Jump to content

புதினின் அரை நிர்வாண படங்கள்: கிண்டல் செய்த தலைவர்கள் - என்ன செய்தார் ரஷ்ய அதிபர்?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

புதினின் அரை நிர்வாண படங்கள்: கிண்டல் செய்த தலைவர்கள் - என்ன செய்தார் ரஷ்ய அதிபர்?

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

அரை நிர்வாண விளாதிமிர் புதின்

பட மூலாதாரம்,AFP

 

படக்குறிப்பு,

2009ஆம் ஆண்டில் மேலாடையின்றி குதிரையில் சவாரி செய்யும் புகைப்படம் எடுத்து தமது கட்டுமஸ்தான உடல்வாகை வெளிப்படுத்தினார் விளாதிமிர் புதின்.

தனது கட்டுமஸ்தான உடல்வாகு குறித்து இந்த வாரம் கிண்டல் செய்த மேற்கு நாடுகளின் தலைவர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எதிர்வினையாற்றியுள்ளார். உங்களின் ஆடையை இப்படிக் கழற்றினால் "பார்க்க சகிக்காது" என்று அவர் கூறியுள்ளார்.

தமது குதிரை சவாரியின்போது மேல் சட்டையின்றி படங்களுக்கு போஸ் கொடுத்த ரஷ்ய அதிபரின் போக்கை ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்ற சில மேற்கு நாடுகளின் தலைவர்கள் கேலி செய்தனர். இந்த நிலையில், அவர்களுக்குக் கடுமையான முறையில் எதிர்வினையாற்றியிருக்கிறார் ரஷ்ய அதிபர்.

மேலும், தமது சக தலைவர்களிடம் நீங்கள் எல்லோரும் உங்களுடைய மது அருந்தும் அளவைக் குறைத்துக் கொண்டு அதிக விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்றும் புதின் அறிவுறுத்தியுள்ளார்.

தாம் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் யுக்ரேனை புதின் ஆக்கிரமித்திருக்க மாட்டார் என்ற பிரிட்டன் போரிஸ் ஜான்சனின் கருத்துகளையும் புதின் நிராகரித்தார்.

இது குறித்து ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய புதின், "அந்தக் கூற்று சரியல்ல. மார்கரெட் தாட்சர் (பிரிட்டன் முன்னாள் பிரதமர்) பால்க்லாந்து போரிலேயே "பகையைத் தொடங்க முடிவு செய்துள்ளார்" என்று கூறினார்.

என்ன நடந்தது?

ரஷ்ய அதிபர் மேலாடையின்றி படங்களுக்கு காட்சி தருவது அந்நாட்டில் புதிதல்ல. அவர் இதற்கு முன்பும் பல தருணங்களில் குதிரை சவாரி செய்யும்போதும் வேட்டைக்குச் செல்லும்போதும் மீன்பிடிக்கும்போதும் மேல் சட்டையின்றி இருப்பதைக் காட்டும் படங்கள் அந்நாட்டு அரசு ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

ரஷ்யர்களை ஈர்க்கும் வகையிலான ஆண்மை உணர்வை அத்தகைய காட்சிகள் ஏற்படுத்த முயல்வதாக தமது படங்கள் குறித்து புதின் கூறினார்.

முன்னதாக, இந்த வார தொடக்கத்தில் ஜெர்மனியில் ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷ்ய அதிபர் புதின் தொடர்பாக நையாண்டி செய்தார். அப்போது அவர், "புதினை விட மற்ற தலைவர்கள் வலிமையானவர்கள் என்பதைக் காண்பிக்க வேண்டுமானால், அவர்கள் தங்களுடைய ஆடைகளைக் கழற்ற வேண்டும்," என்று கிண்டலாக பேசினார்.

பிரிட்டன் பிரதமர், "நாமும் கடுமையானவர்கள் என்பதைக் காட்டுங்கள்" என்று கூறினார். கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "அப்படியென்றால் திறந்த மார்புடன் குதிரை சவாரி செய்ய வேண்டும்" எனப் பேசினார்.

காணொளிக் குறிப்பு,

Watch: 'Show them our pecs' - G7 leaders mock Putin

இந்த நிலையில், துர்க்மெனிஸ்தானில் செய்தியாளர் சந்திப்பின் போது இது குறித்து புதினிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், "அவர்கள் இடுப்புவரை கழற்ற விரும்புகிறார்களா அல்லது இடுப்புக்கு கீழே கழற்ற விரும்பினார்களா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது எதுவாக இருந்தாலும் அது பார்க்க சகிக்க முடியாத காட்சியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்," என்று பதிலளித்தார்.

