Jump to content

என் சிந்தனையில் தெளிவு ஏற்பட உங்களிடம் ஒரு கேள்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, இணையவன் said:

கொச்சைத்தமிழ், பேச்சுத் தமிழ், எழுத வாசிக்கத் தெரிந்த தமிழ், சரளமான தமிழ்... இவை எல்லாமே வெவ்வேறு எல்லைகளே தவிர இவர்கள் யாருமே தமிழர்கள் இல்லை.

தமிழ் தெரியாதவர்கள் தென்னாபிரிக்காவிலிருந்து எமக்கு ஆதரவு வழங்கினார்கள். மகாத்மா காந்தியின் உபதேசமே இந்தியாவுக்குத் தேவைப்பட்டது. அவரின் சொந்த பிள்ளை வளர்ப்பு அல்ல. குறுகிய மனப்பான்மையுடைய சமுதாயம் சாதி தொழில் பிரதேசம் என்று தன் இனத்தையே குறுக்கியது போதாதா ? தங்களைப் புனிதர்களாகக் காட்டித் தமிழ் ஆர்வலர்களை நோக்கிக் கைநீட்டுவது தமிழ் மீது பற்றுள்ளவர்களின் செயல் அல்ல. 

சொல்லத் துணியாததைத் சொல்லத் துணிந்த பிரபாவுக்கும் ரஞ்சித்துக்கும் நன்றிகள்.

(குறிப்பு: ரஞ்சித் ஏனைய பிள்ளைகளைத் தமிழ் படிக்கும்படி கட்டாயப்படுத்தியதாக எங்கும் குறிப்பிடவில்லை. தவிர, தனது மகள் பாடசாலையிலிருந்து விலகியதும் தானும் விலகி விட்டதாகக் கூறியுள்ளார். சிலர் அரைகுறையாக வாசித்து உணர்ச்சிவசப்பட்டுள்ளனரா அல்லது நான் தவறாக வாசித்துள்ளேனா ?)

அருமை 

Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

நன்றி உங்கள் பதிவிற்கு பிரபா , சில வருடங்களுக்கு முன்னர் சிட்னியில் உள்ள தமிழ்ப் பாடசாலை ஒன்றில் தன்னார்வத் தொண்டனாக பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. நண்பர்கள் ஊடாக இந்த வாய்ப்பினைப் பெற்றுக்கொண

vanangaamudi

தனது கொள்கைகளை சிந்தனையிலும் செயலிலும் நிறுத்தி வாழ்ந்துகாட்டும் ஒருவர் இன்னொருவருக்கு கருத்து சொல்ல அல்லது  ஆலோசனை  வழங்கும்போது அதற்கு தனியான மதிப்பு உண்டு என்பதை எவரும் மறுக்கமுடியாது.  அப்படி இல்ல

குமாரசாமி

இப்போதெல்லாம் ஒரு பக்க நியாயத்தை உலக நியாயமாக்கி விடுவதையே பலர் செய்கின்றார்கள்.  எனது வீட்டுக்குள்ளேயே பெரிய இழப்பை வைத்துக்கொண்டு வெளியில் சென்று அதை நிவர்த்தி செய்வது  புண்ணியம் தேடுவது போல் தான்

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஈழப்பிரியன் said:

பாடசாலைக்குப் போனால்த் தான் தமிழ் படிக்கலாம் என்பதிலிருந்து நான் விதிவிலக்கு.

பிள்ளைகள் தமிழ் பேச வேண்டுமென்றால் இதை முதலில் வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

ஒவ்வொருவருடைய தனிப்பட்ட அனுபவமும், வீட்டு சூழலிலும் இது தங்கியுள்ளது.. ஆனாலும் நானறிந்த வகையில் தமிழ் பாடசாலைக்கு தனியே மொழியை மட்டும் கற்றுக் கொள்ள அனுப்புவதில்லை என நம்புகிறேன்.. இது தொடர்பாக சில கருத்துக்கள் உள்ளது.. அதை இன்னொரு திரியில் கூறலாம் என நினைத்து வைத்துள்ளேன்.. 

21 hours ago, goshan_che said:

இதில் வணங்கா முடி சொன்ன சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி என்பதும் முக்கியம்தான்.

உதாரணமாக ஒருவர் மேடை ஏறி சீதனத்தை எதிர்த்து பேசி விட்டு, அவரின் மகனுக்கு சீதனம் வாங்கி திருமணம் முடித்து கொடுத்தால் - அது மகனின் தெரிவு என சொன்னால் - சமூகம் அவரின் போக்கை do as I preach not as I practice என்ற ஒரு வகை ஹிப்ரோகிரசி என்றே பார்க்கும் இல்லையா?

உண்மைதான், ஒத்துக்கொள்கிறேன்..

ஆனாலும் நீங்கள் கூறியது போல இரண்டு தலைமுறையில் தமிழ் கற்க ஆர்வமுள்ளவர்களை இழப்பதை தடுக்கவேண்டும் என்ற நோக்கத்தை சற்று சிந்திக்கவேண்டும் என்பதுதான் எனது எண்ணம்.. ஏனெனில் இனி இங்கே இளம் தலைமுறைகள்தான்(2ம், 3ம் தலைமுறை) தமிழ் மொழியை வளர்த்துக்கொண்டு போகப்போகிறார்கள், அவர்கள் தங்களது சமூகத்திற்கு தொண்டாற்ற வரும்பொழுது இந்த மாதிரியான கேள்விகளாலும் கதைகளாலும் ஒதுங்கி போகிறார்கள். பிள்ளைகளின் ஆர்வம் குறைகிறது.. என்பதை காணக்கூடியதாக உள்ளது..

