Jump to content

அதிமுக-வில் என்ன நடக்கிறது? இபிஎஸ் - ஓபிஎஸ் சர்ச்சையில் இன்று


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக-வில் என்ன நடக்கிறது? இபிஎஸ் - ஓபிஎஸ் சர்ச்சையில் இன்று

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

இ பி எஸ் & ஓ பி எஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரால் கூட்டாக நிர்வகிக்கப்படும் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என்று எடப்பாடி ஆதரவாளர்கள் குரல் கொடுத்த நிலையில், அந்த யோசனைக்கு எதிர்ப்பைத் தெரிவித்துவருகிறார் ஓ.பன்னீர்செல்வம். இந்நிலையில், கட்சிக்குள் உரசல் சூழ்நிலை தீவிரமடைந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு அதிக எண்ணிக்கையிலான மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், அதிமுகவில் தற்போது சர்வாதிகார, அராஜகப் போக்கு நிலவுவதாகவும் "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும்" என்றும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

"மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளருமான திரு.கேசவன் அவர்கள் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த தருணத்தில், "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்".

இதே கருத்தை அவர், டிவிட்டரிலும் பகிர்ந்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த கருத்து அதிமுகவில் உரசல் தீவிர நிலையை எட்டியிருப்பதைக் காட்டுகிறது. நாளை ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடவுள்ள நிலையில் இந்த பரபரப்பு நிகழ்வுகள் அதிமுகவில் அரங்கேறி வருகின்றன.

https://www.bbc.com/tamil/india-61891437

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்.ஜி.ஆர் செய்த பெரும் தவறு ஜெயலலிதாவுடன் நடிப்பதுடன் நின்றிருக்கலாம்........கொடிநாட்ட வெளிக்கிட்டு இன்று அ .தி.மு.க கொடி அரைக்கம்பத்துக்கும் கீழ ஊசலாடுது........!  😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அ.தி.மு.க பொதுக்குழு, ஒற்றைத் தலைமை: ஓ.பி.எஸ்.க்கு உள்ள வாய்ப்புகள் என்னென்ன?

  • ஆ.விஜய் ஆனந்த்
  • பிபிசி தமிழுக்காக
53 நிமிடங்களுக்கு முன்னர்
 

அதிமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்டன. அ.தி.மு.கவின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பது உறுதியாகவிட்டதாக அ.தி.மு.க நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கான அடுத்தகட்ட வாய்ப்புகள் என்ன?

அ.தி.மு.கவில் அமைப்புரீதியாக உள்ள 75 மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்கள் உள்பட கீழ்மட்ட நிர்வாகிகளுக்கான உள்கட்சித் தேர்தல் நடைபெற்றது. இதனை பொதுக்குழுவில் வைத்து ஒப்புதல் பெறுவதற்காகவும் அப்போது நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானம் குறித்தும் கடந்த 14 ஆம் தேதி அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய வார்த்தைகள், சர்ச்சையை ஏற்படுத்தின.

தொடர்ந்து, ஜெயக்குமாரின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. "ஒற்றைத் தலைமை என்பது அம்மாவுக்கு செய்யும் துரோகம். அவர் மட்டுமே நிரந்தரப் பொதுச் செயலாளர்" என்றார் ஓ.பன்னீர்செல்வம். ஆனாலும், 'பொதுக்குழுவை நடத்தியே தீருவது' என்பதில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உறுதியாக இருந்தனர். அதற்கு முன்னோட்டமாக மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இதில், ஓ.பி.எஸ் தரப்புக்கு ஆதரவாக இருந்த மாவட்ட செயலாளர்களும் எடப்பாடி பழனிசாமி பக்கம் கொண்டு வரப்பட்டனர். இதனால் ஓ.பி.எஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையும் 12 என்பதில் இருந்து ஏழாகக் குறைந்ததாகக் கூறப்பட்டது. தொடர்ந்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜன், முன்னாள் எம்.பி மைத்ரேன், சென்னை அ.தி.மு.க தெற்கு-கிழக்கு மாவட்டச் செயலாளர் வேளச்சேரி அசோக் உள்ளிட்டவர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

தோல்வியில் முடிந்த முயற்சிகள்

இந்நிலையில், பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்குமாறு எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பி.எஸ் கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்தில் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கமும் கையொப்பமிட்டிருந்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. 'அவ்வாறு எழுதிய கடிதம் எதுவும் தங்களுக்கு வரவில்லை' என அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியிருந்தார்.

மேலும், 'பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை முன்மொழிந்தால் சட்டச் சிக்கல் ஏற்படும்' எனக் கூறி விரிவான கடிதம் ஒன்றையும் ஓ.பி.எஸ் தரப்பில் வெளியிட்டனர். இதற்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

 

அலுவலகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தச் சூழலில், 'பொதுக்குழு நடந்தால் சட்டம் ஒழுங்கு கெடும்' என ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்திலும் ஓ.பி.எஸ் மனு கொடுத்திருந்தார். ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி திருவேற்காடு காவல் நிலையம் சென்ற முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், 'உள் அரங்கில் கூட்டம் நடைபெறுவதால் சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதற்கு வாய்ப்பில்லை' எனக் கூறி, வானகரத்தில் நடக்கவுள்ள பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகள் குறித்து விவரித்தார்.

இதன் தொடர்ச்சியாக, ஓ.பி.எஸ் கொடுத்த மனுவையும் ஆவடி காவல் ஆணையரகம் நிராகரித்துவிட்டது. இதனால் பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்டன.

இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், 'அ.தி.மு.கவில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அம்மாவின் நினைவிடத்துக்குச் சென்ற தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட இணைச் செயலாளர் கேசவன், தீக்குளிக்க முயன்ற சம்பவம் எனக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும் என்பதை சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கான வாய்ப்புகள் என்ன?

இதையடுத்து, ''ஓ.பி.எஸ் முன்னுள்ள வாய்ப்புகள் என்ன?'' என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். '' ஒற்றைத் தலைமை வருவதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை. அ.தி.மு.கவின் சொத்து என்பது பெயரும் இரட்டை இலையும் மட்டும்தான். அது ஓ.பி.எஸ் கையில் இருந்தாலும் இ.பி.எஸ் கையில் இருந்தாலும் அதே வாக்குகள்தான் கிடைக்கும். ஓ.பி.எஸ்ஸுக்கான வாய்ப்பு என்பது தனக்குக் கிடைக்கும் பதவியைப் பெற்றுக் கொண்டு அங்கேயே இருக்கலாம். அவருக்குப் பொருளாளர் பதவி கொடுக்கப்படலாம்.

 

ஓபிஎஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இனிவரும் நாள்களில் இரட்டை இலை சின்னத்துக்காக அவர் கையொப்பமிடுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அவருக்கு ஆதரவாக இருந்த மைத்ரேயன் உள்பட பலரும் எடப்பாடி பக்கம் வந்துவிட்டனர். இதனைத் தவிர்க்கும்வகையில், 'தனித்து நிற்போம்' என முடிவெடுத்தால் பன்னீர்செல்வத்துக்குத்தான் பாதிப்பு அதிகம். அவர் விரும்பினால் போட்டி அ.தி.மு.கவை நடத்தலாம், போட்டி பொதுக்குழுவை கூட்டலாம். மீண்டும் தேர்தல் ஆணையம் சென்றால், அங்கும் பா.ஜ.க ஆதரவு தேவைப்படும். அதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை'' என்கிறார்.

'' தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் முறையிட்டால் எடப்பாடிக்கு சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதா?'' என்றோம். ''அதற்கெல்லாம் வாய்ப்புகள் இல்லை. தேர்தல் ஆணையம் எப்போதும் சின்னத்தை முடக்குவதில்லை. தற்காலிமாக அதன் பயன்பாட்டு உரிமையை ரத்து செய்யும். அதுவும் தேர்தல் நடந்தால்தான் நடக்கும். அதுவரையில் வழக்கு மட்டுமே நடந்து வரும். சட்டசபையில் உள்ள அ.தி.மு.க உறுப்பினர்களில் எடப்பாடிக்குத்தான் அதிக பெரும்பான்மை உள்ளது. கட்சியில் உள்ள செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவும் இ.பி.எஸ் பக்கமே உள்ளது."

தேர்தல் ஆணையம் தலையிடுமா?

"கட்சியின் விதிகள் என்பது சிவில் விவகாரம் என்பதால் அதில் தேர்தல் ஆணையம் தலையிடுவதில்லை. அதற்கான சட்டப்புலமையும் தேர்தல் ஆணையத்தில் இல்லை. எனவே, அ.தி.மு.கவில் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கியிருப்பதாக உறுதியாகக் கூறலாம். இதில், பன்னீர்செல்வம் பக்கம் போதிய பெரும்பான்மை இல்லாததால் பா.ஜ.கவும் தலையிடுவதற்கு வாய்ப்பில்லை. இந்த விவகாரத்தில் தனக்குக் கிடைப்பதை வைத்து ஓ.பி.எஸ் திருப்திப்பட்டுக் கொள்ளலாம். நாளை நடக்கவுள்ள பொதுக்குழுவுக்கு அவர் செல்வதற்கும் வாய்ப்பில்லை'' என்கிறார்.

 

ஓபிஎஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

2017-ஆம் ஆண்டு தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் தனி அணியாகப் பிரிந்து சென்றார் ஓ. பன்னீர் செல்வம்

''தற்போது அ.தி.மு.கவின் பொருளாளராகவும் ஓ.பி.எஸ் இருக்கிறார். இந்தப் பதவிக்கு இடையூறு வருவதற்கு வாய்ப்புள்ளதா?'' என்றோம். ''அந்தப் பதவிக்கு இடையூறு ஏற்படுத்தப்படாவிட்டால் அவரே தொடர்வார். பொதுக்குழுவில் அ.தி.மு.கவின் உள்கட்சி விதி 20-ல் திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும். அதனைத் திருத்திவிட்டு பொதுக்குழு ஏகமனதாக ஏற்றுக் கொள்வதாக தனித்தீர்மானம் கொண்டு வரவேண்டும். அதனைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைத்தால் போதும்'' என்கிறார்.

தொடர்ந்து பேசிய ஷ்யாம், '' 1976 ஆம் ஆண்டில் கோவையில் அ.தி.மு.கவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது 'அனைத்திந்திய அண்ணா தி.மு.க' எனக் கட்சியை பெயர் மாற்றம் செய்ய உள்ளதாக எம்.ஜி.ஆர் அறிவித்தார். இதற்கு கோவை செழியன், ஜி.விஸ்வநாதன், பெ.சீனிவாசன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே, 'அனைவரும் வாக்களியுங்கள்' என எம்.ஜி.ஆர் கூறிவிட்டார். கூட்டத்தில் பங்கேற்றவர்களும் எம்.ஜி.ஆர் கூறியதை ஏற்று ஆதரவாக வாக்களித்தனர். கட்சியின் பெயரை மாற்றிய கையோடு, எதிர்ப்பு தெரிவித்தவர்களையும் கட்சியில் இருந்து நீக்கினார். அவர்களும் தனிக்கட்சியெல்லாம் தொடங்கிவிட்டு, பின்னர் மீண்டும் எம்.ஜி.ஆர் பக்கமே வந்தனர்."

"எடப்பாடிக்கும் சிக்கல்தான்"

"ஒரு கை உயரும்போது கட்சியும் சின்னமும் அங்கேதான் செல்லும். அதற்கு எதிராக எதுவும் செய்வதற்கு வாய்ப்பில்லை. அதேநேரம், ஒற்றைத் தலைமையாக வந்தாலும் செயல்பாடுகளால்தான் மக்களின் ஆதரவை தலைவர்களால் பெற முடியும். அ.தி.மு.கவின் வசீகர தலைமை என்பதெல்லாம் ஜெயலலிதாவுடன் முடிந்துவிட்டது. ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி வருவதன் மூலம் சசிகலாவுக்கான கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்டன. பொதுவாக அரசியலில் உயர்வுக்குப் பின்னால் துரோகங்களும் குற்றங்களும் இருக்கும். அது இயல்பான ஒன்றுதான்'' என்கிறார் ஷ்யாம்.

 

எடப்பாடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

''இதன்பிறகு முக்குலத்தோர் வாக்குவங்கியை மையமாக வைத்து சசிகலா செயல்படலாம். மேற்கு மண்டலத்தில் உள்ள வேளாள கவுண்டர் சமூக வாக்குவங்கியை மையமாக வைத்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையும் செயல்பட்டு வருகிறார். இதனால் எடப்பாடிக்கும் சிக்கல்தான். அண்ணாமலையால் மேற்கு மண்டலத்தில் உள்ள அ.தி.மு.கவின் வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படும். இதனை அடிப்படையாக வைத்து வரும் தேர்தல்களில் அதிக இடங்களை அ.தி.மு.கவிடம் பா.ஜ.க கேட்பதற்கான சூழல் உருவாகும்'' என்கிறார் ஷ்யாம்.

https://www.bbc.com/tamil/india-61894871

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக பொதுக்குழு - பன்னீர் செல்வம் பங்கேற்பார்; புதிய தீர்மானங்களுக்கு அனுமதி இல்லை

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

பன்னீர் செல்வம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெரும் பரபரப்புக்கு மத்தியில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது இதில் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்பார் என துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் பொதுக்குழுவை நடத்த எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை எதிர்த்து ஓ. பன்னீர் செல்வம் சார்பில் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை இன்று அதிகாலை நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் விசாரித்தனர்.

விசாரணைக்கு பின் பொதுக்குழுவை நடத்த எந்த தடையும் இல்லை என்று தெரிவித்தும் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர, புதிய தீர்மானங்களை கொண்டுவரக்கூடாது எனவும் ஆணை பிறப்பித்துள்ளனர்.

இன்னும் சற்று நேரத்தில் பொதுக் குழு கூட்டம்

இன்னும் சற்று நேரத்தில் அதிமுகவின் பொதுக் குழு கூட்டம் வானகரத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் அந்த பகுதியில் அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

அதிமுக கூட்டம்

 

ADMK

 

 

அதிமுக கூட்டம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுக்குழு வழக்கில் பன்னீருக்கு வெற்றி: விடிய விடிய நடந்த விசாரணை விவரம்!

spacer.png

அதிமுகவின் பொதுக்குழு தொடர்பாக நேற்று (ஜூன் 22) இரவு உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அளித்த தீர்ப்பில், ‘பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை. அதில் இயற்றப்படும் தீர்மானம் குறித்து உத்தரவு பிறப்பிக்க முடியாது. கட்சி உள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது’ என்று தீர்ப்பளித்திருந்தார்.

இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு உற்சாகமாக இருந்த நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து இரவே அவசர மேல் முறையீடு செய்தார் வழக்கைத் தொடுத்தவர்களில் ஒருவரான பொதுக்குழு உறுப்பினர் சண்முகம்.

