Jump to content

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பக்திகா மாகாணத்தில் குறைந்தது 250 பேர் பலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பக்திகா மாகாணத்தில் குறைந்தது 250 பேர் பலி

32 நிமிடங்களுக்கு முன்னர்
 

ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,AFGHAN GOVERNMENT NEWS AGENCY

ஆப்கானிஸ்தான் பக்திகா மாகாணத்தில் நிகழ்ந்த வலுவான நிலநடுக்கத்தில் குறைந்தது 250 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பக்திகா மாகாணத்தில் வீடுகள் இடிந்துகிடப்பதையும், காயமடைந்தவர்கள் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்படுவதையும் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.

250 பேர் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டதாகவும், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் ஓர் உள்ளூர் அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார். சுமார் 150 பேர் காயமடைந்துள்ளனர்.

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தூரத்தில் இந்த நிலநடுக்கம் நடந்துள்ளது.

 

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்

பட மூலாதாரம்,AFGHAN GOVERNMENT NEWS AGENCY

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைகளுக்குள் சுமார் 500 தூரத்துக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது என ஐரோப்பிய மத்தியத்தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் கூறியதாக ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அதை நேரில் உணர்ந்தவர்களை மேற்கோள் காட்டி அந்த மையம் கூறியுள்ளது.

https://www.bbc.com/tamil/global-61891443

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பக்திகா மாகாணத்தில் குறைந்தது 1000 பேர் பலி, 1500 பேர் காயம்

22 ஜூன் 2022, 05:43 GMT
புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்
 

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு வீடு.

பட மூலாதாரம்,@ALHAM24992157

 

படக்குறிப்பு,

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு வீடு.

ஆப்கானிஸ்தான் பக்திகா மாகாணத்தில் நிகழ்ந்த வலுவான நிலநடுக்கத்தில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 1000ஆக உயர்ந்துள்ளது.

பக்திகா மாகாணத்தில் வீடுகள் இடிந்துகிடப்பதையும், காயமடைந்தவர்கள் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்படுவதையும் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.

பக்திகா மாகாணத்தின் அரசு செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் பேசும்போது, 1000 பேர் இறந்ததாகவும், 1500 பேர் காயமடைந்ததாகவும், மேலும் இந்த எண்ணிக்கை உயரும் என்றும் கூறினார்.

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தூரத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:30 மணிக்கு இந்த நிலநடுக்கம் நடந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் 7,000 பேருக்கும் மேலானவர்கள் அங்கு நிலநடுக்கம் காரணமாக இறந்துள்ளனர் என்று ஐநாவின் மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்பு அலுவலத்தின் தரவுகள் கூறுகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 560 பேர் நிலநடுக்கத்தால் இறந்துள்ளனர்.

 

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்

பட மூலாதாரம்,AFGHAN GOVERNMENT NEWS AGENCY

இந்தியா, பாகிஸ்தானிலும் உணரப்பட்ட அதிர்வு

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைகளுக்குள் சுமார் 500 தூரத்துக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது என ஐரோப்பிய மத்தியத்தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அதை நேரில் உணர்ந்தவர்களை மேற்கோள் காட்டி அந்த மையம் கூறியுள்ளது.

"துரதிஷ்டவசமாக கடந்த இரவு பக்திகா மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான ஆப்கன் மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் பல வீடுகளையும் அழித்துள்ளது." என அரசு செய்தி தொடர்பாளர் பிலால் கரிமி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,AFGHAN GOVERNMENT NEWS AGENCY

"மேலும் பேரழிவு ஏற்படாமல் தடுப்பதற்கு, உதவி முகமைகள் தங்களின் குழுக்களை அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

நிலநடுக்கத்தின் தீவிரம் என்ன?

காபூலில் இருந்து 182 கி.மீ. தொலைவிலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 334 கி.மீ. தொலைவிலும், இந்திய நிர்வாகத்தில் உள்ள ஜம்மு காஷ்மீரின் ரஜௌரியில் இருந்து 445 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் 6.1 அளவில் பதிவானதாக இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்திய நேரப்படி ஜுன் 22-ம் தேதி அதிகாலை 2.24 மணிக்குப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையம் பாகிஸ்தானில் இடம் பெற்றதாகவும் குறிப்பிடுகிறது அந்த நிலநடுக்கவியல் மையம்.

