Jump to content

ஆசான்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On ‎30‎-‎06‎-‎2022 at 13:09, ரஞ்சித் said:

நீங்கள் கூறுவது மெத்தச்சரி. பேரின்பராஜா சேர் வந்திருக்காவிட்டால் நிச்சயம் எனது வாழ்வு மாறிப்போயிருக்கும். ஆம், நான் அதிஷ்ட்டசாலிதான். 
கமலா டீச்சருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். பாடசாலையில் படித்த காலத்திலும், பலகலைக் கழக அனுமதிக்குக் காத்திருந்த காலத்திலும் அவர் எனக்கு உதவியிருக்கிறார். கண்டிப்பானவர், ஆனால் உதவும் மனம் கொண்டவர்.  அவர் மரணித்த செய்தி கேள்விப்பட்டேன். அவரது மூத்த மகன், பிலிப் இங்குதான் இருக்கிறார். பலமுறை அவரைக் கண்டு பேசியிருக்கிறேன். தேவநம்பி என்று இன்னொரு மகனும் அந்தக் காலத்தில் எமக்கு ஒரு வகுப்பு மேலே படித்தார். இப்போது பொறியியலாளராக இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
எமது வகுப்பில் படித்த பல மாணவர்கள் பலகலைக் கழகம் சென்றார்கள். மதனும், சுகந்தும் வைத்தியர்களானார்கள். ராதா, கிரிந்தி, மெளலி ஆகியோர் பொறியியிலாளர்களானார்கள். மெய்யழகன் பட்டப்படிப்பு முடித்ததாகக் கேள்விப்பட்டேன். பிரபா தொழிநுட்ப அதிகாரியாகவும் ஏனையவர்கள் நல்ல துறைகளில் தொழில்புரிவதாகவும் அறிந்தேன். ஆம், அந்த வகுப்புக் கொஞ்சம் பிரபலம் தான்.

எனது நண்பர்களையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் ரதி. உலகம் சின்னதுதான்.

உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி !

 ரஞ்சித், முதல் பதிவில் சொல்ல மறந்தது உங்கள் எழுத்து நடை சுப்பராய இருக்குது ...அது சரி கடைசி வரை சின்னையா டீச்சருடன் இருந்த ஆட்கள் யார்🙂 ...தேவ நம்பி அண்ணா எங்கள் பாடசாலையில் படித்த ஒரு சைவ பெட்டையை லவ் பண்ணி திரிந்தவர் ...பெட்டையின் வீட்டில் கடும் எதிர்ப்பு ...அவர்கள் கல்யாணம் கட்டினார்களோ என்று தெரியவில்லை🤔 ...உங்கட பட்ச்சில நீங்கள் குறிப்பிட்டவர்களை தவிர இன்னும் சிலர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி இருந்தார்கள்...இப்போது இவர்கள் யாருடனாவது தொடர்பில் இருக்கிறீர்களா?

On ‎30‎-‎06‎-‎2022 at 22:06, கிருபன் said:

சின்ன வயதிலேயே கண்ணாடி போட்டு இருந்திருந்தவர் என்றால் எமது ஊர்தான் பூர்வீகம்.

தாய் மானிப்பாய் தகப்பன் வடமராட்சி என்று நினைக்கிறேன்...இவருக்கு ஆமிக்காரன் ஒருக்கா பிடிச்சு வெளுத்தவன்😂 நினைவு இருக்குதோ 🤣என்று கண்டால் கேளுங்கோ😅   

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

கடைசி வரை சின்னையா டீச்சருடன் இருந்த ஆட்கள் யார்

கடைசிவரை சின்னையா டீச்சருடன் இருந்தவர்கள் என்றால்,

மதனழகன், மெய்யழகன்,பிரதீப், சுஜிதர், ராதா கிருஷ்ணன், லக்ஷன், கிரிந்திகரன் என்று நினைக்கிறேன். இவர்களுடன் வேறு சிலரும் இருந்திருக்கலாம், இப்போது நினைவில் இல்லை. 

7 hours ago, ரதி said:

தேவ நம்பி அண்ணா எங்கள் பாடசாலையில் படித்த ஒரு சைவ பெட்டையை லவ் பண்ணி திரிந்தவர் ...பெட்டையின் வீட்டில் கடும் எதிர்ப்பு ...அவர்கள் கல்யாணம் கட்டினார்களோ என்று தெரியவில்லை

தேவநம்பி கலியாணம் கட்டிவிட்டார். ஆனால், ஆரையென்றுதான் தெரியவில்லை. ஆனால், நல்ல வேலையில் இருப்பதாகவும், மட்டுவில் கட்டிடங்கள் பலவற்றைக் கட்டி வருவதாகவும் அறிந்தேன். 