இந்த மேல் முறையீட்டு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரியின் அனுதிக்குப் பிறகு... நள்ளிரவே இரு நீதிபதிகள் அமர்வால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, வாதம் நடைபெற்றது. இதையடுத்து இன்று (ஜூன் 23) அதிகாலை அளித்த தீர்ப்பில், ‘ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு எந்தத் தீர்மானமும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படக் கூடாது’ என்று தீர்ப்பளித்திருக்கிறது உயர் நீதிமன்றம். இதனால் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆறுதல் வெற்றி கிடைத்திருக்கிறது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் பொதுக்குழு உறுப்பினர் சண்முகத்தின் மேல் முறையீடு வழக்கு அவசர வழக்காக இன்று (ஜூன் 23) அதிகாலை 2.45 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணை சென்னை அண்ணாநகரில் இருக்கும் நீதிபதி துரைசாமியின் இல்லத்தில் நடைபெற்றது.

பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர் அரவிந்த பாண்டியன் ஆஜரானார். எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ராஜகோபால் ஆகியோர் ஆஜரானார்கள். மனுதாரர் சண்முகம் சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆஜரானார்.

மனுதாரரான சண்முகம் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “அதிமுக பொதுக்குழுவில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட 23 தீர்மானங்களைத் தவிர ஒற்றைத் தலைமை போன்ற கூடுதல் தீர்மானங்கள் திடீரென முன் வைக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்பதுதான் தற்போது கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பாக விளங்குகிறது. அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தப் பதவிகளை பொதுக்குழுவால் மாற்றியமைக்க முடியாது. கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடலாம். கட்சியின் அடிப்படை சட்டத்திட்ட விதிகள் மீறப்பட்டால் நீதிமன்றங்கள் தலையிட முடியும்” என்ற வாதங்களை முன் வைத்தார் வழக்கறிஞர்.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதங்கள் முன் வைக்கப்பட்டன. “கட்சியின் அடிப்படை உறுப்பினர்களே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை தேர்ந்தெடுக்க முடியும் என்ற அதிமுகவின் சட்டவிதியை மாற்ற முடியாது. கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகத்துக்கும் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும்தான் பொறுப்பு. பன்னீர்செல்வத்திடம் கொடுக்கப்பட்ட 23 தீர்மானங்களைத் தவிர வேறு எந்தத் தீர்மானத்துக்கும் அவர் ஒப்புதல் தரவில்லை. தனி நபர்களை விட கட்சியின் விதிகளே மேலானது” என்று ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

அப்போது எடப்பாடி தரப்பு வழக்கறிஞர்கள், “விதிகளைத் திருத்த பொதுக்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்தால் கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பு பற்றிய கேள்வி அங்கே எழாது. பொதுக்குழு உச்சபட்ச அதிகாரம் படைத்தது. கட்சி தொடர்பாக எந்த முடிவையும் பொதுக்குழுவே எடுக்கலாம். ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழு எதையும் விவாதிக்க முடியாது என்ற கருத்தை ஏற்க முடியாது. பொதுக்குழுதான் இறுதியானது. 23 வரைவு தீர்மானங்கள் என்று பன்னீர்செல்வம் தரப்பு சொல்வதே தவறு” என்று வாதிட்டனர்.

இதைக் கடுமையாக எதிர்த்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், “தீர்மானக் குழு மூலம் தயாரிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பப்பட்டு அவற்றுக்கு ஒப்புதலும் வழங்கியிருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் எடப்பாடி தரப்பு வழக்கறிஞர்களைப் பார்த்து, “அஜெண்டா இல்லாமலேயே எப்படி பொதுக்குழு நடத்த முடியும்?” என்று கேட்டனர்.

அதற்கு எடப்பாடி தரப்பு வழக்கறிஞர், “இதற்கு முன் பொதுக்குழுக்களில் அஜெண்டா வைத்து கூட்டியதில்லை. இன்று கூடும் பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர்களை பொதுக்குழு உறுப்பினர்களே தேர்வு செய்யலாம் என்றுகூட பொதுக்குழு ஒப்புதல் தரலாம். யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது” என்று கூறினார்.

அப்போது நீதிபதிகள், “அந்த 23 தீர்மானங்களைத் தவிர வேறு எழுதப்படாத தீர்மானங்கள் இருக்கின்றனவா? ஏனென்றால் பொதுக்குழுவில் என்ன தீர்மானம் நிறைவேற்றப் போகிறோம் என்பது அதன் உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்” என்று கேட்டனர்.

அதற்கு எடப்பாடி தரப்பில், “எழுதப்படாத வேறு தீர்மானங்கள் இல்லை. ஆனால் அனைவருக்கும் பேச வாய்ப்பளிக்கப்படும். அவர்கள் தங்கள் கருத்தை முன் வைக்கலாம்” என்று பதிலளித்தனர்.

பன்னீர் தரப்பில், “50 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சி போல இயங்கி வந்த கட்சி அமைப்பில் இன்று ஒரு தனிநபர் முடிவெடுத்து அதை அனைவரையும் ஒப்புக்கொள்ள வைப்பது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதைத் தடுத்து கட்சி விதிகளைக் காப்பாற்றவே பன்னீர்செல்வம் நினைக்கிறார். அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்த ஒருங்கிணைப்பாளர்களை பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் மாற்றினால் கட்சியின் அடிப்படை விதிக்கு எதிரானது” என்று வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “தன்னிடம் முன்வைக்கப்பப்பட்ட 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் பொதுக்குழுவில் முடிவெடுக்கக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் கேட்கிறார். அவரது கோரிக்கையை ஏற்கிறோம். அதிமுக பொதுக்குழு கூடலாம். ஏற்கனவே வரையறுக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு எந்த தனித் தீர்மானமும் நிறைவேற்றப்படக் கூடாது. பொதுக்குழுவில் எந்த விஷயம் பற்றியும் விவாதிக்கலாம். ஆனால் வரைவு செய்யப்பட்ட 1 முதல் 23 தீர்மானங்கள் தவிர்த்து வேறு எந்த முடிவும் மேற்கொள்ளக் கூடாது” என்று அதிகாலை 4.15 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

தீர்ப்புக்குப் பின் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இன்று பொதுக்குழுவில் வைக்கப்பட இருக்கும் 23 தீர்மானங்கள் ஒருங்கிணைப்பாளரால் ஒப்புதல் கொடுக்கப்பட்டு அவை இணை ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. அவற்றைத் தவிர வேறு சிறப்புத் தீர்மானங்கள் எதுவும் இன்றைய பொதுக்குழுவில் நிறைவேற்றப்படக் கூடாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம். ஆனால், தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று தீர்ப்பளித்துள்ளனர். இது எங்களுக்குக் கிடைத்த வெற்றி என்பதைவிட அதிமுகவின் சட்டத்திட்ட விதிகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்” என்றார் திருமாறன்.

இந்த உத்தரவை அடுத்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் கூடி பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினார்கள்.
 

 

 

https://minnambalam.com/politics/2022/06/23/18/admk-coordinator-panneerselvam-positive-judgement-generalbody-edapadi-single-leadership

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ஏராளன்........!   

Link to comment
Share on other sites

சின்னம்மா ஏன் இந்த வெட்டுக்கொத்துக்குள் விலக்கு பிடிக்க வரவில்லை?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக ஓபிஎஸ் Vs இபிஎஸ்: டெல்லி செல்வது ஏன்? ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

23 ஜூன் 2022, 11:55 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஓ.பன்னீர்செல்வம்

 

படக்குறிப்பு,

ஓ.பன்னீர்செல்வம்

தமது மகன் ரவீந்திரநாத், அதிமுகவில் உள்ள தமது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் டெல்லி புறப்பட்டுள்ளார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.

