Jump to content

டொலர் வரக்கூடிய ஒரு வழி

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

இந்த நிலையில் நீங்கள் எதிர்பார்க்கும் 2/4 கிடைப்பது கஸ்டம்.

இலங்கைக்கு 3/4 ஏற்கன்வே தாராளமாக உள்ளது,நாலாவதாக மூலதனத்தினை கூட  பலவழிகளில் இலகுவாகப்பெற்றுவிடலாம் (புலம்பெயர் இலங்கையர் உள்ளடங்களாக), ஆனால் சிங்கப்பூர் நில வளமற்ற நாடு தனியே மனித வலுவைக்கொண்டு முன்னேறும் போது இலங்கைக்கு அது ஒரு பிரச்சினையில்லை, ஆனால் இலங்கையால் முன்னேற முடியாது, ஏன் இப்போது தமிழீழம் கிடைத்தால் இலங்கையினை விட மோசமான நாடாக அதனை மாற்றிவிடுவார்கள் எமது அரசியல்வாதிகள்.

 • Like 4
Link to comment
Share on other sites

 • Replies 56
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

vasee

இலங்கை அரசு ஏற்கனவே பல வகையிலும் முயன்று கொண்டுதானிருக்கிறது என கருதுகிறேன். எந்த உடனடி தீர்வும் (Quick fix) இருப்பதாக எனக்கு தெரியாது. இப்போது கிடைத்து கொண்டிருக்கும் அன்னிய செலாவணியினை

vasee

இலங்கைக்கு 3/4 ஏற்கன்வே தாராளமாக உள்ளது,நாலாவதாக மூலதனத்தினை கூட  பலவழிகளில் இலகுவாகப்பெற்றுவிடலாம் (புலம்பெயர் இலங்கையர் உள்ளடங்களாக), ஆனால் சிங்கப்பூர் நில வளமற்ற நாடு தனியே மனித வலுவைக்கொண்டு முன்

goshan_che

அதொண்டும் இல்லை. இலங்கையில் கள்ளன், காடையன் தான் பெரும்பாலும் அரசியலுக்கு போறாங்கள் எண்டு சொல்லி போட்டன் எல்லே - அதுதான் அக்கா சகோதர விசுவாசத்தில சிடு சிடுக்கிறா🤣.

2 minutes ago, vasee said:

இலங்கைக்கு 3/4 ஏற்கன்வே தாராளமாக உள்ளது,நாலாவதாக மூலதனத்தினை கூட  பலவழிகளில் இலகுவாகப்பெற்றுவிடலாம் (புலம்பெயர் இலங்கையர் உள்ளடங்களாக), ஆனால் சிங்கப்பூர் நில வளமற்ற நாடு தனியே மனித வலுவைக்கொண்டு முன்னேறும் போது இலங்கைக்கு அது ஒரு பிரச்சினையில்லை, ஆனால் இலங்கையால் முன்னேற முடியாது, ஏன் இப்போது தமிழீழம் கிடைத்தால் இலங்கையினை விட மோசமான நாடாக அதனை மாற்றிவிடுவார்கள் எமது அரசியல்வாதிகள்.

நிச்சயமாக.

Link to comment
Share on other sites

22 hours ago, MEERA said:

காகத்தை ஆங்கிலத்தில் கூற முடியாத நிதி அமைச்சரை கொண்ட நாடல்லோ..

ஆனால் நீங்கள் கொரோனா தான் சிறீலங்காவின் வீழ்ச்சிக்கு காரணம் என்டு நாண்டு கொண்டிருந்தனீங்கள்.

ஆனால் முன்னாள் நிதி அமைச்சர் வாக்கு போட்ட மக்களும் காரணம் என்று அரச நிர்வாகத்தை குறை கூறி உள்ளார்.

மீரா, எப்பவும் நான் எழுதுகின்ற முதல் வரியைத் தான் வாசிப்பீங்களோ?....இலங்கையின் இன்றைய நிலைக்கு கொரோனாவும் ஒரு காரணம் என்று எழுதின நான் அதற்கு கீழ் பல காரணங்களை எழுதி இருக்கேன் ..அதற்குள் மகிந்தா சகோதரர்களின் ஊழலும்  அடங்கும் 
பசிலுக்கு ஆங்கிலம் தெரியாததால் நாடு நாசமாகப் போகவில்லை ...ஊழல் செய்ததால் தான் நாசமாய்ப் போனது 

Link to comment
Share on other sites

21 hours ago, goshan_che said:

ஆங்கிலத்தில் சிந்திக்க தேவையில்லை. ஆனால் தொழில்நுட்ப கல்வியை கூட, தமிழில் சப்பி துப்பி விட்டு, பல்கலை கழகத்தில் கூட விரிவுரையாளர்கள் நோட்ஸ் கொடுக்கும் ஏட்டு சுரைக்காய்களைத்தான் இந்த சுயபாசா கல்வி திட்டம் தந்துள்ளது.

இதை உணர்ந்துதான் இலங்கையில் மீண்டும் மட்டுப்பட்ட ரீதியில் ஆங்கில முறை மூலமான கல்வியை இலங்கையே அறிமுக படுத்தியுள்ளது.

வைத்தியர்களை தவிர அதிக திறமைசாலிகள் எத்தனை பேர் அரச பணியில் சேர்கிறார்கள்? 

திறமைசாலிகள் பலரும் சீமா, மார்கெட்டிங், வங்கி, பொறியியல், என. ஆங்கிலம் தேவைபடும் தனியார் துறைகளுக்கு போய்விட, சுயபாசையில் தேறிய மிச்ச சொச்சமும், சொச்ச மிச்சமும்தான் நிர்வாக சேவையில் வந்து உயிரை வாங்குகிறார்கள்.

அதிகாரிகள் வர்க்கத்தில் ஏற்பட்டுள்ள இந்த தலைமைதுவ, திறைமைசாலிகள் வெற்றிடமும் இலங்கை இந்த நிலைக்கு போக ஒரு முக்கிய காரணம் என்பது என்கருத்து.

இந்தியாவில் இப்படி இல்லை இப்போதும் அங்கே ஐஏஎஸ் என்பது பலரும் விரும்பி போகும் துறை - போட்டியும் கடுமை. அவர்களின் ஆங்கில, பொது, தலைமைதுவ பண்புகள் நல்ல நிலையிலே இருக்கும்.

ஏன் இலங்கையில் அரச நிர்வாகத்தில் இருப்பவர்கள் அனைவரும் திறமையற்றவர்களாகவா இருக்கிறார்கள்?
நாடு இக்கட்டான சூழ்நிலைக்கு செல்லப் போகின்றது என்பதை பொருளாதார அறிஞ்ர்கள் எப்போவோ சொல்லி விட்டார்கள். ...அரசியல்வாதிகள் அதை ஏற்கவில்லை.
பலர் இவர்களுக்கு பயத்தில் வாயை மூடிக் கொண்டு இருந்தார்கள்...இன்னும் சிலர் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள்...சிலர் ஊழலில் பங்கு கிடைத்தவுடன் வாயை மூடிக் கொண்டு இருந்தார்கள்....அரசியல்வாதிகள் செய்கின்ற பிழைக்கு  நிர்வாகத்தில் இருப்பவர்களை குறை சொல்லாதீர்கள்.
ஆங்கிலத்தில் கற்பது நல்ல விடயம் தான் .ஆனால் நீங்கள் எழுதி இருந்தீர்கள் பாருங்கோ ஏதோ ஆங்கிலத்தில் படித்தவன் மட்டும் தான் புத்திசாலி என்ற மாதிரி அதற்கு தான் என் பதில் .
நான்  இந்தியாவை பற்றி கேட்கவில்லையே கர்நாடகாவை தான் கேட்டேன்....தமிழ் நாட்டில் ஆங்கில கல்வி தமிழ் தள்ளாடும்..கர்நாடகாவில்,கன்னடர்கள் மொழிப பற்று கொண்டவர்கள். ..பெங்களூர் எப்படி தொழில் நகரமானது?
ஆங்கிலம் அவசியமா என்று கேட்டால் ஆம்  என்று தான் சொல்வேன் ...தனிய ஆங்கிலத்தில் படிப்பதால் மட்டும் ஒன்றும் வெட்டிப் புடுங்க இயலாது...ஆளுமை ,நிர்வாகத்திறன் அதை விட முக்கியம் கடின உழைப்பு ...இந்த கடின உழைப்பை ஊரில் இப்ப ஒரு சிலரைத் தவிர காண கிடைக்குதில்லை.
ஒழுங்கான ஆளுமை மிக்க ஆரசியல் தலைவர் இல்லாததால் மக்கள் சோத்து  மாடுகளாய் மாறிக் கொண்டு வருகிறார்கள் 
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரதி said:

மீரா, எப்பவும் நான் எழுதுகின்ற முதல் வரியைத் தான் வாசிப்பீங்களோ?....இலங்கையின் இன்றைய நிலைக்கு கொரோனாவும் ஒரு காரணம் என்று எழுதின நான் அதற்கு கீழ் பல காரணங்களை எழுதி இருக்கேன் ..அதற்குள் மகிந்தா சகோதரர்களின் ஊழலும்  அடங்கும் 
பசிலுக்கு ஆங்கிலம் தெரியாததால் நாடு நாசமாகப் போகவில்லை ...ஊழல் செய்ததால் தான் நாசமாய்ப் போனது 

நீங்கள் ஆரம்பத்தில் கொரோனா மட்டுந்தான் காரணம் என்று நாண்டு கொண்டிருந்தீர்கள், ஆனால் இங்கு பலர் கொரோனா காரணமில்லை என்று தெளிவாக கூறியும் அதனை நீங்கள் ஏற்கவில்லை.