"நீங்கள் ஒரு புத்திசாலியாக இருக்கலாம். உங்கள் நகங்களின் அழகைப் பற்றியும் சிந்திக்கலாம் என ரஷ்ய கவி அலெக்சாண்டர் புஷ்கினின் வரியை மேற்கோள் காட்டிப் பேசிய புதின், "நான் அந்தக் கருத்துடன் நிச்சயமாக உடன்படுகிறேன்; ஒருவர் தமது உடல் மற்றும் ஆன்மாவுடன் இணக்கமாக உணர்வுபூர்வமாக தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், எல்லாவற்றிலும் அப்படி இருக்க விரும்பினால் முதலில் நீங்கள் போதைக்கு அடிமையாவதிலும் பிற பழக்கங்களில் இருந்தும் விடுபட வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும், விளையாட்டில் ஈடுபட வேண்டும்," என்று தெரிவித்தார்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

"நீங்கள் குறிப்பிடும் நபர்கள் அனைவரையும் நான் தனிப்பட்ட முறையில் அறிவேன் - எங்கள் உறவுகள் சிறப்பானதாக இல்லை. இது புரிந்துகொள்ளத்தக்கது. ஆனாலும், அவர்கள் அனைவரும் தலைவர்கள். அதாவது அவர்களுக்கு எனத் தனி குணம் உள்ளது. விருப்பம் கொண்டிருந்தால் அவர்கள் நிச்சயமாக விரும்பிய முன்னேற்றத்தை அடைவார்கள். ஆனால் அதற்கு அவர்கள் உழைக்க வேண்டும். அதைப் பற்றிப் பேசுவது கூட ஒருவகையில் நல்லதுதான். இதற்காக நான் அவர்களைப் போற்றுவேன்," என்று புதின் கூறினார்.

இந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற நேட்டோ செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போரிஸ் ஜான்சனிடம் புதின் கூறிய இந்தக் கருத்துக்கள் காண்பிக்கப்பட்டன. ஆனால், அதற்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த போரிஸ், யுக்ரேன் மீதான ஆக்கிரமிப்புக்கு மேற்கு நாடுகள் ஒன்றாகச் சேர்ந்து அப்படி எதிர்வினையாற்றியதாகத் தெரிவித்தார்.

 

விளாதிமிர் புதின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சைபீரியாவில் மேல் சட்டையின்றி மீன்பிடிக்கும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

ஒரு பெண்ணாக இருந்திருந்தால் ரஷ்ய அதிபர் யுக்ரேனை ஆக்கிரமித்திருக்க மாட்டார் என்று போரிஸ் ஜான்சன் இந்த வாரம் தெரிவித்த கருத்துகள் குறித்தும் புதினிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

ஜெர்மன் செய்தி நிறுவனமான ZDF உடனான ஒரு நேர்காணலில் ஜான்சன் "யுக்ரேன் மீதான பைத்தியக்காரத்தனமான, ஆடம்பரமான ரஷ்ய படையெடுப்பு 'நச்சு ஆண்மைக்கு சரியான எடுத்துக்காட்டு" என்று கூறினார். மேலும் "அதிகாரப் பதவிகளில் அதிகமான பெண்கள் வர வேண்டும்" என்றும் போரிஸ் அழைப்பு விடுத்தார்.

அவரது இந்தக் கூற்றுக்கு எதிர்வினையாற்றிய புதின், "1982ஆம் ஆண்டு பால்க்லாந்து தீவுகள் தொடர்பாக பிரிட்டன் மற்றும் அர்ஜென்டீனா இடையே ஏற்பட்ட மோதலை மேற்கோள்காட்டி பதிலளித்தார்.

அப்போது அவர், "ஃபால்க்லாந்து தீவுகளுக்காக அர்ஜென்டீனாவுக்கு எதிராக மார்கரெட் தாட்சர் ராணுவ ரீதியில் குரோரத்தைத் தொடங்க முடிவு செய்த சமீபத்திய வரலாற்றின் நிகழ்வுகளை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். அப்படியென்றால் ஒரு பெண் விரோதத்தைத் தொடங்க முடிவு செய்திருக்கிறார். அந்த பால்க்லாந்து தீவுகள் எங்கே? பிரிட்டன் எங்கே? அது ஏகாதிபத்திய லட்சியங்கள் மற்றும் ஏகாதிபத்திய நிலையை உறுதிப்படுத்திய மனப்போக்கே தவிர வேறு எதுவும் இல்லை," என்று கூறினார்.

