Jump to content

இலங்கையின் மின்சக்தியை கபளீகரம் செய்யும் இந்தியா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் மின்சக்தியை கபளீகரம் செய்யும் இந்தியா

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

இலங்கையர்களின் இன்றைய நெருக்கடி, அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றவியலாத ஓர் அரசாங்கமும் அதை வீட்டுக்கு அனுப்பவியலாத மக்களும் பேச்சு மன்றமாய் பாராளுமன்றமும் திகழ்கின்ற ஒரு நாட்டில், எதிர்பார்ப்பதற்கு அதிகமில்லைத் தான்!

நெருக்கடிகள், மக்களுக்கு வாய்ப்பை மட்டும் வழங்குவதில்லை; ரணிலுக்கு பிரதமராகும் வாய்ப்பைக் கொடுத்தது; இன்ன பிறருக்கு, அடுத்த ஜனாதிபதி கனவைக் கொடுத்துள்ளது.

அயல்நாடுகள், அவர்தம் நலன்களை வெற்றிகரமாக வென்றெடுப்பதற்கும் செயற்படுத்துவதற்கும் நெருக்கடிகள் வாய்ப்பாகிறது. ஜூன் 10ஆம் திகதி, ‘பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக்குழு’ (கோப் குழு) முன்னிலையில் கருத்துரைத்த இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ. பெர்டினன்டோ, இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, வடபகுதியில் காற்றாலைகளை அமைக்கும் அனுமதியை, இந்தியாவின் அதானி குழுமத்துக்கு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ தனக்கு உத்தரவிட்டதாகக் கூறினார்.

இதை மறுத்து, ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். 24 மணித்தியாலங்களுக்குள் தனது கருத்தை, மின்சார சபைத் தலைவர் மீளப்பெறுவதாக அறிவித்தார். சில நாள்களில் அவர், பதவியில் இருந்து விலகியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

குறித்த திட்டத்தின்படி, மன்னார், பூநகரி பகுதிகளில் அதானி குழுமத்தின் Adani Green Energy Limited (AGEL) நிறுவனம், காற்றாலை மற்றும் சூரியசக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் உரிமத்தைப் பெற்றுள்ளது. அதானிக்கு இதை வழங்குமாறு, தான் கட்டளையிடவில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில், மின்சார சபைத் தலைவரின் கருத்து இந்தியாவில் ஒரு புயலைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (19) Sunday Times பத்திரிகை குறித்த விடயம் தொடர்பில் முக்கியமான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. அதானி குழுமத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் நடைபெற்ற தகவல் பரிமாற்றங்களின் உள்ளடக்கத்தின் முக்கியமான அம்சங்களை அச்செய்தி கோடுகாட்டியுள்ளது.

image_c02295119d.jpg

2021 நவம்பர் மாதம் AGEL நிறுவனத்தின் நிறைவேற்றதிகாரி இலங்கை திறைசேரியின் செயலாளருக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அதில் ‘எமது நிறுவனம், மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கான வலுவுள்ள மீள்சக்தித் திட்டங்களை, அதன் வளர்ந்து வரும் எரிசக்தி தேவைக்கு ஏற்றவாறு விரைவாக அமைப்பதன் மூலம், எம் நிறுவனத்தின் தடங்களை அதிகரிக்க முன்மொழிகிறது. மேலும், AGEL நிறுவனமானது, இலங்கையில் சுமார் 5GW காற்றாலை மின் திட்டங்கள் மற்றும் 2GW சூரியசக்தித் திட்டங்களை இலங்கையில் அமைக்கும். இதன் மூலம் உற்பத்தியாகும் மின்சாரமானது எம்மால் அமைக்கப்படவுள்ள இலங்கை-இந்தியா மின்சார இணைப்பு (cross border grid connection) மூலம் இந்தியாவுக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும். இது இலங்கையில் கணிசமான முதலீடு மற்றும் நீண்ட கால ஏற்றுமதி வருவாய்க்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும்.  மேலும், இவ்விணைப்பின் வழி போட்டித் தன்மைவாய்ந்த மின்சார வர்த்தகத்தை செயற்படுத்த இயலுமாகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தின் முக்கியத்துவம் பல்முனைப்பட்டது. முதலாவது, இலங்கையின் தூயசக்தி நோக்கிய நகர்வானது, மிகவும் மெதுவானதாக இருக்கிறது. இலங்கையின் உள்ள பல நிறுவனங்களுக்கு காற்றாலைகளையும் சூரிய மின்கலங்களையும் நிறுவுவதற்கு, அரசாங்கம் தொடர்ச்சியாகத் தயக்கம் காட்டி வந்துள்ளது. பல தடைகளை உள்ளூர் நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ளன.

