Jump to content

ICC மே மாதத்திற்கான சிறந்த வீரராக-மெத்தியூஸ்-தெரிவு!


Recommended Posts

ICC மே மாதத்திற்கான சிறந்த வீரராக-மெத்தியூஸ்-தெரிவு!

 

 

 

வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மாதத்திற்கான சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மே மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை அறிவித்துள்ளது.

அண்மையில் பங்களாதேஷில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் ஏஞ்சலோ மெத்தியூஸின் துடுப்பாட்டம் இந்தப் பெயரிடலுக்குக் காரணமாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) இரண்டு இலங்கை வீரர்களையும் ஒரு பங்களாதேஷ் வீரரையும் மே மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்காக பரிசீலித்த நிலையில் இறுதியில் மெத்தியூஸ் தெரிவானார்.

பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில், இரண்டு சதங்கள் உள்ளடங்களாக 344 ஓட்டங்களை குவித்த மெத்யூஸ், சண்டீஸ்கரில் நடந்த முதல் டெஸ்டில் 199 ஓட்டங்களை பெற்று இரட்டை சதத்தை நூலிழையில் தவறவிட்டார்.

மிர்பூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை அணிக்காக முதல் இன்னிங்சில் ஆட்டமிழக்காது 145 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அணி வெற்றிபெற வழிவகுத்தார்.

இந்த போட்டியில் மெத்யூஸின் திறமை, ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 15 ஆவது இடத்திற்கு முன்னேறி, முதல் முறையாக ஐசிசியின் சிறந்த வீரர் விருதை வெல்ல உதவியது. ஜனவரியில் தொடங்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆண்டின் சிறந்த வீரர் (ICC POTM) விருதை வென்ற முதல் இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/183130

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நுணா........!   🌹

 • Like 1
Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தாத்தா அடம் பிடிக்காம குளிக்கிற தாத்தாவை குறித்து பேரன் சொன்னான் அம்மாவிடம், தாத்தா சமத்தா குளிக்கிறாருன்னு...! மரித்துப்போன தாத்தா குளிப்பது கடைசிக்குளியல் என்பது தெரியாமல்...!! மாலை போட்டு உட்கார்ந்த நிலையிலிருந்த தாத்தாவை மல்லுக்கட்டி இழுத்துப்பார்த்தான் பேரன், வாங்க தாத்தா வாக்கிங் போலாம்னு… அடுத்த நாள் காரியத்தில் அழுதபடி கேட்டான், தாத்தா எங்கன்னு...? ஆண்டவன் வீட்டுக்கு போயிருக்காரு அடுத்த வாரம் வருவாருன்னு ஆறுதலுக்குச் சொல்லிவைத்தார் அப்பா...! ஒம்மேல கோவப்பட்டு அத்தை வீட்டுக்கு போயிருக்காருன்னு அடக்கமுடியா அழுகையுடன் சொல்லிப்போனாள் அம்மா...!! அம்மாவின் துணை கொண்டு அடுத்த நாளே எழுதினான் பேரன், தாத்தாவுக்கு ஒரு கடிதம்...! அன்பும் பாசமும் நிறைந்த தாத்தாவுக்கு, உன் அன்பு பேரன் எழுதுவது... ஒன்னோட வாக்கிங் ஸ்டிக் இங்க ஹாலில் மாட்டிகிடக்கு, இது இல்லாம, எப்படி நீயும் வாக்கிங் போவ...? ஒன்னோட மூக்குப்பொடி டப்பா, உன் மாலை போட்ட படத்துக்கு முன்னாலே பத்திரமா இருக்கு, அது இல்லாம, எப்படி நீயும் சமாளிக்க போற...? பேப்பர் படிக்கும்போதெல்லாம் பேரன் என்ன தேடுவியே...எங்க வந்து ஒனக்குத் தர... நீ விட்டுப்போன மூக்குக்கண்ணாடிய...? அத்த வீட்டுக்கு போனாலும் அடுத்த நாளே பேசுவியே, அழுதபடி வாட்ஸப்பில் நீயும், பத்திரமா வச்சிருக்கேன்... நீ வந்தவுடன் விளையாட மொபைலில் ஒரு கேம்மும் தானே...! வந்துரு தாத்தா வாக்கிங் போலாம் ரெண்டு பேரும்... ஒனக்கே கொடுத்துர்றேன் விளையாட மொபைல... நீ இல்லாமே, இப்போல்லாம் அப்பா அம்மா வர்ற வரைக்கும் அடுத்த வீட்டுல தான் அதிக நேரம் குடி இருக்கேன்...!!
  • சுவாரசியமான ஒரு திகில் படம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது.. ஒருவர் பாதியில் எழுந்து வெளியில் வந்து அவசரமாக வீட்டுக்குப் புறப்படுகிறார் அவரை பார்த்து திரையங்கின் மேலாளர் கேட்கிறார்.....! "ஏன் சார், படம்பிடிக்கலையா ..? இல்லை பார்க்க ரெம்ப பயமா இருக்கா.. சார்..? " "அப்படி எதுவும் இல்லை சார்..படம் நல்லா தான் இருக்கு...., அப்பே....ஏன்சார் பாதிப்படத்துல எழுந்து போரிங்க... யாராவது பக்கத்துசீட்டு ஆட்கள் பிறச்சனை... பன்னாங்களா..? அப்படி எல்லாம் எதுவும் இல்லை சார், ஆனா சுவாரசியமா....படத்த பார்த்துட்டு இருக்கும் போது....எனக்குப் பின்னாடி இருந்து ஒரு குரல்.."யோவ்.... தள்ளி உக்காருய்யா உன்தலை எனக்கு படம்பாக்க முடியாம மறைக்குதுன்னு... கோபமா அதட்டிசொன்னாங்க அதான்....." "அட.... என்ன சார் இதுக்கா கோபப்பட்டுட்டு போரிங்க...சரி நீங்களும் கொஞ்சம் சமாளிச்சு உக்காந்திருக்கலாமில்ல.... நம்ம பின்னாடி உக்காந்திருக்கிறவங்களுக்கு நம்ம தலை மறச்சுதுன்னா.. நாம கொஞ்சம் தள்ளி உக்கார வேண்டியது நீயாயம் தானே......சார்?" "அட என்ன சார்....நீங்களும் கொஞ்சம் கூட புரியாமல் பேசுறிங்களே நான் உக்காந்திருந்ததே கடைசி வரிசை இருக்கையில தான்.....சார்....!!" என்னது.......?
  • எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள் என்னென்று சொல்லத் தெரியாமலே நான் ஏன் இன்று மாறினேன்    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.