Jump to content

இலங்கையர்களில்... 66 சதவீதம் பேர், தினசரி உண்ணும் உணவின்... எண்ணிக்கையை, குறைத்துள்ளனர் – ஆய்வில் தகவல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையர்களில் 66 சதவீதம் பேர் தினசரி உண்ணும் உணவின் எண்ணிக்கையை குறைத்துள்ளனர் – ஆய்வில் தகவல்!

இலங்கையர்களில்... 66 சதவீதம் பேர், தினசரி உண்ணும் உணவின்... எண்ணிக்கையை, குறைத்துள்ளனர் – ஆய்வில் தகவல்!

இலங்கையர்களில் 66 சதவீதம் பேர் தினசரி உண்ணும் உணவின் எண்ணிக்கையை குறைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

உலக உணவுத் திட்டம் ஏப்ரல் மாதம் ஒரு கூட்டு விரைவான உணவு பாதுகாப்பு மதிப்பீட்டை நடத்தியது. இது 17 மாவட்டங்களில் உள்ள ஏழ்மையான குடும்பங்களை ஆய்வு செய்தது.

இதன்போது, 86 சதவீதம் பேர் மலிவான உணவுகளையும் குறைவான சத்துள்ள உணவை 95 சதவீதம் பேர் வாங்குவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதேநேரம், 66 சதவீதம் பேர் தினசரி உண்ணும் உணவின் எண்ணிக்கையை குறைத்துள்ளமை இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

உணவுத் தட்டுப்பாடு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் மக்கள் தங்கள் அன்றாட உணவு மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய போராடுகின்றனர்.

இலங்கையில் உணவுப் பணவீக்கம் 57 சதவீதமாக உள்ளது. இது உலகளாவிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு, வெளிநாட்டு கையிருப்பு குறைவு, சாதகமற்ற மாற்று விகிதங்கள் மற்றும் குறைந்த உள்நாட்டு உணவு உற்பத்தி ஆகியவற்றால் ஏற்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1286996

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மக்கள் இனி சலரோகம்.கொலஸ்ரோல்இரத்த அழத்தம் இல்லாமல் சுகதேகியாக வாழப் போகிறார்கள். மருத்துவச் செலவும் குறையப் போகுது. இந்த நிலையை உருவாக்கியவர்களுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனியின் விலை  அதிகரிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை😀 
சில குடும்பங்களில் , ஓரளவு வசதியான குடும்பங்கள் இரு நேரமும் சோத்தை சாப்பிடுகிறார்கள் ...அதிலும் நிறைய சோறு ,கொஞ்சமாய் கறி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சீனியின் விலை  அதிகரிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை😀 
சில குடும்பங்களில் , ஓரளவு வசதியான குடும்பங்கள் இரு நேரமும் சோத்தை சாப்பிடுகிறார்கள் ...அதிலும் நிறைய சோறு ,கொஞ்சமாய் கறி 

பிரவுன் சீனி பாவித்தால் நல்லது.விலையும் பெரிய வித்தியாசம் இல்லை.வெளிநாடுகளிலும் ஒரு நேரமாவது சோறு சாப்பிடா விட்டால் உலகமே அழிந்தமாதிரி திரியுற ஆக்கள் இருக்கினம்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.