Jump to content

காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் பாண்டிச்சேரி, காரைக்காலுக்கும் இடையிலான படகு சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி - அமைச்சர் டக்ளஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் பாண்டிச்சேரி, காரைக்காலுக்கும் இடையிலான படகு சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி - அமைச்சர் டக்ளஸ்

தமிழ்நாட்டின் பாண்டிச்சேரி, காரைக்கால் போன்ற துறைமுகங்களுக்கும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையிலான சரக்கு படகு சேவை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி  வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கூடிய விரைவில் சரக்கு படகு சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

http://cdn.virakesari.lk/uploads/medium/file/129901/Douglas_Devananda.jpg

குறித்த படகு சேவை மூலம் தேவையான மண்ணெண்ணை, டீசல் போன்ற எரிபொருட்களையும், உரம், பால்மா, மருந்து பொருட்கள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் தேவையானளவு எடுத்துவர முடியும் என்று வலியுறுத்தி வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த படகு சேவையை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க முயற்சிகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றார்.

அதேவேளை, பலாலி - திருச்சி, சென்னை இடையிலான விமான சேவையையும் திட்டமிட்டபடி ஜீலை 1 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

https://www.virakesari.lk/article/130136

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாமாவுக்கு கள்ளப்பணம் கொட்டப்போகுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படகுச் சேவை பயணிகளுக்கு இல்லையா? சரக்குகளுக்கு மட்டுமா?
அப்ப இதுவும் பேய்க்காட்டா?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

கூடிய விரைவில் சரக்கு படகு சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

17 minutes ago, கிருபன் said:

அதேவேளை, பலாலி - திருச்சி, சென்னை இடையிலான விமான சேவையையும் திட்டமிட்டபடி ஜீலை 1 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ம்...க்கும்...... எதுக்கும் நாமள் அப்பிடிக்கா திரும்பி படுப்பம்.....கப்பல் வந்தா தட்டி எழுப்பி விடுங்கப்பு 🤣

Top 43 Vadivelu GIFs by bahi26 | Gfycat

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறகென்ன ஓர் இரவிலேயே பிரச்சனைக்கு தீர்வு…..

தேவையான அளவா??? சனம் பதுக்கிற அளவை பார்த்தால் குழாய் வைத்து உறுஞ்சினாலும் பத்தாது….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டக்கியை பற்றி தெரிந்தது தான்.அதுக்காக எல்லாத்தையும் எதிர்க்க வேண்டும் என்டு இல்லை.தமிழ் அரசியல் வாதிகளில் அமைச்சுப் பொறுப்பு வகிக்க முன்வர வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

88-EE16-C2-C864-43-D1-ABAC-CA144391-EC9-
 

இப்படியும் ஓர் செய்தி உலவுகின்றது..

Link to comment
Share on other sites

எலேய்,

பாண்டி சேரி ஒரு தனி யூனிய பிரதேசம் லே. அதுல காரைக்கால் ஒரு பகுதிலே.

தமிழ் நாடு இன்னொரு மாநிலம் லே

 

கப்பல் தமிழ் நாட்டுக்கு போதாலே பாண்டிக்கு போதாலே?

என்னலே இதெல்லாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

கூடிய விரைவில் சரக்கு படகு சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 

2 hours ago, goshan_che said:

எலேய்,

பாண்டி சேரி ஒரு தனி யூனிய பிரதேசம் லே. அதுல காரைக்கால் ஒரு பகுதிலே.

தமிழ் நாடு இன்னொரு மாநிலம் லே

கப்பல் தமிழ் நாட்டுக்கு போதாலே பாண்டிக்கு போதாலே?

என்னலே இதெல்லாம்?

 நியாயமாக இலங்கை - தூத்துக்குடிக்கு இவர் சேவையை பெற்று கொண்டு இருக்க வேண்டும்..

சரக்கு - பாண்டிச்சேரி..?  அவர் சரியாதான் கதைக்கிறார் தோழர்.

☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

தமிழ்நாட்டின் பாண்டிச்சேரி, காரைக்கால் போன்ற துறைமுகங்களுக்கும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையிலான சரக்கு படகு சேவை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி  வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கூடிய விரைவில் சரக்கு படகு சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 இந்திய மத்திய அரசோ, இலங்கை அரசோ இதை ஒருபோதும் அனுமதிக்காது. தாடியர் ஏதோ ஏமாற்று வேலைக்கு அடிகோலுகிறார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தமிழ்நாட்டுக்கு போக முடியாது என்பதால்.. பாண்டிச்சேரிக்கு கப்பல் விடுறார். அப்படியே தப்பிப் போய் பிரஞ் பாஸ்போட் எடுத்திட்டு களவா ஐரோப்பாவுக்குள் நுழையப் போறாரோ இல்ல நுழைய வைச்சு ஏஜென்சி வேலை செய்யப் போறாரோ என்னவோ. 

  • Haha 1
Link to comment
Share on other sites

11 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

 நியாயமாக இலங்கை - தூத்துக்குடிக்கு இவர் சேவையை பெற்று கொண்டு இருக்க வேண்டும்..

சரக்கு - பாண்டிச்சேரி..?  அவர் சரியாதான் கதைக்கிறார் தோழர்.

☺️..😊

🤣 சென்னையில் இருந்த போது  வீக் எண்ட் பாண்டிக்கு போயிருப்பார்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

🤣 சென்னையில் இருந்த போது  வீக் எண்ட் பாண்டிக்கு போயிருப்பார்🤣

யாரோட போயிருப்பார்??

தெரிஞ்சா சொல்லுங்க

ஏனெனில் அதுக்கு அப்புறம் கல்யாண ஆசையே விட்டு போய்ச்சு மாமாவுக்கு 😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

யாரோட போயிருப்பார்??

தெரிஞ்சா சொல்லுங்க

ஏனெனில் அதுக்கு அப்புறம் கல்யாண ஆசையே விட்டு போய்ச்சு மாமாவுக்கு 😂

ஏதாவது வெட்டுப்பார்ட்டி?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/6/2022 at 03:54, satan said:

ஏதாவது வெட்டுப்பார்ட்டி?

யூ மீன் பாக்குவெட்டி??!😜

  • Haha 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.