Jump to content

மாதவனின் தி ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட்: பஞ்சாங்க வானியலுக்கும் இன்றைய வானியலுக்கும் என்ன வேறுபாடு?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாதவனின் தி ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட்: பஞ்சாங்க வானியலுக்கும் இன்றைய வானியலுக்கும் என்ன வேறுபாடு?

  • க. சுபகுணம்
  • பிபிசி தமிழ்
27 ஜூன் 2022
புதுப்பிக்கப்பட்டது 28 ஜூன் 2022
 

மாதவன் கூறியது போல் பஞ்சாங்கம் இன்றைய ராக்கெட் அறிவியலைப் பேசுகிறதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

சமீபத்தில் சென்னையில் 'ராக்கெட்ரி: நம்பி விளைவு' என்ற திரைப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய நடிகர் மாதவன், இந்தியாவின் செவ்வாய் கிரகத்திற்கான விண்வெளி திட்டத்தைப் பற்றிப் பேசியது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

அந்த செய்தியாளர் சந்திப்பில், ஒரு செய்தியாளர் "நம் நாட்டில் தான் விஞ்ஞான சாஸ்திரம், வானியல், நட்சத்திரம், கோள்கள் அனைத்தும் அந்தக் காலத்திலேயே இருந்துள்ளது. அதற்கும் பஞ்சாங்கத்திற்கும் இன்றுள்ள ராக்கெட்ரிக்கும் ஏதும் தொடர்புள்ளதா?" என்று கேட்கிறார்.

அதற்குப் பதிலளித்த நடிகர் மாதவன், "நாம் மேற்கொண்ட மார்ஸ் மிஷனுக்காக அமெரிக்கா, நாசா, ரஷ்யா, சீனா, ஐரோப்பா போன்ற நாடுகள் பலமுறை 800 மில்லியன், 900 மில்லியன் என்று செலவழித்து, 30-ஆவது முறை, 32-ஆவது முறையில் தான், அதிநவீன இன்ஜின் தொழில்நுட்பத்தின் மூலமாக, செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோளை அனுப்புவதில் வெற்றி பெற்றார்கள்.

ஆனால், இந்தியாவிடம் இருக்கும் இன்ஜின் மிகச் சிறியது. அவர்களுடைய விண்கலம் செல்லும் தொலைவை விடக் குறைவாகத்தான் செல்லும்.

அப்படியிருக்கும்போது, 2014ஆம் ஆண்டில், நம்பி நாராயணின் மருமகன் அருணன் மங்கள்யான் திட்டத்தின் இயக்குநராக இருந்தபோது, எந்த நேரத்தில், எந்த நொடியில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தைச் செலுத்தினால், செவ்வாய் கிரகத்தை செயற்கைக்கோள் சென்றடையும் என்பது பஞ்சாங்கத்தில் இருக்கும் 1000 வருடங்களுக்கு முன்பே கணித்து வைத்த செலஸ்டியல் வரைபடத்தைப் பயன்படுத்தி இந்தியா அனுப்பியது.

பஞ்சாங்க வானியல் வரைபடத்தைப் பார்த்து, பூமியைச் சுற்றி, நிலவைச் சுற்றி என்று ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி, ஒரு விளையாட்டு பொம்மையைப் போல் செவ்வாய் கிரகத்திற்குத் தட்டிவிட்டார்கள். அந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாகத் தனது வேலையைச் செய்தது.

இப்போதும் செவ்வாய் கிரகத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும் அந்த செயற்கைக்கோள் சாத்தியமானதற்கு நம்முடைய பஞ்சாங்கம் தான் காரணம்," என்று தெரிவித்திருந்தார்.

