Jump to content

பக்கத்து இலைக்கு பாயாசம் - கோபி சங்கர்


Recommended Posts

பக்கத்து இலைக்கு பாயாசம்….

காலமை கோப்பி குடுத்த வெள்ளிப்பேணிகளை கிணத்தடீல வைச்சு கழுவத் தொடங்க அங்கால யூஸ் கரைக்கத் தொடங்கிச்சினம் . விசேசங்களுக்கு முதல் நாளே எசன்ஸ் வாங்கி சீனி பாணியும் சிற்றிரிக் அமிலமும் போட்டு காச்சி் வைக்கிறது . பெரிய பிளாஸ்டிக் வாளீல காச்சின எசன்ஸை ஊத்தி தண்ணி விட்டு , சாக்கில உமியைப் போட்டுக் சுத்திக் கொண்டு வந்த ஜஸ் கட்டியை வடிவா கழுவீட்டு உலக்கையால நாலு போடு போட உடைஞ்சு வாற துண்டுகளை அள்ளிப்போட்டு சீனி அளவும் பாத்து யூசைக் கரைச்சு வைச்சம். பத்தரைக்கு வெக்கையா இருக்கும் அப்ப யூஸைக் குடுங்கோ எண்டு ஓடர் வந்திச்சுது. பதினைஞ்சு பேணி அடுக்கின tray ஐ தூக்கிக்கொண்டு நடுங்காம, ஊத்தாம ஆக்களுக்கால நெளிஞ்சு சுளிஞ்சு போய் எல்லாருக்கும் குடுக்க தம்பி சரியான தண்ணிவிடாய் ரெண்டு எடுக்கிறன் எண்டு சிலர் வாங்கி வாங்கி குடிச்சினம். ஆனாலும் அந்த வெக்கையிலும் எனக்கு உது வேணாம் கோப்பி தான் வேணும் எண்டு சிலர் அடம்பிடிக்க அதையும் குடுத்திட்டு வர மணி பதினொன்டாச்சுது.  

ஓடிப்போய் கொட்டிலுக்க “ சமையல் முடிஞ்சுதா “ எண்டு கேக்க, “இந்தா வாழைக்காய் பொரியுது நீங்கள் போய் ஆயத்தப்படுத்துங்கோ “ எண்ட பதிலோட ரெண்டு வடையும் சுடச்சுட கையில வந்திச்சிது. ஆறும் வரை பொறுமை இல்லாமல் வடையை வாயக்குள்ள போட்டிட்டு வாய்க்குள்ள வைச்ச படி ஊதி ஊதி ஆறப்பண்ணிக்கொண்டே சாப்பிட்டன். கிடாரத்தில இருந்த சோத்தை கிளறிப்போட்டு இறக்க சமைச்சு முடிஞ்ச கறிகள் எல்லாம் சட்டிக்குள்ள மாறிச்சுது.  

சபை போடத் தொடங்கலாம் எண்ட நியூஸ் போக பொம்பிளை மாப்பிளையின்ட தேப்பன் மார் தேடித்தேடி செம்பு குடுத்து கையைப்பிடிச்சு ஒவ்வொருத்தரா சாப்பிடக் கூட்டிக்கொண்டு வந்திச்சினம் . 

குனிஞ்சு நிமிந்து சபை போட்டிட்டு களைச்சுப் போய் வர யாரோ தந்த மஞ்சள் essence ஜூஸை குடிக்க தலையால வெக்கை ஆவி பறந்திச்சுது. “தம்பி உந்தச் சாக்கைக் கொண்டா “ எண்டு அண்ணா ஒராள் கூப்பிட சாக்கைக் கொண்டு ஓடினன். எனக்குப் பின்னால தும்புத்தடியோட வந்தவருக்குப் பேச்சு “உனக்கென்ன விசரே, சனத்தை கலைக்கத்தான் தும்புத்தடி, நல்ல நாள் விசேசத்தில விளக்குமாறு தும்புத்தடி எடுத்தா விளங்குமே கொண்டு போ அங்கால “ எண்டு. பந்திப்பாயை பக்குவமா உதறி சோத்துப் பருக்கைகளை சிந்தாமல் சிதறாமல் அப்பிடியே சாக்குக்க கொட்டீட்டு , விழுந்திருந்த சாப்பாட்டை ரெண்டு மட்டையால அள்ளி, ஊத்தியருந்த பாயாசத்தை ஈரத்துணி போட்டுத் துடைச்சிட்டு நிமிந்து இப்ப ஆக்களைக் கூப்பிடுங்கோ எண்டது பெடியள் குறூப். 

