Jump to content

காங்கேசன்துறை துறைமுகம் வழியாக... இறக்குமதி செய்யும் திட்டத்திற்கு, அனுமதித்தால்... ஒரு இரவிலேயே தீர்வு – டக்ளஸ் தேவானந்தா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

காங்கேசன்துறை துறைமுகம் வழியாக... இறக்குமதி செய்யும் திட்டத்திற்கு, அனுமதித்தால்... ஒரு இரவிலேயே தீர்வு – டக்ளஸ் தேவானந்தா

எரிபொருள், சீமெந்து, உரம் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இந்தியாவிலிருந்து காங்கேசன்துறை துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யும் திட்டத்திற்கு  அனுமதித்தால் ஒரு இரவிலேயே தீர்வு என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நேற்று  (வியாழக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

”கடற்தொழிலாளர்கள், விவசாயிகள், போக்குவரத்து உள்ளிட்ட சங்கங்கள் இணைந்து எரிபொருள் பெற்றுக்கொள்வது தொடர்பில் கேட்டுள்ளார்கள். வட மாகாணத்தில் இருக்கக்கூடிய உரம் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை அதேபோன்று அத்தியாவசிய பொருட்களினுடைய பற்றாக்குறை நாடு தழுவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அதே நேரத்தில் வடமாகாணமும் அதற்கு விதி விலக்கில்லாமல் அதற்கு முகம் கொடுத்த வருகின்றது.

இந்த வகையில் எங்களது நீண்டகால திட்ட முன்மொழிவாக இந்தியாவிலிருந்த பொருட்களை இறக்குமதி செய்வதாகும். பாண்டிச்சேரி, காரைக்கால் அல்லது நாகபட்டணத்திலிருந்து நேரடியாக காங்கேசன்துறை துறைமுகத்தில் இறக்குமதி செய்வதன் ஊடாக விரைவாகவும், நியாயமான முறையில் எமது மக்களிற்கு கிடைக்கக்கூடிய சூழலை உருவாக்குவோம்.

எரிபொருள், உரம், சீமெந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவற்றை நீக்கி வெகு விரைவில் மக்களிற்கு அது கிடைக்க செய்வோம். என தெரிவித்தார்.

சிறுபோக பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு நாட்கள் கடந்துள்ள நிலையில் பசளைகள் கிடைக்கவில்லை. இந்த காலப்பகுதியில் பசளையை பெற்றுக்கொடுக்க முடியுமா என ஊடகவியலாளர் வினவினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர்,

அது தொடர்பில் என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் எனக்கு குறித்த அனுமதி கிடைக்கின்ற பட்சத்தில் ஒரு இரவிலேயே அதனை கொண்டு வந்து சேர்த்து விடுவேன் என தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1287430

Link to comment
Share on other sites

தமிழர்  பகுதி என்றால் நல்ல திட்டம் என்றாலும் அரசு பின்னடிப்பது வழமை தானே. இவர் அமைச்சராக இருந்தும் அனுமதி  பெறுவதென்றால் பிறகேன் அமைச்சர் பதவி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துறைமுகம் தான் பிரச்சனையா …..

அப்ப டொலர் பிரச்சனை இல்லையா???

இது கூட தெரியாமல் நாட்டை ஆழ்கிறார்கள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, MEERA said:

துறைமுகம் தான் பிரச்சனையா …..

அப்ப டொலர் பிரச்சனை இல்லையா???

இது கூட தெரியாமல் நாட்டை ஆழ்கிறார்கள்.

அரசியல்ல, இதெல்லாம்.. சகஜமப்பா. 😁

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

துறைமுகம் தான் பிரச்சனையா …..

அப்ப டொலர் பிரச்சனை இல்லையா???

இது கூட தெரியாமல் நாட்டை ஆழ்கிறார்கள்.

இதைத்தான் நாங்களும் கூறுகின்றோம்
வடக்கு கிழக்கை எங்களிடம் தாருங்கள்
ஒரு இரு இல்லை ஒரு மணி நேரங்களில்
நெருக்கடியைத் தீர்ப்போம் என்று இனி சூனா மாணா   அறிக்கை விடுவார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ஒரு இரவிலேயே அதனை கொண்டு வந்து சேர்த்து விடுவேன்

ஏன் பகலில்  அதனை செய்ய முடியாதோ, இரவில் தான் வசதியோ?
இருட்டில் வண்டி  மாற்றி ஏத்தி விடபோறிங்கப்பா கவனம். !!