இது தொடர்பாக வியாழக்கிழமை இரவு சென்னையில் இருந்து டெல்லி புறப்படும் முன்பாக அவரிடம் செய்தியாளர்கள் பேசினர். அப்போது, "அதிமுக நெருக்கடியான நிலையில் உள்ள போது திடீரென்று நீங்கள் டெல்லி செல்வது ஏன்?" என்று கேட்டனர். அதற்கு ஓ.பன்னீர்செல்வம், நாளை மறுதினம் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மூ வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். அந்த நிகழ்வில் பங்கேற்கச் செல்கிறேன் என்று பதிலளித்தார்.

இதேவேளை, தமது டெல்லி பயணத்தின்போது அதிமுகவில் தற்போது எழுந்துள்ள பொதுக்குழு நிகழ்வுகள் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மேலிட தலைவர்கள் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம் ஓ.பன்னீர்செல்வம் பேசக்கூடும் என்றும் அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக தீர்மானத்தை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு நடவடிக்கை எடுத்தால் அதை சட்ட ரீதியாக எவ்வாறு அணுகுவது என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்துவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஓராணியாகவும் ஓ.பன்னீர்செல்வம் ஓர் அணியாகவும் செயல்பட்டபோது அந்த கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்திருந்தது. இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோதி தலையிட்டு இருவரும் ஓரணியாக செயல்பட அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஒன்றாக செயல்பட முடிவு செய்தனர். அப்போது நடந்த கட்சியின் பொதுக்குழுவில் அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் வேறு எவரையும் தேர்வு செய்யாமல் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியும் செயல்பட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இரட்டைத் தலைமை என்பதற்கு பதிலாக ஒற்றைதை தலைமையே வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தை ஓ.பிஎஸ் தரப்பு அணுகி தடையாணை பெற்றிருக்கிறது. இருப்பினும், சென்னை வானகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத்தலைமைக்கு ஆதரவாக குரல் கொடுக்கப்பட்டது. மேலும், வரும் ஜூன் 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் மீண்டும் கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்றைய கூட்டத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளிநடப்பு செய்தார்.

"அவைத்தலைவருக்கு அதிகாரம் இல்லை"

முன்னதாக, அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செல்லாது என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளருமான வைத்திலிங்கம் தெரிவித்தார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவைத் தலைவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் தேர்வு செய்ய முடியும், பொதுக்குழுவை கூட்டுவதற்கு அவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை, தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் பொதுக்குழுவே செல்லாது என்று கூறினார்.

இது குறித்து மேலும் பேசிய அவர், "23 தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்றுதான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், 23 தீர்மானங்களை அவர்கள் ரத்து செய்துவிட்டார்கள். அவர்களுக்கு அதனை ரத்து செய்ய உரிமை இல்லை. அவைத் தலைவர் தேர்வு செல்லாது. அவைத் தலைவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் தேர்வு செய்ய முடியும், இதுதான் அதிமுகவில் இருந்த நடைமுறை. அங்கு கூடியிருந்தவர்கள் உறுப்பினர்கள் அல்ல. பணத்தை கொடுத்து பொதுக்குழு உறுப்பினர்கள் என்று கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். அது உண்மையானது அல்ல," என்றார்.

 

வைத்திலிங்கம்

 

படக்குறிப்பு,

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் (இடமிருந்து இரண்டாவது)

இதன் மூலம், பொதுக்குழு உறுப்பினர்களே ரத்தாகிவிட்டார்கள். அதாவது பதவி வெறி சட்டத்தை மறந்து, நீதி அரசர்களின் உத்தரவை மறந்து, நடந்து கொண்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்த பொதுக்குழு கூட்டம் குறித்து கேள்வி எழுந்தபோது,"வரும் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடக்காது. நாங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருக்கிறோம்.

பொதுக்குழு கூட்டம் என்பது புரட்சித் தலைவர், புரட்சி தலைவி இருந்த காலத்தில், அவ்வளவு அழகாக இருக்கும். அது மிகவும் கட்டுப்பாட்டாக இருக்கும். இன்று கட்டுப்பாடு இல்லாமல் காட்டுமிரண்டிதானமாக நடந்து இருக்கிறது.

 

வைத்திலிங்கம்

இப்போது நடைபெற்ற பொதுக்குழு கூட்டமே செல்லாது," என்றார்.

இத்தகைய சூழ்நிலையில், பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பும் தயாராக உள்ளதா என்ற கேள்விக்கு, "பேச்சுவார்த்தைக்கு எப்போதும் ஒருங்கிணைப்பாளர் தயாராக இருக்கிறார். அதிமுக கட்சி எப்போதும் நன்றாக இருக்க வேண்டும்; ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய கருத்து," என்றார்.

இந்த பொதுக்குழு கூட்டம் ஜனநாயக அடிப்படையில் நடக்கவில்லை என்றும், அவர் இது அரைமணி நேரத்தில் நடந்து முடிந்த ஓரங்க நாடகம் எனவும் வைத்திலிங்கம் கூறினார்.

ஓபிஎஸ், இபிஎஸ் உடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு

 

பாஜக தமிழ்நாடு

இந்த நிலையில், பொதுக்குழு கூட்டம் முடிந்ததும் சென்ற எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுக்கான மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி சந்தித்துப் பேசினார். அவருடன் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே.அண்ணாமலையும் உடனிருந்தார்.

இந்த இருவரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசிய பிறகு, ஓ.பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து தாங்கள் பேசவில்லை என்று அண்ணாமலை கூறினார்.

இதைத்தொடர்ந்து, பாஜக தலைவர்கள் இருவரும் குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரெளபதி முர்மூவுக்கு அதிமுகவின் ஆதரவை கேட்டு அதன் தலைவர்களிடம் பேச வந்ததாக அதிமுக மற்றும் பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/india-61908667

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

சின்னம்மா ஏன் இந்த வெட்டுக்கொத்துக்குள் விலக்கு பிடிக்க வரவில்லை?

பன்னீர்… சின்னம்மா ஆதரவாளராக இருந்ததால்தான்,
ஆளை ஒரேயடியாக வெளியே அனுப்பி, ஒற்றைத் தலைமையாக தானே இருக்க..
எடப்பாடி திட்டம் போட்டவர்.

சின்னம்மா இதுக்குள்ளை… விலக்குப் பிடிக்க வந்தால் இருக்கிற மரியாதையும் போய் விடும். 
அவ்வளவிற்கு கழுவி ஊத்தி விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அதிமுக நெருக்கடிக்கு யார் காரணம்? சதி வலை பின்னியது யார்?" - மதுரையில் ஓபிஎஸ் பேட்டி

27 நிமிடங்களுக்கு முன்னர்
 

ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.கவில் உள்கட்சி பூசல் அதிகரித்துள்ள நிலையில், ' தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலை, யாரால் எப்படி ஏற்பட்டது, எவரால் இந்தச் சதி வலை பின்னப்பட்டது என்பதை உணர்ந்து மக்களே உரிய தீர்ப்பினை வழங்குவார்கள்' என்கிறார், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.

சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில், 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் அறிவித்தனர்.

ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி பதவியேற்கும் வகையில் வரும் ஜூலை 11 ஆம் தேதி புதிய பொதுக்குழு நடைபெற உள்ளதாகவும் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, ஒற்றைத் தலைமையை நோக்கி முன்னேறிய அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாகப் பார்க்கப்பட்ட மைத்ரேயன், மா.ஃபா.பாண்டியராஜன், வேளச்சேரி அசோக் உள்ளிட்டவர்களையும் தன்பக்கம் வர வைத்தார்.

மேலும், தென்மாவட்டங்களில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆகியோரின் ஆதரவாளர்களையும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வளைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஓ.பி.எஸ், தனது ஆதரவாளரான பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ' அ.தி.மு.க பொதுக்குழுவை நடத்தத் தடையில்லை. அதேநேரம், தீர்மானம் தொடர்பாக உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது' என்றார்.

இதையடுத்து, இரவோடு இரவாக தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரியிடம் முறையிட்ட ஓ.பி.எஸ் தரப்பினர், இதனை அவசர வழக்காக விசாரிக்குமாறு கூறினர். இதன் தொடர்ச்சியாக நடந்த மேல்முறையீட்டு விசாரணையில், 'புதிதாக எந்தத் தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது' என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் ஆவேசமடைந்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர், பொதுக்குழு கூட்டத்தில் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். தனக்கு மாலை போட வந்தவர்கள் மீதும் எடப்பாடி கோபத்தைக் காட்டினார். ஒருகட்டத்தில், 'ஜனநாயகத்துக்கு விரோதமாக நடந்த பொதுக்குழுவை புறக்கணிக்கிறோம்' எனக் கூறிவிட்டு ஓ.பி.எஸ் தரப்பினர் வெளியேறினர். அப்போது ஓ.பி.எஸ் மீது பாட்டில் வீச்சு சம்பவமும் நடந்தது. இதையடுத்து, பொதுக்குழு நடந்த அன்றே டெல்லி விரைந்த பன்னீர்செல்வம், 25 ஆம் தேதி இரவு சென்னை திரும்பினார். குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரௌபதி முர்மு, வேட்பு மனு தாக்கல் செய்யவிருந்ததால், அதற்காக ஓ.பி.எஸ் சென்றதாகக் கூறப்பட்டது.

 

டெல்லியில் ஓபிஎஸ்

தீவிரம் அடைந்த மோதல்

அதேநேரம், வரும் ஜூலை 11ஆம் தேதி அ.தி.மு.க சார்பில் நடக்கவுள்ள பொதுக்குழுவை தடுப்பதற்கான சட்டரீதியான பணிகளில் ஓ.பி.எஸ் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், தனது ஆதரவாளர்கள் வளையத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் இருந்து மதுரை வந்த ஓ.பன்னீர்செல்வத்தை தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் ஏராளமான தொண்டர்களும் வரவேற்றனர்.

அப்போது பேசிய ஓ.பி.எஸ், 'எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர். தொண்டர்களுடன் நான் என்றும் இருப்பேன். இந்த இயக்கத்தை எம்.ஜி.ஆரும் அம்மாவும் மனிதாபிமான இயக்கமாக வளர்த்தெடுத்து மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றனர். இதன்மூலம் 30 ஆண்டுகாலம் தமிழ்நாட்டின் முதல்வராக நல்லாட்சியை நடத்தியுள்ளனர். தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலை, யாரால் எப்படி ஏற்பட்டது? எவரால் இந்தச் சதி வலை பின்னப்பட்டது என்பதை உணர்ந்து மக்களே உரிய தீர்ப்பினை வழங்குவார்கள். அவர்களுக்கு எம்ஜி.ஆர் மற்றும் அம்மாவின் தொண்டர்கள் உரிய பாடத்தை வழங்குவார்கள்' என்றார்.

மேலும், 'எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா ஆகியோரின் இதயத்தில் இருந்து என்னை யாரும நீக்க முடியாது. பன்னீர்செல்வலம் போன்ற துய தொண்டனைப் பெற்றது என் பாக்கியம் என அம்மா கூறினார். இதைவிட வேறு என்ன வேண்டும்?' என்றார். இதையடுத்து, பேட்டியை முடித்துக் கொண்டு ஓ.பி.எஸ் கிளம்பியபோது, ' உங்களின் அரசியல் எதிர்காலம் என்ன?' என செய்தியாளர் ஒருவர் கேட்டார். இதற்குப் பதில் அளித்த ஓ.பி.எஸ், 'என்னுடைய எதிர்காலத்தை அம்மாவின் தொண்டர்களும் மக்களும் நிர்ணயிப்பார்கள்' என்றார்.

https://www.bbc.com/tamil/india-61942518

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓபிஎஸ் Vs இபிஎஸ்: அதிமுக எம்ஜிஆர் உயில் என்ன சொல்கிறது? இரட்டை இலைக்கு சிக்கல் வருமா?

  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழுக்காக
5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இரட்டை இலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

அ.தி.மு.கவில் உள்கட்சி மோதல் வலுவடைந்துள்ள நிலையில், 'உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான சின்னத்தில் யார் கையொப்பமிடுவார்கள்?' என்ற கேள்வி எழுந்துள்ளது. ' தேர்தல் ஆணையத்தில் முறையிட்டால், சின்னத்துக்குச் சிக்கல் வரும் என்ற அச்சத்தில் இரண்டு தரப்புமே தேர்தல் ஆணையத்தை அணுகவில்லை' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

510 பதவிகள்

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிப் பதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு வரும் ஜூலை மாதம் 9 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், ' 498 ஊரக உள்ளாட்சிப் பதவிகள், 12 நகர்ப்புற உள்ளாட்சிப் பதவிகள் என 510 பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல், ஜூன் 20 ஆம் தேதி தொடங்கி 27 அன்று முடிவடைய உள்ளது. வேட்புமனுக்களை ஜூன் 30 ஆம் தேதிக்குள் திரும்பப் பெறலாம். இதனைத் தொடர்ந்து ஜூலை 9 ஆம் தேதி வாக்குப் பதிவு நடத்தப்பட்டு ஜூலை 12 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் நிர்வாகிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் உள்பட 34 பணியிடங்களுக்கு கட்சி சார்பில் தேர்தல் நடைபெற உள்ளது. இவர்களுக்கு சின்னத்தை ஒதுக்கீடு செய்யும் ஏ படிவம், பி படிவம் ஆகியவற்றில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையொப்பமிட வேண்டும். இவ்விரு பதவிகளும் காலாவதியாகவிட்டதாக கூறப்படுவதால், 'யார் கையொப்பமிடுவார்கள்?' என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இரட்டை இலைச் சின்னம் கிடைக்குமா?

இதுதொடர்பாக, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும் வழக்குரைஞருமான பாபு முருகவேலிடம் பிபிசி தமிழுக்காக கேட்டபோது, ''இதுதொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வருகின்ற இடைத்தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம். இதுதொடர்பாக, விரைவில் தகவல் வெளியிடப்படும்'' என்கிறார்.

இதையடுத்து, இரட்டை இலை சின்னம் தொடர்பாக பிபிசி தமிழுக்காக பேசிய மூத்த பத்திரிகையாளர் தி.சிகாமணி, ''அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதால் சின்னத்தில் கையொப்பமிட இரு தரப்புக்குமே அதிகாரம் இல்லை. அதுவரையில், இடைக்காலமாக சின்னத்தைப் பயன்படுத்துவார்களா எனத் தெரியவில்லை. இந்தப் பிரச்னையில் ஓ.பி.எஸ் தரப்பினர் நீதிமன்றம் செல்லவே வாய்ப்பு உள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் என்பது சிறிய அளவில் உள்ளதால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடவும் வாய்ப்புகள் உள்ளன'' என்கிறார்.

