Jump to content

முல்லைத்தீவில் மாணவிகள் பலர் துஷ்பிரயோகம் - ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் மாணவிகள் பலர் துஷ்பிரயோகம் - ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கைது

Vhg ஜூன் 24, 2022
Photo_1656066745079.jpg

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆசிரியரும் மாணவர் ஒருவரும் எதிர்வரும் 30 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் சுமார் பதினேழு பதினெட்டு வயதை உடைய ஆறு மாணவர்களையும் நீதிமன்றத்தில் காவல்துறையினர் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இதன் போதே, மாணவர் ஒருவர் எதிர்வரும் 30.6.2022 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு ஏனைய ஐந்து மாணவர்களுக்கும் நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டுள்ளதோடு மேலும் பலரை தேடி காவல்துறையினர் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கின்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இணைந்து பல பாடசாலை மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு பாலியல் சேட்டை புரிந்து பாலியல் துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளனர். 

ஆசிரியர், அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்காக நியமிக்கப்பட்டு ஆசிரியர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த நிலையில், குறித்த ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சிலர் இணைந்து மாணவிகள் பலரின் நிர்வாண புகைப்படங்களை வைத்து அச்சுறுத்தி அவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. 

இவ்வாறு ஆசிரியரும் மாணவர்கள் சிலரும் செய்த சேட்டையை முல்லைத்தீவு இளைஞர்கள் கண்டறிந்து, ஆசிரியர் மற்றும் மாணவர்களின் தொலைபேசியை எடுத்து பார்வையிட்டுள்ளனர்.

அதன் போது பல மாணவிகளின் நிர்வாண வீடியோக்கள் மாணவிகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் மாணவிகளுடன் தவறான முறையில் நடந்து கொண்ட வீடியோக்கள் இருப்பதை அவதானித்து அதனை சோதித்தபோது அந்த ஆசிரியரும் மாணவர்களும் இந்த செயற்பாடுகளில் தொடர்பு கொண்டிருந்தமை தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர், குறிப்பிட்ட மாணவர்களைப் பயன்படுத்தி மாணவிகளை காதல் வலையில் விழுத்தி, அவர்கள் ஊடாக மாணவிகளின் நிர்வாண புகைப்படங்களை பெற்று ஆசிரியரும் அந்த மாணவிகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறான பின்னணியில் இந்த ஆசிரியருடைய தொலைபேசியில் இருந்த ஆவணங்கள் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். 

அதன் போது அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது ஒரு மாணவியை ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியதையடுத்து ஆசிரியர் தலைமறைவாக இருந்த நிலைமையில், ஆசிரியரோடு சேர்ந்து இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுத்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 6 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

இவ்வாறான பின்னணியில் தலைமறைவாக இருந்த ஆசிரியர் இன்று சட்டத்தரணி ஒருவர் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். இந்த வேளை பாதிக்கப்பட்ட நபர்கள் சார்பாக சட்டத்தரணி எஸ்.தனஞ்சயன் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். 

இந்த செயல்பாடு தொடர்பில் நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்தி இது ஒரு பாரதூரமான செயற்பாடு எனவும் பல்வேறு மாணவிகளை துஷ்பிரயோகம் மேற்கொண்டதோடு பல பெண்களை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அவர்களை அச்சுறுத்தியுள்ளதையும் எடுத்துக் கூறி இது பொது மக்களிடையே பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இது ஒரு சமூகப் பிரச்சனை என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தார்.  முல்லைத்தீவு காவல் நிலையம் சார்பில் கருத்து தெரிவித்த காவல்துறை உத்தியோகத்தர் ஜனன்,

குறித்த விசாரணை தொடர்பிலே ஆசிரியரிடம் இன்னும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் சான்று பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேலதிக தகவல்களை பெற வேண்டிய நிலையில் இவருக்கு பிணை வழங்குகின்ற போது இந்த விசாரணைகளை சரியாக செய்ய முடியாது எனவும் சான்றுப் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகள் உள்ளதை தெரிவித்து அவரது பிணை விண்ணப்பத்தை நிராகரிக்குமாறும் தெரிவித்தார்.

