Jump to content

இந்தியாவிலிருந்து... பொருட்களை கொண்டு வருவதற்கு, நாணய மாற்று விடயத்தில் மாத்திரமே சிக்கல் – டக்ளஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலிருந்து பொருட்களை கொண்டு வருவதற்கு நாணய மாற்று விடயத்தில் மாத்திரமே சிக்கல் – டக்ளஸ்

இந்தியாவிலிருந்து... பொருட்களை கொண்டு வருவதற்கு, நாணய மாற்று விடயத்தில் மாத்திரமே சிக்கல் – டக்ளஸ்

இந்தியாவிலிருந்து பொருட்களை கொண்டு வருவதற்கு நாணய மாற்று விடயத்தில் மாத்திரமே சிக்கல் காணப்படுவதாகவும், பொருட்களை ஏற்றி வர படகுகள் தயாராக உள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறை நாட்டில் நிலவுவதால், அத்தியாவசிய தேவைகளை முன்னெடுப்பது என்ற தீர்மானம் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

வரயிருக்கும் 10ம் திகதிக்கு பின்னர் வழமைக்கு திரும்பிவிடும் எனும் அடிப்படையல்தான் அந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு நான் கூறிவருவது போன்று இந்தியாவிலிருந்து அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதன் ஊடாக வடக்கு மாகாணம் அதற்கு மேலாக வடமத்திய மாகாணம் நன்மையை பெறும். அது விரைவில் நடைபெறும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1288903

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுமதி கிடைத்தால் ஒரு இரவில் கொண்டுவந்து இறக்குவேன் என்றவருக்கு, நாணயம் தேவை என்பது இந்த நாணயமில்லாதவருக்கு தெரியவில்லை. மக்களை மடையர் என்று நினைக்கிறார்கள். புலம்பெயர்ந்தோர் தம்முடன் தொடர்பு கொள்வர் என்று நினைத்திருப்பாரோ? அவ்வளவுதான்!

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரை விடுவம்.இந்தியாவில் உள்ள வர்த்தகர்களிடம் இங்கிருந்து பணத்தை அனுப்பி பொருட்க்களை அங்கு எடுக்க முடியாதா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட.......... 

வெளிநாடுகளில் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு நாணய மாற்றுத்தா...பிரச்சனை. 

இதை க் கேட்கேட்டு  EPDP காறரே நமுட்டுச் சிரிப்பு சிரிப்பாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வம் விடை கொடுத்தாலும் பூசாரி விடை கொடுக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kapithan said:

அட.......... 

வெளிநாடுகளில் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு நாணய மாற்றுத்தா...பிரச்சனை. 

இதை க் கேட்கேட்டு  EPDP காறரே நமுட்டுச் சிரிப்பு சிரிப்பாங்கள்.

வெளிநாடுகளில இருந்து பணம் அனுப்பி இலங்கைக்குப் பொருதளை அனுப்பமுடியும் ஆனால் அந்தப்பணம் திரும்பவும் வெளிநாட்டு நாணயமாக கைகளுக்கு வராது என்ன கத்தை கத்கையா மகிந்தவினதும் கொத்தாவினதும் படம்போட்ட கடதாசிகளைக் கட்டித்தருவார்கள் அதைச் சுண்டல் சுத்தப் பயன்படுத்தலாம் அதைவிட இன்னுமொரு விடையம் அங்கு எல்லாரும் காணி பூமிகளை வித்துப்போட்டு கனடாவுக்கு வர நிற்கினம் அவர்கள் விற்கும் காணிகளை உந்தக்காசிலை சல்லிசு விலைக்கு வாங்கலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் படிக்கும்  காலங்களில்  இந்திய ரூபாவும்  சிலோன் ரூபாவும்  கிட்டத்தட்ட ஒரே பெறுமதியில்  இருந்ததாக  ஞாபகம்?

அண்மை  வரை இந்திய ரூபாவுக்கு  இலங்கை  ரூபா 2 மடங்கே?

ஆனால்  இன்று 5 மடங்கிற்:கும் மேல்???

மாமா  இப்பத்தான் முழித்திருக்கிறார் போலும்???

Link to comment
Share on other sites

ரஸ்யாவிடம் பரல் ஒன்றுக்கு 30 தொடக்கம் 40 டொலருக்கு வாங்கி சொந்த மக்களுக்கே அறா விலையில் விற்கிறார்கள். எங்களுக்கு சொல்லவே தேவை இல்லை. அத்தோடு  பணத்தின் பெறுமதியும் இணைந்து கொள்ளும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Elugnajiru said:

வெளிநாடுகளில இருந்து பணம் அனுப்பி இலங்கைக்குப் பொருதளை அனுப்பமுடியும் ஆனால் அந்தப்பணம் திரும்பவும் வெளிநாட்டு நாணயமாக கைகளுக்கு வராது

வராது தான்.எமது மக்களுக்கு தானாமாக கொடுக்கலாம்.ஒரு தற்க்காலிக தீர்வு தான்.

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.