Jump to content

டொலர் வரக்கூடிய ஒரு வழி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டொலர் வரக்கூடிய ஒரு வழி

ச.சேகர்

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சனைகளுக்கு பிரதான காரணம் நாட்டின் கையிருப்பிலுள்ள அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையாகும். குறிப்பாக டொலர்கள் இன்மையினால் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டிய, அடிப்படை இறக்குமதிப் பொருட்களுக்குக் கூட கொடுப்பனவுகளை மேற்கொண்டு இறக்குமதி செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பொது மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், பல இன்னல்களுக்கும் முகங்கொடுத்த வண்ணமுள்ளனர். இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் நிலையில், அவற்றைப் பெற்றுக் கொள்வதிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன.

நாட்டினுள் அந்நியச் செலாவணியைக் கொண்டு வருவதற்கான திட்டங்கள் தற்போதைய அத்தியாவசிய தேவையாக அமைந்துள்ளது. நாடாளுமன்றத்திலும், பொது மேடைகளிலும் இதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், டொலர் இன்மையே இந்தப் பிரச்சனைக்கு காரணம் எனக்கூறி வந்தாலும், அதனை நாட்டினுள் கொண்டு வருவதற்கு எவ்வாறான திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்பது பற்றி இதுவரையில் பயனுள்ள, நடைமுறைச் சாத்தியமான எந்தவொரு திட்டங்களையும் முன்வைப்பதை காண முடியவில்லை.

தற்போது அரசியலில் அதிகளவு பேசப்படும் நபராக அமைந்திருக்கும் பிரபல தொழிலதிபர் தம்மிக பெரேராவும் நாட்டுக்கு 2030 ஆம் ஆண்டளவில் பயன்தரக்கூடிய பத்தாண்டு திட்டமொன்றை முன்மொழிந்திருப்பதை அவதானிக்க முடிந்திருந்தது. இதில் வெளிநாட்டவருக்கு இலங்கையில் குறிப்பிட்ட அமெரிக்க டொலர்களை வைப்புச் செய்வதனூடாக அவர்களுக்கு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு குடியுரிமை வழங்குவது போன்றதான முன்மொழிவுகள் உள்ளடங்கியுள்ளன.

image_052b979420.jpg

நாட்டின் பிரதான அந்நியச் செலாவணி வருவாயீட்டும் துறைகளில் ஒன்றான சுற்றுலாத் துறை கடந்த மார்ச் மாதமளவில் ஓரளவு தலைநிமிர்த்தியிருந்த போதிலும், மார்ச் மாத இறுதியில் ஆரம்பமான ஆர்ப்பாட்டங்கள், நெருக்கடி நிலைகள் காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் வருகை பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

இந்நிலையில், நாட்டில் குறுகிய காலப்பகுதிக்கு தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகளே தற்போதைய சூழலில் நாட்டுக்கு வரத் தயங்குகின்றனர். இந்நிலையில், பத்தாண்டு காலப்பகுதிக்கு, தம்வசமிருக்கும் பணத்தை இலங்கையில் முதலீடு செய்து அல்லது வைப்புச் செய்து தங்கியிருப்பது தொடர்பான தீர்மானத்தை எந்தவொரு அறிவார்ந்த வெளிநாட்டவரும் மேற்கொள்வாரா என்பது சந்தேகமாகவே அமைந்துள்ளது. குறிப்பாக, நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிச் சூழலில், இளம் இலங்கையர்கள் பலர் வெளிநாடுகளுக்கு செல்வதில் அதிகளவு ஆர்வம் காண்பிக்கும் ஒரு சூழலில், இவ்வாறான முன்மொழிவுகள் நகைக்கும் செயற்பாடுகளாக அமைந்திருக்கின்றன.

image_d71a57080a.jpeg

சரி, நாட்டினுள் டொலர் கொண்டு வருவதற்கு எவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் எனப் பார்த்தால், இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்றும் பலர் தமது சொந்தங்களுக்கு தாம் உழைக்கும் பணத்தை அனுப்புகின்றனர். இதற்காக வங்கிகளைப் பயன்படுத்துமாறும், அதற்காக அவர்கள் அனுப்பும் பணத்துக்கு மேலதிகமாக ஒவ்வொரு டொலருக்கும் பத்து ரூபாய் மேலதிகமாக வழங்கப்படும் எனக் குறிப்பிட்டும் அண்மைக் காலத்தில் மத்திய வங்கியினால் அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தன.

ஆனாலும், உண்டியல் எனப்படும் நபர்களினூடாக பணத்தை அனுப்பும் முறையையே இன்றும் பலர் பின்பற்றுகின்றனர். ஏனெனில் இது அவர்களுக்கு அதிகளவு இலாபத்தை வழங்குவதாக அமைந்துள்ளது. குறிப்பாக நாணயமாற்று விகிதத்தை எடுத்துக் கொண்டால், உண்டியல் முறையில் பணத்தை அனுப்பும் போது, வங்கிகளால் வழங்கப்படும் நாணயப் பரிமாற்றத்தை விடவும், அவர்களின் பெறுமதி உயர்வாக உள்ளது. அத்துடன், வங்கிகளால் அறவிடப்படும் சேவைக் கட்டணங்களை விடவும் குறைவான கட்டணங்களை இந்த உண்டியல் செயற்பாட்டாளர்கள் பெறுகின்றனர்.

உண்டியல் முறை என்பது உண்மையில் நாட்டுக்கு எவ்விதமான நன்மையை ஏற்படுத்துவதில்லை. வங்கிக் கட்டமைப்புக்கு அந்நியச் செலாவணி கிடைக்கும் பட்சத்திலேயே, அதனைக் கொண்டு நாட்டுக்கு தேவையான இறக்குமதிகளுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இவ்வாறு வெளிநாடுகளில் பணியாற்றுவோரைக் கவர்வதற்காக செய்யக்கூடிய ஒரு திட்டமாக, இலங்கையில் வசிக்கும் அவர்களின் உடனடி குடும்பத்தாருக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கத்தினால் மேற்கொள்ளலாம். குறிப்பாக, தற்போது வயது, பால், இன வேறுபாடின்றி அனைவருமே வரிசைகளில் நின்றே எரிபொருள், எரிவாயு, மருந்துப் பொருட்கள் போன்ற தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்கின்றனர்.

