Jump to content

முல்லைத்தீவில் மாணவிகள் பலர் துஷ்பிரயோகம் - ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கைது

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

தனது சுய விருப்பு வெறுப்புக்கு இடம் கொடாமல் ஒரு குற்றம்சாட்ட பட்டருக்கு ஆஜராக தயாராக இருக்க வேண்டும் என்பது வக்கீல்களின் தொழில் தத்மம்….

ஒரே ஒரு நிபந்தனை - நான் குற்றம் புரிந்தேன் ஆனால் புரியவில்லை என வழக்காடுங்கள் என கேட்டால் அதன் பின் அவருக்காக வழக்காடாது விலக வேண்டும்.

தொடர்ந்தும் வாதாடினால் அவர் வக்கீல் அல்ல கள்ளன். அல்லது கள்ள வக்கீல். கிட்னி திருடும் வைத்தியர் எப்படி கள்ள வைத்தியரோ அப்படி.

முதலாவதை (வைத்தியர்) மேற்கு நாடுகளின் மக்களை போலவே புரிந்து கொள்ளும் நாம்.

இரெண்டாவதை (வக்கீல்) புரிய தவறுகிறோம். உங்களை போன்ற சிந்தனாவாதிகள் கூட.

வக்கீல்கள்/சட்டத்தரணிகள் சட்டத்தை நிலைநாட்டுவதை தொழில் தர்மமாகக் கொண்டிருந்தாலும் பணம் உள்ளவர்கள் சட்டத்தை வளைத்து தப்பிவிடுவதை உலகமெல்லாம் பார்க்கின்றோம். O.J. Simpson மீதான வழக்கில் அவரைக் கொலைக்குற்றச்சாட்டில் இருந்து தப்ப வைத்ததும் Jeffrey Epstein போன்றவர்களின் முக்கியமான கூட்டுக்கள் (நம்ம இளவரசர் அண்ட்ரூ உட்பட) தண்டிக்கப்படாமல் இருப்பது பணத்தினால்தான். ஆக சட்டம் எல்லோருக்கும் பொதுவாக வேலை செய்யாது.

குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரின் சட்டத்தரணிக்கு அந்த ஆசிரியர் உண்மையைச் சொன்னாரா இல்லையா என்று தெரியாது. ஆனால் அவரைக் காப்பாற்ற (நீதியைப் பெற்றுக்கொடுக்க அல்ல) பணம்தான் உதவி செய்யக்கூடும். முன்னர் புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ்குமாரின் பணம் பாதாளம்வரை பாய்ந்துதான் தப்பியுள்ளார். அதற்கு உடந்தையானவர்கள் சட்டம், ஒழுங்கு நீதியை நிலைநாட்டும் தொழிலில் இருப்பவர்கள்தான்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும்வரை அவர் நிரபராதியென்றே சட்டம் சொல்கிறது. ஆகவேதான் அவருக்கும் சட்டத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கும் அனைத்து அடிப்படை உரிமைகளும் வழங்கப்படவேண்டும் என்று கூறுகிறார்கள். 

ஆனால், ஒருவர் உண்மையான குற்றவாளியென்று உறுதியாகத் தெரியும் பட்சத்திலோ அல்லது அதுதான் உண்மையென்று நாம் நம்பும் பட்சத்திலோ அவர் கட்டாயம் தண்டிக்கப்படவேண்டும் என்கிற ஆதங்கம் எமக்கு ஏற்படுகிறது. ஆகவே, இப்படியானவர்களுக்கு ஆதரவாக வழக்காட முன்வருபவர்கள் சட்டத்தின் ஓட்டைகளைப் பாவித்து இவர்களைத் தப்பவைத்துவிடுவார்கள் என்கிற ஐய்யமே எம்மை இவர்கள் மீது ஆத்திரம் கொள்ள வைத்துவிடுகிறது.

முன்னரும் கூட உண்மையாகவே குற்றமிழைத்தவர்கள் என்று நாம் நம்பிய பலர் வக்கீல்களின் திறமையினாலோ அல்லது பணத்தின் மூலமாகவோ தண்டனைகளிலிருந்து தப்பவைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் சிலவேளைகளில் நிரபராதிகளாகவோ அல்லது உண்மையான குற்றவாளிகளாகவோ இருந்திருக்கலாம், ஆனால் முடிவில் நிரபராதிகள் என்றே விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அனுபவங்களே பலரை இந்த வக்கீல்கள் மீது தமது ஆத்திரத்தைத் திருப்பக் காரணமாகியிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

முல்லைத்தீவில் நடைபெற்ற இந்த பாதகச் செயலிற்குக் காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும். இவர்களுக்கு நீதியின்பால் கிடைக்கும் சலுகைகள் கிடைப்பதில் தவறில்லை. ஆனால், நீதி சரியான முறையில் வழங்கப்படுவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். சட்டமும் ஒழுங்கும் சீரழிந்து போயுள்ள இலங்கையில் இப்போது இது சாத்தியமா? 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

தனது சுய விருப்பு வெறுப்புக்கு இடம் கொடாமல் ஒரு குற்றம்சாட்ட பட்டருக்கு ஆஜராக தயாராக இருக்க வேண்டும் என்பது வக்கீல்களின் தொழில் தத்மம்….