7 hours ago, ரதி said:

உங்கட பட்ச்சில நீங்கள் குறிப்பிட்டவர்களை தவிர இன்னும் சிலர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி இருந்தார்கள்...இப்போது இவர்கள் யாருடனாவது தொடர்பில் இருக்கிறீர்களா?

பலர் இந்த பட்ச்சில் பல்கலைக்குப் போனார்கள். ஆனால், எவருடனும் தொடர்பில் இல்லை. கிரிந்திகரனை மட்டும் இருமுறை சந்தித்தேன். அவரது பேராதனை நண்பர்கள் சிட்னியில் இருப்பதால் இருமுறை வந்துபோனார். மெளலியை ஒருமுறை சந்தித்தேன். மற்றும்படி, வேறு எவருடனும் தொடர்பில்லை. கிட்டத்தட்ட 32 வருடங்கள் ஆகிவிட்டன. 

7 hours ago, ரதி said:

தாய் மானிப்பாய் தகப்பன் வடமராட்சி என்று நினைக்கிறேன்..

வடமாராட்சி என்று தெரியும். சுகந்துடன் பேசும்போது சொல்லியிருக்கிறார். தகப்பன் மிகவும் கண்டிப்பானவர் என்றும் கேள்வி.

Edited by ரஞ்சித்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித் நீங்கள் படித்த கணிதம். எணகணிதம் அல்லது கணககியலா.?   தூயகணிதம் பிரயோககணிதம பௌதிகவில்.    படித்தீர்களா?.           இவைபடிக்கவிடின்.  எப்படி பொறியியலாளர் படித்தீர்கள்.?. நீங்கள் மிகவும் திறமைசாலி.  தான் வாழ்த்துக்கள் 😀

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

ரஞ்சித் நீங்கள் படித்த கணிதம். எணகணிதம் அல்லது கணககியலா.?   தூயகணிதம் பிரயோககணிதம பௌதிகவில்.    படித்தீர்களா?.           இவைபடிக்கவிடின்.  எப்படி பொறியியலாளர் படித்தீர்கள்.?. நீங்கள் மிகவும் திறமைசாலி.  தான் வாழ்த்துக்கள் 😀

பேரின்பராஜா சேர் சாதாரண தரத்தில் எனக்கு கணிதம் படிப்பித்த ஆசிரியர். அதே வருடத்தில் நான் கணக்கியலும் வர்த்தகமும் எனும் இன்னொரு பாடத்தையும் படித்தேன். உயர்தரத்தில் தூய கணிதம், பிரயோக கணிதம், பெளதீகவியல், இரசாயணவியல் என்று நான்கு பாடங்களைப் படித்தேன். அதன்மூலமே பொறியியலாளன் ஆகும் வாய்ப்புக் கிடைத்தது. 

எனக்குக் கணிதத்தின்மீது பற்று வரக் காரணம் சேர்தான். அவரைக் கண்டிருக்காவிட்டால் வேறு ஏதாவது படித்திருப்பேன், யாருக்குத் தெரியும்?

Edited by ரஞ்சித்
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே மூச்சில் படித்து முடித்தேன். மீண்டும் பள்ளிக்குப் போன உணர்வு. மிகவும் அழகான எழுத்து நடை. அனுபவப் பதிவை மிகவும் அழகாக விவரித்து எழுதிய விதம் ரசித்து வாசிக்கக்கூடியதாய் உள்ளது. ஆசிரியர்கள் எமது வாழ்க்கையில் எம்மால் மறக்க முடியாதவர்கள். அதிலும் சில ஆசிரியர்கள் எம் மனதில் நிலையான இடத்தினை பிடித்திருப்பார்கள். இப்பதிவை வாசிக்கும்போது இளமைக்கால நினைவுகள் மனதில் நிழலாடியது. நீண்ட நாட்களின்பின் நல்லதொரு ஆக்கத்தினை படிக்கக் கிடைத்தது.தொடர்ந்து உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎03‎-‎07‎-‎2022 at 22:56, ரஞ்சித் said:

கடைசிவரை சின்னையா டீச்சருடன் இருந்தவர்கள் என்றால்,

மதனழகன், மெய்யழகன்,பிரதீப், சுஜிதர், ராதா கிருஷ்ணன், லக்ஷன், கிரிந்திகரன் என்று நினைக்கிறேன். இவர்களுடன் வேறு சிலரும் இருந்திருக்கலாம், இப்போது நினைவில் இல்லை. 