இந்நிலையில், வெளிநாடுகளில் பணியாற்றுவோருக்கு அரசாங்கத்தினால் அறிவிப்பு வழங்கி, தாம் பணியாற்றும் நாட்டிலுள்ள வெளிநாட்டு தூதரகத்தில் தம்மைப் பதிவு செய்து, அவர்கள் தமது இலங்கையிலுள்ள உறவுகளின் வங்கிக் கணக்குக்கு மாதாந்தம் குறிப்பிட்ட தொகை பணத்தை அனுப்பும் போது, இங்குள்ள உறவுகளின் இருப்பிடத்துக்கு அவர்களுக்கு தேவையான மருந்துப் பொருட்கள், எரிவாயு போன்றவற்ற விநியோகிக்க நடவடிக்கை எடுக்கலாம். அதுபோன்று எரிபொருள் நிரப்புவதற்கு அவர்களுக்கென வாரத்தில் குறிப்பிட்ட சில தினங்களில் நேரத்தை ஒதுக்கி, வரிசைகளில் காத்திருக்காமல், குறிப்பிட்டளவு எரிபொருளை பெற்றுக் கொள்ள வசதி ஏற்படுத்தலாம். அதுபோன்றே அரிசி, மா, சீனி மற்றும் பருப்பு போன்ற உணவுப் பொருட்களையும் அவர்களின் இருப்பிடத்துக்கு வழங்க, அல்லது அருகாமையிலுள்ள சதொச நிலையத்தினூடாக அவர்களுக்கென காலம் ஒதுக்கி, பெற்றுக் கொள்ள வசதியை ஏற்படுத்திக் கொடுக்கலாம். இதற்காக அவர்களுக்கென ஒரு விசேட அடையாள அட்டையை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கலாம்.

image_e1193b22a9.jpg

இவ்வாறன செயற்பாட்டினூடாக, வெளிநாட்டில் பணியாற்றும் பணியாளர்கள் தமது உறவுகளின் நலன் பேணப்படுவதை உணர்ந்து, தொடர்ந்தும் இந்த சட்டபூர்வமான முறைகளினூடாக நாட்டுக்கு, தமது உறவுகளுக்கு பணத்தை அனுப்புவார்கள்.

கடந்த இரண்டு வருடங்களாக சட்டபூர்வமான முறைகளினூடாக நாட்டுக்கு அனுப்பும் வெளிநாட்டு பணியாளர்களின் பண அனுப்புகை வெகுவாக குறைவடைந்துள்ளதாக அண்மையில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டிருந்த புள்ளி விவரங்கள் காண்பிக்கின்றன.

குறிப்பாக, கடந்த ஆண்டின் ஜனவரி முதல் மே மாதத்தில் நாட்டுக்கு கிடைத்திருந்த வெளிநாடுகளில் பணியாற்றும் பணியாளர்கள் அனுப்பிய பணத்துடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தப் பெறுமதி 53% வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

image_5590493b44.jpg

உதாரணமாக நாட்டின் மாதாந்த நுகர்வுக்கு அவசியமான எரிபொருள் கொள்வனவுக்கான தொகை 550 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளது. மே மாதத்தில் இலங்கைக்கு 304 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாடுகளில் பணியாற்றும் பணியாளர்களால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர்களை கவரும் (மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட மேலதிகமாக பணம் வழங்கும் சில்லறைத் திட்டங்களல்ல) மேற்படி முன்மொழிந்த குடும்பத்தாருக்கு வெகுமதியளிக்கும், அவர்களுக்கு முன்னுரிமையளிக்கும் திட்டங்களில் அரசாங்கம் கவனம் செலுத்துமானால், இந்தத் தொகையை மாதாந்த எரிபொருள் கொள்வனவுக்கு தேவையான அளவுக்கு அதிகரித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

எரிபொருள் விநியோகத்துக்கு ஜுலை மாதம் முதல் வாரம் முதல் கோட்டா முறைமையை அறிமுகம் செய்ய எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சர் தமது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார். இதன் நடைமுறைச் சாத்தியம் எவ்வாறு அமைந்திருக்கும் என்பது பற்றி உடனடியாக அறிந்து கொள்ள முடியாவிடினும், இவ்வாறான திட்டங்களுக்கு மாறாக, இது போன்ற மக்களுக்கு பயனளிக்கக்கூடிய நாட்டுக்கு டொலர்களை கொண்டு வரக்கூடிய திட்டங்களில் கவனம் செலுத்தலாம்.

புதிய பிரதமர் பதிவியேற்று ஒரு மாத காலம் கடந்து விட்ட நிலையில், மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாக வழங்கியிருந்த உறுதி மொழிகளில் எவ்விதமான முன்னேற்றங்களும் இதுவரையில் பதிவாகியிருப்பதை காணமுடியவில்லை. 21 ஆம் திருத்தமும் இதுவரையில் வரவில்லை.

எமது அறிவுக்கு எட்டிய உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரக்கூடிய ஒரு தீர்வை நாம் இங்கு முன்வைத்துள்ளோம், வாசகர்களாகிய உங்களிடமும் இது போன்ற சிந்தனைகள், கருத்துகள் இருந்தால் அவற்றை business@tamilmirror.lk எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்

https://www.tamilmirror.lk/வணிகம்/டொலர்-வரக்கூடிய-ஒரு-வழி/47-298726

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

vasee

இலங்கை அரசு ஏற்கனவே பல வகையிலும் முயன்று கொண்டுதானிருக்கிறது என கருதுகிறேன். எந்த உடனடி தீர்வும் (Quick fix) இருப்பதாக எனக்கு தெரியாது. இப்போது கிடைத்து கொண்டிருக்கும் அன்னிய செலாவணியினை

vasee

இலங்கைக்கு 3/4 ஏற்கன்வே தாராளமாக உள்ளது,நாலாவதாக மூலதனத்தினை கூட  பலவழிகளில் இலகுவாகப்பெற்றுவிடலாம் (புலம்பெயர் இலங்கையர் உள்ளடங்களாக), ஆனால் சிங்கப்பூர் நில வளமற்ற நாடு தனியே மனித வலுவைக்கொண்டு முன்

goshan_che

அதொண்டும் இல்லை. இலங்கையில் கள்ளன், காடையன் தான் பெரும்பாலும் அரசியலுக்கு போறாங்கள் எண்டு சொல்லி போட்டன் எல்லே - அதுதான் அக்கா சகோதர விசுவாசத்தில சிடு சிடுக்கிறா🤣.

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கமான கட்டுரை .......நன்றி கிருபன்.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட யாழ்கள வசி அவர்களை எதிர் பாக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

இதில் வெளிநாட்டவருக்கு இலங்கையில் குறிப்பிட்ட அமெரிக்க டொலர்களை வைப்புச் செய்வதனூடாக அவர்களுக்கு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு குடியுரிமை வழங்குவது போன்றதான முன்மொழிவுகள் உள்ளடங்கியுள்ளன.