மகி & Co முதல் காசடித்தார்காள் ஆனால் தற்போது இல்லை எனவும் அவர்களுக்கு வக்காலத்து வாங்கினீர்கள்.

பசிலின் அரசியல் பிரவேசத்தை ஆதரித்தவர்களில் நீங்களும் ஒருவர்.

காகத்திற்கு ஆங்கிலச் சொல் தெரியாத ஒருவரால் எப்படி நிதி அமைச்சை நடாத்த முடியும்? என்பதே தொற்கி நிற்கும் கேள்வி.

கோத்தா ஆட்சிக்கு வந்ததும் எத்தனை பேர் நாட்டை விட்டு தப்பி ஓடினார்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மேலும் தற்போது நிர்வாகத்தில் உள்ள அனைவருமே சுயநல ஊழல் பெருச்சாலிகள்.

இன்றும் கூட அரச வாகனங்களில் பிள்ளைகளை பாடசாலைக்கு ஏற்றி இறக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

 • Like 1
Link to comment
Share on other sites

17 minutes ago, MEERA said:

10 minutes ago, MEERA said:

மேலும் தற்போது நிர்வாகத்தில் உள்ள அனைவருமே சுயநல ஊழல் பெருச்சாலிகள்.

இன்றும் கூட அரச வாகனங்களில் பிள்ளைகளை பாடசாலைக்கு ஏற்றி இறக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் இப்பவும் சொல்கிறேன் நாடு இந்த நிலைமைக்கு போனதிற்கு கொரோனாவும்  முக்கிய காரணம்.
மகிந்தா சகோதரர்கள் தற்போது காசு அடிப்பதில்லை என்று எங்கு எழுதினேன் காட்டுங்கள் பார்ப்போம்...முதலில் இப்ப காசு அடிப்பதற்கு திறைசேரியில் காசு இருக்கா?
பசிலின் அரசியல் பிரவேசத்தை வரவேற்று நான் எங்கும் எழுதினதாய்  நினைவு இல்லை ...மகிந்தா ,கோத்தா வர வேண்டும். அவர்களால் நாடு நாசமாய் போகோணும் என்று விரும்பினேன் . அது தான் நடந்தது/நடக்குது.
பசிலுக்கு ஆங்கிலம் தெரியாது என்று நக்கலடிக்கிறார்கள் ....அவரால் எப்படிஇவ்வளவு  ஊழல்கள் செய்ய முடிந்தது ?...சொத்துக்கள் வேண்ட முடிந்தது என்று ஒருத்தரும் நினைத்து பார்க்கவில்லை 
எத்தனை பேர் நாட்டை விட்டு போனார்கள் என்று யாருக்குத் தெரியும்?
நீங்கள் சொல்வது உண்மை ...நானும் சில அலுவலகங்களுக்கு சென்ற போது கண்டேன் ...ஆள்பவர் எப்படி இருக்கிறாரோ அப்படித் தானே பதவியில் இருப்பவர்களும் இருப்பார்கள் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நல்ல விசயகாரங்களைப் பிடித்து ஒரு புதிய கிருப்டோ கரன்சியை உருவாக்கி நல்லா ஏத்திப்போட்டு "ரெரா லூணா" போல தொப்புகடீர் என போட்டு உடைத்துவிட்டு தட்டி மாறினால் எல்லாம் சரியாகி விடும்.

இப்போது  உலகமெங்கும் ஓர்கானிக் உணவுக்கு நல்ல மவுசு தவிர வேகன் உணவுக்கும் நல்ல மவுசு இது மேட்டுக்குடியினரிடையே ஒரு பாஸ்ன் ஆகிவிட்டுது ஆகவே இப்படியான உற்பத்திகளை மிகவும் திட்டமிட்ட முறையில் உருவாக்கினால் ஏற்றுமதியில் காசு சம்பாதிக்கலாம் தவிர 

எல்லாத்தையும்விட வடக்கையும் கிழக்கையும் பிரிச்சு தமிழரிட்ட கொடுத்தால் ஆரம்பத்தில ஏல்லாரு வெளிநாடுகளில இருந்து ஓடிவந்து டாலர்களைக் கொட்டுவினம் பிறகு அவர்களே நடுரோட்டில நிண்டு ஆளுக்காள் தலைமயிரைப் பிடித்துக்கொண்டு அடிபட்டுப் பிரண்டு எல்லாத்தையும் விட்டுட்டு பழையபடி வெளிநாட்டுக்கு வந்திடுவினம் பிறகென்ன மறுபடியிம் சிங்களவன் அதையெல்லாம் ஆட்டையைப் போடலாம் டாலர் ஊருக்குள்ள வந்தபிறகு சிங்களவன் தன்னுடைய ஆட்டத்தை திரும்பவும் தொடங்கலாம்.

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

ஏன் இலங்கையில் அரச நிர்வாகத்தில் இருப்பவர்கள் அனைவரும் திறமையற்றவர்களாகவா இருக்கிறார்கள்?
நாடு இக்கட்டான சூழ்நிலைக்கு செல்லப் போகின்றது என்பதை பொருளாதார அறிஞ்ர்கள் எப்போவோ சொல்லி விட்டார்கள். ...அரசியல்வாதிகள் அதை ஏற்கவில்லை.
பலர் இவர்களுக்கு பயத்தில் வாயை மூடிக் கொண்டு இருந்தார்கள்...இன்னும் சிலர் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள்...சிலர் ஊழலில் பங்கு கிடைத்தவுடன் வாயை மூடிக் கொண்டு இருந்தார்கள்....அரசியல்வாதிகள் செய்கின்ற பிழைக்கு  நிர்வாகத்தில் இருப்பவர்களை குறை சொல்லாதீர்கள்.
ஆங்கிலத்தில் கற்பது நல்ல விடயம் தான் .ஆனால் நீங்கள் எழுதி இருந்தீர்கள் பாருங்கோ ஏதோ ஆங்கிலத்தில் படித்தவன் மட்டும் தான் புத்திசாலி என்ற மாதிரி அதற்கு தான் என் பதில் .
நான்  இந்தியாவை பற்றி கேட்கவில்லையே கர்நாடகாவை தான் கேட்டேன்....தமிழ் நாட்டில் ஆங்கில கல்வி தமிழ் தள்ளாடும்..கர்நாடகாவில்,கன்னடர்கள் மொழிப பற்று கொண்டவர்கள். ..பெங்களூர் எப்படி தொழில் நகரமானது?
ஆங்கிலம் அவசியமா என்று கேட்டால் ஆம்  என்று தான் சொல்வேன் ...தனிய ஆங்கிலத்தில் படிப்பதால் மட்டும் ஒன்றும் வெட்டிப் புடுங்க இயலாது...ஆளுமை ,நிர்வாகத்திறன் அதை விட முக்கியம் கடின உழைப்பு ...இந்த கடின உழைப்பை ஊரில் இப்ப ஒரு சிலரைத் தவிர காண கிடைக்குதில்லை.
ஒழுங்கான ஆளுமை மிக்க ஆரசியல் தலைவர் இல்லாததால் மக்கள் சோத்து  மாடுகளாய் மாறிக் கொண்டு வருகிறார்கள் 
 
அக்கா,

நான் எங்கேயும் ஆங்கிலம் படிக்காததால் நாடு நாசமாகிப்போனதாக எழுதவில்லை. சுயபாஷா திட்டத்தால் என்றேன். சுய பாஷா திட்டம் என்றால் என்ன? அது எல்லா பாடங்களையும் சுதேச மொழியில் கற்பிக்கும் முறை.  