மேலும், ''தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கை ஓங்கியிருப்பதால், சின்னம் தொடர்பாக அவரே முடிவெடுக்கலாம். பொதுக்குழுவை கூட்டுவதற்கு அவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது எனக் கூறுவதால் அதன் அடிப்படையில் முடிவெடுப்பார்கள்'' என்கிறார்.

அச்சத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்?

அதேநேரம், தேர்தல் ஆணையத்தை அணுகினால் சின்னம் முடங்கிவிடும் என்ற அச்சத்தில் இரு தரப்பும் உள்ளதாகக் குறிப்பிடுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். இதுதொடர்பாக பிபிசி தமிழுக்காக பேசிய அவர், ''சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் இவர்கள் சென்றால், யாராவது ஒருவருக்கு சின்னத்தைக் கொடுப்பதற்கு பா.ஜ.க முயன்றால் சின்னத்துக்கு சிக்கல் ஏற்படும். இதனை யூகத்தின் அடிப்படையில் கூறுகிறேன். இந்த விவகாரத்தில் தேர்தல் உடனே ஆணையம் முடிவெடுப்பதற்கும் வாய்ப்பில்லை. குறிப்பாக, 'ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு சின்னம் இல்லை' எனக் கூறுவதற்கு வாய்ப்புள்ளது. அதற்குப் பயந்து கொண்டே இரண்டு தரப்பும் தேர்தல் ஆணையத்தை அணுகவில்லை. காரணம், சின்னம் முடங்கியதாகத் தகவல் வெளியானால் அது தொண்டர்களை காயப்படுத்திவிடும். 'நீங்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டு சின்னத்தை எப்படி முடக்கலாம்?' என்ற கேள்வி வரும்'' என்கிறார்.

 

பன்னீர் செல்வம், எடப்பாடி

பட மூலாதாரம்,FB/ OPANNEERSELVAM

தொடர்ந்து பேசிய ஷ்யாம், '' அ.தி.மு.கவில் சிக்கல்கள் ஏற்பட்டால், அதனை எப்படிக் களைவது என்பதற்கான தீர்வை அ.தி.மு.க முன்னாள் பொதுச் செயலாளர் எம்.ஜி.ஆர் முன்வைத்துள்ளார். அவர் எழுதிய உயிலின் நகல் என்னிடம் உள்ளது. எம்.ஜி.ஆர் மறைந்த 16 ஆவது நாளில் தலைமைக் கழகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதற்கு வி.என்.ஜானகி ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் கூட்டத்தில் இந்த உயிலை என்.சி.ராகவாச்சாரி வாசித்தார்.

எம்.ஜி.ஆர் உயில் சொல்வது என்ன?

23 பக்கங்கள் உள்ள அந்த உயிலில், பல விஷயங்களை எம்.ஜி.ஆர் சொல்கிறார். குறிப்பாக, 'என்னுடைய சத்யா ஸ்டூடியோ பங்கு உள்பட அனைத்தையும் கட்சியின் நிர்வாகச் செலவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். கட்சி பிளவுபட்டாலோ, கலைக்கப்பட்டாலோ கட்சியின் தற்போதைய 80 சதவீத அங்கத்தினர்கள் யார் பக்கம் இருக்கிறார்களோ, அவர்கள்தான் கட்சி' என்கிறார். அதாவது, 'கட்சியின் அடிப்படை உறுப்பினர்களில் 80 சதவீதம் பேர்' என்பதுதான் எம்.ஜி.ஆர் ஃபார்முலா. இந்த விவகாரத்தில் அ.தி.மு.கவின் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை அவர் கூறவில்லை.

இந்த உயிலை வாசிக்கும்போது அவைத் தலைவராக வள்ளிமுத்து இருந்தார். கட்சியின் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் குறித்த எந்தப் பேச்சும் அந்த உயிலில் இல்லை. அடிப்படை உறுப்பினர்களில் 80 சதவீதம் பேர் யார் பக்கம் என்ற அடிப்படையில்தான் இவர்கள் முடிவெடுக்க முடியும். 'என் பக்கம், உன் பக்கம்' என எந்த அடிப்படையில் தற்போதுள்ளவர்கள் பேசுகிறார்கள் எனத் தெரியவில்லை. தவிர, எம்.ஜி.ஆர் உயில் என்பது வெளிப்படையான ஆவணம். 'என்.சி.ராகவாச்சாரியும் அவரது மருமகனும் இறந்துவிட்டால் நீதிமன்றமே இந்த உயிலை செயல்படுத்த வேண்டும்' எனவும் எம்.ஜி.ஆர் கூறியுள்ளார்'' என்கிறார்.

'' உயிலில் உள்ள 'தற்போதைய' என்ற காலகட்டத்தை தற்போதுள்ள சூழலோடு பொருத்திக் கொள்ளலாம். பொதுவாக உயிலில் சொத்தைப் பற்றித்தான் பலரும் எழுதுவார்கள். ஆனால், கட்சியைப் பற்றி எம்.ஜி.ஆர் எழுதுவதற்குக் காரணம் அவரது சொத்தான சத்யா ஸ்டூடியோவை கட்சிக்குக் கொடுத்ததால்தான். அவரது சொத்துக்களை அனுபவிப்பவர்கள், அவர் சொன்னதையும் நடைமுறைப்படுத்த வேண்டும். சத்யா ஸ்டூடியோவின் இன்றைய மதிப்பு என்பது 200 கோடி ரூபாயைத் தாண்டும். எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் எம்.ஜி.ஆருக்கு சொந்தமான அலுவலகத்தில் அமர்ந்துதான் பேசுகிறார்கள்.

 

பன்னீர் செல்வம், எடப்பாடி

கபடி விளையாட்டும் உப்புக் கோடும்

இதுபோன்ற சிக்கலான நேரங்களில், 1987 ஆம் ஆண்டு அ.தி.மு.கவின் உறுப்பினர்கள் பட்டியலை எடுப்பதைவிடவும் ஜெயலலிதா மறைந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உள்ள அ.தி.மு.கவின் உறுப்பினர்கள் பட்டியலை வைத்து முடிவு செய்யலாம். இதுதொடர்பாக, அ.தி.மு.க தொண்டர்களை வாக்களிக்க வைத்து, 'யார் பக்கம் அதிக உறுப்பினர்கள் உள்ளனர்?' என்பதை முடிவு செய்யலாம்'' என்கிறார் ஷ்யாம்.

''ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சின்னம் பிரச்னைக்கு தற்காலிகத் தீர்வை அ.தி.மு.க நிர்வாகிகள் கொடுப்பதற்கு வாய்ப்புள்ளதா?'' என்றோம். '' அதற்கு வாய்ப்புள்ளது. இரட்டை இலைச் சின்னம் என்பது முக்கியம். இலை இல்லாவிட்டால் அ.தி.மு.கவே முடங்கிப் போனதாகத்தான் அர்த்தம். தற்போதுள்ள நிலையில் கட்சியில் இருந்து ஒருவரை நீக்கினாலும் அதைப் பற்றி வெளியில் சொல்ல மாட்டார்கள். அவ்வாறு வெளியில் கூறிவிட்டால் இன்னொரு நபர் தேர்தல் ஆணையம் செல்வதற்கு வாய்ப்புள்ளது'' என்கிறார்.

''அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் நடந்த கூட்டம் செல்லாது என ஓ.பி.எஸ் கூறியுள்ளது எடுபடுமா?'' என்றோம். '' கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பற்றி யாரும் வெளியில் கூறவில்லை. இரண்டு தரப்பும் கபடி விளையாட்டில் உள்ள உப்புக் கோடு நிலையில்தான் உள்ளனர். அந்தக் கோட்டைத் தாண்ட முடியாத அவஸ்தையில்தான் இரு தரப்பினரும் உள்ளனர்'' என்கிறார்.

https://www.bbc.com/tamil/india-61953774

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

spacer.png

அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூன் 27) அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

காலை 9 மணி முதலே பசுமை வழிச் சாலையிலுள்ள தன் வீட்டில் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி, தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கூடிவிட்டதை உறுதி செய்துகொண்டு 10 மணியளவில் தலைமைக் கழகத்துக்கு வந்தார். அமைப்புச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், மாநில அணித் தலைவர்கள் உள்ளிட்டோர் மட்டுமே இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். அதனால் தலைமைக் கழக நிர்வாகியல்லாத மாவட்டச் செயலாளர்கள் கூட இக்கூட்டத்தில் அனுமதிக்கப்படவில்லை. தலைமைக் கழக நிர்வாகிகளும் எடப்பாடிக்கு பொக்கேவும் சால்வையும் கொடுப்பதற்கே இருபது நிமிடங்கள் ஆகிவிட்டது.

வழக்கமாய் கூட்டம் நடைபெறும் தளத்தில் மேடை அருகே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோருக்கு நான்கு நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். ஆனால் இன்றைய கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆகியோர் பங்கேற்காததால்... அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனை மேடைக்கு அழைத்து கே.பி.முனுசாமி, தமிழ் மகன் உசேன், எடப்பாடி பழனிசாமி என மூன்று நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டிருந்தன.

முதல் வரிசையில் விஜயபாஸ்கர், உதயகுமார், ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், தம்பிதுரை, பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, தளவாய் சுந்தரம், வளர்மதி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். கூட்டம் 10.25 மணி வாக்கில் தொடங்கி 11. 15 மணியளவில் சுமார் முக்கால் மணி நேரமே நடந்தது.

கூட்டத்தில் பேசிய கே.பி.முனுசாமி, ‘அவைத் தலைவரால் அறிவிக்கப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை போட அவர்கள் கடுமையாக முயற்சிக்கிறார்கள். நாமும் சட்ட விவகாரங்களை ஆய்ந்துதான் அடுத்தடுத்த அடிகளை வைக்க வேண்டும். வரும் ஜுலை 11 ஆம் தேதி பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அவர்களை தற்காலிக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுப்போம். அதுதான் சட்டப்படி இப்போதைக்கு நமக்கு பாதுகாப்பு. பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை நாம் ஒருபக்கம் தீவிரமாக செய்ய வேண்டும். இன்னொரு பக்கம் சட்ட ரீதியான போராட்டங்களையும் எதிர்கொள்ள வேண்டும்” என்று பேசினார்.

இதனால் வரும் ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுவில் தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டு ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார் என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.

 

 

https://minnambalam.com/politics/2022/06/27/31/edapadi-palanisamy-temporary-general-seceratary-kpmunusamy-meeting

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

spacer.png

அதிமுகவில் கடந்த 14 ஆம் தேதி நடந்த மாசெக்கள் கூட்டத்தில் தொடங்கிய சர்ச்சை, 23 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி-பன்னீர் மோதலாக வெடித்தது. இந்த பின்னணியில் ஜுன் 27 ஆம் தேதி தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் எடப்பாடி தலைமையில் கூடியது. இதை சட்டத்துக்குப் புறம்பான கூட்டம் என்று குறிப்பிட்ட ஓ.பன்னீர் செல்வம், நேற்று தேனியில் இருந்து சென்னைக்கு வேகமாக வந்தார்.

இந்த பின்னணியில் அதிமுகவில் தனக்கு எதிராக கட்சி விதிகள் மற்றும் மக்கள் பிரநிதித்துவ விதிகளும் மீறப்படுகின்றன என்று தேர்தல் ஆணையத்துக்கு நேற்று (ஜூன் 27) கடிதம் எழுதியிருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.

மக்கள் பிரநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 29 (ஏ) (9) இன்படி இந்த விரிவான கடிதத்தை எழுதுவதாக குறிப்பிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் அந்த 9 பக்க கடிதத்தில் கடந்த சில ஆண்டுகளாக அதிமுகவில் நடப்பதைப் பட்டியலிட்டுள்ளார்.

“2017 செப்டம்பர் 12 ஆம் தேதி அ.தி.மு.க. சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டன. இந்த 2 பதவிகளும் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் விதியில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. மேலும், இதன் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்றும் முடிவு செய்யப்பட்டது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, இந்த சட்டதிருத்தம் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு முறையாக தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

அப்போது முதல் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கட்சியின் சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டு மக்கள் பிரநிதித்துவ சட்டத்துக்கு உட்பட்டு பணியாற்றினோம். இந்த அமைப்பிலேயே இந்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையம் நடத்திய பல்வேறு தேர்தல்களை சந்தித்தோம்.

இந்தநிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஜூன் 23 நடைபெறும் என்று ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் கடந்த ஜூன் 2 ஆம் தேதி, அறிவிக்கப்பட்டது. இதன் பின்பு, கட்சிக்கு ஒற்றை தலைமை குறித்து சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து 23.6.2022 அன்று நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட அந்த 23 தீர்மானங்கள் கொண்டு வரப்பட இருந்தது. ஆனால், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அந்த 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக பொதுக்குழு கூட்டத்தில் தெரிவித்தார்.

அதன்படி, பொதுக்குழுவில் எந்த விவாதங்களும் மேற்கொள்ளாமல் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் வரலாற்றில் முதல்முறையாக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. பொதுக்குழு தீர்மானங்களை ஒரு புக்லெக்ட் ஆக அச்சடித்து அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் கொடுப்பார்கள். ஆனால் இந்த நடைமுறையும் பின்பற்றப்படவில்லை

மேலும் சட்டத்துக்குப் புறம்பாக அந்த பொதுக்குழு கூட்டத்தில் அவைத் தலைவர் மூலம் புதிய பொதுக்குழு தேதியும் அறிவிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அந்த கூட்டத்தில் இருந்த போதும், இது தொடர்பான தகவல்கள் முன்கூட்டியே ஒருங்கிணைப்பாளரான எனக்கு தெரிவிக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து நான் (ஓ.பன்னீர்செல்வம்), வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இந்த கூட்டம் சட்ட விரோதமானது. அவைத்தலைவர் தேர்வு, அடுத்த பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு அனைத்துமே சட்ட விதிகளுக்கு புறம்பானது என்று தெரிவித்துவிட்டு வெளியேறினோம்.

பொதுக்குழு கூட்டத்தில் வெளியாட்கள் யாரும் அனுமதிக்கக்கூடாது, உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில்ன் வெளியாட்கள் பலர் சட்டத்திற்கு புறம்பாகவும், கோர்ட்டு உத்தரவுக்கு புறம்பாகவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதேநேரத்தில், அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த கூட்டத்தில் என் (ஓ.பன்னீர்செல்வம்) மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டன.

இதையடுத்து ஜூன் 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெறும் என்று ஜூன் 26 ஆம் தேதி இரவு ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் முறையான கையெழுத்து இன்றி தலைமை நிலையச்செயலாளர் என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து எதுவும் இல்லை.

