Jump to content

ஒத்துழைப்பைக் கோரும் பிரதமர்; சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க கேட்கும் எதிரணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒத்துழைப்பைக் கோரும் பிரதமர்; சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க கேட்கும் எதிரணி

on June 30, 2022

1x-1-scaled.jpg?resize=1200%2C550&ssl=1

Photo, Buddhika Weerasinghe/Getty Images, BLOOMBERG

இலங்கையின் பொருளாதார நிலைவரம் குறித்து கடந்தவாரமும் நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீண்டதொரு உரையை நிகழ்த்தினார். தீவிரமடையும் பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளை விளக்கிக்கூறிய அவர் எதிர்க்கட்சிகளிடம் ஒத்துழைப்பைக் கோரினார்.

பொருளாதாரம் முற்றுமுழுதாக வீழ்ச்சி கண்டுவிட்டது. அதை மீட்டெடுப்பது, அதுவும் வெளிநாட்டுச் செலாவணி ஆபத்தான அளவுக்கு கீழ்மட்டத்தில் இருக்கும் நிலையில் சுலபமான காரியம் அல்ல. நெருக்கடிக்கு மத்தியிலும் மக்கள் பசியில் வாடாதிருப்பதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே  மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறிய அவர் கொழும்பு வந்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவை எதிரணி அரசியல் கட்சிகளுடன் பேசுமாறு தான் கேட்டுக்கொண்டதாகவும் முதலில் செய்யவேண்டியது நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு அதனிடமிருந்து கடனுதவியைப் பெறுவதேயாகும் என்றும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற பகிஷ்கரிப்பைக் கைவிட்டு முக்கியமான சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பைத் தருமாறு எதிரணி கட்சிகளிடம் வேண்டுகோள் விடுத்த பிரதமர் பொருளாதாரம்  உறுதிநிலைப்படுத்தப்பட்டதும் நாட்டு மக்கள் புதிய பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து புதிய அரசாங்கத்துக்கு ஆணையை வழங்கலாம் என்றும் சொன்னார்.

பிரதமரின் உரை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளும் அரசாங்கத்துக்கு இன்றைய நெருக்கடியான கட்டத்தில் காலஅவகாசத்தை வேண்டுவதையே நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால், கடந்தவாரம் எதிரணி கட்சிகள் அரசாங்கம் தொடர்பில் எடுத்திருக்கும் நிலைப்பாடுகள் அதற்கு முற்றிலும் முரணாக அமைந்திருந்ததையே காணக்கூடியதாக இருந்தது.

பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய கோட்டபாய – விக்கிரமசிங்க அரசாங்கம் அரசியல், பொருளாதார, சமூக உறுதிப்பாட்டை மீளநிலைநிறுத்துவதற்காக அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கு தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டியதுடன் அதனால் உடனடியாக பதவி விலகி நாடாளுமன்றம் புதிய ஜனாதிபதியையும் பிரதமரையும் சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் ஒன்றின் கீழ் அமைச்சரவையொன்றையும் தெரிவுசெய்ய வழிவிடவேண்டும் என்று கேட்டிருக்கிறது.

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை ஏமாற்றிவிட்டது என்று கூறிய அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான லக்‌ஷ்மன் கிரியெல்ல இலங்கை அதன் தற்போதைய பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நிதி நிறுவனங்களும் வெளிநாடுகளும் உதவப்போவதில்லை என்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். சர்வகட்சி அரசாங்கம் ஒன்றினால் மாத்திரமே அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்தமுடியும் என்பதும் சர்வதேச நிதி நிறுவனங்களினதும் நாடுகளினதும் நம்பிக்கையைப் பெறமுடியும் என்பதுமே கிரியெல்லவின் நிலைப்பாடு.