 

 

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, இணையவன் said:

கொச்சைத்தமிழ், பேச்சுத் தமிழ், எழுத வாசிக்கத் தெரிந்த தமிழ், சரளமான தமிழ்... இவை எல்லாமே வெவ்வேறு எல்லைகளே தவிர இவர்கள் யாருமே தமிழர்கள் இல்லை.

தமிழ் தெரியாதவர்கள் தென்னாபிரிக்காவிலிருந்து எமக்கு ஆதரவு வழங்கினார்கள். மகாத்மா காந்தியின் உபதேசமே இந்தியாவுக்குத் தேவைப்பட்டது. அவரின் சொந்த பிள்ளை வளர்ப்பு அல்ல. குறுகிய மனப்பான்மையுடைய சமுதாயம் சாதி தொழில் பிரதேசம் என்று தன் இனத்தையே குறுக்கியது போதாதா ?

நன்றி இணையவன் அண்ணா.. 

என்னைப்பொறுத்த வரையில் புலம்பெயர்ந்த தேசத்தில் தமிழ் மொழியின் நிலை, கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி.. ஏன் ஆர்வம் குறைகிறது என பலர் கதைப்பார்கள்.. கதைத்துக்கொண்டே இருப்பார்கள்… பெற்றோரிலும் தமிழ் பாடசாலைகளிலும் மாறிமாறி ஒருவரை ஒருவர் குற்றம் கூறிக்கொண்டே இருப்பார்கள்.. அவ்வளவுதான்..

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல அது நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்தது வாழ்வியலோடு கலந்தது  உணர்வு கொண்டது . கிளிப்பிள்ளை போல சொன்னதை சொல்ல இயலாது பொருள் விளங்க வேண்டும். அகர வரிசையில் இருந்து  பிறப்பு முதல் இறப்புவரையான அனுபவங்கள்  நுண் உயர்வுகளைக் கொண்டது. ஊ +ம் என் மகள் நான்கு வயதில் என் ஊரை விட்டு வந்த்தவள் ஆறு வயதில்  கனடாவுக்கு வந்தவள். நன்றாக பேசுவாள். எழுத வாசிக்க தெரியாது சாரி உடுத்த தலையில் பூ வைக்க   ஆலாத்தி என்பதில் நிறைய விருப்பு கொண்டவள். கடையில் தமிழ் பொருட்களை   எழுத்து கூட்டி வாசிக்க தெரியாது .  இப்படியும் நம் பிள்ளைகள் இருக்கிறார்கள்.  

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, இணையவன் said:

கொச்சைத்தமிழ், பேச்சுத் தமிழ், எழுத வாசிக்கத் தெரிந்த தமிழ், சரளமான தமிழ்... இவை எல்லாமே வெவ்வேறு எல்லைகளே தவிர இவர்கள் யாருமே தமிழர்கள் இல்லை.

தமிழ் தெரியாதவர்கள் தென்னாபிரிக்காவிலிருந்து எமக்கு ஆதரவு வழங்கினார்கள். மகாத்மா காந்தியின் உபதேசமே இந்தியாவுக்குத் தேவைப்பட்டது. அவரின் சொந்த பிள்ளை வளர்ப்பு அல்ல. குறுகிய மனப்பான்மையுடைய சமுதாயம் சாதி தொழில் பிரதேசம் என்று தன் இனத்தையே குறுக்கியது போதாதா ? தங்களைப் புனிதர்களாகக் காட்டித் தமிழ் ஆர்வலர்களை நோக்கிக் கைநீட்டுவது தமிழ் மீது பற்றுள்ளவர்களின் செயல் அல்ல. 

சொல்லத் துணியாததைத் சொல்லத் துணிந்த பிரபாவுக்கும் ரஞ்சித்துக்கும் நன்றிகள்.

(குறிப்பு: ரஞ்சித் ஏனைய பிள்ளைகளைத் தமிழ் படிக்கும்படி கட்டாயப்படுத்தியதாக எங்கும் குறிப்பிடவில்லை. தவிர, தனது மகள் பாடசாலையிலிருந்து விலகியதும் தானும் விலகி விட்டதாகக் கூறியுள்ளார். சிலர் அரைகுறையாக வாசித்து உணர்ச்சிவசப்பட்டுள்ளனரா அல்லது நான் தவறாக வாசித்துள்ளேனா ?)

இணையவன், திரிகளில் அந்த திரி சம்மந்தமாய்  கருத்துக்கள் எழுதுவது உங்கள் விருப்பம். ஆனால், மற்றவர் போல் குத்தி சாடுகின்ற எழுத்துக்கள் வேண்டாம்...நான் என்னுடைய கருத்தில் தெளிவாக எழுதி இருக்கேன் . உங்களுக்கு விளங்கா விட்டால் திரும்ப போய் வாசிக்கவும் . வாசித்தும் விளங்கா விட்டால் விளக்கம் கேளுங்கள் தரப்படும் 
 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/6/2022 at 10:32, பிரபா சிதம்பரநாதன் said:

1)  நான் தமிழ் மொழியில் உள்ள பற்று ஆர்வம் காரணமாக தொடர்பான கருத்தரங்குகளில் பேசுகிறேன், எழுதுகிறேன். ஆனால் என் குடும்பத்தில் எனக்கு மட்டுமே இந்த ஆர்வம், எனது துணைக்கு ஆர்வம் இல்லை.