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரே ஸ்பிக் , விசய் கம்பனி முதலாளிகளிடம் விழுந்துவிட உத்தேசம் போல கிடக்கு..

உங்கட மேல கேஸ் இருக்கு ..😢

  • Like 1
Link to comment
Share on other sites

4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நேரே ஸ்பிக் , விசய் கம்பனி முதலாளிகளிடம் விழுந்துவிட உத்தேசம் போல கிடக்கு..

உங்கட மேல கேஸ் இருக்கு ..😢

தேசிகரே! அப்படி எல்லாம் எடைபோடக்கூடாது. கேசு அங்கு இருக்கும்போதே பாரதப் பிரதமருக்குக் கைலாகு கொடுத்து வந்தவர்தான் அந்த அத்தியடிக் குத்தியர்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து எவ்வித தொடர்புகளும் வடக்கு கிழக்கு மக்களுக்கு கிடைக்க கூடாது என்பதில் , இ லங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து சிங்களம் தெளிவாக உள்ளது ....முக்கியமாக பொருளாதார வளர்ச்சியில் தன்னிறைவு அடை விட மாட்டார்கள்...காங்கேசன் துறை முகத்தை அபிவிருத்தி செய்வினம் பாதுகாப்பு படைகளுக்காக...பொருளாதார வளர்ச்சி அல்ல...
பிரிதானிய ஆட்சியில் பருத்திதுறை துறைமுகம் மிகவும் பிரசித்தி பெற்ற துறைமுகம் 

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில நம்ம ஈழத்து எம்.ஜீ.ஆருக்கு புலிகள் தடையாக இருந்தனர் தமிழ் மக்களுக்கு சேவை செய்ய...
இப்ப அவரின்ட எசமான்மார் தடையாக இருக்கினம் தமிழ் மக்களுக்கு சேவை செய்ய‌

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, vanangaamudi said:

ஏன் பகலில்  அதனை செய்ய முடியாதோ, இரவில் தான் வசதியோ?

இரவில் உயிர்களை காவுகொண்டு பழகிப்போச்சு, அதை மாத்த ஏலுமோ?

23 hours ago, தமிழ் சிறி said:

ஆனால் எனக்கு குறித்த அனுமதி கிடைக்கின்ற பட்சத்தில் ஒரு இரவிலேயே அதனை கொண்டு வந்து சேர்த்து விடுவேன் என தெரிவித்தார்.

எப்படியும் அங்கதான்  சுத்தி சுத்தி வருவார் அனுமதி.

22 hours ago, nunavilan said:

இவர் அமைச்சராக இருந்தும் அனுமதி  பெறுவதென்றால் பிறகேன் அமைச்சர் பதவி?

இவர் சொல்கிற அனுமதி அதுவல்ல. மக்கள் தனக்கு வாக்கு அனுமதி வழங்க வேண்டுமாம். உடனே எல்லாம் வானத்திலிருந்து கொட்டுண்ணும்.

23 hours ago, தமிழ் சிறி said:

எங்களது நீண்டகால திட்ட முன்மொழிவாக இந்தியாவிலிருந்த பொருட்களை இறக்குமதி செய்வதாகும். பாண்டிச்சேரி, காரைக்கால் அல்லது நாகபட்டணத்திலிருந்து நேரடியாக காங்கேசன்துறை துறைமுகத்தில் இறக்குமதி செய்வதன் ஊடாக விரைவாகவும், நியாயமான முறையில் எமது மக்களிற்கு கிடைக்கக்கூடிய சூழலை உருவாக்குவோம்.

அட....! இது பற்றி இதுவரை யாரும் சிந்திக்கவேயில்லை. இவ்வளவு இலகுவான வழியிருக்க, எல்லோரும் டொலரைப்பற்றியெல்லோ சிந்திக்கிறார்கள், கதைக்கிறார்கள் முட்டாள்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை தோசை அப்பளம் வடை!
தமிழ் மக்களுக்குச் சொன்னேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/6/2022 at 11:16, தமிழ் சிறி said:

ஆனால் எனக்கு குறித்த அனுமதி கிடைக்கின்ற பட்சத்தில் ஒரு இரவிலேயே அதனை கொண்டு வந்து சேர்த்து விடுவேன் என தெரிவித்தார்.

எதற்கெடுத்தாலும் சும்மா குத்தி முறிவதில் எனக்கு உடன்பாடில்லை. தனியே கூட்டமைப்பையும் விடுதலைப்புலிகளையும் சாடுவதிலும் எவ்வித பயனுமில்லை.