சமகி ஜன பலவேகயவின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச புதிதாக பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கெனவே முன்வைத்திருந்தார். ஆனால், கிரியெல்ல முன்வைத்த சர்வகட்சி இடைக்கால அரசாங்க கோரிக்கை குறித்து எத்தகைய அபிப்பிராயத்தை பிரேமதாச கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ கடந்த மாத முற்பகுதியில் பிரதமர் பொறுப்பை ஏற்கவருமாறு கேட்டபோது பிரேமதாச காட்டிய தயக்கத்தினால் அவர் சவால்களுக்கு முகங்கொடுக்க துணிச்சல் இல்லாதவர் என்ற ஒரு படிமம் அரசியல் அரங்கில் ஏற்பட்டிருந்தது. அதை மாற்றியமைக்க இப்போது சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க ஒத்துழைக்கும் மனநிலையில் அவர் இருக்கிறாரோ தெரியவில்லை. அல்லாவிட்டால் கிரியெல்ல அத்தகையதொரு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கமாட்டார் என நம்பலாம்.

அடுத்ததாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டபாய – விக்கிமசிங்க அரசாங்கம் பதவியில் இருக்கும்வரை சர்வதேச நிதி நிறுவனங்களும் உதவி வழங்கும் நாடுகளும் இலங்கையை பொருளாதார – அரசியல் நெருக்கடியில் இருந்து மீட்க முன்வரப்போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் கடந்தவாரம் செய்தியாளர் மகாநாட்டில் உரையாற்றிய சிறிசேன இன்றைய அரசாங்கம் உடனடியாக பதவி விலகி அங்கம் வகிக்கும் கட்சிகளை உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கமொன்றை 15 பேர் கொண்ட அமைச்சரவையுடன் அமைக்க வழிவிடுவதே நெருக்கடியில் இருந்து மீள ஒரே வழி என்று வலியுறுத்தினார். அத்துடன், 6 மாதகாலத்தில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று கூறிய அவர் 2015 – 19 அரசாங்கத்தில் தனக்கும்  விக்கிரமசிங்கவுக்கும் இடையே நிலவியதைப் போன்ற போட்டி தற்போது ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் மூண்டிருப்பதாகவும் அது  நாட்டு நிலைவரத்தை மேலும் மோசமாக்கும் ஆபத்தைக் கொண்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.)வைப் பொறுத்தவரை நாட்டை மீட்டெடுக்க குறிப்பிட்ட ஒரு காலகட்டத்துக்கு சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் ஒன்றில் பங்கேற்பதற்குத் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறது. ஆனால் 21ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படவேண்டும் என்றும் விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும் என்றும் அது நிபந்தனை விதிக்கிறது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ உடனடியாக  பதவி விலகவேண்டும் என்று முன்னர் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்த ஜே.வி.பி. தற்போது நிலைப்பாட்டை தளர்த்தியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

சுதந்திர இலங்கை அதன் வரலாற்றில் முன்னென்றும் கண்டிராத படுமோசமான  பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முன்னெடுக்கப்படக்கூடிய முயற்சிகளுக்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மக்கள்  மத்தியில் பரவலாக நிலவுகிறது. அதனால் மக்களின் வெறுப்புக்கு ஆளாகிவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுணர்வு எதிரணி கட்சிகளிடம் இல்லாமல் இல்லை. ஆனால், அவை தற்போதைய அரசாங்கத்துடன் ஒத்துழைக்கத் தயாரில்லை. சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் என்ற கோரிக்கை அதன் விளைவாகவே எழுகிறது.