அது மட்டும் அல்ல. கற்பித்தலுக்கு தேவையான வளங்கள் வேறு மொழியில் இருந்தாலும் அதை மொழி மாற்றவோ, உள்வாங்கவோ பெரிய முயற்சிகள் ஏதும் எடாமல், பெயருக்கு கற்றலை மட்டும் மொழிமாற்றிய முறை.

இங்கே கற்பிக்க பட்ட மொழிகள் யாவை? தமிழும் சிங்களமும். இந்த மொழிகளிலே போதிய அளவு நூல்கள் உள்ளனவா? இல்லை.  இப்படித்தான் ஒவ்வொரு துறையிலும்.

உதாரணமாக நீங்கள் மேலே சொன்ன வினைத்திறன் அற்ற நிர்வாகிகள் ஏன் 60 70 களுக்கு பின் மட்டும் இலங்கையில் உருவாகினார்கள்? அதாத்கு முன் ஏன் இலங்கை நிர்வாக சேவை மிக திறமையானதாக, அதில் வேலை செய்வதே ஒரு கெளரவம் என்பதாக இருந்தது.

காரணம் இலங்கையின் சுயபாசா கல்வி திட்டம்.  ஒரு நல்ல குடிமகனாக எப்படி இருப்பது என்ற citizenship அங்கே கற்பிக்க படுவதில்லை. மனித உரிமைகள், சட்டத்தின் ஆளுமை, ஏன் நடை முறையில் இருக்கும் அரசியல் சட்டம் குடிகளுக்கு வழங்கும் உரிமை, கடமைகள் பற்றி கூட அதில் ஏதுமில்லை. 

எத்தனை பள்ளி கூடங்களில் கெமிஸ்டரில் லேப் ஒழுங்காக உள்ளது? 

எல்லாமுமே டியூசனை மட்டும் நம்பிய ஏட்டு கல்வி. அதுவும் பத்தி பத்தியாக தமிழ், சிங்கள மொழி மூலம் டியூசன் வாத்தி கொடுக்கும் நோட்சை சப்பி துப்பிவிடும் கல்வி முறை. இதில் நான் படித்த காலத்தில் ஓ எல் ஓடு ஆங்கிலம் சரி. பிறகு யூனி எடுபட்டல் கெல்ட் எண்டு ஒரு 3 மாசம். அவ்வளவுதான். நாட்டின் மூன்றாம். இணைப்பு மொழியை நமக்கு கற்பிக்கும் இலட்சணம் (இப்போ பரவாயில்லை).

பெங்களூரு போயுள்ளீர்களா? நான் சில மாதங்கள் வாழ்ந்துள்ளேன். அது தொழில் நகரமல்ல ( industrial city ) தொழில் நுட்ப முனையம் (information technology hub).

அங்கே இருக்கும் இன்போசிஸ் போன்ற பெரு நிறுவனங்களின் மூலதனமே ஆங்கிலம் தெரிந்த பெங்களூர் ஐடி ஊழியர்களை வைத்து அமெரிக்கா போன்ற நாடுகளின் ஐடி வேலையை அவுட் சோர்சிங் முறையில் செய்து கொடுப்பதுதான்.

கோல் செண்டர் கேள்வி படவில்லையா? அங்கே இருந்து உங்களுடன் பேசும் கன்னடர், கன்னடத்திலா மாட்லாடுகிறார்?

ஆங்கில முறை கான்பெண்ட்கள், pub culture, உடை, நாகரிகம் என பலவகைகளில் இந்தியாவிலேயே அதிகம் westernized (மும்பைக்கு பின்) என சொல்லகூடிய நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் நகரம் பெங்களூர். அது முன்னேற இதுவும் ஒரு முக்கிய காரணம் (ஏனைய கர்நாடக பிரதேசங்கள் அல்ல).

ஒரு காலத்தில் சுயபாசைக்கு முன் இந்தியாவை விட இலங்கையில் மனித வலு திறன் அதிகம் என்பார்கள். 

இப்போ? ஐடி, அவிட்சோசிங், கால் செண்டர் என எதிலும் பெங்களூரு மட்டும் அல்ல எந்த இந்திய நகரத்திடனும் கொழும்பு போட்டி போடவே முடியாது?

காரணம் இந்திய நகநங்களில் ஆங்கிலம் தெரிந்த, உரையாடக்கூடிய, ஒரு படித்த மத்திய வர்க்கம் உள்ளது. தாங்க்ஸ் டு சுயபாசா எமக்கு ஒரு தலைமுறைக்கு முன்பு கூட இரு மொழி பேசி கொண்டிருந்த இதை விட மேம்பட்ட ஒரு மத்திய தர வர்க்கத்தை இலங்கை இழந்து விட்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

1 hour ago, Elugnajiru said:

நல்ல விசயகாரங்களைப் பிடித்து ஒரு புதிய கிருப்டோ கரன்சியை உருவாக்கி நல்லா ஏத்திப்போட்டு "ரெரா லூணா" போல தொப்புகடீர் என போட்டு உடைத்துவிட்டு தட்டி மாறினால் எல்லாம் சரியாகி விடும்.

இப்போது  உலகமெங்கும் ஓர்கானிக் உணவுக்கு நல்ல மவுசு தவிர வேகன் உணவுக்கும் நல்ல மவுசு இது மேட்டுக்குடியினரிடையே ஒரு பாஸ்ன் ஆகிவிட்டுது ஆகவே இப்படியான உற்பத்திகளை மிகவும் திட்டமிட்ட முறையில் உருவாக்கினால் ஏற்றுமதியில் காசு சம்பாதிக்கலாம் தவிர 

எல்லாத்தையும்விட வடக்கையும் கிழக்கையும் பிரிச்சு தமிழரிட்ட கொடுத்தால் ஆரம்பத்தில ஏல்லாரு வெளிநாடுகளில இருந்து ஓடிவந்து டாலர்களைக் கொட்டுவினம் பிறகு அவர்களே நடுரோட்டில நிண்டு ஆளுக்காள் தலைமயிரைப் பிடித்துக்கொண்டு அடிபட்டுப் பிரண்டு எல்லாத்தையும் விட்டுட்டு பழையபடி வெளிநாட்டுக்கு வந்திடுவினம் பிறகென்ன மறுபடியிம் சிங்களவன் அதையெல்லாம் ஆட்டையைப் போடலாம் டாலர் ஊருக்குள்ள வந்தபிறகு சிங்களவன் தன்னுடைய ஆட்டத்தை திரும்பவும் தொடங்கலாம்.

பக்கா ஐடியாக்கள் எல்லாமுமே. அதுவும் அந்த கடைசி ஐடியா அக் மார்க்🤣.

இத்தோடு கஞ்சா பயிரிட்டு அரசே கனடா, கொலண்டுக்கு ஏற்றுமகி செய்வதையும் சேர்த்து கொண்டால் - இலங்கை கடனை கிட்ட தட்ட மீண்ட மாரித்தான்🤣.

Link to comment
Share on other sites

4 hours ago, Elugnajiru said:

எல்லாத்தையும்விட வடக்கையும் கிழக்கையும் பிரிச்சு தமிழரிட்ட கொடுத்தால் ஆரம்பத்தில ஏல்லாரு வெளிநாடுகளில இருந்து ஓடிவந்து டாலர்களைக் கொட்டுவினம் பிறகு அவர்களே நடுரோட்டில நிண்டு ஆளுக்காள் தலைமயிரைப் பிடித்துக்கொண்டு அடிபட்டுப் பிரண்டு எல்லாத்தையும் விட்டுட்டு பழையபடி வெளிநாட்டுக்கு வந்திடுவினம் பிறகென்ன மறுபடியிம் சிங்களவன்

இதைதான் எனது நண்பரிடம் முன்பு கூறியது பொழுது, நான் எப்பொழுதும் எங்கட ஆட்களில் குறை கண்டுபிடிக்கிறேன் என்றார்.. ஆனால் என்னைப்போல நினைக்கும் ஒரு ஆள் இருக்கிறார் என்பது சந்தோஷம்.

On 20/6/2022 at 06:47, vasee said:

இப்போது தமிழீழம் கிடைத்தால் இலங்கையினை விட மோசமான நாடாக அதனை மாற்றிவிடுவார்கள் எமது அரசியல்வாதிகள்

சரியான தலைமையும் இல்லை, தூர நோக்கு உள்ள, சுயநலமற்ற மனிதர்களும் குறைவு..

