Jump to content

பின்லாந்து, சுவீடனை நேட்டோவில் சேர்க்க இணங்கியது துருக்கி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நேட்டோவில் பின்லாந்து மற்றும் சுவீடனை சேர்க்க ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்த துருக்கி இப்போ அதற்கு இணங்கியுள்ளது.

இதன் மூலம் இந்த நாடுகள் நேட்டோவில் இணைய இருந்த பெரிய தடை நீங்கியுள்ளது.

நேட்டோவின் விஸ்தரிப்பையே உக்ரேன் போரின் காரணியாக ரஸ்யா சுட்டியது.

உக்ரேன் போர் வரை நேட்டோசில் சேர 20-25% பின்லாந்து மக்களும், உக்ரேன் போரின் பின் 79% பின்லாந்து மக்களும் ஆதரவளிப்பதாகவும். சுவீடனில் இந்த சதவீதம் 60%க்கும் மேல் எனவும் கருத்துக்கணிப்புகள் சொல்கிறன.

இந்த நாடுகள் துருக்கி மீது போட்டிருந்த ஆயுத விற்பனை தடை மற்றும் தீவிரவாதிகளை (என துருக்கி சொல்வோரை) துருக்கிக்கு நாடு கடத்தல் போன்ற விடயங்களில் துருக்கியின் கோரிக்கைகளை ஏற்றுள்ளதாக தெரிகிறது.

மூன்று நாடுகளும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்தபின் துருக்கியின் நிலைப்பாட்டில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நகர்வு பால்டிக் கடலை “நேட்டோ ஏரி” யாக மாற்றும் என்கிறார் பி பி சி யின் பாதுகாப்பு விவகார நிருபர்.

இந்த விஸ்தரிப்பு நடந்தால் பால்டிக் கடலின் சென்பீட்டர்ஸ் பேர்க், கலினின்கிராட் கரைகள் தவிர் ஏனைய கரைகள் எல்லாம் நேட்டோவின் ஆளுகையின் கீழேயே வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிகு

நேரடி மொழிபெயர்ப்பல்ல. முக்கிய தகவல்கள் மட்டும்.

https://www.bbc.co.uk/news/world-europe-61971858

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நல்ல முடிவு என்றுதான் தெரிகிறது.. ஆனால் நேட்டோவின் விஸ்தரிப்பு EUவிற்கு பிரச்சனையாக அமையுமா?

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் திருத்தப்பட்டது
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இது ஒரு நல்ல முடிவு என்றுதான் தெரிகிறது.. ஆனால் நேட்டோவின் விஸ்தரிப்பு EUவிற்கு பிரச்சனையாக அமையுமா?

இல்லை என நினைக்கிறேன்.

மீசை வச்சா நேட்டோ. மீசை எடுத்தா ஈயூ தானே?🤣.

அதோட ஈயூ ஆமிக்கு பல ஈயூ நாடுகளே ஆதரவில்லை.

அமெரிக்கா இன்றி இவர்களால் ரஸ்யாவை தாக்குபிடிக்கவும் முடியாது. ஆகவே பாதுகாப்பு விடயத்தில்

நேட்டோ>ஈயு என்பதே ஈயுவின் நிலைப்பாடும் கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுயநிர்ணய உரிமைக்காகவும் தனிமனித உரிமைக்காகவும் போராடும் குர்திஷ் இயக்கத்திற்கு சாவுமணி அடிக்கப்படுகின்றது. குர்திஷ் இனத்திற்காக போராடி சுவீடன் மற்றும் பின்லாந்தில் தங்கியிருக்கும் போராளிகளுக்கு நேரடியாகவே ஆபத்து உருவாகி விட்டது.ஒப்பந்த அடிப்படையில் துருக்கியால் தேடப்படும் குர்திஷ் போராட்ட வீரர்களை நாடு கடத்துவார்கள்.

துருக்கி சந்தர்ப்பம் பார்த்து சாதித்து விட்டது. மனிதாப நாடகம் போடும் மேற்குலகின் வேடங்கள் மெதுவாக கலைகின்றன. எது நடந்தாலும் எம்மினத்தவரின் மேற்குலக விசுவாசம்  அவர்களின் சாதித்தடிப்புக்கு ஒப்பானது.

சும்மா இருந்த ரஷ்யாவை சீண்டிவிட்டு நேட்டொ விஷ்தரிப்பு எனும் பெயரில் என்னென்ன அநியாயங்களை செய்யப்போகின்றார்களோ தெரியவில்லை?🧐

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

அதோட ஈயூ ஆமிக்கு பல ஈயூ நாடுகளே ஆதரவில்லை.

