Jump to content

3 பில்லியன் பெறுமதியான பொருட்களுடன் நாட்டை வந்தடைந்த கப்பல்!


Recommended Posts

 3 பில்லியன் பெறுமதியான பொருட்களுடன் நாட்டை வந்தடைந்த கப்பல்!

3 பில்லியன் பெறுமதியான பொருட்களுடன் நாட்டை வந்தடைந்த கப்பல்!

 

இந்திய மக்களால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித்தொகையுடன் கூடிய கப்பல் இன்று (24) இலங்கையை வந்தடைந்துள்ளது.

அவற்றில் 14,712 மெட்ரிக் தொன் அரிசி, 250 மெட்ரிக் தொன் பால் மா மற்றும் 38 மெட்ரிக் தொன் மருந்துகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மனிதாபிமான உதவியின் மொத்த பெறுமதி 3 பில்லியன் இலங்கை ரூபா என தெரிவிக்கப்படுகிறது..

இந்திய மக்களால் வழங்கப்பட்ட முதல் மனிதாபிமான உதவித்தொகை கடந்த மாதம் 22 ஆம் திகதி நாட்டை வந்தடைந்ததுடன் அதில் 9,000 மெட்ரிக் தொன் அரிசி, 50 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் தொன் மருந்துகள் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

இந்திய மக்களால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித்தொகையுடன் கூடிய கப்பல் இன்று (24) இலங்கையை வந்தடைந்துள்ளது.

தமிழக மக்களாலா? இந்திய மக்களாலா என்பதை தெளிவாக கூறினால் நல்லது. அல்லாவிட்டால் மனிதாபிமானத்திலும் சந்தேகம் வரும். இத்தனை மக்கள் கொலை செய்யப்படும்போது வராத மனிதாபிமானம் இப்போ எங்கிருந்து வந்தது? அல்லது தமிழக உதவியில் இந்தியா பெயர் எடுக்குதா? என்பது எனது சந்தேகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, satan said:

தமிழக மக்களாலா? இந்திய மக்களாலா

சாத்தான் தமிழ்நாடு என்று வந்ததை இந்தியா என்று அவசரஅவசரமாக லேபல் மாற்றுகிறார்களாம்.ஏன் அங்கேயே மாற்றாமல் இங்கே கொண்டுவந்து மாற்றுகிறார்கள்.

இந்த காணொளியை செவிமடுங்கள்.தெரிந்த தெரியாத பல விடயங்களை அலசுகிறார்கள்.

அத்துடன் தமிழருக்காகவே அனுப்பப்பட இருந்த சாமான்களை முழு இலங்கையர்களுக்குமாக மனோகணேசனும் சுமந்திரனும் மாற்றியுள்ளனர்.

இது ஏன் ?

முஸ்லீம்களுக்காக அவர்கள் நாடுகள் கொடுத்த போது தனியே முஸ்லீம்களுக்கு மாத்திரமே கிடைத்தது.அதே போல் தமிழ்நாடு தமிழ்களுக்கு அனுப்பினால் என்ன?

Link to comment
Share on other sites

5 hours ago, satan said:

தமிழக மக்களாலா? இந்திய மக்களாலா என்பதை தெளிவாக கூறினால் நல்லது. அல்லாவிட்டால் மனிதாபிமானத்திலும் சந்தேகம் வரும். இத்தனை மக்கள் கொலை செய்யப்படும்போது வராத மனிதாபிமானம் இப்போ எங்கிருந்து வந்தது? அல்லது தமிழக உதவியில் இந்தியா பெயர் எடுக்குதா? என்பது எனது சந்தேகம்.

 

3 hours ago, ஈழப்பிரியன் said:

சாத்தான் தமிழ்நாடு என்று வந்ததை இந்தியா என்று அவசரஅவசரமாக லேபல் மாற்றுகிறார்களாம்.ஏன் அங்கேயே மாற்றாமல் இங்கே கொண்டுவந்து மாற்றுகிறார்கள்.

இந்த காணொளியை செவிமடுங்கள்.தெரிந்த தெரியாத பல விடயங்களை அலசுகிறார்கள்.

அத்துடன் தமிழருக்காகவே அனுப்பப்பட இருந்த சாமான்களை முழு இலங்கையர்களுக்குமாக மனோகணேசனும் சுமந்திரனும் மாற்றியுள்ளனர்.

இது ஏன் ?

முஸ்லீம்களுக்காக அவர்கள் நாடுகள் கொடுத்த போது தனியே முஸ்லீம்களுக்கு மாத்திரமே கிடைத்தது.அதே போல் தமிழ்நாடு தமிழ்களுக்கு அனுப்பினால் என்ன?

1) 

https://tamil.oneindia.com/news/colombo/sri-lanka-receives-tn-govt-s-humanitarian-supplies-463612.html

2 )

https://tamil.oneindia.com/news/tuticorin/dmk-is-the-reason-for-annamalai-to-clear-ips-says-minister-k-masthan-in-thoothukudi-463313.html

3 வது கப்பல் ரெடி ஆகுதாம்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா புரட்சி! நேற்று அவ்வாறுதான் செய்தி வந்தது, இன்று பாத்தால் இப்படி மாறி வந்துள்ளது. இது எங்களுக்கு ஒன்றும் புதிதில்லை. ஒரு சில வருடங்களுக்கு முன்; நாமல் பொடி மாத்தையா, முளைச்சு மூன்று இலை விடேல்லை, அதுக்குள்ள தமிழக அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை விட்டவர் கண்டியளோ! இன்று அவர்களின் உதவிக்கு நன்றிதெரிவித்து சந்திப்புகளும் நடக்குது. தமிழர் இலங்கையை சுரண்டிக்கொண்டு இந்தியாவுக்கு போய்விடுவார்கள் என்று அப்பாவி மக்களை ஏமாற்றி நாட்டை கொழுத்தி அரசியல் சுகம் கண்டவர்கள், தங்களுக்கே சுரண்டி எடுக்க வக்கில்லாமல் இந்தியாவின்  கடனிலும்,  உதவியிலும்,  நன்கொடையிலும் தங்கி வாழுகிறார்கள், காலம் எப்படி கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. ஆனாலும் எதுவும் நடவாததுபோல் ஈழத் தமிழரையும், தமிழகத்தையும் பிரிப்பதற்கு காய் நகர்த்தப்படுகிறது.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.