அடுத்த பந்திக்கு ஆக்கள் எல்லாம் வந்து இருந்திச்சினம். Extra வந்த ரெண்டு பேர் இருக்க இடம் இல்லைப் போல எண்டு கேட்டிட்டு திருப்பி போக வெளிக்கிட , ரெண்டு பேர் அரக்கி நடுவில இடம் இருக்கு வாங்கோ எண்டு இடம் குடுக்க கழுவின வாழை இலையோட முதல் group போச்சுது. 

முதல் நாள் சோடிச்ச குறூப் தான் அடுத்த நாள் சபையும் போடிறது. புதுக்கடகத்துக்க சோறு, சோறு போட ஒரு எவர்சில்வர் தட்டோட முதல் ஒரு குறூப் போகும். நாலு கறி போட்ட தூக்குச்சட்டியோட போறது தான் ரெண்டாவது, பயித்தங்காய், பூசணிக்காய், , கோவா வறை எண்டு எல்லாத்தையும் போட்டிட்டு வர , மூண்டாவதா கத்திரிக்காய் சம்பல் வரும், கரண்டி மாறினா புளிச்சுப்போயிடும் எண்டு அதை தனிச்சட்டீல தான் கொண்டு போறது. உருளைக்கிழங்கு பிரட்டல் போக பின்னால அப்பளம், மிளகாய் பொரியல் , வாழைக்காய் பொரியல் போட்ட சுளகோட போவினம். கடைசியாய் பருப்புப் போட்டு மேல நெய் விட்டிட்டூ வர , “சரி சாப்பிடலாம் “ எண்டு செம்பு குடுத்தவர் சொல்ல முதல் செம்பு வாங்கி முதலாவதா வந்திருந்தவர் கைவைக்க சபை களைகட்டும். இந்த முதல் மரியாதை நெருங்கிய உறவில் மூப்புக்கு கிடைக்கும் மரியாதை. 

சாப்பிட்டுக்கொண்டிருக்கேக்க இலை வெறுமையாக முதல் பாத்து பாத்து சோறும் கறியும் போகும். ரெண்டாவது தரம் சோறு போட்டாப் பிறகு தான் சொதி, குழம்பு தயிர் எல்லாம் போகும். முழுப்பேரும் சாப்பிட்டு முடியேக்க தான் பாயசத்தையும் வடையையும் கொண்டு வாறது . பக்கத்து இலைக்கு கேக்க முதலே பாயாசம் போகும். பாயசத்தோட சேத்துச் சாப்பிட இன்னொருக்கா வடையும் , அப்பளமும் போகும். கடைசீல வாழைப்பழமும் பலகாரமும் வைக்க எல்லாரும் முட்டின வயித்தோட கஸ்டப்பட்டு மெல்ல மெல்ல எழும்புவினம் . சபைகுழப்பிகள் ஆரும் இடையில எழும்ப மற்றாக்கள் விடமாட்டினம். “ எழும்பிறாக்கள் இலையை விட்டிட்டு எழும்புங்கோ “ எண்டு திரும்பத்திரும்பச் சொல்லி, ஏலாத ஆக்களைத் தூக்கி விட , கிணத்தடீல கைகழுவவும் குடிக்கவும் தண்ணி குடுத்துக்கொண்டு இருப்பினம் கொஞ்சப்பேர். 

ஆம்பிளைச் சபை முடிய பொம்பிளைச் சபை எண்டது வழக்கம். பெண்டுகள் சாப்பிடேக்கேம் கதைச்சுக்கொண்டிருப்பினம் சாப்பிடவும் மாட்டினம் வடிவாச் சாப்பிடவும் விடாயினம் எண்ட படியால் தான் இந்த சமத்துவமின்மை எண்டு நான் நினைக்கிறன். 

தாலி கட்டி ஆசீர்வாதம் முடிச்சு மாப்பிளை பொம்பிளை பூதாக்கலம் பண்ண சாமியறைக்குப் போக, அவையை மறந்திட்டு பொம்பிளை மாப்பிளையின்டை தாய் தேப்பன் மார் வந்து தேடித்தேடி சாப்பிடாத ஆக்களை கூட்டிக் கொண்டுவாறது, சோறு கறி காணுமா எண்டு பாக்கிறது, சாப்பிட்ட ஆக்களிக்கு பலகாரம் வெத்திலை, சுருட்டு எல்லாம் போனதா எண்டு பாக்கிறது , சபை போடிற பெடியளுக்கு எண்டு சோடா , யூஸ் குடுக்கிறது , வந்திட்டுப் போறாக்களுக்கு வெத்திலைப்பை குடுக்கிறது எண்டு சுழண்டு கொண்டு நிப்பினம் . 

