Jump to content

உடல் அறிவியல்: இதய, நீரிழிவு நோய்களுக்கும் தண்ணீரில் நனைவதால் விரல்களில் ஏற்படும் சுருக்கங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

உடல் அறிவியல்: இதய, நீரிழிவு நோய்களுக்கும் தண்ணீரில் நனைவதால் விரல்களில் ஏற்படும் சுருக்கங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

விரல் சுருக்கங்கள்

பட மூலாதாரம்,NEIL JUGGINS/ALAMY

சில நிமிடங்கள் தண்ணீரில் நனைத்தாலும் நமது கை, கால் விரல்களில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த சுருக்கங்கள் நம் பரிணாம வளர்ச்சிக்கு உதவியதா? உங்களின் ஆரோக்கியம் குறித்து இந்த சுருக்கங்கள் சொல்வது என்ன?

இந்த சுருக்கங்கள் குழப்பமான ஒன்று. தண்ணீரில் நனையும்போதும் நம் விரல்களில் மட்டுமே சுருக்கங்கள் ஏற்படுகின்றன. கால்கள், கைகள், முகம் என மற்ற உடல் பாகங்களில் சுருக்கங்கள் ஏற்படுவதில்லை.

வெந்நீரில் 40 டிகிரி செல்சியஸ் சூட்டில் (104 ஃபேரன்ஹீட்) கை, கால் விரல்கள் சுருங்குவதற்கு சுமார் 3.5 நிமிடங்கள் போதும். குளிர்ந்த நீரில் சுமார் 20 டிகிரி செல்சியஸ் (68 ஃபேரன்ஹீட்) சூட்டில், இதே மாற்றம் நிகழ்வதற்கு 10 நிமிடங்களாகும். கை, கால் விரல்கள் அதிகபட்ச சுருக்கத்தை அடைவதற்கு சுமார் 30 நிமிடங்களாகும் என்கிறது பல ஆய்வுகள்.

சவ்வூடுபரவல் எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் செல்களுக்குள் நீர் பாய்வதால், தோலின் மேல் அடுக்குகள் வீங்கி, இருபுறமும் உள்ள கரைசல்களின் செறிவை சமப்படுத்த ஒரு சவ்வு முழுவதும் நீர் மூலக்கூறுகள் நகரும் போது, விரல் நுனியில் சுருக்கம் ஏற்படுவதாக பொதுவாக நம்பப்பட்டு வந்தது. ஆனால், 1935 வரையிலான நீண்ட காலத்திற்கு முன்பே, இந்த மாற்றத்திற்கு அதிக செயல்முறைகள் நிகழ்ந்திருக்கும் என, விஞ்ஞானிகள் சந்தேகித்தனர்.

"நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது"

மேற்கையிலிருந்து செல்லும் முக்கிய நரம்புகளில் ஒன்றான இடைநிலை நரம்பில் பலத்த காயம் ஏற்பட்டவர்களின் விரல்களில் இத்தகைய சுருக்கங்கள் ஏற்படவில்லை என்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். வியர்த்தல், ரத்தக் குழாய்களில் சுருக்கங்கள் ஏற்படுதல் போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் இந்த இடைநிலை நரம்பு உதவுகிறது. இதன்மூலம், தண்ணீரில் நனைவதால் ஏற்படும் இத்தகைய சுருக்கங்கள் நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை கண்டறிந்துள்ளனர்.

 

விரல் சுருக்கங்கள்

பட மூலாதாரம்,ANDRII BILETSKYI/ALAMY

சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் பணிபுரியும் நரம்பியல் நிபுணர்கள் ஈனர் வைல்டர் ஸ்மித் மற்றும் அடெலின் சொவ் இருவரும் 2003ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் விரல்களில் சுருக்கங்கள் ஏற்பட தொடங்கும்போது, விரல்களில் ரத்த ஓட்டம் பெருமளவு குறைவதை கண்டறிந்துள்ளனர்.