"எனவே, இன்று என்ன நடக்கிறது என்பதற்கு இது மிகவும் சரியான உவமை அல்ல என்று நான் நினைக்கிறேன். அதுவும் கிரேட் பிரிட்டனின் தற்போதைய பிரதமரிடமிருந்து அது சொல்லப்படுவது சரியல்ல," என்றார் புதின்.

ஃபால்க்லாந்து மோதல் என்பது என்ன?

தென் அட்லான்டிக் பெருங்கடலில் உள்ள பிரிட்டிஷ் காலனியான ஃபால்க்லாந்து தீவுகளை அர்ஜென்டீனாவின் துருப்புகள் 1982ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆக்கிரமித்தபோது, 10 வார ஃபாக்லாந்து மோதல் தொடங்கியது.

அர்ஜென்டீனா 1800களில் ஸ்பெயினிடம் இருந்து அந்தத் தீவுகளைப் பெற்றதாகவும் அவற்றை மீட்டெடுக்க விரும்புவதாகவும் கூறியது.

அந்தத் தீவுகளை ஆங்கிலேயர்கள் 150 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். மேலும் தீவுகளை மீண்டும் கைப்பற்ற கடல் வழியாக ஆயுதப்படைகளை அனுப்பினர். ஜூன் 14ஆம் தேதி அர்ஜென்டீனாவின் படைகள் சரணடைந்தன.

https://www.bbc.com/tamil/global-62000140

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Vladimir Putin's Workout - AskMen

Political heavyweight: Vladimir Putin working out in a gym – in pictures | World news | The Guardian

Kremlin releases pictures of President Putin and Prime Minister Dmitry Medvedev working out at the gym | The Independent | The Independent

 

 

 

 

புட்டினின்... கட்டுமஸ்தான உடலை பார்த்து,
வயித்தெரிச்சலில்... மேற்குலகம்,  விழல் கதை கதைச்சுக்  கொண்டிருக்கு. 😎
புட்டின்... ஓங்கி அடிச்சால், ஒன்றரை தொன் என்று, இவர்களுக்கு  தெரியாது. 😂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

புட்டினின்... கட்டுமஸ்தான உடலை பார்த்து,
வயித்தெரிச்சலில்... மேற்குலகம்,  விழல் கதை கதைச்சுக்  கொண்டிருக்கு. 😎
புட்டின்... ஓங்கி அடிச்சால், ஒன்றரை தொன் என்று, இவர்களுக்கு  தெரியாது. 😂

அடிபாட்டிலை தோல்வியெண்டால் ஏலாவளித்தனமாய் அங்கங்களை வைச்சு நக்கல் நையாண்டி பண்ணுறது எல்லாம் மூண்டாம் வகுப்பிலையே பாத்திட்டம் :cool:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ரஸ்ய அதிபரை அரசியலுக்கு அப்பால் சென்று தனிப்பட்ட ரீதியில் விமரிசனம் செய்ய முயற்சித்து மூக்குடைபட்டிருக்கின்றனர்.

மல்லாந்து படுத்துக்கொண்டு, வானத்தைப்  பார்த்து எச்சிலைத்  துப்பக்கூடாது என்பது இதற்காகத்தான்.  

( தனி மனிதன் ஒருவனின் உடல் ரீதியிலான  நிறை குறைகளை எள்ளி நகையாடுதல் நாகரீகமான செயலாக கருதப்படுவதில்லை. ஆனால் தற்போதைய லிப்றல் வேள்ட் எதனை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறது என்பதனை வெளிப்படுத்தும் சம்பவமாக இந்த அரசியல் தலைவர்களின் பேச்சைக் கொள்ளலாம். )

Edited by Kapithan
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

ரஸ்ய அதிபரை அரசியலுக்கு அப்பால் சென்று தனிப்பட்ட ரீதியில் விமரிசனம் செய்ய முயற்சித்து மூக்குடைபட்டிருக்கின்றனர்.

மல்லாந்து படுத்துக்கொண்டு, வானத்தைப்  பார்த்து எச்சிலைத்  துப்பக்கூடாது என்பது இதற்காகத்தான்.  

ஒரு சில சனம் இப்பவும் Rocky,Rambo  படங்கள் பார்த்த பீலிங்ல திரியினம் 🤣

Link to comment
Share on other sites

th?id=OIP.DAVQTuhDnmHcdJ7EIynVAgHaFD&pid=Api&P=0&w=263&h=180  th?id=OIP.avf5a9vHpgnSwmUFZBrQggHaEK&pid=Api&P=0&w=316&h=177

இவர் தலையைப் பார்த்ததும் எனக்குக் காகக்கூடு ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. 😆

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

அடிபாட்டிலை தோல்வியெண்டால் ஏலாவளித்தனமாய் அங்கங்களை வைச்சு நக்கல் நையாண்டி பண்ணுறது எல்லாம் மூண்டாம் வகுப்பிலையே பாத்திட்டம் :cool:

ஊரில இன்னொண்டு சாதியை இழுப்பது.

