Jump to content

அமெரிக்காவில் கைவிடப்பட்ட கண்டெய்னர் லாரியில் 46 சடலங்கள்: என்ன நடந்தது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் கைவிடப்பட்ட கண்டெய்னர் லாரியில் 46 சடலங்கள்: என்ன நடந்தது?

28 ஜூன் 2022, 03:59 GMT
புதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர்
 

அமெரிக்காவில் கைவிடப்பட்ட லாரியில் 46 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

அமெரிக்காவில் கைவிடப்பட்ட லாரியில் 46 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன

அமெரிக்காவிலுள்ள டெக்சாஸின் சான் அன்டோனியோவின் புறநகரில் கைவிடப்பட்ட நிலையில் நின்றிருந்த கண்டெய்னர் லாரியில் இடம்பெயர்ந்து குடியேறியவர்கள் என்று நம்பப்படும் சுமார் 46 பேர் இறந்து கிடந்தனர்.

நான்கு குழந்தைகள் உட்பட 16 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உயிர் பிழைத்தவர்கள், "தொடுவதற்கே சூடான நிலையில்" இருந்தனர். வெப்ப அதிர்ச்சி (Heat Stroke) மற்றும் வெப்ப சோர்வு ஆகியவற்றால் அவதிப்பட்டனர்.

அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் இருந்து 250கி.மீ தொலைவிலுள்ள சான் அன்டோனியோ, ஆட்கடத்தல்காரர்களுக்கான முக்கியமான போக்குவரத்துப் பாதை.

ஆட்கடத்தல்காரர்கள், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் அமெரிக்க எல்லைக்குள் நுழைந்த பிறகு, அவர்களை தொலைதூரப் பகுதிகளில் சந்தித்து, ஏற்றிச் செல்ல அடிக்கடி லாரிகளைப் பயன்படுத்துகின்றனர்.

"அவர்களுக்கு குடும்பங்கள் இருந்தன. அவர்களுக்கான ஒரு சிறந்த வாழ்க்கையைக் கண்டுபிடிக்க முயன்றிருக்கலாம். இதுவொரு பயங்கரமான துயரம்," என்று சான் அன்டோனியோ மேயர் ரான் நிரன்பெர்க் கூறினார்.

அவசரக்கால முதல்நிலை கவனிப்பை வழங்கக்கூடியவர்கள் ஆரம்பத்தில் உள்ளூர் நேரப்படி மாலை சுமார் 6 மணியளவில் இறந்தவர்களைப் பற்றிய தகவலறிந்த பின்னர், சம்பவ இடத்திற்கு வந்ததாக சான் அன்டோனியோ தீயணைப்புப் பிரிவின் தலைவர் சார்லஸ் ஹூட் செய்தியாளர்களிடம் கூறினார்.

"ஒரு லாரியைத் திறக்கும்போது அதற்குள் நாங்கள் இறந்த உடல்களின் அடுக்குகளைப் பார்த்திருக்கக்கூடாது. நாங்கள் யாரும் அதைக் கற்பனை செய்துகொண்டு வேலைக்கு வருவதில்லை," என்று அவர் கூறினார்.

டிரைவரால் கைவிடப்பட்ட வாகனத்தில் குளிரூட்டும் வசதியில்லை என்றும் அதற்குள் குடிநீர் இல்லை என்றும் அவர் கூறினார்.

KSAT என்ற உள்ளூர் தொலைக்காட்சி சேனலின்படி, சான் அன்டோனியோவின் தென்மேற்குப் பகுதியில் ரயில் பாதைகளுக்கு அடுத்ததாக வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது.

காவல்துறை, தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் உட்பட ஏராளமான அவசர உதவியாளர்கள் பெரிய லாரியைச் சுற்றியிருப்பதைக் காண முடிந்தது.

அரசியல் பிரச்னையாகவுள்ள புலம்பெயர் குடியேற்றம்

அதே செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சான் அன்டோனியோவின் காவல்துறை தலைவர் வில்லியம் மேக்மனுஸ், இதன் விசாரணை திங்கள் கிழமை மாலை, மத்திய புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் மூன்று பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

 

Image shows emergency responders at scene

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

More than 60 firefighters attended the scene, the local fire chief said

மெக்சிகோவின் வெளியுறவு அமைச்சர் மார்செலோ எப்ரர்ட், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் குவாட்டமாலா நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் இருப்பதாகக் கூறினார். பாதிக்கப்பட்ட மற்றவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது இதுவரை தெரிய வரவில்லை.

டெக்சாஸின் குடியரசுக் கட்சி ஆளுநர் கிரெக் ஆப்போட், "அவரது கொடிய திறந்த எல்லைக் கொள்கைகளால் ஏற்பட்ட விளைவு" என்று இதை விவரித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இந்த மரணங்களுக்குக் குற்றம் சாட்டினார்.

ஆப்போட்டுக்கு எதிராக போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான பெடோ ஒரௌர்க், இது பெரும் வேதனையைத் தருவதாகவும், "ஆட்கடத்தல் வளையங்களை அகற்றி, சட்டப்பூர்வ இடப்பெயர்வுக்கான விரிவாக்கப்பட்ட வழிகளை மாற்றுவதற்கு" அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

அமெரிக்காவில் புலம்பெயர் குடியேற்றம் என்பது ஒரு சர்ச்சைக்குரிய அரசியல் பிரச்னையாக உள்ளது. அங்கு கடந்த ஆண்டு மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த பதிவு செய்யப்படாத ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் மிகவும் ஆபத்தான, பாதுகாப்பற்ற பாதைகளில் பயணம் செய்து வந்திருந்தனர்.