நீங்கள் அன்று சொன்னதை செய்ய நினைத்ததை செய்து காட்டுங்கள். உங்களுக்கு முட்டுக்கட்டை போட அல்லது குறுக்கே வர யாரும் இல்லையென நினைக்கின்றேன்.
 

சிலுவையை சுமக்க உங்களுக்கு நல்லதொரு சந்தர்ப்பம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

எதற்கெடுத்தாலும் சும்மா குத்தி முறிவதில் எனக்கு உடன்பாடில்லை. தனியே கூட்டமைப்பையும் விடுதலைப்புலிகளையும் சாடுவதிலும் எவ்வித பயனுமில்லை.

நீங்கள் அன்று சொன்னதை செய்ய நினைத்ததை செய்து காட்டுங்கள். உங்களுக்கு முட்டுக்கட்டை போட அல்லது குறுக்கே வர யாரும் இல்லையென நினைக்கின்றேன்.
 

சிலுவையை சுமக்க உங்களுக்கு நல்லதொரு சந்தர்ப்பம். 

இவருக்கு... போட்டியாக, அங்கஜன் நிற்கிறார். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

இவருக்கு... போட்டியாக, அங்கஜன் நிற்கிறார். 😂

எல்லாரும் ஏட்டிக்கு போட்டியாய்த்தான் நிக்கினம்.ஆனால் நடுத்தெருவிலை நிக்கிற தேரை இழுக்கமாட்டாமல் நிக்கினம்.🤣

இன்று வரை எந்தவொரு நாடும் தமிழர் போராட்டம் தவறு என்று கூறவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/6/2022 at 05:16, தமிழ் சிறி said:

அது தொடர்பில் என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் எனக்கு குறித்த அனுமதி கிடைக்கின்ற பட்சத்தில் ஒரு இரவிலேயே அதனை கொண்டு வந்து சேர்த்து விடுவேன் என தெரிவித்தார்

எதிர்ப்பு அரசியல் செய்யாமல் இணக்க அரசியல் செய்தால் மத்திய அரசிடமிருந்து எமக்கு வேண்டிய உரிமைகளை பெற்றுக்கொள்ளலாம், அதனால்தான் ஆயுத போராட்டத்தை ஒதுக்கி அரசுடன் இணைந்து பயணிக்கிறோம் என்ற உங்கள் கீறல் விழுந்த சிடி வசனத்தை காலம் காலமாக சொல்வீர்கள்,

முப்பது வருசத்துக்கு மேல சிங்களவர்களுடன் இணக்க அரசியல் செய்தும் கேவலம் பசளையை இறக்குமதி செய்யும் அனுமதி கூட சிங்களவன் உங்க இணக்க அரசியலை மதிச்சு ஒரு உரிமையா தரவில்லையா?

இலங்கை என்பது இந்தியா சீனா அமெரிக்கா கனடா ரஷ்யாபோல ஒன்றும் பரந்து விரிந்த நாடு கிடையாது, இலங்கையின் எந்த துறைமுகத்தில்  பொருட்களை இறக்கினாலும்  நாட்டின் எந்த பகுதிக்கும் ஒரே இரவில்  கொண்டு சென்றுவிட முடியும்.

வங்குரோத்து நிலையிலிருக்கும் இலங்கையின் தற்போதைய பற்றாக்குறை பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்னமோ துறைமுகங்களில் ஏற்றி இறக்கல்தான் என்பதுபோல் பேசிட்டு திரியுறாரே இவரு எப்படித்தான் இத்தனைகாலம் அவனுககூட சேர்ந்து இணக்க அரசியல் பண்றாரோ தெரியவில்ல.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் இதுவரை நாம ரூபாய் அடிச்சது போதும் இனி டொலர் அச்சடிப்பம் எண்டு குத்தியர்  கோட்டாவுக்கு ஆலோசனை கொடுக்கேல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, vanangaamudi said:

நல்ல காலம் இதுவரை நாம ரூபாய் அடிச்சது போதும் இனி டொலர் அச்சடிப்பம் எண்டு குத்தியர்  கோட்டாவுக்கு ஆலோசனை கொடுக்கேல்லை.

டொலரை யாரிடம் கொடுத்து ஏமாற்றுவது? அப்பாவி மக்களை ஏமாற்றுவதுபோல் வெளிநாடுளை ஏமாற்ற முடியுமா?

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.