சிறு திருத்தம்! தர்மத்தைவிட அதர்மமே மேலோங்கியுள்ளது எங்கும், அதிலும்  வக்கீல், நீதித்துறை அதிஉச்சம். குற்றம் சாட்டப்பட்டவரையல்ல, பட்டப்பகலில்,  நாலுபேர்நடுவில்  குற்றமிழைத்தவரை சுற்றவாளியாக்கி, மீண்டும் அவரை குற்றமிழைக்கவும், அப்பாவிகளை அச்சுறுத்தவும் இந்த வக்கீல்களும், நீதிமன்றங்களும் அங்கீகாரம் அளிக்கின்றன. இதனாலேயே நாட்டில்  இன்று கொலை கலாச்சாரம் நிறைந்து காணப்படுகிறது. அப்பாவிகள் பணமில்லாததால்; "நிரபராதி வெகுசன விரோதியாக்கப்படுகின்றனர்."  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இங்கே அனேக தொழில்கள் தர்மத்தின் படி நடைபெறுகிறதா என்பது சந்தேகமே. வரி ஏய்ப்பு செய்வோர், வரிகள் தொடர்பான அறிவு/அனுபவம் இல்லாதவர்களை ஏய்க்கும் கணக்காளர்கள், கிட்னி களவெடுக்கும் வைத்தியர்கள், பாடசாலையில் ஒழுங்காக படிப்பு சொல்லிக்கொடுக்காமல் தனது தனியார் வகுப்பிற்கு வரச்சொல்லும் ஆசிரியர்கள், தொழிநுட்ப அறிவை வைத்து அப்பாவி மனிதர்களை ஏமாற்றும் IT வல்லுனர்கள், .. என எடுத்துக்காட்டுகள் அதிகம். ஆனால் வக்கீல்களின் நிலையை தனித்து குறை கூறுவது சரியென படவில்லை. 

வக்கீல்களும் அவர்களுடைய தொழில் தர்மத்திற்கு ஏற்ப கட்டுப்பட்டே தொழில் புரிகிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவருக்காக வாதடுவதை தவிர கோர்ட்டிற்கு வெளியே வந்து தனிப்பட்ட ரீதியில் அந்த நபரை ஆதரிக்கப் போவதில்லை. இன்னொரு வழக்கு வரும் பொழுது நிரபராதிக்காகவும் வாதாடுவார்கள். Legal Aid போன்ற வசதிகள் அனேக நாடுகளில் உள்ளது. அதில் பல சட்ட வல்லுனர்கள், அரசின் உத்தரவுப்படி வக்கீல் வசதி இல்லாத குற்றம் சாட்டப்பட்டவருக்காகவும் வாதாடுவார்கள், நிரபராதிக்காகவும் வாதாடுவார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன். 

இங்கே பிரச்சனை, இந்த மாதிரி சீர்கேடுகள் அதிகரித்து வருவதை எப்படி தடுப்பது என்பதே!. எமது கலாச்சாரத்தில் ஊறி இருக்கும் “மற்றவர்கள் என்ன சொல்வார்களே”எனப் பயந்து இந்த மாதிரி செயல்களை மறைப்பதையும்,  வெளியே கொண்டு வராமல் இருப்பதையும் குறைக்கவேண்டும். சரியான வழிகாட்டல்களை வழங்கவேண்டும். முக்கியமாக வீட்டிலிருந்தே மாற்றங்கள் வரவேண்டும்.  

 • Like 5
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

துஷ்பிரயோகம் செய்த மாணவர்களுக்கு வலை

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று உயர்தர மாணவர்களை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவில் உயர்தரத்தில் கல்விகற்று வரும் பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் மற்றும் மாணவிகளின் நிர்வாண காணொளிகள் வைத்துள்ள குற்றச்சாட்டில் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் உள்ளிட்ட 5 மாணவர்கள் முல்லைத்தீவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு நகரப்பகுதியில் பிரத்தியேக வகுப்பு கொடுக்கும் (கணிதபாடம்) ஆசிரியர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடந்த 18.06.2022 அன்று முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவியால் முறைப்பாடு செய்யப்பட்டது.
 
