Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

இறுதிச் சடங்கு

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

3-D4-F0-EA7-8-B8-F-4435-8-B1-A-4594-F6-C

இறந்தவர்களது இறுதி நிகழ்வு ஒவ்வொரு மதங்களிலும் மாறுபட்டிருக்கின்றது. ஆனாலும் கால ஓட்டத்தில் சடங்குகளில் ஆங்காங்கே மாற்றங்கள் நிகழ்கின்றன.

சைவர்களைப் பொறுத்தளவில் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த வழிமுறைகள் ஏனென்ற விளக்கங்கள் இல்லாமல் இன்றும் தொடர்வதுதான் புரியவில்லை. கொஞ்சம் உற்றுப் பார்த்தால் புலம்பெயர் நாடுகளில் அது ஒரு வியாபாரமாகவே தென்படுகின்றது.

சமீபத்தில் உறவினர் ஒருவரது இறுதி நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். இறந்தவரை தூய்மையாக்கி, அழகுபடுத்தி, நல்ல உடை அணிவித்து மரப்பெட்டிக்குள் வைத்திருந்தார்கள். தூரத்தில் இருந்து மட்டுமல்ல அருகில் சென்று பார்க்கும் போது கூட அவர் அமைதியாக உறங்குவது போன்ற தோற்றமே தெரிந்தது. இறந்து விட்டார் என்ற எண்ணமே தோன்றாத வகையில் முகத்தில் ஒரு சிறிய புன்னகை தவள அவர் உறங்கிக் கொண்டிருந்தார். அந்தளவுக்கு அழகாக எல்லாவற்றையும் சிரத்தையோடு செய்திருந்தார்கள். இதற்காக உறவினர்கள் அந்த நிறுவனத்துக்கு பணம் கொடுத்திருப்பார்கள் என்பது வெள்ளிடை மலை.

இப்பொழுது சைவர் அல்லது சவுண்டி ஐயர் கிரிகை செய்வதற்காக, தன் மனைவியுடன் மண்டபத்திற்குள் வந்தார்.  சைவர் என்று நான் குறிப்பிட்டிருப்பதில் சிலருக்கு ஒரு குழப்பம் இருக்கலாம். அதற்காக ஒரு சிறிய தகவல். பிராமணர்கள் இறந்தால் மட்டும் குருக்கள் கிரிகை செய்வார். மற்றவர்களுக்கு  நான் குறிப்பிட்ட சைவர் (அல்லது சவுண்டி ஐயர்)தான் கிரிகை செய்வார்.

நான் கலந்து கொண்ட அந்த இறுதிக் கிரிகையில் அந்த சவுண்டி ஐயர் மனைவியுடன் வந்ததற்குக் காரணம் இருக்கிறது. நான் விசாரித்து அறிந்து கொண்ட வரையில் யேர்மனியில் சவுண்டி ஐயர் கிடையாது. பக்கத்தில் சுவிஸ் நாட்டில் இருந்துதான் வரவேண்டும். ஆக யேர்மனி வாழ் சைவ மதத்தார் ஒருவரது இறுதிக் கிரிகை செய்வதாயின் சவுண்டி ஐயர் சுவிஸில் இருந்து வந்து யேர்மனியில் தங்குவதற்கு முதலில் ஹோட்டலில் அறை ஒன்றை பதிவு செய்ய வேண்டும். அதுவும் இரண்டுபேர் தங்குவதற்கான வசதிகள் இருக்க வேண்டும். இங்கே சவுண்டி ஐயர் மனைவியையும் அழைத்துக் கொண்டு வருவதில் அவருக்கு பல அனுகூலங்கள் இருக்கலாம் அது இங்கு தேவை இல்லாத விடயம் என்பதால் விட்டு விடுகிறேன். ஆனால், பொதுவாக  இறுதிக் கிரிகைகளில் பெண்கள் முன்னிலைப் படுத்தப் படுவதில்லை அதுவும் ஒரு கணவனுடன் வாழும் ஒரு பெண் அதாவது சுமங்கலி, இறுதிக் கிரிகையில் முன்னிலைப் படுத்தப் படுவதில்லை. ஆனால் சவுண்டி ஐயரிடம் இதுவரை இந்தக் கேள்வியை யாரும் கேட்டதாகத் தெரியவில்லை.

சவுண்டி ஐயர் விபரமானவர். இறந்த உறவினர்களில் அதுவும் வேட்டி கட்டிக் கொண்டு வந்த இருவரை இனம் கண்டு தன்னுடன் இணைத்துக் கொண்டார். அரப்பு வைத்து, இளநீர் தெளித்து, கற்பூரம் காட்டி, தேவாரம் பாடி ஏதேதோ செய்தார். ஏற்கனவே தூய்மையாகப் படுத்திருப்பவருக்கு ஏன் அரப்பும் இளநீரும் என்று எனக்கு விளங்கவேயில்லை.

யாராவது சிவபுராணம் தெரிஞ்சவர்கள் பாடுங்கோ” என்று சவுண்டி ஐயர் வேண்டுகோள் விடுக்க, அதற்கென்று காத்திருந்தவர்கள் போல் இரண்டு பெண்கள் எழுந்து பாடத் தொடங்கினார்கள்.

“….வேகங் கொடுத்தாண்ட வேந்தனடி வெல்க

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க

புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க….”

அவர்களது சிவாபுராணத்திற்கு நடுவில் பக்கத்தில் அமர்ந்திருந்தவரது முணுமுணுப்பு எனக்குக் கேட்டது.

அவரைப் பார்த்தேன். எனக்கு நன்கு பரிச்சயமானவர் என்பதால் மெதுவாகச் சொன்னார். “இரண்டு மணித்தியாலங்கள்தான் கிரிகைக்கு நேரம் ஒதுக்கித் தந்திருக்கினம். இவர் இப்ப சிவபுராணம் முடிச்சு பொற்சுண்ணம் இடிச்சு…”

அவரது பேச்சில் உயிரில்லை. எதற்கு வில்லங்கம் என்று நான் ஏதும் பேசாமல் இருந்தேன். அவரே தொடர்ந்தார்,  “இறந்தவரின்ரை பெருமை பேச பலர் காத்திருக்கினம். போற போக்கைப் பாத்தால் அது முடியாது போல இருக்கு”

அவர் ‘பொற்சுண்ணம்’ என்று சொன்ன போது எப்போதோ நான் படித்தது நினைவுக்கு வந்தது.  தில்லையம்பல வீதியில் பெண்கள் ஆடிப் பாடிக் கொண்டு வாசனைத் திரவியங்களை உரலில் போட்டு இடித்த காட்சியைக் கண்ட,  நரியை பரியாக்கிய மாணிக்கவாசகருக்கு அந்தப் பாடல்கள் பிடித்துப்போக அதை சிவனுக்காக ‘உல்டா’ செய்து பொற்சுண்ணத்தை உருவாக்கி அன்பர்களுக்குத் தந்திருந்தார். தமிழ்நாட்டில் கோவில் கொடியேற்றம், கொடியிறக்கம் நிகழ்ச்சியில் பாடப்படும் பொற்சுண்ணத்தை யாழ்ப்பாணத் தமிழர் இறந்தவர்களின் கிரிகைகளுக்கு எடுத்துக் கொண்டார்கள்.