2) நான், எனது சமூகத்தில், தமிழுடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் பங்காற்றுவதால் பிரபல்யமாக இருக்கிறேன் என்பதால் என் பிள்ளைக்கு கட்டாயம் தமிழ் கதைக்க வேண்டும் என கூறுகிறார்கள்.. எதிர்பார்க்கிறார்கள்.. ஆனால் பிள்ளையால் முடியவில்லை என்பதால் நான் தமிழ் மொழி சம்பந்தமான விடயங்கள் பற்றி கதைக்க கூடாதா? 

3) நான் எனது ஆர்வம், பற்று காரணமாக தமிழுக்கு செய்யும் பங்களிப்பை எனது தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து எடை போடுவது சரியா? // 

இந்த கேள்விகள் எனது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமானது இல்லை.. ஆனால் உங்களது கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.. 

 

1) இந்த புரிந்துணர்வின்மை அனேக வீடுகளில் நடைபெறுவதுதான். இதில் கவைப்பட ஏதும் இல்லை 

2) நீங்கள் தமிழ் ஆர்வலராயிருப்பது பெருமைக்குரியது. அதையிட்டு பிறர் குறை காண்பதற்கு இடம் இல்லை.

3) நிச்சயமாக் இல்லை. நீங்கள் தமிழ் ஆர்வலராயிருக்கையில் உங்கள் பிள்ளைகளும் அதில் ஈடுபாடு காட்ட வேண்டும் என எவரும் நிர்ப்பந்திக்க முடியாது. 

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/6/2022 at 13:55, vanangaamudi said:

பிறர் சம்பந்தப்பட்டதாயின் அதற்கு ஏற்ற விதமாக உங்கள் பேசுபொருளையும் மையக்கருத்தையும் மீள்பரிசீலனை செய்து மாற்றி வைத்துக்கொள்ளுங்கள்.

உண்மைதான்..ஒத்துக்கொள்கிறேன். 

பொதுவாகவே நான் எங்களவர்கள் கூடும் இடங்களில் அதிகம் கதைப்பதில்லை.. அவர்கள் பேசுவதை கேட்பேன்.. ஆனாலும் சில நேரங்களில் அப்படி மெளனமாக இருக்கமுடிவதில்லை. 

 

7 hours ago, Kapithan said:

1) இந்த புரிந்துணர்வின்மை அனேக வீடுகளில் நடைபெறுவதுதான். இதில் கவைப்பட ஏதும் இல்லை 

2) நீங்கள் தமிழ் ஆர்வலராயிருப்பது பெருமைக்குரியது. அதையிட்டு பிறர் குறை காண்பதற்கு இடம் இல்லை.

3) நிச்சயமாக் இல்லை. நீங்கள் தமிழ் ஆர்வலராயிருக்கையில் உங்கள் பிள்ளைகளும் அதில் ஈடுபாடு காட்ட வேண்டும் என எவரும் நிர்ப்பந்திக்க முடியாது. 

 

உண்மை..

மிக்க நன்றி

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


எனது கேள்விக்கு தங்களது கருத்துக்களை எழுதிய அனைவருக்கும் நன்றிகள். 

சில தினங்களுக்கு முன் நடந்த ஒரிரு சந்திப்புகளில் இடம்பெற்ற கருத்துப்பரிமாற்றங்கள் என்னை இந்த கேள்வியை கேட்க தூண்டியது. 

அத்துடன் எனது நட்பு வட்டத்தில் இந்த மாதிரி சம்பவங்களால், எமது சமூகத்தில் இருந்து ஒதுங்கி வாழ்கிறார்கள். அவர்களிடம் திறமைகள் இருந்தும் வருவதில்லை.. 

அதே போல எங்களது சமூகத்தின் எதிர்பார்ப்பும் (உதாரணத்திற்கு ஒன்று: கலைகள் பழகும் வகுப்பிலோ அல்லது பொது இடத்திலோ பிள்ளையை பார்த்து உன் அம்மா அல்லது அப்பா தமிழ் ஆர்வலர்/தமிழ் வகுப்பு நடத்துகிறார் ஆனால் உனக்கு தமிழ் தெரியாது? என மற்றைய மாணவர்களின் முன் மனம் நோகடிப்பது போன்றவை) காலத்தின் யதார்த்த நிலை அறிந்து சற்றேனும் மாறவேண்டும்.. 

இல்லாவிடில் இங்கே இன்னமும் சில வருடங்களில் தமிழின் பயன்பாடு நாங்கள் எதிர்பார்ப்பது போல இருக்காது.. அப்பொழுதும் வந்து பயிற்சிபட்டறைகளையோ/கருத்தரங்குகளையோ வைத்து சவால்கள்-தீர்வுகள் என கதைப்பதில் பயன் இல்லை.. 

மேலும் நான் மேடைகளில் பேசுவதோ, கருத்தரங்களை நடத்துவதோ இல்லை.. ஆனால் எனது நட்பில் இருக்கிறார்கள்..மற்றப்படி நான் சாதாரணமான ஒரு பெண்..அத்துடன் எனக்கு தமிழில் புலமையும் இல்லை..

