Jump to content

ஒக்டோபர் மாதம் வரை... IMF நிதி கிடைக்காது: ரஷ்யா, சீனாவின்... உதவிகளை கோருகின்றார் பிரதமர் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள்- பிரதமர் ரணில்!

ஒக்டோபர் மாதம் வரை... IMF நிதி கிடைக்காது: ரஷ்யா, சீனாவின்... உதவிகளை கோருகின்றார் பிரதமர் !

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஒக்டோபர் மாதம் வரை இலங்கைக்கு கடன் கிடைக்க வாய்ப்பில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஏனைய நட்பு நாடுகளிடமிருந்து நிதியைப் பெறுவதற்கு முயற்சிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியானது தவறான நிர்வாகம், வரி குறைப்பு மற்றும் உரப்பிரச்சினை போன்றவற்றின் காரணமாக ஏற்பட்டது என பிரதமர் தெரிவித்தார்.

இருப்பினும் கொரோனா தொற்று மற்றும் ரஷ்யா – உக்ரேன் யுத்தம் காரணமாக இந்நிலைமை மிக மோசமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க ரஷ்யாவிடம் இருந்து அதிக எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு தான் தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை தற்போது பல நாடுகளின் உதவியை நாடியுள்ள நிலையில், சீனாவிடம் இருந்து மேலும் நிதி உதவிகளை ஏற்கத் தயாராக உள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

உக்ரைன் நெருக்கடியின் தாக்கம் காரணமாக இவ்வருட இறுதிக்குள் உலகளவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்தார்.

பொருளாதார மீட்சிக்கு தேவையான திட்டங்கள் என்னவென்பதை அடையாளம் காண்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1286638

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரும் ஆனால் வராது! பதவியை தக்க வைக்க நிலா காடுறை வேலை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, satan said:

வரும் ஆனால் வராது! பதவியை தக்க வைக்க நிலா காடுறை வேலை. 

இந்த முறை, கடன் வாங்க.... ரஷ்யா, சீனாவிடம் போகிறார்கள். 
இந்தியா கடன் கொடுத்து, கை... உழைஞ்சிட்டுது  போலை இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடன் வாங்குவதே இவர்களின் முழுநேரத் தொழில் என்று தெரிஞ்சு போச்சு. வாங்கிய கடன் ஒன்றும் திருப்பி அடைக்கவில்லை, தொடர்ந்து கடன் வாங்க எல்லா நாடுகளிடமும் கோரிக்கை. எல்லா நாடுகளும் இப்போ இக்கட்டில் இருக்கின்றன, இல்லை என  கையை விரித்தால் என்ன செய்யப்போகிறார்கள்? சுரண்டியதை திருப்பி தாறதாகவும் இல்லை. நாட்டின் இறைமை காத்தில பறக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்யாவிடமிருந்து எண்ணெய்யை பெறுவதற்கு இலங்கை தயார் - சர்வதேச ஊடகத்திற்கு பிரதமர் தெரிவிப்பு

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருட்களை தேடி வேட்டையில் இறங்கியுள்ள இலங்கை ரஸ்யாவிடமிருந்து எண்ணெய்யை பெறுவதற்கு நிர்ப்பந்திக்கப்படலாம் என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முதலில் வேறு தரப்புகளிடமிருந்து எரிபொருளை பெறமுடியுமா என பார்ப்பேன் ஆனால் எண்ணெய்யை ரஸ்யாவிடமிருந்து பெறுவதற்கு தயாராகவுள்ளேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உக்ரைன் யுத்தம் காரணமாக விதிக்கப்பட்ட தடைகளால் மேற்குலகநாடுகள் ரஸ்யாவிடமிருந்து எரிபொருட்களை பெறுவதை நிறுத்தியுள்ளன.

ranil222.jpg

அசோசியேட்டட் பிரசிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன் அதிகரிக்கின்ற போதிலும் சீனாவிடமிருந்து நிதி உதவியை பெற தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைக்கு இலங்கையே காரணம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள அவர் உக்ரைன் யுத்தம் நிலைமையை மேலும மோசமானதாக்குகின்றது,2024 வரை உணவுத்தட்டுப்பாடு நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஸ்யா இலங்கைக்கு கோதுமையை வழங்க முன்வந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிதியமைச்சராகவும் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்று ஒருமாதம் கடந்துள்ள நிலையில் கொழும்பில் உள்ள  தனது அலுவலகத்திலிருந்து அசோசியேட்டட் பிரஸ் உடன் உரையாடினார்.

இலங்கையின் அந்நியசெலவாணி கையிருப்பை முற்றாக முடித்துவைத்துள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவரை பிரதமராக நியமித்தார்.