ஒருவழியாக சிவபுராணம் முடிஞ்சு சவுண்டி ஐயர் பொற்சுண்ணம் பாடத் தொடங்கினார் பாடல்களில் நடுவே கொங்கைகள், மங்கைகள், செவ்விதழ்கள் எல்லாம் வந்தன. ஒன்பதாம் நூற்றாண்டில் தணிக்கைக் குழுவினர்கள் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும் சிவன் அதை இரசித்திருப்பார்.

பக்கத்தில் இருந்தவர் சொன்னார், “இப்பவே ஞாயமான நேரம் போட்டுது. பேசுறதுக்கு நேரம் போதாது” இப்பொழுதுதான் நான் என் திருவாய் மலர்ந்தேன். பொற்சுண்ணம் முடிஞ்ச கையோடை உடனேயே நீங்கள் போய் பேசுங்கோ. உங்களைப் பாத்திட்டு மற்றைவையளும் வருவினம்”

யாராவது ஒரு ‘சப்போர்ட்’ தர மாட்டினமா என்ற நிலையில் இருந்த அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

பொற்சுண்ணம்  இருபது பாடல்களும் முடிந்து ஐயர் இருக்கையை விட்டு எழும்பும் முன்னரே இவர் ஓடிப் போய், இறந்தவரது பெருமையைப் பேச ஆரம்பித்தார். நான் நினைத்தபடியே அவரைத் தொடர்ந்து பலர் வந்தார்கள். நான் முந்தி நீ முந்தி என்று அங்கே முண்டியடித்ததால் இறந்தவரைச் சுற்றி ஒரு கும்பல் கூடிவிட்டது.

என்னதான் இறந்தவரைப் பற்றிய பேச்சுக்களில் விடயங்கள் இருந்தாலும், சவுண்டி ஐயர் அப்பப்ப மணி அடித்து தன் வேலையிலேயே கவனமாக இருந்தார். சவுண்டி ஐயரினுடைய பெயர் கெட்டுப் போகக் கூடாது என்பது அவருக்குத் தெரியாதா?

இரண்டு மணி நேரம் போய்விட்டது. பலரால் பேச முடியவில்லை என்பது ஒரு புறமாக இருந்தாலும் எனது இறுதி வணக்கத்தைத் தெரிவிக்க இறந்தவர் படுத்திருக்கும் இடத்திற்குச் சென்றேன். அவரது நெற்றியில் பட்டையாக விபூதி, கண்களில் மஞ்சள் களி, அதன்மேல் அவரது கண்ணாடி. ஆங்காங்கே அவர் முகத்தில் எண்ணெய், தண்ணீர், வாய்க்கரிசி, பூக்கள் என பரவி இருந்தன. கிரிகைக்கு முன்னர் நான் பார்த்த இறந்தவரின் சாந்தமான முகத்தை இப்பொழுது காணவில்லை. தூய்மையாகக் கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தவரை சவுண்டி ஐயர் ஒரு பாடு படுத்தியிருந்தார். விசாரித்ததில் இறந்தவரைத் தகனம் செய்வதற்காகக் கொடுக்கப் படும் தொகைக்கு சற்றுக் கீழாக சவுண்டி ஐயரின் சன்மானம் இருந்தது.

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தங்களோடு ஆன்மீகத்தையும் சேர்த்துக் கொண்டு புலம் பெயர்ந்தது மிகவும் கவலை அளிக்கிறது” என்று பேராசிரியர் சுப வீரபாண்டியன் அவர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது.

வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக “நான் இறந்து விட்டால் சமயச்சடங்குகள் செய்ய வேண்டாம்” என எழுதி வைத்தேன்.

- கவி அருணாசலம்

 • Like 17
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இறந்தவருக்கு செய்யும் சில சடங்குகளை... 
பிள்ளைகள்  பலர் தமது ஆத்ம திருப்திக்காக செய்கின்றனர்.
அது சிலவேளை... இருக்கும் நாட்டின் நேர கட்டுப்பாடுகளை 
மீறி சென்று விடுவது கவலைக்குரியது.

நான் வசிக்கும் நகரத்தில் ஒரு இறுதிச் சடங்கு நடந்தது.
இறந்தவர் பலரின் அன்புக்கும், நட்புக்கும்  உரியவர் என்பதால்...
பக்கத்து நகரங்களில் இருந்து எல்லாம் பெருந்திராளன மக்கள் வந்திருந்தார்கள்.
மயானத்தில் சடங்கு நடக்கும் நேரம்... எனது அயல் வீட்டு ஜேர்மன் பெண்மணியும்  
வேறு அலுவலாக மயானத்துக்கு சென்றவர்... அங்கு பெண்கள் கத்திக் குழறி அழுததில்
மயானமே அதிர்ந்தது என்று சொன்னார்.

அந்த அழுகையின் ஒலியை கேட்டு, தனக்கு இரண்டு நாள்... 
மனதிற்கு, ஒரு மாதிரி இருந்தது என்று  தெரிவித்தார்.
அவரின் முகத்தில்... அந்தப் பீதி தெரிந்தது உண்மை.

அயல்நாட்டு...  செத்த வீட்டில் அழுவதும்,
இடைஞ்சல்  என்று, அன்று  புரிந்து கொண்டேன்.

இன்னுமொரு சம்பவம்... இதுகும், ஜேர்மனி தான்... 
எனக்கு பழக்கமான ஒருவரின் இறுதிச் சடங்குக்கு போய் இருந்தேன்.
இந்தச் சடங்கை  மயானத்தில் வைக்காமல்,  
ஒரு அழகிய மண்டபத்தை வாடகைக்கு எடுத்து 
அதில் சமயச் சடங்குகள், நடத்திய பின்...  பெட்டியை மூடி, 
இறுதிச் சடங்கை... வேறொரு தினத்தில் எரிக்கும் 
நிறுவனத்திடம் கொடுத்து விட்டார்கள். 

(அதன் பின்.. தலைகீழாக நின்றாலும்,
யாரும்.. அந்தப் பெட்டியை திறந்து பார்க்க முடியாது.
அவர்கள் உடலை எரித்து விட்டு, குறிப்பிட்ட நாளில், சாம்பலை தருவார்கள்.)

பெட்டியை மூடி...  உடல் அந்த  நிறுவனத்திடம் சென்ற பின்...
மரணச்சடங்கு முடிந்து விடுவதுதான் வழமை என்பதால்...
அங்கு நின்ற உரியவர்களுக்கு, கை கொடுத்து கிளம்ப தயாரான போது...

போகாதேங்கோ... சாப்பிட்டு போங்கோ என்று சொன்னார்கள்.
ஊரில் கூட... செத்த வீடு நடந்த இடத்தில் சாப்பாடு கொடுப்பது வழமை இல்லை.
(ஜேர்மன்காரரின்   செத்த வீட்டில், எல்லாம் முடிந்தபின்..  
நெருங்கிய இரத்த உறவினர்கள் உணவு விடுதியில் உண்பார்கள்.)

எங்களுடைய செத்த வீட்டில்... உணவு, அதுகும்...
ஆட்டு இறைச்சி கறியுடன் பரிமாறியது..  ஆச்சரியமாக இருந்தது.

Edited by தமிழ் சிறி
 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

இறந்தவரை தூய்மையாக்கி, அழகுபடுத்தி, நல்ல உடை அணிவித்து மரப்பெட்டிக்குள் வைத்திருந்தார்கள். தூரத்தில் இருந்து மட்டுமல்ல அருகில் சென்று பார்க்கும் போது கூட அவர் அமைதியாக உறங்குவது போன்ற தோற்றமே தெரிந்தது. இறந்து விட்டார் என்ற எண்ணமே தோன்றாத வகையில் முகத்தில் ஒரு சிறிய புன்னகை தவள அவர் உறங்கிக் கொண்டிருந்தார். அந்தளவுக்கு அழகாக எல்லாவற்றையும் சிரத்தையோடு செய்திருந்தார்கள். இதற்காக உறவினர்கள் அந்த நிறுவனத்துக்கு பணம் கொடுத்திருப்பார்கள் என்பது வெள்ளிடை மலை.

