Jump to content

பாடசாலைகளுக்கு விடுமுறை - கல்வியமைச்சு புதிய அறிவிப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலைகளுக்கு விடுமுறை - கல்வியமைச்சு புதிய அறிவிப்பு

கொழும்பு வலயத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் அனைத்து மாகாணங்களிலும் உள்ள நகர பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் குறித்த பாடசாலைகள் இம்மாதம்  27 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை மூடப்படவுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஏனைய கிராமப்புற பாடசாலைகள் வழமைப்போன்று செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.newswire.lk/wp-content/uploads/2022/06/Screenshot_20220626-181911_Gmail.jpg

https://www.virakesari.lk/article/130228

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நகர பாடசாலைக்கு வரும் பிள்ளைகளை, அந்தந்த கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்க்க சொல்லியதாக கேள்விப்பட்டேன், நிலமை வழமைக்கு திரும்பிய பின்(?) பழையபடி ஆரம்பத்தில் படித்த பாடசாலைகளுக்கு போக முடியுமோ என்ற தயக்கம் பெற்றோருக்கு இருக்க கூடும்..எல்லாமே குழப்பமாக உள்ளது.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, nunavilan said:

நிலைமை சீராக 7 வருடங்களாவது ஆகும் என் கிறார்கள்.

அதற்கு மேலயும் ஆகலாம் நூணா சாத்தியமே இல்ல 4000கோடி ரூபா மீண்டும் அச்சிடப்பட்டதாக செய்தி சொல்லுது.

  • Like 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, nunavilan said:

நிலைமை சீராக 7 வருடங்களாவது ஆகும் என் கிறார்கள்.

Just now, தனிக்காட்டு ராஜா said:

அதற்கு மேலயும் ஆகலாம் நூணா சாத்தியமே இல்ல 4000கோடி ரூபா மீண்டும் அச்சிடப்பட்டதாக செய்தி சொல்லுது.

balance of payment இல் உள்ள நடைமுறை கணக்கில் உள்ள நடைமுறைக்கணக்கில் கோவிட் காரணமாக ஏற்பட்ட பற்றாக்குறை மாலைதீவு மொத்த தேசிய வருமானத்தில் 40%, பிஜி 27% இலங்கை 2% (அண்ணளவாக நினைவில் உள்ளதன் அடிப்படையில்).

முதல் இரண்டு நாடுகளும் மிக விரைவாகவே  மீட்சி அடைந்து விட்டது ஆனால் இலங்கையினால் முடியவில்லை அதற்கு ஒரு காரணம் இலங்கையின் அன்னிய செலாவணி இருப்பு மற்றும் தங்கத்தின் இருப்புக்கு என்ன நடந்தது என யாராலும் கூறமுடியவில்லை.

தனி சொல்வதை பார்க்கும் போது இனி இலங்கை நிலை கவலைக்கிடமாக உள்ளது போல கருதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அதற்கு மேலயும் ஆகலாம் நூணா சாத்தியமே இல்ல 4000கோடி ரூபா மீண்டும் அச்சிடப்பட்டதாக செய்தி சொல்லுது.

எல்லாம் அனுபமில்லாதவர்களை ஆட்சியில் அமர்த்தியதின் விளைவு.

தமிழர்கள் தங்கள் அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுப்பது போல் விளையாட்டு செயல் அல்ல இது.
தமிழ் அரசியல் தலைவர்கள் தேர்தல் மேடைகளிலும் பாராளுமன்றத்திலும் தவளைக்கத்து கத்திவிட்டு வீட்டுக்கு வந்தி சிவனேயென போர்த்து மூடிக்கொண்டு படுத்துறங்கலாம்.

ஆனால்  ஆட்சிபீடம் ஏறுபவர்கள் நிதானமும் சமாதானமும் நாட்டின் கணக்கு வழக்கு தெரிந்தவர்களாக இருக்கவேண்டும். இனவாதத்தை நாட்டுப்பற்று என கருதினால் இதுவும் வரும் இதுக்கு மேலேயும் வரும்.

இது எனது கருத்து மட்டுமே. 😎

எல்லாம் தெரிஞ்சனீர் வந்து செய்து காட்டுமன் எண்டு சொல்லப்படாது கண்டியளோ 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தின் தெளிவில்லாத அறிவித்தல் காரணமாக பாடசாலைகள் இயங்கவில்லை - இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்

( எம்.நியூட்டன்)

அரசாங்கத்தின் தெளிவில்லாத அறிவித்தல் காரணமாக 27 ஆம் திகதி நாட்டில் உள்ள பெருமளவான பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர் வரவு நிலை குறைவாகக் காணப்பட்டதோடு பெரும்பாலான பாடசாலைகள் இயங்கவில்லை என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 

