Jump to content

ஒன்டாரியோவில்... தமிழ் இனப் படுகொலை வாரத்தை, பிரகடனப்படுத்துவதற்கு... தடை கோரிய, சிங்கள – கனேடிய குழுக்களின்  மனு நிராகரிப்பு!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தாக்குதல் நடைபெறுவதற்கு அதிக சாத்தியம் காணப்படுகின்றது – பயண ஆலோசனையில் கனடா எச்சரிக்கை

ஒன்டாரியோவில்... தமிழ் இனப் படுகொலை வாரத்தை, பிரகடனப்படுத்துவதற்கு... தடை கோரிய, சிங்கள – கனேடிய குழுக்களின்  மனு நிராகரிப்பு!

கனடாவின் ஒன்டாரியோவில் தமிழ் இனப்படுகொலை வாரத்தை பிரகடனப்படுத்துவதற்கு தடை கோரிய மனுவை கனேடிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதியுடன் முடிவடையும் ஏழு நாட்களை தமிழ் இனப்படுகொலை வாரமாக குறிப்பிடுவது சட்டவிரோதமானது என தெரிவித்து பல சிங்கள – கனேடிய குழுக்கள் ஒன்ராறியோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.

சர்வதேச சட்டத்தின் கீழ் எந்தவொரு தமிழ் இனப்படுகொலையும் அங்கீகரிக்கப்படவில்லை எனவும், இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்த கனேடிய மாகாண அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் அவர்கள் தங்களது மனுவில் தெரிவித்திருந்தனர்.

எனினும் இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கனேடிய நீதிமன்றம், மனுவினை நிராகரித்துள்ளது.

https://athavannews.com/2022/1289069

Link to comment
Share on other sites

தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம் சட்டமூலத்தினை  மீள் உறுதி செய்த ஒன்ராறியோ நீதிமன்றம் 
தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம் (TGEWA - BILL 04) ற்கு எதிராக ஸ்ரீ லங்கா ஆதரவினால் கொண்டுவரப்பட்ட வழக்கை நீதிமன்றம் நீராகரித்து தமிழின அழிப்பு அறிவூட்டல் வார சட்டம் சரி என தீர்ப்பு வழங்கி உள்ளது. ஒன்ராரியோ பாராளுமன்றம் நிறைவேற்றிய அரசியலமைப்புச் சட்டத்தை நீதிபதி மீள் உறுதி செய்துள்ளார் என்ற சிறந்த செய்தியை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். இச்சட்டத்தைக் கொண்டு வந்த விஜய் தணிகாசலம் அதைக் காக்க கடுமையாக எம்முடன் உழைத்த ஒண்டாரியோ அரச சட்டவாளர்கள் எம்மால் நியமிக்கப்பட்ட சட்டவாளர்கள், சாட்சிகள், ஆதரவளித்த ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள்  அனைவருக்கும் எமது நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம் . - NCCT

“Very happy to let you all know that the court application challenging the TGEW Act has been dismissed. The judge did not make any findings of fact and dealt with the coonstitutionality of the Act. This is a big victory for Tamil people. Tamil Genocide Education Week will continue in Ontario”

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சிங்களவர்களுக்குள்ள அடுத்த தெரிவு என்ன?

தமிழகத்தில இருந்து பிச்சை வாங்கி திண்டாலும், சிங்களவர் பொறுமைக்கு எல்லை உண்டு எண்ட வாய்சவடால் விட்ட சரத் வீரசேகராவுக்கு, நீ சொன்னது உண்மைதான் என்று, நடுரோட்டில, நடுவிரலைக்காட்டி, பெண் ஒருவர் புரிய வைத்தார்.

அதேபோல, கோத்தா போன்ற கள்ளகோஸ்டிகளை வைத்துக்கொண்டு, இப்படி வழக்குப் பேசுவது முதலுக்கே மோசம் எண்டு, இந்த கனடா சிங்களவருக்கும் புரிந்திருக்கும் .

Edited by Nathamuni
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் திருந்த வாய்ப்பே இல்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலை இடம்பெற்றதை மறுப்பதே இனப்படுகொலையின் இறுதிப் படிமுறையாகும் - ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் விஜய்

(நா.தனுஜா)

இனப்படுகொலையொன்று இடம்பெற்றது என்பதை மறுப்பதே இனப்படுகொலையின் இறுதிப் படிமுறையாகும். எனவே நாம் தமிழினப்படுகொலை தொடர்பான கதைகளைத் தொடர்ந்து பகிர்ந்துகொள்வோம்.

இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பில் அறிவூட்டுதல் மற்றும் கலந்துரையாடல் ஆகியவற்றின் மூலம் எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவதைத் தவிர்க்கவும், எமது சமூகம் இந்த துன்பத்திலிருந்து மீள்வதற்குப் பங்களிப்புச்செய்யவும் முடியும் என்று கனடாவின் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

Vijay_Thanikachalam.jpg

கனடாவின் ஒன்றாரியோ மாகாணப்பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 104 ஆம் இலக்க தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி இலங்கை - கனேடிய செயற்பாட்டு ஒன்றிணைவு உள்ளிட்ட சில அமைப்புக்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவைக் கடந்த செவ்வாய்கிழமை தள்ளுபடி செய்த ஒன்ராரியோ உயர்நீதிமன்றம், இந்தச்சட்டமூலம் உலகமகாயுத்தம் மற்றும் ஏனைய சர்வதேச மட்டத்திலான போராட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் வகையில் வகுக்கப்பட்டிருக்கும் மாகாணக்கல்விக்கொள்கையை ஒத்தது என்றும் சுட்டிக்காட்டியிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் ஒன்றாரியோ உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஒன்றாரியோ மாகாணப்பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அவ்வறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தித் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றாரியோ உயர்நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதுடன், அது அரசியலமைப்பிற்கு அமைவானது என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 60 இற்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புக்கள் நீதிமன்றத்தில் தமது சமர்ப்பணங்களை முன்வைத்தன.

குறிப்பாக இவ்வழக்கின் நீதிபதி 'தமிழினப்படுகொலை தொடர்பிலும், ஏனைய படுகொலைகள் தொடர்பிலும் பொதுமக்களுக்கு அறிவூட்டுவதன் மூலம் எதிர்வருங்காலங்களில் அத்தகைய வன்முறைகளும் அத்துமீறல்களும் இடம்பெறுவதைத் தவிர்த்துக்கொள்ளமுடியும்' என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இனப்படுகொலையொன்று இடம்பெற்றது என்பதை மறுப்பதே இனப்படுகொலையின் இறுதிப் படிமுறையாகும் என்று நாம் கடந்தகால வரலாறுகளின் ஊடாக அறிந்துகொண்டிருக்கின்றோம். எனவே நாம் தமிழினப்படுகொலை தொடர்பான கதைகளைத் தொடர்ந்து பகிர்ந்துகொள்வோம்.

தமிழ்மக்களுக்கு நேர்ந்தது என்னவென்பது குறித்து நாம் ஏனையோருக்கு அறிவூட்டுவோம். இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பில் அறிவூட்டுதல் மற்றும் கலந்துரையாடல் ஆகியவற்றின் மூலம் எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவதைத் தவிர்க்கவும், எமது சமூகம் இந்த துன்பத்திலிருந்து மீள்வதற்குப் பங்களிப்புச்செய்யவும் முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

 

https://www.virakesari.lk/article/130511

 