Link to comment
Share on other sites

On 20/6/2022 at 05:43, goshan_che said:

ஆங்கிலத்தில் சிந்திக்க தேவையில்லை. ஆனால் தொழில்நுட்ப கல்வியை கூட, தமிழில் சப்பி துப்பி விட்டு, பல்கலை கழகத்தில் கூட விரிவுரையாளர்கள் நோட்ஸ் கொடுக்கும் ஏட்டு சுரைக்காய்களைத்தான் இந்த சுயபாசா கல்வி திட்டம் தந்துள்ளது.

இதை உணர்ந்துதான் இலங்கையில் மீண்டும் மட்டுப்பட்ட ரீதியில் ஆங்கில முறை மூலமான கல்வியை இலங்கையே அறிமுக படுத்தியுள்ளது.

வைத்தியர்களை தவிர அதிக திறமைசாலிகள் எத்தனை பேர் அரச பணியில் சேர்கிறார்கள்? 

திறமைசாலிகள் பலரும் சீமா, மார்கெட்டிங், வங்கி, பொறியியல், என. ஆங்கிலம் தேவைபடும் தனியார் துறைகளுக்கு போய்விட, சுயபாசையில் தேறிய மிச்ச சொச்சமும், சொச்ச மிச்சமும்தான் நிர்வாக சேவையில் வந்து உயிரை வாங்குகிறார்கள்.

அதிகாரிகள் வர்க்கத்தில் ஏற்பட்டுள்ள இந்த தலைமைதுவ, திறைமைசாலிகள் வெற்றிடமும் இலங்கை இந்த நிலைக்கு போக ஒரு முக்கிய காரணம் என்பது என்கருத்து.

இந்தியாவில் இப்படி இல்லை இப்போதும் அங்கே ஐஏஎஸ் என்பது பலரும் விரும்பி போகும் துறை - போட்டியும் கடுமை. அவர்களின் ஆங்கில, பொது, தலைமைதுவ பண்புகள் நல்ல நிலையிலே இருக்கும்.

உண்மை.. 

இலங்கையில் பல இடங்களில் இதனை உணரலாம்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

On 19/6/2022 at 21:01, goshan_che said:

குறித்த கால அல்லது பொருளாதார அளவுகள் அடிப்படையில் ஒரு தற்காலிக நாணய ஒன்றியத்துக்கி போக முடியாதா?

UK  பொருளாதாரத்தில் மட்டுமே இணைந்தது. 

ஆனால்நனைய ஒன்றியம் என்று உருவாக்குவது, ஒரு அரசால் மட்டும் முடியாது.

அப்படி என்றால், இதில் கிந்தியவும் அந்த ஒன்றியத்துக்கு உடன்பட வேண்டும்.

இது மற்றொரு காரணம் peg, ஏனெனில், குறுகிய காலத்தில் செய்யமுடியும், வெறு எந்த அரசின் உடன்பாடும் தேவை இல்லை.

எவ்வாறாயினும், கிந்தியா - சொறி சிங்களம் என்ற அளவு வேறுபாட்டில் முன்பு சொன்ன அபாயங்கள் உள்ளது, கிந் யா நாயத்தை கொண்டுவந்தால்.

அனால், பொதுவாக, சொறி சிங்களம் எந்த test ஐ வைத்தாலும், இப்போதைய நிலையில் அத்தை வேறு எவரும்    பொருட்படுத்த மாட்டார்கள்.

எல்லோரும், சொறி சிங்களம் கிந்தியாவுடன் இணைந்து விட்டது என்ற நிலையையே எடுப்பதத்திற்கு வாய்ப்புகள் கூட. 

அது உண்மையும் கூட, கிமந்திய மத் தியவங்கி, மற்றும் பொருளாதார கொள்கைகள் , சிங்களத்தின் பொருளாதாரம் மட்டும் அல்ல, பாதுகாப்பு போன்றதையும் ஹிந்தியை மறைமுகமாக கட்டுப்படுத்தக் கூடிய நிலை உருவாகும் (ஏனெனில், பண  விநியோகம் சிங்களத்தின் கைகளில் இருக்காது என்பதால்).

உ.ம். ஆக பாதீட்டை 5% ஆக உயர்த்துவதற்கு, ஹிந்தியை மத்திய வங்கியின் அனுமதி தேவை, ஏனெனில் ஹிந்தியை மத்திய வங்கியே பண விநியோகம், வழங்குதலை மேற்றுக்கொள்ளும் ஆகையால். 

பாதீட்டை உயர்த்துவது என்பதின் அர்த்தம், பண விநியோகம், வழங்குதலை 5% ஆக உயர்த்துவது. 

இப்படை பல பிரச்சனைகள் இருக்கிறது. சரி பின்பு ஹிந்தியை நாணயத்தை விடுவது என்றாலும் பிரச்னை, ஏனெனில், அந்த நிலையில் சொறி சிங்களத்தின் பொருளாதாரத்தை பெரிய அளவில் தீர்மானிப்பது ஹிந்தியை பொருளாதாரம்.

சொறி சிங்களம் எவ்வ்ளவு காலம் ஹிந்தியை நாணத்தில் இருக்கிறதோ, அதற்கும் அதிகமாக கிந்தியாவுக்குள் இழுக்கப்படவதற்கே வாய்ப்புகள் கூட. 

இதாய் போன்ற பிரச்சனைகளே, peg ஐ அரசுகள் நாடுவதத்திற்கு காரணம், இலகுவாக கழற்றி விட்டு விடலாம்,  பொருளாதாரத்தை தாக்கினாலும்.

இதை eu இலும் காணலாம், UK, EU பொருளாதாரத்தில் எல்லாவற்றையும் இணைத்தது, நாணயத்தை வைத்து கொண்டது. 

பின்பு இணைந்த நாடுகளில், பெரியவை, வரலாற்றில் ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட போன்ற நாடுகள், அவற்றின் நாணயத்தை, பாதுகாப்பு துறையை தக்க வைத்து கொண்டன. இது ஒருவிதத்தில் EU இன் வருங்கால போக்கை அவை முற்றாக நம்புவதற்கு பின்னடிக்கினறன என்பது.   

 • Thanks 2
Link to comment
Share on other sites

14 hours ago, Kadancha said:

விரிவான கருத்து. நன்றி

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 19/6/2022 at 06:48, goshan_che said:

இது ஏற்கனவே 55 வயதுக்கு மேலானவர்கள் அமெரிக்க டொலரில் வைப்பு செய்து நிரந்தர வீசா பெறும் Sri Lanka My Dream Home திட்டத்தின் மறு பதிப்புத்தானே?

இது இலங்கையில் ரிடையர் ஆக விரும்பும் வெளிநாட்டினர்க்கானது.

ஆனால் தரமான (தனியாரிலேனும்) மருத்துவம், தொலை தொடர்பு, போக்குவரத்து, நிலையான அமைதி, நிலையான பொருளாதாரம் இவைதான் இப்படி வருபவர்களின் பிரதான எதிர்பார்ப்பு.

வயோதிப காலத்தில் வந்து பெற்றோல் வரிசையில், தரமான மருத்து இல்லாமல் அல்லோலகல்லோலபட யாரும் தயாராயிராயினம்.

அவையே வரமாட்டினம் எண்டால் - வேலை செய்யும் வயதினர்? வீட்டில் இருந்து வேலை செய்பவகள், பங்கு/கிரிப்டோ/கரன்சி வர்த்தக பேர்வழிகள் கூட, உடனடி அதிவேக இண்டெர் நெட்டை கட்டாயமாக கருதுவார்கள்.

அடிக்கடி கரண்ட் கட், broadband service outage வரும் நாட்டில் இருந்தால் அவர்களுக்கும் நட்டம்தான் வரும்.

நான் யோசித்து பார்த்த வரையில் - இலங்கையில் நடுத்தர, மேல்தட்டு மக்களிடம், நிறுவனங்களிடம் அவர்களுக்கு தேவையான எரிபொருளை வாங்கும் பணம் இருக்கிறது (assets, dollars and or SL rupees).

ஆனால் வாங்கி விநியோகம் செய்யும் அரசுக்குத்தான் வாங்க பணம் இல்லை.

இதற்கு தீர்வுக்கு ஒரு வழி இந்தியாவுடன் ஒரு நாணய ஒன்றியத்துக்கு போவது.

அதாவது

1. இப்போ உள்ள இலங்கை நாணயத்தை முற்றாக பாவனையில் இருந்து அகற்றல்.

2. இந்திய நாணயமே இலங்கையில் செல்லுபடியாகும் என அறிவித்தல்.

