Jump to content

போரில் புதைத்த மண்ணெண்ணெய் பொங்கியது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போரில் புதைத்த மண்ணெண்ணெய் பொங்கியது

image_ec1ee07108.jpg

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு  உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் தனியார் காணியொன்றை மே. 31ஆம் திகதியன்று துப்பரவு செய்யும் போது   நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்த பெரல்கள் சில இனம் காணப்பட்டன.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தமைக்கு அமைய இன்று (20) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கு அமைய தோண்டப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் பொலிஸ் அதிகாரிகள், படைஅதிகாரிகள், கிராமசேவையாளர் முன்னிலையில் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது நிலத்தில புதைக்கப்பட்ட 7 பெரல்கள் மீட்கப்பட்டுள்ளன அதில் எரிபொருட்கள் இருப்பது இனம்காணப்பட்டுள்ள நிலையில் அவை மண்ணெண்ணெய் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவ்வாறு 7 பெரல்களில் இருந்தும் 715 லீற்றர் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும்  முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நாளை (21) முன்னிலைப்படுத்த   நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

கந்தசாமி என்பவரின் காணியில் இருந்தே இந்தப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன 

தோட்டம் செய்வதற்காக வீட்டு காணியின் பின்பக்கத்தில் கனரக இயந்திரம் கொண்டு துப்பரவு செய்து, பனை மரத்தினை அகற்றும் போது அதில் நிலத்தில் பெரல் இனங்காணப்பட்டுள்ளது.

  இவற்றை யார் வைத்தார்கள் என்பது தொடர்பில் எங்களுக்குத் தெரியாது எனத் தெரிவித்துள்ள கந்தசாமி, போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது 2009 ஆம் ஆண்டு கடைசியில் நாங்கள் இடம்பெயர்ந்து போய்விட்டோம் என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது 2011 ஆம் ஆண்டு மீள்குடியேறினோம். எங்கள் காணியில் எதுவித பொருட்களும் இனம்காணப்படவில்லை விவசாய நடவடிக்கைக்கு நிலத்தினை பண்படுத்தும் போதே இவை தென்பட்டுள்ளன என்றார்.

 

image_b72c528799.jpgimage_521322585b.jpgimage_73dc041729.jpgimage_683aaae404.jpg

 

https://www.tamilmirror.lk/வன்னி/போரில்-புதைத்த-மண்ணெண்ணெய்-பொங்கியது/72-298878

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மக்களுக்காக போராடினவங்கடையையாவது பதுக்காமல் மக்களுக்கு குடுங்கோ...!

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

மக்களுக்காக போராடினவங்கடையையாவது பதுக்காமல் மக்களுக்கு குடுங்கோ...!

இத்தனை வருடங்களின் பின்னர் இவை அதன் எரிபற்று நிலையை இழந்ததன் காரணமாக  பயனற்றதாகிவிடும் என நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
4 minutes ago, Kapithan said:

இத்தனை வருடங்களின் பின்னர் இவை அதன் எரிபற்று நிலையை இழந்ததன் காரணமாக  பயனற்றதாகிவிடும் என நினைக்கிறேன். 

ஓம்..

எரிபற்று நிலையை இழக்க 4- 5 ஆண்டுகள் ஆகுமென்கிறது கூகிள். 13 ஆண்டுகள் ஆகிவிட்டதால் எனவே முற்றாக இழந்திருக்கலாம் என எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர் காலத்தில் புதைக்கப்பட்ட 7 பரல் மண்ணெண்ணெய் மீட்பு

போர் காலத்தில் புதைக்கப்பட்ட 7 பரல் மண்ணெண்ணெய் மீட்பு

போர் நடைபெற்ற காலப்பகுதியில் புதைக்கப்பட்ட 7 பரல்களில் 715 லீற்றர் மண்ணெண்ணெய் முல்லைத்தீவு உடையார் பகுதியில் அமைந்துள்ள தனியார் காணி ஒன்றில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் தோட்டம் செய்வதற்காக உரிமையாளரால் காணியை கனரக இயந்திரம் மூலம் பண்படுத்தப்பட்டபோதே நிலத்தில் புதைக்கப்பட்ட பரல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமையை அடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைய குறித்த பகுதியை தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_9504-600x338.jpg

https://athavannews.com/2022/1287881

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன தலைப்பு பொங்கியது.வித்தியரின் காலைக்கதிர் தலைப்புகள் மாதிரி 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.