- நன்றி..

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
  • Haha 1
  • Confused 1
Link to comment
Share on other sites

[3:21] இரயில்கள்!
[12:00] அன்பு கூர்ந்து கதவுகளில் இருந்து விலகி நிற்கவும்!

 

 

 

 

 

 

 

 

 

தயவுசெய்து உள்ளே வந்தவுடன் கதவை மூடவும்!

 

 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அறிவுரை சொல்லும் அளவிற்கு நானொன்றும் வயதில் பெரியவனில்லை. அதனால்தான் ஒன்டும் எழுதேலை.

இருந்தாலும் சொல்லுறன்.

ஆ... எங்களுக்கு தமிழ் கதைக்கத்தெரிஞ்சால் எங்கட பிள்ளையளுக்கும் தமிழ் சொல்லிக்குடுக்கத்தான் வேணும். எங்கட தாய்மொழியெல்லோ, மறுத்திச்சினம் என்டால் மூக்குக்குள்ளாலை வயர் வைச்சு சாப்பாடு ஏத்திற மாதிரியாவது ஏத்த வேணும்.😆😆😆

 

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

உண்மைதான்..ஒத்துக்கொள்கிறேன். 

பொதுவாகவே நான் எங்களவர்கள் கூடும் இடங்களில் அதிகம் கதைப்பதில்லை.. அவர்கள் பேசுவதை கேட்பேன்.. ஆனாலும் சில நேரங்களில் அப்படி மெளனமாக இருக்கமுடிவதில்லை. 

 

உண்மை..

மிக்க நன்றி

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நன்னிச் சோழன் said:

ஆ... எங்களுக்கு தமிழ் கதைக்கத்தெரிஞ்சால் எங்கட பிள்ளையளுக்கும் தமிழ் சொல்லிக்குடுக்கத்தான் வேணும். எங்கட தாய்மொழியெல்லோ, மறுத்திச்சினம் என்டால் மூக்குக்குள்ளாலை வயர் வைச்சு சாப்பாடு ஏத்திற மாதிரியாவது ஏத்த வேணும்.😆😆😆

 

அப்பிடி போடு அரிவாளை.....

ஒரு குழந்தை தனது அடையாளத்தை தானே தேர்ந்தெடுப்பதில்லை. எல்லாம் பெற்றோரின் நடவடிக்கையிலையே தங்கியுள்ளது.

மற்றும் படி.....

ஆசிரியர் என்பவர் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தெய்வத்திற்கு மேலாக வைத்து பூஜிக்க வேண்டிய ஒருவர். ஒரு சமுதாயத்தின் வீழ்ச்சியும், எழுச்சியும் ஆசிரியர்கள் கைவசம் தான் உள்ளது.  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2022 at 12:52, நன்னிச் சோழன் said:

எங்களுக்கு தமிழ் கதைக்கத்தெரிஞ்சால் எங்கட பிள்ளையளுக்கும் தமிழ் சொல்லிக்குடுக்கத்தான் வேணும். எங்கட தாய்மொழியெல்லோ, மறுத்திச்சினம் என்டால் மூக்குக்குள்ளாலை வயர் வைச்சு சாப்பாடு ஏத்திற மாதிரியாவது ஏத்த வேணும்

நன்றி நன்னி!!

பொதுவாகவே புலம்பெயர் தேசங்களில் தமிழ்மொழியையோ, பண்பாட்டையோ வீட்டிலும் தமிழ்ப் பாடசாலைகளிலும் ஏன் தனியாரிடமும் கற்றுக்கொள்கிறார்கள்..  வேண்டும் என்று மறப்பதில்லை மறுப்பதும் இல்லை. தாய் மொழியின் முக்கியத்துவம் பற்றி எல்லோருக்கும் விளங்கும். ஆனால் எங்களது சில எண்ணங்களிலும் முறைகளிலும் மாற்றம் வரவேண்டும்.. தனியே பெற்றோரை மட்டும் குறை கூறுவதால் பயனில்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
9 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நன்றி நன்னி!!

பொதுவாகவே புலம்பெயர் தேசங்களில் தமிழ்மொழியையோ, பண்பாட்டையோ வீட்டிலும் தமிழ்ப் பாடசாலைகளிலும் ஏன் தனியாரிடமும் கற்றுக்கொள்கிறார்கள்..  வேண்டும் என்று மறப்பதில்லை மறுப்பதும் இல்லை. தாய் மொழியின் முக்கியத்துவம் பற்றி எல்லோருக்கும் விளங்கும். ஆனால் எங்களது சில எண்ணங்களிலும் முறைகளிலும் மாற்றம் வரவேண்டும்.. தனியே பெற்றோரை மட்டும் குறை கூறுவதால் பயனில்லை. 

 

உண்மைதான், 

நான் இருக்கிற நாட்டில என்னோட படிக்கிற தமிழ் இளைஞரில் பெரும்பாலானோருக்கு தமிழ் கதைக்கவே வராது. அவையோட தமிழில போய்க் கதைச்சால் சொல்லிற  முதல் வசனம், 'No Tamil'. இதை முதல் தடவை காதால் கேட்ட போது கொஞ்சம் சங்கடம் ஆகிவிட்டது. பின்னர் கொஞ்சம் சுதாகரிச்சுக்கொண்டு கல்லு ரோட்டில வண்டில் போன மாதிரி அந்த நாட்டின்ர மொழியில கதைச்சது தான். 🤣

இளையோர் தாமாக முன்வந்தால் உண்டு. தமிழறியாதோரை ஏதேனும் செஞ்சு தமிழைக் கற்க வைக்க ஊக்குவிக்க வேணும், பெரியவர்கள்.