இதற்காக சமூக ஊடகங்களில் கேலி செய்யப்பட்டபோது, நடிகர் மாதவன் தன்னுடைய ட்விட்டர் பதிவில், "ஆல்மனாக் என்பதை தமிழில் பஞ்சாங்கம் என்று குறிப்பிட்டதற்கு எனக்கு இது தேவை தான். இந்த அளவுக்கு எனக்குத் தெரியாமல் இருந்துள்ளது. இருப்பினும் இரண்டே இன்ஜின்களை வைத்து செவ்வாய் கிரகத்தைச் சென்றடையும் திட்டத்தைச் சாத்தியப்படுத்திய சாதனையை நம்மால் மறுத்துவிட முடியாது. விகாஸ் இன்ஜின் ஒரு ராக்ஸ்டார்," என்று குறிப்பிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

பஞ்சாங்கம் இந்தியாவுக்கு மட்டுமானதில்லை

நடிகர் மாதவன் கூறுவதைப் போல் மங்கள்யான் திட்டத்தில் பஞ்சாங்கம் பயன்படுத்தப்பட்டதா, பஞ்சாங்கத்தில் செலஸ்டியல் வரைபடம், ராக்கெட் ஏவுவதற்கான அறிவியல் போன்றவையெல்லாம் பேசப்பட்டுள்ளனவா என்பதைப் பற்றியும் பஞ்சாங்கத்தின் பின்னணி பற்றியும் அறிந்துகொள்ள ஓய்வுபெற்ற அணுத்துறை விஞ்ஞானியும் ப்ரேக்த்ரூ சயின்ஸ் சொசைட்டியின் செயற்குழு உறுப்பினருமான டாக்டர்.வெங்கடேசனிடம் பேசினோம்.

அவர், "பஞ்சாங்கம் என்பதன் அடிப்படையில் இருக்கக்கூடிய நாட்காட்டி முறைக்கும் க்ரிகோரியன் நாட்காட்டி என்றழைக்கப்படும் நாட்காட்டி முறைக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

அது, தினசரி வானியல் நிகழ்வுகளைக் கண்காணித்து, கிரகங்கள், நட்சத்திரங்கள், சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம், அதேபோல் நிலவின் உதயம் மற்றும் அஸ்தமனம், அதன் வளர்பிறை, தேய்பிறை ஆகியவற்றைக் கணக்கிடுவதன் மூலம் மட்டுமே உருவாக்கப்பட்டது.

 

மாதவன் கூறியது போல் பஞ்சாங்கம் இன்றைய ராக்கெட் அறிவியலைப் பேசுகிறதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அப்போது மனிதர்களால் பார்க்க முடிந்தது ஐந்து கிரகங்களை மட்டுமே. ஆகையால், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று அவற்றுக்குப் பெயரிட்டனர். அதுபோக, ஞாயிறு என்று சூரியனையும் திங்கள் என்று நிலவையும் அடையாளப்படுத்தினர்.

இவற்றை அடிப்படையாக வைத்து, இந்திய நாகரிகங்களில் செய்யப்பட்ட கணிப்புகள் மற்றும் கண்காணிப்புகளின் மூலமாகச் செய்யப்பட்ட கணக்கீடுகள் ஆகியவை, ஏற்கெனவே, கிரேக்க, ரோம, அரேபிய நாகரிகங்களைப் போன்றவற்றோடு பரிமாறிக் கொள்ளபட்டுள்ளன. அவற்றில் இத்தகைய அறிவுப் பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. யுவான் சுவாங் போன்ற அறிஞர்கள் வருகையின்போது, அரசர்கள் வருகையின்போது உடன் வரும் பண்டிதர்களுடன் பரிமாறிக் கொள்வது என்று, நம்மிடமிருந்து மற்ற நாகரிகங்கள் வானியல் கண்காணிப்பு முறைகளைப் பெற்றுக் கொள்வதும் மற்ற நாகரிங்களிடம் இருந்து நாம் நாகரிகங்கள் பெற்றுக் கொள்வதும் நடந்துள்ளன.