இந்த சம்பவங்களையும் இந்த சம்பவத்தின் பாரதூர தன்மையையும் நன்கு அவதானித்த முல்லைத்தீவு நீதிமன்றத்தின் நீதிபதி ரி.சரவணராஜா குறித்த நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

பல்வேறு கலாச்சார விழுமியங்களோடு இருந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது பல்வேறுபட்ட பிரச்சினைகள் உருவாகி பல மாணவிகள் இவ்வாறு சீரழிவுக்கு உட்படுவதையும் பல மாணவிகள் துன்புறுத்தப்பட்டும், அவர்களுடைய கௌரவங்கள் மற்றும் பாதுகாப்பின்மைகள் காரணமாக அவற்றை காவல் நிலையங்களிலோ அல்லது நீதிமன்றங்களுக்கும் செல்லாத நிலையில் மறைத்து வைக்கின்ற நிலைமையாலும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.

இதற்கு முன்னதாகவும் முல்லைதீவு மாவட்டத்தில் உள்ள ஒரு பாடசாலையில் பெண் பிள்ளைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டிலே ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே பெண் பிள்ளைகளுடைய பெற்றோர்கள் மிக அவதானமாக தங்களுடைய பிள்ளைகளின் செயல்பாடுகளை அவதானிக்குமாறும் இவ்வாறான விசாரணைகளில் அகப்படுகின்ற போது அவற்றை மறைக்காது உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தி இவ்வாறான நபர்களை தண்டிப்பதற்கு முன்வர வேண்டும்.

இல்லையெனில் தொடர்ச்சியாக இவ்வாறானவர்கள் பெண் பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதும் அல்லது சிறுவர் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தி அந்த பிள்ளைகளினுடைய எதிர்காலத்தை சிதைக்கின்ற இந்த செயற்பாடுகள் தொடரும்.

எனவே பிள்ளைகளின் பெற்றோர்கள் இந்த விடயத்தில் மிக அக்கறையோடு பிள்ளைகள் பாதிக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் பாதிப்புக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

https://www.battinatham.com/2022/06/blog-post_648.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையடக்கத் தொல்லைபேசி பயன்படுத்தும் முறை பற்றி திரும்ப திரும்ப பெற்றோர், ஆசிரியர்கள், பிள்ளைகளிற்கு விழிப்புணர்வு செய்யவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் படம் எடுத்து அனுப்பும் பெண் பிள்ளைகள் க/தண்டிக்கப்பட வேண்டும்.

வயது குறைந்த பிள்ளைகள் தொடர்பான சட்டமும் அது சார்ந்த நடவடிக்கைகளும் இறுக்கமாக வேண்டும்.

  • Like 7
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த கையடக்க தொலை பேசியை மாணவர்களுக்கு தடை செய்ய வேணும்.ஒன்லைன் படிப்பு வீட்டிலிருந்து கற்றால் போதும்.மீராக்கு ஒரு பச்சை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, MEERA said:

முதலில் படம் எடுத்து அனுப்பும் பெண் பிள்ளைகள் க/தண்டிக்கப்பட வேண்டும்.

இது மேற்கு நாடுகளிலும் நடக்கின்றது. அதே வயது ஆண்களின் காதல் வலையில் விழுந்தவர்கள், காதலர்களின் அழுத்தம் காரணமாக நிர்வாணப் படங்களை அனுப்புவார்கள். பின்னர் அவஸ்தைப்படுவார்கள். கண்டிப்பு/தண்டிப்பைவிட தொடர்ச்சியான அறிவூட்டலைக் கொடுக்கவேண்டும். 