 

 

On 21/6/2022 at 06:07, குமாரசாமி said:

அப்பிடி போடு அரிவாளை.....

ஒரு குழந்தை தனது அடையாளத்தை தானே தேர்ந்தெடுப்பதில்லை. எல்லாம் பெற்றோரின் நடவடிக்கையிலையே தங்கியுள்ளது.

மற்றும் படி.....

ஆசிரியர் என்பவர் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தெய்வத்திற்கு மேலாக வைத்து பூஜிக்க வேண்டிய ஒருவர். ஒரு சமுதாயத்தின் வீழ்ச்சியும், எழுச்சியும் ஆசிரியர்கள் கைவசம் தான் உள்ளது.  

ஏற்கனவே மேலே ஒரு கள உறவு சொன்னது போன்று பள்ளிப் படிப்பை கைவிட்டால் எப்படி இழுத்துச் செல்கிறார்களோ அதே போல இதையும் செஞ்சால் நல்லம் என்பது 'தனிப்பட்ட எண்ணம்'.

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


பெற்றோர் பிள்ளைகளை கட்டாயப்படுத்த வேண்டிய தேவை இல்லை ...அவர்கள் வீட்டில் பிள்ளைகளோடு தமிழில் கதைத்தாலே  பிள்ளைகளும் தமிழில் கதைப்பார்கள்,  கதைக்க முயற்சிப்பார்கள் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:


பெற்றோர் பிள்ளைகளை கட்டாயப்படுத்த வேண்டிய தேவை இல்லை ...அவர்கள் வீட்டில் பிள்ளைகளோடு தமிழில் கதைத்தாலே  பிள்ளைகளும் தமிழில் கதைப்பார்கள்,  கதைக்க முயற்சிப்பார்கள் 
 

 உலகிலேயே தமிழருக்கு ஆங்கில மோகம் அதிகம். பொது வெளியில் தமிழில் கதைப்பதை மரியாதை குறைவாக அல்லது வெட்கமாக நினைப்பவர்கள்.ஒருவனுக்கு ஆங்கிலம் தெரியாவிட்டாலே கேவலமாக நினைப்பவர்கள்.புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் பலர் தமிழை படித்து என்ன பிரயோசனம் என சொல்வதை என் காதாலே கேட்டிருக்கின்றேன். தாய் மொழிக்கும் தொழில்சார்பு மொழிக்கும் வித்தியாசம் தெரியாமல் இனத்தை மறைமுகமாக அழித்துக்கொண்டிருக்கின்றார்கள்.


இப்படி பல யதார்த்த விடயங்களை இங்கே சொல்லும் போது பழமைவாதி என பட்டம் சூட்டுகின்றார்கள்.மொழியை மட்டும் பிடித்து தொங்குவது பிற்போக்குத்தனம் என இங்கு ஒருவர் கருத்து வெடி விட்டுள்ளார். சொந்த சகோதரங்களின் பிள்ளைகள் ஜேர்மனி,கனடா,டென்மார்க்,பிரான்ஸ்  நாடுகளில் வசித்தால் கூடுதலான பிள்ளைகளுக்கு தமிழே தெரியாது.இவர்கள் எல்லாம் எப்படி சொந்த மொழியில் சொந்தங்களுடன் உரையாடுவார்கள்? பெயருக்குத்தான் தமிழர்களே தவிர வேறேதுமில்லை.

17 hours ago, நன்னிச் சோழன் said:

ஏற்கனவே மேலே ஒரு கள உறவு சொன்னது போன்று பள்ளிப் படிப்பை கைவிட்டால் எப்படி இழுத்துச் செல்கிறார்களோ அதே போல இதையும் செஞ்சால் நல்லம் என்பது 'தனிப்பட்ட எண்ணம்'.

தங்கள் பிள்ளைகளுக்கு பரதநாட்டியம் பழக்குவார்கள்.மிருதங்கம் பழக்குவார்கள். ஆனால் தாய் மொழி தமிழ்????????

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
6 minutes ago, குமாரசாமி said:

 உலகிலேயே தமிழருக்கு ஆங்கில மோகம் அதிகம். பொது வெளியில் தமிழில் கதைப்பதை மரியாதை குறைவாக அல்லது வெட்கமாக நினைப்பவர்கள்.ஒருவனுக்கு ஆங்கிலம் தெரியாவிட்டாலே கேவலமாக நினைப்பவர்கள்.புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் பலர் தமிழை படித்து என்ன பிரயோசனம் என சொல்வதை என் காதாலே கேட்டிருக்கின்றேன். தாய் மொழிக்கும் தொழில்சார்பு மொழிக்கும் வித்தியாசம் தெரியாமல் இனத்தை மறைமுகமாக அழித்துக்கொண்டிருக்கின்றார்கள்.


