Jump to content

எரிபொருள் நெருக்கடி குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக அமைச்சர் இருவர் இன்று ரஷ்யா விஜயம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருள் நெருக்கடி குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக அமைச்சர் இருவர் இன்று ரஷ்யா விஜயம்

(எம்.மனோசித்ரா)

எரிபொருள் இறக்குமதியில் எரிநோக்கியுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று திங்கட்கிழமை இரு அமைச்சர்கள் ரஷ்யா செல்லவுள்ளனர். அத்தோடு இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு கட்டார் ஜனாதிபதியிடமிருந்தும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதே வேளை நீண்ட நாட்களாக எரிபொருள் வரிசைகளில் காத்திருப்பவர்களுக்கு முறையாக எரிபொருளை விநியோகிப்பதற்காக இன்று திங்கட்கிழமை முதல் இராணுவம் உட்பட பாதுகாப்புபடையினர் ஊடாக டோக்கன்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , இனிவரும் வரும் காலங்களில் இரு வாரங்களுக்கொருமுறை எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.

வலுசக்தி அமைச்சில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இன்று முதல் டோக்கன்

தற்போது மாதாந்தம் எரிபொருள் இறக்குமதிக்காக 550 - 600 மில்லியன் டொலர் செலவிடப்படுகிறது. இதனை 300 - 350 மில்லியன் டொலர்களாகக் குறைக்க வேண்டும். இவ்வாறு எரிபொருள் இறக்குமதி செலவினைக் குறைக்கும் பட்சத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டளவில் எரிபொருளை விநியோக்க முடியும்.

வரிசைகளில் காத்திருப்பவர்களுக்கு எரிபொருளை வழங்குவதற்காக நாளை (இன்று திங்கட்கிழமை) முதல் முப்படையினர் ஊடாக டோக்கன்கள் வழங்கப்படவுள்ளன. பாதுகாப்பானதாகவும் நேர்த்தியான முறையிலும் டோக்கன்களை வழங்குவது தொடர்பில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவுடன் கலந்தாலோசிக்கப்பட்டு;ள்ளது. அவர் பாதுகாப்பு செயலாளருடன் கலந்துரையாடி இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்.

ஐ.ஓ.சி.யிடம் விநியோகத்தை அதிகரிக்க கோரிக்கை

தற்போதுள்ள நிலைமைகளில் எந்த எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்க முடியும் என்று கூற முடியாது. எனவே தான் டோக்கன் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐ.ஓ.சி. நிறுவனத்தினால் நாளொன்றுக்கு 300 மெட்ரிக் தொன் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. இதனை 1000 மெட்ரிக் தொன்னாக அதிகரிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டு;ள்ளது.

அத்தியாவசிய சேவைக்கு மாத்திரம் எரிபொருள்

எரிபொருள் இன்றி அவற்றின் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்வது சிக்கலுக்குரிய விடயமாகும். எவ்வாறிருப்பினும் நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதற்கு இதனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது கையிருப்பிலுள்ள எரிபொருள் தொகையினை பொது போக்குவரத்துக்கள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் , துறைமுகம் உள்ளிட்ட முக்கிய தொழிற்துறைகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சப்புகஸ்கந்த சுத்திகரீப்பு நிலையம் மூடப்பட்டது

இம்மாதம் 29 ஆம் திகதி மசகு எண்ணெய் கப்பலொன்று நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும் குறித்த தினத்தில் அந்த கப்பல் வராது என்றும் , ஜூலை 3 அல்லது 4 ஆம் திகதியே வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த திகதிகளிலும் கப்பல் வருமா என்பதை உறுதியாகக் கூற முடியாது. எனவே மசகு எண்ணெய் கப்பலொன்று நாட்டை வந்தடையும் வரை சம்புகஸ்கந்த எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையத்தினை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் விநியோகத்தில் சிக்கல்

எண்ணெய் சுத்தீகரிப்பு இடம்பெறவில்லை எனில் மண்ணெண்ணெய்யை விநியோகிக்க முடியாது. எனவே தான் அதன் விலைகளில் திருத்தம் செய்யப்படவில்லை. எனினும் எதிர்காலத்தில் இதன் விலையிலும் திருத்தம் மேற்கொள்ளப்படும். விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டாலும் மீனவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெருவோர் உள்ளிட்டோருக்கு நிவாரண விலையில் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படும்.