நாங்கள் பாலர் பாடசாலையில் படித்தபோதும், பின்னர் பெரிய பாடசாலையில் படித்தபோதும், காலை நேர அசெம்பிளியில் ஆசிரியர்கள் எப்போதும் சமகாலத்திற்குத் தேவையான அறிவுரைகளைக் கூறுவார்கள். அவற்றை நாம் காதில் விழுத்தாதபோதும் இப்போதும் நினைவில் இருக்கின்றது. அப்படியான செயற்பாடுகள் இப்போதும் இருக்கும். ஆனால் ஆசிரியரே மாணவர்களுடன் சேர்ந்து இப்படியான மிகவும் மோசமான செயலில் ஈடுபடுவதை சாதரணமாக எடுக்கக்கூடாது. அவருக்கு ஒரு சட்டத்தரணி வேறு!

  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலை சுத்துது 😡

 

கண்டா வரச் சொல்லுங்க. கர்ணன கையோடு கூட்டி வாருங்க. 

அவர கண்டா வரச் சொல்லுங்க. அவர கையோடு கூட்டி வாருங்க 

😭

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

தலை சுத்துது 😡

 

கண்டா வரச் சொல்லுங்க. கர்ணன கையோடு கூட்டி வாருங்க. 

அவர கண்டா வரச் சொல்லுங்க. அவர கையோடு கூட்டி வாருங்க 

😭

 

இருட்டடி சிஷ்டம் இப்பவும் இருக்குத்தானே.....? 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்.... ஆசிரியர்......? அசிங்கம்! கையெடுத்து கும்பிட்ட காலம் மறைந்து விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இருட்டடி சிஷ்டம் இப்பவும் இருக்குத்தானே.....? 

வாத்திக்கு கட்டி வைச்சு முதுகுத் தோலை வார எல்லாமே சரியாக இயங்கும். 

29 minutes ago, satan said:

ம்ம்.... ஆசிரியர்......? அசிங்கம்! கையெடுத்து கும்பிட்ட காலம் மறைந்து விட்டது.

GS ஓட திரிஞ்சு, சமுர்த்திக்கு ஆளெடுத்து,  தொண்டர் ஆசிரியராக்கி, பின்னர் நிரந்தரமாக்கினால் எப்படி ஆசிரியம்  ஓங்கும் ? 

😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

இது மேற்கு நாடுகளிலும் நடக்கின்றது. அதே வயது ஆண்களின் காதல் வலையில் விழுந்தவர்கள், காதலர்களின் அழுத்தம் காரணமாக நிர்வாணப் படங்களை அனுப்புவார்கள். பின்னர் அவஸ்தைப்படுவார்கள். கண்டிப்பு/தண்டிப்பைவிட தொடர்ச்சியான அறிவூட்டலைக் கொடுக்கவேண்டும். 

நாங்கள் பாலர் பாடசாலையில் படித்தபோதும், பின்னர் பெரிய பாடசாலையில் படித்தபோதும், காலை நேர அசெம்பிளியில் ஆசிரியர்கள் எப்போதும் சமகாலத்திற்குத் தேவையான அறிவுரைகளைக் கூறுவார்கள். அவற்றை நாம் காதில் விழுத்தாதபோதும் இப்போதும் நினைவில் இருக்கின்றது. அப்படியான செயற்பாடுகள் இப்போதும் இருக்கும். ஆனால் ஆசிரியரே மாணவர்களுடன் சேர்ந்து இப்படியான மிகவும் மோசமான செயலில் ஈடுபடுவதை சாதரணமாக எடுக்கக்கூடாது. அவருக்கு ஒரு சட்டத்தரணி வேறு!

தமிழர் கலை கலாச்சாரம் என்றுவிட்டு மேற்குடன் ஒப்பிடுவது சரியாகுமா?

இது முதலாவது சம்பவமும் அல்ல. எங்காவது குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதா?

என்னைப் பொறுத்தவரை பெண்கள் தான் கவனமாக இருக்க வேண்டும் காதலிலும் சரி போட்டோ அனுப்புவதிலும் சரி.