இப்படி பல யதார்த்த விடயங்களை இங்கே சொல்லும் போது பழமைவாதி என பட்டம் சூட்டுகின்றார்கள்.மொழியை மட்டும் பிடித்து தொங்குவது பிற்போக்குத்தனம் என இங்கு ஒருவர் கருத்து வெடி விட்டுள்ளார். சொந்த சகோதரங்களின் பிள்ளைகள் ஜேர்மனி,கனடா,டென்மார்க்,பிரான்ஸ்  நாடுகளில் வசித்தால் கூடுதலான பிள்ளைகளுக்கு தமிழே தெரியாது.இவர்கள் எல்லாம் எப்படி சொந்த மொழியில் சொந்தங்களுடன் உரையாடுவார்கள்? பெயருக்குத்தான் தமிழர்களே தவிர வேறேதுமில்லை.

மெய்மை நிறைந்த கருத்துக்கள்... 

எமது தாய்மொழியை நாம் அறிய/கற்க வேண்டும். இல்லையென்றால் என்னத்திற்காக நாம் போராடினமோ அது ஓரிரு தலைமுறையோடே பொருளற்றதாகிவிடும்.

பேந்து நீங்கள் பாயோக் பாயோக் என்டாலும் ஒன்டும் ஆகாது கண்டியளோ.

 

 

//தங்கள் பிள்ளைகளுக்கு பரதநாட்டியம் பழக்குவார்கள்.மிருதங்கம் பழக்குவார்கள். ஆனால் தாய் மொழி தமிழ்????????//

தமிழாலை என்ன பிரியோசனம் சொல்லுங்கோ பாப்பம்?
தமிழை படிச்சால் காசு கிடைக்குமோ? இல்லைத்தானே? பேந்தென்னத்திற்கு தமிழ்?

 

1 hour ago, ரதி said:


பெற்றோர் பிள்ளைகளை கட்டாயப்படுத்த வேண்டிய தேவை இல்லை ...அவர்கள் வீட்டில் பிள்ளைகளோடு தமிழில் கதைத்தாலே  பிள்ளைகளும் தமிழில் கதைப்பார்கள்,  கதைக்க முயற்சிப்பார்கள் 
 

உண்மைதான்... கதைச்சால் கதைப்பினம். ஆனால் சில பெற்றாரே தமிழில் கதைக்கத் தயங்கும் போது இது எப்படி சாத்தியப்படும்? 

ஆனால் அப்பையும் மறுத்திச்சினம் எண்டால்?
இப்படிப்பட்ட தமிழறியா பிள்ளைகள் வளர்ந்து பெற்றாராகும் போது... உங்கள் கருத்து தோற்றுவிடும்!
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/6/2022 at 02:58, நன்னிச் சோழன் said:

நான் இருக்கிற நாட்டில என்னோட படிக்கிற தமிழ் இளைஞரில் பெரும்பாலானோருக்கு தமிழ் கதைக்கவே வராது. அவையோட தமிழில போய்க் கதைச்சால் சொல்லிற  முதல் வசனம், 'No Tamil'. இதை முதல் தடவை காதால் கேட்ட போது கொஞ்சம் சங்கடம் ஆகிவிட்டது.

இணையவன் அண்ணாவும் சொல்லி போட்டார் தமிழ் எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள் யாருமே தமிழர்கள் இல்லை என்று. தமிழ் ஆர்வலர்கள் என்று சொல்லபடும் பிரபல்யம் பெற்றவர்கள் பலரின் பிள்ளைகளுக்கு தமிழ் பேச வராது. என்ன செய்வது ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/6/2022 at 16:40, சுவைப்பிரியன் said:

உஙகள் செயறபாட்டை குறை லெ;ல முடியாது.ஆனால்  தாய் மொழியில் ஈடுபாடு கொன்ட ஒருவரின் பிள்ளை அந்த மொழியை
கதைக்க முடியவில்லை என்றால் கொஞ்சம் இடிக்கத்தான் செய்யும.

இந்தத் திரியை முழுமையாக வாசிக்கவில்லை. எனினும் பிரபா குறிப்பிட்ட நிலை எனக்கும் இருக்கின்றது. 

நான் தமிழில் எழுத்தில் வித்துவம் காட்டுவது பலருக்குத் தெரிந்திருக்கும். எழுதுவதை விட தினமும் பலமணி நேரம் தமிழில் வாசிக்கின்றேன். ஆனாலும் தமிழில் உரையாட எனக்கு நேரம் அதிகம் கிடைப்பதில்லை என்பதால் 90 வரை தனித்தமிழில் உரையாடியவன், இப்போது தங்கிலீஷில் உரையாடுகின்றேன். சாதாரணமான சில தமிழ்ச் சொற்களைக்கூட உடனடியாக தமிழில் சொல்லமுடியாமல் ஆங்கிலத்தைப் பாவிப்பதுண்டு. பின்னர் நோவதுண்டு! 

நிற்க,

எனது பிள்ளைகள் தமிழில் உரையாடுவதில்லை. அதனால் ஐரோப்பாவில், இலங்கையில் இருக்கும் உறவினர்களுடன் உரையாடுவதில் சிக்கல்கள் இருக்கின்றன. எனினும் அங்கெல்லாம் போனபோது தம்மை ஒத்தவயதினருடன் எப்படியோ சேர்ந்து விளையாடுவார்கள். எப்படிக் கதைக்கின்றார்கள் என்று நான் பார்த்ததும் இல்லை!