 

Destroyed buildings

பட மூலாதாரம்,AFGHANISTAN INFORMATION SERVICE

ஆனால், பாகிஸ்தானில் சேதம் ஏதும் இருந்ததாக உடனடியாக செய்தி இல்லை என்கிறது பிபிசி உருது.

"நானும், குழந்தைகளும் அலறினோம்"

நள்ளிரவு தாண்டி நடந்த நிலநடுக்கம் ஏற்படுத்திய அழிவு குறித்து, உள்ளூர் மக்கள் ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் பகிர்ந்துகொண்டனர்.

"எங்கள் வீட்டின் அறை ஒன்று இடிந்து விழுந்தது. நானும் குழந்தைகளும் அலறினோம்," என்று பாத்திமா என்பவர் கூறினார்.

 

ஆப்கானிஸ்தான் நிலநடுக்க வரைபடம்.

"எங்கள் பக்கத்து வீடுகள் தரைமட்டமாகின. அந்த வீடுகளில் இருந்தோர் அலறினர். அவர்கள் அறைகள் எல்லாம் வெளியே தெரிந்தன" என்கிறார் ஃபைசல். "நாங்கள் சென்று பார்த்தபோது பலர் இறந்திருந்தனர். பலர் காயமடைந்திருந்தனர். நானே பல சடலங்களைப் பார்த்தேன்" என்கிறார் அவர்.

பக்திகா மாகாணத்தின் கயான், பர்மல் மாவட்டங்களில்தான் பெரும்பாலான இழப்புகள் ஏற்பட்டுள்ளன என உள்ளூர் மருத்துவர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

கயான் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஒன்று முழுதாக அழிந்துவிட்டதாக உள்ளூர் செய்தித்தளமான எடிலாட்- இ- ரோஜ் (Etilaat-e Roz) தெரிவிக்கிறது.

51 கி.மீ. ஆழத்தில் 6.1 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கவியலாளர்கள் கூறுகின்றனர்.

https://www.bbc.com/tamil/global-61891443

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Afghanistan Earthquake Update: குறைந்தது 920 பேர் மரணம்; 600 பேர் காயம் - Full Details

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000ஐ கடந்தது!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000ஐ கடந்தது!

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000ஐத் தொட்டுள்ளது.

மேலும், 1,500பேர் காயமடைந்தனர் மற்றும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான பக்திகா மாகாணத்தில் உள்ள உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் காபூல் மற்றும் கார்டெஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று பக்திகா தகவல் மற்றும் கலாச்சார இயக்குனர் முகமது அமின் ஹொசைஃபா தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் ஊடகங்களில் உள்ள புகைப்படங்கள், வீடுகள் இடிந்து தரைமட்டமாகி, போர்வைகளில் உடல்கள் தரையில் கிடப்பதைக் காட்டியது.

ஹெலிகொப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, காயமடைந்தவர்களைச் சென்றடையவும், மருத்துவப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உட்துறை அமைச்சக அதிகாரி சலாவுதீன் அயூபி தெரிவித்தார்.

2002 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும். இது தென்கிழக்கு நகரமான கோஸ்டில் இருந்து சுமார் 44 கிமீ (27 மைல்) தொலைவில் பாகிஸ்தானின் எல்லைக்கு அருகில் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளில் பெரும்பாலானவை கிழக்கு மாகாணமான பக்திகாவில் இருந்தன. அங்கு 255பேர் உயிரிழந்தனர் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கோஸ்ட் மாகாணத்தில், 25பேர் இறந்தனர் மற்றும் 90பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆளும் தலிபான் கட்சியின் தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்சாதா தனது இரங்கலை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1288237

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கன் நிலநடுக்கம்: உணவோ, தங்குமிடமோ இல்லாமல் தவிக்கும் மக்கள்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

பர்மால் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள்

 

படக்குறிப்பு,

பர்மால் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள்

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தில் தப்பிப் பிழைத்தவர்கள், சாப்பிட எதுவுமில்லை, தங்க இடமில்லை, காலரா தொற்று பரவக்கூடிய அபாயம் இருப்பதாகக் கூறுகிறார்கள். பிபிசியின் செகந்தர் கெர்மானி, நிலநடுக்கத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பக்திகா மாகாணத்தில் இருந்து செய்திகளை வழங்கி வருகிறார்.