Edited by MEERA
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியுடன் போராடி முடிந்து நாம் எமக்குள் இருக்கும் விஷங்களுக்கெதிராகப் போராடவேண்டி இருக்கிறது .

Edited by ரஞ்சித்
  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இந்தக் காமுகனுக்காகவும் ஒரு சட்டத்தரணி வாதாட வந்திருக்கிறார்🤦‍♂️🤦‍♂️

தூ... கேவலம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் தலைப்பில் இருந்து விலத்தி.

இப்படியான செய்திகள் யூகே பத்திரிகைகளில் டெயிலி மெயில் போன்ற மிகவும் வலது சாரி பத்திரிகைகளில் வரும் போது கூட - ஆளை வெட்ட வேணும் கொத்த வேணும் எண்டு எழுதினாலும் அநேகமாக குற்றம் சாட்டபட்டவரின் வக்கீலை ஏசுவதில்லை. கிட்டதட்ட குற்றம்சாட்ட படும் எவருக்கும் அது என்ன குற்றமாகிலும் வக்கீல் இருக்க வேண்டும் என்பதை இந்த நாடுகளில் கிட்டதட்ட எல்லாரும் ஏற்கிறார்கள் என நினைக்கிறேன். பணம் இல்லாவிட்டால் அரசே duty solicitor ஏற்பாடு செய்யும்.

யாழில் மட்டும் அல்ல எந்த இந்திய இலங்கை தளத்திலும் குற்றம் சாட்ட பட்டவருக்கு நிகராக அவரின் வக்கீலுக்கும் பூசை நடக்கும்.

ஒப்பீடளவில் ஐரோப்பாவை விட எமது நாடுகளில் ஜனநாய கேடாக இருக்க இந்த மாதிரியான மனநிலையில், ஒரு கலாச்சாரம் போலவே பலர் சிந்திப்பகும் ஒரு காரணமாக இருக்க கூடும் என நினைக்கிறேன்.

எமதுநாடுகளில் சட்டத்துடன் பரிச்சயம் உள்ளோர் மட்டுமே குற்றம் சாட்டபட்டவருக்கும் வக்கீல் வைக்கும் உரிமை வேண்டும் என நினைப்பார்கள். மிகுதி எல்லாரும் வக்கீலை ஏசுவார்கள்.

இந்த சட்டதின் இயல்பு பற்றிய புரிதல் இன்மையே எமது நாட்டில் ஜமநாய்க ம் ஒப்பீட்டளவில் கேடாக காரணமாகுமோ?

ஒரு சிறுவர் துஸ்பிரயோகி என தானே ஒத்து கொண்ட ஒருவரை ஒரு வைத்தியர் பராமரித்தால் ஏசாத நாம், குற்றம் சாட்ட பட்டவர்ருக்கு ஆஜரா வக்கீலை ஏசுவது முரண்நகை.

ஆனால் இதுதான் எமது நாடுகளில் பெரும்பாலானோரின் கருத்து.

Edited by goshan_che
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிகார பலமும் (ஆசிரியர்) சமுதாயம் மீதான பயமுமே (வெளியே தெரிந்தால்) இவை எம்மக்களிடையே தொடர காரணம். வெளிநாடுகளில் இவற்றை அகற்றி விட்டுள்ளார்கள். 

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

அதிகார பலமும் (ஆசிரியர்) சமுதாயம் மீதான பயமுமே (வெளியே தெரிந்தால்) இவை எம்மக்களிடையே தொடர காரணம். வெளிநாடுகளில் இவற்றை அகற்றி விட்டுள்ளார்கள். 

