Jump to content

நான் நண்டு வாங்கப் போனேன்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

8-B736100-FABB-4-BCA-ABF6-1079-CC5-C4-C1
 

ரண்டாவது உலக யுத்தத்தின் போது நான் வசிக்கும் நகரமான Schwäbisch Hall, அந்த மாநிலம் முழுவதற்குமே உணவுப் பொருட்களை வழங்கியது மட்டுமல்லாமல் குண்டுத் தாக்குதலுகளுக்குத் தப்பிய ஒரு அழகான நகரமும் கூட. ஒரு சிறிய நகரமானாலும் தனது கடந்த கால கட்டிடங்கள், நினைவுச் சின்னங்கள், விளையாட்டுக்கள் கலைகள்,கலாச்சாரங்கள் என எல்லாவற்றையும் காத்து அதை இன்றும் பேணி வருகிறது.

நான் இருப்பது சின்ன நகரம் என்பதாலோ என்னவோ ஒரே ஒரு தமிழ்க்கடை மட்டும்தான் இருக்கிறது. பணப் பரிமாற்றங்களால் பெருமளவளவில் இலாபம் கிட்டுவதால் பொருட்களை கொள்வனவு செய்வதில் முதலாளி அம்மாவுக்கு அவ்வளவு நாட்டம் இல்லை. ஏதாவது மனதுக்கு விருப்பமானதை சமைத்து சாப்பிட விரும்பி அந்தப் பொருளைக் கேட்டால், “முடிஞ்சுது அண்ணை. வியாழக்கிழமை ஒருக்கால் வந்து பாருங்கோஎன்பார். வியாழக்கிழமை போனால் மீண்டும் அதே பதில்தான் வரும். அவரது பதிலைக் கேட்கும் பொழுதெல்லாம், ‘நாளை கடன்என்று ஊர்ப் பலசரக்கு, தேனீர்க் கடைகளில் அன்று தொங்கிக் கொண்டிருந்த பதாதைதான் எனக்கு நினைவுக்கு வரும்.

நீண்ட நாட்களாக நண்டு சமைத்துச் சாப்பிட ஆசை இருந்தும் நண்டுகளை எங்களூர் கடையில் காணக் கிடைக்கவில்லை. இப்பொழுது யேர்மனியில் அறிமுகப் படுத்தி இருக்கும் 9 Euro Ticket எனக்கான வழியை காட்டியிருக்கிறது. ஒரு மாதத்துக்கு  செல்லுபடியாகும் 9 Euro Ticketஇல் யேர்மனியின் எந்தப் பகுதிக்கும் பயணிக்கலாம். அத்தோடு கொரோனா வீச்சும் குறைந்திருந்தது. ஆக எனது மாநிலத்தின் தலைநகரத்துக்குப் பயணித்து நண்டு வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு அங்கு அமைந்திருந்த ஒரு தமிழ்க்கடைக்கு அழைப்பை ஏற்படுத்தினேன்.

“Fress நண்டு இருக்கோ?”

“நீலக்கால் நண்டோ அண்ணை. ஓமோண்ணை இருக்கு

“இண்டைக்கு வந்தால் எடுக்கலாமோ?”

“எத்தினை கிலோ வேணும்? எடுத்து வைக்கிறன்

“விலை?”

“என்னண்ணை பெரிய விலை. பக்கெற் நண்டு 9யூரோ. ப்ரஸ் நண்டு 17 யூரோ. நீங்கள் வாங்கோண்ணை பாத்துச் செய்யலாம்

“இரண்டு வருசத்துக்கு முன்னர் 12யூரோக்கு வாங்கினனான்

“அண்ணை.. இரண்டு வருசமெண்டால் அது கனகாலம் எல்லோ. எங்களுக்குத் தாறவங்கள விலை ஏத்துறாங்கள். நாங்களென்ன செய்யிறது…?”

உண்மையிலேயே அந்தக் கடை முதலாளியில் எனக்கு அவ்வளாக நம்பிக்கையில்லை. முன்பு ஒரு தடவை, “தேங்காய் எப்பிடி நல்லதோ?” என்று இதே முதலாளியிடம் நான் கேட்ட போது, “அது, அவனவனுக்குப் பெண்சாதி வாய்ச்ச மாதிரிஎன்று ஒரு அற்புதமான பதிலைத்  தந்து என்னை நிறையவே கவலைப்பட வைத்து விட்ட ஆள்தான் அவர்.