இறந்தவரை அழகுபடுத்தி அமைதியாக உறங்குவது போல் செய்யவும் பணம் கொடுத்து பின்னர்  அந்த சவுண்டி ஐயர் அந்த எமது அன்புக்கினியவரின்  திருவுடலை அசிங்கம் செய்து பார்பபதற்கும்,  விகாரமாக ஆக்குவதற்கும் பணத்தை வாரியிறைப்போம்.   இறுதியில் அந்த விகார  நிலையிலே  அந்த அன்புக்குரியவரின் திருவுடலை அனுப்பிவைப்போம்.  

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kavi arunasalam said:

3-D4-F0-EA7-8-B8-F-4435-8-B1-A-4594-F6-C

இறந்தவர்களது இறுதி நிகழ்வு ஒவ்வொரு மதங்களிலும் மாறுபட்டிருக்கின்றது. ஆனாலும் கால ஓட்டத்தில் சடங்குகளில் ஆங்காங்கே மாற்றங்கள் நிகழ்கின்றன.

சைவர்களைப் பொறுத்தளவில் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த வழிமுறைகள் ஏனென்ற விளக்கங்கள் இல்லாமல் இன்றும் தொடர்வதுதான் புரியவில்லை. கொஞ்சம் உற்றுப் பார்த்தால் புலம்பெயர் நாடுகளில் அது ஒரு வியாபாரமாகவே தென்படுகின்றது.

சமீபத்தில் உறவினர் ஒருவரது இறுதி நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். இறந்தவரை தூய்மையாக்கி, அழகுபடுத்தி, நல்ல உடை அணிவித்து மரப்பெட்டிக்குள் வைத்திருந்தார்கள். தூரத்தில் இருந்து மட்டுமல்ல அருகில் சென்று பார்க்கும் போது கூட அவர் அமைதியாக உறங்குவது போன்ற தோற்றமே தெரிந்தது. இறந்து விட்டார் என்ற எண்ணமே தோன்றாத வகையில் முகத்தில் ஒரு சிறிய புன்னகை தவள அவர் உறங்கிக் கொண்டிருந்தார். அந்தளவுக்கு அழகாக எல்லாவற்றையும் சிரத்தையோடு செய்திருந்தார்கள். இதற்காக உறவினர்கள் அந்த நிறுவனத்துக்கு பணம் கொடுத்திருப்பார்கள் என்பது வெள்ளிடை மலை.

இப்பொழுது சைவர் அல்லது சவுண்டி ஐயர் கிரிகை செய்வதற்காக, தன் மனைவியுடன் மண்டபத்திற்குள் வந்தார்.  சைவர் என்று நான் குறிப்பிட்டிருப்பதில் சிலருக்கு ஒரு குழப்பம் இருக்கலாம். அதற்காக ஒரு சிறிய தகவல். பிராமணர்கள் இறந்தால் மட்டும் குருக்கள் கிரிகை செய்வார். மற்றவர்களுக்கு  நான் குறிப்பிட்ட சைவர் (அல்லது சவுண்டி ஐயர்)தான் கிரிகை செய்வார்.

நான் கலந்து கொண்ட அந்த இறுதிக் கிரிகையில் அந்த சவுண்டி ஐயர் மனைவியுடன் வந்ததற்குக் காரணம் இருக்கிறது. நான் விசாரித்து அறிந்து கொண்ட வரையில் யேர்மனியில் சவுண்டி ஐயர் கிடையாது. பக்கத்தில் சுவிஸ் நாட்டில் இருந்துதான் வரவேண்டும். ஆக யேர்மனி வாழ் சைவ மதத்தார் ஒருவரது இறுதிக் கிரிகை செய்வதாயின் சவுண்டி ஐயர் சுவிஸில் இருந்து வந்து யேர்மனியில் தங்குவதற்கு முதலில் ஹோட்டலில் அறை ஒன்றை பதிவு செய்ய வேண்டும். அதுவும் இரண்டுபேர் தங்குவதற்கான வசதிகள் இருக்க வேண்டும். இங்கே சவுண்டி ஐயர் மனைவியையும் அழைத்துக் கொண்டு வருவதில் அவருக்கு பல அனுகூலங்கள் இருக்கலாம் அது இங்கு தேவை இல்லாத விடயம் என்பதால் விட்டு விடுகிறேன். ஆனால், பொதுவாக  இறுதிக் கிரிகைகளில் பெண்கள் முன்னிலைப் படுத்தப் படுவதில்லை அதுவும் ஒரு கணவனுடன் வாழும் ஒரு பெண் அதாவது சுமங்கலி, இறுதிக் கிரிகையில் முன்னிலைப் படுத்தப் படுவதில்லை. ஆனால் சவுண்டி ஐயரிடம் இதுவரை இந்தக் கேள்வியை யாரும் கேட்டதாகத் தெரியவில்லை.

சவுண்டி ஐயர் விபரமானவர். இறந்த உறவினர்களில் அதுவும் வேட்டி கட்டிக் கொண்டு வந்த இருவரை இனம் கண்டு தன்னுடன் இணைத்துக் கொண்டார். அரப்பு வைத்து, இளநீர் தெளித்து, கற்பூரம் காட்டி, தேவாரம் பாடி ஏதேதோ செய்தார். ஏற்கனவே தூய்மையாகப் படுத்திருப்பவருக்கு ஏன் அரப்பும் இளநீரும் என்று எனக்கு விளங்கவேயில்லை.

யாராவது சிவபுராணம் தெரிஞ்சவர்கள் பாடுங்கோ” என்று சவுண்டி ஐயர் வேண்டுகோள் விடுக்க, அதற்கென்று காத்திருந்தவர்கள் போல் இரண்டு பெண்கள் எழுந்து பாடத் தொடங்கினார்கள்.

“….வேகங் கொடுத்தாண்ட வேந்தனடி வெல்க

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க

புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க….”

அவர்களது சிவாபுராணத்திற்கு நடுவில் பக்கத்தில் அமர்ந்திருந்தவரது முணுமுணுப்பு எனக்குக் கேட்டது.

அவரைப் பார்த்தேன். எனக்கு நன்கு பரிச்சயமானவர் என்பதால் மெதுவாகச் சொன்னார். “இரண்டு மணித்தியாலங்கள்தான் கிரிகைக்கு நேரம் ஒதுக்கித் தந்திருக்கினம். இவர் இப்ப சிவபுராணம் முடிச்சு பொற்சுண்ணம் இடிச்சு…”

அவரது பேச்சில் உயிரில்லை. எதற்கு வில்லங்கம் என்று நான் ஏதும் பேசாமல் இருந்தேன். அவரே தொடர்ந்தார்,  “இறந்தவரின்ரை பெருமை பேச பலர் காத்திருக்கினம். போற போக்கைப் பாத்தால் அது முடியாது போல இருக்கு”

அவர் ‘பொற்சுண்ணம்’ என்று சொன்ன போது எப்போதோ நான் படித்தது நினைவுக்கு வந்தது.  தில்லையம்பல வீதியில் பெண்கள் ஆடிப் பாடிக் கொண்டு வாசனைத் திரவியங்களை உரலில் போட்டு இடித்த காட்சியைக் கண்ட,  நரியை பரியாக்கிய மாணிக்கவாசகருக்கு அந்தப் பாடல்கள் பிடித்துப்போக அதை சிவனுக்காக ‘உல்டா’ செய்து பொற்சுண்ணத்தை உருவாக்கி அன்பர்களுக்குத் தந்திருந்தார். தமிழ்நாட்டில் கோவில் கொடியேற்றம், கொடியிறக்கம் நிகழ்ச்சியில் பாடப்படும் பொற்சுண்ணத்தை யாழ்ப்பாணத் தமிழர் இறந்தவர்களின் கிரிகைகளுக்கு எடுத்துக் கொண்டார்கள்.