89/90 களில் நான் படித்த பெண்கள் பாடசாலையிலும் ஒரு வாத்தியார் இருந்தவர். இந்தளவுக்கு இல்லை என்றாலும்  முதுகில் தட்டுவது , தலையில் தட்டுவது (நாங்களும் அன்பிலாக்கும் என்று விடடோம் ) , தேவையில்லாத கதைகள் சில மாணவர்களுடன் கதைப்பது என்றிருந்தது . பின்னர் அவரை  வேறு ஆண்கள் பாடசாலைக்கு மாற்றி விடடார்கள்.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை, வேறு பாடசாலைக்கு போகச்சொல்லி சொல்ல மாட்டார்கள் என்கிற தைரியந்தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

தமிழர் கலை கலாச்சாரம் என்றுவிட்டு மேற்குடன் ஒப்பிடுவது சரியாகுமா?

இது முதலாவது சம்பவமும் அல்ல. எங்காவது குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதா?

என்னைப் பொறுத்தவரை பெண்கள் தான் கவனமாக இருக்க வேண்டும் காதலிலும் சரி போட்டோ அனுப்புவதிலும் சரி.

இதில் தமிழர் கலை, கலாச்சாரம் என்று குறுக்க எதுவுமில்லை. பதின்ம வயதில் ஏற்படும் பருவ மாற்றங்கள் எல்லோருக்கும் பொதுவானது. பையன்களும், பொண்ணுங்களும் ஒருவரை ஒருவர் ஈர்க்கமுயற்சிப்பார்கள். ஆனால் கவனமாக இருக்கவேண்டும் என்ற முதிர்ச்சியான சிந்தனைகள் எல்லோருக்கும் இருக்காது. இப்படியான பருவத்தில்  vulnerable ஆன பெண்பிள்ளைகளை அதே வயதை ஒத்த பையன்களை காதலிக்க வைத்து, அப்பையன்களை பெண்பிள்ளைகள் முழுமையாக நம்பக்கூடும். அதன் பின்னர் “நீ அப்படி போட்டு அனுப்பு, இல்லாவிட்டால் உன்னை விரும்பமாட்டேன்” என்ற மாதிரி அழுத்தம் கொடுத்தால் படங்களை அனுப்பவும் செய்வார்கள். இப்படியான விடயங்கள் மேற்குநாடுகளில் உள்ள பதின்பருவத்தினரிடையே சாதாரணமாக நடைபெறுகின்றது. சமூகவலைத் தளங்களும், ஸ்மார்ட்ஃபோனும் எல்லோருமிடமும் இருக்கும் இக்காலத்தில் முல்லைத்தீவில் நடைபெறுவதில் ஆச்சரியமில்லை.

ஆனால் மாணவர்களைப் பாதுகாக்கவேண்டிய ஆசிரியரே இப்படியான துஷ்பிரயோகத்தில் பையன்களைப் பாவித்தது எமது சமூகம் எங்குபோகின்றது என்பதைக் காட்டுகின்றது. பெண்பிள்ளைகள் கவனமாக இருப்பதால் இது தீராது. சரியான வழிகாட்டல் கொடுக்கவேண்டியவர்களே தவறாக செயற்படுகின்றார்கள் என்பதால் சமூகப்பிரச்சினையாகப் பார்க்கவேண்டும்.

 

6 hours ago, goshan_che said:

ஒரு சிறுவர் துஸ்பிரயோகி என தானே ஒத்து கொண்ட ஒருவரை ஒரு வைத்தியர் பராமரித்தால் ஏசாத நாம், குற்றம் சாட்ட பட்டவர்ருக்கு ஆஜரா வக்கீலை ஏசுவது முரண்நகை.

வைத்தியர் எந்த உயிரையும் காப்பாற்ற உறுதிமொழி எடுத்த்தவர். வக்கீல், அதிலும் கிரிமினல் வக்கீல், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை தனது புலமையாலும், திறமையாலும் பாவித்து குற்றவாளிகளைக் காப்பாற்றுபவர். இதுதான் உலக வழக்கம்! 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

யாழில் மட்டும் அல்ல எந்த இந்திய இலங்கை தளத்திலும் குற்றம் சாட்ட பட்டவருக்கு நிகராக அவரின் வக்கீலுக்கும் பூசை நடக்கும்.