பிரத்தியேக வகுப்பு என்ற பெயரில் வீடுகளில் சென்று கணித பாடம் கற்பித்துவந்த  அபிவிருத்தி உத்தியோகத்தராக அண்மையில் தெரிவான குறித்த சந்தேக நபர், முல்லைத்தீவு நகரில் உள்ள முதன்மை பாடசாலை ஒனறில் ஆசிரியராக நியமனம் பெற்று கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் மாணவ, மாணவிகளின் வீடுகளுக்கு சென்று பிரத்தியேகமாக கணித பாடம் கற்பித்து வந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில், செல்வவுரம், சிலாவத்தை, உண்ணாப்பிலவு, கள்ளப்பாடு பகுதிகளை சேர்ந்த நான்கு உயர்தர மாணவர்கள் கடந்த 20ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் முதன்மை காரணமான மாணவியின் நண்பனான (18 வயது) கள்ளப்பாடு தெற்கினை சேந்த உயர்தர மாணவன் கடந்த 21ஆம் திகதி முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது நண்பியான பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படத்தை எடுத்து பிரத்தியேக வகுப்பு ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும்  பகிர்ந்து கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் தலைமறைவான நிலையில் கடந்த 23ஆம் திகதி அன்று சட்டத்தரணி ஒருவர் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார். இவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்குகள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறாக பாதிக்கப்பட்ட மாணவிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்திய முல்லைத்தீவு பொலிஸார், ஆறு மாணவிகளிடம் விசாரணைகள் மேற்கொண்டு அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர்.

சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றும் குறித்த அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று மாணவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன் இந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் 30 ஆம் திகதி நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

https://www.tamilmirror.lk/செய்திகள்/துஷ்பிரயோகம்-செய்த-மாணவர்களுக்கு-வலை/175-299245

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பாடசாலைகளில் 10 வயதில் இருந்து ஆண்பெண் பிள்ளைகளுக்கு பாலியல் சம்பந்தமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டு பதின்ம வயதில் வரும்ஈர்ப்பினால் வரும் பின்விளைவுகளை விளக்க வேண்டும்.முன்பின் தெரியாதவர்களுடன் பழகும்போது அவதானமாகவும் தொiபேசி இலக்கங்கள் கொடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட வேண்டும்.யாராவது வித்தியாசமான முறையில் அணுகினால் பாடசாலை ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விளக்கம்..

12 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

வக்கீல்களும் அவர்களுடைய தொழில் தர்மத்திற்கு ஏற்ப கட்டுப்பட்டே தொழில் புரிகிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவருக்காக வாதடுவதை தவிர கோர்ட்டிற்கு வெளியே வந்து தனிப்பட்ட ரீதியில் அந்த நபரை ஆதரிக்கப் போவதில்லை.

உண்மை .ஆனால் நாங்கள் சொகுசு வாகனம் வாங்குவதற்காக ஹெரோயின் வியாபாரம் செய்து பிடிபட்டவர் ஒரு தமிழர் என்பதற்காக அவர் விடுதலை செய்யபட வேண்டும் என்று வெளியே தனிப்பட்ட ரீதியில் வாதாடினோமே.

 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

பாடசாலைகளில் 10 வயதில் இருந்து ஆண்பெண் பிள்ளைகளுக்கு பாலியல் சம்பந்தமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டு பதின்ம வயதில் வரும்ஈர்ப்பினால் வரும் பின்விளைவுகளை விளக்க வேண்டும்.முன்பின் தெரியாதவர்களுடன் பழகும்போது அவதானமாகவும் தொiபேசி இலக்கங்கள் கொடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட வேண்டும்.யாராவது வித்தியாசமான முறையில் அணுகினால் பாடசாலை ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படவேண்டும்.

நல்ல ஆலோசனை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 25/6/2022 at 15:30, Kadancha said:

இது voluntary code of conduct ஆ?

அல்லது தகமையின்  (அதாவது solicitor, barrister போன்றவற்றின், அதாவது authorised to conduct litigation) நிபந்தனையா?

கோர்ட்டுக்கு தெரிந்தே பொய் சொல்ல கூடாது அல்லது கோர்ட்டை தவறாக வழிநடத்த கூடாது என்பதுதான் வக்கீல்களுக்கான அடிப்படை தொழில் சார் நிபந்தனை. (Duty to not lie to or mislead the courts).

இதை ஒவ்வொரு சட்ட நடைமுறை கோவையும் (procedure rules) உம் வலியுறுதும். பார் கவுன்சில் போன்றைவையும் ethics code இல் வலியுறுத்தும். 

ஒருவர் மீது கொலை குற்றம் சாட்டபட்டுள்ளது என வைப்போம்.

அவரின் வக்கீல் அவரை நீ கொலை செய்தாயா இல்லையா என கேட்க மாட்டார்.

மாறாக நீ குற்றத்தை ஏற்கிறாயா இல்லையா? என்றே கேட்பார்கள்.

ஏற்கவில்லை என்றால் / ஏன் ஏற்கவில்லை? என்பதை அவர் சார்பாக வக்கீல் எடுத்துரைப்பார்.