ஒருவழியாக சிவபுராணம் முடிஞ்சு சவுண்டி ஐயர் பொற்சுண்ணம் பாடத் தொடங்கினார் பாடல்களில் நடுவே கொங்கைகள், மங்கைகள், செவ்விதழ்கள் எல்லாம் வந்தன. ஒன்பதாம் நூற்றாண்டில் தணிக்கைக் குழுவினர்கள் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும் சிவன் அதை இரசித்திருப்பார்.

பக்கத்தில் இருந்தவர் சொன்னார், “இப்பவே ஞாயமான நேரம் போட்டுது. பேசுறதுக்கு நேரம் போதாது” இப்பொழுதுதான் நான் என் திருவாய் மலர்ந்தேன். பொற்சுண்ணம் முடிஞ்ச கையோடை உடனேயே நீங்கள் போய் பேசுங்கோ. உங்களைப் பாத்திட்டு மற்றைவையளும் வருவினம்”

யாராவது ஒரு ‘சப்போர்ட்’ தர மாட்டினமா என்ற நிலையில் இருந்த அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

பொற்சுண்ணம்  இருபது பாடல்களும் முடிந்து ஐயர் இருக்கையை விட்டு எழும்பும் முன்னரே இவர் ஓடிப் போய், இறந்தவரது பெருமையைப் பேச ஆரம்பித்தார். நான் நினைத்தபடியே அவரைத் தொடர்ந்து பலர் வந்தார்கள். நான் முந்தி நீ முந்தி என்று அங்கே முண்டியடித்ததால் இறந்தவரைச் சுற்றி ஒரு கும்பல் கூடிவிட்டது.

என்னதான் இறந்தவரைப் பற்றிய பேச்சுக்களில் விடயங்கள் இருந்தாலும், சவுண்டி ஐயர் அப்பப்ப மணி அடித்து தன் வேலையிலேயே கவனமாக இருந்தார். சவுண்டி ஐயரினுடைய பெயர் கெட்டுப் போகக் கூடாது என்பது அவருக்குத் தெரியாதா?

இரண்டு மணி நேரம் போய்விட்டது. பலரால் பேச முடியவில்லை என்பது ஒரு புறமாக இருந்தாலும் எனது இறுதி வணக்கத்தைத் தெரிவிக்க இறந்தவர் படுத்திருக்கும் இடத்திற்குச் சென்றேன். அவரது நெற்றியில் பட்டையாக விபூதி, கண்களில் மஞ்சள் களி, அதன்மேல் அவரது கண்ணாடி. ஆங்காங்கே அவர் முகத்தில் எண்ணெய், தண்ணீர், வாய்க்கரிசி, பூக்கள் என பரவி இருந்தன. கிரிகைக்கு முன்னர் நான் பார்த்த இறந்தவரின் சாந்தமான முகத்தை இப்பொழுது காணவில்லை. தூய்மையாகக் கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தவரை சவுண்டி ஐயர் ஒரு பாடு படுத்தியிருந்தார். விசாரித்ததில் இறந்தவரைத் தகனம் செய்வதற்காகக் கொடுக்கப் படும் தொகைக்கு சற்றுக் கீழாக சவுண்டி ஐயரின் சன்மானம் இருந்தது.

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தங்களோடு ஆன்மீகத்தையும் சேர்த்துக் கொண்டு புலம் பெயர்ந்தது மிகவும் கவலை அளிக்கிறது” என்று பேராசிரியர் சுப வீரபாண்டியன் அவர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது.

வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக “நான் இறந்து விட்டால் சமயச்சடங்குகள் செய்ய வேண்டாம்” என எழுதி வைத்தேன்.

- கவி அருணாசலம்

நீண்ட நாட்களின்பின்  கவி அண்ணாவின் பதிவு கண்டு மகிழ்ச்சி . சமுதாயம் காசுக்காக விலைபோய் விடடது.  அழகிய எழுத்து நடையில் தங்களின்பதிவு சிறப்பாக இருக்கிறது. 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது இங்கு அநேகமான செத்தவீடுகளில் பாட்டுப் பாட வருபவர்களே முழுசடங்கையும் செய்து விடுகிறார்கள்........ சவுண்டி அய்யர் கிடையாது......!

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

போகாதேங்கோ... சாப்பிட்டு போங்கோ என்று சொன்னார்கள்.
ஊரில் கூட... செத்த வீடு நடந்த இடத்தில் சாப்பாடு கொடுப்பது வழமை இல்லை.

இல்லை சிறி

வழமையில் இறந்த உடல் வீட்டைவிட்டு கிழம்பியதும் வீடு கழுவி எல்லோரும் தலைமுழுகி இருப்பார்கள்.

உற்றார் உறவினர் யாராவது (அனேகமாக மதிய சாப்பாடு)சமைத்து எடுத்து வருவார்கள்.ஆனால் மச்சம் இருக்காது.

இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் சுடலைக்கு போனவர்களும் அவரவர் வீடு போய் தலைமுழுகி இங்கு வந்து சாப்பிடுவார்கள்.

இங்கும் சுடலையில் பலரையும் வீட்டுக்கு வந்து சாப்பிட சொல்லி அழைப்பார்கள்.

சிலர் உங்களுக்கு தெரியும் தானே கோவிலுக்கு போறனாங்கள் என்று நழுவிவிடுவர்.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kavi arunasalam said:

இரண்டு மணி நேரம் போய்விட்டது. பலரால் பேச முடியவில்லை என்பது ஒரு புறமாக இருந்தாலும் எனது இறுதி வணக்கத்தைத் தெரிவிக்க இறந்தவர் படுத்திருக்கும் இடத்திற்குச் சென்றேன். அவரது நெற்றியில் பட்டையாக விபூதி, கண்களில் மஞ்சள் களி, அதன்மேல் அவரது கண்ணாடி. ஆங்காங்கே அவர் முகத்தில் எண்ணெய், தண்ணீர், வாய்க்கரிசி, பூக்கள் என பரவி இருந்தன. கிரிகைக்கு முன்னர் நான் பார்த்த இறந்தவரின் சாந்தமான முகத்தை இப்பொழுது காணவில்லை. தூய்மையாகக் கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தவரை சவுண்டி ஐயர் ஒரு பாடு படுத்தியிருந்தார். விசாரித்ததில் இறந்தவரைத் தகனம் செய்வதற்காகக் கொடுக்கப் படும் தொகைக்கு சற்றுக் கீழாக சவுண்டி ஐயரின் சன்மானம் இருந்தது.

கவி
நாள் முழுவதும் வைத்து பார்த்த உடலை கடைசிநேரம் கொஞ்சம் அசிங்கமாக்கினால் என்ன?
பரவாயில்லை விடுங்க,இன்னும் கொஞ்ச நேரத்தில் சாம்பலாக போறவர் தானே.