6 minutes ago, Paanch said:

th?id=OIP.DAVQTuhDnmHcdJ7EIynVAgHaFD&pid=Api&P=0&w=263&h=180  th?id=OIP.avf5a9vHpgnSwmUFZBrQggHaEK&pid=Api&P=0&w=316&h=177

இவர் தலையைப் பார்த்ததும் எனக்குக் காகக்கூடு ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. 😆

இப்படி தலையை வைத்திருக்க எவ்வளவு ஜெலி எல்லாம் பூசி எவ்வளவு பணத்தைக் கொட்டுகிறார்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

புட்டினோ, ஜோன்சனோ ஆம்பிளை சேர்ட்டை கழட்டி விட்டு  நிண்டால் அதையும் ரசிக்கும் ஆண்களும் உள்ளார்கள்தான்.

சிலருக்கு புட்டினின் கடுமஸ்தான உடலும், சிலருக்கு ஜான்சனின் டாடி டைப்பும் பிடிக்கும் போல இருக்கு🤣.

அழகான இளம் பெண்க்ந்ளை அரசியலுக்கு வர சொல்லுங்கள் என்றால் யார் கேட்கிறார்கள்🤣.

ஆயிரம்தான் புட்டின் சேர்ட்டை கழட்டி போட்டு மலையாள பிட்டு பட போஸ்டர் மாரி வந்தாலும்,

எனது வோட்டு எப்போதும் சீலையில் போராடப்போகும் ஹிருணிக்காவுக்கே🤣.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

7 hours ago, goshan_che said:

புட்டினோ, ஜோன்சனோ ஆம்பிளை சேர்ட்டை கழட்டி விட்டு  நிண்டால் அதையும் ரசிக்கும் ஆண்களும் உள்ளார்கள்தான்.

சிலருக்கு புட்டினின் கடுமஸ்தான உடலும், சிலருக்கு ஜான்சனின் டாடி டைப்பும் பிடிக்கும் போல இருக்கு🤣.

அழகான இளம் பெண்க்ந்ளை அரசியலுக்கு வர சொல்லுங்கள் என்றால் யார் கேட்கிறார்கள்🤣.

ஆயிரம்தான் புட்டின் சேர்ட்டை கழட்டி போட்டு மலையாள பிட்டு பட போஸ்டர் மாரி வந்தாலும்,

எனது வோட்டு எப்போதும் சீலையில் போராடப்போகும் ஹிருணிக்காவுக்கே🤣.

பிறந்த இடத்தை நாடுதே பேதைமட நெஞ்சம் கிருணிக்காவை நாடுதே கண்.😍

இலங்கையில் பெண்களின் கறந்த இடமும் அரையாகவோ அன்றி முழுமையாகவோ மூடித்தான் இருக்கும் கோசான் அவர்களே,! அதனால்தான் பட்டினத்தாரின் மொழிபை உங்களுக்காகச் சிறிது மாற்றினேன்.😋

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

அழகான இளம் பெண்க்ந்ளை அரசியலுக்கு வர சொல்லுங்கள் என்றால் யார் கேட்கிறார்கள்🤣.

வந்தால் அமைதியாய் பொலிற்ரிக் பண்ண விடுறியள் இல்லையே....:cool:

 

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வந்தால் அமைதியாய் பொலிற்ரிக் பண்ண விடுறியள் இல்லையே....:cool:

 

பொலிடிக்ஸ யாரு சார் பாக்கிறாங்க இப்பெல்லாம்🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வந்தால் அமைதியாய் பொலிற்ரிக் பண்ண விடுறியள் இல்லையே....:cool:

 

கனடாவில் நடந்தது போல இருக்கிறது ?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

பிறந்த இடத்தை நாடுதே பேதைமட நெஞ்சம் கிருணிக்காவை நாடுதே கண்.😍

இலங்கையில் பெண்களின் கறந்த இடமும் அரையாகவோ அன்றி முழுமையாகவோ மூடித்தான் இருக்கும் கோசான் அவர்களே,! அதனால்தான் பட்டினத்தாரின் மொழிபை உங்களுக்காகச் சிறிது மாற்றினேன்.😋

🤣 அவரும் எல்லாம் நாடி முடிந்த பின் தானே எழுதினவர் ஐயா🤣.

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

🤣 அவரும் எல்லாம் நாடி முடிந்த பின் தானே எழுதினவர் ஐயா🤣.