ஆகவே பஞ்சாங்கம் என்பது இங்கு மட்டுமே இருக்கக்கூடிய பிரத்யேகமான விஷயமல்ல. உலகம் முழுக்கவுள்ள நாகரிகங்கள் முக்காலத்தில் இத்தகைய வானியல் கண்காணிப்பு மற்றும் கணக்கீடுகளைச் செய்துள்ளார்கள்.

 

மாதவன் கூறியது போல் பஞ்சாங்கம் இன்றைய ராக்கெட் அறிவியலைப் பேசுகிறதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இன்று பஞ்சாங்கம் என்று சொல்லும்போது மக்கள் அதைப் புரிந்துகொள்ளும் விதத்திற்கும் முன்னர் பஞ்சாங்கம் என்ற பெயரில் இருந்த அறிவுத் தொகுப்புக்கும் வேறுபாடு உள்ளது.

எப்போது மழை வரும், வேளாண்மையில் விதைகளை விதைப்பதற்குச் சரியான நேரம் எது என்பனவற்றை முடிவு செய்வதற்கு, எந்தக் காலகட்டத்தில் போருக்குச் சென்றால் வசதியான சூழல் நிலவும் என்பனவற்றைப் போல, காலநிலை மற்றும் பருவநிலைகளைப் புரிந்துகொண்டு பயன்பாட்டு அடிப்படையில் செயல்பட பஞ்சாங்கம் உதவியது.

இதைத் தாண்டி தனிமனித வாழ்வில் அதைப் பயன்படுத்தி எதிர்காலத்தை யூகிக்கும் பாதையில் அதைக் கொண்டு சென்றார்கள். அது அறிவியல்பூர்வமாகச் சாத்தியமில்லாதது. அதை சோதிடம் என்று கூறுகிறோம். அது அறிவியலுக்குப் புறம்பானது.

பஞ்சாங்கத்திலுள்ள பழங்கால அறிவியல் கணக்குகள் தோராயமாக சரியானவைதான். அவை அறிவியல்பூர்வமானவை தான். ஆனால், இங்கிருந்து செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் பாதையைக் கணக்கிடுவதற்கு மங்கள்யான் திட்டத்தில் பஞ்சாங்கம் பயன்படுத்தப்பட்டது என்பது உண்மையில்லை," என்று கூறுகிறார்.

 

மாதவன் கூறியது போல் பஞ்சாங்கம் இன்றைய ராக்கெட் அறிவியலைப் பேசுகிறதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

பழங்கால அறிவியலே பஞ்சாங்கம்

மேலும், "இப்படியான ஒரு திரைப்படத்தின் மூலமாக, பஞ்சாங்கத்தை வைத்து தான் செவ்வாய் கிரக பயணப் பாதையைக் கணக்கிட்டார்கள் என்று கூறுவது, தவறான புரிதலைத் தருகிறது. உண்மை என்னவென்றால், பஞ்சாங்கத்தில் கூறப்பட்டிருக்கும் கோட்பாடுகள், கோள்களின் கால, இடமாற்ற கணக்கீடு முறைகள் சரியானவை தான் . ஆனால், துல்லியமானவை அல்ல. ஏனெனில், சூரியன், நிலவு மற்றும் ஐந்தே கிரகங்களைக் கணக்கில் கொண்டு பஞ்சாங்கம் வடிவமைக்கப்பட்டது. அவற்றின் நகர்வுகளையும் அவற்றின் நிலையான நட்சத்திரங்களையும் வைத்து மேற்கொள்ளப்பட்ட பழங்கால அறிவியல் தான் பஞ்சாங்கம்.