இருவரும் இப்போது ஓரளவு வளர்ந்துவிட்டனர். தமிழில் கதைக்கக் சொல்லிக்கேட்டால் நீ சொல்லித் தரவில்லை என்று வழைமையான குற்றச்சாட்டையும் என்மீது சுமத்தியும் உள்ளனர்!  பிள்ளைகளை தமிழில் கதைக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தமுடியாது. அவர்கள் வளரும் சூழலில் அவர்கள் பேசவேண்டிய மொழியை அவர்களே தீர்மானிப்பார்கள். தமிழில் பேசவேண்டுமென்றால் தமிழ் அதிகம் பாவிக்கும் சூழலில் தொடர்ந்து இருக்கவேண்டும். 

பிள்ளைகள் தமிழில் உரையாடமுடியாமல் இருந்தாலும் அவர்கள் கூடுதலாக பழகுவது தமிழர்களின் பிள்ளைகள் என்பதால் அவர்களின் அடையாளம் தமிழ் என்றுதான் சொல்வேன். 

ஏன் தமிழில் ஈடுபாடு உள்ளவன் தமிழைப் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கவில்லை என்று கேட்டால் நான் ஆபிரிக்காவில் நின்றபோது எனது அப்பா எனக்கு கடிதத்தில் சொன்னதுதான் பதில்!

பாம்பு தின்னும் ஊருக்கு சென்றால் நடுமுறி எனக்கென வாழவேண்டும்”

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/6/2022 at 07:17, குமாரசாமி said:

எனக்கு தெரிய......
இங்கு ஒருவர் தமிழ்/கலாச்சார ஈடுபாடு கொண்டவர்.தமிழ்பள்ளிக்கூட வாத்தியாரும் கூட...நல்ல/துக்க விசயங்களுக்கெல்லாம் வேட்டி சட்டையுடன் மட்டுமே காட்சியளிப்பார். தமிழரை கண்டால் வணக்கம் சொல்லி தமிழில் மட்டுமே கதைப்பார்.வீட்டிலும் ஒரே தமிழ் புத்தக மயம். தமிழ் வளர்க்க/வளர வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்.

ஆனால் அவர் பிள்ளைகளோ கொச்சை தமிழ்தான் பேசுவார்கள்.தமிழ் கலாச்சாரம் அறவே இல்லை. அவரின் பிள்ளைகளா இவர்கள் என நான் நினைப்பதுண்டு.

அவர் தான் விரும்புவதை பிறர் மேல், பிள்ளைகளாயினும், திணிப்பதை விரும்பாதவர் என்றும் பார்க்கலாம்.😎

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/6/2022 at 10:43, ரஞ்சித் said:

ஆரம்பத்தில் எனது பிள்ளைகளும் என்னுடன் பாடசாலைக்கு வந்தனர். ஆர்வத்துடன் கல்விசார் செயற்பாடுகளிலும், கலை கலாசார நிகழ்வுகளிலும் பங்குகொண்டனர். காலம் செல்லச் செல்ல, ஆங்கில மூலக் கல்விக்கும், பிரதான பாடசாலையின் செயற்பாடுகளுக்கும் எனது பிள்ளைகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கவே, தமிழ்க் கற்றலில் அவர்களுக்கிருந்த ஆர்வம் குறைவடையத் தொடங்கியது. பெற்றோரில் ஒருவனான எனது ஆர்வம் மட்டுமே பிள்ளைகள் தமிழினைத் தொடர்ந்து படிக்கப் போதுமானதாக இருக்காது என்பதனை நான் புரிந்துகொண்ட நேரமும் அதுதான். சில வருடங்களில் எனது இளைய மகளும் தனது தமிழ்ப் பாடசாலையுடனான தொடர்பினை பிரதான பாடசாலையில் பரீட்சையொன்றினைக் காட்டி கத்திரித்துக்கொள்ள நானும் விலகவேண்டியதாயிற்று.

இப்படித்தான் நம்ம நிலைமையும். அதைவிட வீட்டில் தமிழில் கதைக்க பாட்டன், பாட்டி இல்லை. தமிழ் தொல்லைக்காட்சி இல்லை. 

வேலை காரணமாக வார நாட்களில் பிள்ளைகளைக் காண்பது குறைவு. வார இறுதியில் அவர்களுக்கு கற்பிப்பது (ரியூஷன் எல்லாம் கிடையாது) நான் என்பதால் ஆங்கிலம் பாவிக்கவேண்டும். எம்முடன் ஆங்கிலத்தில் உரையாடலாம் என்று பிள்ளைகளும் கண்டுகொண்டதால் இயல்பாகவே தமிழைத் தவிர்த்துவிடுவார்கள்!

On 19/6/2022 at 13:56, ஈழப்பிரியன் said:

பாடசாலைக்குப் போனால்த் தான் தமிழ் படிக்கலாம் என்பதிலிருந்து நான் விதிவிலக்கு.

பிள்ளைகள் தமிழ் பேச வேண்டுமென்றால் இதை முதலில் வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

ஆம். பள்ளிக்கூடம் போய் தமிழ் படிக்கமுடியும் என்பது நாங்கள் ஊரில் ஆங்கிலம் படித்த மாதிரித்தான்! ஒரு அறுப்பும் விளங்காது!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் வெவ்வேறு மொழியுள்ள நாடுகளில் வாழ்கின்றார்கள். அவர்களின் பிள்ளைகள் தாம் வாழும் நாட்டு மொழியோடு இன்னும்  ஒரு மொழியையோ இரு மொழியையோ சேர்த்தே படிக்கின்றார்கள்.

