Jump to content

பல கொலைகள், மற்றும் குற்றச்சாட்டுக்கள் குறித்த தகவல்களை... ஐ.நா.விடம் வெளிப்படுத்திய "தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின்" (TMVP) உறுப்பினர் வெளிநாட்டில் தஞ்சம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பல கொலைகள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் குறித்த தகவல்களை ஐ.நா.விடம் வெளிப்படுத்திய TMVP இன் உறுப்பினர் வெளிநாட்டில் தஞ்சம்!

பல கொலைகள், மற்றும் குற்றச்சாட்டுக்கள் குறித்த தகவல்களை... ஐ.நா.விடம் வெளிப்படுத்திய "தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின்" (TMVP) உறுப்பினர் வெளிநாட்டில் தஞ்சம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பல கொலைகள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார் என்று ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்கள், பல கொலைகள் மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முக்கிய தகவல்களை அவர் வெளிப்படுத்தியதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பிலும் வெளிநாட்டிலும் உள்ள சில முக்கிய இராஜதந்திர தூதரகங்களுக்கு தம்மிடம் உள்ள தகவல்களின் சுருக்கமான விபரங்களைக் கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்பின்னர் அவர் உயிருக்கு பயந்து, சமீபத்தில் நாட்டைவிட்டு வெளியேறி  வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அவர், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்து விடுதலைப்புலிகள் கட்சியும் ஏனையவர்களும் செய்த குற்றங்கள் தொடர்பான வாக்குமூலங்களை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா. அதிகாரிகள் சுமார் 5 நாட்கள் அவரிடம் இருந்து வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் நடராஜா ரவிராஜ் ஆகியோரின் கொலை மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல்போன சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்களை அந்த நபர் வெளிப்படுத்தியுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் கட்சி நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்த கொலைகள் பற்றிய விவரங்களையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார் எனக் கூறப்படுகிறது.

ஐ.நா. மற்றும் இராஜதந்திர வட்டாரங்களிற்கு வழங்கப்பட்ட தகவல்கள் முன்னைய அரசாங்கத்துடன் தொடர்புடைய சிலர் மீது நேரடியாக குற்றச்சாட்டுகளை சுமத்தும் வகையில் அமைந்துள்ளன என்றும் இந்த தகவல்களை அடிப்படையாகக்கொண்டு, ஐ.நா.வும் தூதரங்களும் என்ன நடவடிக்கையை எடுக்கப்போகின்றன என்பது தெரியவில்லை என ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அறிய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் ஐ.நா.விடம் இருந்து இந்த விடயம் குறித்து அறிய முயற்சித்தப்போதிலும் பயனளிக்கவில்லையென அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1288393

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை

தான் தப்புவதற்காக தானும் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கத்தயாராயிருப்பார். செய்யிறதெல்லாம் செய்துபோட்டு, ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி  வெளிநாடுகளில் தஞ்சம் தேடுவது இலகுவான வழி

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தஞ்சம் கோரியவரின் வாக்குமூலம்! மறுக்கிறார் பிள்ளையான்

16-14.jpg

தமது கட்சியின் உறுப்பினர் ஒருவர் வெளியிட்டதாக கூறப்படும் செய்திகளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் மறுத்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஒருவர் முக்கிய கொலைகள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையி்ல் தகவல் வழங்கியுள்ளதாக கொழும்பின் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தி தொடர்பில் எமது செய்திச்சேவை பிள்ளையானை தொடர்புக்கொண்டு வினவியபோதே, குறித்த ஊடகத்தில் வெளியான தகவல்களை மறுத்தார் அரசியல் தஞ்சம் கோருவதற்காக எவரும்,எதனையும் கூறலாம்.

இதனை பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இடம்பெற்றிருக்கிறது. எனவே அதுபோன்ற ஒரு நிகழ்வாக இந்த தகவலும் இருக்கலாம் என்று பிள்ளையான் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் காணாமல் போன சம்பவங்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் நடராஜா ரவிராஜ் ஆகியோரின் கொலைகள், ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் உட்பட்ட முக்கிய தகவல்களையே, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் குறித்த உறுப்பினர் வெளிப்படுத்தியுள்ளதாக கொழும்பின் ஊடகம் தெரிவித்துள்ளது.
 

 

https://akkinikkunchu.com/?p=213987

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

குறித்த ஊடகத்தில் வெளியான தகவல்களை மறுத்தார் அரசியல் தஞ்சம் கோருவதற்காக எவரும்,எதனையும் கூறலாம்.

இருக்கலாம்! இவ்வளவு காலம் தங்களின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாயிருந்துவிட்டு, இப்போ நாட்டில் பிழைப்புமில்லை, தஞ்சம் கோரி புறப்படுவோரை நடுக்கடலில் வைத்து கைது செய்து நீதிமன்றத்துக்கு கொண்டுபோகிறார்கள், ஆகவே இவர் சொல்வது உண்மையாகவுமிருக்கலாம். ஆனால் பரராஜா சிங்கம் கொலை வழக்கில் இவர் ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறாரே! ஏன் அதற்கு எதிராக இவர் நீதிமன்றம் போகவில்லை? தான் நிரபராதி என நிரூபிக்கவில்லை? அதை மறுக்க இவரால் முடியாது.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.