இப்படி கதைக்கும் போது ஏதோ ஒரு சந்தர்பத்தில் நான் கொலை செய்தேன் - ஆனால் அப்படி இல்லை என வாயாடுங்கள் என குற்றவாளி கேட்டால் - அத்தோடு வக்கீல் வழக்கில் இருந்து விலக வேண்டும்.

இல்லை என்றால் - இது வெளியே வந்தால் - தொழில் உரிமம் இரத்தாகும்.

இது மிக சுருக்கமாக.

 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 25/6/2022 at 15:15, பிரபா சிதம்பரநாதன் said:

குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தனக்காக வாதாட ஒருவரும் இல்லை எனில் அரசினை நாடுவார்கள் ஏனெனில் அது அவர்களது உரிமை. அப்படி அரசு நியமிக்கும் சட்டதரணி, தான் இந்த நபருக்காக வாதாட முடியாது என கூற முடியுமா? 

Conflict of interest அல்லது confidentiality போன்றவறை காரணம் காட்டினால் நிச்சயமாக வாதாட மாட்டேன் என கூறலாம்.

ஆனால் இவர்கள் மாதச்சம்பளம் அல்லது ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்கள் - தனிப்பட்ட விருப்பு வெறுப்பு (உ+ம் - மதம் மாற்ற சட்டம்) காரணமாக காட்டினால் - விட மாட்டார்கள்.

இராணுவ, பொலீஸ், இமிமிகிரேசன் வேலை போலத்தான் இதுவும்.

On 25/6/2022 at 18:23, கிருபன் said:

வக்கீல்கள்/சட்டத்தரணிகள் சட்டத்தை நிலைநாட்டுவதை தொழில் தர்மமாகக் கொண்டிருந்தாலும் பணம் உள்ளவர்கள் சட்டத்தை வளைத்து தப்பிவிடுவதை உலகமெல்லாம் பார்க்கின்றோம். O.J. Simpson மீதான வழக்கில் அவரைக் கொலைக்குற்றச்சாட்டில் இருந்து தப்ப வைத்ததும் Jeffrey Epstein போன்றவர்களின் முக்கியமான கூட்டுக்கள் (நம்ம இளவரசர் அண்ட்ரூ உட்பட) தண்டிக்கப்படாமல் இருப்பது பணத்தினால்தான். ஆக சட்டம் எல்லோருக்கும் பொதுவாக வேலை செய்யாது.

குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரின் சட்டத்தரணிக்கு அந்த ஆசிரியர் உண்மையைச் சொன்னாரா இல்லையா என்று தெரியாது. ஆனால் அவரைக் காப்பாற்ற (நீதியைப் பெற்றுக்கொடுக்க அல்ல) பணம்தான் உதவி செய்யக்கூடும். முன்னர் புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ்குமாரின் பணம் பாதாளம்வரை பாய்ந்துதான் தப்பியுள்ளார். அதற்கு உடந்தையானவர்கள் சட்டம், ஒழுங்கு நீதியை நிலைநாட்டும் தொழிலில் இருப்பவர்கள்தான்.

மீண்டும் நான் சொன்ன கூட்டு புரியலின்மையை மிக தெளிவாக விளக்கி உள்ளீர்கள் ஜி.

பணத்தை பெற்று கொண்டு அனாதை சிறுவர்களிடம் கிட்னி திருடும் டாகடர்கள் உள்ளார்கள்.

அதே போல் பணத்தை பெற்று கொண்டு பொய் வழக்கு பேசும் வக்கீல்களும் உள்ளார்கள்.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

குறிப்பாக கிரிமினல் வழக்கில். குற்றம் சாட்டும் அரச தரப்பே வழக்கை நிரூபிக்க வேண்டும்.

The burden of proof is on the prosecution. அதுவும் ஒருவர் குற்றம் செய்தார் என நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் (beyond reasonable doubt) நிறுவ வேண்டும்.

ஆகவே குற்றம் சாட்டபட்டசரின் வக்கீல் - அவர் குற்றம் செய்தாரா இல்லையா என ஆராயத்தேவையில்லை.

அவர் மீதான குற்றத்தை அரசு நிரூபித்துள்ளதா இல்லையா என்றே ஆராய வேண்டும்.

இதைத்தான் - சட்டத்தின் ஓட்டையால் வக்கீல்கள் தப்ப வைக்கிறார்கள் என தப்பாக புரிந்து கொள்கிறோம்.

வக்கீல்கள் நீதிபதிகள் அல்ல. குற்றம் செய்தாரா இல்லையாஎன ஆராய்வது முடிவெடுப்பது நீதி பதியின் வேலை.

அரச வக்கீலின் வேலை குற்றத்தை சரிவர நிறுவுவது.

