Jump to content

கையிலிருந்த அறிவுறுத்தல் குறிப்பை தவறுதலாக அம்பலப்படுத்திய ஜோ பைடன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கையிலிருந்த அறிவுறுத்தல் குறிப்பை தவறுதலாக அம்பலப்படுத்திய ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அந்நாட்டு நேரப்படி நேற்று  வியாழக்கிழமை (23.06.2022) இடம்பெற்ற தொழிற்றுறை நிறைவேற்றதிகாரிகளுடனான சந்திப்பின் போது, அவர் எங்கு  நிற்க வேண்டும்,  என்ன செய்ய வேண்டும் என்பன தொடர்பில் அவருக்கு ஞாபகப்படுத்தும் வகையில் அவருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் கடதாசிக் குறிப்பை  அவர் தவறுதலாக புகைப்படக்கருவிகளுக்கு காண்பித்து அந்தக் குறிப்பிலுள்ளவற்றை அம்பலப்படுத்தியுள்ளார். 

biden1.jpg

அந்த துண்டுக் குறிப்பில் நீங்கள் வெள்ளை மாளிகையிலுள்ள ரூஸ்வெல்ட் அறையில்  பிரவேசித்து  கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு  வந்தனம் கூறுங்கள், உங்கள் ஆசனத்தில் அமருங்கள், ஊடகவியலாளர்கள் பிரவேசம், சுருக்கமான விமர்சனம், ஊடகவியலாளர்கள் வெளியேறுதல்,  அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் குறிப்பிட்ட  நிறுவனத் தலைவரிடம் கேள்வியொன்றைக் கேளுங்கள், புறப்படுவதற்கு முன்னர் நன்றி கூறுங்கள் போன்ற அறிவுறுத்தல்கள்  அச்சிடப்பட்டிருந்தன.

biden2.jpg

இவ்வாறு  ஜோ பைடன் (79 வயது)  தனக்கு வழங்கப்பட்ட துண்டுக் குறிப்பை  புகைப்படக் கருவிகளுக்கு காண்பித்து பரிகசிப்புக்குள்ளாவது  இது முதல் தடவையல்ல.  இந்த வருட ஆரம்பத்தில்  உக்ரேன் தொடர்பில் ஆற்றிய உரையின் போது ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கையில் அவர் தன்வசம் வைத்திருந்த  அறிவுறுத்தல் துண்டுக்குறிப்பை தவறுதலாகக் காண்பித்திருந்தார்.  

Last_year_picture.jpg

அத்துடன் அவர்  கடந்த வருடம் ஜூலை மாதம் இணையத்தள நேரடி  ஒளிபரப்புக் கூட்டமொன்றில் கலந்துகொண்ட போது அவரது நாடியில் ஏதோ ஒட்டியிருப்பதைச் சுட்டிக் காட்டும் வகையில் அவரது  உதவியாளரால் வழங்கப்பட்ட துண்டுக் குறிப்பை புகைப்படக்கருவிகளுக்கு காண்பித்திருந்தார். அத்துடன் அவர் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் இடம்பெற்ற கூட்டத்திலும்  தனது உத்தியோகபூர்வ முதலாவது ஊடகவியலாளர் கூட்டத்திலும் தனது கையிலிருந்த குறிப்புகளை தவறுதலாகப்  புகைப்படக்கருவிகளுக்குக் காண்பித்திருந்தார். 

biden11q.jpg

அவரது மேற்படி செயற்பாடுகளானது  80 வயதை நெருங்கும் அவரது  உடல் நலன் மற்றும் மன ஆரோக்கிய நிலை குறித்துக் கவலையைத் தோற்றுவிப்பதாக உள்ளதாக  ஊடகங்கள் விமர்சித்துள்ளன. ஆனால் வெள்ளை மாளிகை மேற்படி விமர்சனங்களுக்கு நிராகரிப்பை வெளியிட்டு வருகிறது.

 

 

https://www.virakesari.lk/article/130145

Link to comment
Share on other sites

 

துவிச்சக்கர வண்டியில் இருந்து விழுந்தெழுந்த  போது........

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில எல்லா வேலைக்கும் ஓய்வுநிலை வயதெல்லை உண்டு. கறுமம் சனநாயக நாட்டில் கூட அரசியல்வியாதிகளுக்கு ஓய்வுநிலை வயதெல்லை இல்லை. அரசியலுக்கும் ஓய்வுநிலை வயதெல்லை வரையறுக்கப்பட்டால்.. இந்த வயதான காலத்தில் இப்படி அவஸ்தைப்படுவதோடு.. மக்களையும் அவஸ்தைப்படுத்துவதை தடுக்கலாம். 

அரசியலுக்கான அது உச்ச வயதெல்லை.. உலகம் பூராவும் 65 வயசென்றாகனும். 

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nunavilan said:

 

துவிச்சக்கர வண்டியில் இருந்து விழுந்தெழுந்த  போது........

 

ஒரு முறை விமான படிக்கட்டில் இருந்தும்,
சர்ரென்று… சறுக்கிக் கொண்டு விழுந்ததை பார்த்தேன்.
ஆளுக்கு பென்சன் எடுக்கிற நேரம் வந்திட்டுது போலை…
வருங்கால அமெரிக்க தமிழ் ஜனாதிபதி கமலா அக்கா… வாழ்க. 😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

உலகத்தில எல்லா வேலைக்கும் ஓய்வுநிலை வயதெல்லை உண்டு. கறுமம் சனநாயக நாட்டில் கூட அரசியல்வியாதிகளுக்கு ஓய்வுநிலை வயதெல்லை இல்லை. அரசியலுக்கும் ஓய்வுநிலை வயதெல்லை வரையறுக்கப்பட்டால்.. இந்த வயதான காலத்தில் இப்படி அவஸ்தைப்படுவதோடு.. மக்களையும் அவஸ்தைப்படுத்துவதை தடுக்கலாம். 

அரசியலுக்கான அது உச்ச வயதெல்லை.. உலகம் பூராவும் 65 வயசென்றாகனும். 

உண்மை. நீங்கள் கூறியுள்ளதைக் கட்டாய நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். எப்படி வேலைக்கான வரையறுக்கப்பட்ட ஆண்டுகள் உள்ளனபோன்று, அரசியலுக்கும் வயதெல்லை கொண்டுவந்தால் நிறைய நாடுகள் நன்மையடைய வாய்ப்புண்டாகும்.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.