இலங்கை பிரஜை ஆவதை எந்த வெளிநாட்டவர்கள் விரும்புவார்கள்? அப்படியே வந்தாலும் அவர்கள் என்ன பயனை அடைவார்கள்?, அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் ஏற்றுமதி செய்யக்கூடிய தொழிலில்  ஒரு முதலீட்டை ஏற்படுத்தி ஏற்றுமதி வருமானத்தை ஒழுங்காக எடுக்கமுடியுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனம் காதைப் பொத்தி அடிக்கும். தற்போதுள்ள சூழ்நிலையில் முன்னுரிமை எவருக்கும் வழங்க முடியாது. பெளத்த குருமாரை தவிர்த்து.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

எங்கட யாழ்கள வசி அவர்களை எதிர் பாக்கிறேன்.

Hello @vaseelots of people waiting for you in this topic please.

2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:
10 hours ago, கிருபன் said:

இதில் வெளிநாட்டவருக்கு இலங்கையில் குறிப்பிட்ட அமெரிக்க டொலர்களை வைப்புச் செய்வதனூடாக அவர்களுக்கு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு குடியுரிமை வழங்குவது போன்றதான முன்மொழிவுகள் உள்ளடங்கியுள்ளன.

இலங்கை பிரஜை ஆவதை எந்த வெளிநாட்டவர்கள் விரும்புவார்கள்? அப்படியே வந்தாலும் அவர்கள் என்ன பயனை அடைவார்கள்?, அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் ஏற்றுமதி செய்யக்கூடிய தொழிலில்  ஒரு முதலீட்டை ஏற்படுத்தி ஏற்றுமதி வருமானத்தை ஒழுங்காக எடுக்கமுடியுமா

உள்ளவங்களே வெளியேற முண்டியடிக்கிறார்கள்.

ஒரு முதலைப் போட்டா திரும்ப வருமா தெரியாது.
இந்த நிலையில் எப்படி? யார்? முதலைப் போடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஏற்கனவே 55 வயதுக்கு மேலானவர்கள் அமெரிக்க டொலரில் வைப்பு செய்து நிரந்தர வீசா பெறும் Sri Lanka My Dream Home திட்டத்தின் மறு பதிப்புத்தானே?

இது இலங்கையில் ரிடையர் ஆக விரும்பும் வெளிநாட்டினர்க்கானது.

ஆனால் தரமான (தனியாரிலேனும்) மருத்துவம், தொலை தொடர்பு, போக்குவரத்து, நிலையான அமைதி, நிலையான பொருளாதாரம் இவைதான் இப்படி வருபவர்களின் பிரதான எதிர்பார்ப்பு.

வயோதிப காலத்தில் வந்து பெற்றோல் வரிசையில், தரமான மருத்து இல்லாமல் அல்லோலகல்லோலபட யாரும் தயாராயிராயினம்.

அவையே வரமாட்டினம் எண்டால் - வேலை செய்யும் வயதினர்? வீட்டில் இருந்து வேலை செய்பவகள், பங்கு/கிரிப்டோ/கரன்சி வர்த்தக பேர்வழிகள் கூட, உடனடி அதிவேக இண்டெர் நெட்டை கட்டாயமாக கருதுவார்கள்.

அடிக்கடி கரண்ட் கட், broadband service outage வரும் நாட்டில் இருந்தால் அவர்களுக்கும் நட்டம்தான் வரும்.

நான் யோசித்து பார்த்த வரையில் - இலங்கையில் நடுத்தர, மேல்தட்டு மக்களிடம், நிறுவனங்களிடம் அவர்களுக்கு தேவையான எரிபொருளை வாங்கும் பணம் இருக்கிறது (assets, dollars and or SL rupees).

ஆனால் வாங்கி விநியோகம் செய்யும் அரசுக்குத்தான் வாங்க பணம் இல்லை.

இதற்கு தீர்வுக்கு ஒரு வழி இந்தியாவுடன் ஒரு நாணய ஒன்றியத்துக்கு போவது.

அதாவது

1. இப்போ உள்ள இலங்கை நாணயத்தை முற்றாக பாவனையில் இருந்து அகற்றல்.

2. இந்திய நாணயமே இலங்கையில் செல்லுபடியாகும் என அறிவித்தல்.

3. மோடி செய்த டி மொனடைசன் போல - குறிப்பிட்ட காலப்பகுதியில் இப்போ உள்ள நாணய மாற்று விகிதத்தில் (1:4) அனைத்து இலங்கை நாணயத்தையும் இந்திய நாணயமாக மாற்றல் (கணக்கில் காட்ட கூடிய வெள்ளை பணம்).

4. இவ்வாறு செய்யும் போது ஏற்படும் இந்தியாவுக்கான இந்திய நாணய இழப்பு, இலங்கை இந்தியாவிடம் பெற்ற நீண்ட கால கடனாக கருதபட்டு, இலங்கை இந்த கடனை அடைக்கும் போது, அது மீளவும் தனது புதிய நாணயத்தை வெளியிடும்.

கிட்டதட்ட இப்படி ஒரு முறையிலேயே இறைமை உள்ள அரசாக இருந்த ஸ்கொட்லாந்து அரசு, பொருளாதார வங்குரோத்தில் இருந்து மீள, இங்கிலாந்துடன் இணைந்து அதுவரை ஒரு அரசரின் கீழ் இரு வேறு நாடுகளாக இருந்த நாடுகள்  ஒன்றாக்கப்பட்டு வெஸ்மின்ஸ்டர் பாராளுமன்றின் கீழ் கொண்டுவரப்பட்டது.

சற்றே மாறுபட்டாலும் கிரேக்க தேசத்தை ஜேர்மனி தலைமையிலான ஈயூ மீட்டதும் இப்படித்தான் (அங்கே ஏலவே ஒரு நாணய ஒன்றியம் (ஈரோ) இருந்தது.

இப்படி நடப்பது சாத்தியம் ஆனால் நடைமுறை சாத்தியமா? குறிப்பாக இது கிட்டதட்ட இந்தியாவிடம் மண்டி இடும் நிலை. சிங்க மைந்தர்கள் ஏற்பார்களா?

அடுத்து, இன்று வரையும் ஜனநாயக ரீதியில் பிரிந்து போக ஸ்கொட்லாந்து போராடுவது போல இலங்கைக்கும் நேரலாம்.

@vasee @Kadancha மற்றும் ஏனையோர் என்ன நினைக்கிறீர்கள்?

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

இதற்கு தீர்வுக்கு ஒரு வழி இந்தியாவுடன் ஒரு நாணய ஒன்றியத்துக்கு போவது.

அதாவது

1. இப்போ உள்ள இலங்கை நாணயத்தை முற்றாக பாவனையில் இருந்து அகற்றல்.