எதிர் வக்கீலின் வேலை குற்றம் நிரூபிக்க படவில்லை என்பதை - குற்றம் சாட்டபட்டவரின் அறிவுத்தலுஜ்கு அமைய நிறுவுவது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இதில் இரெண்டு வக்கீலின் வேலையும் சட்டம் நிலை பெற அத்தியாவசியம்.

ஒரு பக்கம் இளைத்தால் - குற்றம் பெருகும்.

மறுபக்கம் இளைத்தால் - அரசு சட்டத்தை கண்மூடித்தனமாக பயன்படுத்தும்.

பிகு

நம்மீது ஒரு பொய் குற்அசாட்டு சுமத்த படும் வரை வக்கீல்கள் மிக மோசமானவர்களாகவே தெரிவார்கள்.🤣

On 26/6/2022 at 01:08, ரஞ்சித் said:

குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும்வரை அவர் நிரபராதியென்றே சட்டம் சொல்கிறது. ஆகவேதான் அவருக்கும் சட்டத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கும் அனைத்து அடிப்படை உரிமைகளும் வழங்கப்படவேண்டும் என்று கூறுகிறார்கள். 

ஆனால், ஒருவர் உண்மையான குற்றவாளியென்று உறுதியாகத் தெரியும் பட்சத்திலோ அல்லது அதுதான் உண்மையென்று நாம் நம்பும் பட்சத்திலோ அவர் கட்டாயம் தண்டிக்கப்படவேண்டும் என்கிற ஆதங்கம் எமக்கு ஏற்படுகிறது. ஆகவே, இப்படியானவர்களுக்கு ஆதரவாக வழக்காட முன்வருபவர்கள் சட்டத்தின் ஓட்டைகளைப் பாவித்து இவர்களைத் தப்பவைத்துவிடுவார்கள் என்கிற ஐய்யமே எம்மை இவர்கள் மீது ஆத்திரம் கொள்ள வைத்துவிடுகிறது.

முன்னரும் கூட உண்மையாகவே குற்றமிழைத்தவர்கள் என்று நாம் நம்பிய பலர் வக்கீல்களின் திறமையினாலோ அல்லது பணத்தின் மூலமாகவோ தண்டனைகளிலிருந்து தப்பவைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் சிலவேளைகளில் நிரபராதிகளாகவோ அல்லது உண்மையான குற்றவாளிகளாகவோ இருந்திருக்கலாம், ஆனால் முடிவில் நிரபராதிகள் என்றே விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அனுபவங்களே பலரை இந்த வக்கீல்கள் மீது தமது ஆத்திரத்தைத் திருப்பக் காரணமாகியிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

முல்லைத்தீவில் நடைபெற்ற இந்த பாதகச் செயலிற்குக் காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும். இவர்களுக்கு நீதியின்பால் கிடைக்கும் சலுகைகள் கிடைப்பதில் தவறில்லை. ஆனால், நீதி சரியான முறையில் வழங்கப்படுவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். சட்டமும் ஒழுங்கும் சீரழிந்து போயுள்ள இலங்கையில் இப்போது இது சாத்தியமா? 

உங்களுக்குமான பதிலே மேலே🙏🏾.

Posted (edited)
16 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

என எடுத்துக்காட்டுகள் அதிகம். ஆனால் வக்கீல்களின் நிலையை தனித்து குறை கூறுவது சரியென படவில்லை. 

வக்கீல்களும் அவர்களுடைய தொழில் தர்மத்திற்கு ஏற்ப கட்டுப்பட்டே தொழில் புரிகிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவருக்காக வாதடுவதை தவிர கோர்ட்டிற்கு வெளியே வந்து தனிப்பட்ட ரீதியில் அந்த நபரை ஆதரிக்கப் போவதில்லை. இன்னொரு வழக்கு வரும் பொழுது நிரபராதிக்காகவும் வாதாடுவார்கள். Legal Aid போன்ற வசதிகள் அனேக நாடுகளில் உள்ளது. அதில் பல சட்ட வல்லுனர்கள், அரசின் உத்தரவுப்படி வக்கீல் வசதி இல்லாத குற்றம் சாட்டப்பட்டவருக்காகவும் வாதாடுவார்கள், நிரபராதிக்காகவும் வாதாடுவார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன். 

நடிகர் M R ராதா சொன்னது நினைவுக்கு வருகிறது. 25 வருசமா பொய் பேசிய வக்கீல், நீதிபதி ஆகிய பின்னர், உண்மையை தேடுவார் என்று நம்ம முடியுமா என்ன?

வக்கீல்கள், அவர்களது வாடிக்கையாளர்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப வைக்க அதே சட்டம் அனுமதி அளிக்கும் வகையில் வேலை செய்கிறார்கள். அவ்வளவுதான். 🤗

***

விசயம் ஆசிரியர், கணக்கு சொல்லிக் கொடுத்தாரா இல்லையா என்பது தான். இல்லை என்றால்,என்ன செய்தார் என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும்.