நாடாளுமன்றத்தில் சுயாதீன குழுவாக இயங்கும் 53 பேரைக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிருப்தியாளர்கள் குழுவும் சர்வகட்சி அரசாங்கம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது. அத்தகைய ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கு  தாங்கள் முதலில் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை என்று அந்தக் குழுவின் முக்கியமானவர்களில்  ஒருவரான பொதுநிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தலைவர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறியிருக்கிறார். தாங்கள் அமைச்சர் பதவிகளை எதிர்பார்க்கவில்லையென்றும் அதனால் தான் ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து அரசாங்கத்தை அமைக்க முன்வருமாறு பிரேமதாசவின் சமகி ஜன பலவேகயவை அழைத்ததாகவும் கடந்த வாரம் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் குறிப்பிட்டார். சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் தமிழ் தேசிய கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் தான் கதைத்ததாகவும் அவர் அதற்கு சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை தனது கட்சி வெளியில் இருந்து ஆதரிக்கும் என்று பதிலளித்ததாகவும் கூட யாப்பா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் விக்கிரமசிங்க பதவியேற்ற பிறகு அமைக்கப்பட்ட அமைச்சரவையை ஒரு  சர்வகட்சி அமைச்சரவையாக காட்டும் முயற்சியிலேயே சமகி ஜன பலவேகயவையும் சுதந்திர கட்சியையும் சேர்ந்த சிலர் கவர்ந்திழுக்கப்பட்டனர். ஆனால், அது தனிநபர்கள் தங்கள் கட்சிகளைக் கைவிட்டு அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொண்ட செயலாகப் போனதே தவிர சர்வகட்சி அரசாங்க தோற்றப்பாட்டைத் தரவில்லை. இதனிடையே ஜனாதிபதியை சந்திக்கும் ஆளும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு கேட்கவும் தவறுவதில்லை.

எதிரணி கட்சிகளைப் பொறுத்தவரை கோட்டபாய – விக்கிரமசிங்க அரசாங்கம் தோல்வி கண்டுவிட்டது என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றன. அதனால் அவர்கள் ஒத்துழைப்புக் கோரி பிரதமர் விடுக்கும் அழைப்புக்கு செவிசாய்க்கும் மனநிலையில் இல்லை என்றே தெரிகிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அவசியமான அரசியல் உறுதிப்பாடு கானல் நீராகவே இருக்கிறது. எதிரணியின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு புதிதாக சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க ஜனாதிபதி முன்வருவார் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. ராஜபக்‌ஷர்களைப் பொறுத்தவரை அரசியலில் இருந்து முற்றாகவே ஓரங்கட்டப்படாதிருப்பதை உறுதிசெய்வதற்கான வியூகங்களையே அவர்கள் வகுக்கிறார்கள் என்று தெரிகிறது.

எது எவ்வாறிருந்தாலும், தற்போதைய நாடாளுமன்றத்தில் இருக்கும் உறுப்பினர்களின் வகைதொகையைப் பார்க்கும்போது உருப்படியான அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு அவர்கள்  ஒத்துழைப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. ஏனென்றால், நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியால் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் கூட கட்சி அரசியலை முன்னெடுப்பதில்தான் தலைவர்கள் எனப்படுவோர் அக்கறை காட்டுகிறார்கள். அதனால் உண்மையான அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுக்க மக்களின் புதிய ஆணையுடன் கூடிய நாடாளுமன்றம் ஒன்று தேவை.

ஆனால், தற்போதைய நெருக்கடி நிலையில் தேர்தல் ஒன்றுக்கு நாட்டினால் முகங்கொடுக்க முடியாது. அடுத்த மார்ச் மாதத்துக்கு பிறகு தேர்தல் ஒன்றுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி கோட்டபாய பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுவிடம் அண்மையில் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், மார்ச் அளவில் நாடளாவிய தேர்தல் ஒன்றை நடத்தக்கூடிய அளவுக்கு பொருளாதார நெருக்கடியில் தணிவு ஏற்படக்கூடியதாக இருக்குமா என்பது முக்கியமான கேள்வி. பிரதமர் விக்கிரமசிங்க பொருளாதார நிலைவரம் குறித்து செய்கின்ற அறிவிப்புக்கள் சில வருடங்களுக்கு நாடு பாரிய நெருக்கடிக்குள் மூழ்கியிருக்கப்போகிறது என்பதையே உணர்த்தி நிற்கின்றன. அதனால் பொருளாதார நெருக்கடியும் அரசியல் உறுதிப்பாடின்மையும் தொடருவதற்கான அறிகுறிகளே காணப்படுகின்றன.

Thanabalasingam-e1653297290887.jpeg?resiவீரகத்தி தனபாலசிங்கம்
 

 

https://maatram.org/?p=10212

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.