-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
"விடுதலைப் புலிகளுக்கு" புத்துயிர் அளிக்க... ஆயுதங்கள், போதைப் பொருள் மூலம் நிதி திரட்டியதாக... என்.ஐ.ஏ. குற்றச்சாட்டு. இலங்கையைச் சேர்ந்த ஒருவர், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிக்க நிதி திரட்டியதாக இந்தியாவின் என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. மீன்பிடி படகுகளில் இருந்து ஏகே 47 துப்பாக்கிகள், வெடிமருந்துகளுடன் மற்றும் ஏராளமான போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் எட்டாவது குற்றவாளியும், இலங்கையைச் சேர்ந்தவருமான ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணையின்போது கேரள உயர் நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. விசாரணை அமைப்பு அறிக்கை தாக்கல் செய்தது. 2021 மார்ச் 18 அன்று லட்சத்தீவின் மினிகாய் தீவுக்கு அருகில் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் பயணித்த ‘ரவிஹன்சி’ என்ற படகை இந்திய கடலோர காவல்படையினர் தடுத்து நிறுத்தியபோது இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் என்று கூறப்படும் ஏழாவது மற்றும் அவரது சகோதரர் மற்றும் எட்டாவது குற்றவாளிகள் காவலில் வைக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவரான ரமேஷ், விசா இல்லாமல் இந்தியாவில் தங்கியிருப்பதை ஒப்புக்கொண்டார். ரமேஷ் மற்றும் அவரது சகோதரர் உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியப் பொறுப்புக்களில் இருந்தவர்கள் என்றும் இந்த சட்டவிரோத கடத்தல் மூலம் பணம் திரட்டி வந்ததாகவும் என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் பிணை மனுவை நிராகரித்து தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்ள கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://athavannews.com/2022/1294624 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து... ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு, அறிக்கை சமர்பிப்பு. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு, ஐந்து தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கையொன்றை அனுப்பிவைத்துள்ளனர் என அறியமுடிகின்றது. சர்வதேச கண்காணிப்புடனான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதோடு நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும் எனவும் அவர்கள் அந்த அறிக்கையில் கூறிப்பிட்டுள்ளனர் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறீகாந்தா ஆகியோரே இந்த அறிக்கையை அனுப்பிவைத்துள்ளனர். மேலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது. https://athavannews.com/2022/1294612 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
பலம் வாய்ந்த நாடுகளுக்கு... இலங்கை, இரையாகி விட்டது – சஜித் தேசிய பாதுகாப்பு கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை கூறியுள்ளார். நாட்டில் நிலவும் ஸ்திரமின்மை மற்றும் வங்குரோத்து நிலை காரணமாக பலம் வாய்ந்த நாடுகளுக்கு இலங்கை இரையாகிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1294627 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
ஜெனீவாவை எதிர் கொள்ள... விசேட பொறிமுறையை, தயாரிக்கின்றது அரசாங்கம் – நீதி அமைச்சர். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் கூட்டத்தொடரை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் விசேட பொறிமுறையையொன்றை தயாரித்து வருகின்றது. மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 13ஆம் திகதி ஆரம்பித்து ஒக்டோபர் 7ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் இலங்கையில் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணகத்தை ஏற்படுத்தல் உள்ளிட்ட விடயங்களில் அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் அறிக்கையை சமர்பிக்கவுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுப் பணியகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகள் பற்றி தெரிவிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். இதனைவிட சட்டம், ஒழுங்கு, அரசியலமைப்பு விடயங்கள் தொடர்பாக எடுத்துரைக்கவுள்ள அதேவேளை ஐ.நா. கூட்டத் தொடரை எதிர்கொள்ள அதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைந்து விசேட பொறிமுறையை தயாரிக்கவுள்ளதாகவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார். இருப்பினும் மனித உரிமைப் பேரவையைப் பயன்படுத்தி தமது அரசியல் இலாபங்களை தேட சிலர் முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய நீதி அமைச்சர், பிரச்சினைகள் தீர்க்கப்படுவதை அவ்வாறானவர்கள் விரும்புவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1294631 -
இந்தியா, அமெரிக்காவின் தேவைக்காக... எமது கொள்கையை மாற்றியமைக்க முடியாது, என்கின்றார்... சரத் வீரசேகர
By தமிழ் சிறி · பதியப்பட்டது
இந்தியா, அமெரிக்காவின் தேவைக்காக... எமது கொள்கையை மாற்றியமைக்க முடியாது, என்கின்றார்... சரத் வீரசேகர இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தேவைக்கமைய எமது வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைக்க முடியாது என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். சீன கண்காணிப்பு கப்பல் உளவு பார்ப்பதற்காக ஹாம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருகிறது என இந்தியா குறிப்பிடுவது அடிப்படையற்றது என்றும் தெரிவித்தார். இந்தியாவை உளவு பார்ப்பதற்கு சீனாவின் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தர வேண்டிய தேவை கிடையாது என்றும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார். இதேவேளை இந்த கப்பலுக்கான அனுமதியை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் வழங்கிய நிலையில்.. அதனை தற்போதைய அமைச்சர் அலி சப்ரி ரத்து செய்வது, இலங்கையின் வெளிவிவகார கொள்கையினை மலினப்படுத்தும் என குறிப்பிட்டார். கப்பல் விவகாரத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் எவ்வாறான அழுத்தங்களை பிரயோகித்தாலும் அவர்களுக்காக வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைக்க முடியாது என சரத் வீரசேகர தெரிவித்தார். (நன்றி கேசரி) https://athavannews.com/2022/1294654
-
Recommended Posts