இங்க என்னப்பா, வக்கீல், என்ன செய்யிறார் எண்டு தாவியாச்சு எண்டு சொல்லுங்கோ... 😁

Edited by Nathamuni
 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இங்கே அனேக தொழில்கள் தர்மத்தின் படி நடைபெறுகிறதா என்பது சந்தேகமே. வரி ஏய்ப்பு செய்வோர், வரிகள் தொடர்பான அறிவு/அனுபவம் இல்லாதவர்களை ஏய்க்கும் கணக்காளர்கள், கிட்னி களவெடுக்கும் வைத்தியர்கள், பாடசாலையில் ஒழுங்காக படிப்பு சொல்லிக்கொடுக்காமல் தனது தனியார் வகுப்பிற்கு வரச்சொல்லும் ஆசிரியர்கள், தொழிநுட்ப அறிவை வைத்து அப்பாவி மனிதர்களை ஏமாற்றும் IT வல்லுனர்கள், .. என எடுத்துக்காட்டுகள் அதிகம். ஆனால் வக்கீல்களின் நிலையை தனித்து குறை கூறுவது சரியென படவில்லை. 

வக்கீல்களும் அவர்களுடைய தொழில் தர்மத்திற்கு ஏற்ப கட்டுப்பட்டே தொழில் புரிகிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவருக்காக வாதடுவதை தவிர கோர்ட்டிற்கு வெளியே வந்து தனிப்பட்ட ரீதியில் அந்த நபரை ஆதரிக்கப் போவதில்லை. இன்னொரு வழக்கு வரும் பொழுது நிரபராதிக்காகவும் வாதாடுவார்கள். Legal Aid போன்ற வசதிகள் அனேக நாடுகளில் உள்ளது. அதில் பல சட்ட வல்லுனர்கள், அரசின் உத்தரவுப்படி வக்கீல் வசதி இல்லாத குற்றம் சாட்டப்பட்டவருக்காகவும் வாதாடுவார்கள், நிரபராதிக்காகவும் வாதாடுவார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன். 

இங்கே பிரச்சனை, இந்த மாதிரி சீர்கேடுகள் அதிகரித்து வருவதை எப்படி தடுப்பது என்பதே!. எமது கலாச்சாரத்தில் ஊறி இருக்கும் “மற்றவர்கள் என்ன சொல்வார்களே”எனப் பயந்து இந்த மாதிரி செயல்களை மறைப்பதையும்,  வெளியே கொண்டு வராமல் இருப்பதையும் குறைக்கவேண்டும். சரியான வழிகாட்டல்களை வழங்கவேண்டும். முக்கியமாக வீட்டிலிருந்தே மாற்றங்கள் வரவேண்டும்.  

மிக தெளிவான பார்வை.

எனது அனுபவத்தில் ஜனநாயலம் மேம்பட்ட (ஒப்பீட்டளவில்) என்ன நாம் கருதும் நாடுகளில் எல்லாம் சாதாரண குடிகளுக்கே இந்த புரிதல் இருக்கிறது.

சின்ன பிள்ளைகளை பாலியல் வன் கொடுமை செய்தோருக்கு ஆதரவாக வாதாடும் வக்கீல்கள்களை அதிகம் யாரும் விமர்சிப்பது இல்லை.

ஆனால் - வெளிநாடுகளில் வந்து பல படிப்பு படித்த பின்னும் கூட ஆசிய, ஆபிரிக்க மனங்களில் இந்த விடயம் ஏறாது.

ஆனால் வெளிநாட்டில் படிக்கும் அடுத்த தலைமுறை வக்கீல்களை இப்படி விமர்சிப்பதை நான் காணவில்லை.

ஆகவேதான் ஆரம்பதிலேயே சொன்னேன்.

இந்த மாதிரியான சிந்தனை, புரிதல் இன்மை - கிட்டதட்ட ஒரு கலாச்சார நம்பிக்கை.

வெள்ளை பெண்தான் அழகு, கறுத்த பெண் அழகில்லை என்பதை போல.

நமது ஊரில் கறுப்பி என ஒதுக்கி வைக்கும் பெண்ணை வெள்ளையின ஆண் ebony goddess என கொண்டாடுவது போலத்தான் இதுவும்.

பிகு

முதல் பதிவில் எழுதியது போல யாழில் வந்த எதிர்வினைகள் எதிர்பார்த்ததுதான். 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புலவர் said:

பாடசாலைகளில் 10 வயதில் இருந்து ஆண்பெண் பிள்ளைகளுக்கு பாலியல் சம்பந்தமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டு பதின்ம வயதில் வரும்ஈர்ப்பினால் வரும் பின்விளைவுகளை விளக்க வேண்டும்.முன்பின் தெரியாதவர்களுடன் பழகும்போது அவதானமாகவும் தொiபேசி இலக்கங்கள் கொடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட வேண்டும்.யாராவது வித்தியாசமான முறையில் அணுகினால் பாடசாலை ஆசிரியர்களுக்கும்? பெற்றோர்களுக்கும் சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படவேண்டும்.

எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் வயதுக்கோளாறு கேளாது,  காதலுக்கு கண்ணில்லை.

வேலியே பயிரை மேய்ந்த கதைதான்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 hours ago, goshan_che said:

வெளிநாடுகளில் வந்து பல படிப்பு படித்த பின்னும் கூட ஆசிய, ஆபிரிக்க மனங்களில் இந்த விடயம் ஏறாது.

100 வீதம் உண்மை.

6 hours ago, goshan_che said:

இந்த மாதிரியான சிந்தனை, புரிதல் இன்மை - கிட்டதட்ட ஒரு கலாச்சார நம்பிக்கை.

ஈழத்தில் தலிபான்கள்பாணியிலான ஒரு கலாச்சார நம்பிக்கை 🤦‍♂️

Edited by விளங்க நினைப்பவன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 25/6/2022 at 07:01, விசுகு said:

அதிகார பலமும் (ஆசிரியர்) சமுதாயம் மீதான பயமுமே (வெளியே தெரிந்தால்) இவை எம்மக்களிடையே தொடர காரணம். வெளிநாடுகளில் இவற்றை அகற்றி விட்டுள்ளார்கள். 

திரி வேறு பக்கம் போகுது?

இன்றைய பிரெஞ்சு செய்தி

பெரிய பாடசாலைகளில் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு அதிகரித்து வருகிறது?? 

On 25/6/2022 at 16:02, goshan_che said:

அருமை.

மூனிச்சில் எது நடக்கிறதோ அது சில ஆண்டுகள் களித்தாவது முல்லைதீவுக்கும் வரும்.

தொடர்பாடாலால் வரும் நல் விளைவுகளை மட்டும் நாம் பெறலாம் தீயவற்றை ஒதுக்கி விடுவோம் என்பது அப்பாவித்தனமா நம்பிக்கை.

மனித மிருகங்கள் எங்கேயும் இருக்கும். நாம் தமிழர்கள் கலாச்சாரத்தில் உயர்ந்தவர்கள் என்ற பிம்பங்கள் இதை இல்லை என்றாக்காது.

இந்த விடயங்கள் நடைபெற உதவியாக இருக்கும் பூடகங்களை, அதில் ஒன்று போலி கலாச்சார பூச்சு, களைவதே ஒரே வழி.

பிகு

இயக்க காலத்தில் கூட ஆசிரியர்கள் இது போல குற்றங்களுக்கு தண்டிக்க பட்டுள்ளார்கள். அப்போ மொபைல் இல்லை தண்டிக்க ஆள் இருந்தது - இதுதான் வித்தியாசம்.

☹️

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

மீண்டும் நான் சொன்ன கூட்டு புரியலின்மையை மிக தெளிவாக விளக்கி உள்ளீர்கள் ஜி.

பணத்தை பெற்று கொண்டு அனாதை சிறுவர்களிடம் கிட்னி திருடும் டாகடர்கள் உள்ளார்கள்.

அதே போல் பணத்தை பெற்று கொண்டு பொய் வழக்கு பேசும் வக்கீல்களும் உள்ளார்கள்.

பணவசதியில்லாத குற்றம்சாட்டப்பட்டவர்களை கிரிமினல் வக்கீல்கள் குற்றம் இல்லை என்று விடுவிப்பதைவிட பணவசதி மிகுந்தவர்களை குற்றங்களில் இருந்து காப்பாற்றுவதை காண்பதால் வரும் நம்பிக்கையீனம். அதனால் வக்கீல்களை நம்புவது குறைவு.

18 hours ago, கிருபன் said:

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் தலைமறைவான நிலையில் கடந்த 23ஆம் திகதி அன்று சட்டத்தரணி ஒருவர் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார். இவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

இவர் யாரென்று ஒரு வீடியோ பார்த்தேன். யாழில் இணைக்கமுடியாது!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பணவசதியில்லாத குற்றம்சாட்டப்பட்டவர்களை கிரிமினல் வக்கீல்கள் குற்றம் இல்லை என்று விடுவிப்பதைவிட பணவசதி மிகுந்தவர்களை குற்றங்களில் இருந்து காப்பாற்றுவதை காண்பதால் வரும் நம்பிக்கையீனம். அதனால் வக்கீல்களை நம்புவது குறைவு.

நியாயம்தான். ஆனால் இதே நிலை மருத்துவம் உட்பட எல்லா துறையிலும் உண்டே ஜி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

நியாயம்தான். ஆனால் இதே நிலை மருத்துவம் உட்பட எல்லா துறையிலும் உண்டே ஜி.