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நல்தொரு பதிவு.

15 hours ago, Kavi arunasalam said:

பக்கத்தில் சுவிஸ் நாட்டில் இருந்துதான் வரவேண்டும். ஆக யேர்மனி வாழ் சைவ மதத்தார் ஒருவரது இறுதிக் கிரிகை செய்வதாயின் சவுண்டி ஐயர் சுவிஸில் இருந்து வந்து யேர்மனியில் தங்குவதற்கு முதலில் ஹோட்டலில் அறை ஒன்றை பதிவு செய்ய வேண்டும். அதுவும் இரண்டுபேர் தங்குவதற்கான வசதிகள் இருக்க வேண்டும். இங்கே சவுண்டி ஐயர் மனைவியையும் அழைத்துக் கொண்டு வருவதில் அவருக்கு பல அனுகூலங்கள் இருக்கலாம்

சுவிஸ் உறவினர் தெரிவித்ததில் அந்த ஐயர் அங்கே கூட மனைவியுடன் தான் சடங்கு செய்ய கலந்து கொள்வாராம்.

இறந்தவரின் பெருமை பேசுவது, ஒவ்வொருவராக குடும்பத்தார் வந்து பேசுவது பொறுமையை சோதித்து தாங்க முடியாத அளவுக்கு போகின்றது இலங்கையில் எல்லாம் இப்படி முறை இல்லை என்றார்கள் வெளிநாட்டில்  கண்டுபிடிப்பாம்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கவி ஐயா...

மனசை ஆசுவாசப்படுத்திக்கொளுங்கள்.  இங்கே கனடாவில் சொற்ப நாட்களுக்கு முன்னம்  ஒரு யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐயாவின் செத்த வீடு மெகா மெகா (மிக.. மிக.. இதைத்தான் இப்படி எழுதினேன்)  நிகழ்ச்சியாக செய்திருந்தார்கள்.
செத்தவரின் பிள்ளைகள் இங்கே வீடுவிற்பனை துறையில் கை நிறைய காசு பார்த்த கோஷ்டியாம்.
சரி இவரின் மரணச்சடங்கு எப்படி இருந்தது தெரியுமா? இதை எழுத எனக்கு கை கூசும் அளவுக்கு விஷயங்கள் இருக்கு. வீடியோ கூட இருக்கும் அதை இங்கே எப்படி இணைப்பது என்று தெரியவில்லை.
இந்தியாவில் அரசியல் பிரமுகர்களுக்கு வைக்கப்படும் ஆளுயர கட்வுட் செத்தவருக்கு செய்யப்பட்டு பெரும் தொகை ஆடம்பர வாகன அணி ஒன்றில் அவை பொருத்தப்பட்டு வீதிகளை சுற்றிவர, அந்த வாகன அணியில்  ரோல்ஸ் ராய்ஸ், 5ம் மேட்பட்ட லம்போர்கினி, மற்றும் விலைமதிக்கமுடியாத உயர் ரக வாகனங்கள், பிரிட்டிஷ் மகாராணி போவதை போன்ற 2 வெள்ளை குதிரை பொருத்தப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை சரியட் வண்டி, ஆயிரக்கணக்கான பலநிறங்கொண்ட பிரெஷ் (நிஜப் பூக்கள்) அலங்காரம் செய்யப்பட்ட யாழ்ப்பாணத்து ஸ்டைல் பாடை, பாதைக்கு முன்னே கயானாக்காரர்களின் (இந்துக்களின்) பறைக்கு ஒத்த  பாரம்பரிய இசை, வெள்ளை நிற ஆடை அணிந்த ஆண்கள் பெண்களின் அணிவகுப்பு.. இப்படியெல்லாம் நடக்க.. கடைசியில் இன்னும் ஒரு ஏற்பாடு செய்திருந்தார்கள் பாருங்கள் நமக்கு BP எகிறிட்டது!!
2 கூடைகள் நிறைய வெள்ளை புறாக்களை அந்த இத்துப்போன... ஸாரி... ஸாரி செத்துப்போன ஐயாவின் பிள்ளைகள் பறக்கவிட்டார்கள்... இன்னும் என்ன என்ன அசிங்கங்களை செய்தார்களோ  ஆனால் ஒன்று  செத்தவரை வைத்து "நன்றாக செய்தார்கள்".

இன்னும் ஒரு கொசுறு தகவல் ..
ஒரு வருசத்துக்கு முன்னம் கோவிட்  காலத்தில் இதே செத்துப்போன ஐயாவின் பிறந்தானாலோ, கல்யாண நினைவு நாளோ எதோ ஒரு நிகழ்வுக்கு இப்படியான படாடோபமான ஒரு வீடியோ ரிலீஸ் செய்திருந்தார்கள்.
ஐயாவுக்காக இலங்கையில் இருந்து ஆட்டோ (முச்சக்கர வண்டி) தருவிக்கப்பட்டு, ஐயா ரஜினி ஸ்டைலில் "நான் ஆட்டோ காரன் ஆட்டோ காரன்" பாட்டுக்கு ஆட்டோ ஓட்டி, பிறகு ஒரு ஜீப் வண்டிக்கு தாவி, அங்கிருந்து இன்னும் ஒரு பாடல் பின்னணியோடு ஜீப்பை ஓட்டி சென்று, மூன்றாவதாக ஒரு ஆரேஞ் நிற லம்போகினி வண்டிக்கு தாவி அதை முடுக்கி ஓட்ட (பின்னணி இசை ஞாபகம் இல்லை) கடைசியாக பொன் கம்பளம் "ரெட் கார்ப்பட்"  விரிக்கப்பட்ட ஒரு இடத்தில லம்போகினியை பார்க்கிங்க் செய்து அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரத்தியேக "பிரைவேட்" ஜெட் வண்டி ஒன்றில் அங்கே ஏற்கனவே அய்யாவின் வருகைக்கு காத்திருந்த அம்மாவோடு (இன்னும் ஒரு சினிமா பின்னணி இசையோடு) கைகோர்த்து அன்னநடை நடந்து இவர்களுக்காக கம்பீரமாக காத்திருந்த பளபளப்பான  "பிரைவேட் ஜெட்" வண்டியின் படிகளில் ஏறி ஒரு பன்நெடும் அரசியல்வாதியை போல கைகாட்டி விடைபெறுவார். இந்த வீடியோ கண்ராவியெல்லாம் இன்னும் இணைய தளத்தில் இருக்கும்.
தேடி முடிந்தால் ஒட்டுகின்றேன். 
ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ஆறடி நிலமே சொந்தமடா ( அதுவும் கூட நிரந்தரம் அல்ல)

 • Like 1
 • Haha 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Sasi_varnam said:

தேடி முடிந்தால் ஒட்டுகின்றேன். 

அவரது இறுதி ஊர்வல வீடியோ வாட்ஸப்பில் வந்தது.. பார்த்தேன். வெள்ளைப் புறாக்கள் பெட்டிக்குள் எச்சம் போட்டனவா என்ற கேள்விதான் குடைச்சலாக இருந்தது

 • Haha 6
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 "அற்பனுக்கு பவிசு ( வாழ்வு ) வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பார்". எனும் பழமொழி எனோ நினைவில் வந்து போகிறது .  இன சனம் யாழ் களம் வாசித்தால் மன்னிக்கவும்.