மன்னிக்கவேண்டும் பெரியவரே. நான் உங்கள் எழுத்தைப் பார்த்து துள்ளுவது இளமை என்று எண்ணிவிட்டேன். பழம் தின்று கொட்டைபோட்ட முதுபெரும் முதியவர் என்று எண்ணவில்லை.🙏

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

கனடாவில் நடந்தது போல இருக்கிறது ?

அப்ப உங்களுக்கு கன விசயங்கள் தெரியாது 🤣

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நுளாவிலான்,தமிழ் சிறி உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் !
  • வருகிறது... சீனக் கப்பல்? – நிலாந்தன். இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு அடுத்த நாள் பதினாறாம் திகதி இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துட் காணப்படும் இலங்கைத்தீவின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு, சீனாவின் “யுஆன் வாங் 5” என்ற கப்பல் வருகிறது. இதை, இலங்கை தீவின் மீதான இந்திய ராஜதந்திரத்தின் ஆகப் பிந்திய ஒரு பின்னடைவாக எடுத்துக் கொள்ளலாமா? கப்பலின் வருகை ஏற்கனவே இரண்டு அரசுகளினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. எனினும் இந்திய ஊடகங்கள் அந்தக் கப்பலின் வருகையைக் குறித்து பதட்டமான செய்திகளை வெளியிட்டன.இது விடயத்தில் இந்திய வெளியுறவுத் துறையை விடவும் இந்திய ஊடகங்கள் அதிகம் பதட்டமடைவதாகத் தெரிகிறது கிடைக்கப்பெறும் தகவல்களின்படி அந்தக் கப்பலானது ஆராய்ச்சி கண்காணிப்புக் கப்பல் என்று கூறப்பட்ட போதிலும், அது அதைவிட ஆழமான ராணுவ பரிமாணத்தைக் கொண்டது என்று கூறப்படுகிறது. அக்கப்பலில் கடலின் ஆழத்துள் காணப்படும் நீர் மூழ்கி வழித்தடங்களை ஆராயும் சக்தி மிக்க உபகரணங்கள் அதில் பொருத்தப்பட்டு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அதுதான் இந்தியாவின் அதிக கரிசனைக்கு காரணமாக இருக்கலாம். அதே சமயம் சீனா அண்மையில் ஒரு செய்மதியை விண்வெளியில் செலுத்தியது.அந்தச் செய்மதி ஏவப்பட்ட பின்னரான தொழில்நுட்பத் தேவைகளுக்கு கப்பல் இந்தப் பிராந்திய கடலில் தரித்து நிற்க வேண்டிய தேவை இருப்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.அப்படித்தான் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ள பாகிஸ்தான் கப்பல் தொடர்பிலும் கூறப்படுகிறது. அண்மையில் பாகிஸ்தானும் ஒரு செய்மதியை விண்வெளியில் செலுத்தியது. இக்கப்பல்களின் வருகை ஏற்கனவே அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின்படி நடக்கின்றன.ஆனால் அவை வருகைதந்த காலம்தான் அவை குறித்த பதட்டமான செய்திகளுக்குக் காரணம். கடந்த ஆறு மாத காலமாக இலங்கைத் தீவின் பொருளாதார நெருக்கடியில் முதலில் உதவிய நாடாகவும் அதிகம் உதவிய நாடாகவும் இந்தியா காணப்படுகிறது. கிட்டதட்ட நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இந்தியா உதவியுள்ளது. இந்தியாவின் உதவி இல்லையென்றால் ரணில் விக்ரமசிங்க இப்பொழுது ஏற்படுத்தியிருக்கும் பெரும்பாலான மாற்றங்களை செய்திருக்கவே முடியாது. அதனால்தான் அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பின் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், அந்த உதவியை உயிர் மூச்சு என்று வர்ணித்திருந்தார். இந்த உதவிகள் மூலம் இந்தியா கடந்த ஆறு மாத காலப்பகுதிக்குள் ஆறு உடன்படிக்கைகளை எழுதியிருக்கிறது.