2. இந்திய நாணயமே இலங்கையில் செல்லுபடியாகும் என அறிவித்தல்.

கோசான் சுற்றி சுற்றி மூக்கைத் தொடுவதைவிட நேரடியாகவே அமெரிக்க டாலரில் பாவனையைத் தொடங்கலாமே?

கோசான் அவர்களின் மின்னஞ்சலுக்கு உங்கள் யோசனையை அனுப்புங்கள்.

mailto:business@tamilmirror.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, goshan_che said:

இந்திய நாணயமே இலங்கையில் செல்லுபடியாகும் என அறிவித்தல்.

பிரேசில் பல வருடங்களுக்கு முன்பு பொருளாதார பிரச்சனையில் US டொலருக்கு மாறியதாகவும் அது வெற்றி அளிக்கவில்லை என்றும் சொன்னார்கள் விபரம் தெரிந்தால் தெரியபடுத்துங்கள்.

57 minutes ago, goshan_che said:

சற்றே மாறுபட்டாலும் கிரேக்க தேசத்தை ஜேர்மனி தலைமையிலான ஈயூ மீட்டதும் இப்படித்தான் (அங்கே ஏலவே ஒரு நாணய ஒன்றியம் (ஈரோ) இருந்தது.

அத்துடன் கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நாடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ஈழப்பிரியன் said:

கோசான் சுற்றி சுற்றி மூக்கைத் தொடுவதைவிட நேரடியாகவே அமெரிக்க டாலரில் பாவனையைத் தொடங்கலாமே?

கோசான் அவர்களின் மின்னஞ்சலுக்கு உங்கள் யோசனையை அனுப்புங்கள்.

mailto:business@tamilmirror.lk

🤣 எனது மின்னஞ்சல்-  info@udanza.gov.uda 🤣

டொலரில் ஆரம்பிக்கலாம் ஆனால் அது பெறுமதி மிக்க நாணயம் எனபதால் அடி தட்டு மக்கள் அந்த முறைக்கு மாற மிகவும் சிரமப்படுவார்கள்.

உதாரணமாக இப்போ   10,000 ரூபாய் வைத்திருப்பவரின் இந்திய நாணய மதிப்பு 2500 ஆக இருக்கும். டொலரில் என்றால் 28.  இதை பொருளாதரத்துக்கு ஏற்ப scale பண்ண சிரமபடுவார்க்ஃள் என நினைகிறேன்.  டொலருக்கு மாறினால் ஒரு பிளேன் டிக்கு எப்படி காசு கொடுப்பது ( சென்ஸை எல்லாம் புழக்கத்தில் கொண்டு வர முடியாது).

தவிரவும் அப்படி செய்வதாயின் - இப்போ மக்களிடம் புழக்கத்தில் இருக்கும் இலங்கை நாணயத்தை மாற்றி டாலராக கொடுக்க இலங்கைக்குள் அதிக டொலரை கொண்டு வர வேண்டி இருக்கும். இதுதான் இப்போதும் பிரச்சனை (டொலர் தட்டுப்பாடு). இதை தவிர்க்கவே இந்தியாவிடம், இந்திய ரூபாயை, இந்திய ரூபாயில் கடன் வாங்கி, இலங்கை காசுக்கு மாற்றாக கொடுக்கும் ஐடியா.

ஒரு காலத்தில் இலங்கை பொருளாதாரம் நல்ல நிலைக்கு வரும் போது, வரும் Indian inward investment ஐ வைத்தே வாங்கிய கடனை சுலபமாக அழைக்கவும் முடியும்.

அப்படி இல்லையாயின் இப்போ உள்ள இலங்கை காசை அம்போ என விட்டு விட்டு (பணமாக வைத்திருப்போர் தலையில் மிளகாய்) கம்போடியா போல மறைமுக டொலர் பாவனைக்கு மாற வேண்டும். பிறகு இலங்கை காசை காது குடையத்தான் பாவிக்க முடியும் 🤣.

அப்படி என்றாலும் ஒரு டொலருக்கு குறைவான அல்லது சிறிய பாவனைகளுக்கு இலங்கை காசையும், பெரிய பரிவர்தனைக்கு டொலரையும் பாவிக்கலாம் (hybrid).

34 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பிரேசில் பல வருடங்களுக்கு முன்பு பொருளாதார பிரச்சனையில் US டொலருக்கு மாறியதாகவும் அது வெற்றி அளிக்கவில்லை என்றும் சொன்னார்கள் விபரம் தெரிந்தால் தெரியபடுத்துங்கள்.

அத்துடன் கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நாடு.

பிரேசில் பற்றி அறியவில்லை ஆனால் - நான் டொலரை விட ஏன் இதற்கு இந்திய ரூபாய் சரிபட்டு வரும் என எழுதிய காரணங்கள் அங்கும் பொருந்தி இருக்கலாம்.

கிரேக்கம் ஐரோப்பிய பிரியத்தில் இருந்ததை விட அது யூரோ என்ற நாணய ஒன்றியத்தில் இருந்ததே அதை காப்பாற்றியது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

பிரேசில் பல வருடங்களுக்கு முன்பு பொருளாதார பிரச்சனையில் US டொலருக்கு மாறியதாகவும்

மேலோட்டமாக வாசித்ததில் 1994-1999 பிரேசில் ரியல்=1 டொலர் என peg பண்ணியுள்ளார்கள். 

நான் மேலே சொல்வது இதை அல்ல.  ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இலங்கையின் தற்போதைய நாணயத்தை கைவிட்டு முற்றாக பரிவர்த்தனைகளை இந்திய நாணயத்தில் செய்து, பொருளாதாரம் மீண்டெழுந்த பின் மீளவும் ஒரு புதிய இலங்கை நாணயத்தை உருவாக்கல்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:
7 hours ago, விளங்க நினைப்பவன் said:

பிரேசில் பல வருடங்களுக்கு முன்பு பொருளாதார பிரச்சனையில் US டொலருக்கு மாறியதாகவும்

மேலோட்டமாக வாசித்ததில் 1994-1999 பிரேசில் ரியல்=1 டொலர் என peg பண்ணியுள்ளார்கள். 

சொன்னார்களே என்று நான் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, சுவைப்பிரியன் said:

எங்கட யாழ்கள வசி அவர்களை எதிர் பாக்கிறேன்.

13 hours ago, ஈழப்பிரியன் said:

Hello @vaseelots of people waiting for you in this topic please.

உள்ளவங்களே வெளியேற முண்டியடிக்கிறார்கள்.

ஒரு முதலைப் போட்டா திரும்ப வருமா தெரியாது.
இந்த நிலையில் எப்படி? யார்? முதலைப் போடுவார்கள்.

