக்கும் மனித தன்மையற்ற படுகொலைகள், இந்தியாவில் வேரூன்றியிருக்கும் சாதிய, மதப் பாகுபாடுகள் குறித்த வசனங்கள்..என சமகால சமூக அரசியலை படம் சிறப்பாக கவனப்படுத்துவது பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

கதையில் இந்தியாவின் எல்லா இடங்களிலும் நடந்துள்ள சமகால அரசியல் சம்பவங்கள் கோர்க்கப்பட்டுள்ளன.இயக்குநரான டிஜோ ஜோஸ் ஆண்டனி பாராட்டுக்குரியவர். அதனால் இப் படத்தின் பெயர் ‘ஜன கண மன’ என இருக்கிறது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என சொல்லப்படுகிறது!

இந்தப் படத்தில் ஆழமான அரசியல் அழகியலோடு பேசப்பட்டுள்ளது. வெட்டு, குத்து, ரத்தம், கொலைகள் என இடையறாத வன்முறைகளை எடுத்துக் கொண்டாடும் தமிழ் சினிமா படைப்பாளிகள் ஏன் இது போன்ற ஒரு படத்தை தரத் தயங்குகிறார்கள்? இந்தப் படத்தை ‘Political thriller என்றும் சொல்லலாம், ‘Courtroom thriller’ என்றும் சொல்லலாம்’ என்கிறார் பத்திரிகையாளரான முரளிதரன்.

பட விமர்சனம்; பீட்டர் துரைராஜ்

 

https://aramonline.in/9350/janakanamana-political-cinema/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு படம் ...பிருத்திவிராஜ் வரும் ஆரம்ப காட்சியில் பிடித்து குத்தோணும் போல ஆத்திரம் வந்தது...அண்மையில் வந்த படங்களில் அருமையான படம் 
இன்று மம்மட்டி நடித்த புது  படம் ஒன்று பார்த்தேன் ...அதில் அவர சொல்கிறார் இந்திரா காந்தி ,ராஜீவ்,சஞ்சய் மூன்று பேரது கொலைகளை விசாரிக்க பொதுவான 4 பெ கொண்ட குழு அமைக்க பட்டதாம் ...இதில் 3 பேர் விபத்தில் கொல்லப்படடார்களாம்...ஒருவர் படு காயத்துடன் தப்பித்து இருக்கிறாராம் ....உண்மையா அல்லது படத்திற்கான சோடிப்பா தெரியவில்லை  

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா.....எவ்வளவு சிறப்பாகவும் + சிம்பிளாகவும் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்......!   👍

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 13/6/2022 at 04:11, ரதி said:

நல்லதொரு படம் ...பிருத்திவிராஜ் வரும் ஆரம்ப காட்சியில் பிடித்து குத்தோணும் போல ஆத்திரம் வந்தது...அண்மையில் வந்த படங்களில் அருமையான படம் 
இன்று மம்மட்டி நடித்த புது  படம் ஒன்று பார்த்தேன் ...அதில் அவர சொல்கிறார் இந்திரா காந்தி ,ராஜீவ்,சஞ்சய் மூன்று பேரது கொலைகளை விசாரிக்க பொதுவான 4 பெ கொண்ட குழு அமைக்க பட்டதாம் ...இதில் 3 பேர் விபத்தில் கொல்லப்படடார்களாம்...ஒருவர் படு காயத்துடன் தப்பித்து இருக்கிறாராம் ....உண்மையா அல்லது படத்திற்கான சோடிப்பா தெரியவில்லை  

ம்ம்முட்டி அதைவிட வேறொன்றும் சொல்லியாருந்தார். வேறு நாடுகளின் பிண்ணனியஉம் அந்த கொலைகளில் இருந்ததாக. அத்த வசனங்கள் எல்லாம் உண்மையா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ragaa said:

ம்ம்முட்டி அதைவிட வேறொன்றும் சொல்லியாருந்தார். வேறு நாடுகளின் பிண்ணனியஉம் அந்த கொலைகளில் இருந்ததாக. அத்த வசனங்கள் எல்லாம் உண்மையா?

 

இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் கட்டிக்காக்க முயலும் எவருக்குமே உயிராபத்து உண்டு  என்பது வெள்ளிடை மலை. 

அது இந்திராவாக இருந்தால் என்னா, மகனே பேரனோ எவருமே விதிவிலக்கல்ல. ராகுல்காந்தி playboy யாக இருக்கும் வரை அவருக்கு எதுவுமே ஆகாது. ஆனால் அனைவராலும் மதிக்கப்படும் இந்தியத் தலைவராக வெளிப்படுவாரானால் அவருக்கு ஏதாவது ஒரு தீவிரவாத அமைப்பை முன்னிறுத்தி உயிராபத்து ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை செயற்கையாகவே உண்டுபண்ணுவார்கள். 

தற்போதைய BJP அரசுகள் இந்தியாவில் பிரிவினையையும் ஒருமைப்பாட்டையும் சீர்குலைக்கும் வேலையை கனகச்சிதமாக மேற்கொள்வதை நாம் நாளாந்தம் காண்கிறோமே?

கைப் பூச்சிற்கு கண்ணாடி வேறு தேவையா ? 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.