3. மோடி செய்த டி மொனடைசன் போல - குறிப்பிட்ட காலப்பகுதியில் இப்போ உள்ள நாணய மாற்று விகிதத்தில் (1:4) அனைத்து இலங்கை நாணயத்தையும் இந்திய நாணயமாக மாற்றல் (கணக்கில் காட்ட கூடிய வெள்ளை பணம்).

4. இவ்வாறு செய்யும் போது ஏற்படும் இந்தியாவுக்கான இந்திய நாணய இழப்பு, இலங்கை இந்தியாவிடம் பெற்ற நீண்ட கால கடனாக கருதபட்டு, இலங்கை இந்த கடனை அடைக்கும் போது, அது மீளவும் தனது புதிய நாணயத்தை வெளியிடும்.

கிட்டதட்ட இப்படி ஒரு முறையிலேயே இறைமை உள்ள அரசாக இருந்த ஸ்கொட்லாந்து அரசு, பொருளாதார வங்குரோத்தில் இருந்து மீள, இங்கிலாந்துடன் இணைந்து அதுவரை ஒரு அரசரின் கீழ் இரு வேறு நாடுகளாக இருந்த நாடுகள்  ஒன்றாக்கப்பட்டு வெஸ்மின்ஸ்டர் பாராளுமன்றின் கீழ் கொண்டுவரப்பட்டது.

சற்றே மாறுபட்டாலும் கிரேக்க தேசத்தை ஜேர்மனி தலைமையிலான ஈயூ மீட்டதும் இப்படித்தான் (அங்கே ஏலவே ஒரு நாணய ஒன்றியம் (ஈரோ) இருந்தது.

இப்படி நடப்பது சாத்தியம் ஆனால் நடைமுறை சாத்தியமா? குறிப்பாக இது கிட்டதட்ட இந்தியாவிடம் மண்டி இடும் நிலை. சிங்க மைந்தர்கள் ஏற்பார்களா?

அடுத்து, இன்று வரையும் ஜனநாயக ரீதியில் பிரிந்து போக ஸ்கொட்லாந்து போராடுவது போல இலங்கைக்கும் நேரலாம்.

@vasee @Kadancha மற்றும் ஏனையோர் என்ன நினைக்கிறீர்கள்?

On 20/6/2022 at 02:09, Kadancha said:

ஓர் தேசிய நாணயத்தின் (கடத்தப்படும்) பெறுமதி முதலில் நிலைநாட்டப்படுவது, அந்த  இறைமையுள்ள  அரசால் ஆகும், முக்கியமாக அந்த அரசின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பில். 

இது முதலில் கதைத்த,  நாணயத்துக்கான பெறுமதியை அரசின் financial system இடம் எதோ ஓர் பெறுமதியை கொடுத்தே நாணயத்தை  எல்லோரும் பெறுகிறார்கள். அரசு உத்தரவாதம் கொடுக்கிறது, அந்த பெறுமதி அந்த நாணய தொகையை வாங்குபவருக்கு அளிக்கப்படும். என்பதில் ஆரம்பிக்கிறது. முதலில் சொன்னபடியால் மேலதிக விளக்கம் இன்றி,

நீங்கள் சொல்வது, ஏறத்தாழ sovereign guarantee ஐ தற்கலிகமாக (ஆகக் குறைந்தது)  ஒத்தி வைப்பது.

அந்த அரசே (சொறி  சிங்களம் ), இப்போதைய நிலையில் அந்த நாணயத்தின்  (sl rupee ) sovereign guarantee ஐ தற்கலிகமாக (ஆகக் குறைந்தது)  ஒத்தி வைப்பது, sl rupee முழுமையாக வலுவிழந்து விடும். 
அதனால், அப்படி   செய்யும் போது, சிங்களத்தின் வங்கித்துறையையே உடைத்து விடும் சாத்தியக் கூறுகள் கூட உள்ளது.

மற்றது, அளவு ஹிந்தியா பொருளாதாரம், சனத்தொகை  என்பது, இலங்கைத் தீவை கிந்தியாவின் உள்ளே  உள்ளிளித்து விடும் அபாயம் உள்ளது, ஹிந்திய நாணயத்தை மட்டும் புழக்கத்தில் கொட்ண்டு வந்தால்.  

இது ஓர் முக்கிய காரணம்,  பொதுவாக, தனக்கே உரிய நாணயத்தை கொண்டு இருக்கும் அரசுக்கள், peg செய்வது.

இப்போதைய நிலையில் peg இலும் பிரச்னை இருக்கிறது. ஒரு விதத்தில், உத்தியோகபூர்வம் இல்லாத pegging நடைமுறையில் இருக்கிறதை, மத்திய வங்கி sl rupee / dollar ஐ அறிவிப்பது.  

ஏனெனில், கிந்தியாவின் பொருளாதாரம் பல மடங்காக உயர்வதற்கு வாய்ப்புகள் கூட, peg செய்தால், அந்த peg வீதத்தை பேணுவதற்கு, ஒன்றில் பொருளாதாரம் வேண்டும் அல்லது கிந்திய நாணயத்தை மதிவாங்கி கையிருப்பில் வைத்து இருக்க வேண்டும், அதாவது தொடர்ந்து வாங்க வேண்டும்.

இதுவரையில், peg  செய்த நாடுகள் எல்லாவற்றனதும் அனுபவங்கள் கசப்பாக முடிந்து உள்ளது என்பதே வரலாறு (ERM, 1998 Asian financial Crisis, Swiss Franc - Euro peg).  

ஆனா, சொறி சிங்களசத்தின் நிலையில், pegging செய்வதில் அதை speculation ஆல் தாக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம்.  

greece இல், 2001 / 2002 இல் இருந்து Euro வந்துவிட்டது, ஆனாலும் greece பல வருடங்கள், drachma நாணயத்தை மாற்றும் வழிவகையை வைத்து இருந்தது. அது சாத்தியக்கூறாக இருந்தது, greece, ஆகக்குறைந்தது நம்பிக்கையை கொண்டு இருந்தது. மற்றது, பல நாடுகள் ஒரே நேரத்தில் செய்தது (Euro ஐ நாணயமாக கொண்டு வந்தது), ஓர் நம்பிக்கையை உருவாக்கியதும் கூட.  

அனால் peg செய்யும் போது   sovereignty தேய்வடையும்  என்பது உண்மை. உ.ம். ஆக, கிந்தியா சொல்லலாம் கிந்திய நாணய peg ஐ குறிப்பிட தேவைகளுக்கு பாவிக்க கூடாது  என்று. 

On 20/6/2022 at 02:24, Kadancha said:

கடைசியாக , peg அனுபவம் terra luna இலை நடந்தது

terra luna ஐ நாட்டுக்கு  ஒப்பிட  முடியாது.

அனால், நான் மற்றும் என்னை போன்ற சிந்தனை உள்ளவர்கள் அனாமதேய பெயரில்,   டெரா luna இன் boss க்கு chat இல் சொன்னது, நீங்கள் இப்பொது peg ஐ கைவிட வேண்டும், கை விட்டால் terra லூனா இதுவரை நடந்த இழப்போடு  தப்பும்.

ஆனால் , நீங்கள் peg ஐ நாண்டு பிடித்தால், கைவிட வைக்கப்படுவீர்கள், எல்லவற்றையும் இழந்து.

terra luna இன் boss, என்னைப் போன்றவர்களின் கருத்தை எடுக்கவில்லை. 

இறுதியில், இயலாமலேயே, terrA லூனா, peg ஐ கைவிட்டது. 

அதாவது, speculation ஆல்  peg தாக்கப்பட்டு, தளம்பும் ஆயின், peg ஐ வைத்து இருப்பது மிகவும் கடினம். 

On 20/6/2022 at 06:01, goshan_che said:

நன்றி கடைஞ்சா,

உங்கள் கருத்தின் படி peg பண்ணுவது சாத்தியமுமில்லை, ஆபத்துகள் நிறைந்தது என்கிறீர்கள். 

அதே போல் நாணய ஒன்றியத்துள் போனால் இலங்கை முழுவதுமாக இந்தியாவால் விழுங்கபடும் அபாயம் நிச்சயம் உண்டு.

குறித்த கால அல்லது பொருளாதார அளவுகள் அடிப்படையில் ஒரு தற்காலிக நாணய ஒன்றியத்துக்கி போக முடியாதா?

முன்பு பிரவுண் யூகே சான்சிலராக இருந்த போது - யூரோவில் யூகே இணைய 5 பொருளாதார, அரசியல் நிலைகள் (conditions) ஐ சந்திக்க (met) பண்ண வேண்டும் என ஒரு test ஐ வைத்திருந்தது யூகே திறைசேரி.