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அவரது இறுதி ஊர்வல வீடியோ வாட்ஸப்பில் வந்தது.. பார்த்தேன். வெள்ளைப் புறாக்கள் பெட்டிக்குள் எச்சம் போட்டனவா என்ற கேள்விதான் குடைச்சலாக இருந்தது

பைத்தியங்கள் பலவிதம்

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கவி ஐயா, நான் அறிந்தளவில் அனேகமானோர் மரணத்தைப்பற்றி கதைப்பதற்கு விரும்புவதில்லை, அதனால்தான் இந்தளவு கோலங்களும் என நினைப்பதுண்டு.. 

எனது மரண சடங்கு இப்படித்தான் இருக்கவேண்டும், இந்த சேலைதான் எனக்கு உடுத்திவிடவேண்டும் என்றோ இல்லை, என் மரணத்திற்கு பின் இந்த மாதிரி செய்யவேண்டும் என்றோ பெரும்பாலானவர்கள் கதைக்க விரும்புவதில்லை. 

எல்லோரும் நீண்ட காலம் வாழவே விரும்புவார்கள் ஆனால் மரணம் என்பது தவிர்க்க முடியாது என்பதையும் உணர்ந்தால் உயில் தொடங்கி அவர்களது எண்ணங்களையும் எழுதி வைக்கவேண்டும். 

இறந்தவரின் ஆசை என்பதால் அதை மீறமாட்டார்கள் எனலாம். விதிவிலக்குகளும் இல்லாமல் போகாது. 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2022 at 20:30, ஈழப்பிரியன் said:

கவி
நாள் முழுவதும் வைத்து பார்த்த உடலை கடைசிநேரம் கொஞ்சம் அசிங்கமாக்கினால் என்ன?
பரவாயில்லை விடுங்க,இன்னும் கொஞ்ச நேரத்தில் சாம்பலாக போறவர் தானே.

ஈழப்பிரியன்,

உங்களுடைய கருத்தை கடந்து போக என்னால் முடியவில்லை என்பதால் இதை எழுதுகிறேன்.

வாழும் போதே தெரிகிறது, நாம் என்றோ ஒருநாள் இறந்து விடுவோம் என்று. பட்டினத்தாரை படிக்கும் போதே தெரிகிறது, ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கேஎன்று.அதற்காக நாங்கள் எல்லாவற்றையுத் துறந்து விடுவதில்லை.

ஒருவர் எங்களுக்கு அறிமுகம் ஆகும் போது, அந்தக்கணமே அவர் அணிந்திருக்கும் ஆடை அவரது முகபாவங்கள், பேச்சு என்று அவரைப் பற்றிய விம்பம் மனதில் உடனேயே பதிந்து விடுகிறது. பல காலத்துக்குப் பின்னும் அவரைப் பற்றிய நினைவு வரும் போது அவரைச் சந்தித்த அந்த முதற் சந்திப்பில் இருந்து ஏதாவது ஒன்று வந்து போகும். அந்த நிலையை இறுதிச் சடங்கிலும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

உதாரணத்துக்கு நான் என் தாயை எடுத்துக் கொள்கிறேன். அவருடைய முகம் என்னுள் நிரந்தரமாகப் பதிந்திருக்கிறது. சில வேளைகளில் கண்ணாடியில் என்னையே நான் பார்க்கும் போது எனது அம்மாவின் முகம் வந்து போகும். தனது பிள்ளைகளைக் காணும் போதெல்லாம் அவர் முகத்தில் தோன்றும் பிரகாசம், கனிந்த அவரது சிரித்த முகம் எப்பொழுதும் என்னுள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இன்னும் சொற்ப நேரத்தில் சாம்பலாகப் போகிறார் என்று அவரது இறுதிச் சடங்கில் அவரது முகத்தில் சடங்கின் பெயரால் செய்வன எல்லாம் அவரது சிரித்த சாந்தமான இயல்பை மாற்றிவிட்டால், கடைசியாக எனது தாயைப் பார்த்த அந்த முகம்தானே பின்னாளில் எனக்குள் வந்து போகும். அதைத்தான் நான் வேண்டாம் என்கிறேன்.

சடங்கு என்ற சொல்லிக் கொண்டு பழையதையே பின்பற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு என்னுடன் உடன்பாடு இல்லாமல் போகலாம்.

10 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

எல்லோரும் நீண்ட காலம் வாழவே விரும்புவார்கள் ஆனால் மரணம் என்பது தவிர்க்க முடியாது என்பதையும் உணர்ந்தால் உயில் தொடங்கி அவர்களது எண்ணங்களையும் எழுதி வைக்கவேண்டும். 

இறந்தவரின் ஆசை என்பதால் அதை மீறமாட்டார்கள் எனலாம். விதிவிலக்குகளும் இல்லாமல் போகாது. 

பிரபா சிதம்பரநாதன்,

நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்கிறேன்.
இனி பிழைக்கமாட்டார் எந்தவித சிகிச்சையும் பயனளிக்காது என்ற நிலை வந்த போதும்கூட யேர்மனியில் கருணைக் கொலைக்கு சட்டம் இடம் கொடுக்கவில்லை. ஆனால் மருத்துவ விஷயங்களில் முடிவெடுக்க முடியாத ஒரு சூழ்நிலை வரும்போது, இந்த மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் அல்லது மேற்படக்கொள்ளக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக வயதுக்கு வந்தவர்கள் எல்லோரும், யேர்மனியில் ஒரு (Patientenverfügung) வாழும் உயிலை எழுதி வைக்க வசதி இருக்கிறது.

தனக்கு விபத்து, நோய் அல்லது முதுமை காரணமாக, எந்தவகையான மருத்துவ சிகிச்சைகள் விரும்பப்படுகின்றன அல்லது தேவையில்லை என்பதை ஒரு கட்டத்தில் கூற முடியாத நிலை யாருக்கும் வரலாம். அந்த நேரத்தில் இந்த உயில் பயன்தரும். இல்லாவிட்டால் கோமாவுக்குச் சென்றாலும் உணவு,தண்ணீர், சுவாசம் எல்லாமே செயற்கை முறையில் தரப்படும். சாக விடமாட்டார்கள். கட்டிலில் அசையாமல் படுத்திருப்பவருக்கு, சிகிச்சை தருபவர்களுக்கு, உறவுகளுக்கு எல்லோருக்கும் சிரமம்தான்.

நான் Patientenverfügung  எழுதி வைத்திருக்கிறேன். இணையத்தில் அதற்கான படிவம் கிடைக்கிறது.

 • Like 4
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

59 minutes ago, Kavi arunasalam said:

தனக்கு விபத்து, நோய் அல்லது முதுமை காரணமாக, எந்தவகையான மருத்துவ சிகிச்சைகள் விரும்பப்படுகின்றன அல்லது தேவையில்லை என்பதை ஒரு கட்டத்தில் கூற முடியாத நிலை யாருக்கும் வரலாம். அந்த நேரத்தில் இந்த உயில் பயன்தரும். இல்லாவிட்டால் கோமாவுக்குச் சென்றாலும் உணவு,தண்ணீர், சுவாசம் எல்லாமே செயற்கை முறையில் தரப்படும். சாக விடமாட்டார்கள். கட்டிலில் அசையாமல் படுத்திருப்பவருக்கு, சிகிச்சை தருபவர்களுக்கு, உறவுகளுக்கு எல்லோருக்கும் சிரமம்தான்.

நன்றி கவி ஐயா!

இந்த பதிவு போராசிரியர் சுப. சோமசுந்தரம் அவர்களின் பதிவு ஒன்று. உங்களது பதிவின் கருத்தைப் போலவே இதுவும் உள்ளது. 