அமெரிக்கா இன்றி இவர்களால் ரஸ்யாவை தாக்குபிடிக்கவும் முடியாது. ஆகவே பாதுகாப்பு விடயத்தில்

ஈயூ ஆமிக்கு  அமெரிக்காதானே முட்டுக்கட்டை....
சண்டையே வேண்டாம் என சொல்லிக்கொண்டிருந்த ஜேர்மனியை வலுக்கட்டாயமாக தூண்டி விட்டதும் அமெரிக்காதானே?😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சுயநிர்ணய உரிமைக்காகவும் தனிமனித உரிமைக்காகவும் போராடும் குர்திஷ் இயக்கத்திற்கு சாவுமணி அடிக்கப்படுகின்றது. குர்திஷ் இனத்திற்காக போராடி சுவீடன் மற்றும் பின்லாந்தில் தங்கியிருக்கும் போராளிகளுக்கு நேரடியாகவே ஆபத்து உருவாகி விட்டது.ஒப்பந்த அடிப்படையில் துருக்கியால் தேடப்படும் குர்திஷ் போராட்ட வீரர்களை நாடு கடத்துவார்கள்.

துருக்கி சந்தர்ப்பம் பார்த்து சாதித்து விட்டது. மனிதாப நாடகம் போடும் மேற்குலகின் வேடங்கள் மெதுவாக கலைகின்றன. எது நடந்தாலும் எம்மினத்தவரின் மேற்குலக விசுவாசம்  அவர்களின் சாதித்தடிப்புக்கு ஒப்பானது.

சும்மா இருந்த ரஷ்யாவை சீண்டிவிட்டு நேட்டொ விஷ்தரிப்பு எனும் பெயரில் என்னென்ன அநியாயங்களை செய்யப்போகின்றார்களோ தெரியவில்லை?🧐

நிச்சயமாக. இதே போன்ற ஒரு கழுத்தறுப்பு முன்னர் 97 இல் அப்துல்லா ஓசிலானுக்கும் நடந்தது லண்டனில்.

பல பலம்மிக்க எதிரிகளை ஒரே நேரத்தில் எதிர்க்கும் குர்தீஸ் மக்கள் இதற்கு பழக்கப்பட்டிருப்பர்.

ஈராக்கில் கூட அண்மையில் அவர்களை அம்போ என விட்டது மேற்கு.

ஆனாலும் அவர்கள் மேற்கோடு

“நம்ப நட, நம்பி நடவாதே” என்றே தொடர்ந்தும் அணுகுவார்கள்.

ஏனென்றால் அவர்கள் மிக புத்திசாலிகள்.

மேற்கினை தனியே எஜமான விசுவாசம், மேட்டுகுடிமை, சாதி தடிப்பு, முள்ளிவாய்க்காலுக்கு பழிவாங்கல் என்று குறுகிய அரியங்கள் (tunnel vision) பார்க்கும் அடங்கா தமிழர்கள் சிலர் இந்த மக்களிடம் இருந்து பலதை படிக்கலாம். 

2 hours ago, குமாரசாமி said:

ஈயூ ஆமிக்கு  அமெரிக்காதானே முட்டுக்கட்டை....
சண்டையே வேண்டாம் என சொல்லிக்கொண்டிருந்த ஜேர்மனியை வலுக்கட்டாயமாக தூண்டி விட்டதும் அமெரிக்காதானே?😂

அமெரிக்காவின் கைப்படி ஆடும் பொம்மைகள்தான் ஈயுவும், ஜேர்மனியும், புட்டினும் எண்டுறியள்.

ஒத்துகிறேன்.

ஆத்திர புட்டினுக்கு புத்தி மட்டு 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

ஆத்திர புட்டினுக்கு புத்தி மட்டு 🤣

நான் புட்டின் செய்வது எல்லாம் சரியென வாதாட வரவில்லை. ரஷ்யாவை உக்ரேன் மீது போர் தொடுக்கும் அளவிற்கு கொண்டுவந்து விட்டது யார்? ரஷ்யாவை பலவீனப்படுத்துவோம் என்று சொல்லி போரை திணித்தால் ரஷ்யா சும்மா இருக்குமா? மற்றும் படி நேட்டொ என்பது தேவையில்லாத ஆணி. அது அமெரிக்காவுக்கு மட்டுமே தேவையானது.