இந்த உடன்படிக்கைகளில் இரண்டு மிகவும் முக்கியமானவை.ஒன்று மன்னாரிலும் யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதியிலும் மீளப் புதுப்பிக்கும் எரிசக்தி திட்டங்களை நிர்மாணிப்பது. இதில் தீவுப் பகுதியில் அத்திட்டங்களை நிர்மாணிப்பதற்கு முதலில் சீனா முன் வந்தது. இலங்கை அரசாங்கம் சீனாவுக்கு அனுமதியும் வழங்கியது.ஆனால் இப்பொழுது இந்தியா அந்தத் திட்டங்களை தன்வசபடுத்திக் கொண்டுவிட்டது. இரண்டாவது எம்.ஆர்.சி.சி என்று அழைக்கப்படும் ஓர் உடன்படிக்கை.அதாவது கடலில் விபத்துக்கள் ஏற்படும் போது கப்பல்களை மீட்ப்பதற்கான ஒரு கண்காணிப்பு வலைப் பின்னலை உருவாக்கும் உடன்படிக்கை.அது இப்பிராந்தியக் கடலை தொடர்ச்சியாக தனது தொழில்நுட்ப கண்காணிப்புக்குள் வைத்திருப்பதற்கு இந்தியாவுக்கு உதவும். இவ்வாறான உடன்படிக்கைகளின் மூலம் இந்தியா தனது பிராந்திய கடலில் தனது கண்காணிப்பு மேலாண்மையை ஒப்பிட்டளவில் அதிகப்படுத்தியுள்ளது. ஆனால் அதன் பொருள் பிராந்தியக் கடலில் ஏற்கனவே நிலைகொண்டுள்ள சீனாவை அகற்றிவிடலாம் என்பதல்ல. அம்பாந்தோட்டையில் இருந்து சீனாவை அகற்றுவது என்று சொன்னால் குறைந்தது 90 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.துறைமுக நகரத்தில் இருந்தும் சீனா அவ்வளவு சுலபமாக விலகிச் செல்லாது. திறந்த சந்தைப் பொருளாதாரத்தின் அனுகூலங்களை நன்கு பயன்படுத்தி இலங்கைத்தீவின் மீது தனது செல்வாக்கை நிரந்தரமாகப் பலப்படுத்தும் உடன்படிக்கைகளை சீனா செய்து கொண்டு விட்டது.அவற்றை முறிப்பது என்று சொன்னால் அது ராஜ்ய வழமைக்கு முரணானது.இக்கப்பலின் விவகாரமும் அப்படித்தான். கப்பலின் வருகை தொடர்பான நிகழ்ச்சிநிரல் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. அதை முறித்துக்கொண்டு இலங்கை திடீரென்று கப்பலை வரவேண்டாம் என்று கேட்க முடியாது.அதிலும் குறிப்பாக,சீனாவுடனான கடனை மீளக் கட்டமைப்பதற்கு சீனாவின் தயவை நாடி நிற்கும் இலங்கைக்கு இதுதொடர்பில் சீனாவுடன் முரண்படுவதில் வரையறைகள் உண்டு.அதனால்தான் இலங்கை அரசாங்கம் கப்பல் வரும் திகதியை பின்போடுமாறு கேட்டது. ஆனால் அதற்கு சீனா வழங்கிய பதில் பெருமளவுக்கு இந்தியாவின் மீது விமர்சனங்களை தெரிவிப்பதாகக் காணப்படுகிறது. சீனா கூறுகிறது,இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு என்று.எனவே அது சுதந்திரமாக முடிவுகளை எடுக்கும் என்று. சீனாவின் இந்த விளக்கம் தீபெத்துக்குப் பொருந்துமா? தாய்வானுக்குப் பொருந்துமா? சீனாவின் உய்குர் மக்களுக்குப் பொருந்துமா? கடந்த ஆறுமாத காலமாக இலங்கைக்கு உதவிய காரணத்தால் இலங்கைமீது தனது செல்வாக்கு முன்னரை விட அதிகரித்திருப்பதாக இந்தியா கருதக்கூடும். எனவே சீனக்கப்பல் விவகாரத்தை பயன்படுத்தி தன்னுடைய புதிய பேர பலத்தை பரிசோதிக்க இந்தியா விரும்பியதா? ஆனால் அதைத்தான் சீனாவும் செய்யும்.ஏனெனில் இலங்கைத்தீவில் சீனாவின் முதலீடுகள் அரசியல் முதலீடுகள்தான். ராணுவ முதலீடுகள்தான்.தூய பொருளாதார முதலீடுகள் அல்ல. இப்பொழுது ஐ.எம்.எஃப் சீனாவுடனான கடனை மீளக் கட்டமைக்குமாறு கேட்கிறது.ஆனால் சீனா அதற்கு இதுவரையிலும் பதில் கூறவில்லை. அதேசமயம் ஆபிரிக்க நாடான சாம்பியாவுடன் அவ்வாறு கடனை மீள கட்டமைப்பதற்கு சீனா கடந்த மாத இறுதியில் ஒப்புக்கொண்டுவிட்டது. சாம்பியாவின் பிராந்திய யதார்த்தமும் இலங்கைத்தீவின் பிராந்திய யதார்த்தமும் ஒன்று அல்ல.