முல்லைத்தீவு ஆசிரியர் மாணவர்களின் அயோக்கியதனம் அதற்கு சட்டதரணியை தாக்குவது! கோஷான் சேயின் அவசியமான பொன்னான கருத்து.

ஆசிரியர்களை  கையெடுத்து கும்பிடும் பயம் மூடத்தனங்கள் மறைய வேண்டும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

வைத்தியர் எந்த உயிரையும் காப்பாற்ற உறுதிமொழி எடுத்த்தவர். வக்கீல், அதிலும் கிரிமினல் வக்கீல், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை தனது புலமையாலும், திறமையாலும் பாவித்து குற்றவாளிகளைக் காப்பாற்றுபவர். இதுதான் உலக வழக்கம்! 

 

இதத்தான் ஜி ஒட்டுமொத்தமான சமுதாயத்தின் கூட்டு விளக்க குறைபாடு என்கிறேன்.

தனது சுய விருப்பு வெறுப்புக்கு இடம் கொடாமல் ஒரு வைத்தியர் எல்லா உயிரையும் காப்பாற்ற உழைக்க வேண்டும் என்பது எப்படி வைத்திய தொழில்தர்மமோ….

அதே போலவே

தனது சுய விருப்பு வெறுப்புக்கு இடம் கொடாமல் ஒரு குற்றம்சாட்ட பட்டருக்கு ஆஜராக தயாராக இருக்க வேண்டும் என்பது வக்கீல்களின் தொழில் தத்மம்….

ஒரே ஒரு நிபந்தனை - நான் குற்றம் புரிந்தேன் ஆனால் புரியவில்லை என வழக்காடுங்கள் என கேட்டால் அதன் பின் அவருக்காக வழக்காடாது விலக வேண்டும்.

தொடர்ந்தும் வாதாடினால் அவர் வக்கீல் அல்ல கள்ளன். அல்லது கள்ள வக்கீல். கிட்னி திருடும் வைத்தியர் எப்படி கள்ள வைத்தியரோ அப்படி.

முதலாவதை (வைத்தியர்) மேற்கு நாடுகளின் மக்களை போலவே புரிந்து கொள்ளும் நாம்.

இரெண்டாவதை (வக்கீல்) புரிய தவறுகிறோம். உங்களை போன்ற சிந்தனாவாதிகள் கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது இது ஒரு சமூக பிரச்சனை, மாணவர்களின் மன வளம் சம்மபந்தமானதும் கூட. 

பொதுவாக ஆண் பிள்ளைகளை பராட்டி சீராட்டி வளர்க்கும் நாங்கள் பெண்களை/சகோதரிகளை எப்படி மதிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்காத விளைவு இப்படி வந்து நிற்கிறது. 

ஒரு ஆண் இன்னொரு பெண்ணைப் பார்த்து பகிடி என்ற பெயரில் சொல்லும் விடயங்களை/செயல்களை,  நாளைக்கு இன்னொரு ஆண் தனது தாயையோ, சகோதரிகளையோ இப்படி நடத்தலாம் என்ற உணர்வு இருப்பதில்லை. 

அதே போல இந்த மாதிரி பிரச்சனைகள் வரும் பொழுது பெண் பிள்ளைகளை கூட சமூகத்தின் வாய்களுக்கு பயந்து வெளியே சொல்ல முடிவதில்லை, இதனாலேயே இதனை நிறுத்த முடிவதில்லை. பெயர் கெட்டுவிடும், வாழ்க்கை போய்விடும் என்ற பயத்தில் வெளியே துணிந்து வருவதில்லை. அப்படி வந்தாலும் பெண்கள்தான் கவனமாக இருக்கவேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் மேல்தான் மேலும் அழுத்தம். 