குதிஷ் இன மக்களுக்காக ஆதரவுக்கரம்  கொடுத்த அந்த இரு நாடுகளும் குத்துக்கரணம் அடித்துவிட்டது. பாவம் அந்த இனம். இந்த நிலை ஈழத்தமிழினத்திற்கும் வரலாம். யார் கண்டது.

எண்டாலும் சுவீடனும் பின்லாந்தும் நேட்டோவில் இணைவது எனக்கு ஒரே ஹப்பி 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

நேட்டோவில் பின்லாந்து மற்றும் சுவீடனை சேர்க்க ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்த துருக்கி இப்போ அதற்கு இணங்கியுள்ளது.

இந்த நல்ல செய்தியை அறிந்தவுடன் எனக்கும் நினைவில வந்தது போனது உக்ரேனை ஆக்கிரமிப்பதற்காக புரின் போரை தொடங்கியபோது   போது சொன்ன நேட்டோவின் விஸ்தரிப்பு காரணம் 😂

7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இது ஒரு நல்ல முடிவு என்றுதான் தெரிகிறது..

ஓம். உலகளாவிய சாம்ராஜ்யத்தை உருவாக்க ஆசைபடும் விளாடிமிர் புரின் ஆசைக்கும் முடிவு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குர்திஸ்களுக்கு ஒரு முள்ளிவாய்க்கால் பார்ர்ர்ர்ச........ல்  🤣 

2 hours ago, goshan_che said:

நிச்சயமாக. இதே போன்ற ஒரு கழுத்தறுப்பு முன்னர் 97 இல் அப்துல்லா ஓசிலானுக்கும் நடந்தது லண்டனில்.

பல பலம்மிக்க எதிரிகளை ஒரே நேரத்தில் எதிர்க்கும் குர்தீஸ் மக்கள் இதற்கு பழக்கப்பட்டிருப்பர்.

ஈராக்கில் கூட அண்மையில் அவர்களை அம்போ என விட்டது மேற்கு.

ஆனாலும் அவர்கள் மேற்கோடு

“நம்ப நட, நம்பி நடவாதே” என்றே தொடர்ந்தும் அணுகுவார்கள்.

ஏனென்றால் அவர்கள் மிக புத்திசாலிகள்.

மேற்கினை தனியே எஜமான விசுவாசம், மேட்டுகுடிமை, சாதி தடிப்பு, முள்ளிவாய்க்காலுக்கு பழிவாங்கல் என்று குறுகிய அரியங்கள் (tunnel vision) பார்க்கும் அடங்கா தமிழர்கள் சிலர் இந்த மக்களிடம் இருந்து பலதை படிக்கலாம். 

கோசான்

சொல்ல விரும்பியும், சொல்லாமல் மழுப்புவது எதனை  ?  😉

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பாவம் அந்த இனம். இந்த நிலை ஈழத்தமிழினத்திற்கும் வரலாம். யார் கண்டது.

நிச்சயம் அந்த நிலை ஈழத் தமிழருக்கு மீண்டும்   ஏற்படும்.

ஏற்கனவே ஒரு தடவை இந்தியனை நம்பி அழிந்தாயிற்று. 

சிங்கள மிலேனியல்ஸ் மேற்கின் பக்கம் முற்றாக   ஈர்க்கப்பட்டு அவர்கள் பக்கம் சாயும்போது, திரும்பவும் ஒருமுறை ஈழத் த்மிழரின் கழுத்து அறுக்கப்படும். 

ஏற்கனவே UNP மேற்குலகின் விசுவாசிகள் என்பதை நினைவிற் கொள்க. 

சாட்சிக்காறனின் கால்களில் விழுவதை விட , சண்டைக்காறனின் காலில் விழலாமா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

பல பலம்மிக்க எதிரிகளை ஒரே நேரத்தில் எதிர்க்கும் குர்தீஸ் மக்கள் இதற்கு பழக்கப்பட்டிருப்பர்.

ஈழத்தமிழ் மக்கள் சிங்களத்திற்கு அடிமைப்பட்டு வாழ பழகி விட்டார்கள். எனவே அது பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை என எடுத்துக்கொள்ளலாம்.80 வயது சம்பந்தர் தனது அரசியல் வாழ்வில் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று புலம்புவது போல்.....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குர்திஸ்தான் போராளிகள் இப்போதும் தங்களது போராட்டத்தை சொந்த மண்ணில் முன்னெடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு பெரிதாக ஒரு பாதிப்பும் பின்லாந்து நாடு துருக்கியுடன் செய்துகொண்ட ஒப்பந்த்தால் பிரச்சனை வராது சிறிய பின்வாங்கலே. 

