Jump to content

நெருக்கடியிலிருந்து வெளியே வருவதற்கான வழி?


Recommended Posts

நெருக்கடியிலிருந்து வெளியே வருவதற்கான வழி?

 

 

 
  • அனைத்துக் கட்சிகளின் மத்தியில் தாமதமின்றி கருத்தொருமைப்பாடு எட்டப்பட வேண்டும்

__________________
விக்டர் ஐவன்
__________________

இலங்கை இந்தத் தருணத்தில் தற்போது இருக்கும் நிலையிலிருந்து மிகவும் பயங்கரமான படுகுழியில் விழுந்துவிடும் விளிம்பில் உள்ளது. எனவே அது தற்போதைய பாதாளத்திலிருந்து மேலும் கீழிறங்குவதைத் தடுப்பதற்காக, பொருத்தமானதும் உடனடியானதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், நாடு தவிர்க்க முடியாமல் புராதன கால நிலையிலிருந்து மீள்வது எளிதானது அல்ல. ஆனால், அரசியல் அமைப்பு மற்றும் தற்போதைய ஆட்சியில் மாற்றம் வேண்டும் என்று கோரும் மற்றும் வாதிடும் ஆக்ரோஷமான சக்திகளும் சமூகமும் இலங்கை எதிர்கொள்ளும் பயங்கரமான யதார்த்தத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

image_135c9d9923-300x165.jpg
ஆளும் கட்சியை உடனடியாக மாற்ற முடியாது என்ற அசாதாரணமான அரசியல் சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது. ஊழல் மற்றும் முன்னேற்றமற்ற சக்தி என்று முத்திரை குத்தி அதை ஆதரிப்பதைத் தவிர்ப்பதற்கு இது சரியான நேரம் அல்ல. ஊழல் மற்றும் அற்புதமான பிம்பத்தைப் பொருட் படுத்தாமல் ஆளும் கட்சியுடன் கைகோர்ப்பது ஒரு சிறந்த தருணமாகப் பார்க்கப்படுகிறது.

நாடு இப்போது இருக்கும் படுகுழியிலிருந்து மீட்கப்பட வேண்டும். அதே சமயத்தில் அது அடுத்த அடுக்கில் விழுவதைத் தடுக்கிறது. விளைவுகள் மோசமாக இருக்கலாம். இச்சூழ்நிலையில், முறையான மாற்றம் மற்றும் ஆட்சி மாற்றம் போன்ற எதுவும், மேலே குறிப்பிட்டுள்ள அடிப்படை நோக்கத்தை சமரசம் செய்யாமல் இந்தக் குறிப்பிட்ட தருணத்தில் இலங்கை பொறுத்துக் கொள்ளக்கூடிய சட்டபூர்வமான அரசியலமைப்பு ரீ தியான கட்டமைப்புக்குள் இடம்பெற வேண்டும்.

‘மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்கம்’, நாம் தற்போது இருக்கும் நெருக்கடியின் குறிப்பிட்ட கட்டத்தை கருத்தில் கொண்டு தனது சீர்திருத்த திட்டத்தை வடிவமைத்துள்ளது. பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் கீழ் கொண்டு வரப்படும் வகையில் இடைக்கால கட்டமைப்பானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டமைப்பானது, அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து சென்மதி நிலுவை நெருக்கடியைத் தீர்ப் பதற்கு செயற்பட முடிவதுடன் அதே சமயம் முறைமையில் ஆழமான மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மறுசீரமைப்புத்திட்டம் இரண்டு கட்டங்களில் செயல்படுத்தப்படலாம்.

முன்மொழியப்பட்ட சீர்திருத்தத் திட்டம், நெருக்கடியைத் தீர்ப்பதற்கு முன்கூட்டியே தேர்தலை நடத்துவது இன்றியமையாத நிபந்தனையாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு இரண்டு கட்டங்களாக அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிரகாரம் , நாட்டுக்குப் பொருத்தமான ஆட்சி முறையைத் தீர்மானித்த பின்னர், சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்குத் தேவையான தேர்தல் சட்டங்களை இயற்றுவதும், பின்னர் பாராளுமன்றத்துக்கு மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்துவதும் திட்டத்தின் முதல் கட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய மிக முக்கியமான அம்சமாகும். அரசியலமைப்பு உருவாக்கக் குழுவுக்கும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலாகவும் இது இருக்க வேண்டும்.

50 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 பொதுமக்கள் அடங்கிய அரசியலமைப்பு உருவாக்கக் குழு, முழு சீர்திருத்தத் திட்டத்தைத் திட்டமிடுதல், தேவையான வரைவுகளை உருவாக்குதல் மற்றும் முதல் கட்டத்தில் இறுதி வரை அறிமுகப்படுத்தப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் ஆகியவற்றுக்கான அதிகாரசபையாகச் செயற்படும். இரண்டாவது கட்டத்துக்கான மறுசீரமைப்புத் திட்டத்தை திட்டமிடுதல் மற்றும் வரைவு செய்யும் பொறுப்பும் அதே குழுவிடம் ஒப்படைக்கப்படும். தேர்தலுக்குப் பிறகு ஆட்சிக்கு வரும் அரசாங்கமும் பாராளுமன்றமும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயமான சட்டப்பூர்வ கடப்பாடாக இது இயற்றப்படும்.