ஆனால், இந்தக் காலத்து அறிவியல் அதையெல்லாம் பல மடங்கு தாண்டிவிட்டது. அதுமட்டுமின்றி, ராக்கெட் மற்றும் செயற்கைக் கோளின் எறிதடங்களை முன்னமே துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருப்பார்கள். அதன்படி, ராக்கெட் ஏவப்பட்டு, திட்டமிட்ட பாதையில் பயணிக்கும். இதுகுறித்து நடிகர் மாதவன் கூறியதெல்லாம் சரிதான். ஆனால், ராக்கெட் எறிதடங்களை, செயற்கைக் கோளின் சுற்றுவட்டப் பாதையைக் கண்டறிவதற்கு பஞ்சாங்கத்தைத் தான் பயன்படுத்தினார்கள் என்பது தவறு. அது மிகவும் மேம்படுத்தப்பட்ட நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களின் உதவியோடு மிகத் துல்லியமாகக் கணக்கிடுப்பட்டுள்ளதாகும்.

நாம் பழங்கால வானியலை மதிக்க வேண்டியது அவசியம். இதேபோல், கிரேக்க, ரோம, அரேபிய, சீன நாகரிகங்களில் கூட இருக்கிறது. இவையெல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அவையனைத்தையும் நாம் மதிக்க வேண்டும். ஆனால், இப்போது சீன வானியல், அமெரிக்க வானியல், இந்திய வானியல் என்று தனித்தனியாக இல்லை. உலகளவில் நவீனமயமான மேம்படுத்தப்பட்ட ஒற்றை அறிவியலையே பின்பற்றுகிறோம்.

இன்று பஞ்சாங்கத்தை வைத்து மங்கள்யான் திட்டத்தைச் சாத்தியப்படுத்தினார்கள் என்று கூறுவது, மக்கள் மனதிலுள்ள சில மூட நம்பிக்கைகளோடு தொடர்புள்ள பஞ்சாங்கத்தை அதாவது சோதிடத்தை போற்றுவதாகிவிடும். ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருப்பதாகச் சொல்வதையும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மங்கள்யான் திட்டத்தைச் சாத்தியப்படுத்தியதையும் தொடர்பு படுத்தியதாகிவிடும். மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கைகளும் வலுப்பட்டுவிடும். அது அறிவியல்பூர்வமற்ற செயல்," என்று கூறினார்.

கலிலியோவும் பஞ்சாங்கமும்

பஞ்சாங்கத்தில் கூறப்பட்ட அறிவியலுக்கும் இப்போதுள்ள அறிவியலுக்குமான வேறுபாடு, அது இப்போதைய கணக்கீடுகளைப் போல் துல்லியமாக இல்லாததன் காரணம் ஆகியவை குறித்து கேட்டபோது, "பஞ்சாங்கத்தின் வானியல் பார்வை, பூமியை மையமாகக் கொண்டிருந்தது. பூமியைச் சுற்றித்தான் சூரியன், நிலவு, செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகியவை சுழன்றன என்ற பார்வையில் வானியல் நிகழ்வுகள் கண்காணிக்கப்பட்டன.

பூமியை மையமாகக் கொண்டது என்பதை அறிவியல்பூர்வமாக மாற்றி சூரியனை மையமாகக் கொண்டு கோள்கள் சுற்றுகின்றன என்பதை கலிலியோ நிரூபித்ததே, வெள்ளி கிரகத்தின் வளர்பிறை, தேய்பிறை வடிவங்களை வைத்து தான். சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் அதன் உள்வட்டத்தில் புதன், வெள்ளி ஆகிய கோள்கள் உள்ளன. பூமிக்கு வெளி வட்டத்தில் செவ்வாய் உள்ளது. ஆக உள்வட்டத்தில் இருக்கக்கூடிய கோள்கள் அவற்றின் சுற்றுவட்டப் பாதையில் சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே வரும்போது, சூரிய ஒளி அதன் மீது படுவதற்கும் சூரியனுக்குப் பின்புறத்தில் இருந்து நாம் பார்க்கும்போது நிலவைப் போல் முழுதாகவோ அல்லது பிறையாகவோ தெரிவதும் வெள்ளி கிரகத்தில் சாத்தியம்.