இலங்கைத்தீவு இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துட் காணப்படுகிறது. இந்தியாவுக்கு எதிராக காணப்பட்ட சிங்கள மற்றும் தமிழ்த் தரப்புகளை இந்தியா எதுவிதத்திலாவது தோற்கடித்திருக்கிறது. எனினும், இனப்பிரச்சினைமூலம் திறக்கப்பட்ட வழிகளின் ஊடாக சீனா இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துக்குள் காலூன்றி விட்டது.அது இப்பிராந்திய யதார்த்தத்திற்கு முரணானது. அது எப்படி சாத்தியமானது? தமிழ்மக்கள் தோற்கடிக்கப்பட்டதால்தான் அது சாத்தியமானது.தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு சுமூகமாக இல்லாத காரணத்தால்தான் அது சாத்தியமானது. ஈழத் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விரிசல்களை வெற்றிகரமாக கையாண்டு கொழும்பில் இருந்த அரசாங்கங்கள் சீனாவைத் தீவுக்குள் கொண்டு வந்துவிட்டன. அம்பாந்தோட்டை துறைமுக குத்தகை உடன்படிக்கையும் கொழும்புக் கடலில் கட்டப்பட்டுவரும் சீன துறைமுகப்பட்டினமும் இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துள் சீனா நுழைந்து விட்டதை நிரூபிக்கும் தூலமான உதாரணங்கள் ஆகும். அதேசமயம், கடந்த ஆறுமாத காலமாக இலங்கைத்தீவு இந்தியாவின் உதவிகளில் பெருமளவுக்கு தங்கியிருக்கிறது. அது காரணமாகத்தான் இந்தியா ஆறு உடன்படிக்கைகளை செய்ய முடிந்தது.ஆனாலும் தமிழ்மக்கள் சம்பந்தப்பட்ட உடன்படிக்கைகள் பொறுத்து இந்தியா இப்பொழுதும் இக்கட்டுரை எழுதப்படும் கணம் வரையிலும் பலமான நிலையில் இல்லை. உதாரணமாக பலாலி விமான நிலையத்தை மீளத் திறப்பது,காங்கேசன் துறைக்கும் காரைக்காலுக்கும் இடையே ஒரு பயணிகள் படகுச் சேவையை தொடங்குவது,தலைமன்னாரில் இருந்து மற்றொரு படகுச் சேவையைத் தொடங்குவது….போன்ற விடயங்களில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய முன்னேற்றங்களைக் காண முடியவில்லை. பலாலியில் இருந்து விமானம் புறப்படுவதும்,காங்கேசன்துறையில் இருந்து கப்பல் புறப்படுவதும், திருநாளைப் போவாரின் கதைகளாகத்தான் காணப்படுகின்றன. மேலும் யாழ்ப்பாணத்தில் இந்திய நிதி உதவியோடு கட்டப்பட்ட கலாச்சார மண்டபத்தை இன்றுவரை திறக்க முடியவில்லை.அது சில மாதங்களுக்கு முன்பு அதாவது இந்தியா இலங்கையோடு ஆறு உடன்படிக்கைகளை கையெழுத்திட்ட அன்று சம்பிரதாயபூர்வமாக திறக்கப்பட்டது.திறப்பு விழாவிற்கு “சொஃப்ட் ஓப்னிங்” என்று பெயர் வைக்கப்பட்டது.அதன்பின் இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வருவார் என்றும் அப்பொழுது அது விமரிசையாகத் திறந்து வைக்கப்படும் என்றும் கூறப்பட்டது.ஆனால் இன்றுவரையிலும் அந்தக் கட்டடம் திறக்கப்படவேயில்லை. யாழ்ப்பாணத்தின் மிக உயரமான ஒரு கட்டடமாகவும் தமிழ்மக்களின் அரசியலில் இந்தியாவின் செல்வாக்குக்குள்ள வரையறைகளை உணர்த்தும் ஒரு கட்டடமாகவும் அது தொடர்ந்தும் காணப்படுகிறதா? இவ்வாறான ஆகப்பிந்திய வளர்ச்சிகளின் பின்னணியில்,தனது செல்வாக்கு மண்டலத்துக்குள் சீனா பலமாக காலூன்றி விட்டதை இந்தியா தொடர்ந்தும் சகித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ரஷ்யா அவ்வாறு சகித்துக் கொள்ளவில்லை. அதனால்தான் உக்ரைனில் ரசியா ஒரு குரூரமான யுத்தத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.