10 hours ago, goshan_che said:

இது ஏற்கனவே 55 வயதுக்கு மேலானவர்கள் அமெரிக்க டொலரில் வைப்பு செய்து நிரந்தர வீசா பெறும் Sri Lanka My Dream Home திட்டத்தின் மறு பதிப்புத்தானே?

இது இலங்கையில் ரிடையர் ஆக விரும்பும் வெளிநாட்டினர்க்கானது.

ஆனால் தரமான (தனியாரிலேனும்) மருத்துவம், தொலை தொடர்பு, போக்குவரத்து, நிலையான அமைதி, நிலையான பொருளாதாரம் இவைதான் இப்படி வருபவர்களின் பிரதான எதிர்பார்ப்பு.

வயோதிப காலத்தில் வந்து பெற்றோல் வரிசையில், தரமான மருத்து இல்லாமல் அல்லோலகல்லோலபட யாரும் தயாராயிராயினம்.

அவையே வரமாட்டினம் எண்டால் - வேலை செய்யும் வயதினர்? வீட்டில் இருந்து வேலை செய்பவகள், பங்கு/கிரிப்டோ/கரன்சி வர்த்தக பேர்வழிகள் கூட, உடனடி அதிவேக இண்டெர் நெட்டை கட்டாயமாக கருதுவார்கள்.

அடிக்கடி கரண்ட் கட், broadband service outage வரும் நாட்டில் இருந்தால் அவர்களுக்கும் நட்டம்தான் வரும்.

நான் யோசித்து பார்த்த வரையில் - இலங்கையில் நடுத்தர, மேல்தட்டு மக்களிடம், நிறுவனங்களிடம் அவர்களுக்கு தேவையான எரிபொருளை வாங்கும் பணம் இருக்கிறது (assets, dollars and or SL rupees).

ஆனால் வாங்கி விநியோகம் செய்யும் அரசுக்குத்தான் வாங்க பணம் இல்லை.

இதற்கு தீர்வுக்கு ஒரு வழி இந்தியாவுடன் ஒரு நாணய ஒன்றியத்துக்கு போவது.

அதாவது

1. இப்போ உள்ள இலங்கை நாணயத்தை முற்றாக பாவனையில் இருந்து அகற்றல்.

2. இந்திய நாணயமே இலங்கையில் செல்லுபடியாகும் என அறிவித்தல்.

3. மோடி செய்த டி மொனடைசன் போல - குறிப்பிட்ட காலப்பகுதியில் இப்போ உள்ள நாணய மாற்று விகிதத்தில் (1:4) அனைத்து இலங்கை நாணயத்தையும் இந்திய நாணயமாக மாற்றல் (கணக்கில் காட்ட கூடிய வெள்ளை பணம்).

4. இவ்வாறு செய்யும் போது ஏற்படும் இந்தியாவுக்கான இந்திய நாணய இழப்பு, இலங்கை இந்தியாவிடம் பெற்ற நீண்ட கால கடனாக கருதபட்டு, இலங்கை இந்த கடனை அடைக்கும் போது, அது மீளவும் தனது புதிய நாணயத்தை வெளியிடும்.

கிட்டதட்ட இப்படி ஒரு முறையிலேயே இறைமை உள்ள அரசாக இருந்த ஸ்கொட்லாந்து அரசு, பொருளாதார வங்குரோத்தில் இருந்து மீள, இங்கிலாந்துடன் இணைந்து அதுவரை ஒரு அரசரின் கீழ் இரு வேறு நாடுகளாக இருந்த நாடுகள்  ஒன்றாக்கப்பட்டு வெஸ்மின்ஸ்டர் பாராளுமன்றின் கீழ் கொண்டுவரப்பட்டது.

சற்றே மாறுபட்டாலும் கிரேக்க தேசத்தை ஜேர்மனி தலைமையிலான ஈயூ மீட்டதும் இப்படித்தான் (அங்கே ஏலவே ஒரு நாணய ஒன்றியம் (ஈரோ) இருந்தது.

இப்படி நடப்பது சாத்தியம் ஆனால் நடைமுறை சாத்தியமா? குறிப்பாக இது கிட்டதட்ட இந்தியாவிடம் மண்டி இடும் நிலை. சிங்க மைந்தர்கள் ஏற்பார்களா?

அடுத்து, இன்று வரையும் ஜனநாயக ரீதியில் பிரிந்து போக ஸ்கொட்லாந்து போராடுவது போல இலங்கைக்கும் நேரலாம்.

@vasee @Kadancha மற்றும் ஏனையோர் என்ன நினைக்கிறீர்கள்?

இலங்கை அரசு ஏற்கனவே பல வகையிலும் முயன்று கொண்டுதானிருக்கிறது என கருதுகிறேன்.

எந்த உடனடி தீர்வும் (Quick fix) இருப்பதாக எனக்கு தெரியாது.

இப்போது கிடைத்து கொண்டிருக்கும் அன்னிய செலாவணியினை கூட இலங்கை இழக்கும் ஆபாயமே அதிகமுள்ளதாகக்கருதுகிறேன்.

இலங்கை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு ஏற்புடைய நாடல்ல எனும் நிலை ஏற்கனவே உருவாகிவிட்டது.

நிலமை இன்னும் மோசமாகும், ஐ எம் எப் கடன் மூலம் வரும் 5 பில்லியனில் குறைந்தது ஒரு வருடம் ஓட்டி விடலாம்.

இந்தியா, சீனா, பங்களாதேசம் என அனைத்து நாடுகளிடமும் உதவி கேட்டுள்ளது இலங்கை,

அவுஸ்ரேலியாவிடம் உதவி கேட்டுள்ளது.

https://www.abc.net.au/news/2022-06-19/sri-lanka-economic-crisis-worsens-pm-asks-australia-for-help/101152402

இந்த பிரச்சினையால் வட பகுதி மக்களும், தமிழகமும் பயனடையும் அதுவே இப்போதுள்ள சிறந்த தீர்வு அதனை இலங்கை மற்றும் தமிழக் அரசு கண்டு கொள்ளாது.

போர் நடந்த காலங்களில் தமிழ் மக்களின் பொருளாதார நெருக்கடியில் உதவிய தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தினை கூட வெளிநாட்டில் வாழும் பெரும்பான்மையினத்தவர் திட்டமிட்டு முடக்கியிருந்தனர்.

உலக வரலாற்றில் பொருளாதார ரீதியாக இயற்கையாக பாதக சூழலில் உள்ள நாடுக்ளே அவற்றை கடந்து பொருளாதார உச்ச நிலையினை அடைந்துள்ளன.

