Jump to content

தமிழரின் முக்கனிகளும், போர்த்துக்கேயரும்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Mango ஒரு தமிழ் சொல்... போர்த்துக்கேய மொழியில், தூய தமிழ் சொல்லான manka(i) ஆகி, ஆங்கிலத்தில் mango என்று புகுந்து கொண்டது.

தமிழனின் முக்கனிகள் அனைத்தையுமே போர்த்துக்கேயன் தென் அமெரிக்காவில், குறிப்பாக பிரேசில் நாட்டுக்கு கொண்டு போய் சேர்த்து விட்டான். ஆனாலும் அங்கிருந்து 130க்கு மேலான மரக்கறி, பழ, மற்றும் தாவர வகைகளை கொண்டு வந்து சேர்த்ததால், நாம் குறை சொல்ல முடியாது.

பலாப்பழத்தினை, மலையாளத்தில் சக்கைப்பழம் என்பார்கள். அது வாயில் புகாததால், jack fruit என்று அழைத்தார்கள்.

இன்று ஐரோப்பாவில், வாழைப்பழம் எங்கிருந்து வருகிறது என்றால், கண்ணை மூடிக்கொண்டு, தென் அமெரிக்கா என்பார்கள். ஆனால், தென் அமெரிக்கா கண்டு பிடிக்கப்பட்டதே ஐரோப்பாவின் கொலம்பசினால் தான்.

அதன் பின்னரே, போர்த்துக்கேயர் கொண்டு போன, வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் அவர்களின் ஒரே தென் அமெரிக்க காலனி பிரேசிலில் இருந்து தென் அமெரிக்கா எங்கும் பரவியது.

ஐரோப்பாவில், சூப்பர்மார்கெட்டில் வாழைப்பழத்துடன் ஒப்பிடும் போது, மிக விலை கூடிய பழமாக மாம்பழமே காணப்படுகிறது.

அது இந்தியாவில் பெரு மரங்களை வைத்து செய்கிறார்கள். இந்த வீடியோவில், குட்டை மரங்களை வைத்து, அறுவடை செய்கிறார்கள்.

இஸ்ரேல் நாடு, விவசாயத்தில் மிக சிறந்து தொழில் நுட்பத்தினை புகுத்திய நாடு. சொட்டு நீர்ப்பாசனம் அந்த நாட்டின் ஐடியா தான். அவர்கள் இந்திய, நம்மூர் மண்ணை கொண்டு போய், அதனை மூன்று அடி ஆழத்துக்கு பரப்பி, கண்ணாடி அறைக்குள், அதே வெப்ப நிலையினை வைத்துக்கொண்டு, மாம்பழம் பயிரிட்டு ஏற்றுமதி செய்கிறார்கள்.

ஆக, சொல்லவருவது என்னவெண்டால், நமது தாயகப்பகுதியில், விவசாயத்தில், நவீன தொழில் நுட்ப்பம் புக வேண்டும். ஆரம்பத்தில் எமது சந்தையே (புலம் பெயர் தமிழர்) போதுமானது.

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

Mango ஒரு தமிழ் சொல்... போர்த்துக்கேய மொழியில், தூய தமிழ் சொல்லான manka(i) ஆகி, ஆங்கிலத்தில் mango என்று புகுந்து கொண்டது.

தமிழனின் முக்கனிகள் அனைத்தையுமே போர்த்துக்கேயன் தென் அமெரிக்காவில், குறிப்பாக பிரேசில் நாட்டுக்கு கொண்டு போய் சேர்த்து விட்டான். ஆனாலும் அங்கிருந்து 130க்கு மேலான மரக்கறி, பழ, மற்றும் தாவர வகைகளை கொண்டு வந்து சேர்த்ததால், நாம் குறை சொல்ல முடியாது.

நல்லதொரு கட்டுரை நாதம்ஸ்.
இயன்றவரை... நமது நாட்டுக்கு  போர்த்துக்கேயர் கொண்டு வந்த   
130க்கு மேலான மரக்கறி, பழ, மற்றும் தாவர வகைகளின்  
பெயர்கள் தெரிந்தால் கூறுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

நல்லதொரு கட்டுரை நாதம்ஸ்.
இயன்றவரை... நமது நாட்டுக்கு  போர்த்துக்கேயர் கொண்டு வந்த   
130க்கு மேலான மரக்கறி, பழ, மற்றும் தாவர வகைகளின்  
பெயர்கள் தெரிந்தால் கூறுங்கள்.

தக்காளி, உருளைக்கிழங்கு, கோவா, பீன்ஸ், லீக்ஸ், பீற்றூட், பூசணி, மரவள்ளி, சீனிக்கிழங்கு, கொய்யா, அன்னாசி, புகையிலை, மிளகாய், சீமைக் கிளுவை, போகன்வில்லா போன்ற பூச்செடிகள்.....

  • Like 1
Link to comment
Share on other sites

1 minute ago, Nathamuni said:

தக்காளி, உருளைக்கிழங்கு, கோவா, பீன்ஸ், லீக்ஸ், பீற்றூட், பூசணி, மரவள்ளி, சீனிக்கிழங்கு, கொய்யா, அன்னாசி, புகையிலை, மிளகாய், சீமைக் கிளுவை, போகன்வில்லா போன்ற பூச்செடிகள்.....