அது போல் ஒரு test ஐ meet பண்ணினால் இலங்கை நாணய ஒன்இயய்தில் இருந்து வெளிவரலாம் என்ற அடிப்படையில் இந்தியாவிடம் ஒப்பந்தம் போடலாம்?

ஆனால் வசமாக மாட்டிவிட்ட இலங்கையை அதன் பின் இந்தியா வெளியே விடாது என்றே நானும் நினைக்கிறேன்.

 https://econ.economicshelp.org/2007/03/gordon-browns-5-economic-test-for.html?m=1
 
On 26/6/2022 at 19:47, Kadancha said:

UK  பொருளாதாரத்தில் மட்டுமே இணைந்தது. 

ஆனால்நனைய ஒன்றியம் என்று உருவாக்குவது, ஒரு அரசால் மட்டும் முடியாது.

அப்படி என்றால், இதில் கிந்தியவும் அந்த ஒன்றியத்துக்கு உடன்பட வேண்டும்.

இது மற்றொரு காரணம் peg, ஏனெனில், குறுகிய காலத்தில் செய்யமுடியும், வெறு எந்த அரசின் உடன்பாடும் தேவை இல்லை.

எவ்வாறாயினும், கிந்தியா - சொறி சிங்களம் என்ற அளவு வேறுபாட்டில் முன்பு சொன்ன அபாயங்கள் உள்ளது, கிந் யா நாயத்தை கொண்டுவந்தால்.

அனால், பொதுவாக, சொறி சிங்களம் எந்த test ஐ வைத்தாலும், இப்போதைய நிலையில் அத்தை வேறு எவரும்    பொருட்படுத்த மாட்டார்கள்.

எல்லோரும், சொறி சிங்களம் கிந்தியாவுடன் இணைந்து விட்டது என்ற நிலையையே எடுப்பதத்திற்கு வாய்ப்புகள் கூட. 

அது உண்மையும் கூட, கிமந்திய மத் தியவங்கி, மற்றும் பொருளாதார கொள்கைகள் , சிங்களத்தின் பொருளாதாரம் மட்டும் அல்ல, பாதுகாப்பு போன்றதையும் ஹிந்தியை மறைமுகமாக கட்டுப்படுத்தக் கூடிய நிலை உருவாகும் (ஏனெனில், பண  விநியோகம் சிங்களத்தின் கைகளில் இருக்காது என்பதால்).

உ.ம். ஆக பாதீட்டை 5% ஆக உயர்த்துவதற்கு, ஹிந்தியை மத்திய வங்கியின் அனுமதி தேவை, ஏனெனில் ஹிந்தியை மத்திய வங்கியே பண விநியோகம், வழங்குதலை மேற்றுக்கொள்ளும் ஆகையால். 

பாதீட்டை உயர்த்துவது என்பதின் அர்த்தம், பண விநியோகம், வழங்குதலை 5% ஆக உயர்த்துவது. 

இப்படை பல பிரச்சனைகள் இருக்கிறது. சரி பின்பு ஹிந்தியை நாணயத்தை விடுவது என்றாலும் பிரச்னை, ஏனெனில், அந்த நிலையில் சொறி சிங்களத்தின் பொருளாதாரத்தை பெரிய அளவில் தீர்மானிப்பது ஹிந்தியை பொருளாதாரம்.

சொறி சிங்களம் எவ்வ்ளவு காலம் ஹிந்தியை நாணத்தில் இருக்கிறதோ, அதற்கும் அதிகமாக கிந்தியாவுக்குள் இழுக்கப்படவதற்கே வாய்ப்புகள் கூட. 

இதாய் போன்ற பிரச்சனைகளே, peg ஐ அரசுகள் நாடுவதத்திற்கு காரணம், இலகுவாக கழற்றி விட்டு விடலாம்,  பொருளாதாரத்தை தாக்கினாலும்.

இதை eu இலும் காணலாம், UK, EU பொருளாதாரத்தில் எல்லாவற்றையும் இணைத்தது, நாணயத்தை வைத்து கொண்டது. 

பின்பு இணைந்த நாடுகளில், பெரியவை, வரலாற்றில் ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட போன்ற நாடுகள், அவற்றின் நாணயத்தை, பாதுகாப்பு துறையை தக்க வைத்து கொண்டன. இது ஒருவிதத்தில் EU இன் வருங்கால போக்கை அவை முற்றாக நம்புவதற்கு பின்னடிக்கினறன என்பது.   

கோசான் நீங்கள் கூறும் இந்திய நாணயம் இலங்கை நாணயத்தினை மாற்றீடு செய்யுமா என கேட்டால் எனது புரிதலின் படி ஆம் என்பதுதான் பதில், அதற்கான  சாத்திய கூறு 90 % உள்ளதாகக்கருதுகிறேன்.

ஏனெனில் இந்தியாதான் இலங்கையின் முக்கிய வர்த்தக பங்காளி.

1. அது நிகழ்வதற்கு இலங்கை நாணயப்பணவீக்கம் மிகையாக அதிகரித்தல்

2. இலங்கை நாணயம் பெறுமதியிழத்தல்

பல நாடுகளில் இந்த மாதிரியான  பகுதி மற்றும் முழுமையான நாணய மாற்றீடு காலங்காலமாக நிகழ்கிறது அதில் எந்த சிக்கலும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

சீனா இரண்டு நாணெயங்களை கொண்ட நாடு உள்நாட்டு நாணயம் வெளிநாட்டு வர்த்தக நாணயம் என 2 நாணயங்களை கொண்ட  நாடு.

சில பசுபிக் தீவுகள் நாடுகள் நியுசிலாந்து நாணய்த்தினை தமது நாட்டில் பயன்படுத்துகின்றன.

மன்னிக்கவும் கோசான், கடஞ்சா நீங்கள் விவாதிப்பது எனக்கு சுத்தமாக விளங்கவில்லை, இலகுவான முறையில் கூறினால் புரியக்கூடியதாக இருக்கும்.

மன்னிக்கவும் நான் எப்போதும் கடைசி வரிசை மாணவன். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

சில பசுபிக் தீவுகள் நாடுகள் நியுசிலாந்து நாணய்த்தினை தமது நாட்டில் பயன்படுத்துகின்றன.

பசிபிக் தீவுகளின் நிலை வேறுபட்டது.

ஆனால், பசிபிக் தீவுகள், nz நாணயத்தை கைவிடமுடியுமா என்றால், பொருளாதாரம் படுக்காமல், கை  விட முடியாது. 

உ.ம். ஆக பசிபிக் தீவுகள் சிலவற்றின் வெளியாக பாதுகாப்பை கூட US பொறுப்பேற்று கொண்டு இருக்கிறது,

ஆனால்  அவை இறைமை கொண்ட அரசுள்ள  நாடுகள்  என்கின்றன, உண்மையில் அவை protectorate.

இது போன்றதே நாணயத்தில் உள்ள ஏற்பாடாகும்.  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சொறி சிங்களம், ரணில், இந்த idea ஐ IMF இடம் சமர்ப்பித்துள்ளார். 

வேறு எதாவது பொருளாதார (கொள்கை உட்பட), அரசு  வரவு / செலவு, சமூக,  கட்டமைப்பு சீரமைப்பு (அல்லது மாற்றத்தை)   IMF கெட்டதோ தெரியவில்லை.

அனால், 2019 க்கு முதல் இருந்த வரி அறவீடுக்கு போவது என்பது மிலாப் பெரிய முடிவும், தாக்கத்தையும் செலுத்த வல்லது.  

பல பொருளியல், வங்கித்துறை தேர்ச்சி பெற்றவபர்களின் மதிப்பீடு, இந்த வரியை குறைத்ததே இப்போதைய நிலைக்கு முக்கிய காரணம் என்று.

https://www.bloomberg.com/news/articles/2022-05-31/sri-lanka-says-tax-cuts-sparked-crisis-raises-rates#xj4y7vzkg

Sri Lanka Proposes Return to Higher Tax Rates to Win IMF Loan

 • Government plans to return to tax status before 2019 cuts
 • Value-added tax to be raised to 12% in bid to boost revenues

அனால் முட்டுக்கட்டை சீனாக கடனையும் காட்டப்படும் கடன் மொத்த தொகையில் உள்ளடக்குமாறு IMF  சொறி சிங்களத்தை கேட்டதாகவும், அதற்கு சீன உடன்படவில்லை என்றும் ஓர் செய்தியும் இருக்கிறது.