நம்பிக்கையோடு பஸ் ஏறி, ஒன்றரை மணித்தியாலம் ரெயினில், பத்து நிமிசம் S bahnஇல் பயணித்து கொஞ்சம் நடந்து தமிழ்க் கடைக்கு வந்து சேர்ந்தேன்.

“நண்டு கேட்டனீங்கள் என்ன? அதுக்குள்ளை இருக்கு, பாருங்கோ. இரண்டு கிலோவா கட்டி வைச்சிருக்கிறன்

அவர் காட்டிய குளிர்சாதனப் பெட்டிக்குள் பிளாஸ்ரிக் பைக்குள் கட்டி வைச்ச நண்டுகளின் நீலக்கால்கள், ஜஸில் உறைந்திருந்த போதும் வெளியே தெரிந்தன.

“அண்ணை நான் கேட்டது ப்ரெஸ் நண்டு

“அண்ணை அதுதான் அண்ணை. போன சனிக்கிழமை வந்தது. ப்ரெஸ்தான்

திரும்பி எனது நகரத்துக்கான பயணத்தின் போது  முதலாளி எல்லோரோடையும் இப்படித்தானா? இல்லை என்னோடை மட்டும்தானா?” என்ற யோசனையுடனேயே இருந்தேன்.

 

-கவி அருணாசலம்

 • Like 7
 • Haha 9
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

“அண்ணை நான் கேட்டது ப்ரெஸ் நண்டு

“அண்ணை அதுதான் அண்ணை. போன சனிக்கிழமை வந்தது. ப்ரெஸ்தான்

திரும்பி எனது நகரத்துக்கான பயணத்தின் போது  முதலாளி எல்லோரோடையும் இப்படித்தானா? இல்லை என்னோடை மட்டும்தானா?” என்ற யோசனையுடனேயே இருந்தேன்.

-கவி அருணாசலம்

சிரிக்க வைத்த கதைக்கு... நன்றி கவி அருணாசலம். 😂

தமிழ்க் கடைக்காரர் எல்லாருமே... இப்பிடித்தான்.
சனிக்கிழமை  வந்த கடலுணவு பொருட்கள் அன்றைய தினம் விலைப் படாவிட்டால்,
அவர்களே பைகளில் கட்டி, குளிர்சாதனப் பெட்டிக்குள் 
கிழமைக் கணக்கில் வைத்திருந்து... "சிலோன் பிரெஷ் நண்டு என்று, மீன்" என்று  விற்பார்கள்.
உண்மையில்... அவர்களுக்கு, பிரெஷ் என்பதன் அர்த்தம் தெரியவில்லையோ,
அல்லது எம்மை பார்க்க... பேயன், பைத்தியக்காரன்.. மாதிரி இருக்குதோ தெரியவில்லை. 🤣

எதுக்கும், அந்த தமிழ்க்கடையின் முதல் எழுத்தையும், கடைசி எழுத்தையும்...
கிசு கிசு பாணியில் சொல்லவும். 😁
 

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
32 minutes ago, தமிழ் சிறி said:

சிரிக்க வைத்த கதைக்கு... நன்றி கவி அருணாசலம். 😂

தமிழ்க் கடைக்காரர் எல்லாருமே... இப்பிடித்தான்.
சனிக்கிழமை  வந்த கடலுணவு பொருட்கள் அன்றைய தினம் விலைப் படாவிட்டால்,
அவர்களே பைகளில் கட்டி, குளிர்சாதனப் பெட்டிக்குள் 
கிழமைக் கணக்கில் வைத்திருந்து... "சிலோன் பிரெஷ் நண்டு என்று, மீன்" என்று  விற்பார்கள்.
உண்மையில்... அவர்களுக்கு, பிரெஷ் என்பதன் அர்த்தம் தெரியவில்லையோ,
அல்லது எம்மை பார்க்க... பேயன், பைத்தியக்காரன்.. மாதிரி இருக்குதோ தெரியவில்லை. 🤣

எதுக்கும், அந்த தமிழ்க்கடையின் முதல் எழுத்தையும், கடைசி எழுத்தையும்...
கிசு கிசு பாணியில் சொல்லவும். 😁
 

