Jump to content

தெற்காசியாவின் லெபனானாக இலங்கை மாறுவதை மேற்குலகம் தடுக்க வேண்டும்


Recommended Posts

தெற்காசியாவின் லெபனானாக இலங்கை மாறுவதை மேற்குலகம் தடுக்க வேண்டும்

 

 

 

மட் கொட்வின்,

இலங்கைக்கு தேவைப்படுவது பொறுப்புமிக்க அரசாங்கமும் நிலையான சர்வதேச முதலீடுமாகும். ஒரு காலத்தில் இலங்கையின் மிக முக்கியமான இருதரப்பு பங்காளியாக இருந்த பிரிட்டன் , அமெரிக்கா, இந்தியா மற்றும் ஏனைய “குவாட் நாடுகளுடன்” இணைந்து நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கும், சீனாவின் மீதான முதலீட்டு சார்புக்கு ஒரு ஒத்திசைவான போட்டியான மாற்று வழியை வழங்குவதற்கும் அவசர இடையீட்டு நிதியை வழங்க வேண்டும்.

00000000000000

இலங்கையில் உணவு, எரிபொருள் விலைகள் வானுயர அதிகரித்துச் செல்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினியிலிருந்தும் மாற்றத்தை கோரியும் ஆர்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர் . அரசாங்கம் அதன் பொருளாதா ரநிலைவரம் தொடர்பாக தத்தளித்து வரும் நிலையில், உள்நாட்டு சவால்கள் துரிதமாக உலகளாவிய ரீதியாக செல்லும் வரலாற்றைக் கொண்ட இலங்கையை ஸ்திரப்படுத்த உதவுவதற்கு சர்வதேச சமூகம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை விளிம்பு நிலையில் உள்ளது. கடந்த மாதம், இரண்டு தசாப்தங்களாக கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தவறிய தெற்காசியாவில்முதல் நாடென்ற நிலைமைக்கு இலங்கை வந் திருந்தது . 50 பில்லியன் டொலருக்கும் அதிகமான வெளிநாட்டுக் கடன்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் கையிருப்பு இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது . இந் நிலையில், 1 மில்லியன் டொலர் அந்நியச் செலாவணியைக் கூட கொண்டிருப்பது கடினம் என்று அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. ஏப்ரலில் பணவீக்கம் 30 சதவீதமாக உயர்ந்தது. இது ஆசியாவிலேயே மிக அதிகமாக உள்ளது-உணவு, எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற அடிப்படைப் பொருட்களுக்கான விநியோகம் குறைந்து வருவதால் விலைகள் உயர்ந்துள்ளன . பொருளாதார நெருக்கடி இப்போது பொது சுகாதார பேரிடராக உள்ளது. குறைந்து வரும் மருந்துப்பொருட்கள் மற்றும் பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் விலைகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பல குடும்பங்கள் தடுமாறுகின்றன .இதனால் இதயத்தைப் பிழியும் தேர்வுகளை மேற்கொள்வதற்கான நிர்ப்பந்தம் மருத்துவர்களுக்கு ஏற்படுகிறது . அடுத்த சிங்கப்பூராக இருக்க ஆசைப்பட்ட ஒரு நாடு இப்போது லெபனான் பாணியில் வீழ்ச்சியை எதிர்நோக்குகிறது.இலங்கை ரூபா உலகின் மிக மோசமான நாணயமாக[ பெறுமதிகுறைந்த] செயற் படுகிறது.
பல நாடுகளைப் போலவே, இலங்கையும் இன்னும் கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்பட்ட அதிர்ச்சியை குறிப்பாக அதன் வரலாற்று ரீதியாக துடிப்பான சுற்றுலாத் துறை மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் ஏற்பட்ட பணவீக்கம் என்பனவற்றை அனுபவித்து வருகிறது, எவ்வாறாயினும், இந்த நிகழ்வுகளுக்கும் இலங்கைக்கு ஏற்பட்ட பொருளாதார பாதிப்புக்கும் , பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தவறான பொருளாதாரக் கொள்கை, பேரழிவு தரும் விவசாயரீ தியான முடிவுகளை எடுத்தல் மற்றும் சீன உள்கட்டமைப்பு செலவினங்களை அதிகமாக நம்பியதன் விளைவே காரணமாக கூறப்படுகிறது .