ஒரு பொருளாதாரத்திற்கு தேவையான 4 வளங்களில், சிங்கப்பூரிடம் முக்கியமான வளமான  நிலம் இருக்கவில்லை அரசு செய்த முதல் வேலை அனைத்து நிலங்களையும் மக்களிடம் இருந்து எடுத்து கொண்டது, பின்னர் அதில் அரச வீடமைப்பு திட்டத்தினை உருவாக்கியது, இரண்டாவதாக மூலதன வலு இல்லாமல் இருந்தது, அத்னை வெளிநாட்டு மூலதனக்களை கவர்ந்தன் மூலம் ஈடுகட்டியது.

எல்லாவற்றையும் விட ஊழலை ஒழித்துக்கட்டியதுதான் முக்கியமான விடயம்.

சில வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து பரந்தன் இரசாயன தொழிற்சாலையினை ஆரம்பிக்க புலம்பெயர் தமிழர் முயன்ற போது 4 எழுத்து தமிழ்தேசியம் பேசும் ஒரு அரசியல்வாதி இலஞ்சம் கேட்டாராம்.

முக்கியமாக நல்ல தலமை வேண்டும் அது இப்போது தமிழர்களிடமும் இல்லை.

ஒரு கட்டத்திற்கு மேல் இலங்கையரசு ஏழ்மையான  மாகாணங்களுக்கு நிதியினை கூட ஒதுக்காது, வட கிழக்கை கண்டே கொள்ளமாட்டார்கள் அப்படி ஒரு நிலமை கூட வரலாம்.

இலங்கை எவ்வாறாயினும் வங்குரோத்தாகப்போகிறது கடனுகளை எல்லா நாடுகளிடமும் வாங்கி விட்டு வங்குரோத்தினை அற்வித்து விட வேண்டியதுதான் அதற்கு பிறகு நடப்பதை பிறகு பார்க்கலாம்.

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

நன்றி வசி.

இலங்கைக்கு பல பாதகங்கள் இருப்பது உண்மைதான். குறிப்பாக ஊழல், நல்ல தலைமையின்மை. அடுத்து நம்பிக்கையீனம்.

இவற்றை இருக்கும் அரசியல்வாதிகளை வைத்து கொண்டு நிவர்த்தி செய்ய முடியாது.

இப்போ middle income நாடு என்ற நிலையில் இருந்து low income நாடு என்றாகி விட்டது.

முற்றிலும் புதியதோர் தலைமை, புதிய அரசியல், மிகவும் கடுமையான பொருளாதார முடிவுகள் என்பனவற்றை எடுத்தால் மீளலாம்.

ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அதற்கு வாய்பிருப்பதாக தெரியவில்லை.

சுயபாசை மூலம் கற்பித்தல், புரையோடிய ஊழல், இனவாதம் - இரெண்டு தலைமுறையாக ஒரு சுயநல ஆனால் மொக்கு கூட்டத்தை இருவாக்கி தந்துள்ளது. எமது தந்தையர் காலத்தில் ஒரு போஸ்மாஸ்டருக்கு இருந்த ஆளுமை இப்போ ஒரு அமைச்சு செயளாலருக்கு இல்லை.

அரசியலில் கூட முன்னாள் கள்ளர்களும், பெர்மிட்காரரும், ரெளடிகளும்தான் தலைவர்கள்.

இந்த நிலையில் நீங்கள் எதிர்பார்க்கும் 2/4 கிடைப்பது கஸ்டம்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

இலங்கை எவ்வாறாயினும் வங்குரோத்தாகப்போகிறது கடனுகளை எல்லா நாடுகளிடமும் வாங்கி விட்டு வங்குரோத்தினை அற்வித்து விட வேண்டியதுதான் அதற்கு பிறகு நடப்பதை பிறகு பார்க்கலாம்.

கருத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி வசி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

சொன்னார்களே என்று நான் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை

https://www.globaltimes.cn/content/858786.shtml

http://www-personal.umich.edu/~kathrynd/Brazil.w06.pdf
 
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

@vasee @Kadancha மற்றும் ஏனையோர் என்ன நினைக்கிறீர்கள்?

16 hours ago, goshan_che said:

மேலோட்டமாக வாசித்ததில் 1994-1999 பிரேசில் ரியல்=1 டொலர் என peg பண்ணியுள்ளார்கள். 

நான் மேலே சொல்வது இதை அல்ல.  ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இலங்கையின் தற்போதைய நாணயத்தை கைவிட்டு முற்றாக பரிவர்த்தனைகளை இந்திய நாணயத்தில் செய்து, பொருளாதாரம் மீண்டெழுந்த பின் மீளவும் ஒரு புதிய இலங்கை நாணயத்தை உருவாக்கல்.

ஓர் தேசிய நாணயத்தின் (கடத்தப்படும்) பெறுமதி முதலில் நிலைநாட்டப்படுவது, அந்த  இறைமையுள்ள  அரசால் ஆகும், முக்கியமாக அந்த அரசின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பில். 

இது முதலில் கதைத்த,  நாணயத்துக்கான பெறுமதியை அரசின் financial system இடம் எதோ ஓர் பெறுமதியை கொடுத்தே நாணயத்தை  எல்லோரும் பெறுகிறார்கள். அரசு உத்தரவாதம் கொடுக்கிறது, அந்த பெறுமதி அந்த நாணய தொகையை வாங்குபவருக்கு அளிக்கப்படும். என்பதில் ஆரம்பிக்கிறது. முதலில் சொன்னபடியால் மேலதிக விளக்கம் இன்றி,

நீங்கள் சொல்வது, ஏறத்தாழ sovereign guarantee ஐ தற்கலிகமாக (ஆகக் குறைந்தது)  ஒத்தி வைப்பது.

அந்த அரசே (சொறி  சிங்களம் ), இப்போதைய நிலையில் அந்த நாணயத்தின்  (sl rupee ) sovereign guarantee ஐ தற்கலிகமாக (ஆகக் குறைந்தது)  ஒத்தி வைப்பது, sl rupee முழுமையாக வலுவிழந்து விடும். 
அதனால், அப்படி   செய்யும் போது, சிங்களத்தின் வங்கித்துறையையே உடைத்து விடும் சாத்தியக் கூறுகள் கூட உள்ளது.

மற்றது, அளவு ஹிந்தியா பொருளாதாரம், சனத்தொகை  என்பது, இலங்கைத் தீவை கிந்தியாவின் உள்ளே  உள்ளிளித்து விடும் அபாயம் உள்ளது, ஹிந்திய நாணயத்தை மட்டும் புழக்கத்தில் கொட்ண்டு வந்தால்.  

இது ஓர் முக்கிய காரணம்,  பொதுவாக, தனக்கே உரிய நாணயத்தை கொண்டு இருக்கும் அரசுக்கள், peg செய்வது.

