Jump to content

5 வயது குழந்தையை... களனி ஆற்றில் எறிந்து விட்டு, தற்கொலை செய்துகொள்ள முயன்ற தாய் கைது!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

5 வயது குழந்தையை களனி ஆற்றில் எறிந்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்ற தாய் கைது!

5 வயது குழந்தையை... களனி ஆற்றில் எறிந்து விட்டு, தற்கொலை செய்துகொள்ள முயன்ற தாய் கைது!

வத்தளை -ஹெந்தல – கதிரான பாலத்துக்கு அருகில் களனி ஆற்றில் தனது 5 வயது குழந்தையை எறிந்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்ற பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 42 வயதுடைய தாயார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குழந்தையை தேடும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://athavannews.com/2022/1287136

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“அம்மா ஏன் இவ்வாறு செய்தார் என்று தெரியவில்லை“ – தாயாரினால் களனி ஆற்றில் வீசப்பட்ட சிறுவனின் அண்ணன்!

“அம்மா... ஏன், இவ்வாறு செய்தார் என்று தெரியவில்லை“ – தாயாரினால் களனி ஆற்றில் வீசப்பட்ட சிறுவனின் அண்ணன்!

வத்தளை கதிரான பாலத்திற்கு அருகில் தாயொருவரால் களனி ஆற்றில் வீசப்பட்ட ஐந்து வயது சிறுவனை தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதேநேரம் இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள குறித்த பெண்ணின் தாயின் மூத்த மகன், தனது அம்மாவுக்கு வலிப்பு நோய் உள்ளதாகவும் அம்மா தன்னைவிட தம்பி மீதுதான் அதிகமாக பாசம் காட்டுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

அப்படியிருக்கையில் ஏன் இவ்வாறு செய்தார் என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் மாலை 5.20 மணியளவில் வீட்டில் இருந்து தம்பியை மட்டும் அழைத்துக்கொண்டு வெளியேறியதாகவும் இதன்போது, எங்கே போகிறீர்கள் என கேட்டதற்கு அவரேதும் பதிலளிக்காமல் சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளியான சிறுவனின் தாய் நேற்று முன்தினம் (15) இரவு சிறுவனை களனி ஆற்றில் எறிந்துவிட்டு தானும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றபோது, அப்பகுதி மக்கள் அவரை காப்பாற்றியுள்ளனர்.

எனினும் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை. குறித்த தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1287334

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்.......ஆருக்கு வெளிச்சம் ........!  😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, suvy said:

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்.......ஆருக்கு வெளிச்சம் ........!  😢

இலங்கை நிலை மிக மோசம் தமிழ் மக்களை விட இன்று சிங்கள மக்கள்  பசியை அனுபவித்து வருகிறார்கள் அதன் தாக்கமாக கூட இருக்கலாம்
நாலு நாளா மெனக்கடுறன் பெற்றோல் அடிக்கலாம் என சில நேரம் கால் நடை சில நேரம் சைக்கிள் இப்படி போகிறது கேஸ் இல்லை விறகு அடுப்பு  வட கிழக்கு நிலை கொழும்பில் ??

ஒன்றே ஒன்று சொல்லலாம் இலங்கையில் முதலிடுவது.  நாடு நாம் பிறந்த தேசம் ஊரு என்று இனியும் வந்து  இங்கு குடியேற நினைக்காம உங்களது குழந்தைகள் எல்லோரையும் நன்றாக படிக்க வைத்து ஈழம் என்றொரு தேசம் இருந்தது அங்கு வாழ்ந்த காலங்கள் என்பவற்றை எடுத்துக்கூறுங்கள் அதுதான் இப்போதைக்கு நல்லது மிக நல்லது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இதுவும் கடந்து போகும் தனி.......சோர்வு கூடாது......மனம்தளராதீர்கள்.......!  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

இதுவும் கடந்து போகும் தனி.......சோர்வு கூடாது......மனம்தளராதீர்கள்.......!  

நேற்று கூட அண்ண அப்பா ஆட்டோவில் நிற்க மகன் மோட்டார் சைக்கிளில் நிற்க ஆட்டோவில் இருந்த அப்பா அப்படியே ஆட்டோவிலே இறந்து கிடக்கிறார்
நேற்று மதியம் 12.00 மணீக்கு போன நண்பன் இன்று காலை 8.30 மணிக்கு  வந்தார் 1000 ரூபாய்க்கு மாத்திரம் கொடுத்தார்கள் மண்ணெண்யை 500 ரூபாக்கு மட்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நேற்று கூட அண்ண அப்பா ஆட்டோவில் நிற்க மகன் மோட்டார் சைக்கிளில் நிற்க ஆட்டோவில் இருந்த அப்பா அப்படியே ஆட்டோவிலே இறந்து கிடக்கிறார்
நேற்று மதியம் 12.00 மணீக்கு போன நண்பன் இன்று காலை 8.30 மணிக்கு  வந்தார் 1000 ரூபாய்க்கு மாத்திரம் கொடுத்தார்கள் மண்ணெண்யை 500 ரூபாக்கு மட்டும் 

இப்ப கண்ணுக்கு முன்னாலுள்ள உடனடி பிரச்சினைகளை பார்கும் போதே பயமாக இருக்கு, சிறுவர்களின் ஊட்ட குறைபாடு, மருத்துவ வசதி மற்றும் கல்வி என நீண்டகாலத்தில் எதிர்கால சந்ததியினர் பாதிக்கப்பட போகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, vasee said:

இப்ப கண்ணுக்கு முன்னாலுள்ள உடனடி பிரச்சினைகளை பார்கும் போதே பயமாக இருக்கு, சிறுவர்களின் ஊட்ட குறைபாடு, மருத்துவ வசதி மற்றும் கல்வி என நீண்டகாலத்தில் எதிர்கால சந்ததியினர் பாதிக்கப்பட போகிறார்கள்.

ம் பாடசாலை கல்வி மட்டங்கள் மாணவர் நிலமை மற்றும் கல்வித்தகமை என்பன மிக அடி மட்டத்தில் உள்ளது இது நீண்டால் இன்னும் சிக்கலாகவே இருக்கும் 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/6/2022 at 07:50, vasee said:

இப்ப கண்ணுக்கு முன்னாலுள்ள உடனடி பிரச்சினைகளை பார்கும் போதே பயமாக இருக்கு, சிறுவர்களின் ஊட்ட குறைபாடு, மருத்துவ வசதி மற்றும் கல்வி என நீண்டகாலத்தில் எதிர்கால சந்ததியினர் பாதிக்கப்பட போகிறார்கள்.

இந்த மாதிரி சம்பவங்களும், சிறுவர்களை  துன்புறுத்தல்களும் அதிகமாகும் அபாயம் உள்ளது.. வயது வந்தோரின்/பெற்றோரின் கோபங்கள், இயலாமைகள் எல்லாவற்றிற்கும் வடிகாலாக, குழந்தைகள் சிறுவர்களே அகப்படுகிறார்கள்.. 

இன்னொரு இடத்தில் தனது குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியவில்லை என்ற இயலாமை விரகத்தியில் தாய் தற்கொலைக்கு முயற்சி..

பிள்ளைகளுக்கு உணவு அளிப்பதற்காக பாலியல் தொழிலாளிகளாக மாறும் பெண்கள்.. 

ஆனாலும் அரசு இவர்களை கணக்கில் எடுக்கப்போவதில்லை.. 

அழகான, வளமான நாட்டை பாழாக்கிவிட்டார்கள்

  • Sad 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.