தேவநம்பி கலியாணம் கட்டிவிட்டார். ஆனால், ஆரையென்றுதான் தெரியவில்லை. ஆனால், நல்ல வேலையில் இருப்பதாகவும், மட்டுவில் கட்டிடங்கள் பலவற்றைக் கட்டி வருவதாகவும் அறிந்தேன். 

பலர் இந்த பட்ச்சில் பல்கலைக்குப் போனார்கள். ஆனால், எவருடனும் தொடர்பில் இல்லை. கிரிந்திகரனை மட்டும் இருமுறை சந்தித்தேன். அவரது பேராதனை நண்பர்கள் சிட்னியில் இருப்பதால் இருமுறை வந்துபோனார். மெளலியை ஒருமுறை சந்தித்தேன். மற்றும்படி, வேறு எவருடனும் தொடர்பில்லை. கிட்டத்தட்ட 32 வருடங்கள் ஆகிவிட்டன. 

வடமாராட்சி என்று தெரியும். சுகந்துடன் பேசும்போது சொல்லியிருக்கிறார். தகப்பன் மிகவும் கண்டிப்பானவர் என்றும் கேள்வி.

மதன் அண்ணா எல்லாம் மற்றவரோடு சேர்ந்து  உங்களை நக்கலடித்தார் என்பதை நம்ப முடியவில்லை ....கொஞ்சம்  அமைதியானவர். அமசடக்கு என்று நினைக்கிறேன்...நீங்கள் ஏலெவல் இங்கு எழுதி இருந்தீர்கள் என்றால் உங்களையும் தெரிந்திருக்க கூடும் 

On ‎30‎-‎06‎-‎2022 at 16:02, ஈழப்பிரியன் said:

கடைசியாக வேடிக்கை என்னவென்றால் உங்கள் நண்பர்களை அடையாளம் புரிந்து தற்போது என்னென்ன செய்கிறார்கள் என்று @ரதிஎழுதியது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

அண்ணா, அந்த நேரம் சரியான போர் சூழல் ...எனக்கு தெரிந்து இவர்களுடைய பட்ச் இல் நிறைய பேர் பல்கலைக்கழகம் தெரிவானார்கள்... இவர்களில் பலர் மட்டு நகரை அழகுபடுத்தல் ,மரங்களை நடுதல் போன்ற சமூக சேவைகளில் ஈடுபட்டார்கள்...இதில் கொஞ்ச பேர் எமது பாடசாலைக்கு வந்து அந்த நேரம் ஓ எல் எழுதி விட்டு  சயன்ஸ் படிக்க காத்திருந்த பெண்களுக்கு பாடசாலையில் வந்து படிப்பித்தார்கள் ...எங்கள் பாடசாலை பெண்கள் பாடசாலை யாதலால் பெற்றோர்கள் எதிர்க்க தொடங்க நிப்பாட்டி விட்டார்கள் 

  • Like 1
  • Thanks 1
  • Sad 1
Link to comment
Share on other sites

நீங்கள் எழுதிய அன்று அன்றே எல்லாவற்றையும் படித்து விட்டன, பதில் எழுத முடியவில்லை . படித்து முடிய என் கண்கள்  கலங்கி வழிந்தது , அது பேரின்பராஜா SIR  நினைத்தா அல்லது சித்தி உங்களை ஹாஸ்டல் ல விட்டிடு போக நீங்கள் பரிதாபமாக பார்த்து கொண்டு நிண்டதை நினைத்தா என தெரியல 
தரமான பதிவு வாழ்த்துக்கள் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அந்த நேரம் ஓ எல் எழுதி விட்டு  சயன்ஸ் படிக்க காத்திருந்த பெண்களுக்கு பாடசாலையில் வந்து படிப்பித்தார்கள்

உங்களின் விஞ்ஞான பாட ஆசிரியர் என்ன நடந்தது எந்த நேரத்தில்?

எந்த பாடமாயினும், பயிற்றப்பட்டவரே படிப்பிற்க வேண்டும், அது நல்லது.

ஏனெனில், அப்போது தான் சாதாரண தரம் படித்து முடித்தவர்கள் செய்வது, அவர்கள் படித்ததை (அல்லது அவர்களின் புரிதலில் உள்வாங்கியதை) ஒப்புவிப்பது. அது படிப்பித்தல் அல்ல.