இப்போதைய நிலையில் peg இலும் பிரச்னை இருக்கிறது. ஒரு விதத்தில், உத்தியோகபூர்வம் இல்லாத pegging நடைமுறையில் இருக்கிறதை, மத்திய வங்கி sl rupee / dollar ஐ அறிவிப்பது.  

ஏனெனில், கிந்தியாவின் பொருளாதாரம் பல மடங்காக உயர்வதற்கு வாய்ப்புகள் கூட, peg செய்தால், அந்த peg வீதத்தை பேணுவதற்கு, ஒன்றில் பொருளாதாரம் வேண்டும் அல்லது கிந்திய நாணயத்தை மதிவாங்கி கையிருப்பில் வைத்து இருக்க வேண்டும், அதாவது தொடர்ந்து வாங்க வேண்டும்.

இதுவரையில், peg  செய்த நாடுகள் எல்லாவற்றனதும் அனுபவங்கள் கசப்பாக முடிந்து உள்ளது என்பதே வரலாறு (ERM, 1998 Asian financial Crisis, Swiss Franc - Euro peg).  

ஆனா, சொறி சிங்களசத்தின் நிலையில், pegging செய்வதில் அதை speculation ஆல் தாக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம்.  

greece இல், 2001 / 2002 இல் இருந்து Euro வந்துவிட்டது, ஆனாலும் greece பல வருடங்கள், drachma நாணயத்தை மாற்றும் வழிவகையை வைத்து இருந்தது. அது சாத்தியக்கூறாக இருந்தது, greece, ஆகக்குறைந்தது நம்பிக்கையை கொண்டு இருந்தது. மற்றது, பல நாடுகள் ஒரே நேரத்தில் செய்தது (Euro ஐ நாணயமாக கொண்டு வந்தது), ஓர் நம்பிக்கையை உருவாக்கியதும் கூட.  

அனால் peg செய்யும் போது   sovereignty தேய்வடையும்  என்பது உண்மை. உ.ம். ஆக, கிந்தியா சொல்லலாம் கிந்திய நாணய peg ஐ குறிப்பிட தேவைகளுக்கு பாவிக்க கூடாது  என்று. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியாக , peg அனுபவம் terra luna இலை நடந்தது

terra luna ஐ நாட்டுக்கு  ஒப்பிட  முடியாது.

அனால், நான் மற்றும் என்னை போன்ற சிந்தனை உள்ளவர்கள் அனாமதேய பெயரில்,   டெரா luna இன் boss க்கு chat இல் சொன்னது, நீங்கள் இப்பொது peg ஐ கைவிட வேண்டும், கை விட்டால் terra லூனா இதுவரை நடந்த இழப்போடு  தப்பும்.

ஆனால் , நீங்கள் peg ஐ நாண்டு பிடித்தால், கைவிட வைக்கப்படுவீர்கள், எல்லவற்றையும் இழந்து.

terra luna இன் boss, என்னைப் போன்றவர்களின் கருத்தை எடுக்கவில்லை. 

இறுதியில், இயலாமலேயே, terrA லூனா, peg ஐ கைவிட்டது. 

அதாவது, speculation ஆல்  peg தாக்கப்பட்டு, தளம்பும் ஆயின், peg ஐ வைத்து இருப்பது மிகவும் கடினம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

சுயபாசை மூலம் கற்பித்தல், புரையோடிய ஊழல், இனவாதம் - இரெண்டு தலைமுறையாக ஒரு சுயநல ஆனால் மொக்கு கூட்டத்தை இருவாக்கி தந்துள்ளது. எமது தந்தையர் காலத்தில் ஒரு போஸ்மாஸ்டருக்கு இருந்த ஆளுமை இப்போ ஒரு அமைச்சு செயளாலருக்கு இல்லை.

துரை, நீங்கள் ஆங்கிலத்தில் தான் சிந்தித்து செயற்படுவீர்களோ?...தொடர்ப்பாடல்  பிரச்சனையால் தான் அங்குள்ளவர்கள் வேலை வெட்டி இல்லாமல் , பிஸ்னஸ் இல்லாமல் முடங்கி கிடக்கிறார்கள் என்பது போல் இருக்குது உங்கள் கதை .
கர்நாடகாவில் ஆங்கிலத்திலா அனைவரும் கற்கின்றனர்?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

காகத்தை ஆங்கிலத்தில் கூற முடியாத நிதி அமைச்சரை கொண்ட நாடல்லோ..

ஆனால் நீங்கள் கொரோனா தான் சிறீலங்காவின் வீழ்ச்சிக்கு காரணம் என்டு நாண்டு கொண்டிருந்தனீங்கள்.

ஆனால் முன்னாள் நிதி அமைச்சர் வாக்கு போட்ட மக்களும் காரணம் என்று அரச நிர்வாகத்தை குறை கூறி உள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

ஆங்கிலத்தில் சிந்திக்க தேவையில்லை. ஆனால் தொழில்நுட்ப கல்வியை கூட, தமிழில் சப்பி துப்பி விட்டு, பல்கலை கழகத்தில் கூட விரிவுரையாளர்கள் நோட்ஸ் கொடுக்கும் ஏட்டு சுரைக்காய்களைத்தான் இந்த சுயபாசா கல்வி திட்டம் தந்துள்ளது.

இதை உணர்ந்துதான் இலங்கையில் மீண்டும் மட்டுப்பட்ட ரீதியில் ஆங்கில முறை மூலமான கல்வியை இலங்கையே அறிமுக படுத்தியுள்ளது.

வைத்தியர்களை தவிர அதிக திறமைசாலிகள் எத்தனை பேர் அரச பணியில் சேர்கிறார்கள்? 

திறமைசாலிகள் பலரும் சீமா, மார்கெட்டிங், வங்கி, பொறியியல், என. ஆங்கிலம் தேவைபடும் தனியார் துறைகளுக்கு போய்விட, சுயபாசையில் தேறிய மிச்ச சொச்சமும், சொச்ச மிச்சமும்தான் நிர்வாக சேவையில் வந்து உயிரை வாங்குகிறார்கள்.

அதிகாரிகள் வர்க்கத்தில் ஏற்பட்டுள்ள இந்த தலைமைதுவ, திறைமைசாலிகள் வெற்றிடமும் இலங்கை இந்த நிலைக்கு போக ஒரு முக்கிய காரணம் என்பது என்கருத்து.

இந்தியாவில் இப்படி இல்லை இப்போதும் அங்கே ஐஏஎஸ் என்பது பலரும் விரும்பி போகும் துறை - போட்டியும் கடுமை. அவர்களின் ஆங்கில, பொது, தலைமைதுவ பண்புகள் நல்ல நிலையிலே இருக்கும்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

காகத்தை ஆங்கிலத்தில் கூற முடியாத நிதி அமைச்சரை கொண்ட நாடல்லோ..