இந்நிலையிலேயே, அதானி நிறுவனத்தின் இக்கடிதமானது கவனிப்புக்குரியது. இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் இவ்வாறானதொரு கடிதம் எழுதப்பட்டிருக்காது. இந்தப் பின்புலத்தின் அடிப்படையிலேயே மின்சார சபைத் தலைவரின் கருத்தை நோக்க வேண்டியுள்ளது.

இக்கடிதத்தில் கவனிக்க வேண்டிய இரண்டாவது அம்சம், அதானி நிறுவனம் இலங்கையில் தூயசக்தியை உற்பத்தி செய்து, அதை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய முன்மொழிகிறது. இது மிகவும் ஆபத்தானது மட்டுமன்றி, அனுமதிக்கக் கூடாததும் ஆகும்.

இவ்விடத்திலேயே, இலங்கை அரசாங்கத்தின் மோசமான நடத்தையும் அதனோடு இணைந்த ஊழலும் வெளிப்படுகிறது. இலங்கை நிறுவனங்களுக்கு வழங்க மறுத்த அனுமதியை, எவ்வாறு அதானி நிறுவனத்துக்கு அரசாங்கம் வழங்கியது? இலங்கையே மின்சார நெருக்கடியில் சிக்கித் தவிக்கையில், இலங்கையில் பெறப்பட்ட மின்சாரத்தை இந்தியாவுக்கு அனுப்ப யார் அனுமதித்தது? இலங்கையில் பெறப்பட்ட மின்சாரத்தை, இலங்கைக்கே அதானி நிறுவனம் விற்கும் திட்டத்துக்கு எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது? இவை விடை தெரியாத வினாக்கள்; ஆனால், இலங்கையர்கள் கேட்ட வேண்டிய கேள்விகள்.

மூன்றாவது, மிக முக்கியமான அம்சம், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மின்கம்பங்களையும் இணைப்பையும் அதானி நிறுவனம் அமைக்கப்போவதாகக் இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான மின்இணைப்பு என்பது, கடந்த இரு தசாப்தங்களாக உரையாடப்படும் ஒரு விடயம்.

பல விடயங்களைக் கருத்தில் கொண்டு, இலங்கை இத்திட்டத்துக்கு அனுமதி மறுத்து வந்துள்ளது. குறிப்பாக, போரின் முடிவின் பின்னர், இந்தியா இவ்விணைப்புத் திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது. இலங்கையின் தயக்கம் நியாயமானது.

இவ்வாறானதோர் இணைப்பால், இலங்கைக்கான நன்மைகள் குறைவு. காலப்போக்கில் இலங்கை மின்சாரத்துக்கு இந்தியாவை நம்பியிருக்க வேண்டியிருக்கும். இது, சக்திப் பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலானது. அதேவேளை, இலங்கையில் இந்திய நிறுவனங்கள் மின்உற்பத்தி செய்து, இந்தியாவுக்கு அனுப்பினாலும் சரி, இலங்கைக்கு வழங்கினாலும் சரி, மின்சார உற்பத்தியின் மீதான இலங்கையின் ஏகபோகமும் சுதந்திரமும் இல்லாமல் போகும்.