பல ஆண்டுகளாக நீடித்து நிலைக்க முடியாத வகையில் வரிகளை குறைத்துள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் வருமானத்திற்காக மார்க்கமில்லாமல் உள்ளது. அத்துடன்  அதன் தரமதிப்பீடு குறைக்கப்பட்டு, சர்வதேச கடன் சந்தைகளில் இருந்து நாடு  துண்டிக்கப்பட்டுள்ளது.  இலங்கையின் மொத்தக் கடன் 2018 இல் வருடாந்த மொத்த தேசிய உற்பத்தியில் 91 வீதத்தில் இருந்து 2019 இல் 119 வீதமாக அதிகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. விட யங்களை மோசமாக்கும் வகையில், ரஷ்ய படையெடுப்பிற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, இலங்கைதனக்குத்  தானே ஏற்படுத்திய உணவு ப்பொருள் விநியோக நெருக்கடியை எதிர்கொண்டது. அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக  உர இறக்குமதிக்கு செலவிடப்படும்  பணத்தை மிச்சப்படுத்தியது. இது பயிர் விளைச்சலைக் குறைத்தது. பயிர் விளைச்சல் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இலங்கைக்கான அரிசி இறக்குமதி 368 வீதம் அதிகரித்துள்ளதாக ஐநா அபிவிருத்தி திட்டம்   தெரிவித்துள்ளது. இறுதியாக, அதிகளவு இலாபகரமான சீனக் கடன்கள் அரசாங்கத்தில் ஊழல் கலாசாரத்தைத் தூண்டின. இப்போது, ஒரேமண்டலம்  ஒரேபாதை முன்முயற்சி (பிஆர்ஐ)  அதிக வட்டி வீ தத்திலான  3.5 பில்லியன்டொ லர்கள் வரையிலான  உள்சார் கட்டமைப்புக் கடன்கள் வருமானத்தை வழங்கத் தவறியதால், சீனாவுடனான இலங்கையின் விரிவான உறவுகளில் தாக்கம்  வருகிறது.

 

ஊழல் மற்றும் பொருளாதார  ரீதியான  தவறான நிர்வாகத்திற்கு எதிராக மத்திய கிழக்கில் இடம்பெற்றிருந்த  சமீபத்திய ஆர்ப்பாட்டங்கள் போலல்லாமல், இந்த சரியான எதிர்ப்புக்கு பதிலளிக்கும் விதமாக இலங்கையில் பல் தேசிய  வெளிப்பாடுகள் வரலாற்று ரீதியாக கூர்மையாக பிளவுபட்ட சமூகத்தின் பரந்த  பிரிவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அரசியலில்  சுயாதீனமானவர்கள் , மாணவர்கள் மற்றும் தாராள மனப்பான்மை கொண்ட இளைஞர்கள் இலங்கையில் மாற்றத்திற்கான அழைப்பை முன்னெடுத்து வருகின்றனர். திடீர் பல்கலைக்கழகங்கள் மற்றும் சமூக உணவு மையங்களை ஒழுங்கமைத்தல், வரலாற்று ரீதியாக இன மற்றும் மத அடிப்படையில் பிரிக்கப்பட்ட மக்களை  ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக ஒன்றிணைக்கும்என்ற  நம்பிக்கைக்கு இடமுள்ளது.

 

லெபனானின் சமீபத்திய தேர்தல்களில், சுயேச் சைஉறுப்பினர்கள்  பாராளுமன்றத்திற்கு வந்துள்ளனர். அதேபோன்று, இலங்கையிலும்  மக்கள் இயக்கங்கள் நடைமுறை ரீதியில்  முற்போக்காளர்களுக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் ஆற்றலை மரபு ரீதியான  அரசியலுக்குள் செலுத்த வேண்டும். அமைதியின்மையானது   அடுத்த 50 ஆண்டுகளுக்கு இலங்கை அதன் எதிர்காலத்தை மீட்டமைத்து பாதுகாப்பதற்கான வாய்ப்பாக அமையக்கூடும் .

 

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும், . ஏனைய  நாடுகளைப் போலவே, இலங்கையும் சீனாவின் முதலீட்டை நம்பியிருப்பதால்அது பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது .சீனா மூலோபாய நிதியப் பலனைப் பிரயோகிக்கும் ஒரேயொரு வளர்ந்து வரும்நாடென்பதிலிருந்து  இலங்கை வெகு தொலைவில் உள்ளது. தனியார் பிணைமுறிப் பத்திரம் வைத்திருப்பவர்களும் சீனாவும் வறியநாடுகள் மத்தி யில்  2006 இல் 5 சதவீதமாக இருந்த  கடனை   29 சதவீதத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். சீனாவின் கடன் பொறி இராஜதந்திரத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளை புறக்கணிப்பதை விட, வளர்ந்து வரும் நாடுகளில் சீனாவின் பங்கு பற்றிய வளர்ந்து வரும் சந்தேகத்தை மேற்குலகு  இலங்கை போன்ற நாடுகளில் மீண்டும் முதலீடு செய்வதற்கான வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும்.

 

இலங்கைக்கு தேவைப்படுவது  பொறுப்புமிக்க அரசாங்கமும்  நிலையான சர்வதேச முதலீடுமாகும். ஒரு காலத்தில் இலங்கையின் மிக முக்கியமான இருதரப்பு பங்காளியாக இருந்த பிரிட்டன் , அமெரிக்கா, இந்தியா மற்றும் ஏனைய “குவாட் நாடுகளுடன்” இணைந்து நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கும், சீனாவின் மீதான முதலீட்டு சார்புக்கு ஒரு ஒத்திசைவான போட்டியான  மாற்று வழியை வழங்குவதற்கும் அவசர இடையீட்டு  நிதியை வழங்க வேண்டும்.

https://thinakkural.lk/article/186769

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.