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • உங்கள் அனுபவம் எனக்கிலை ஆகவே அதை பற்றி நான் கூறுவது சரியாக இருக்க முடியாது.  ஆனால் நேர்வழியில் எங்கே இருந்தாலும் வாழலாம் என்பது என் நம்பிக்கை. மேலே பிரபா சொன்னது போல அவா (greed), மற்றது மாட்டிகொண்டால் அசிங்கம் என்ற பயம் - இவைதான் எந்த வழியில் ஒருவர் போகிறார் என்பதை தீர்மானிக்கிறன. மனிதர் அடிப்படையில் இருவகைதான். 1. களவு செய்வோர்/ செய்ய துணிந்தோர் 2. செய்யாதோர் ( நல்லெண்ணம்,வாய்ப்பில்லை, பயம் இப்படி பல காரணம்கள்). எப்போது ஒரு நாட்டில் 1ம் வகையினர் அதிகமாகிறனரோ அப்போ அந்த நாடு சீரழிய தொடங்கும். இதை தமிழ் நாட்டில் 1947-2022 காலப்பகுதியை பார்த்தால் தெளிவாக தெரியும். காமராஜரோ, ராஜாஜியோ, அண்ணாவோ - கொள்கைகள் மாறினாலும் ஊழலின் நிழல் கூட படாதவர்களாக இருந்தார்கள்.  ஆனால் அதன் பின் வந்த ஒவ்வொருவரும் ஊழலில் ஒவ்வொரு படிநிலை மேலே போனார்கள்.  இந்த சரிவு தனியே தலைவர்கள் மட்டத்தில் மட்டும் அல்ல, அடுத்த நிலை தலைவர்கள், அதிகாரிகள், தொண்டர்கள், வாக்காளர்கள் என ஒவ்வொரு நிலையிலும் ஏற்பட்டது. விளைவு? 75 வருடங்கள் முன், படிப்பறிவு இல்லாமல் கொள்கைக்காக வாக்கு செலுத்திய மக்கட்கூட்டம். இன்று, அதீத படிப்பறிவுடன் இருந்தும், வாக்கு போடுவதாக கூறி எல்லா கட்சியிடமும் காசு வாங்கும் ஒரு கூட்டமாக மாறிப்போயுள்ளது. அங்கே இப்போ வாக்குக்கு காசு வாங்குவது ஒரு பெரிய விசயமே இல்லை. ஊழல் என்பது ஒரு போதும் பொதுவாழ்வில் மட்டும் இருக்கும் விடயம் அல்ல. ஒரு நாடு இன்று ஊழலில் நாசமாகி கிடக்கிறது என்றால், பத்து இருபது வருடங்கள் முன் அந்த நாசம் தனி மனிதர் வாழ்வில் ஏற்று கொள்ளதக்கதாக ஆகி விட்டிருக்கும். நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால் - 47-22 தமிழ்நாடு போன பாதையில் கனடா இப்போ போகிறது போல் படுகிறது. ஆழ்ந்த அனுதாபங்கள்.    
  • எங்களின் படித்த சமூகம் ஏன் இப்படியான கோழைத்தனமான முடிவுகளை எடுக்கிறார்கள். ?சமூகத்துக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் அல்லவா!!!
  • அரசாங்கத்துக்கு எதிராக... பாரிய போராட்டத்திற்கு, அழைப்பு. அரசாங்கத்துக்கு எதிராக பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளைய தினம்(18) கொழும்பில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தே இவ்வாறு பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுவிப்பது, வாழ்க்கைச் செலவுகளை கொண்டு செல்ல நிவாரணம் வழங்கப்பட வேண்டும் மற்றும் செயலிழந்துள்ள பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. https://athavannews.com/2022/1295055
  • காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில்... இனிமேல், கூட்டமைப்பினர் தடையிடக்கூடாது- உறவுகள். காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை மழுங்கடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஊக்குவிக்க படுகின்றனர் என்றும் இந்த விடயத்தை அரசியல் லாபத்திற்காகவே கூட்டமைப்பினர் பயன்படுத்துகிறார்கள் என்றும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார். கல்முனையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அம்பாறை மாவட்டத்தில் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் எதிர்வரும் காலங்களிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். எமது உறவுகளுக்கான நீதி கிடைக்கும்வரை இந்தப் போராட்டத்தை நாம் கைவிடப்போவதில்லை. 138 பேரை அம்பாறை மாவட்டத்தில் இழந்து இருக்கின்றோம். காணாமல் போனோரின் அலுவலகத்தினை 8 மாவட்டத்தினை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் வேண்டாம் என்று உறுதியாக நிற்கும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான காரியாலம் வேண்டும் என்று கூறுவதற்கு காரணம் என்ன? தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இவ்வாறு செயற்படுவதானது எமக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது. இவ்வாறான அலுவலகங்களை எல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னின்று ஊக்குவிப்பதற்கான காரணம் என்ன? கூட்டமைப்பினர் எங்களுக்கான நீதியை பெற்றுத்தர விரும்பி இருந்தால் கடந்த 10 வருடங்களுக்கு முன்னரெ அது கிடைத்திருக்கும். ஆனால் நீங்களோ கதிரைகளுக்கு ஆசைப்பட்டு அரசாங்கத்துடன் சேரந்து உழைக்கின்றீர்கள். செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரில் எமக்கான நீதி கிடைக்கும் என நம்புகின்றேன். இறுதி யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையை தொடர்ந்து இலங்கை பொறிமுறையில் நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தான் நாங்கள் இன்று சர்வதேசத்தை நாடி இருக்கின்றோம். அதற்கான காரணத்தையும் ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் கூறி இருக்கின்றோம். இந்த உள்ளக பொறிமுறை விசாரணையை ஏன் விரும்பவில்லை என்ற காரணத்தையும் அங்கு தெளிவாக கூறியுள்ளோம். இன்று அரசாங்கத்துடன் இணைந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை மழுங்கடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஊக்குவிக்க படுகின்றனர். இதில் அவர்களுக்கு அரசியல் இலாபம் உண்டு. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏமாற்றி வருகின்றார்கள். செல்லாக் காசான தமிழ் தேசிய கூட்டமைப்பினரை இவ்விடயத்தில் தினமும் நம்பி நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை தற்போது உணர்ந்துள்ளோம்.- என்றார். https://athavannews.com/2022/1295043
  • ஜெனிவாவில் நடைபெற இருக்கும் கூட்டத்தொடரில் புலம்பெயர் அமைப்புக்களின் தடை பற்றி கேள்வி எழுப்புவார்கள். அதற்கான  நரியின் முன்னேற்பாடு தான் இத்தடை நீக்கம்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.