மூன்று நாட்கள், ஐந்து நாட்கள் பாசாலைகளை இயக்குதல் என்ற அரசாங்கத்தின் குழப்பமான அறிவித்தல், வருகைதரமுடியாத ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட விடுமுறையாக கணிக்க முடியாது என்ற ஆசிரியர்களுக்குச் சாதகமான அறிவித்தல், அதிபர் ஆசிரியர்களுக்கான போக்குவரத்து வசதியின்மை,சீரற்ற எரிபொருள் விநியோகம்,இ.போ.ச ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு, எரிசக்தி அமைச்சரின் எரிபொருள் இல்லையென்ற அபாயகரமான அறிவித்தல் இத்தகைய நிலைகளைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து மார்க்கங்கள் சீராகும் வரை பாடசாலை செல்வதைத் தவிப்போம் என நாம் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

அதன்படி நாட்டில் உள்ள பெருமளவான பாடசாலைகளில் போக்குவரத்து மார்க்கங்கள் இல்லாத பலர் எமது வேண்டுகோளை ஏற்று பாடசாலைக்குச் செல்லவில்லை. ஒரு சில பாடசாலை அதிபர்கள் ஆசியர்களைக் கட்டாயப்படுத்தி அழைத்த அதேவேளை மாணவர்களின் வரவு குறைவாகவே இருந்ததாக எமது சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள், வலயச் செயலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இத்தகைய நிலை தொடராமல் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் சீராக, அரசாங்கம் ஆசிரியர்களுக்கான எரிபொருள் விநியோகம், போக்குவரத்து மார்க்கங்கள் என்பவற்றிற்கு உடனடியாக தீர்வு காணவேண்டும். இல்லையேல் ஒட்டுமொத்த பாடசாலைகளையும் நீண்ட நாட்களுக்கு மூடும்நிலை ஏற்படும் என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/130286

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, vasee said:

balance of payment இல் உள்ள நடைமுறை கணக்கில் உள்ள நடைமுறைக்கணக்கில் கோவிட் காரணமாக ஏற்பட்ட பற்றாக்குறை மாலைதீவு மொத்த தேசிய வருமானத்தில் 40%, பிஜி 27% இலங்கை 2% (அண்ணளவாக நினைவில் உள்ளதன் அடிப்படையில்).

முதல் இரண்டு நாடுகளும் மிக விரைவாகவே  மீட்சி அடைந்து விட்டது ஆனால் இலங்கையினால் முடியவில்லை அதற்கு ஒரு காரணம் இலங்கையின் அன்னிய செலாவணி இருப்பு மற்றும் தங்கத்தின் இருப்புக்கு என்ன நடந்தது என யாராலும் கூறமுடியவில்லை.

தனி சொல்வதை பார்க்கும் போது இனி இலங்கை நிலை கவலைக்கிடமாக உள்ளது போல கருதுகிறேன்.

மீண்டும் மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலையினால் வாழ்க்கைச் மிக அதிகரித்துச் செல்கிறது 

கவலைக்கிடமே அதை மட்டும் உறுதியாக சொல்வேன் வடகிழக்கில் மெதுவாக பாதிப்பு ஆரம்பிக்கிறது

17 hours ago, குமாரசாமி said:

எல்லாம் அனுபமில்லாதவர்களை ஆட்சியில் அமர்த்தியதின் விளைவு.

தமிழர்கள் தங்கள் அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுப்பது போல் விளையாட்டு செயல் அல்ல இது.
தமிழ் அரசியல் தலைவர்கள் தேர்தல் மேடைகளிலும் பாராளுமன்றத்திலும் தவளைக்கத்து கத்திவிட்டு வீட்டுக்கு வந்தி சிவனேயென போர்த்து மூடிக்கொண்டு படுத்துறங்கலாம்.

ஆனால்  ஆட்சிபீடம் ஏறுபவர்கள் நிதானமும் சமாதானமும் நாட்டின் கணக்கு வழக்கு தெரிந்தவர்களாக இருக்கவேண்டும். இனவாதத்தை நாட்டுப்பற்று என கருதினால் இதுவும் வரும் இதுக்கு மேலேயும் வரும்.

இது எனது கருத்து மட்டுமே. 😎

எல்லாம் தெரிஞ்சனீர் வந்து செய்து காட்டுமன் எண்டு சொல்லப்படாது கண்டியளோ 🤣

இலங்கை எப்போது இனவாதத்தை களைந்து தமிழ் மக்களுடன் சுமூகமாக ஓர் நல்லுறவை ஏற்படுத்தி தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறதோ இந்த பிரச்சினையில் இருந்து மீளலாம் ஆனால் அதை அவர்கள் செய்ய மாட்டார்கள் மீளவும் மாட்டார்கள் இதற்குள் நாங்களும் அடக்கம் (தமிழ் மக்கள்)

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

மீண்டும் மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலையினால் வாழ்க்கைச் மிக அதிகரித்துச் செல்கிறது 

கவலைக்கிடமே அதை மட்டும் உறுதியாக சொல்வேன் வடகிழக்கில் மெதுவாக பாதிப்பு ஆரம்பிக்கிறது

இலங்கை எப்போது இனவாதத்தை களைந்து தமிழ் மக்களுடன் சுமூகமாக ஓர் நல்லுறவை ஏற்படுத்தி தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறதோ இந்த பிரச்சினையில் இருந்து மீளலாம் ஆனால் அதை அவர்கள் செய்ய மாட்டார்கள் மீளவும் மாட்டார்கள் இதற்குள் நாங்களும் அடக்கம் (தமிழ் மக்கள்)

தமிழ் அரசியல் தலைவர்களும் தங்கள் வயிறு வளர்க்க அட்டகாச வசனங்களுடன் திரிகின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

தமிழ் அரசியல் தலைவர்களும் தங்கள் வயிறு வளர்க்க அட்டகாச வசனங்களுடன் திரிகின்றார்கள்.