ஆனால் இதன்மூலம் புலம்பெயர் தமிழர் ஒருவிடையத்தை புரிந்துகொள்ளலாம் 

என்னதான் இருந்தாலும் தங்களுக்கு ஒன்றென்றால் எவருக்கும் கழுத்தில் கத்தியை வைத்தாலும் பரவாயில்லை எனும் நாடுகள் தான் மேற்குலக நாடுகளாகும் என்பதே

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

ரஷ்யாவை உக்ரேன் மீது போர் தொடுக்கும் அளவிற்கு கொண்டுவந்து விட்டது யார்?

அமெரிக்காவும்.

ஆனால் இதில் புட்டினின் ஷோ காட்டும் முஸ்தீபும். ஷார் மன்னர் காலம் போல் ஐரோப்பாவில் நாடு பிடிக்கும், தேசிய இனங்களை அடக்கும் ஏகாதிபத்திய கனவும் ஒரு முக்கிய காரணம்.

நீங்கள் தனியே அமெரிகாவை நேட்டோவ மட்டும் நோவது  - மறுபடியும்  -காமாலை பார்வை.

தன்னை சூழ பெலரூசை தவிர உள்ள நாடுகளை தன்னோடு  வைத்திருக்க தெரியாமல் - எங்கோ கடலுக்கு அப்பால் இருக்கும் அமெரிக்காவை நோக்கி தள்ளிய - ரச்யாவின் பெரியண்ணன் போக்கும் ஒரு  முக்கிய காரணம்.

8 hours ago, குமாரசாமி said:

குதிஷ் இன மக்களுக்காக ஆதரவுக்கரம்  கொடுத்த அந்த இரு நாடுகளும் குத்துக்கரணம் அடித்துவிட்டது. பாவம் அந்த இனம். இந்த நிலை ஈழத்தமிழினத்திற்கும் வரலாம். யார் கண்டது

இருவருக்கும் ஒரே ஒஅதில்தான். 👆🏼👇

எந்த மழுப்பலும் இல்லை.

எமக்கான least resistance உள்ளபாதையில் பயணிப்பதே வழி.

கழுத்தறுப்புகளை எதிர்பார்த்தபடியே.

யூதர்களை கைவிடவில்லையா.

ஆனால் இப்போ இனி கைவிடாத இடத்துக்கு அவர்கள் சந்து விட்டார்கள்.

குர்தீக்களும் வருவார்கள்.

நாங்கள்?

6 hours ago, Kapithan said:

கோசான்

சொல்ல விரும்பியும், சொல்லாமல் மழுப்புவது எதனை  ?  😉

6 hours ago, Kapithan said:

சாட்சிக்காறனின் கால்களில் விழுவதை விட , சண்டைக்காறனின் காலில் விழலாமா ? 

விழலாம். சண்டைகாஎஅன் முழுவதும் சண்டைகாரனாகாவே மாற சேண்டும் என்ற ஒரே நிபந்தனை தான் வைப்பான்.

 உங்களுக்கு எப்படி வசதி?

😂😇கப்பித்தான் கலகெதர

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5 hours ago, Elugnajiru said:

என்னதான் இருந்தாலும் தங்களுக்கு ஒன்றென்றால் எவருக்கும் கழுத்தில் கத்தியை வைத்தாலும் பரவாயில்லை எனும் நாடுகள் தான் மேற்குலக நாடுகளாகும் என்பதே

உலகில் எல்லா நாடுகளுமே.

இதனால்தான் புலிகளின் தலைமை நாட்டுக்கு வெளியே  வருவதை ஒரு தெரிவாகவே கொள்ளவில்லை.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

அமெரிக்காவும்.

ஆனால் இதில் புட்டினின் ஷோ காட்டும் முஸ்தீபும். ஷார் மன்னர் காலம் போல் ஐரோப்பாவில் நாடு பிடிக்கும், தேசிய இனங்களை அடக்கும் ஏகாதிபத்திய கனவும் ஒரு முக்கிய காரணம்.

நீங்கள் தனியே அமெரிகாவை நேட்டோவ மட்டும் நோவது  - மறுபடியும்  -காமாலை பார்வை.

தன்னை சூழ பெலரூசை தவிர உள்ள நாடுகளை தன்னோடு  வைத்திருக்க தெரியாமல் - எங்கோ கடலுக்கு அப்பால் இருக்கும் அமெரிக்காவை நோக்கி தள்ளிய - ரச்யாவின் பெரியண்ணன் போக்கும் ஒரு  முக்கிய காரணம்.

