Jump to content

சட்டவிரோதமாக...  அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முயற்சி: இந்த ஆண்டில் மட்டும் 399 பேர் கைது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோதமாக செல்ல முயற்சி: இந்த ஆண்டில் மட்டும் 399 பேர் கைது

சட்டவிரோதமாக...  அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முயற்சி: இந்த ஆண்டில் மட்டும் 399 பேர் கைது.

2022ஆம் ஆண்டு இதுவரையில் சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 399 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக இடம்பெயர முயற்சிப்பவர்களிடம் இருந்து கடத்தல்காரர்கள் 200,000 முதல் 1,000,000 வரை பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த கடத்தல்காரர்கள் பழுதடைந்த மற்றும் உடைந்த படகுகளையும் சட்டவிரோத நடவடிக்கைகளில் பயன்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நடவடிக்கையில் ஈடுபடும் கடத்தல்காரர்களுக்கு 1 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் எச்சரித்துள்ளார்.

https://athavannews.com/2022/1288608

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 54 பேர் கைது
 

சட்டவிரோதமான முறையில்  அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 54 பேர் மட்டக்களப்பு - பாலமீன்மடு கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதானவர்களை திருகோணமலை - துறைமுகத்திற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

https://www.tamilmirror.lk/செய்திகள்/அவஸதரலய-சலல-மறபடட-54-பர-கத/175-299281

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தமிழ் சிறி said:

சட்டவிரோதமாக...  அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முயற்சி: இந்த ஆண்டில் மட்டும் 399 பேர் கைது.

 

2 minutes ago, கிருபன் said:

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 54 பேர் கைது

399 + 54  =  453 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் கைது!

அவுஸ்ரேலியா செல்ல முயற்சித்த... மேலும், 47 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயற்சித்த மேலும் 47 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

இதன்படி, கடந்த சில நாட்களில் 280 பேருக்கு அதிகமானவர்கள் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்துள்ளனர்.

https://athavannews.com/2022/1288764

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்க பார்தாலும் கேட்டாலும் நாட்டை விட்டு போகணும் என்றே பலரும் பேசிக்கொள்கிறார்கள். இன்றைய இக்கட்டான நிலையில் மக்கள் 

நான் கூட பாஸ்போட் எடுக்க போய் திரும்பி வந்திருக்கிறன் அவ்வளவு கூட்டம் பகல் இரவு என அங்கே மட்டைபோட்டு படுத்து இருக்கிறார்கள் பாஸ்போட் எடுத்தாவது நாட்டை விட்டு போக பலர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

எங்க பார்தாலும் கேட்டாலும் நாட்டை விட்டு போகணும் என்றே பலரும் பேசிக்கொள்கிறார்கள். இன்றைய இக்கட்டான நிலையில் மக்கள் 

நான் கூட பாஸ்போட் எடுக்க போய் திரும்பி வந்திருக்கிறன் அவ்வளவு கூட்டம் பகல் இரவு என அங்கே மட்டைபோட்டு படுத்து இருக்கிறார்கள் பாஸ்போட் எடுத்தாவது நாட்டை விட்டு போக பலர்

கன நாளாய் பஸ்போர்ட் எடுக்கிறது பற்றி கதைக்கிறியள். இன்னுமா எடுக்கேல்லை?

சிறிலங்காவில் காசு இருந்தால் வாழலாம் என்ற நிலை போய் காசு இருந்தாலும் வாழ முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

கன நாளாய் பஸ்போர்ட் எடுக்கிறது பற்றி கதைக்கிறியள். இன்னுமா எடுக்கேல்லை?

சிறிலங்காவில் காசு இருந்தால் வாழலாம் என்ற நிலை போய் காசு இருந்தாலும் வாழ முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டது

காசு இருந்தாலும் இலங்கையில் வாழ முடியாது அண்ண கடந்த வியாழக்கிழமை போயிருந்தேன் பாஸ்போர்ட் எடுப்பதற்காக 300 பேருக்கு டோக்கன் கொடுப்பதாக இருந்தது ஆனால்  150 பேருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது 180 ஆவது நபராக நின்று கொண்டிருந்தேன் எங்களுக்கு துண்டு வழங்கப்படவில்லை அதனால திரும்ப வந்துவிட்டேன் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான வந்தடைந்து பாஸ்போட்டுக்காக இரவு பகலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த கிழமை மீண்டும் முயற்சிக்க வேண்டும்

  • Sad 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்துக்கு புது உழைப்பு, அதன் கட்டணத்தையும் அதிகரிப்பார்கள். இப்போ அது மட்டுமே இயங்கி, பணம் கொட்டுகிறது. எதற்காக போர் செய்தோம் என்றே புரியாமல் பணத்தில் மட்டும் குறியாக இருக்கிறார்கள். முட்டாள்களிடம் மிஞ்சுவது ஒன்றுமில்லை என்பதற்கு இலங்கை சிறந்ததொரு எடுத்துக்காட்டு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவுக்கு இழுவை படகில் சென்ற 51 இலங்கையர்கள் கைது!

அவுஸ்ரேலியாவுக்கு... இழுவை படகில் சென்ற, 51 இலங்கையர்கள் கைது!

அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 51 பேர் கொண்ட மற்றுமொரு குழுவை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது திருகோணமலை கடற்பரப்பில் வைத்து குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இந்த மோசடியில் ஈடுபட்ட 6 பேர் உட்பட 41 ஆண்கள், ஐந்து பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

https://athavannews.com/2022/1289401

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட 15 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்

சட்ட விரோதமாக... அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட, 45 பேர் கைது.

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 45 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை – குச்சவெளி கடற்பரப்பில் வைத்து இவர்கள் இன்று (புதன்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 11 ஆண்களும் 9 பெண்களும் உள்ளடங்குவதனுடன், 20 வயதுக்கு கீழ்பட்ட 25 பேர் அடங்குவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் தற்போது குச்சவெளி  பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

https://athavannews.com/2022/1289753

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முற்பட்டவர்கள் கைது!

யாழில் இருந்து... அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முற்பட்டவர்கள், கைது!

யாழ்ப்பாணம் தொண்டமனாறு பகுதியில் இருந்து, படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் நான்கு பேர் இராணுவத்தினரால் இன்றைய தினம் (புதன்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்த இருவரும் திருகோணமலையைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

தொண்டமனாறு இராணுவச் சோதனைச் சாவடிக்கு அண்மையாக அதிகாலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நால்வரையும் இராணுவத்தினர் விசாரணை நடத்திய போதே அவர்கள் படகுமூலம்  அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முற்பட்டமை தெரியவந்தது.

படகு ஒன்றுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வீதம் பணம் செலுத்தியதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://athavannews.com/2022/1289772

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் உடம்பு நோகாமல் பணம் சம்பாதிக்கும் சில புரோக்கர்கள் இப்போதும்

ஐந்து லட்சத்திற்குள் செலவளித்து அவுஸ்திரேலியா போனால் ஒன்றரை வருடத்தில் நிரந்தர வதிவுரிமை, மூன்று வருடத்திற்குள் குடும்பத்தை கூப்பிட்டு விடலாம் ஐந்து வருடத்தில் பிரஜாவுரிமை என்று ஆசைவார்த்தை காட்டுகிறார்களாம்.

பெரும்பாலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களே அவர்களின் இலக்காம். இப்போது அனைவருக்கும் அதே நிலமை என்பது வேறு விஷயம்.

ஏறக்குறைய ஏழெட்டு வருடங்களின் முன்னரே சட்டவிரோத குடியேறிகள் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்தது மட்டுமன்றி பிற தீவுகளுக்கு அனுப்பியும் திருப்பி இலங்கைக்கு அனுப்பியும் சொன்னதை செய்து வருகிறது.

இப்படியிருந்தும் ஓரிரு லட்சம் செலவளித்தால் அவுஸ்திரேலியர் ஆகிவிடலாம் என்று இன்றும் ஆசை வார்த்தை காண்பிப்பவர்களை அடியோடு நிராகரிப்பதே பணத்திற்கும் உயிருக்கும் பாதுகாப்பு என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டக்களப்பில் களுத்துறையை சேர்ந்த 5 பெண் கொள்ளையர்கள் கைது !

அவுஸ்ரேலியாவுக்கு... சட்டவிரோதமாகச் செல்ல முற்பட்ட, 77 பேர் கைது!

அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு – களுவன்கேணி பகுதியில் கடற்படையினர் மற்றும் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 17 பேர் ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், ஏனையோர் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

கைதானவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2022/1290596

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸில் அந்தோனி அல்பனீஸி பிரதமராக வந்தவுடன் இலங்கையை சேர்ந்த தமிழர்களான பிரியா நடேசலிங்கம் குடும்பத்தினருக்கு தற்காலிக விசாவே கொடுத்துள்ளார்கள், ஆனால் தமிழ் பத்திரிக்கைகளில் அவர்களுக்கு நிரந்தர விசா கொடுத்ததாக செய்திகள் வெளிவந்ததும் இந்த முகவர்களுக்கு வசதியாக போய்விட்டது. 

ஆனால் அவுஸ்ரேலியாவைப் பொறுத்த வரையில் அவர்களது boarder securityயில் எந்தவித தளர்வும் இல்லை. 

கடந்த 6ந் திகதி 48 வயதான இலங்கை தமிழ் அகதி ஒருவர் மரணமடைந்து விட்டார். 12 வருடங்களாக விசாவிற்காக போராடி மன உளைச்சலும் கவலையும் கடைசியில் உயிரும் போய்விட்டது. இது கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டோ மூன்றாவதோ மரணம். இப்படி பல கதைகள் உள்ளது.. 

இவ்வளவும் ஏன் சிரியாவில் உள்ள al-Hawl முகாமில் அவுஸ்ரேலியாவில் பிறந்து பல்வேறு காரணங்களுக்காக பெற்றோர்கள், சகோதார்களுடன் சிரியாவிற்கு போய் சிக்கிக்கொண்ட 30 குழந்தைகள், சிறுவர்களின் நலன் கேள்விக்குறியாகி உள்ளது. அவர்களைக் கூட காப்பாற்ற முயலவில்லை.. 

இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது இந்த உயிரைப் பணயம் வைத்து, ஒன்றுமே கிடைக்கவும் போவதில்லை, கடைசியில் பண நஷ்டமும் மன கஷ்டமும் தான் மிஞ்சும். 

  • Sad 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.