இந்த நேரத்திலும் உதவாமல் அவர்கள் வாய்ப் பேச்சால் மட்டும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள் மக்கள் படும் அவலங்களை அவர்கள் கண்டு கொள்வதுமில்லை பாராளுமன்றத்தில் உசுப்பேற்றல்  மட்டுமே எஞ்சி நிற்கின்றது மக்களோ வயிற்றுப்பிழைப்புக்காக நாள்தோறும் மிகவும் அல்லல்பட்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ அடக்குமுறைக்கொள்கையால் சிங்களதேசம் தன்னைத் தானே அழித்துக் கொண்டிருக்கிறதே தவிர, தமிழினத்தின் சுதந்திர எழுச்சியை அதனால் அழித்துவிட முடியாது.

இந்த உண்மையை சிங்களப்பேரினவாதம் என்றோ ஒருநாள் உணர்ந்தே தீரும்!
- தலைவர் பிரபாகரன்
(மாவீரர் நாள் உரை -1997)

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/6/2022 at 17:14, பிரபா சிதம்பரநாதன் said:

நகர பாடசாலைக்கு வரும் பிள்ளைகளை, அந்தந்த கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்க்க சொல்லியதாக கேள்விப்பட்டேன், நிலமை வழமைக்கு திரும்பிய பின்(?) பழையபடி ஆரம்பத்தில் படித்த பாடசாலைகளுக்கு போக முடியுமோ என்ற தயக்கம் பெற்றோருக்கு இருக்க கூடும்..எல்லாமே குழப்பமாக உள்ளது.. 

90-92(போக்குவரத்து நெருக்கடி) வரை நாங்கள் கொஞ்சப் பேர் யாழ் இந்துவில் தவணைப் பரீட்சை எழுதுவது, அருகில் இருக்கும் விக்ரோறியாவில் கல்வி கற்பது என ஒழுங்கு படுத்தி இருந்தவை. அப்ப பஞ்சலிங்கம் சேர் யாழ் இந்துவின் அதிபர், விக்ரோறியா கல்லூரியில் சந்திரபாலன் சேர். இருவரிடமும் கதைத்து எமது கல்வி தொடர வாய்ப்பளித்தனர். இரு அதிபர்களும் எனது வாழ்வில் மறக்க முடியாதவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

அப்படித்தான் ஏதாவது செய்யவேண்டும். ஆனால் St.Patrick’s,  St.Johns போன்ற கல்லூரிகள் என்ன செய்வார்களோ தெரியாது.. 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அப்படித்தான் ஏதாவது செய்யவேண்டும். ஆனால் St.Patrick’s,  St.Johns போன்ற கல்லூரிகள் என்ன செய்வார்களோ தெரியாது.. 

பரியோவான் ஏனைய உள்ளூர் அமெரிக்கன் மிசன் பள்ளிகளுக்கும்,

சம்பத்தரிசியர் ஏனைய ரோமன் கத்தோலிக்க பள்ளிக்கும் மாறுவார்கள் என நினைக்கிறேன்.

முக்கிய பாடங்களை  zoom மூலம் செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

பரியோவான் ஏனைய உள்ளூர் அமெரிக்கன் மிசன் பள்ளிகளுக்கும்,

சம்பத்தரிசியர் ஏனைய ரோமன் கத்தோலிக்க பள்ளிக்கும் மாறுவார்கள் என நினைக்கிறேன்.

முக்கிய பாடங்களை  zoom மூலம் செய்யலாம்.

இருக்கலாம்.. பாவம் பிள்ளைகள்.. 2019ல் பாடசாலையை தொடங்கியவர்களுக்கு ஆரம்ப கல்வியே முறையாக நடக்கவில்லை.. மிகவும் தடுமாறுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களிடம் நாட்டை கையளித்ததால் வந்த வினை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் அதிபராக இருக்கிறார், கல்விப் பணிப்பாளருடனான கலந்துரையாடலில் பிள்ளைகளுக்கு திரும்ப எழுத்து பழக்க வேண்டி வரும் என எச்சரித்ததாக கூறினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

முக்கிய பாடங்களை  zoom மூலம் செய்யலாம்.

அதுக்கும் மின்சாரம் வேணுமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

அதுக்கும் மின்சாரம் வேணுமே?

வறுமை  மட்டுமல்ல

கல்வியறிவற்ற ஒரு  சமூகமும்  உருவாகப்போகிறதா???

😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

அதுக்கும் மின்சாரம் வேணுமே?

ஓம்

1 hour ago, விசுகு said:

வறுமை  மட்டுமல்ல

கல்வியறிவற்ற ஒரு  சமூகமும்  உருவாகப்போகிறதா???

😪

ஓம்

  • Sad 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.