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2022 at 06:47, Kavi arunasalam said:

சைவர்களைப் பொறுத்தளவில் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த வழிமுறைகள் ஏனென்ற விளக்கங்கள் இல்லாமல் இன்றும் தொடர்வதுதான் புரியவில்லை. கொஞ்சம் உற்றுப் பார்த்தால் புலம்பெயர் நாடுகளில் அது ஒரு வியாபாரமாகவே தென்படுகின்றது.

நானும் ஒரு சைவன் தான். இருந்தாலும் வியாபார  நோக்கம் கொண்ட சம்பிரயதாயங்களை அடியோடு நிறுத்த வேண்டும்.அதுவும் பார்ப்பன வியாபார யுக்திகளை புறந்தள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளுக்கு ஏற்ற சைவ இறுதிச் சடங்கு நடைமுறையும் விளக்கமும் என்ற இந்தக் கையேட்டை சைவர்கள் என்று அடையாளம் கொள்வோர் படிப்பது நல்லது👇🏾

https://tamilnation.org/culture/Saiva_Funeral_Rites.pdf

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2022 at 07:40, தமிழ் சிறி said:

இறந்தவருக்கு செய்யும் சில சடங்குகளை... 
பிள்ளைகள்  பலர் தமது ஆத்ம திருப்திக்காக செய்கின்றனர்.
அது சிலவேளை... இருக்கும் நாட்டின் நேர கட்டுப்பாடுகளை 
மீறி சென்று விடுவது கவலைக்குரியது.

ஆத்ம திருப்தி சரிதான். அதை எம்மவர்களே தேவாரங்களை பாடி அதனை செய்யலாம் என்பது என் கருத்து. ஐயர்மாருக்கு தேவையில்லாமல் காசை கொட்டி கொடுக்க தேவையில்லை.தமிழ் கிறிஸ்தவ உறவுகளின் மரணசடங்குகளை கவனித்து பாருங்கள். எவ்வளவு எளிமையாக தமது சடங்கை செய்கின்றார்கள்.ஊரிலும் சரி புலம்பெயர் நாடுகளிலும் சரி சைவர்கள் பந்தாவுக்காக மரணக்கிரியை செய்வதை காணலாம்.

On 12/6/2022 at 07:40, தமிழ் சிறி said:

அயல்நாட்டு...  செத்த வீட்டில் அழுவதும்,
இடைஞ்சல்  என்று, அன்று  புரிந்து கொண்டேன்.

அயல் நாட்டில் காகம் கூட அமைதியாகத்தான் கத்தும். ☺️

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2022 at 07:40, தமிழ் சிறி said:

போகாதேங்கோ... சாப்பிட்டு போங்கோ என்று சொன்னார்கள்.
ஊரில் கூட... செத்த வீடு நடந்த இடத்தில் சாப்பாடு கொடுப்பது வழமை இல்லை.
(ஜேர்மன்காரரின்   செத்த வீட்டில், எல்லாம் முடிந்தபின்..  
நெருங்கிய இரத்த உறவினர்கள் உணவு விடுதியில் உண்பார்கள்.)

செத்தவீட்டு இடத்தில் சாப்பிடுவதே கொடுமை. அதிலும் மிச்ச சாப்பாட்டை வீட்டுக்கு கட்டிக்கொண்டு செல்பவர்களை என்னவென்பது?

நான் அண்மையில் சென்ற செத்தவீடு ஒன்றில் கிரியைகள் எல்லாம் முடிந்த பின்னர் பிரேத பெட்டியை அமரர் வண்டியில் எரிக்கும் இடத்திற்கு கொண்டு செல்வதற்காக ஏற்றிய பின்  ......வண்டிக்கு பின்னால் உறவினர்களும் துக்கம் விசாரிக்க வந்தவர்களும் கூடியிருந்து தங்களுக்குள் பகிடி விட்டு தேநீரும் கோப்பியும் அருந்தினார்கள். அதற்குள் ஒரு சிலருக்கு இனிப்பு போதவில்லை என்ற கடுப்பு. செல்பிகளுக்கும் குறைவில்லை.

On 12/6/2022 at 07:40, தமிழ் சிறி said:

எங்களுடைய செத்த வீட்டில்... உணவு, அதுகும்...
ஆட்டு இறைச்சி கறியுடன் பரிமாறியது..  ஆச்சரியமாக இருந்தது.

கொஞ்சம் பொறுங்கள்.....வரும் காலத்தில் BBQவும் போடுவார்கள். 😂

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

செத்தவீட்டு இடத்தில் சாப்பிடுவதே கொடுமை. அதிலும் மிச்ச சாப்பாட்டை வீட்டுக்கு கட்டிக்கொண்டு செல்பவர்களை என்னவென்பது?

நான் அண்மையில் சென்ற செத்தவீடு ஒன்றில் கிரியைகள் எல்லாம் முடிந்த பின்னர் பிரேத பெட்டியை அமரர் வண்டியில் எரிக்கும் இடத்திற்கு கொண்டு செல்வதற்காக ஏற்றிய பின்  ......வண்டிக்கு பின்னால் உறவினர்களும் துக்கம் விசாரிக்க வந்தவர்களும் கூடியிருந்து தங்களுக்குள் பகிடி விட்டு தேநீரும் கோப்பியும் அருந்தினார்கள். அதற்குள் ஒரு சிலருக்கு இனிப்பு போதவில்லை என்ற கடுப்பு. செல்பிகளுக்கும் குறைவில்லை.

கால சூழலும் எம் கைகளில் இருக்கும் தொழில்நுட்பம் கருவிகள்தான் சம்பிரதாயம் சடங்குகளை 
நிர்ணயிக்கிறது என்று நான் எண்ணுகிறேன்.

பத்து பன்னிரண்டு வயதில் யாழில் ஒரு கிறிஸ்தவரின் இறுதி கிரிகையில் பாண்ட் இசை குழுவினர் முன்னுக்கு வாசித்து கொண்டு போவதை முதல் முதலில் பார்த்த போது என்னால் நம்ப முடியவில்லை 
பணக்கார வர்க்க ... பாட்டாளி வர்க்க சிந்தனைகள் ஏன் என்று தெரியவில்லை சிறுவயதிலேயே எனுக்குள் தோன்றிவிட்டது. ஆதலால் பணக்கார வர்க்கம் மீதான ஒரு வெறுப்பு எனக்குள் இருந்துகொண்டே இருந்தது 
அதன் விளைவோ என்னவோ தெரியவில்லை. அதை பார்த்த நாளில் இருந்து எனக்குள் ஒரு பெரும் கோபம் இருந்துகொண்டே இருந்தது 
பணம் இருந்தால் எண்ண வேண்டுமானலும் செய்துவிட்டு போங்கள் அதற்காக இப்படி செத்தவீட்டிலா 
இசை கச்சேரி வைத்து ஆடடம் போடுவீர்கள்? என்று ஒரே ஆதங்கமாக இருந்தது 
ஒரு மனிதன் இறந்து கிடக்கிறான் உங்களுக்கு கவலை இல்லாது போனால் கூட ... சிறு மரியாதை கூட வேண்டாமா? போன்ற எண்ணங்களே வந்து வந்து போய்க்கொண்டு இருந்தது. 

