Jump to content

கந்தக்காடு சிகிச்சை நிலையத்தில்... கைதிகளிடையே மோதல் – ஒருவர் உயிரிழப்பு – 500 இற்கும் மேற்பட்டவர்கள் தப்பியோட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கந்தக்காடு சிகிச்சை நிலையத்தில் கைதிகளிடையே மோதல் – ஒருவர் உயிரிழப்பு – 500 இற்கும் மேற்பட்டவர்கள் தப்பியோட்டம்

கந்தக்காடு சிகிச்சை நிலையத்தில்... கைதிகளிடையே மோதல் – ஒருவர் உயிரிழப்பு – 500 இற்கும் மேற்பட்டவர்கள் தப்பியோட்டம்.

பொலனறுவை – கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் கைதிகளிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

36 வயதான ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 500 இற்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் பொலிஸார் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

https://athavannews.com/2022/1288931

##############    ##############   ###############

 

கந்தக்காடு சிகிச்சை நிலையத்தில் கைதிகளிடையே மோதல் – ஒருவர் உயிரிழப்பு – 500 இற்கும் மேற்பட்டவர்கள் தப்பியோட்டம்

தப்பியோடிய... 500 கைதிகளை தேடும் நடவடிக்கையில் பொலிஸார், இராணுவம் !

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பியோடிய கைதிகளை கண்டுபிடிப்பதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையத்தில் இன்று காலை கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் மரணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக வெலிகந்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

மேலும் குறித்த நிலையத்தின் பாதுகாப்புக்காக இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் முகாமில் சுமார் 1000 கைதிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1288949

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி புலி  வரும்??

பயங்கரவாதம் வரும்

உலகம்  உதவும்??😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிச் சென்ற, 232 கைதிகள்... கைது!

பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற 232 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை தப்பியோடிய மேலும் 200 கைதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது என மறுவாழ்வு நிலையத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல தலைப்பைப் பார்த்ததும்

இது எங்கோ ஆப்கானிஸ்தானில் என்று கடந்து போய்விட்டேன்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை போதைப் பழக்க நீக்க மையம்: 600 பேர் தப்பியோடியதன் பின்னணி

29 ஜூன் 2022, 10:49 GMT
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

போதை மறுவாழ்வு

பட மூலாதாரம்,COMMISSIONER GENERAL OF REHABILITATION

இலங்கையின் பொலன்னறுவை - கந்தகாடு பகுதியிலுள்ள போதை புனர்வாழ்வு மத்திய நிலையமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 500 முதல் 600 வரையானோர் தப்பியோடியுள்ளனர்.

புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையில் நேற்றிரவு 8 மணியளவில் மோதலொன்று இடம்பெற்றதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இந்த அமைதியின்மையின்போது, 36 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்குள் தொடர்ந்து அமைதியின்மை வலுப் பெற்றதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு அமைதியின்மை வலுப் பெற்றதை தொடர்ந்து, புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் பிரதான நுழைவாயிலை, சிலர் உடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், சுமார் 500 முதல் 600 பேர் வரையானோர், பிரதான நுழைவாயிலின் ஊடாக அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இவ்வாறு தப்பியோடியவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை போலீஸார் ஆரம்பித்துள்ளனர்.

கந்தகாடு பகுதியில் தற்போது போலீஸார் மற்றும் ராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

தப்பியோடிவர்கள் யார்?

போதைப்பொருளுக்கு அடிமையாகும் நபர்களை தடுத்து வைத்து, புனர்வாழ்வு அளிக்கும் நிலையமாக கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையம் விளங்குகின்றது.

 

போதைப் பழக்க நீக்க மையத்தில் இருந்து 600 பேர் தப்பியோட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர், யுவதிகளை மீட்டெடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்திற்கு அமைய, கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் கீழ் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

போதைப்பொருள் பாவனை, போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சிறை வைக்கப்படுபவர்கள், இந்த புனர்வாழ்வு திட்டத்திற்குள் கொண்டுவரப்படுகின்றனர்.

போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறை வைக்கப்படுபவர்களின் கல்வி நிலை, சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய பின்னணிக்கு ஏற்ற வகையில், இந்த புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு அளிக்கப்படும்.