அதோடு சேர்த்து வீட்டில் தாய் மொழி தமிழை படிக்க/படிப்பிக்க மாட்டம். ஏனெண்டால் பிள்ளைக்கு விருப்பமில்லையாம். ஏதோ  விருப்பமில்லாத சாப்பாட்டை சொல்வது போல் இலகுவாக சொல்லிவிட்டு நகர்ந்து செல்கின்றனர்.ஊரில் கட்டாய படிப்பு படித்தவர்கள் தான் இன்று தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் விருப்பமில்லை என புளகாங்கிதம் அடைகின்றார்கள்.

புலம்பெயர்தேச அவலங்கள்.இண்டைக்கு இதுதான் சாப்பாடு என சொல்லும் சமூகத்திலிருந்து வந்த எம்மவர் தங்கள் பிள்ளைகளை வளர்க்கும் சித்திரங்களில் ஒன்று😁

என்ரை செல்லம். குஞ்செல்லே...என்ரை தங்கக்கட்டியெல்லே ...பிள்ளைக்கு மத்தியான சாப்பாடு என்ன வேணும் ?🤣
கம்பேக்கர் வேணுமே?
பிட்சா வேணுமே?
டோனர் வேணுமே?
சீஸ்பேக்கர் வேணுமே?
சிக்கன் வேணுமே?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/6/2022 at 17:58, ரதி said:

பிள்ளைகள் தமிழை படிக்க மாட்டோம்  என்று சொன்னால் கட்டாயப்படுத்த கூடாது என்று சொல்கின்ற நீங்கள் அதே பிள்ளைகள் 10 வகுப்போடு படிப்பை நிப்பாட்ட போறோம் என்று சொன்னால் விடுவீர்களா ?....அதென்ன ஆங்கில நாடுகளில் இருக்கும் பிள்ளைகளுக்கு மட்டும் தமிழ் படிக்க கசக்குது ?....என்னை பொறுத்த வரை பெற்றோரில் தான் பிழை சொல்வேன் .

எல்லாம் தேவையைப் பொறுத்து. கல்வி எதிர்காலம் வளமாக இருக்கத்தேவை. புலம்பெயர் நாடுகளில் தமிழ்மொழியை வைத்து ஒரு ஆணியும் பிடுங்கமுடியாது என்பதால் தமிழ்மொழி கட்டாயம் பிள்ளைகளுக்குத் தேவை இல்லை. பெற்றோர் தமிழைப் பேச, படிக்க வைக்க சிறுவயதில் முனையலாம். ஆனால் நிர்ப்பந்திக்கமுடியாது.

ஆர்வம் இருப்பவர்கள் கவின்கலைகளில் ஈடுபடுவதுபோல, அவர்களுக்கு விருப்பம் இருந்தால் கற்றுக்கொள்வார்கள். தமிழில் பேச பல பிள்ளைகளால் முடிந்தாலும், தமிழ்ப் படங்களைப் பார்த்து புரிந்துகொண்டாலும், தமிழில் ஒரு கட்டுரை, கதை எழுதுவது விரல்விட்டு எண்ணக்கூடியவர்களால்தான் முடியும்.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

ஏன் தமிழில் ஈடுபாடு உள்ளவன் தமிழைப் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கவில்லை என்று கேட்டால் நான் ஆபிரிக்காவில் நின்றபோது எனது அப்பா எனக்கு கடிதத்தில் சொன்னதுதான் பதில்!

பாம்பு தின்னும் ஊருக்கு சென்றால் நடுமுறி எனக்கென வாழவேண்டும்”

இங்கு யாரும் அந்தந்த நாட்டு மொழியை படிக்கக்கூடாது என்று சொல்லவில்லையே?
அவர்கள் பிள்ளைகளை தமிழர்களுடன் தமிழிலையே சரளமாக உரையாடும் அளவிற்காவது தமிழை பழக்கிவிடுங்கள் என்றுதான் சொல்கிறோம்.


யாழ்கள வீழ்ச்சிக்கும் தமிழ் மொழி பற்றாக்குறையும் ஒரு காரணம் என நான் நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/6/2022 at 20:08, குமாரசாமி said:

ஒரு வயது மட்டும் கட்டாய படிப்பு அவசியம். அதிலும் தாய் மொழி என்பது எழுத படிக்க வேண்டியது அவசியம் ஒவ்வொரு தமிழ் பிள்ளைகளும் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு பெற்றோர் அவசியம் வற்புறுத்தி கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் வளர்ந்த பின் தமிழை தொடர்வதும் தொடராமல் விடுவதும் அவர்கள் பிரச்சனை.

புலம்பெயர் நாட்டில் பிறந்த பிள்ளைகளின் தாய்மொழி தமிழ் இல்லை. தாய்மொழி என்பது தாய் பேசும் மொழி இல்லை. அவர்களுக்கு இயல்பாக வரும் மொழி. உதாரணமாக உங்கள் கனவில் வரும் உரையாடல்களில் வரும் மொழி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது/எமது சந்ததியுடன் பொதுவெளியில் தமிழ் செத்துப்போகும்.

  • Sad 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.