பின்பு புலிகளின் தளபதிகள் விக்ரர் ராதா திலீபன் போன்றவர்களின் பூதவுடலை எமது ஊருக்கு கொண்டுவந்த போது  மீண்டும் அதே பாண்ட் இசையை முழக்கி கொண்டு வந்தார்கள் 
அப்போதுதான் இந்த பேண்ட் இசை வேறு .... இசை கச்சேரி வேறு என்று புரிய தொடங்கினேன் 
பின்பு யாழில் இதை அடிக்கடி பார்க்க நேர்ந்தது எனக்கும் பழகிவிட்டது  ... 
முதன் முதலில் எனக்கு வந்த கோபம் என் அறியாமையால் வந்தது 

எங்களுடைய செத்தவீட்டு சடங்குகளும்  தேவையின் காரணமாகவே உருவாக்கி இருக்கும் 
சாம்பல்.... எட்டு எல்லாம் மூன்று நாலு நாள் சீரான உணவு இன்றி இருந்த எமக்கு ஒரு ஊட்ட சத்து தருவதுபோலவும் எமது சிந்தனையை மாற்றும் நிகழ்வாகவுமே பார்த்து இருக்கிறேன் 
இளவயதில் யாராவது விபத்தில் இறந்தால் அந்த கவலை மீள முடியாததாக இருக்கும் .... பின்பு இந்த சாம்பல்  எட்டு  அதுகள் வரும்போது சமையல் பொருட்கள் கொள்வனவு போன்ற நிகழ்வுகளில் கொஞ்சம் கொஞ்சமாக  சிந்தனைகள்  திசை திரும்பி மீண்டும் வாழ்க்கை துளிர்விட தொடங்கும் 

இங்கு வெளிநாட்டில்  தூர தேசத்தில் இருந்து பலரும் பயணிக்கலாம் அதனால் ஒரு உணவு முறைமை இருக்கு என்று எண்ணுகிறேன் 

சைவ முறைமையை ஆழமாக பார்த்தால் (இறைவனடி சேர்ந்தார்) இறைவனிடம் அனுப்பும் நிகழ்வுகள்தான் அவைகள். ஆதலால்தான் அவர்கள் இறைவனுக்கு (சிவனுக்கு) சமமாகவே வைக்கப்பட்டு பந்தம் பிடித்து தேவாரம் எல்லாம் பாடி  அனுப்புகிறோம். 

இறுதி நிகழ்வு என்பது (இளவயது விபத்து தவிர்த்து) அவருடைய இந்த ஜென்ம வாழவை கொண்டாடுவதுதான். அதனால்தான் அதுக்காக என்றாலும் ஒரு நாலு பேருக்கு  நல்லவர்களா இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அவர்களுடைய இந்த ஜென்ம வாழ்வு பூரணம் அடைவதால் அதை கொண்டாடுவது  தவறாக எனக்கு படவில்லை ( இளவயதில் இறந்தவர்கள் பூரணம் பெறாதவர்கள் மீண்டும் அவர்கள்  பிறந்து இந்த ஜென்மத்தை முழுமை செய்ய வாய்ப்பிருக்கிறது என்ற நமிபிக்கை இருப்பதால்தான்  அவர்களுக்கு  நாம் துவசம் அந்திரேட்டி ஓன்றும்  செய்வதில்லை) 

இன்னும் சில வருடங்களில் 
2-3 நாள் பாட்டு கோஸ்ட்டி சின்னமேளம்  அது இது என்று களை கட்டும் என்றுதான் எண்ணுகிறேன் 
அதுபற்றி பெரிதாக அலட்டி கொள்ள எதுவும் இல்லை என்றே நம்புகிறேன் 

அன்னை தெரசா போல எமது வாழ்வு இல்லை 
சக்கை நிரப்பிய படகில் ஏறி பயணித்த பெண் கரும்புலிகளின் மனதில் அப்போது என்ன என்ன எண்ணங்கள் வந்திருக்கும்? நாம் எல்லோரும் அதற்கு நேர் எதிரான வாழ்வே வாழ்கிறோம் 

எல்லோராலும் தியாகங்கள் ஈடாவதில்லை 
அவரவருக்கு விளங்கியதன் படி வாழவை வாழ்கிறோம் 
எப்படியோ இன்னொருவரை துன்புறுத்தாது இன்னொருவர் தன மகிழ்ச்சிக்காக செய்வதில் 
நாம் ஏன் தலையிட வேண்டும்? 
எல்லாவற்றையும் கொண்டாட பழகி கொள்வோம் 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

எல்லோராலும் தியாகங்கள் ஈடாவதில்லை 
அவரவருக்கு விளங்கியதன் படி வாழவை வாழ்கிறோம் 
எப்படியோ இன்னொருவரை துன்புறுத்தாது இன்னொருவர் தன மகிழ்ச்சிக்காக செய்வதில் 
நாம் ஏன் தலையிட வேண்டும்?
 
எல்லாவற்றையும் கொண்டாட பழகி கொள்வோம் 

அதே...

நானும்  இதற்கு  ஏதிரானவனாகவே இருந்திருக்கிறேன்

ஆனால் காலப்போக்கில்......

அனுபவத்தின் அடிப்படையில்.....

கேள்விகளை  எழுப்பியதால்......

இவற்றை  வெளியார்  விமர்சனம்  செய்வது  தான்  அறியாமை  என்பேன்

பணம் ஒன்றும் இலகுவாக  கிடைப்பதில்லை

அதிலும் இறந்தவருக்கு  செலவளிப்பதால்  அதில் எந்த  லாபமோ 

அவரிடமிருந்து நன்றியோ வரப்போவதில்லை

ஆனாலும்  இறந்தவரது வாரிசுகள்  குடும்பத்தவர்கள்

அவரது  கனவுகள், எதிர்பார்ப்புக்கள், அவர் சொல்லிச்சென்றவற்றை வைத்து  இவ்வாறு  செய்யும்போது

வெளியிலிருந்து அன்று  மட்டும்  அவரை  அறிபவர்கள்  விமர்சிக்கலாமா???

இப்போ இதை  எழுதியவர் தனக்கு  ஒன்றும் செய்யவேண்டாம் என்று தனது குடும்பத்துக்கு  சொல்லியிருக்கிறார்

வெறுமையாக  இருக்கப்போகும் இவரது  இறுதிப்பயணமும் அன்று வரும் வெளியவர்களால்  விமர்சனத்துக்கு  உட்படுத்தப்படுமே???

அது  சரியென்றால்  இதுவும்???

Edited by விசுகு
சில வரிகள் சேர்க்க
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சொல்ல வந்ததை தெளிவாக சொல்லுங்களேன் அண்ணா...
இது அவர் அவர் குடும்பம் சார்ந்து எடுக்கும் முடிவு அதனால் இந்த ஆடம்பரங்கள் சரி அல்லது பிறர் இதில் கருத்து கூற ஒன்றும் இல்லை என்று சொல்கிறீர்களா? 🤷‍♂️

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

சொல்ல வந்ததை தெளிவாக சொல்லுங்களேன் அண்ணா...
இது அவர் அவர் குடும்பம் சார்ந்து எடுக்கும் முடிவு அதனால் இந்த ஆடம்பரங்கள் சரி அல்லது பிறர் இதில் கருத்து கூற ஒன்றும் இல்லை என்று சொல்கிறீர்களா? 🤷‍♂️

ஈழ தமிழர்களில் பலர் ஆடம்பர பிரியர்கள். பிறந்த நாள் விழா தொடங்கி செத்தவீட்டை எவ்வளவு ஆடம்பரமாக காசை கொட்டி செலவளித்து கொண்டாட முடியும் என்பதில் போட்டி.

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.