சீன உடன்படாது, ஏனெனில், சீன கடன்களை அம்பாந்தோட்டை போல ஈடு செய்யக் கூடிய நிபந்தனைகள் சீனாக கடனில் இருக்கிறது. 

Link to comment
Share on other sites

On 28/6/2022 at 02:28, vasee said:

கோசான் நீங்கள் கூறும் இந்திய நாணயம் இலங்கை நாணயத்தினை மாற்றீடு செய்யுமா என கேட்டால் எனது புரிதலின் படி ஆம் என்பதுதான் பதில், அதற்கான  சாத்திய கூறு 90 % உள்ளதாகக்கருதுகிறேன்.

ஏனெனில் இந்தியாதான் இலங்கையின் முக்கிய வர்த்தக பங்காளி.

1. அது நிகழ்வதற்கு இலங்கை நாணயப்பணவீக்கம் மிகையாக அதிகரித்தல்

2. இலங்கை நாணயம் பெறுமதியிழத்தல்

பல நாடுகளில் இந்த மாதிரியான  பகுதி மற்றும் முழுமையான நாணய மாற்றீடு காலங்காலமாக நிகழ்கிறது அதில் எந்த சிக்கலும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

சீனா இரண்டு நாணெயங்களை கொண்ட நாடு உள்நாட்டு நாணயம் வெளிநாட்டு வர்த்தக நாணயம் என 2 நாணயங்களை கொண்ட  நாடு.

சில பசுபிக் தீவுகள் நாடுகள் நியுசிலாந்து நாணய்த்தினை தமது நாட்டில் பயன்படுத்துகின்றன.

மன்னிக்கவும் கோசான், கடஞ்சா நீங்கள் விவாதிப்பது எனக்கு சுத்தமாக விளங்கவில்லை, இலகுவான முறையில் கூறினால் புரியக்கூடியதாக இருக்கும்.

மன்னிக்கவும் நான் எப்போதும் கடைசி வரிசை மாணவன். 

வசி,

பெரிதாக இல்லை.

1. இப்போ புழக்கத்தில் உள்ள இலங்கை காசை டி மொனிடோக்சேசன் மூலம் செல்லாததாக்கி 1:4 என்ற விகிதத்தில் இந்திய ரூபாய்களை கொடுத்தல்.

2. இந்தியா, இந்திய பணத்தில் இதற்கு ஆகும் இந்திய ரூபாய்களை இலங்கைக்கு கொடுக்கும்.

3. இலங்கை இந்தியா இடையே ஒரு நாணய ஒன்றியம் (இந்திய ரூபாய்) uஉருவாகும்.

4. ஒரு காலத்தில் இலங்கை பொருளாதாரம் மீண்டபின் இலங்கை மீளவும் பணம் அச்சிடும்  உரிமையை மீள பெற்று - இந்தியாவின் கடனை அடைக்க பின், நாணய ஒன்றியத்தில் இருந்து நீங்கலாம்.

இப்படி நடக்கலாமா என்பது என் கேள்வி.

தியரி படி சாத்தியம் ஆனால் நடைமுறையில் இது கிட்டதட்ட இந்தியாவுக்கு அடிமை சாசனம் போன்றது ஆகவே சரிவராது என்கிறார் கடஞ்சா. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

https://www.investopedia.com/terms/c/currency-substitution.asp#:~:text=Key Takeaways-,Currency substitution is when a country uses a foreign currency,being used as a substitute.

கடஞ்சாவும் நீங்களும், மேலே கூறிய substitute currency பற்றி கதைக்கவில்லை என்பது மட்டும் தெளிவாகப்புரிகிறது, ஆனால் நீங்கள் கூறும் நடைமுறை உள்ளதா எனத்தெரியாது.

 • Thanks 1
Link to comment
Share on other sites

3 minutes ago, vasee said:

https://www.investopedia.com/terms/c/currency-substitution.asp#:~:text=Key Takeaways-,Currency substitution is when a country uses a foreign currency,being used as a substitute.

கடஞ்சாவும் நீங்களும், மேலே கூறிய substitute currency பற்றி கதைக்கவில்லை என்பது மட்டும் தெளிவாகப்புரிகிறது, ஆனால் நீங்கள் கூறும் நடைமுறை உள்ளதா எனத்தெரியாது.

இல்லை இதை ஈழப்பிரியன் அண்ணா சொன்னார்.

3 வழி உள்ளதாக தெரிகிறது.

1. இந்தியா போல் ஒரு நாட்டுடன் currency union ற்கு போவது 

2. அல்லது கம்போடியாவில் உள்ளது போல இந்திய ரூபாய் அல்லது டொலரையும் இலங்கை ரூபாயுடன் சேர்த்தே பாவிப்பது (substitution )

3. டொலர் அல்லது INRsஉடன் peg பண்ணுவது. 

இதில் 3 வது பொய்கதை. யாரும் அரசின் peg ஐ மதிக்க மாட்டர்கள். 

2க்கே வாய்ப்பு அதிகம் போல படுகிறது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, vasee said:

கடஞ்சாவும் நீங்களும், மேலே கூறிய substitute currency பற்றி கதைக்கவில்லை என்பது மட்டும் தெளிவாகப்புரிகிறது, ஆனால் நீங்கள் கூறும் நடைமுறை உள்ளதா எனத்தெரியாது.

இதை பற்றி தான் கதைக்கிறோம்.

அனால், அதி சொல்லப்பட்டு இருக்கும் defacto, dejure, legal tender என்பதில் பிரச்சனை இருக்கிறது.

legal tender என்று வந்தால், currency விநோயொகம், மற்றும் வழங்குதலை யார் செய்வது, ஹிந்தியை மத்திய வாங்கி தானே?

அந்த நிலையில், கிந்தியா சிங்களத்தின் கொளகைகளை கட்டுப்படுத்தலாம், அதற்கு வேண்டிய விதத்தில்.

அதாவது, சிங்களத்தின் இறைமை படிப்படியாக பறி போகும், அத்துடன் இந்த நிலையில் இலங்கைத்தீவின் பொருளாதாரம் கிதியாவுக்குள் இழுக்கப்படும்.

வெளியில் மீண்டு வருவதும் சுலபம் அல்ல.        
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இல்லை இதை ஈழப்பிரியன் அண்ணா சொன்னார்.

3 வழி உள்ளதாக தெரிகிறது.

1. இந்தியா போல் ஒரு நாட்டுடன் currency union ற்கு போவது 

2. அல்லது கம்போடியாவில் உள்ளது போல இந்திய ரூபாய் அல்லது டொலரையும் இலங்கை ரூபாயுடன் சேர்த்தே பாவிப்பது (substitution )

3. டொலர் அல்லது INRsஉடன் peg பண்ணுவது. 

இதில் 3 வது பொய்கதை. யாரும் அரசின் peg ஐ மதிக்க மாட்டர்கள். 

2க்கே வாய்ப்பு அதிகம் போல படுகிறது.

Currency substitution இல் peg செய்கிறார்கள் அதில் சாதகமும் உள்ளது பாதகமும் உள்ளது என கருதுகிறேன், ஆனால் நீங்கள் சொல்வதுபோல் பணவீக்கமுள்ள இலங்கை நாணயம் அத்ற்கு சரி வராதுதான்.

 • Like 1
Link to comment
Share on other sites

3 minutes ago, Kadancha said:

இதை பற்றி தான் கதைக்கிறோம்.

அனால், அதி சொல்லப்பட்டு இருக்கும் defacto, dejure, legal tender என்பதில் பிரச்சனை இருக்கிறது.

legal tender என்று வந்தால், currency விநோயொகம், மற்றும் வழங்குதலை யார் செய்வது, ஹிந்தியை மத்திய வாங்கி தானே?

அந்த நிலையில், கிந்தியா சிங்களத்தின் கொளகைகளை கட்டுப்படுத்தலாம், அதற்கு வேண்டிய விதத்தில்.

அதாவது, சிங்களத்தின் இறைமை படிப்படியாக பறி போகும், அத்துடன் இந்த நிலையில் இலங்கைத்தீவின் பொருளாதாரம் கிதியாவுக்குள் இழுக்கப்படும்.

வெளியில் மீண்டு வருவதும் சுலபம் அல்ல.        
 
இதுதான் இலங்கையில் இந்தியா 75ஆண்டுகளாக ஆடிய  விளையாட்டின் end game என நீங்கள் நினைக்கவில்லையா?

இராணுவ பலத்தின் மூலம் அன்றி, பணத்தின் மூலம் இலங்கையை ஒரு தமக்கு vassal state ஆக்குவது?