இங்கு, நேபாளத்தின் உதாரணத்தை நோக்குவது தகும். உலகில் அதிகளவான நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய ஆற்றலை உடைய நாடுகளில் நேபாளம் முதன்மையானது. ஆனால், நேபாளத்தால் இன்றுவரை தனது தேவைக்கான நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியவில்லை. காரணம், அதற்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் அங்கு நடைபெறவில்லை.

நேபாள-இந்திய மின்இணைப்புக் காரணமாக, நேபாளம் இன்றும் மின்சாரத்துக்கு இந்தியாவை நம்பியிருக்கிறது. இதைத் தொடருவதற்காக நேபாளத்தில் நீர்மின்சக்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த இந்தியா தொடர்ச்சியாகத் தடைபோடுகிறது. நேபாள அரசாங்கம் இந்தியாவுடன் முரண்பாட்டுப் போக்கைக் கடைப்பிடித்தால், நேபாளத்துக்கான மின்சாரத்தை மட்டுப்படுத்துவதனூடு இந்தியா செயற்படுகிறது.

2009இல் நேபாளத்தில் மாஓவாதிகள் ஆட்சிக்கு வந்த நிலையில், அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், மின்சார விநியோகத்தை இந்தியா நிறுத்தியது. இந்தக் கதைதான், இலங்கைக்கும் நடக்கும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.

2006ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் சம்பூர் இருந்தபோதே, அங்கு அனல் மின்நிலையம் ஒன்றை உருவாக்குவதற்கான உடன்படிக்கையை இந்திய நிறுவனம், இலங்கை அரசாங்கத்துடன் கைச்சாத்திட்டது. அதன்படி, உற்பத்திசெய்யப்படும் மின்சாரத்தில் ஒருபகுதி, இந்தியாவுக்கு அனுப்பவும் உடன்பட்ட சரத்து அந்த உடன்படிக்கையில் இருந்தது.

மக்கள் போராட்டமும் நீதிமன்ற தடையுத்தரவும் அதை முடிவுக்குக் கொண்டுவந்தபோதும், கடந்தாண்டு அதே இடத்தில் சூரிய மின்கலங்களின் வழி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அனுமதியை இந்தியா பெற்றுக் கொண்டது. ஆனால், மின்நிலையத்துக்காக வெளியேற்றப்பட்ட மக்கள், காணி இழந்த நிலையில் இன்னமும் இன்னல்களை அனுபவிக்கிறார்கள். 

பத்திரிகைச் செய்தி அம்பலப்படுத்திய இன்னோர் ஆவணம், மன்னார், பூநகரியில் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கான அதானியின் நிறுவனத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் கையெழுத்தான புரிந்துணர்வு உடன்படிக்கை ஆகும். அதில், ‘இலங்கையின் வடமாகாணத்தின் எல்லையில் உள்ள இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பில், மிதக்கும் சூரியகலம் மற்றும் காற்றாலை வசதிகளை ஏற்படுத்துவதற்காக ஆய்வு செய்ய, குறித்த நிறுவனத்துக்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்கும்’. இதன்மூலம் இலங்கையின் வடபகுதியில், எல்லையற்ற அதிகாரங்களை மின்உற்பத்தி சார்ந்து - குறித்த நிறுவனத்துக்கு இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது. நிலங்கள் மட்டுமல்ல, எங்கள் கடலும் சேர்ந்தே களவுபோகிறது.

அதானி குழுமம், காற்றாலைகளை அமைக்க அனுமதி பெற்றுள்ள மன்னார், பூநகரி ஆகிய பகுதிகளில், இத்திட்டங்களுக்கு மக்களின் பலத்த எதிர்ப்புகள் உண்டு. அதுகுறித்து விரிவாக அடுத்த வாரம் பார்க்கலாம்.
 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலங்கையின்-மின்சக்தியை-கபளீகரம்-செய்யும்-இந்தியா/91-299351

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா வளமும் நிறைந்த நாட்டை வெறும் அடிமாடாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.......!  😢

நன்றி கிருபன் இணைப்புக்கு.......!

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நன்றி @கந்தப்பு நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀 @முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?
    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.