கடந்த மாதவன்முறை முன்னைய பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகவேண்டிய நிலையையும் சீற்றமடைந்த பொதுமக்களிடமிருந்து தன்னை பாதுகாப்பதற்காக கடற்படை தளத்தில் தஞ்சமடையவேண்டிய நிலையையும் ஏற்படுத்திய பின்னர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இலங்கையின் கடன் 51 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது,எனினும் இந்த வருடம் செலுத்தவேண்டிய ஏழு பி;ல்லியன் டொலர் கடனை செலுத்துவதை இலங்கை இடைநிறுத்தியுள்ளது.

மிகமோசமான கடன் இலங்கை அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது,இதன் காரணமாக பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கு பெருஞ்சிரமத்தை எதிர்கொள்ளவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.தட்டுப்பாடுகள் காரணமாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.பொதுமக்கள் பலகிலோமீற்றர் தூரத்திற்கு சமையல் எரிவாயு மண்ணெண்ணைக்காக வரிசையில் நிற்கின்றனர்.

இரண்டுவாரத்திற்கு முன்னர் இலங்கை தனது ஒரேயொரு எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக ரஸ்யாவிடமிருந்து 90,000 மெட்ரிக் தொன் எண்ணையை பெற்றது.

இது குறித்து கருத்து தெரிவிக்காத விக்கிரமசிங்க ரஸ்யாவிடமிருந்து மேலும் எண்ணெய்க்காக வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இலங்கைக்கு எரிபொருள் மிகவும் அவசியமாக உள்ளது தற்போது மத்திய கிழக்கில் உள்ள அதன் பாரம்பரிய வழங்குநர்களிடமிருந்து நிலக்கரியை பெற முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

வேறு எந்த தரப்பிடமிருந்தாவது எண்ணெய்யை பெற முடியும் என்றால் அவர்களிடமிருந்து பெறுவோம் இல்லாவிட்டால் ரஸ்யாவிடமே செல்லவேண்டும் என  இலங்கையின் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரிகள் ஏனைய விநியோகஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர் , உலகின் பல பகுதிகளில் எண்ணை கிடைக்கின்றது அது எங்கிருந்து வந்தது என ஆராய்ந்தால் ஈரான் அல்லது ரஸ்யாவிடமிருந்தே வந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில நேரங்களில் எதனை கொள்வனவு செய்கின்றோம் என்பது எங்களிற்கு தெரியாது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

https://www.virakesari.lk/article/129333

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில நேரங்களில் எதனை கொள்வனவு செய்கின்றோம் என்பது எங்களிற்கு தெரியாது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஏதவது எங்கையும் கழண்டு கிழண்டு போச்சோ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

இருப்பினும் கொரோனா தொற்று மற்றும் ரஷ்யா – உக்ரேன் யுத்தம் காரணமாக இந்நிலைமை மிக மோசமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆமா ... சும்மா கொரோனா மேல பழியைப்போட்டு உங்கள் ஊழலை,  முட்டாள்தனத்தை, சோம்பேறித்தனத்தை மறைத்துக்கொள்ளுங்கள். கொரோனாவை கண்டதும் அந்தந்த நாடுகள் தேவையான எச்சரிக்கைகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து மக்களை காக்க போராடுகிறார்கள். நீங்களோ புலிகளை அடக்கிய இராணுவம் இதையும் ஓட்டும் என்று வெட்டியாய் வீரக்கதைகள் பேசிக்கொண்டு, எல்லா அனர்த்தத்திலும், உங்கள் போர்களிலும், பொய்களிலும் சர்வதேசம் ஓடிவந்து கொட்டியதுபோல் கொட்டும், நீங்கள் அள்ளலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தீர்கள். எல்லோருக்கும் இறுகியது நிலைமை. இப்ப அதே வாயால் பஞ்சப்பாட்டு பாடுகிறீர்கள். புலிகளை நீங்கள் அடக்கவில்லை, சர்வதேசமே அடக்கியது என்பது இப்போது தெள்ளத்தெளிவாகிறது. உள்ளூர் கலகத்தை தடுக்க முடியவில்லை, புலிகளை அடக்கினார்களாம்! இனியாவது இல்லாத கதைகளை புனைவதை விட்டு மனம் வருந்தி,  மனந்திருந்தி ஒற்றுமையாய் நாட்டை முன்னேற்ற வழிபாருங்கள். இவ்வளவு கோரத்தாண்டவம் ஆடி என்னத்த சாதித்தீர்கள்? நாட்டில் பஞ்சந்தான் தலைவிரித்தாடுது  இப்போது. இதுதான் உங்களின் முப்பதாண்டு போரின் சாதனை! நீங்களே சொல்லி மகிழுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவையும் மேற்கையும் வழிக்குக் கொண்டுவருவதற்கான முயற்சியோ ? 

🧐

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.