இருவருக்கும் ஒரே ஒஅதில்தான். 👆🏼👇

எந்த மழுப்பலும் இல்லை.

எமக்கான least resistance உள்ளபாதையில் பயணிப்பதே வழி.

கழுத்தறுப்புகளை எதிர்பார்த்தபடியே.

யூதர்களை கைவிடவில்லையா.

ஆனால் இப்போ இனி கைவிடாத இடத்துக்கு அவர்கள் சந்து விட்டார்கள்.

குர்தீக்களும் வருவார்கள்.

நாங்கள்?

விழலாம். சண்டைகாஎஅன் முழுவதும் சண்டைகாரனாகாவே மாற சேண்டும் என்ற ஒரே நிபந்தனை தான் வைப்பான்.

 உங்களுக்கு எப்படி வசதி?

😂😇கப்பித்தான் கலகெதர

RT.com

Turkey wants dozens of extraditions after NATO deal

Requests will be sent to Sweden and Finland after they agree to address Ankara’s “terrorists” concerns, the minister said

https://www.rt.com/news/558081-turkey-extraditions-sweden-finland/

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

RT.com

Turkey wants dozens of extraditions after NATO deal

Requests will be sent to Sweden and Finland after they agree to address Ankara’s “terrorists” concerns, the minister said

https://www.rt.com/news/558081-turkey-extraditions-sweden-finland/

🤣

அவர்கள் எப்போதும் மேற்குலகின் அநியாயங்களுக்கு விசுவானமானவர்கள்.நன்றிக்கடன் உள்ளவர்கள்.மேற்குலகு கிழித்த கோட்டை தாண்டமாட்டார்கள்.நீதி நேர்மை நியாயங்கள் எல்லாம் கிடையாது. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

RT.com

Turkey wants dozens of extraditions after NATO deal

Requests will be sent to Sweden and Finland after they agree to address Ankara’s “terrorists” concerns, the minister said

https://www.rt.com/news/558081-turkey-extraditions-sweden-finland/

🤣

மேலே “கழுத்தறுப்புகளை எதிர்பார்த்தபடியே” 

“யூதர்களை கைவிடவில்லையா”

என எழுதியவற்றின் அர்த்தம் புரியாதவரர்கள் அல்ல நீங்கள் இருவரும்.

ஆனால் தர்க்கம் தீர்ந்து போனபின் மீண்டும் சொன்னதையே திரும்ப சொல்லும் “என்ன கைய பிடிச்சு இழுத்தியா” என் பலரும் கைகொள்ளும் அணுகுமுறைக்கு தாவியுள்ளீர்கள்😂.

நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விளங்க நினைப்பவன் said:

இந்த நல்ல செய்தியை அறிந்தவுடன் எனக்கும் நினைவில வந்தது போனது உக்ரேனை ஆக்கிரமிப்பதற்காக புரின் போரை தொடங்கியபோது   போது சொன்ன நேட்டோவின் விஸ்தரிப்பு காரணம் 😂

ஓம். உலகளாவிய சாம்ராஜ்யத்தை உருவாக்க ஆசைபடும் விளாடிமிர் புரின் ஆசைக்கும் முடிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

மேலே “கழுத்தறுப்புகளை எதிர்பார்த்தபடியே” 

“யூதர்களை கைவிடவில்லையா”

என எழுதியவற்றின் அர்த்தம் புரியாதவரர்கள் அல்ல நீங்கள் இருவரும்.

ஆனால் தர்க்கம் தீர்ந்து போனபின் மீண்டும் சொன்னதையே திரும்ப சொல்லும் “என்ன கைய பிடிச்சு இழுத்தியா” என் பலரும் கைகொள்ளும் அணுகுமுறைக்கு தாவியுள்ளீர்கள்😂.

நன்றி வணக்கம்.

அவசரப்படாதீர்கள் கோசான். 

RT. news ஐ இணைத்தது உங்களுடன் முரண்படுவதற்கல்ல. 

நாம் எல்லோரும் எதிர்பார்த்ததை விட, அதி வேகமாக கழுத்தறுப்பு நடைபெற்றுவிட்டது என்பதைக் காட்டவே அந்தச் செய்தியை இணைத்திருந்தேன். 

வேறு நோக்கம் எதுவும் இல்லை. 

👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கி: சொன்ன சொல்லில் இருந்து பின்வாங்கினீர்கள் எனில் நானும் பின்வாங்க வேண்டி வரும் என சுவீடன், பின்லாந்திடம் தெருவிப்பு.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.