தனது குடும்ப வீட்டில் மிச்சமிருக்கும் இடிபாடுகளுக்கு இடையே கண்ணீரோடு ஆகா ஜான் தேடிக் கொண்டிருந்தார்.

"இதெல்லாம் என் மகனின் காலணிகள்," என்று அவற்றிலிருந்த தூசுகளைத் தட்டிவிட்டபடி கூறினார். அவருடைய மூன்று இளம் குழந்தைகளும் இரண்டு மனைவிகளும் உறங்கிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தனர்.

புதன்கிழமை அதிகாலை வேளையில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, ஆகா ஜான் அவருடைய குடும்பத்தினர் தங்கியிருந்த அறையை நோக்கி வேகமாக ஓடினார்.

"அனைத்தும் இடிபாடுகளுக்கு அடியில் கிடந்தன. என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. என் உறவினர்களை உதவிக்கு அழைத்தேன். ஆனால், என் குடும்பத்தினரை நாங்கள் வெளியே எடுத்தபோது, அவர்கள் உயிரிழந்திருந்தனர்."

பக்திகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில், ஆகா ஜானின் கிராமம் அமைந்திருக்கும் பகுதி, நிலநடுக்கத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று. அதில், சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் 3,000 பேர் காயமடைந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

அருகிலுள்ள பெரிய நகரத்திற்குச் செல்ல, பெரும்பாலும் மோசமான நிலையிலிருக்கும் சாலைகளில் மூன்று மணி நேரம் பயணிக்க வேண்டும். தொலைதூரத்தில் இருக்கும் இடம் என்பதால் காயமடைந்தவர்களைக் கொண்டு செல்வதும் மிகக் கடினமாகிறது. சிலர் தாலிபன்களின் ராணுவ ஹெலிகாப்டர்களில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

பொதுவாக மண் மற்றும் கல்லால் கட்டப்பட்ட கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீடும் மோசமாகச் சேதமடைந்து காணப்படுகிறது. ஏறக்குறைய ஒவ்வொரு குடும்பமும் யாராவது ஒருவரையேனும் இழந்து துக்கப்படுவதைப் போல் தெரிகிறது.

ஹபீப் குல், பாகிஸ்தானிலுள்ள கராச்சி நகரின் எல்லையைத் தாண்டி கூலி வேலை செய்து கொண்டிருந்தார். நிலநடுக்கம் குறித்த செய்தியை அறிந்ததும் அவர் பர்மாலில் இருக்கும் தனது கிராமத்திற்கு விரைந்தபோது, அவருடைய உறவினர்களில் 20 பேர் பலியாகியிருந்தனர். அதில் 18 பேர் ஒரே வீட்டில் பலியாகினர்.

 

தனது குடும்பத்தில் எஞ்சியிருக்கும் உறுப்பினர்களோடு ஆகா ஜான்(இடதுபுறம்)

 

படக்குறிப்பு,

தனது குடும்பத்தில் எஞ்சியிருக்கும் உறுப்பினர்களோடு ஆகா ஜான்(இடதுபுறம்)

"யாருடைய பெயர்களை நான் உங்களுக்குக் கொடுப்பேன்? மூன்று சகோதரிகள், என் மருமகள், என் மகள், சிறு குழந்தைகள் என்று என் உறவினர்களில் பலர் உயிரிழந்துவிட்டார்கள்.

நாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு கிராமவாசிகளும் தங்கள் வீட்டிற்கு ஏற்பட்ட அழிவைக் காட்ட விரும்புகிறார்கள். இந்தப் பேரழிவை உலகம் காண விரும்புவதால்,

நாம் சந்திக்கும் ஒவ்வொரு கிராமவாசிகளும் தங்கள் வீட்டிற்கு அழிவை காட்ட விரும்புகிறார்கள். அதற்கு ஒரு காரணம், இந்தப் பேரழிவை உலகம் காண வேண்டும். மற்றொரு காரணம், உதவி விநியோகப் பட்டியலில் தங்கள் பெயர்கள் சேர்க்கப்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

"உலகம் எங்களை சகோதரர்களாகப் பார்த்து எங்களுக்கு உதவி செய்தால், நாங்கள் இங்கு எங்கல் நிலத்தில் இருப்போம். இல்லையென்றால், கண்ணீரோடு இவ்வளவு காலம் வாழ்ந்த இந்த இடத்தை விட்டு வெளியேறுவோம்," என்று ஹபீப் குல் பிபிசியிடம் கூறினார்.

மேலே, ராணுவ ஹெல்காப்டர்கள் வானத்தில் சுழல்கின்றனர். அவர்கள் இனி காயமடைந்தவர்களைக் கொண்டு செல்வதில்லை. ஆனால் பொருட்களை வழங்குகிறார்கள். தாலிபன் அதிகாரிகள் எங்களிடம் மீட்பு நடவடிக்கை முடிந்துவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

 

ஹபீப் குல்

 

படக்குறிப்பு,

இடிபாடுகளில் வீழ்ந்துகிடக்கும் சுவர் ஒன்றிமீது அமர்ந்திருக்கும் ஹபீப் குல்

வீடுகளை இழந்து தவிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்குத் தங்குமிடம் என்பது மிக முக்கியமான தேவை.

ஆகா ஜானும் அவருடைய எஞ்சியிருக்கும் மகன்களில் ஒருவரும் ஒரு வெற்று நிலத்தில் மரக் குச்சிகளுக்கு இடையே ஒரு பெரிய தார்ப்பாய் போட்டுள்ளார்கள். மற்ற குடும்பங்கள், அவர்கள் மிகவும் கடினமாக உழைத்துக் கட்டிய வீடுகளின் எச்சங்களால் சூழப்பட்டிருக்கும் கூடாரங்களில் தங்கியுள்ளன.

காலித் ஜான் இப்போது தனது ஐந்து இளம் பேரக் குழந்தைகளுக்குப் பொறுப்பானவர். அவர்களுடைய தந்தை, அவருடைய மகன், காலித் ஜானின் மற்ற இரண்டு குழந்தைகள் ஆகியோர் நிலநடுக்கத்துக்குப் பலியாகினர்.

"அவர்களுக்கு எஞ்சியிருப்பது நான் தான்," என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார். மேலும், ஒரு கூடாரத்தின் கீழ் ஒரு பாரம்பர்ய படுக்கையின் மீது அமர்ந்திருந்தவர், "ஆனால், இங்குள்ள வீடுகள் உட்பட அனைத்துமே அழிக்கப்பட்டு விட்டன. என்னால் வீட்டை மீண்டும் கட்ட முடியாது," என்கிறார்.

 

நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்த குடும்பத்தினரோடு நிற்கும் தாத்தா காலித் ஜான்

 

படக்குறிப்பு,

நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்த குடும்பத்தினரோடு நிற்கும் தாத்தா காலித் ஜான்

ஆப்கானிஸ்தான் மற்றும் சர்வதேச உதவி நிறுவனங்கள் சேதங்களை மதிப்பீடு செய்து பொருட்களை வழங்குகின்றன. ஆனால், இதுவொரு பெரிய நெருக்கடி. நாடு ஏற்கெனவே மோசமான மனிதாபிமான நெருக்கடியில் இருக்கும் சூழலில் இது நிகழ்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் ஐக்கிய நாடுகள் சபை, காலரா பரவும் அபாயம் குறித்து எச்சரித்துள்ளது.

ஹபீப் குல் கிராமத்தில், உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து பிரார்த்தனை செய்ய ஆண்கள் கூடினர். சுமார் 250 பேரில் 50 பேர் பலியாகினர். இப்போது உயிர் பிழைத்தவர்கள் மீதும் அவர்களுக்கு எவ்வளவு விரைவாக உதவிகளைக் கொண்டு சேர்க்க முடியும் என்பதிலும் கவனம் திரும்பும்.

https://www.bbc.com/tamil/global-61922283

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.