உளவியல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, அவர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கும் திட்டங்கள், கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் முன்னெடுக்கப்படும் என புனர்வாழ்வு மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில், சுமார் 1000 பேர் புனர்வாழ்வுக்கான ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையிலேயே, அங்கிருந்து சிலர் தப்பியோடியுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

https://www.bbc.com/tamil/sri-lanka-61973679

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

முதல்ல தலைப்பைப் பார்த்ததும்

இது எங்கோ ஆப்கானிஸ்தானில் என்று கடந்து போய்விட்டேன்.

உங்களுக்கு... நெடுக, தலிபான்களின் நினைப்புத்தான். 😜
ஆஃப்கானிஸ்தானில் நடந்திருந்தால்... கந்தகார் என்று தலைப்பு வந்திருக்கும்.
இது... கந்தக்காடு ஐயா. ஊரிலை இருக்கிற இடம். 🙂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000 பேருக்குமேல் இருக்கும் இடத்தில் 500 பேர் தப்பி ஓடி இருக்கிறார்கள் என்றால் அவர்கள் சரியான முறையில் புனர்வாழ்வு பெற்று விட்டார்கள் என்றுதானே அர்த்தம்.......அவர்களை விட்டு விட்டு மிச்சம் ஓடாமல் இருப்பவர்களுக்கு புனர்வாழ்வு சிகிச்சை அளிக்கலாம்தானே ......!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தக்காடு சிகிச்சை நிலையத்தில் கைதிகளிடையே மோதல் – ஒருவர் உயிரிழப்பு – 500 இற்கும் மேற்பட்டவர்கள் தப்பியோட்டம்

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து... தப்பியோடியவர்களில், 598 பேர் மீண்டும் சரணடைந்துள்ளனர்!

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பியோடியவர்களில் 261 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தின் ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுவரும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

அத்துடன், அங்கிருந்து 500 இற்கும் மேற்பட்டோர் தப்பியோடியிருந்தாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

மேலும், குறித்த மோதல் சம்பவத்தில் தெமோதரை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பொலன்னறுவை – கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய 598 பேர் மீண்டும் சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த மோதலில் 600 கைதிகள் தப்பியோடி இருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இவ்வாறு தப்பியோடிய கைதிகளில் 598 பேர் மீண்டும் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2022/1289004

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

500இற்கு மேற்பட்டோர் தப்பி ஓடியுள்ளார்! 261 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 598 பேர் மீண்டும் சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கணக்கு எங்கேயோ இடிக்குதே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

500இற்கு மேற்பட்டோர் தப்பி ஓடியுள்ளார்! 261 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 598 பேர் மீண்டும் சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கணக்கு எங்கேயோ இடிக்குதே??

அதனை நானும் கவனித்தேன்.
இது... என்ன, கணக்கு என்று எனக்கும் தெரியவில்லை.
சிறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் எல்லாரும்..
மக்களுக்கு... கணக்கு விடுகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தக்காடு விரையும் மனித உரிமைகள் ஆணைக்குழு

 

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இடம்பெற்ற மோதல் குறித்து விசாரணை மேற்கொள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக் குழுவொன்று இன்று(01) அங்கு செல்லவுள்ளது.

அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்தமை தொடர்பிலும், மோதல் சம்பவம் தொடர்பிலும், விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் அதிகளவானவர்கள் தப்பிச் சென்றிருந்தனர்.

பின்னர்,  653 பேர் மீளவும் பொறுப்பேற்கப்பட்டதுடன், 70 பேர் தொடர்ந்தும் தேடப்படுகின்றனர்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/கந்தக்காடு-விரையும்-மனித-உரிமைகள்-ஆணைக்குழு/175-299532

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவப் படையினரும், விமானப்படை அலுவலர்களும் அதிரடி கைது 

கந்தக்காடு முகாமில் தடுப்பில் இருந்த ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் இராணுவப்படையினர் இருவரும், விமானப்படை அலுவலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கந்தக்காடு முகாமில் கடந்தவாரம் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், 600க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடியிருந்தனர்.

இந்த நிலையில், 667 பேர் மீண்டு சரணடைந்துள்ளதுடன், 57 பேர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (R)
 

https://www.tamilmirror.lk/செய்திகள்/இராணுவப்-படையினரும்-விமானப்படை-அலுவலர்களும்-அதிரடி-கைது/175-299580

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.