Jump to content

கனடாவில் தமிழரான பொலிஸ் அதிகாரி விபத்தில் பலி – அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் தமிழரான பொலிஸ் அதிகாரி விபத்தில் பலி – அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகள்

22-62ab72e5cef9f-300x200.jpgகனடாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்களில் விபத்தில் பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றிய இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர். 28 வயதான விஜயாலயன் மதியழகன் என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கனடிய இராணுவத்தில் பல வருடங்கள் பணியாற்றிய நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொலிஸ் சேவையில் இணைந்துகொண்டுள்ளார்.

மதியழகன் எப்போதும் நல்ல மனநிலையில் இருந்துள்ளார்

விபத்தை அடுத்து உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“மிகவும் சோகத்துடன், எங்கள் உறுப்பினர்களில் ஒருவர் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துவிட்டார் என்பதை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்” என்று ஒட்டாவா காவல்துறை புதன்கிழமை காலை ட்வீட் செய்துள்ளது.

மதியழகன் எப்போதும் நல்ல மனநிலையில் இருந்ததாகவும், அவர் புன்னகையுடன் இருந்ததாகவும் சக ஊழியர்கள் கூறுகின்றனர். மதியழகன் இலங்கையில் பிறந்து ஒட்டாவாவில் வளர்ந்தார், அவரது குடும்பத்தில் இளைய பிள்ளையாவார்.

அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்ட கொடிகள்

எவ்வாறாயினும், இந்த விபத்து அவர் கடமையில் இல்லாதபோது நிகழ்ந்ததாக ஒட்டாவா பொலிஸார் இன்று காலை அறிவித்துள்ளனர்.

இவரது மறைவு காரணமாக அனைத்து ஒட்டாவா காவல்துறை கட்டிடங்களிலும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன. விபத்து தொடர்பில் ஒன்ராறியோ மாகாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கனடாவில் தமிழரான பொலிஸ் அதிகாரி விபத்தில் பலி - அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகள்                                      

கனடாவில் தமிழரான பொலிஸ் அதிகாரி விபத்தில் பலி – அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகள் – குறியீடு (kuriyeedu.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களது சமூகத்தில் இந்த மாதிரி துறைகளில் ஈடுபடுபவர்கள் மிகவும் குறைவு.. அவர்களும் கூட தங்களது திறமைகளை வெளிப்படுத்தியும், சமூகத்திற்கு முன் உதாரணமாகவும் திகழ வேண்டிய நேரத்தில் பாதியில் உலகில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டுவிடுகிறார்கள்.. கவலையான ஒரு சம்பவம்.. 

ஆழ்ந்த அனுதாபங்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

எங்களது சமூகத்தில் இந்த மாதிரி துறைகளில் ஈடுபடுபவர்கள் மிகவும் குறைவு.. அவர்களும் கூட தங்களது திறமைகளை வெளிப்படுத்தியும், சமூகத்திற்கு முன் உதாரணமாகவும் திகழ வேண்டிய நேரத்தில் பாதியில் உலகில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டுவிடுகிறார்கள்.. கவலையான ஒரு சம்பவம்.. 

மிகவும் சரியாக சொல்லியுள்ளீர்கள்.

ஆழ:ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.......!

Link to comment
Share on other sites

9 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

எங்களது சமூகத்தில் இந்த மாதிரி துறைகளில் ஈடுபடுபவர்கள் மிகவும் குறைவு.. அவர்களும் கூட தங்களது திறமைகளை வெளிப்படுத்தியும், சமூகத்திற்கு முன் உதாரணமாகவும் திகழ வேண்டிய நேரத்தில் பாதியில் உலகில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டுவிடுகிறார்கள்.. கவலையான ஒரு சம்பவம்.. 

ஆழ்ந்த அனுதாபங்கள்

இதில் எடுபடுவதும் கஸ்டம் என்று சொல்கிறார்கள். யாழ்கள "கலைஞன்" பல தேர்வுகளில் தெரிவாகி இறுதியில் தட்டி விட்டார்கள் என யாழ்களத்தில் எங்கேயோ எழுதிய நினைவு.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

இதில் எடுபடுவதும் கஸ்டம் என்று சொல்கிறார்கள். யாழ்கள "கலைஞன்" பல தேர்வுகளில் தெரிவாகி இறுதியில் தட்டி விட்டார்கள் என யாழ்களத்தில் எங்கேயோ எழுதிய நினைவு.

உண்மை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

இதில் எடுபடுவதும் கஸ்டம் என்று சொல்கிறார்கள். யாழ்கள "கலைஞன்" பல தேர்வுகளில் தெரிவாகி இறுதியில் தட்டி விட்டார்கள் என யாழ்களத்தில் எங்கேயோ எழுதிய நினைவு.

தேர்வுகள் கஷ்டமாக இருக்கலாம்.. அதனால்தான் எங்கேயாவது அருமையாக வருபவர்களும் இல்லாமல் போகும் பொழுது கஷ்டமாக உள்ளது.. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nunavilan said:

இதில் எடுபடுவதும் கஸ்டம் என்று சொல்கிறார்கள். யாழ்கள "கலைஞன்" பல தேர்வுகளில் தெரிவாகி இறுதியில் தட்டி விட்டார்கள் என யாழ்களத்தில் எங்கேயோ எழுதிய நினைவு.

ஜேர்மனியில் இங்கே பிறந்த எம் இளைஞர்கள் யுவதிகள் பலர் காவல்துறையில் பணியாற்றுகின்றார்கள்.
-----------------------------------------
ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎21‎-‎06‎-‎2022 at 01:11, nunavilan said:

இதில் எடுபடுவதும் கஸ்டம் என்று சொல்கிறார்கள். யாழ்கள "கலைஞன்" பல தேர்வுகளில் தெரிவாகி இறுதியில் தட்டி விட்டார்கள் என யாழ்களத்தில் எங்கேயோ எழுதிய நினைவு.

இங்கு காவல்துறையில் தமிழர்கள் குறிப்பாய்  பெண்கள் வேலை செய்கிறார்கள் ...கலைஞ்ன் முயற்சித்தது விமானப் படையில் சேருவதற்கு   என்று நினைக்கிறேன் 
 
  • Like 1
Link to comment
Share on other sites

காவல்துறை அதிகாரி மதியழகன் விஜயாலயன் அவர்களின் இறுதி நிகழ்வு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 "காலம்" ஆகிய காவல்துறையின் தனது வீரருக்கு இறுதிவணக்க நிகழ்வில் மிகவும் சிறப்புடன் கலந்துகொண்டு பங்காற்றியமைக்கும் இறுதி வணக்கம் செய்தமைக்கும் அனைத்துத் தமிழனத்தினதும் சார்பில் எமது நன்றியையும் வணக்கத்தையும் உரித்துடையதாக்குகிறோம்.

கனடா தேசம் தனது நாட்டின் மக்களுக்குப் பல்வேறு தருணங்களில் எப்படி மதிப்பளிக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

நன்றி. 
அந்தக் கனடாவின் காவல்துறை வீரனுக்கு எனது இறுதி வணக்கம்.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.