 

சூரிய மண்டலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கலிலியோ அதை தொலைநோக்கி முலமாகப் பார்த்தார். இப்போதுகூட அதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். நம் கண்களுக்கு முழுதாக இருப்பதைப் போல் தெரியக்கூடிய அந்த வெள்ளி கிரகம், தொலைநோக்கியில் பார்த்தால் வளர்பிறையாகவும் தேய்பிறையாகவும் தெரிவதை, பூமியை மையமாக வைத்துச் சுழலும் கோள்கள் என்ற கோட்பாட்டின் படி விளக்க முடியாது. அப்படி விளக்க முடியவில்லையே என்றபோது தான், கலிலியோ சூரியனை மையமாக வைத்துக் கணக்கிட்டுப் பார்த்தார்.

அப்போது, அதற்கான அறிவியல்பூர்வ விளக்கம் பொருந்தி வந்தது. சூரிய மையக் கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. வெள்ளி பிறையின் தோற்றத்தைச் சரியாகக் கணக்கிடுவதிலேயே புவிமைய கோட்பாடு கணக்கில் தவறும்போது, செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதற்கான பாதையைக் கணக்கிடுவதிலும் பஞ்சாங்கத்தைப் பயன்படுத்தினால் நிச்சயமாகப் பெரியளவில் வேறுபாடு இருக்கும்," என்று கூறினார் டாக்டர்.வெங்கடேசன்.

மேலும், "நடிகர் மாதவன் நம்பி நாராயணன் போன்ற ஒருவரின் வாழ்க்கையைப் படமாக நடித்திருப்பது மிகவும் பாராட்டத்தக்க விஷயம். அறிவியல் சார் திரைக்கதைகள் வருவது மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால், இதுபோன்ற திரைப்படங்களில் நடிப்பவர்கள், அதீத உற்சாகத்தால் அறிவியலைத் தவறாகப் புரிந்துகொள்வதைத் தவிர்த்தால், அத்தகைய போலி அறிவியல் நம்பிக்கைகள் மக்களிடையேயும் அதிகரிப்பதைத் தடுக்கும்," என்று கூறினார்.

https://www.bbc.com/tamil/science-61952289

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • இந்தியாவுக்கு பிற‌க்கு சுத‌ந்திர‌ம் கிடைச்ச‌ நாடு Slovenia அந்த‌ நாட்டின் முன்னேற்ற‌ம் வாழ்த்தும் ப‌டி இருக்கு..................ப‌ல‌ விளையாட்டில் அவ‌ங்க‌ள் திற‌மைசாலிக‌ள்.................ப‌ல‌ நோய்க‌ளுக்கான‌ ம‌ருந்து க‌ண்டு பிடிப்ப‌தில் Slovenia திற‌மையான‌ நாடு................ ம‌னித‌க் க‌ழிவை ம‌னித‌னே அள்ளுவ‌து உண்மையில் அருவ‌ருக்க‌ த‌க்க‌து இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ இந்த‌ நூற்றாண்டில் ம‌னித‌க் க‌ழிவை சுத்த‌ம் செய்ய‌ எவ‌ள‌வோ வ‌ச‌திய‌ க‌ண்டு பிடித்து விட்டார்க‌ள்..............2018க‌ளில் தாயிலாந்தில் ம‌னித‌க் க‌ழிவு  வெளியில் வ‌ர‌ அந்த‌ அர‌சாங்க‌ள் ஒரு நாளில் இய‌ந்திர‌த்தை வைத்து எல்லாத்தையும் ச‌ரி செய்து விட்டார்க‌ள்................ஆனால் இந்தியாவில்? ஆம் நினைவு இருக்கு க‌ட‌லில் கொட்டிய‌ எண்ணைய‌ வாளி வைச்சு அள்ளினார்க‌ள் இது தான் மோடியின் டியிட்ட‌ல் இந்தியா கிலின் இந்தியா.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.