நான் நினைக்கின்றேன்
சட்டம்  நீதித்துறை
களவு  பொய்  கொலை சார்ந்தே  இருப்பதால்
இதில்  அதிகம் இது போன்ற  குற்றச்சாட்டுதல்களும்
தவறுகளும் இருக்கமுடியும்  என??

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நான் நினைக்கின்றேன்
சட்டம்  நீதித்துறை
களவு  பொய்  கொலை சார்ந்தே  இருப்பதால்
இதில்  அதிகம் இது போன்ற  குற்றச்சாட்டுதல்களும்
தவறுகளும் இருக்கமுடியும்  என??

நிச்சயமாக. இந்த துறையில் ஏனைய துறைகளை விட ஊழல் வாய்ப்புகள் அதிகம் என்பது உண்மையே.

உதாரணமாக, புங்குடுயீவு மாணவி வழக்கில் சுவிஸ் குமாருக்கு ஆஜாரானதி தப்பேதும் இல்லை. ஆனால் பின்னர் சட்டத்துக்கு மாறாக தப்பவைக்க, சாட்சிகளை கலைக்க  முயன்அயே தப்பு.

ஆனால் வக்கீல் மட்டும் அன்றி ஏனைய துறைசார் பொலிஸ், நிர்வாக அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கூட சம்பந்தமாயினர்.

வக்கீல்கள் சேவை செத்வோர் அல்ல. அதுவும் ஒரு தொழில்.

அவர்கள் நல்லவர்கள் என நான் வாதாடவில்லை.

ஆனால் குற்றம்சாட்ட பட்டவஎஉக்கு ஆஜராவதே கூடாது என்பது ஏற்புடையது அல்ல.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

உண்மை  தான்

ஆனால்  சில  இடங்களில்

ஏன் நீங்கள்  குறிப்பிட்ட புங்குடுதீவு மாணவி  வித்தியா கொலை  வழக்கிலும்

100 வீதம் உண்மை மற்றும்  சமூகத்துக்கு ஆபத்தானது  என  தெட்டத்தெளிவாக  தெரிந்த  பின்பும் சட்டத்தரணிகள்  ஆயாராவது கவலைக்குரிய  விடயம் தானே???

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

100 வீதம் உண்மை மற்றும்  சமூகத்துக்கு ஆபத்தானது  என  தெட்டத்தெளிவாக  தெரிந்த  பின்பும் சட்டத்தரணிகள்  ஆயாராவது கவலைக்குரிய  விடயம் தானே???

நிச்சயமாக இல்லை.

இப்படி சிந்திப்பதும் சட்டம் எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ளாததின் விளைவே என்பேன்.

எப்போது ஒருவர் 100% குற்றம் செய்தார் என நிரூபிக்கப்படும்? பத்திரிகை செய்தி மூலமா? பொலீஸ் சொல்வதன் மூலமா? ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பின்பாவதா?

இல்லை.

எப்போ நீதி மன்றில் ஒப்பு கொள்ள படுகிறதோ அல்லது எப்போ நீதிமன்றம் சாட்சியங்களை விசாரித்து, யூரியோ அல்லதுநீதிபதியோ தீர்ப்பு கொடுக்கிறார்களோ அப்போதுதான் குற்றம் நீங்கள் சொன்னது போல் 100% நிரூபிக்கபடும். தீர்ப்பில் தவறு எனில் அது கூட அப்பீலுக்கு உள்ளாகலால்ம்.

ஆகவே வெளிபடையான ஒரு வழக்கு விசாராணை முடியும் வரை ஒரு குற்றவாளிக்கு யாராவது ஆஜராகத்தான் வேண்டும்.

பொதுவாக வக்கீல் இல்லாமல் ஆராவது வந்தால் நீதிபதிகள் தெண்டித்து ஒரு வக்கீலை அவருக்கு ஏற்பாடு செய்வார்கள்.

ஏனென்றால் அப்போதுதான் நீதிபதி தான் இரு தரப்பையும் சமனாக நடத்துவதாக தன்னளவில் திருப்தி அடைவார் .

வள்ளுவர் கூறியதுதான்.

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் 

அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு.

அதே போல்

கண்ணால் காண்பதும் பொய்

காதால் கேட்பதும் பொய்

தீர விசாரித்து அறிவதே மெய்.

வழக்கு தீர விசாரிக்கப்படும் ஒரே ஒரு இடம் நீதி மன்று மட்டுமே.

அங்கே முடிவு வரும் வரை (அப்பீல்கள் உள்ளடங்கலாக) குற்றம் சுமத்தபட்டவருக்கு ஆராவது ஒரு வக்கீல் ஆஜராகியே ஆகவேண்டும்.

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.