மேற்குலக நாடுகளில் இந்த மாதிரி பிரச்சனைகள் இல்லாமல் இல்லை ஏன் foster careல் நடக்கும் அநியாங்களை நினைத்தும் பார்க்கமுடியாது, ஆனால் இவர்கள் பிடிபட்டால் தண்டனைகள் நிச்சயம். இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் பணபலத்தால்/அரசியல் செல்வாக்கினால் தண்டனைகளில் இருந்து தப்புகிறார்கள்

அதே போல பாதிக்கப்பட்டவர்களுக்கான உளவள ஆலோசனைகளும் உள்ளது, ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் மிக மிகக் குறைவு, அப்படி இருந்தாலும் நாடுவதில்லை. 

எல்லாவற்றையும் விட பதின்ம வயதினருக்கு தனியே பாடதிட்டத்தை மட்டும் போதிப்பது மட்டும் நல்ல மனிதரை உருவாக்காது, பதின்ம வயதினை அடையும் பொழுது அதனைப் பற்றிய ஆலோசனைகளை, இன்றைய காலத்தில் ஏற்படும் இந்த வகையான சிக்கல்களைப் பற்றி பாடசாலைகள்/சமூக நிறுவனங்கள்  கட்டாயம் மாணவர்கள் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வுகளை வழங்க வேண்டும். 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

அதிகார பலமும் (ஆசிரியர்) சமுதாயம் மீதான பயமுமே (வெளியே தெரிந்தால்) இவை எம்மக்களிடையே தொடர காரணம். வெளிநாடுகளில் இவற்றை அகற்றி விட்டுள்ளார்கள். 

 

13 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இப்பொழுது இது ஒரு சமூக பிரச்சனை, மாணவர்களின் மன வளம் சம்மபந்தமானதும் கூட. 

பொதுவாக ஆண் பிள்ளைகளை பராட்டி சீராட்டி வளர்க்கும் நாங்கள் பெண்களை/சகோதரிகளை எப்படி மதிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்காத விளைவு இப்படி வந்து நிற்கிறது. 

ஒரு ஆண் இன்னொரு பெண்ணைப் பார்த்து பகிடி என்ற பெயரில் சொல்லும் விடயங்களை/செயல்களை,  நாளைக்கு இன்னொரு ஆண் தனது தாயையோ, சகோதரிகளையோ இப்படி நடத்தலாம் என்ற உணர்வு இருப்பதில்லை. 

அதே போல இந்த மாதிரி பிரச்சனைகள் வரும் பொழுது பெண் பிள்ளைகளை கூட சமூகத்தின் வாய்களுக்கு பயந்து வெளியே சொல்ல முடிவதில்லை, இதனாலேயே இதனை நிறுத்த முடிவதில்லை. பெயர் கெட்டுவிடும், வாழ்க்கை போய்விடும் என்ற பயத்தில் வெளியே துணிந்து வருவதில்லை. அப்படி வந்தாலும் பெண்கள்தான் கவனமாக இருக்கவேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் மேல்தான் மேலும் அழுத்தம். 

மேற்குலக நாடுகளில் இந்த மாதிரி பிரச்சனைகள் இல்லாமல் இல்லை ஏன் foster careல் நடக்கும் அநியாங்களை நினைத்தும் பார்க்கமுடியாது, ஆனால் இவர்கள் பிடிபட்டால் தண்டனைகள் நிச்சயம். இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் பணபலத்தால்/அரசியல் செல்வாக்கினால் தண்டனைகளில் இருந்து தப்புகிறார்கள்

அதே போல பாதிக்கப்பட்டவர்களுக்கான உளவள ஆலோசனைகளும் உள்ளது, ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் மிக மிகக் குறைவு, அப்படி இருந்தாலும் நாடுவதில்லை. 

எல்லாவற்றையும் விட பதின்ம வயதினருக்கு தனியே பாடதிட்டத்தை மட்டும் போதிப்பது மட்டும் நல்ல மனிதரை உருவாக்காது, பதின்ம வயதினை அடையும் பொழுது அதனைப் பற்றிய ஆலோசனைகளை, இன்றைய காலத்தில் ஏற்படும் இந்த வகையான சிக்கல்களைப் பற்றி பாடசாலைகள்/சமூக நிறுவனங்கள்  கட்டாயம் மாணவர்கள் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வுகளை வழங்க வேண்டும். 