மச்சான் கிழங்கு முடியுதாம் பாத்து குறைச்சுப்போடு, கரண்டியை சின்னனா மாத்து, பாயசம் கொஞ்சம் கட்டிப் படுது சுடுதண்ணி விட்டு தண்ணியாக்கு, அப்பளத்தை ரெண்டாக்கு, பெரிய வாழையிலையைப் போடாத , தயிரை மோராக்கு , கனக்க மிச்சம் இருக்கிற கறியை ரெண்டு மூண்டு தரம் கொண்டு போ எண்டு நிலமைகளை அறிஞ்சு ஓடர்கள் வரும். 

“எல்லாரும் சாப்பிட்டிட்டினம் பெடியள் வாங்கோ சாப்பிடுங்கோ “ எண்டு கடைசியா எங்களைக் கூப்பிட , மிச்சம் பிடிச்சு ஒளிச்சுவைச்ச எல்லாக் கறிச்சட்டியும் வெளீல வரும். பெரிய இலையில அவாவில அள்ளிப்போட்டிட்டு ரெண்டு வாய் வைக்கப் பசி போயிடும் . தம்பியவை சபை போட்ட கைக்கு பசி போயிடும் கொஞ்சம் எண்டாலும் சாப்பிடுங்கோ எண்டு கேக்கிற அன்புக்கு இன்னும் கொஞ்சம் சாப்பிடினாங்கள். 

ஆனால் கலியாண வேலை எல்லாம் செய்து சபை போட்டவைக்கெண்டு பிறகு ஒரு மச்சச் சாப்பாட்டு வைபடும் அண்டு மாப்பிளை பொம்பிளையோட வீட்டுக்காரர் எல்லாரும் எங்களுக்கு சாப்பாடு போட உண்டி பிதுங்கச் சாப்பிடுவம். அண்டு சாப்பிடேக்க எனக்கு பாயாசம் வேணும் எண்டு கேட்டுச் சாப்பிடுறது.  

ஒரு கலியாணத்தில போய் இந்தக் கனவில இருக்க திடீரெண்டு மனிசி தட்டி “ என்ன பாயாசம் எண்டு சொல்லிறீங்கள், பாயாசம் வேணும் எண்டால் மேசையில இருக்கு கெதியெண்டு எடுத்தச் சாப்பிட்டிட்டு வாங்கோ , வீடியோக்காரன் படம் எடுக்கத் தொடங்கினா நாங்கள் wish பண்ணிறது கஸ்டம் “ எண்டு சொன்னா. மனைவி சொல்லே மந்திரம் எண்டு அவசரமா பாயாசத்தை விழுங்க அது பிளாஸ்டிக் cup க்கால வரமாட்டன் எண்டு அடம் பிடிக்க அப்பிடியே வைச்சிட்டு மேடைக்கு மனிசிக்குப் பின்னால ஓடிப்போய் , கையைக் குடுத்திட்டு ரெண்டு நிமிசம் படத்துக்கு நிக்க, கமராக்காரன் சரி காணும் போங்கோ எண்டான்.  

 

Dr. T. Gobyshanger 

யாழ்ப்பாணம்

  • Like 5
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்து இலைப் பாயாசம் இனிக்கிறது

Edited by Kavi arunasalam
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய ஞாபகங்களை கிளறி விட்ட அருமையான கதை.பகிர்வுக்கு நன்றி நிழலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய நினவுகளை… அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்
டாக்டர் கோபி சங்கர். அருமையான எழுத்து நடை. பாராட்டுக்கள். 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/6/2022 at 14:40, நிழலி said:

பக்கத்து இலைக்கு பாயாசம்….

பகிர்வுக்கு நன்றி.

நன்று, நல்ல சுவையான பாயாசம்! ஒரு ஊர்த்திருமணத்திற்கு சென்றுவந்ததுபோன்ற அனுபவத்தை உணரவைக்கும் எழுத்து நடை . பாராட்டுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 
பக்கத்து இலைக்கு பாயாசம் அருமையாக   ருசியாக இருந்தது நல்ல விவரணம். 
ஒரு சபையை நடத்திய பெருமையை கூறுகிறது. பாராட்டுக்கள் கோபி சங்கர்  பகிர்வுக்கு நன்றி நிழலி   .   
 

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.