தற்போதைய எரிபொருள் கையிருப்பு

தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் சுமார் 8000 - 9000 மெட்ரிக் தொன் டீசலும் , 5500 - 6000 மெட்ரிக் தொன் பெற்றோலும் கையிருப்பில் உள்ளது. ஐ.ஓ.சி. நிறுவனத்திடமிருந்து 10 000 மெட்ரித் தொன் எரிபொருளைப் பெற முயற்சிக்கின்றோம். ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய விருப்பமில்லை என்று கூறுவது தவறாகும். இதற்கு முன்னர் ரஷ்ய நிறுவனத்தின் எரிபொருள் கப்பலை முற்பதிவு செய்த போது , எம்மால் விடுவிக்கப்பட்ட கடன் கடிதம் சர்வதேச வங்கியொன்றினால் நிராகரிக்கப்பட்டது.

ரஷ்யா செல்லும் அமைச்சர்கள்

இவ்வாறான தொழிநுட்ப காரணங்களின் காரணமாகவே ரஷ்யாவிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது. இது போன்ற சிக்கல்களை இராஜதந்திர ரீதியில் அணுகி தீர்வினைப் பெற்றுக் கொள்வதன் நிமித்தம் இரு அமைச்சர்கள் ரஷ்யா செல்லவுள்ளனர். எமக்கு எரிபொருளை வழங்கும் நாடு எதுவானாலும் அதில் எவ்வித சிக்கலும் இல்லை. எனவே குறைந்த விலையில் எந்த நாடு எரிபொருளை வழங்கினாலும் அந்த நாட்டிடமிருந்து பெற்றுக் கொள்ள நாம் தயாராக உள்ளோம்.

புலனாய்வு பிரிவு பணிப்பாளரிடம் கோரிக்கை

இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தயார் என தெரிவிக்கும் நிறுவனங்கள் , பின்னர் அந்த தீர்மானத்திலிருந்து பின்வாங்குவதன் பின்னணியில் எவரேனும் இருக்கின்றனரா என்ற சந்தேகம் காணப்படுகிறது. எனவே இது தொட்பில் அவதானம் செலுத்துமாறு புலனாய்வு பிரிவின் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரு வாரங்களுக்கொருமுறை விலை திருத்தம்

அத்தோடு இனி வரும் காலங்களில் இரு வாரங்களுக்கொருமுறை எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். விலைசூத்திரத்திற்கமைய விலை திருத்தங்கள் முன்னெடுக்கப்படும்.

கட்டாரிடமிருந்து அழைப்பு

கட்டார் ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இலங்கையின் தூதுக்குழுவொன்று அந்நாட்டுக்கும் விஜயம் செய்யவுள்ளது. அத்தோடு எம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் குவைத் அரசாங்கமும் சாதகமான சமிஞ்ஞையைக் காண்பித்துள்ளது.

கல்வி அமைச்சிடம் கோரிக்கை

எவ்வாறிருப்பினும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற் கொண்டு எதிர்வரும் இரு வாரங்களுக்கேனும் கற்பித்தல் செயற்பாடுகளை இணையவழியூடாக முன்னெடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.

தனியார் துறை

அத்தோடு தனியார் துறையிலும் இயலுமானவரை வீடுகளிலிருந்து வேலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தல் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோருகின்றோம். இந்தியாவிலிருந்து விஜயம் செய்த உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் திறைசேரி செயலாளர் ஆகியோருடன் முன்னெடுத்த கலந்துரையாடல்களில் எரிபொருள் இறக்குமதிக்காக மேலும் 500 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜதந்திரிகளுடன் பேச்சு

அத்தோடு நாட்டுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜதந்திரகள் குழுவுடன் நாளை (இன்று திங்கட்கிழமை) பிற்பகல் 2.30 க்கு வலு சக்தி அமைச்சில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்குழுவினரிடம் இந்த நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்றார். 

