Jump to content

படுகுழியிலிருந்து வெளியேற என்ன வழி ?


Recommended Posts

படுகுழியிலிருந்து வெளியேற என்ன வழி ?

 

 

 

‘முறைமையில்  ஊழல் பரவலாக உள்ளது என்பது இரகசியமல்ல. வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் என்று அரசியல்வாதிகள் குறிப்பிடப்படுகிறார்கள். தற்போதைய நெருக்கடிஉட்பட அனைத்து வகையான பரிவர்த்தனைகளுக்கும் தரகு  பெறுவது  நன்கு அறியப்பட்டதாகும்.’

 

”அவு ஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர்கள் வருகை தந்த அணிக்கு எவ்வாறு  தங்கள் நன்றியை வெளிப்படுத்தினார்கள் மற்றும் , அவு ஸ்திரேலிய வீரர்கள்எவ்வாறு  பதிலளித்தார்கள் என்பதை அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும்”

00000000000000000000000

கொட்வின் கொன்ஸ்ரன்ரைன்

 
 
எ மது நாடு சீர்குலைந்து  விட்டது. எரிபொருள் விநியோகம் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் கிடைக்கும்மென அரசாங்கத்தின்  பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதனை  எவரும்  குறை சொல்லவும் இல்லை, கவனிக்கவும்  இல்லை.
ரணில் அரசாங்கத்தை பொறுப்பேற்றதும், அவ்வாறு செய்வதற்கு வேறு எவரும்  இல்லாததால், பொருளாதாரத்திற்கு தேவைப்பட்ட  டொலர்களை அவரால்  கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது. சிலர் போராட்டத்தை[ அரகலயா] கைவிட்டுஅதற்கு வழங்கிய  ஆதரவை வாபஸ் பெற்றதுடன் படிப்படியாக நிலைமை சீராகும் என்று எதிர்பார்த்தனர்.
எவர்  வந்தாலும் இதே நிலைதான். தலைவர்கள் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம், டிஜிட்டல் பொருளாதாரம் அல்லது அறிவு சார்ந்த பொருளாதாரம் பற்றி விள க்கமா ன  அறிவிப்புகளை மேற்கொள்ளலாம்  ஆனால் இவை எவையும்  குறுகிய காலத்தில் டொ லர்களை கொண்டு வராது.அத்துடன்  மென்  மேலும் கடன் வாங்குவதும்  பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாகாது. இந்த வருட த்  தொடக்கத்தில் இருந்து கடன் குறைந்தது 10% மாவது உயர்ந்திருக்கும். இப்போது கடன் வாங்குவதை நிறுத்த வேண்டும்.
 
உற்பத்தி த்துறை நெருக்கடியில் உள்ளதால், ஏற்றுமதி குறைந்து வருகிறது. குறுகிய காலத்தில் நாம் சார்ந்து இருக்கக்கூடிய இரண்டு வருமான ஆதாரங்கள் மட்டுமே உள்ளன; ஒன்று சுற்றுலா மற்றும் மற்றொன்று வெளிநாட்டில்  தொழில் புரிவோர் அனுப்பும்  பணம் .
பிரதமராகப்  பதவியேற்ற பின்னர் ரணில் ஸ்கை நியூஸ் சேவைக்கு  பேட்டியளித்த போது, இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் செல்வது பாதுகாப்பானதா என்று கேட்கப்பட்டது. ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பதன் மூலம் அவர்கள் உற்சாகமாக  பொழுதை  அனுபவிக்க முடியும் என்று அவர் பதிலளித்தார். இது ஒரு பாரதூரமான கேள்வி என நேர்காணல் செய்பவர் சுட்டிக்காட்டியபோது, அதற்கு பதிலளித்த ரணில், “நாங்கள் மக்கள்  வருகை  தருவதற்கு  கொண்டிருக்கும் ஆர்வத்தை குறைக்க வில்லை, ஆனால் அந்நிய செலாவணி பற்றாக்குறை நிலவும் அதேவேளை  , இடம்பெற்று கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையால் அவர்கள் இலங்கைக்கு வரக்கூடாது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்”. இந்த தருணத்தில்  ஒரு பிரதமர் இவ்வாறான கருத்துக்களை வெளியிடும் போது இலங்கைக்கு யார்  வருகைதர  விரும்புவார்கள் ? சுற்றுலா வருமானம், மார்ச் மாதத்தில் நாங்கள் சம்பாதித்ததில் அரைவாசியாக , 54 மில்லியன் டொலராக  மிகக் குறைந்த அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது.
 
சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததிலிருந்து அவர்கள்  வெளியேறும் வரை அரசு சுற்றுலாதுறையில்  கவனம் செலுத்த வேண்டும்; சுற்றுலாப் பயணிகள் தாங்கள் சிறப்பாக  வரவேற்கப்படுவதுடன் கவனி க்கப்படுகிறார்கள்  என்று உணருவதை  உறுதிசெய்வதற்கு சகல  விடயங்களும்  கவனிக்கப்பட வேண்டும். தேவைக்கேற்ப எரிபொருள், உணவு மற்றும் இதர வசதிகள் உள்ளனவா என்பதை உறுதி செய்ய, சுற்றுலாப் பயணிகளின் நலனை ஒரு தனி அமைச்சர் கண்காணிக்க முடியும். சுற்றுலாப் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவசர அழைப்பு சேவை வசதி இருக்க வேண்டும் இது வருகை  தருவதற்கான காலம்  அல்ல என்று சொல்வதை விட அவர்களை பார்வையிட ஊக்குவிக்க வேண்டும். அவு ஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர்கள் வருகை தந்த அணிக்கு எவ்வாறு  தங்கள் நன்றியை வெளிப்படுத்தினார்கள் மற்றும் , அவு ஸ்திரேலிய வீரர்கள் எவ்வாறு  பதிலளித்தார்கள் என்பதை அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும்.
 
டொ லர்களைப் பெறுவதற்கான முக்கியமான வழிகளில் ஒன்று வெளிநாட்டில் தொழில் புரிவோர் அனுப்பும்  பணமாகும்..எவ்வாறாயினும், கடந்த ஆகஸ்ட் முதல், 2022 பெப்ரவரி வரையில் நிலையான வீழ்ச்சி  ஏற்பட்டுள்ளது பெப்ரவரியில்   205 மில்லியன் டொலர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது    இந்த தொகை  சிறிது  உயர்ந்து 250 மில்லியன் டொ லர்களாக உள்ளது. இந்த ஆதாரம் ஒரு உயிர்நாடியாகும்.. டொ லர்களை சம்பாதிப்பதற்காக எவ்வளவு பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியுமோ அவ்வளவு பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப அரசு முயற்சிக்கிறது. பணம் அனுப்புதல் குறைவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன; ஒன்று செயற்கையாக டொ லரை நிர்ணயம் செய்வது, மற்றொன்று அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளிடையே ஊழல் மலிந்துள்ளது என்ற கருத்து.
முறைமை யில்  ஊழல் பரவலாக உள்ளது என்பது இரகசியமல்ல. வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் என்று அரசியல்வாதிகள் குறிப்பிடப்படுகிறார்கள். தற்போதைய நெருக்கடி உட்பட அனைத்து வகையான பரிவர்த்தனைகளுக்கும் தரகு  பெறுவது  நன்கு அறியப்பட்டதாகும். புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரிக்க இதனை  நாம் சரியானதாக  வைக்க வேண்டும். இதை உறுதிப்படுத்த முடியாவிட்டால், நாம் ஒரு தேசமாக அழிந்து போவோம். ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சியை மாற்றி கட்சி யை மாற் றுவதால் எந்த பயனும் இல்லை. நல்லாட்சி  அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர், ஆனால் இறுதியில் அந்த அரசாங்கமும் ஊழலை ஊக்குவித்தது மற்றும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக வழக்குத் தொடர எதுவும் செய்யவில்லை, அவர்களைப் பாதுகாத்தது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச  ஆட்சிக்கு வந்ததும் நாடு சரியான பாதையில் செல்லும் என்ற நம்பிக்கை இருந்தது ஆனால் அதற்கு நேர்மாறானது.இடம்பெற்ற து
 கடந்த ஆட்சியில்   தலைவிரித்தாடிய ஊழல்கள்தொடர்பாக  “பதிவுகள்மாற்றப்பட் ட மை  ” பற்றி ஸ்கை நியூஸ் நேர்காணலில் ரணில், பேசினார் . எவ்வாறாயினும்,நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்திய  தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட பல வாக்குறுதிகள் பலனளிக்கவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.என்பதுடன்  ரணிலின் தடப்பதிவுகள் அவர் ஒரு நம்பகத்தன்மையற்ற வர்  என்பதை நிரூபிக்கிறது.
நிலைமையை மாற்றுவதற்கு  தேர்தலொன்று  தேவையா? ஒரு தேர்தலானது  நிலைமையை மோசமாக்கலாம். தற்போது எங்களிடம் இருப்பது புதிய அரசாங்கம், புதிய தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துடன் ஒப்பிடக்கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் வடிவம்.அவர்கள்  என்ன செய்தார்கள்? நடைமுறையில் எதுவும் இல்லை. இந்த நாடு எமது எதிர்காலம், அதை வாழ்வதற்கு சிறந்த இடமாக மாற்றுவதற்கு  ஒருமுறைமை  மாற்றமே   எமக்குத் தேவை.
கிரவுண்ட்  வியூஸ்
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள்.
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.