"விரல்கள் சுருங்கும்போது அதன் நிறம் வெளிரிப்போகும். இது அப்பகுதியில் ரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படுகிறது," என, மான்செஸ்டர் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் நிபுணரும் உளவியலாளருமான நிக் டேவிஸ் கூறுகிறார்.

"விரல்களில் சுருக்கங்கள் ஏற்படுவது நரம்புகளால் கட்டுப்படுத்தப்படுகிறது என்றால், அதுவொரு காரணத்திற்காக நடைபெறுகிறது என்று அர்த்தம். அதாவது, இந்த சுருக்கங்கள் சில பலன்களை அளிக்கின்றன" என டேவிஸ் கூறுகிறார்.

 

விரல் சுருக்கங்கள்

பட மூலாதாரம்,ALAMY

பொருளை இறுகப்பிடிப்பதில் உதவுகிறதா?

2020ஆம் ஆண்டில் லண்டன் அறிவியல் அருங்காட்சியகத்தில் 500 பேர் பங்கேற்ற ஆய்வு ஒன்றில், ஒரு பிளாஸ்டிக் பொருளை இறுகப்பிடிக்க எவ்வளவு ஆற்றல் தேவை என்பதை டேவிஸ் கணக்கிட்டார். அப்போது, விரல்கள் ஈரமாக இல்லாமல் இருந்தவர்களுக்கு விரல்களில் இத்தகைய சுருக்கங்களுடன் இருந்தவர்களுடன் ஒப்பிடுகையில் குறைவான ஆற்றலே தேவையாக இருந்தது. ஆனால், இதுவே ஈரமான பொருட்களை இத்தகைய சுருக்கங்களை கொண்ட விரல்கள் கையாளும்போது எளிதாக இருப்பது தெரியவந்தது.

"நீங்கள் எதையாவது இறுகப்பிடிக்க கடினமாக அழுத்த வேண்டிய அவசியமில்லை என்றால், உங்கள் கைகளில் உள்ள தசைகள் சோர்வடையும், எனவே, நீங்கள் அந்த கடினமான வேலையை நீண்ட நேரம் செய்யலாம்," என்று அவர் கூறுகிறார்.

அவருடைய இந்த முடிவுகள், மற்ற ஆராய்ச்சியாளர்களின் முடிவுகளுடன் ஒத்துப்போனது. அதாவது, ஈரமான பொருட்களை கையாள்வதை, நம் கைகளில் ஏற்படும் இத்தகைய சுருக்கங்கள் எளிதாக்குவது தெரியவந்துள்ளது. 2013ஆம் ஆண்டில் பிரிட்டனில் உள்ள நியூகேசில் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.

அதில், ஒரு கொள்கலனில் உள்ள வெவ்வேறு வடிவிலான கண்ணாடி மார்பிள்களையும் தூண்டில் வெயிட்டுகளையும் மற்றொரு கொள்கலனுக்கு மாற்ற வேண்டும். இதில், ஒரு கொள்கலனில் உள்ள பொருட்கள் ஈரமானவை அல்ல. ஆனால், மற்றொரு கொள்கலனில் உள்ள பொருட்கள் தண்ணீருக்கு அடியில் வைக்கப்பட்டிருந்தன. விரல்களில் சுருக்கம் இல்லாமல் செய்தபோது அப்பொருட்களை வேறு கொள்கலனுக்கு மாற்ற 17 சதவீதம் அதிகமாக நேரம் எடுத்தது. ஆனால், விரல்களில் சுருக்கத்துடன் செய்தபோது 12 சதவீதம் விரைவாக அவற்றை வேறுகொள்கலனுக்கு மாற்றினர். ஆனால், ஈரமில்லாத பொருட்களை வேறு கொள்கலனுக்கு மாற்றுவதில் விரல்களில் சுருக்கத்துடன் செய்ததற்கும் அவை இல்லாமல் செய்ததற்குமான கால அவகாசத்தில் மாற்றம் இல்லை.

பரிணாம மாற்றதால் ஏற்பட்டதா?

