Jump to content

நாய்க்குப் பிறந்தநாள். 5000 மக்களுக்கு விருந்து


Recommended Posts

இந்தியாவில் தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய வளர்ப்பு நாயின் பிறந்தநாளில் 100 கிலோ கேக் வெட்டியதுடன் 5000 கிராம மக்களுக்கு விருந்தளித்து உபசரித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம் மூடலகி தாலுகா துக்காநட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பா மர்தி.

பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினரான சிவப்பா மர்தி தொழிலதிபர் ஆவார், இவர் தன்னுடைய வீட்டில் கிரிஷ் என்ற வளர்ப்பு நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

கிரிஷ் மீது சிவப்பா மர்தி மற்றும் அவரது குடும்பத்தினர் அளவு கடந்த பாசம் வைத்துள்ளனர், கிரிஷ்க்கு பிறந்தநாள் வந்துவிட அதை வெகுவிமர்சையாக கொண்டாட முடிவு செய்தார்.

நாயின் பிறந்தநாளுக்கு 100 கிலோ கேக் வெட்டிய தொழிலதிபர்! 5000 பேருக்கு விருந்து

இதற்காக 100 கிலோ கேக் ஒன்றை செய்து, அதை கிரிஷ் வெட்ட ஊர் மக்களே கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

மேலும் அந்த நாய்க்கு மாலை அணிவித்து கிராமம் முழுவதும் ஊர்லவமாக அழைத்து சென்றனர்.

 

news.lankasri.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு. நாய்யகர்க்கு பிறந்தநாள் கொண்டாடி 5000 பேருக்கு உணவளிப்பதென்றால் அவர் இன்னும் எத்தனை நாய்யகர்களையும் வளர்க்கலாம்.......!  👍

அதுசரி நாய்யகரின் உறவினர்கள் யாரும் வீதிகளில் இருந்து வந்த சிலமன் ...........!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

திரு. நாய்யகர்க்கு பிறந்தநாள் கொண்டாடி 5000 பேருக்கு உணவளிப்பதென்றால் அவர் இன்னும் எத்தனை நாய்யகர்களையும் வளர்க்கலாம்.......!  👍

அதுசரி நாய்யகரின் உறவினர்கள் யாரும் வீதிகளில் இருந்து வந்த சிலமன் ...........!  😂

இந்த நாயாரின்,  உறவினர்கள் எல்லாரும்… வெளி நாட்டில் வசிப்பதால்,
பிறந்த நாளுக்கு வர முடியாமல் போய் விட்டது. 😂
உள்ளூர் நண்பர்களான… ஜிம்மி, பிளக்கி, பிரவுணி, லக்கி, ரோசி….    
ஆகியோர் கலந்து கொண்டார்கள். 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாய்க்கு என்ன மொய் எழுதி இருப்பினம்.

Edited by சுவைப்பிரியன்
எழுத்துப் பிழை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் இருந்தாலும் நாயக்கரை சாட்டி  ...5000 பேர்  பசியாறியது  புண்ணியமாய் போகும். 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.