ஆனால் நீங்கள் கொரோனா தான் சிறீலங்காவின் வீழ்ச்சிக்கு காரணம் என்டு நாண்டு கொண்டிருந்தனீங்கள்.

ஆனால் முன்னாள் நிதி அமைச்சர் வாக்கு போட்ட மக்களும் காரணம் என்று அரச நிர்வாகத்தை குறை கூறி உள்ளார்.

அதொண்டும் இல்லை. இலங்கையில் கள்ளன், காடையன் தான் பெரும்பாலும் அரசியலுக்கு போறாங்கள் எண்டு சொல்லி போட்டன் எல்லே - அதுதான் அக்கா சகோதர விசுவாசத்தில சிடு சிடுக்கிறா🤣.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

ஓர் தேசிய நாணயத்தின் (கடத்தப்படும்) பெறுமதி முதலில் நிலைநாட்டப்படுவது, அந்த  இறைமையுள்ள  அரசால் ஆகும், முக்கியமாக அந்த அரசின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பில். 

இது முதலில் கதைத்த,  நாணயத்துக்கான பெறுமதியை அரசின் financial system இடம் எதோ ஓர் பெறுமதியை கொடுத்தே நாணயத்தை  எல்லோரும் பெறுகிறார்கள். அரசு உத்தரவாதம் கொடுக்கிறது, அந்த பெறுமதி அந்த நாணய தொகையை வாங்குபவருக்கு அளிக்கப்படும். என்பதில் ஆரம்பிக்கிறது. முதலில் சொன்னபடியால் மேலதிக விளக்கம் இன்றி,

நீங்கள் சொல்வது, ஏறத்தாழ sovereign guarantee ஐ தற்கலிகமாக (ஆகக் குறைந்தது)  ஒத்தி வைப்பது.

அந்த அரசே (சொறி  சிங்களம் ), இப்போதைய நிலையில் அந்த நாணயத்தின்  (sl rupee ) sovereign guarantee ஐ தற்கலிகமாக (ஆகக் குறைந்தது)  ஒத்தி வைப்பது, sl rupee முழுமையாக வலுவிழந்து விடும். 
அதனால், அப்படி   செய்யும் போது, சிங்களத்தின் வங்கித்துறையையே உடைத்து விடும் சாத்தியக் கூறுகள் கூட உள்ளது.

மற்றது, அளவு ஹிந்தியா பொருளாதாரம், சனத்தொகை  என்பது, இலங்கைத் தீவை கிந்தியாவின் உள்ளே  உள்ளிளித்து விடும் அபாயம் உள்ளது, ஹிந்திய நாணயத்தை மட்டும் புழக்கத்தில் கொட்ண்டு வந்தால்.  

இது ஓர் முக்கிய காரணம்,  பொதுவாக, தனக்கே உரிய நாணயத்தை கொண்டு இருக்கும் அரசுக்கள், peg செய்வது.

இப்போதைய நிலையில் peg இலும் பிரச்னை இருக்கிறது. ஒரு விதத்தில், உத்தியோகபூர்வம் இல்லாத pegging நடைமுறையில் இருக்கிறதை, மத்திய வங்கி sl rupee / dollar ஐ அறிவிப்பது.  

ஏனெனில், கிந்தியாவின் பொருளாதாரம் பல மடங்காக உயர்வதற்கு வாய்ப்புகள் கூட, peg செய்தால், அந்த peg வீதத்தை பேணுவதற்கு, ஒன்றில் பொருளாதாரம் வேண்டும் அல்லது கிந்திய நாணயத்தை மதிவாங்கி கையிருப்பில் வைத்து இருக்க வேண்டும், அதாவது தொடர்ந்து வாங்க வேண்டும்.

இதுவரையில், peg  செய்த நாடுகள் எல்லாவற்றனதும் அனுபவங்கள் கசப்பாக முடிந்து உள்ளது என்பதே வரலாறு (ERM, 1998 Asian financial Crisis, Swiss Franc - Euro peg).  

ஆனா, சொறி சிங்களசத்தின் நிலையில், pegging செய்வதில் அதை speculation ஆல் தாக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம்.  

greece இல், 2001 / 2002 இல் இருந்து Euro வந்துவிட்டது, ஆனாலும் greece பல வருடங்கள், drachma நாணயத்தை மாற்றும் வழிவகையை வைத்து இருந்தது. அது சாத்தியக்கூறாக இருந்தது, greece, ஆகக்குறைந்தது நம்பிக்கையை கொண்டு இருந்தது. மற்றது, பல நாடுகள் ஒரே நேரத்தில் செய்தது (Euro ஐ நாணயமாக கொண்டு வந்தது), ஓர் நம்பிக்கையை உருவாக்கியதும் கூட.  

அனால் peg செய்யும் போது   sovereignty தேய்வடையும்  என்பது உண்மை. உ.ம். ஆக, கிந்தியா சொல்லலாம் கிந்திய நாணய peg ஐ குறிப்பிட தேவைகளுக்கு பாவிக்க கூடாது  என்று. 

நன்றி கடைஞ்சா,

உங்கள் கருத்தின் படி peg பண்ணுவது சாத்தியமுமில்லை, ஆபத்துகள் நிறைந்தது என்கிறீர்கள். 

அதே போல் நாணய ஒன்றியத்துள் போனால் இலங்கை முழுவதுமாக இந்தியாவால் விழுங்கபடும் அபாயம் நிச்சயம் உண்டு.

குறித்த கால அல்லது பொருளாதார அளவுகள் அடிப்படையில் ஒரு தற்காலிக நாணய ஒன்றியத்துக்கி போக முடியாதா?

முன்பு பிரவுண் யூகே சான்சிலராக இருந்த போது - யூரோவில் யூகே இணைய 5 பொருளாதார, அரசியல் நிலைகள் (conditions) ஐ சந்திக்க (met) பண்ண வேண்டும் என ஒரு test ஐ வைத்திருந்தது யூகே திறைசேரி.

அது போல் ஒரு test ஐ meet பண்ணினால் இலங்கை நாணய ஒன்இயய்தில் இருந்து வெளிவரலாம் என்ற அடிப்படையில் இந்தியாவிடம் ஒப்பந்தம் போடலாம்?

ஆனால் வசமாக மாட்டிவிட்ட இலங்கையை அதன் பின் இந்தியா வெளியே விடாது என்றே நானும் நினைக்கிறேன்.

 https://econ.economicshelp.org/2007/03/gordon-browns-5-economic-test-for.html?m=1
 
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.