ஈரமான பொருட்களையும் அதன் மேற்பரப்பையும் இறுகப்பிடிக்க உதவுவதற்காக மனிதர்கள் கடந்த காலத்தில் சில சமயங்களில் விரல் சுருக்கங்களை பரிணாம மாற்றத்தின் வழியாக அடைந்திருக்கலாம் என்பதை இந்த ஆய்வுகளின் முடிவுகள் பரிந்துரைக்கின்றன.

நம் முன்னோர்கள் ஈரமான பாறைகளில் நடப்பதற்கோ, மரங்களின் கிளைகளை இறுகப்பிடிப்பதற்கோ, அல்லது ஷெல் மீன்கள் உள்ளிட்ட இரையை பிடிப்பதற்கோ இது உதவியிருக்கலாம்.

மனிதக்குரங்குகளிடத்தில் இப்படி தண்ணீரில் நனையும்போது விரல்கள் சுருங்குகிறதா என்பது குறித்து இனிதான் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். ஆனால், வெந்நீரில் அதிக நேரத்திற்கு குளிக்கும் ஜப்பானின் மகாக்வே குரங்குகளுக்கு இத்தகைய சுருக்கங்கள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், மற்ற விலங்குகளிடத்திலும் இது நடக்கிறதா என்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை. ஆனால், இதன் அர்த்தம் மற்ற விலங்குகளிடத்தில் இது நடக்காது என்பது அல்ல.

விரல்கள் சுருக்கமடைவது நன்னீரைவிட உவர் நீரில் குறைவாகவே ஏற்படுகிறது. இதன்காரணமாக, முன்னோர்கள் கடற்கரைகளை ஒட்டி வாழ்வதை விட நன்னீரை ஒட்டிய சூழல்களில் வாழ உதவிய ஒரு தழுவலாக இவை இருக்கலாம்.

ஆனால், இவை எதற்கும் உறுதியான பதில்கள் இல்லை. இது தற்செயலான உடலியல் விளைவாகவும் இருக்கலாம் என சிலர் நம்புகின்றனர்.

 

விரல் சுருக்கங்கள்

பட மூலாதாரம்,BENJAMIN TORODE/GETTY IMAGES

உடல்நலனுக்கும் சுருக்கங்களுக்கும் என்ன தொடர்பு?

இத்தகைய சுருக்கங்கள் நம் உடல் ஆரோக்கியம் குறித்த ஆச்சர்யமான தகவல்களையும் வழங்குகிறது. சொரியாசிஸ், வெண்படலம் உள்ளிட்ட தோல் நோய்கள் உள்ளவர்களுக்கு இத்தகைய சுருக்கங்கள் ஏற்படுவதற்கு அதிக நேரம் எடுக்கிறது. சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் உள்ளவர்களுக்கு உள்ளங்கைகள் மற்றும் விரல்களில் அதிக சுருக்கங்கள் ஏற்படுகின்றன. மேலும், இந்த நோயை மரபு ரீதியாக கடத்துபவர்களிடத்திலும் இது ஏற்படுகிறது.

டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சில சமயங்களில் குறைவான சுருக்கங்களே ஏற்படுகின்றன. இதயம் செயலிழந்தவர்களிடத்திலும் சுருக்கம் குறைவாகவே காணப்படுகிறது. இதய செயல்பாடுகளில் ஏற்படும் சில தடைகளால் இவ்வாறு ஏற்படுகிறது.

ஒரு கையில் ஏற்படும் சுருக்கம், இன்னொரு கையில் ஏற்படுவதை விட குறைவாக ஏற்படுவது, பார்கின்சன் நோய்க்கான ஆரம்ப அறிகுறியாக கருதப்படுகிறது. அதாவது, உடலின் ஒரு பாகத்தில் அனுதாப நரம்பு மண்டலம் சரியாக செயல்படாததால் இது ஏற்படுகிறது.