அ.தி.மு.க. சட்ட விதிகளின்படி, தலைமை நிலைய செயலாளர் என்ற பெயரில் அழைப்பு விடுக்க முடியாது. அ.தி.மு.க. சட்ட விதிகளின்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் 2 பேரும் இணைந்துதான் இது போன்ற ஒரு கூட்ட அறிவிப்பை வெளியிடவோ நடத்தவோ முடியும். எனவே அந்த கூட்டமும் சட்டத்துக்குப் புறம்பானது.

இது தவிர... அந்த கூட்டத்தில் 11.7.2022 அன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று முடிவு எடுத்து இருப்பதும் அதிமுக சட்ட விதிகளுக்கு புறம்பானது. அ.தி.மு.க. பொருளாளர் என்ற அடிப்படையில் கட்சியின் வரவு-செலவு கணக்குகளை அந்த பொதுக்குழு கூட்டத்தில் தாக்கல் செய்யவும் என்னை அனுமதிக்கவில்லை. 14.6.2022 முதல் தற்போது வரை அ.தி.மு.க. வில் நடந்த சட்ட விதிமீறல் சம்பவங்களை தேர்தல் ஆணையத்தின் முன் சமர்ப்பிக்கிறேன்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.

 

https://minnambalam.com/politics/2022/06/28/15/ops-panneerselvam-letter-to-election-commissioner-delhi-admk-edapadi-team

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி: ஏன்?

 

spacer.png

"அதிமுகவின் சட்ட விதிகளின்படி நான்தான் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்" என்று ஓ.பன்னீர் செல்வம், நேற்று (ஜூலை 2) வரை உறுதியாக சொல்லிக் கொண்டிருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவிக்க வந்தபோதுதான் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஆனால் எடப்பாடி பழனிசாமியோ கடந்த ஜூன் 23 ஆம் தேதி அரைமணி நேரத்தில் நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில்... அன்றில் இருந்தே, ‘இனி அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கிடையாது’ என்ற நிலைப்பாட்டில் இருந்து வருகிறார். இதை எடப்பாடி பழனிசாமி தரப்பில் முதன் முதலில் சி.வி. சண்முகம் அறிவித்தார்.

அதன் பின் ஜூன் 26 ஆம் தேதி இரவு எடப்பாடி பழனிசாமியின் பெயர் குறிப்பிடாமல் தலைமை நிலையச் செயலாளர் என்ற அவரது பழைய பதவியைக் குறிப்பிட்டு 27 ஆம் தேதியன்று தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தை சட்ட விதிகளுக்குப் புறம்பான கூட்டமாக அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம்.

ஆனபோதும் தன்னை தலைமை நிலையச் செயலாளர் என்று அழைத்துக் கொள்வதில் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி. உள்ளாட்சி இடைத்தேர்தலில் சின்னம் வழங்குவது பற்றி பன்னீர் செல்வம் எழுதிய கடிதத்துக்கு ஜூன் 30 ஆம் தேதி, பதில் கடிதம் எழுதிய எடப்பாடி பழனிசாமி தன்னை தலைமை நிலையச் செயலாளர் என்று பதிவு செய்தார். மேலும் பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளர் இல்லை என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டார்.

spacer.png

இப்படி கட்சி ரீதியான கடிதங்களில் மட்டுமல்ல, தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் எடப்பாடி தன்னை தலைமை நிலையச் செயலாளர் என்று ஜூலை 1 ஆம் தேதி அதிகாரபூர்வமாக மாற்றிவிட்டார்.

தேதி வாரியாக கடந்த ஜூன் 23 ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகு தன்னை இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிடாத எடப்பாடி பழனிசாமி, உச்சநீதிமன்ற ஆவணங்களில் கடந்த ஜூன் 28 ஆம் தேதி தன்னை இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதை சுட்டிக் காட்டி ஓ.பன்னீர் தரப்பினர் கேள்வி எழுப்புகிறார்கள்.

“கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவியே இல்லை என்றும் அதனால் பன்னீர் செல்வம் எழுதிய கடிதமே செல்லத் தக்கதல்ல என்றும் கடிதம் எழுதினார் எடப்பாடி. ஆனால் பொதுக்குழு முடிந்து ஐந்து நாட்கள் கழித்து அதாவது ஜூன் 28 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்திருக்கும் அபிடவிட்டில் தன்னை அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக குறிப்பிட்டு, நான் சொல்வதெல்லாம் சரியே என்று கையெழுத்தும் போட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

spacer.png

அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், ‘அதிமுக பொதுக்குழுவில் ஏற்கனவே முன் வைக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் பெற்ற 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும். மற்ற தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது’ என்று 23 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல் முறையீடு செய்துள்ளார். அந்த மேல்முறையீட்டுக்காக ஜூன் 28 ஆம் தேதி தேதியிட்டு எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருக்கும் அபிடவிட்டில், ‘அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் கருப்ப கவுண்டரின் மகன் கே.பழனிசாமியாகிய நான்’ என்று தொடங்கி, இந்த அபிடவிட்டில் நான் சொல்லியிருக்கும் தரவுகள் என் அறிவுக்கும் நம்பிக்கைக்கும் உண்மையானவை. எதையும் நான் மறைக்கவில்லை’ என்று குறிப்பிட்டு உறுதிமொழி அளித்து கையெழுத்திட்டிருக்கிறார்.

ஜூன் 23 ஆம் தேதியில் இருந்தே பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளரும் இல்லை, எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளரும் இல்லை எல்லாமே காலாவதியாகிவிட்டது என்று எடப்பாடி தரப்பினர் சொல்லி வரும் நிலையில், ஜூன் 28 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அப்பீலுக்கான அபிடவிட்டில் தன்னை இணை ஒருங்கிணைப்பாளர் என்றே குறிப்பிட்டு உறுதியளித்து கையெழுத்திட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இது யாரை ஏமாற்றும் வேலை?” என்று கேட்டனர். அந்த அப்பீல் ஆவணங்களும் நம்மிடம் கிடைத்தன.

spacer.png

நாம் இதை உறுதி செய்துகொண்டு எடப்பாடி தரப்பின் வழக்கறிஞரான இன்பதுரையிடம் பேசினோம்.

“என்னிடம் வேறு சிலரும் இதே கேள்வியை எழுப்பினார்கள். நான் இதற்கு பதில் சொல்கிறேன். பொதுக்குழு பற்றி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி எதிர்மனு தாரராக சேர்க்கப்பட்டிருந்தார். அதில் அவரது பதவி இணை ஒருங்கிணைப்பாளர் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல அந்த தீர்ப்புக்கு எதிராக இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் அப்பீல் செய்த வழக்கிலும் எதிர் மனுதாரராக எடப்பாடி பழனிசாமி சேர்க்கப்பட்டிருந்தார். அதிலும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்றுதான் இருந்தது.

spacer.png

அந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்துதான் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. எனவே மேற்குறிப்பிட்ட அந்த வழக்குகளில் எதிர்மனு தாரரான எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் அதே நிலையில் அப்பீலுக்கான அபிடவிட்டிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். மேலும் அதே அப்பீல் வழக்கில் case synopsis எனப்படும் வழக்குச் சுருக்கத்தில் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இல்லை, அவர் தலைமை நிலையச் செயலாளராகவே இருக்கிறார் என்பதை தெரிவித்துவிட்டோம். எனவே இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை” என்று விளக்கம் அளித்தார் இன்பதுரை.

 

 

https://minnambalam.com/politics/2022/07/03/15/iam-co-oridnator-edapadi-palaniswamy-afidavit-supreme-court-ops-side-question

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.