உக்ரைனில் நடப்பது நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஒரு நிழல் யுத்தமே. ஆனால் இலங்கை தீவில் அப்படி ஒரு கடும் தெரிவை எடுக்கும் நிலையில் அமெரிக்காவும் இல்லை,இந்தியாவும் இல்லை. அதுமட்டுமல்ல, அப்படி ஒரு தீர்மானத்தை எடுத்தால்,அமெரிக்காவோ அல்லது இந்தியாவோ தமிழ் மக்களைத் தமது பக்கம் வென்றெடுக்க வேண்டியிருக்கும்.ஏனென்றால் தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தித்தான் எந்த ஒரு வெளிச்சக்தியும் சீனாவுக்கு எதிராக உள்ளிறங்கலாம். ஏற்கனவே ஒரு தடவை இந்தியா, மூன்று தசாபதங்களுக்கு முன்பு அவ்வாறு உள்ளிறங்கியது. அது தன் படைகளை இறக்கியது. அப்பொழுது ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பனிப்போர் நடந்து கொண்டிருந்தது.அப் பனிப்போரை தமிழ் மக்களும் சிங்கள மக்களும் நிஜப்போர் ஆக முன்னெடுத்தார்கள். அமெரிக்கா கொழும்பிலிருந்த அரசாங்கத்தை ஆதரித்தது. இந்தியா தமிழ்போராளிகளை ஆதரித்தது.தமிழகத்தைப் பின் தளமாகத் திறந்துவிட்டது. முடிவில் ஈழப் போரை பயன்படுத்தி இந்தியா இலங்கைத்தீவின் மீதான தனது மேலாண்மையை பேணத்தக்க ஓர் உடன்படிக்கையை செய்து கொண்டது.அதன் விளைவின் விளைவுகள் இந்தியாவுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான உறவில் விரிசல்களை ஏற்படுத்தின.ஆனால் அந்த உடன்படிக்கை இப்பொழுது ஏறக்குறைய காலாவதியாகி விட்டதா என்று கேட்கும் அளவுக்கு சீனா இச்சிறிய தீவினுள் காலூன்றி விட்டது. அதே சமயம் தமிழ் மக்களை ஒரு கருவியாக கையாண்டு தன்னுடைய பிராந்திய நலன்களை நிறைவேற்ற முயன்ற இந்தியா தமிழ் மக்கள் சிங்கள மக்கள் ஆகிய இரண்டு தரப்புக்கும் நண்பனாக இருக்க முயன்று,முடிவில் இரண்டு தரப்பையுமே கையாள்வது கடினமாகி விட்டது. அதன் விளைவுதான் இலங்கை தீவில் சீனாவின் பிரசன்னம் ஆகும். பிராந்திய யதார்தத்துக்கு முரணாகவும்,இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துக்கு எதிராகவும்,இலங்கைத்தீவில் சீனா காலூன்றி விட்டது.இவ்வாறு இலங்கைத்தீவில் ஏற்கனவே காலூன்றியிருக்கும் சீனாவின் பேரபலத்தை பரிசோதிக்கும் ஆகப்பிந்திய ஒரு விடயமாக யுஆன் வாங் 5 கப்பல் விவகாரம் காணப்படுகிறது. இந்தியாவோ அமெரிக்காவோ விரும்பினாலும்கூட இலங்கைத்தீவிலிருந்து சீனா அகற்றப்பட முடியாத ஒரு சக்தியாக தொடர்ந்தும் நிலை கொண்டிருக்கும் என்பதே இப்போதுள்ள பிராந்திய யதார்த்தம் ஆகும்.பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி வேண்டுமானால் அமெரிக்காவும் இந்தியாவும் தங்கள் பங்கிற்கு இலங்கைத் தீவின் ஏதாவது ஒரு பாகத்தில் பலமாகக் கால் ஊன்றலாம். அதாவது சீனாவிடம் ஒரு பகுதி,இந்தியாவிடம் ஒரு பகுதி, அமெரிக்காவிடம் ஒரு பகுதி, மொத்தத்தில் இக்குட்டித் தீவு பேரரசுகள் பங்கிடும் அப்பம். இதில் மஹிந்த ராஜபக்ச சிங்கள மக்களுக்கு வென்று கொடுத்த நாடு எங்கே? https://athavannews.com/2022/1294607
  • இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  கு.சா அண்ணா,புத்தன் 
  • பிறந்தநாள் வாழ்த்துகள் குமாரசாமி அண்ணை, புத்தன் அண்ணை. வாழ்க வளத்துடன்.
  • கிருபன்.  குமாரசாமி ஐயா.  மற்றும் புத்தன் ஆகியோருக்கு நலம்கூடி  நல்வளம் செழிக்க..  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.