 

https://www.virakesari.lk/article/130236

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

எரிபொருள் நெருக்கடி குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக அமைச்சர் இருவர் இன்று ரஷ்யா விஜயம்

உலக வல்லாதிக்கத்தினரின் கோபத்திற்கு ஆளாகப்போகின்றார்கள். 😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் சுமார் 8000 - 9000 மெட்ரிக் தொன் டீசலும் , 5500 - 6000 மெட்ரிக் தொன் பெற்றோலும் கையிருப்பில் உள்ளது. ஐ.ஓ.சி. நிறுவனத்திடமிருந்து 10 000 மெட்ரித் தொன் எரிபொருளைப் பெற முயற்சிக்கின்றோம். ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய விருப்பமில்லை என்று கூறுவது தவறாகும். இதற்கு முன்னர் ரஷ்ய நிறுவனத்தின் எரிபொருள் கப்பலை முற்பதிவு செய்த போது , எம்மால் விடுவிக்கப்பட்ட கடன் கடிதம் சர்வதேச வங்கியொன்றினால் நிராகரிக்கப்பட்டது.

இவனுவள் சும்மா காமெடி பண்ணிக்கிட்டு.....😂

Bild

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

உலக வல்லாதிக்கத்தினரின் கோபத்திற்கு ஆளாகப்போகின்றார்கள். 😁

என்ன இருந்தாலும்... கடைசியில, புட்டினிட்டைத்தான்  போக வேணும். 😂
அவர்தான்... உலகத்தின்  நம்பிக்கை நட்சத்திரம். 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

என்ன இருந்தாலும்... கடைசியில, புட்டினிட்டைத்தான்  போக வேணும். 😂
அவர்தான்... உலகத்தின்  நம்பிக்கை நட்சத்திரம். 🤣

 

உண்மை  தான் சிறி

சிறீலங்காவுக்கு  இப்ப  எந்த  கதவு  திறக்கும்  என்று  தெரியுது?

ராசதந்திரத்தில்  ரசியா சிறீலங்காவிடம் பிச்சை  வாங்கணும்??🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

 

உண்மை  தான் சிறி

சிறீலங்காவுக்கு  இப்ப  எந்த  கதவு  திறக்கும்  என்று  தெரியுது?

ராசதந்திரத்தில்  ரசியா சிறீலங்காவிடம் பிச்சை  வாங்கணும்??🤣

விசுகர், "கடுகு சின்னன் என்றாலும், காரம் பெரிசு" என்று... சும்மாவா சொன்னார்கள். 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய தூதுவரை சந்தித்தார் ஜனாதிபதி

image_72f7629c27.jpg

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மட்டெரிக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (27) இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, தேயிலை ஏற்றுமதி, சுற்றுலா, எரிபொருள், நிலக்கரி, எரிவாயு, விமானப் போக்குவரத்து, கல்வி, வர்த்தகம் மற்றும் உரம் உள்ளிட்ட பல முக்கிய பொருளாதாரத் துறைகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. 

வலுவான அரச உறவுகள் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது ரஷ்யா வழங்கிய ஆதரவை பாராட்டினார்.

2022 ஆம் ஆண்டுடன் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை நிறுவி 65 ஆண்டுகள் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.tamilmirror.lk/செய்திகள்/ரஷ்ய-தூதுவரை-சந்தித்தார்-ஜனாதிபதி/175-299301

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

என்ன இருந்தாலும்... கடைசியில, புட்டினிட்டைத்தான்  போக வேணும். 😂
அவர்தான்... உலகத்தின்  நம்பிக்கை நட்சத்திரம். 🤣

புட்டின் உக்ரேனுக்கு சும்மா செல்லமாய் தட்டினதுக்கே முழு உலகமும் விலையேற்றம் சாமான் தட்டுப்பாட்டாலை அல்லோல கல்லோலப்படுது எண்டால் பாருங்கோவன். 😂

வீராவேசம் காட்டுற மேற்குலகின்ரை அண்டவாளம் தண்டவாளத்திலை ஏறுது. வாயாலை பினாத்தல் விட்டவையள் இப்ப விலையேற்றத்தை கட்டுப்படுத்தேலாமல் முழுசிக்கொண்டு திரியினம்.🤪

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப மன்னார்ப் பக்கம் ஒருத்தரும் போகவில்லையா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் எண்ணெய் கப்பல் மீதான தாக்குதல்: உண்மைகளை அறிய முயற்சிப்பதாக பிரித்தானியா தெரிவிப்பு

எரிபொருளை இறக்குமதி செய்ய... வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி!

எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1288812

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nunavilan said:

கட்டாருக்கும் இரண்டு பேரை அனுப்பி உள்ளார்களாம்.

உலகம் முழுக்க கிளைகளை விஷ்தரிப்பார்கள் என நினைக்கின்றேன் 😁

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.