எனக்கு இலங்கை மக்களை இதற்கு படிபடியாக “பிச்சை வேண்டாம் நாயை பிடி” என்ற வகையில் தயார் செய்வதாகவே படுகிறது.

அதானியின் வரவு.

பெற்றோலியத்தை இந்தியா உஅலக சந்தையில் ஒட்டு மொத்தமாக வாங்கி பின் தன் சகாய விலையில் இலங்கைக்கு கொடுக்கும் என்ற நேற்றைய அறிவிப்பு.

பெற்றோலியத்தை IOC நேரடியாக இறக்கி விநியோகிக்கும் என்ர அறிவிப்பு.

மேலும் மேலும் இந்திய வட்டத்துள் இலங்கை இழுக்கபடுகிறதாக படுகிறது.

சம்பிக்க ரணவக்க போன்ற இனவாதிகள் விழித்து கொண்டு எதிர்க்க தொடங்கி விட்டார்கள்.

ஆனால் பசியில் கிடக்கும் மக்கள் அவர்கள் சொல்வதை கேட்பார்களா?

Link to comment
Share on other sites

16 minutes ago, goshan_che said:

எனக்கு இலங்கை மக்களை இதற்கு படிபடியாக “பிச்சை வேண்டாம் நாயை பிடி” என்ற வகையில் தயார் செய்வதாகவே படுகிறது.

இரு நாட்களுக்கு முன், எனது தந்தையுடன் கதைத்த பொழுது, இலங்கையில் இந்திய நாணயத்தை உபயோகிக்கும் சாத்தியம் பற்றி கூறிவிட்டு அப்படி போனாலும் பரவாயில்லை எனக் கூறினார் ஏனெனில் சனம் சொல்லமுடியாத கஷ்டங்களை அனுபவிக்கிறது என்று.. ஆனால் கடஞ்சா இங்கே எழுதியதுதான் நினைவிற்கு வந்தது, அதனைப்பற்றி மெதுவாக அவரிடம் கூறிய பொழுது.. கொஞ்சம் யோசித்தார்.. ஆனால் பொதுவாக சாதாரண மக்கள் இந்த பிரச்சனையில. இருந்து மீள அதுதான் வழி என யோசிக்க தொடங்கிவிட்டார்கள் போல உள்ளது.. அரசாங்கத்தில் நம்பிக்கை அறவே போய்விட்டது..

Link to comment
Share on other sites

39 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆனால் பொதுவாக சாதாரண மக்கள் இந்த பிரச்சனையில. இருந்து மீள அதுதான் வழி என யோசிக்க தொடங்கிவிட்டார்கள் போல உள்ளது.. அரசாங்கத்தில் நம்பிக்கை அறவே போய்விட்டது

எனக்கும் அப்படித்தான் படுகிறது.

ஆனால் சிங்களவர் இதை ஜீரணிக்க கஸ்டபடுவார்கள். 

படட்டுமே🤣

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இணைக்கப்பட்ட பிராந்தியங்களை அமைதியாக அபிவிருத்தி செய்வதாக புடின் உறுதி! ரஷ்யாவால் புதிதாக இணைக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களை அமைதியாக அபிவிருத்தி செய்வதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்துள்ளார். ரஷ்ய ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களுக்கு ஆற்றிய உரையில் புடின் இந்த கருத்தை வெளியிட்டார். ரஷ்ய ஜனாதிபதி கடந்த வாரம் லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க், ஸபோரிஸியா மற்றும் கெர்சன் ஆகிய பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார். ஆனால், லுஹான்ஸ்க் மற்றும் கெர்சனில் உள்ள கிராமங்களை மீண்டும் கைப்பற்றியதாக உக்ரைன் கூறியுள்ளது. இது மற்ற இரண்டு பிராந்தியங்களின் குறிப்பிடத்தக்க பகுதிகளைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் டொனெட்ஸ்கில் சமீபத்திய வெற்றிகளைப் பெற்றுள்ளது. எவ்வாறாயினும், இழந்த எந்தவொரு பிரதேசத்தையும் ரஷ்யா மீட்டெடுக்கும் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார். ஊடகவியலாளர்களிடம் இருந்து சமீபத்திய இழப்புகள் பற்றிய கேள்விகளை எதிர்கொண்ட புடின், இழப்புகள் மீட்கப்படும் எனவும் உக்ரைனிய துருப்புகள் திரும்ப அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். உக்ரைனியப் படைகள் தெற்கிலும் கிழக்கிலும் வெற்றி பெற்று வருகின்றன. லுஹான்ஸ்கின் உக்ரைனிய ஆளுனர் செர்ஹி ஹைடாய், இப்பகுதியில் உள்ள ஆறு கிராமங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டதாக கூறினார். கெர்சனின் தெற்குப் பகுதியில் உள்ள மேலும் மூன்று கிராமங்களை உக்ரைன் விடுவித்துள்ளதாக ஜனாதிபதி ஸெலென்ஸ்கி பின்னர் கூறினார். டேவிடிவ் பிரிட் என்ற மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கிராமம் உட்பட, முந்தைய நாள் கெர்சனில் தொடர்ச்சியான மீட்புக்குப் பிறகு இது வருகிறது. https://athavannews.com/2022/1303121
  • இலங்கை குறித்த பிரேரணை – ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இன்று வாக்கெடுப்பு! ஐக்கிய நாடுகள் சபையின் 51ஆவது மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை தொடர்பான பொருத்தமான பிரேரணை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, மலாவி, மாண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா உள்ளிட்ட பல நாடுகளின் முன்முயற்சியில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டதுடன், குறித்த பிரேரணை இதுவரை சுமார் 30 நாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ளது. இலங்கை தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் புதிய தீர்மானத்தில் முன்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விடயங்கள் மற்றும் பல சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவச் செல்வாக்கு அதிகரிப்பு, அரசாங்க நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமை, பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை வழங்கப்படாமை போன்ற விடயங்கள் குறித்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக, சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் ஒப்பந்தத்தை குறித்த ரேரணையை  வரவேற்றுள்ளதுடன், நாட்டின் மனித உரிமைகள் நிலைமையில் ஊழல் மிகுந்த பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என அந்தப் பிரேரணையை சுட்டிக்காட்டியுள்ளது. அமைதியான போராட்டங்கள் ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்த உதவுவதாகவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் சேர்க்கப்பட்டாலும் அதன் கீழ் மக்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அந்தப் பிரேரணை மேலும் கூறியுள்ளது. இது தொடர்பான பிரேரணை தொடர்பில் கருத்துக்கணிப்பு கோரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். எனினும் இந்த பிரேரணையை இலங்கையால் தோற்கடிக்க முடியாது எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1303112
  • வசந்த முதலிகேவின் உயிருக்கு ஆபத்து – நாடாளுமன்றில் சஜித் பிரேமதாச வசந்த முதலிகேவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் தெரிவித்தார். வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹசந்த குணதிலக்க ஆகியோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் வசந்த முதலிகே சிறையில் இருந்து இரவு நேரங்களில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியதையும் சுட்டிக்காட்டினார். நாட்டிற்கு எதிரான மனித உரிமைப் பிரேரணைகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அரசாங்கமே செயற்படுவதாகவும் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார். https://athavannews.com/2022/1303040
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிராகரிப்பதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான தீர்மானத்தை நிராகரிப்பதாக, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. இத் தீர்மானமானது தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவ வீரர்களினால் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் ஊக்குவிக்கும் விதமாகவே அமைந்துள்ளதாக மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது இத் தீர்மானம் குற்றம் இழைத்தவர்களை பொறுப்பு கூறவைப்பதற்குப் பதிலாக, அவர்களின் சர்வதேச குற்றங்களை வெள்ளை அடிப்பதுடன், அவர்களை பிணை எடுப்பதாகவே அமைத்துள்ளது என மேலும் தெரிவித்துள்ளது. மேலும், அந்த அறிக்கையில், ‘இலங்கை தொடர்பான ஐ.நா.வின் உள்ளக ஆய்வு அறிக்கையின்படி, போரின் இறுதி ஆறு மாதங்களில் சுமார் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் பெப்ரவரி 2017இல், தமிழ்ப் பெண்கள் பாலியல் அடிமைகளாக கையாளப்பட்ட இலங்கை இராணுவ பாலியல் வல்லுறவு முகாம்கள் பற்றிய விபரங்களை ஐ.நாவிடம் ஒப்படைத்தது. மேலும், இலங்கை அரச படையினரால் கைக்குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1303082
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.