கத்தரி, மிளகாய், பயிற்றங்காய் போன்றனவும் அடங்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, இணையவன் said:

கத்தரி, மிளகாய், பயிற்றங்காய் போன்றனவும் அடங்கும்

மிளகாய் சொல்லியிருக்கிறேன்.... அதுவே.... கறி மறுமலர்ச்சிக்கான காரணம்....

கத்தரிக்காய் நம்மூர்என்றே நிணைக்கிறேன்.

Link to comment
Share on other sites

4 minutes ago, Nathamuni said:

மிளகாய் சொல்லியிருக்கிறேன்.... அதுவே.... கறி மறுமலர்ச்சிக்கான காரணம்....

கத்தரிக்காய் நம்மூர்என்றே நிணைக்கிறேன்.

உங்கள் கருத்து சரியானது. கத்தரி இந்தியா.

மிளகாய், தக்காளி ஒரே குடும்பப் பயிர்கள் என்பதால் கத்தரியும் தென்னமெரிக்கா என்று நினைத்துவிட்டேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, இணையவன் said:

உங்கள் கருத்து சரியானது. கத்தரி இந்தியா.

மிளகாய், தக்காளி ஒரே குடும்பப் பயிர்கள் என்பதால் கத்தரியும் தென்னமெரிக்கா என்று நினைத்துவிட்டேன்.

அதிலும் இன்னும் ஒரு விசயம்.....

இந்தியா..... என்ற நாடே... பிரிட்டிஸ்காரர்களின் கிழக்குகிந்திய கொம்பனியால் பத்தொன்பதாம் நூறாண்டில் உருவாக்கப்பட்டது.

ஆக... கத்தரி... இந்திய துணைக்கண்டத்தில் உருவாகி... ஆபிரிக்கா போய், அங்கிருந்து ஸ்பெயின் போனது.

வழக்கம் போலவே..... சீனாக்காரர் தமது பகுதியில் உருவாகி, மிளகு வாங்க வந்த போது, தமிழரிடம் கொடுத்தோம் என்கிறார்கள்....

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரட், தேயிலை, இறப்பர், ரம்புட்டான், மங்குஸ்தான்.... 

திராட்சை (முந்திரிகை) மரம்   இறுதியாக சென்ற தலைமுறையில்...
கதிரவேற்பிள்ளை எம்பியால் கொண்டு வந்து, பருத்தித்துறையில் பரீட்சார்த்தமாக 
நடப்பட்டது என்று எங்கோ.... வாசித்த நினைவு. 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கரட், தேயிலை, இறப்பர், ரம்புட்டான், மங்குஸ்தான்.... 

திராட்சை (முந்திரிகை) மரம்   இறுதியாக சென்ற தலைமுறையில்...
கதிரவேற்பிள்ளை எம்பியால் கொண்டு வந்து, பருத்தித்துறையில் பரீட்சார்த்தமாக 
நடப்பட்டது என்று எங்கோ.... வாசித்த நினைவு. 

இறப்பர் மட்டுமே... ஆனாலும் அறிமுகம் செய்தது பிரிட்டிஸ்காரர்.

பிரேசில் காடுகளில் கவனிப்பார் இன்றி இருந்த ரப்பரை அதன் பயன்பாடு தெரிந்த பின்னர், போர்த்துக்கேயர், வெளியே கொண்டு செல்ல தடை போட்டு ரப்பரை மட்டும் ஏற்றுமதி செய்தார்கள்.. அதன் விதைகளை, ரகசியமாக பிரிட்டனுக்கு கடத்தி லண்டன் கியூ கார்டெனில் ஆய்வு செய்து, தமது காலனிகள் இந்தியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் அறிமுகம் செய்தார்கள்.

சீனா தேயிலையும் அவர்கள் தான்.

கரட்.... ஆப்கன்..... தேயிலை சீனா..... கோப்பி எத்தியோப்பியா. ரம்புட்டான், மங்குஸ்தீன் மலேசியா,இந்தோனேசியா...

திராட்சை: நிச்சயமாக அரபுலகம்; சிரியா, எகிப்து..... புகையுடன் ..... திராட்சை மது... அல்லாப்பிச்சை....

Hookah - Wikipedia

68 cm Arab Hookah shisha Ready Stock | Shopee Malaysia

WATER PIPES AND SMOKING IN THE MIDDLE EAST | Facts and Details

புகைக்கு மட்டுமல்ல, வைனுக்கும், குழாய் வைத்து அடித்தவர்கள், அரபிகள்... 😍

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆவுஸ்திரேலியாவில் மாம்பழ பயிர்ச்செய்கை எப்படி அழகாக செய்கிறார்கள், என்று பாருங்கள். நம்மூரில், தமிழகத்தில் இப்படி அழகாக செய்ய முடியுமே.