 

 

அருமை.

மூனிச்சில் எது நடக்கிறதோ அது சில ஆண்டுகள் களித்தாவது முல்லைதீவுக்கும் வரும்.

தொடர்பாடாலால் வரும் நல் விளைவுகளை மட்டும் நாம் பெறலாம் தீயவற்றை ஒதுக்கி விடுவோம் என்பது அப்பாவித்தனமா நம்பிக்கை.

மனித மிருகங்கள் எங்கேயும் இருக்கும். நாம் தமிழர்கள் கலாச்சாரத்தில் உயர்ந்தவர்கள் என்ற பிம்பங்கள் இதை இல்லை என்றாக்காது.

இந்த விடயங்கள் நடைபெற உதவியாக இருக்கும் பூடகங்களை, அதில் ஒன்று போலி கலாச்சார பூச்சு, களைவதே ஒரே வழி.

பிகு

இயக்க காலத்தில் கூட ஆசிரியர்கள் இது போல குற்றங்களுக்கு தண்டிக்க பட்டுள்ளார்கள். அப்போ மொபைல் இல்லை தண்டிக்க ஆள் இருந்தது - இதுதான் வித்தியாசம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

ஒரே ஒரு நிபந்தனை - நான் குற்றம் புரிந்தேன் ஆனால் புரியவில்லை என வழக்காடுங்கள் என கேட்டால் அதன் பின் அவருக்காக வழக்காடாது விலக வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தனக்காக வாதாட ஒருவரும் இல்லை எனில் அரசினை நாடுவார்கள் ஏனெனில் அது அவர்களது உரிமை. அப்படி அரசு நியமிக்கும் சட்டதரணி, தான் இந்த நபருக்காக வாதாட முடியாது என கூற முடியுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

தனது சுய விருப்பு வெறுப்புக்கு இடம் கொடாமல் ஒரு குற்றம்சாட்ட பட்டருக்கு ஆஜராக தயாராக இருக்க வேண்டும் என்பது வக்கீல்களின் தொழில் தத்மம்….

ஒரே ஒரு நிபந்தனை - நான் குற்றம் புரிந்தேன் ஆனால் புரியவில்லை என வழக்காடுங்கள் என கேட்டால் அதன் பின் அவருக்காக வழக்காடாது விலக வேண்டும்.

இது voluntary code of conduct ஆ?

அல்லது தகமையின்  (அதாவது solicitor, barrister போன்றவற்றின், அதாவது authorised to conduct litigation) நிபந்தனையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி வக்கீல்களை எழுந்தமானமாக குறை சொல்லாதீர்கள்.எமது நன்பர்களும் வக்கில்களாக உள்ளனர்.😄 பகிடிக்கு.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

இருட்டடி சிஷ்டம் இப்பவும் இருக்குத்தானே.....? 

 

ஊரில் படித்த  காலத்தில்

மிகவும்  உயரமான விஞ்ஞான பாட  ஆசிரியர் 

எங்களுக்கு  கையில் அடிமட்டத்தால்  அடிப்பார்

பெண் பிள்ளைகளுக்கு வயிற்றில்  நுள்ளுவார்

அது  கொஞ்சம்  கொஞ்சமாக  மேலே கீழே போகத்தொடங்க..

நண்பிகள்  எமது காதில்  போட

அதை  நாம் வெளியில்  உள்ள  அண்ணைமாரிடம்  போட...

ஒரு நாள்  ஒரு  வளைவில்  அவரது  மோட்டார்  சைக்கிளை  மறித்து

சாக்கை  முகத்தில் போட்டு  போட்ட  போட்டில்....

கொஞ்சநாள்  ஆள் வகுப்புக்கே வரவில்லை

அதன்  பிறகு எல்லாம்  சுபம்

 

Edited by விசுகு
எழுத்துப்பிழை திருத்தம்
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.