-
Tell a friend
-
Topics
-
10
By கிருபன்
தொடங்கப்பட்டது -
0
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
Posts
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
நாட்டில்... அரிசி தட்டுப்பாடு, ஏற்படாது... என அறிவிப்பு! நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தகம், வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 25ஆம் திகதி வரை 47 ஆயிரம் மெட்ரிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.டி.கொடிகார தெரிவித்துள்ளார். இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாடு, சம்பா, வெள்ளை அரிசி உள்ளிட்ட 25 ஆயிரம் மெட்ரிக்தொன் அரிசி இந்த மாதத்தில் மாத்திரம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் நெருக்கடி காரணமாக அரிசி விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2022/1288863 -
பிறப்பு, திருமணம், இறப்பு... மற்றும் காணிச் சான்றிதழ்களை, வழங்கும் நடவடிக்கை மட்டுப் படுத்தப்பட்டது!
By தமிழ் சிறி · பதியப்பட்டது
பிறப்பு, திருமணம், இறப்பு... மற்றும் காணிச் சான்றிதழ்களை, வழங்கும் நடவடிக்கை மட்டுப் படுத்தப்பட்டது! பிறப்பு, திருமணம், இறப்பு மற்றும் காணிச் சான்றிதழ்களை வழங்குவதை பதிவாளர் நாயகம் திணைக்களம் வாரத்திற்கு இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தியுள்ளது. அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட பதிவாளர் பிரிவுகளினால் வழங்கப்படும் சேவைகள் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் மட்டுமே வழங்கப்படும் என பதிவாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சேவைகள் காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், திணைக்களத்தின் பத்தரமுல்ல, குருநாகல், கண்டி, மாத்தறை ஆகிய பிரதேச செயலகங்களின் மாவட்ட பதிவாளர் பிரிவுகளும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கிளை அலுவலகங்களும் வழமை போன்று வாரத்தில் 5 நாட்கள் திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1288856 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
முல்லைத்தீவு, விசுவமடு... பகுதிக்கு, ஜப்பானிய தூதுவர் விஜயம்! முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடுபகுதியில் அமைந்துள்ள பனை தென்னை கூட்டுறவு சங்கத்தின் தலைமைக் காரியலயத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஜப்பானிய தூதுவர் விஜயம் மேற்கொண்டிருந்தார். இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளின் கூட்டுறவுவின் அடையாளமாக ஜப்பான் அரசின் நிதிப்பங்களிப்பில் நன்கோடையாக வழங்கப்பட்ட தேங்காய் எண்ணை சுத்திகரிப்பு நிலையத்திற்கு இயந்திரம் ஒன்று 2 மில்லியன் ரூபா பெறுமதியில் கடந்த 2021 ஆண்டு வழங்கிப்பட்டது. அதன் பயன்பாட்டை பார்வையிடுவதற்காக ஜப்பான் நாட்டு தூதுவர் இன்றையதினம் நேரில் சென்றிருந்தார். https://athavannews.com/2022/1288841 -
By தமிழ் சிறி · Posted
எரிபொருளை இறக்குமதி செய்ய... வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி! எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1288812 -
By தமிழ் சிறி · Posted
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக.. பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன! எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். டோக்கன் பெற்ற போதிலும், மறு அறிவித்தல் வரும் வரை எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார். மேலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் இருப்பு கிடைத்தவுடன், டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு அதன் இருப்பு குறித்து தெரியப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோக நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொலன்னாவை பெற்றோலிய எண்ணெய் களஞ்சியசாலையினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1288819
-
Recommended Posts