(பிபிசி ஃப்யூச்சர் பகுதியில் ரிச்சர்ட் க்ரே என்பவர் எழுதியது)

 

https://www.bbc.com/tamil/science-61972598

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், கு.சா மற்றும் புத்தன்.
  • "விடுதலைப் புலிகளுக்கு" புத்துயிர் அளிக்க... ஆயுதங்கள், போதைப் பொருள் மூலம் நிதி திரட்டியதாக... என்.ஐ.ஏ. குற்றச்சாட்டு. இலங்கையைச் சேர்ந்த ஒருவர், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிக்க நிதி திரட்டியதாக இந்தியாவின் என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. மீன்பிடி படகுகளில் இருந்து ஏகே 47 துப்பாக்கிகள், வெடிமருந்துகளுடன் மற்றும் ஏராளமான போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் எட்டாவது குற்றவாளியும், இலங்கையைச் சேர்ந்தவருமான ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணையின்போது கேரள உயர் நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. விசாரணை அமைப்பு அறிக்கை தாக்கல் செய்தது. 2021 மார்ச் 18 அன்று லட்சத்தீவின் மினிகாய் தீவுக்கு அருகில் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் பயணித்த ‘ரவிஹன்சி’ என்ற படகை இந்திய கடலோர காவல்படையினர் தடுத்து நிறுத்தியபோது இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் என்று கூறப்படும் ஏழாவது மற்றும் அவரது சகோதரர் மற்றும் எட்டாவது குற்றவாளிகள் காவலில் வைக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவரான ரமேஷ், விசா இல்லாமல் இந்தியாவில் தங்கியிருப்பதை ஒப்புக்கொண்டார். ரமேஷ் மற்றும் அவரது சகோதரர் உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியப் பொறுப்புக்களில் இருந்தவர்கள் என்றும் இந்த சட்டவிரோத கடத்தல் மூலம் பணம் திரட்டி வந்ததாகவும் என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் பிணை மனுவை நிராகரித்து தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்ள கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://athavannews.com/2022/1294624
  • ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து... ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு, அறிக்கை சமர்பிப்பு. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு, ஐந்து தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கையொன்றை அனுப்பிவைத்துள்ளனர் என அறியமுடிகின்றது. சர்வதேச கண்காணிப்புடனான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதோடு நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும் எனவும் அவர்கள் அந்த அறிக்கையில் கூறிப்பிட்டுள்ளனர் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறீகாந்தா ஆகியோரே இந்த அறிக்கையை அனுப்பிவைத்துள்ளனர். மேலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது. https://athavannews.com/2022/1294612
  • பலம் வாய்ந்த நாடுகளுக்கு... இலங்கை, இரையாகி விட்டது – சஜித் தேசிய பாதுகாப்பு கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை கூறியுள்ளார். நாட்டில் நிலவும் ஸ்திரமின்மை மற்றும் வங்குரோத்து நிலை காரணமாக பலம் வாய்ந்த நாடுகளுக்கு இலங்கை இரையாகிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1294627
  • ஜெனீவாவை எதிர் கொள்ள... விசேட பொறிமுறையை, தயாரிக்கின்றது அரசாங்கம் – நீதி அமைச்சர். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் கூட்டத்தொடரை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் விசேட பொறிமுறையையொன்றை தயாரித்து வருகின்றது. மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 13ஆம் திகதி ஆரம்பித்து ஒக்டோபர் 7ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் இலங்கையில் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணகத்தை ஏற்படுத்தல் உள்ளிட்ட விடயங்களில் அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் அறிக்கையை சமர்பிக்கவுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுப் பணியகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகள் பற்றி தெரிவிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். இதனைவிட சட்டம், ஒழுங்கு, அரசியலமைப்பு விடயங்கள் தொடர்பாக எடுத்துரைக்கவுள்ள அதேவேளை ஐ.நா. கூட்டத் தொடரை எதிர்கொள்ள அதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைந்து விசேட பொறிமுறையை தயாரிக்கவுள்ளதாகவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார். இருப்பினும் மனித உரிமைப் பேரவையைப் பயன்படுத்தி தமது அரசியல் இலாபங்களை தேட சிலர் முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய நீதி அமைச்சர், பிரச்சினைகள் தீர்க்கப்படுவதை அவ்வாறானவர்கள் விரும்புவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1294631
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.