முக்கியமாக, புதிதாக படிப்பவர்களுக்கு, ஒப்புவித்தல் முறை மிகவும் பொருத்தம் இல்லாதது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

நன்றி ...நான் இவர்களிடம் படிக்கவில்லை .[சயன்ஸ் படிக்கவில்லை.] 
அந்த அண்ணாமார் ஏலெவல் எடுத்து விட்டு பல்கலைக்கழகம் போவதற்காக காத்திருந்தார்கள் ...அந்த நேரம்  சும்மா இருக்காமல் ஓலெவல் எடுத்து விட்டு பெறுபேறுகளுக்காய் காத்திருந்தவர்களுக்கு [சயன்ஸ்]தான் படிப்பித்தார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/7/2022 at 16:03, ரதி said:

மதன் அண்ணா எல்லாம் மற்றவரோடு சேர்ந்து  உங்களை நக்கலடித்தார் என்பதை நம்ப முடியவில்லை ....கொஞ்சம்  அமைதியானவர். அமசடக்கு என்று நினைக்கிறேன்...நீங்கள் ஏலெவல் இங்கு எழுதி இருந்தீர்கள் என்றால் உங்களையும் தெரிந்திருக்க கூடும் 

அண்ணா, அந்த நேரம் சரியான போர் சூழல் ...எனக்கு தெரிந்து இவர்களுடைய பட்ச் இல் நிறைய பேர் பல்கலைக்கழகம் தெரிவானார்கள்... இவர்களில் பலர் மட்டு நகரை அழகுபடுத்தல் ,மரங்களை நடுதல் போன்ற சமூக சேவைகளில் ஈடுபட்டார்கள்...இதில் கொஞ்ச பேர் எமது பாடசாலைக்கு வந்து அந்த நேரம் ஓ எல் எழுதி விட்டு  சயன்ஸ் படிக்க காத்திருந்த பெண்களுக்கு பாடசாலையில் வந்து படிப்பித்தார்கள் ...எங்கள் பாடசாலை பெண்கள் பாடசாலை யாதலால் பெற்றோர்கள் எதிர்க்க தொடங்க நிப்பாட்டி விட்டார்கள் 

நீங்கள் கூறுவது சரியானது.  எனது நண்பர்களை சரியாகவே கணித்து வைத்திருக்கிறீர்கள்.  மதனழகந் அமைதியானவர், அதிகம் பேசமாட்டார். மெய்யழகன் நேரெதிரானவர். நக்கலும், நளினமும் அவர் பேச்சிலிருக்கும். ஆனால், பழகிவிட்டார் என்றால் அன்பானவர். இவர்களுள் எங்களை ஏளனம் செய்தவர்கள் லக்‌ஷனும் சுகிர்தரும்தான். மற்றையவர்கள் ஆரம்பத்தில் எள்ளி நகையாடினாலும் இறுதியில் அமைதியாகி விட்டார்கள்.

என் நண்பர்களின் விபரங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறீர்கள். ஆனால், என்னைத்தான் தெரியவில்லை!!!

Edited by ரஞ்சித்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/7/2022 at 09:03, Kavallur Kanmani said:

ஒரே மூச்சில் படித்து முடித்தேன். மீண்டும் பள்ளிக்குப் போன உணர்வு. மிகவும் அழகான எழுத்து நடை. அனுபவப் பதிவை மிகவும் அழகாக விவரித்து எழுதிய விதம் ரசித்து வாசிக்கக்கூடியதாய் உள்ளது. ஆசிரியர்கள் எமது வாழ்க்கையில் எம்மால் மறக்க முடியாதவர்கள். அதிலும் சில ஆசிரியர்கள் எம் மனதில் நிலையான இடத்தினை பிடித்திருப்பார்கள். இப்பதிவை வாசிக்கும்போது இளமைக்கால நினைவுகள் மனதில் நிழலாடியது. நீண்ட நாட்களின்பின் நல்லதொரு ஆக்கத்தினை படிக்கக் கிடைத்தது.தொடர்ந்து உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்

நன்றியக்கா உங்களின் கருத்திற்கு

On 9/7/2022 at 23:10, அபராஜிதன் said:

நீங்கள் எழுதிய அன்று அன்றே எல்லாவற்றையும் படித்து விட்டன, பதில் எழுத முடியவில்லை . படித்து முடிய என் கண்கள்  கலங்கி வழிந்தது , அது பேரின்பராஜா SIR  நினைத்தா அல்லது சித்தி உங்களை ஹாஸ்டல் ல விட்டிடு போக நீங்கள் பரிதாபமாக பார்த்து கொண்டு நிண்டதை நினைத்தா என தெரியல 
தரமான பதிவு வாழ்த்துக்கள் 

நன்றி அபராஜிதன் உங்களின் கருத்திற்கு

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.