கோடை மாதங்களில் சான் அன்டோனியோ மிகவும் வெப்பமாக இருக்கும். திங்கள் கிழமையன்று 39.4 டிகிரி செல்ஷியஸ் (103F) வெப்பநிலையை அடைகிறது.

https://www.bbc.com/tamil/global-61962497

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடும் வெப்பம், தண்ணீர், உணவு இல்லை; கண்டெய்னர் லாரிக்குள் இருந்து 46 பேர் சடலமாக மீட்பு

747460-1.jpg

Image Courtesy: Getty Images via AFP

வாஷிங்டன்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சாண்டியாகோவின் புறநகர் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே நேற்று சந்தேகத்திற்கு இடமான வகையில் கண்டெய்னர் லாரி நின்றுகொண்டிருந்தது. 

மாலை 6 மணியளவில் அப்பகுதிக்கு வந்த நகராட்சி ஊழியர் லாரி அருகே சென்றுபார்த்தபோது கண்டெய்னருக்குள் இருந்து உதவி கேட்டு அழுகுரல் கேட்டுள்ளது. 

உடனடியாக, இது குறித்து அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆள் அரவமற்ற ஒதுக்குப்புறமான பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியின் கண்டெய்னரை திறந்து பார்த்தனர். 

அப்போது, அந்த கண்டெய்னருக்குள் 50-க்கும் மேற்பட்டோர் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். 

உடனடியாக மருத்துவத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவத்துறையினர் கண்டெய்னரில் இருந்தவர்களை பரிசோதித்ததில் 46 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், மயக்கமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 4 குழந்தைகள் உள்பட 16 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். 

இந்த கண்டெய்னர் லாரி மெக்சிகோவில் இருந்து வந்ததும் லாரிக்குள் இருந்த அனைவரும் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் நோக்கத்தோடு வந்த அகதிகள் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கடுமையான வெப்பம், மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணங்களால் லாரி கண்டெய்னரில் உயிரிழந்த 46 பேர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

லாரியுடன் இணைக்கப்பட்ட கண்டெய்னர் குளிர்சாதன வசதிகொண்டது என்றும் ஆனால், அந்த குளிர்சாதன வசதி வேலை செய்யவில்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கண்டெய்னருக்குள் போதிய உணவு, குடிநீர் இல்லாததாலும் கடுமையான வெப்பத்தாலும் 46 பேர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டெய்னர் லாரியை ஆள் அரவமற்ற ஒதுக்குப்புறமான பகுதியில் நிறுத்திவிட்டு லாரி டிரைவர் தப்பிச்சென்றுள்ளார். இதையடுத்து, லாரி டிரைவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவங்களின்போது உயிரிழப்புகளும் அரங்கேறிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.dailythanthi.com/News/World/46-dead-after-trailer-carrying-migrants-found-in-san-antonio-732942

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அமெரிக்காவில் லொறி ஒன்றிலிருந்து 46 சடலங்கள் கண்டெடுப்பு!

அமெரிக்காவில் லொறி ஒன்றிலிருந்து 46 சடலங்கள் கண்டெடுப்பு!

அமெரிக்காவின் சான் ஆன்டோனியா பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லொறியிலிலுந்து 46 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க நேரப்படி, திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு, வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லொறிரியிலிருந்து அழுகுரல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த பொலிஸார், கண்டேய்னர் லொறியை திறந்து பார்த்தபோது, அங்கே 46 பேர் சடலங்களாகக் கிடந்தனர். 16 பேர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.

உடனடியாக மீட்புப் பணிகள் நடைபெற்றது. மீட்கப்பட்ட 16 பேரில் 12 பேர் பெரியவர்கள், 4 பேர் குழந்தைகள் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 சக்கரம் கொண்ட அந்த கண்டெய்னர் லொறி மூலம், வெளிநாடு தப்ப நினைத்த 100 இற்கும் மேற்பட்ட அகதிகள், கண்டெய்னருக்குள் காற்று இல்லாமை மற்றும் வெப்பம் காரணமாக உயிரிழந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவுக்குள் அகதிகளாக வந்து, அங்கிருந்து வெளிநாடுகளுக்குத் தப்ப முயல்பவர்கள், இதுபோன்று உயிரிழக்கும் நிகழ்வுகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1288800

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேதனையான நிகழ்வு

தங்களுக்கான ஓர் இடத்தைப்பிடித்து அங்கு நிம்மதியாக வாழலாம் என நினைத்த எத்தனை உயிர்கள் இப்படி பலியாகி போகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் இப்படியான ஒரு சம்பவம் தான் அகதிகள் பிரச்சனையை புரட்டிப்போட்டது.

Flüchtlinge: Abschiebung bringt Airlines Geld - WELT

Link to comment
Share on other sites

ஒரு அரசு வேலைகளை மெக்சிக்கோவுக்கு நகர்த்தியது. மற்ற அரசு வந்து வேலி போட்டது. 30 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள்  சட்டவிரோதமாக அமெரிக்காவில் வாழ்கிறார்கள்.  அகதிகள் இப்படி பரிதாபகரமாக இறப்பது மட்டும் நிற்கவில்லை.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.