மறுசீரமைப்புத் திட்டத்தின் முதல் கட்டம் ஒரு வருடத்துக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். மேலும் இரண்டாவது கட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும் ஏனைய சீர்திருத்தங்கள், ‘பங்கேற்பு அரசியல மைப்பு உருவாக்கம்’ உட்பட மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவு செய்யப் பட வேண்டும். ஆட்சிக்கு வரும் அரசாங்கம் எதுவாக இருந்தாலும் மறுசீரமைப்பு திட்டம் முடியும் வரை அனைத்துக் கட்சி அரசாங்கம் இருக்க வேண்டும்.

யதார்த்த பூர்வமாக்குதல்

மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் முன்மொழிவுகள் இலங்கைக்குத் தேவையான சீர்திருத்த வேலைத்திட்டத்தின் பரிமாணத்தை புரிந்துகொள்வதற்கான ஒரு மாதிரியாக மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளன. அதிலுள்ள பிரேரணைகளை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்பதை வலியுறுத்தும் நோக்கில் அல்ல. இது மக்கள் பங்கேற்பின் சீர்திருத்தத் திட்டமாகும். எனவே, முன்மொழிவுகளை முன்வைக்க மக்களுக்கு உரிமை உள்ளது. முழுத் திட்டமும் வெளிப்படைத் தன்மையுடனும், பொதுமக்கள் தீவிரமாக ஈடுபடும் வகையிலும் செயற்படுத்தப்படும்.

இந்த வேலைத்திட்டம் (அ) இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியைத் தீர்க்க அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான உறுதியான அடித்தளத்தை வழங்குகிறது. (ஆ) இந்தச் சீர்திருத்தத் திட்டம் இந்த நேரத்தில் சர்வதேச உதவியைப் பெறுவதற்கான உறுதியான அடித்தளத்தை இலங்கைக்கு வழங்குகிறது. (இ) தீங்கான மற்றும் குழப்பமான முறைமையில் ஆழமான மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு வலுவான அரசியலமைப்பு கட்டமைப்பையும் இது வழங்குகிறது. (ஈ) கறுப்புப் பணம் இல்லாமல் போட்டியிடக்கூடிய முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கான இடத்தை இது வழங்கும் (இ) பிளவுபட்ட தேசத்தை ஒருங்கிணைத்து சமத்துவக் கொள்கையின் அடிப்படையில் நவீன தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான உறுதியான அடித்தளத்தை இது வழங்குகிறது. (உ ) சட்டத்தின் ஆட்சியின் அடிப்படையில் ஒரு புதிய ஆட்சி முறையையும், பொதுமக்கள் பங்கேற்பின் அடிப்படையில் ஒரு நவீன அரசியலமைப்பையும் உருவாக்க இது வாய்ப்பளிக்கும்.

உத்தேச மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துக்கு முதலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒப்புதல் அளித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வுடன் ஜூன் 10ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில், அவர் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி, ஜூன் 13ஆம் திகதி அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த விரிவான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்தார். ஜூன் 13 கூட்டத்தில் ஐக்கியமக்கள் சக்தியின் உத்தியோகபூர்வ படிநிலையை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும், எதிர்க்கட்சி கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள் மற்றும் பாரா ளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் கலந்து கொண்டனர்.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய எதிர்க்கட்சிகளில் சம்பிக்க ரணவக்க மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் மாத்திரமே பிரசன்னமாகியிருக்கவில்லை. சுமார் நான்கு மணி நேரம் நீடித்த இந்த விவாதம் உற்சாகமாக நடந்தது. சீர்திருத்தத் திட்டம் மற்றும் அத்தகைய திட்டத்தைக் கொண்டிருப்பதன் அவசியத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். கால தாமதமின்றி அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

அரசியலமைப்பில் ஆழமானதும் சாதகமானதுமான மாற்றத்தைக் கொண்டு வரும் விரிவான கட்டமைப்பு மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்காக நாட்டை வழிநடத்துவதன் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதை நோக்கி இலங்கை நகர்வதாகத் தெரிகிறது. இது ஒரு மிக முக்கியமான போக்கு என்று சொல்லத் தேவையில்லை. ஜே.வி.பி., 43 ஆவது படையணி (பிரிகேட்), ஸ்ரீ.ல.சு.க மற்றும் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு குழுக்களுடன் இது பற்றி கலந்துரையாடுவதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். காலதாமதமின்றி அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும்.

இந்த நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டின் மூன்று முக்கிய தூண்களாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் உருவாக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து.அரசின் தலைவரான ஜனாதிபதியே அரசின் அனைத்து விவகாரங்களையும் கண்காணிக்கும் அதிகாரம் படைத்தவராக இருக்க வேண்டும். சென்மதி நிலுவை நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் விவகாரங்களை மேற்பார்வையிடும் அதிகாரியாக பிரதமர் இருக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் மறுசீரமைப்பு த் திட்டத்தைக் மேற்பார்வை செய்யும் அதிகாரம் கொண்டவராக இருக்க வேண்டும்.

இத்தகைய கலவையானது நாட்டை ஐக்கியப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், நாடு அதன் தற்போதைய படுகுழியிலிருந்து வெளிப்படுவதற்கு ஓர் உறுதியான அடித்தளத்தை வழங்கும். இது மோசமான சூழ்நிலையாக இருக்கக்கூடிய அடுத்த கட்டத்துக்கு விழுவதைத் தடுக்கும். இறுதியில், இளைய தலைமுறையினரின் கோரிக்கைகள் கடுமையான வழிமுறைகளில் அல்லாமல் , சுமுகமான அரசியலமைப்பு ரீதியான கட்டமைப்பின் மூலம் நாடு வென்றெடுக்கக்கூடிய ஒன்றாக மாறும்.

பினான்சியல் டைம்ஸ்

https://thinakkural.lk/article/184601

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.