சனிக்கிழமை பிரஸ்ஸாக வந்த நண்டை..... வெளில வைச்சிருந்தால்.....நாறல் நண்டாத் தானே போயிருக்கும்..... ஒண்டு சனிக்கிழமை போயிருக்கோணும்.... அல்லது... முதலாளி அய்யாவை....பிரஸ்ஸா.... சமைச்சு.... பீரிஸ் பண்ணி வையுங்கோ.... வந்து எடுக்கிறன் எண்டு சொல்லியிருக்கோணும்.... 😁

அது பரவாயில்லை.... இங்கை... பில்லிங்கேற் எண்டு பெரிய மீன்சந்தை.... அங்கை... பீரீஸ் பண்ணிண மீன், இறால், நண்டை..... நேரத்துக்கு வெளில வைத்து.... நோர்மலா வந்தோன்ன ..... ஜஸ் மேல வைச்சு.... பிரஸ்ஸாக வந்தது எண்டு விப்பாங்கள்.... முந்தி வெள்ளையள் மட்டும் .... இப்ப, தமிழ், மலையாளிகள் நிண்டு விக்கினம்.....

யாவாரமாகதவை... அடுத்த சந்தை நாள் வரை திரும்பவும்... பீரீசர் தான்....

உங்கட ஊர் வாறதும்.... இங்க இருந்து தான் வரும்....

Edited by Nathamuni
 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

""அவனவனுக்கு பெஞ்சாதி வாய்த்த மாதிரி ""

கெக்கக்க போ..🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kavi arunasalam said:

போன சனிக்கிழமை வந்தது. ப்ரெஸ்தான்

🤣  interesting

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
14 hours ago, Kavi arunasalam said:

உண்மையிலேயே அந்தக் கடை முதலாளியில் எனக்கு அவ்வளாக நம்பிக்கையில்லை. முன்பு ஒரு தடவை, “தேங்காய் எப்பிடி நல்லதோ?” என்று இதே முதலாளியிடம் நான் கேட்ட போது, அது, அவனவனுக்குப் பெண்சாதி வாய்ச்ச மாதிரி என்று ஒரு அற்புதமான பதிலைத்  தந்து என்னை நிறையவே கவலைப்பட வைத்து விட்ட ஆள்தான் அவர்.

 

 

கொல்லென்டு சிரிச்சிட்டன் 😂🤣😂🤣

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kavi arunasalam said:

அண்ணை நான் கேட்டது ப்ரெஸ் நண்டு

“அண்ணை அதுதான் அண்ணை. போன சனிக்கிழமை வந்தது. ப்ரெஸ்தான்

நாங்க குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடுவோம்.

கடைக்காரன் கைத்தா மாத்திரம் முறைப்போம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இங்கையும் இறால் அப்படி தான், ப்ரொஸின் ஐ இளக வைச்சு பிரெஷ் எண்டு விக்கிறது.  இப்ப நானே ப்ரொஸின் ஆகா வாங்கி விடுவேன்.  அவர்களுக்கென வீண் சிரமம்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அருமையான நகைச்சுவை அனுபவம்........தேங்காயுடன் மனிசியை ஒப்பிட்டது சூப்பர்........!   👍

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உயிர்க் கோழி இறைச்சி என்று விக்கிறாங்களே அதே மாதிரித்தான் இதுவும்.இந்த நாட்டிpல  கிடைச்சதை வைச்சு சந்தோசப்படுங்கோ .கலியாணம் கட்டினவன் எல்லாம் விட்டிட்டா இருக்கிறான். அவனவனுக்கு பொண்டாட்டி வாச்சமாதிரி!!!!கடைக்காரர் பிழைக்கத் தெரிஞ்சவர்.

நண்டு பாரமாக இருந்தால் நல்லதென்று ஓரளவுக்கு நம்பலாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அப்படியே அந்த நன்டுக் குழம்பை பற்றியும் நாலு வரி எழுதுங்கோ.😄

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, சுவைப்பிரியன் said:

அப்படியே அந்த நன்டுக் குழம்பை பற்றியும் நாலு வரி எழுதுங்கோ.😄

நண்டு வாங்கவேயில்லை

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

9 ஈரோ ரிக்கற்ம் வேணும் நல்ல தசையான மலிவாய் ப்ரஸ் நீல நண்டும் வேணும் எண்டால்......🙃

கடைக்காரன்  இவரைப்பற்றி பாடம் படிச்சு பழம் திண்டு கொட்டை போட்டவன் போல கிடக்கு 🤣

 • Haha 1
Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.