Edited by Nathamuni
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க மகிழ்ச்சியாக இருக்கின்றது.......இப்படி ஒரே சீராக தோட்டம் செய்தால் நல்ல பலனை அடையலாம்........!   👍

நன்றி நாதம்ஸ்.......அருமையான தகவல்கள்......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/6/2022 at 22:39, Nathamuni said:

ஆனால், தென் அமெரிக்கா கண்டு பிடிக்கப்பட்டதே ஐரோப்பாவின் கொலம்பசினால் தான்.

Amerigo Vespucci

கொலம்பஸ் ஆள் அறியப்பட்டதாக வரலாறு மாற்றப்பட்டது.

அனால், இப்பொது மேட்ற்கு நாடுகளில் Amerigo Vespucci என்று வரலாற்று பாடத்திட்டத்தில் உள்ளது என்று நினைக்கிறேன்.

தென்னமெரிக்காவில், முக்கியமாக பிரேசிலில்  ஓர பழமொழி உள்ளது என்று நினைக்கிறன்  - மேலே கையை நீட்டினால் பழம், தடியை குத்தினால் மீன் எனும் கருத்துப்பட.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

ஆவுஸ்திரேலியாவில் மாம்பழ பயிர்ச்செய்கை எப்படி அழகாக செய்கிறார்கள், என்று பாருங்கள். நம்மூரில், தமிழகத்தில் இப்படி அழகாக செய்ய முடியுமே.

வேறு பல கனிவகைகள் இப்படி பார்த்திருக்கிறேன்.இது தான் முதல்முறையாக மாம்பழ தோட்டம் பார்க்கிறேன்.

இணைப்புக்கு நன்றி நாதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kadancha said:

Amerigo Vespucci

கொலம்பஸ் ஆள் அறியப்பட்டதாக வரலாறு மாற்றப்பட்டது.

அனால், இப்பொது மேட்ற்கு நாடுகளில் Amerigo Vespucci என்று வரலாற்று பாடத்திட்டத்தில் உள்ளது என்று நினைக்கிறேன்.

தென்னமெரிக்காவில், முக்கியமாக பிரேசிலில்  ஓர பழமொழி உள்ளது என்று நினைக்கிறன்  - மேலே கையை நீட்டினால் பழம், தடியை குத்தினால் மீன் எனும் கருத்துப்பட.  

நீங்கள் சொல்வது சரி.

கொலம்பஸ் கொஞ்சம் விளையாடடுக் காட்டுறார் என்று வேறு பலருக்கும் வாய்ப்பளிக்க முன்வந்தார் ஸ்பானிய அரசர். வியாபாரம் நலிவடைந்து இருந்ததால், இத்தாலியின் அமேரிக்கோ.... அரசரை சந்தித்து வாய்ப்பு பெற்றார்.

கொலம்பஸ் பாதையில் பயணித்து, கரிபியன் போய் தெற்கே சென்று, வெனிசூலா கண்டு பிடித்து திரும்பினார்.

பின்னர் போர்த்துக்கேய அரசருக்காக மீண்டும் சென்ற போதே பிரேசிலை கண்டுபிடித்து போர்த்துக்கேய காலணியாக்க உதவினார்.

ஸ்பானிய அரசரின் அதிருப்தி காரணமாக, கொலம்பஸ், ஏழ்மையில் மரணிக்க, அரச ஆதரவாலால், அமேரிக்கோ பெயர், அந்க கண்டத்துக்கே வைக்கப்பட்டது.

ஆனாலும் அமேரிக்காவில், கொலம்பஸ் தான் கொண்டாடப்படுகிறார். அமேரிக்கோவை அல்ல. காரணம் கொலம்பஸ் முதலில் வந்தவர் ஆகையால்.

****

கொலம்பஸ் ஆதரவு இழந்ததுக்கு இன்னுமொரு முக்கிய காரணமும் உள்ளது. தங்கத்தை காட்டு என்று செவ்விந்தியர் மீது நடாத்திய படுகொலைகளும், செவ்விந்திய பெண்கள் மேல் நடாத்திய பாலியல் வக்கிரங்களும்.

எல்லோரிடையேயேயும் ஒருவர் இருப்பார். அவரை இந்தக்காலத்தில் personal secretary  என்று ஒருவர் இருப்பது போலவே, அந்தக்காலத்தில், பயணிக்கும் கூட்டத்தில் ஒருவர் எழுத்தர் ஆக இருப்பார். அவர் என்ன குறிப்பு எடுக்கிறார் என்று ஏனையோருக்கு தெரியாது.

அவர் ஸ்பானிய அரசருக்கு கொடுத்த தகவல்கள் மூலமே கொலம்பஸ் விளையாட்டுக்கள் அரசருக்கும், இன்று நமக்கும் தெரிய வருகிறது.

அதேபோல ஒருவர் எழுதிய குறிப்புகள் மூலமே, வாஸ்கொட காமாவின் குழுவுக்கு, கோழிக்கோட்டில் என்ன நடந்தது என்று நமக்கு இன்று புரிகிறது.

Edited by Nathamuni
மேலதிக இணைப்பு
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மரம் நட்டு நூறு நாட்களில் மாங்காய் புடுங்குகின்றார்கள்...

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.